என் மலர்
உள்ளூர் செய்திகள்

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் 6, 13-ந்தேதிகளில் தொடக்கம்
- 19 ஆயிரத்து 193 மாணவ, மாணவிகள் தேர்வெழுத உள்ளனர்.
- காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கி, 20ம் தேதி வரை நடக்கிறது. 58 தேர்வு மையங்களில் 5231 மாணவர்கள், 4854 மாணவிகள் என 10 ஆயிரத்து 85 பேர் தேர்வு எழுதுகின்றனர்.இதே போல அரியலூர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு மார்ச் 13-ம் தேதி துவங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடக்கிறது. 90 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 44 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகிறார்கள். 4409 மாணவர்கள், 4699 மாணவிகள் என மொத்தம் 9108 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.தேர்வு மையங்களை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் வருவாய் துறையினர் உள்ளடக்கிய சிறப்பு பறக்கும் படையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளடக்கிய பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் எந்த நேரத்திலும் ஆய்வு செய்து கண்காணிக்க சென்னையில் இருந்து கல்வி அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்பு பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் சரியான நேரத்திற்கு வரவேண்டும், துண்டு சீட்டு செல்போன் பேச அனுமதி இல்லை காப்பியடிப்பதை கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.






