என் மலர்
அரியலூர்
- கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது நடவடிக்கை
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் அரங்கனேரியில் சந்தேகப்படியான மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது அவர்கள் கல்லாத்தூர் வடவீக்கம் மெயின் ரோட்டுத் தெருவை சார்ந்த மாயகிருஷ்ணன் மகன் விமல்ராஜ் (வயது28), ஜெயங்கொண்டம் அண்ணா நகரை சேர்ந்த சின்னசாமி மகன் சிவச்சந்திரன் (27), ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தெரு பஜருல்லா மகன் முகமதுயாசிக் (19) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா கையில் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- 19 ஆயிரத்து 193 மாணவ, மாணவிகள் தேர்வெழுத உள்ளனர்.
- காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கி, 20ம் தேதி வரை நடக்கிறது. 58 தேர்வு மையங்களில் 5231 மாணவர்கள், 4854 மாணவிகள் என 10 ஆயிரத்து 85 பேர் தேர்வு எழுதுகின்றனர்.இதே போல அரியலூர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு மார்ச் 13-ம் தேதி துவங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடக்கிறது. 90 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 44 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகிறார்கள். 4409 மாணவர்கள், 4699 மாணவிகள் என மொத்தம் 9108 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.தேர்வு மையங்களை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் வருவாய் துறையினர் உள்ளடக்கிய சிறப்பு பறக்கும் படையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளடக்கிய பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் எந்த நேரத்திலும் ஆய்வு செய்து கண்காணிக்க சென்னையில் இருந்து கல்வி அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்பு பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் சரியான நேரத்திற்கு வரவேண்டும், துண்டு சீட்டு செல்போன் பேச அனுமதி இல்லை காப்பியடிப்பதை கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
- ஜெயங்எகொண்டாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், எம்.எல்.ஏ. கண்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது
- பெண்கள் அனைவரும் கேக் வெட்டி மகிழ்ந்தனர்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்சர்வதேச மகளிர் தின விழா எம்எல்ஏ கண்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் பெண்களுடன் இணைந்து எம்எல்ஏ கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தளித்தார். ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் விஜயசங்கர், மண்டல அலுவலர் தமிழ்மணி, ஊரக வளர்ச்சி உதவி செயற்ப்பொறியாளர் வஹிதாபானு, ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளர் பஞ்சாபிகேசன், ஒன்றியக்குழு தலைவர் ரவிசங்கர், துணைத்தலைவர் லதா கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகானந்தம் (வட்டார ஊராட்சி), முருகன் (கிராம ஊராட்சி) மற்றும் அனைத்து ஒன்றிய அரசு அலுவலர்கள் இந்த பெண்கள் தின விழாவில் கலந்து கொண்டனர்.
- பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் தொடர்பு
- மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அஜித் (22). கூலி தொழிலாளியான இவர் அதே பகுதி பக்கத்து ஊரில் உள்ள பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனியே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து மாணவியின் தாயார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து, அஜித் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டதால் குண்டர் சட்டம் பாய்ந்தது
- மாவட்ட எஸ்.பி.பரிந்துரையின் பேரில், கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே தழுதாழைமேட்டை சேர்ந்த ஜெயமணி(எ)ஜெயமணிக்குமார் (வயது 27). இவர், அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியன் மற்றும் அவரது மகன் பவித்ரன்(27) ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இது குறித்து புகாரின் பேரில் மீன்சுருட்டி காவல் துறையினர் வழக்குப் பதிந்து ஜெயமணிக்குமாரை கைது செய்தனர். மேலும் இவர், தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையடுத்து கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயமணிக்குமார் ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- அரியலூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
- ரூ.4 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடையார்பாளையம் அடுத்த மேலணிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் மகன் சுப்பிரமணியன் (வயது 40). கடந்த 2021 ஆம் ஆண்டு இவர், 15 மற்றும் 16 வயதுடைய 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமிகளின் தாய் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர், சுப்பிரமணியனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளித்தது. இதில் குற்றவாளி சுப்பிரமணியனுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளி சுப்பிரமணியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகினார்.
- சொத்து பிரிப்பதில் முன்விரோதம் காரணமாக தகராறு
- 2 பேரன்கள் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையார் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால்(வயது85). இவருக்கு 4 மகன்கள் உள்ள நிலையில் மூன்றாவது மகனான கந்தசாமி மகன் சுரேஷ்(27), நான்காவது மகனான சேட்டு மகன் மணிகண்டன்(32) ஆகிய 2பேர பிள்ளைகளும் சொத்து பிரித்து கொடுப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை இடையார் புளியந்தோப்பு பகுதியில் இருந்த ராஜகோபாலை பேரப் பிளைகளான சுரேஷ், மணிகண்டன் சொத்தை பிரித்து தரும்படி கேட்டு அவரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால் ரூ.94 லட்சத்து 88 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
- சட்டப்பேரவை பொது கணக்கு குழுத் தலைவர் குற்றச்சாட்டு
அரியலூர்,
அரியலூரில் சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், சரஸ்வதி, சிந்தனச்செல்வன், மாரிமுத்து ஆகியோர் கொண்ட குழுவினர், அரசு மருத்துவக் கல்லூரி, அரசு சிமெண்ட் ஆலை, உயரிய படிம அருங்காட்சியகம், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஆய்வு செய்தனர்.பின்னர் சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது,கடந்த ஆட்சியில் அரியலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால் ரூ.94 லட்சத்து 88 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. சமூக நலத்துறை சார்பில் விலையற்ற பொருள்களை சரியாக பரிசீலனை செய்யாமல் கொடுத்ததில் ரூ.3.23 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆதிதிராவிட நல்லது துறை சார்பில் மாணவர்களுக்கான உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை செலவு செய்யாமல் மீண்டும் அத்துறைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் கனிம வளங்களை வெட்டி எடுத்ததில் தவறுகள் நடந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளது. இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெரும் அனைத்து அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன், பேரவை செயலாளர் சீனிவாசன், சார்வு செயலாளர் பாலசீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் தகவல் அளித்தின் பேரில் வனத்துறையினர் மீட்பு
- சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டது
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்ட உடையார்பாளையம் ரெங்கசமுத்திரம் ஏரி அருகே மான் ஒன்று காயங்களுடன் துடித்து கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.இதனை தொடர்ந்து வனக்காப்பாளர்முத்துராஜ் தலைமையில் அங்கு வந்த வனத்துறையினர் மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது மர்ம விலங்கு கடித்து மானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மான் பாதுகாப்புடன் வேனில் ஏற்றப்பட்டு கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவரால் அந்த ஆண் மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. துள்ளி குதித்து ஓடும் அளவிற்கு மானின் உடல் நிலை தேறிய பின்னர் வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
- ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல்
- ரோந்து பணியின் போது சிக்கினார்
உடையார்பாளையம்,
உடையார்பாளையம் போலீஸ் எஸ்.ஐ. திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தத்தனூர் பொட்டகொல்லை தெற்கு தெருவை சேர்ந்த காசிநாதன் மகன் அன்புமணி(53) என்பவர் வீட்டில் அரசு டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் அன்புமணியை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீசார்
- பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கே சென்று கலந்துரையாடல்
அரியலூர்,
வி.கைகாட்டி அருகே ரெட்டிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு, விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் இணைந்து வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது வடமாநில தொழிலாளர்கள், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், யாரும் சொந்த மாநிலத்திற்கு செல்லவில்லை என்றும், தங்கள் குழந்தைகள் விளாங்குடி அரசு பள்ளியில் படித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் போலீஸ் உயர் அதிகாரிகளின் விழிப்புணர்வு வீடியோ அவர்களிடம் காண்பிக்கப்பட்டு, வாட்ஸ்-அப்பில் அனுப்பப்பட்டது. அவர்களுக்கு ஏதேனும் தொந்தரவு இருந்தால் உடனடியாக போலீசாரை அணுகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது
- துக்க நிகழ்ச்சிக்கு ஆட்களை ஏற்றி வந்த நிலையில் விபரீதம்
- முந்திரி காட்டில் தொங்கிய பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லசாமி வேன் ஓட்டுநர். இவர் ராங்கியம் கிராமத்தில் இருந்து துக்க நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரிய மணல் கிராமத்திற்கு ஆட்களை ஏற்றி வந்ததுள்ளார்.துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மீண்டும் ஊருக்கு புறப்படும் போது வேன் ஓட்டுநரை காணவில்லை. இதனையடுத்து வேன் ஓட்டுநரை அனைவரும் தேடி வந்தனர். இதற்கிடையே அருகில் உள்ள முந்திரி காட்டில் ஒருவர் தூக்கில் பிணமாக கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்த போது துக்க நிகழ்ச்சிக்கு ஆட்களை ஏற்றிவந்த நல்ல சாமி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்துஜெயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் புண்ணியகோடி மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






