மர்ம விலங்கு கடித்து மான் காயம்

பொதுமக்கள் தகவல் அளித்தின் பேரில் வனத்துறையினர் மீட்பு சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டது
மர்ம விலங்கு கடித்து மான் காயம்
Published on

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்ட உடையார்பாளையம் ரெங்கசமுத்திரம் ஏரி அருகே மான் ஒன்று காயங்களுடன் துடித்து கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.இதனை தொடர்ந்து வனக்காப்பாளர்முத்துராஜ் தலைமையில் அங்கு வந்த வனத்துறையினர் மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது மர்ம விலங்கு கடித்து மானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மான் பாதுகாப்புடன் வேனில் ஏற்றப்பட்டு கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவரால் அந்த ஆண் மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. துள்ளி குதித்து ஓடும் அளவிற்கு மானின் உடல் நிலை தேறிய பின்னர் வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com