என் மலர்tooltip icon

    அரியலூர்

    • காதல் திருமணம் ெதாடர்பாக வாக்குவாதம் முற்றி கொலையில் முடிந்தது
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருப்பிலாக்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 50). இவரது மனைவி உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் அருண் (22). இவர் கடந்த ஆண்டு திருப்பூரில் வேலை செய்தபோது, அங்கு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து 'அண்ணன், அக்காள் ஆகியோருக்கு திருமணமாகாமல் உள்ள நிலையில், நீ எப்படி திருமணம் செய்து கொள்ளலாம்' என்று கேட்டு அருணுடன், அர்ச்சுனன் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. குத்திக்கொலை இந்நிலையில் நேற்று முன்தினம் மரம் வெட்டும் வேலைக்கு சென்ற அருண், மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. அப்போது அர்ச்சுனனும் குடிபோதையில் இருந்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அருண், கத்தியை எடுத்து அர்ச்சுனனை குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே அர்ச்சுனன் பரிதாபமாக உயிரிழந்தார். கைது இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கீழப்பழுவூர் போலீசார், அர்ச்சுனனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருணை கைது செய்தனர். பின்னர் அவரை அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுததி உள்ளது

    • கங்கைகொண்ட சோழபுரத்தில் உற்சாக கொண்டாட்டம்
    • நடனம், கும்மியடி, கயிறு இழுத்தலில் அசத்திய பெண் போலீசார்

    அரியலூர்,

    மீன்சுருட்டி: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள், ஆயுதப்படை, மாவட்ட போலீஸ் அலுவலகம் மற்றும் சிறப்பு பிரிவுகள் ஆகியவற்றில் பெண் போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக பெண் ஊர்க்காவல் படையினரும் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்களில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அனைத்து பெண் போலீசாரின் பணியினை பாராட்டும் வகையிலும், மேலும் அவர்கள் மகிழ்ச்சியாக பணிபுரிய ஏதுவாக அமையும் வகையிலும், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு பரிசு அளிக்க விரும்பிய பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, உயர் அதிகாரிகளின் அனுமதியுடன், பெண் போலீசார் அனைவரையும் நேற்று ஒரு நாள் சுற்றுலா அழைத்து சென்றார். இதில் அவர்கள் அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் மாளிகைமேடு ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் பெண் போலீசார் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு கும்மியடித்தும், கலை நிகழ்ச்சியில் நடனமாடியும், பாட்டு பாடியும் மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இது குறித்து பெண் போலீசார் கூறுகையில், நாங்கள் போலீஸ் பணியில் சேர்ந்ததில் இருந்து இதுபோன்று சக பெண் போலீசாருடன் ஒன்றாக இன்ப சுற்றுலா சென்றது இல்லை. முதல் முறையாக எங்களை சுற்றுலாவிற்கு அழைத்து சென்று, எங்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கிய போலீஸ் சூப்பிரண்டுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம், என்றனர்.

    • சமூக நல்லிணக்கத்தை குலைக்க முயலுசமூக விரோதிகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தல்
    • தனியார் ஆக்கிரமிப்பை அகற்றிய விவகாரம் திசைதிருப்பபடுவதாக போலீசார் விளக்கம்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்திற்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் ஆக்கிரமித்ததை தொடர்ந்து, கடந்த 7-ந்தேதி அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதனை திசை திருப்பும் விதமாக போலீசார் குறித்து தவறான பிரசாரங்களை பல்வேறு இந்து இயக்கங்கள் மூலம் சிவனடியார் மீது தாக்குதல் என்று தவறாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சமூக அமைதி மற்றும் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொய் பிரசாரங்களை செய்து வருவதாக தெரியவருகிறது. இது போன்ற பதிவுகளை பதிவிடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்று மதத்தின் பெயரால் மக்களின் கவனத்தை திசை திருப்பி தங்களது சுயலாபத்திற்காக சமூக நல்லிணக்கத்தை குலைக்க முயலும் சமூக விரோதிகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அரியலூர் மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.

    • தீயணைப்பு படையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
    • மின் கம்பிகளை மாற்றி அமைக்க கோரிக்கை

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான தைலமர தோப்பு சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்நிலையில் இந்த தைலமர தோப்பின் குறுக்கே மின்கம்பிகள் பதிக்கப்பட்டு மின்கம்பிகள் வழியாக மின்சாரம் செல்கிறது.

    இந்நிலையில் மரங்கள் நன்கு வளர்ந்த நிலையில் உள்ளதாலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மின் கம்பிகளின் மூலம் உராய்வு ஏற்பட்டு தீ பொறி மூலம் கீழே உள்ள தைல மர சருகுகள் மூலம் தீ பற்றி எரிய துவங்கி உள்ளது.இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.மேலும் தீ பற்றி எரிவதால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக அருகில் உள்ள கிராம மக்களும் சம்பவ இடத்திற்கு வந்து தழைகளை உடைத்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். செந்துறை தீயணைப்பு நிலையத்திலிருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு துறையினர் தைலம் மர தோப்பில் ஏற்பட்ட தீயினை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த தைலமர தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தானது இரவு நேரங்களில் ஏற்பட்டிருக்குமேயானால் அப்பகுதியில் உள்ள விவசாய முந்தரி மரங்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுபோன்று மின் கசிவு காரணமாக தைல மரதோப்பு அவ்வப்பொழுது தீப்பற்றும் சம்பவம் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால் இது போன்று விபத்துக்களை ஏற்படும் வகையில் தைலமர தோப்பு பகுதியில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.இச்சம்பவம் குறித்து தா.பழூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீ பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஓய்வூதியம், பிரசவகால சம்பளம் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை
    • அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனு அளிக்கப்பட்டது

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம், கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.திருமானூர் கிராம நிர்வாக அலுவலர் பார்த்தி பனிடம், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஜீவா தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம் முன்னிலையில் அளித்த மனுவில் கட்டட தொழிலாளர் சங்கத்தில் பதிவுப் பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும், ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்.பணிக் காலத்தில், பிரசவ கால மூன்று மாதத்து ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவ செலவுக்கு நிதி வழங்க வேண்டும். 52 வயது நிரம்பிய பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.வடுகபாளையம், குமாரபாளையம், அரஞ்ச்சேரி, கீழக்காவ ட்டாங்குறிச்சி, கீழப்பழுவூர், வெற்றியூர், கீழக்குளத்ததூர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழி லாளர்கள், அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    • வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெற்றது
    • 250க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில்,மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் உயர்க்கல்வி சார்ந்த வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் தலைமை வகித்து, உயர்க்கல்வி தொடர்பான தகவல்கள், அரசு கல்வி உதவித் தொகைகள், நுழைவுத் தேர்வுகள், அரசுத் துறை பணிகள், போட்டித் தேர்வில் எவ்வாறு வெற்றிப் பெறுவது, தனியார் துறை வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இலவச திறன் பயிற்சி தகவல்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.கல்வி நிலையச் செயலர் கொ.வி.புகழேந்தி முன்னிலை வகித்தார். முன்னதாக அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன் வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்கள் ராஜா, சிவக்குமார் ஆகியோர் செய்தி ருந்தனர். இதில் மாணவ, மாணவிகள் 250 பேர் கலந்து கொண்டனர்.

    • அன்புமணி ராமதாசை முதல்வராக்குவே நோக்கம் என்று அறிவிப்பு
    • அரியலூரை சேர்ந்த ஏராளமான பா.ம.க.வினர் பங்கேற்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க செயல் திட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட வன்னியர் சங்கத் தலைவர் பூ.த. அருள்மொழி, பின்னர் செய்தியா ளர்களிடம் கூறி யதாவது:-ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைப்பு தலைவர்கள் அமைப்புச் செயலாளர்கள் மூலம் கிராமங்கள் தோறும் கிளை அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த செயல்திட்ட கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது .மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் கட்சி கிளைகளை ஏற்படுத்தி கட்சிப் பணிகளை ஆற்ற வேண்டும். தற்போது நடைபெற்ற இடைத்தேர்தல் பா.ம.க.-வுக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது வரவுள்ள தேர்தலுக்குள் அமைப்பு பணிகளை கிராமங்கள் தோறும் ஏற்படுத்துவதன் மூலம் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது .எங்களது நோக்கம் எல்லாம் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும். அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சராக வேண்டும் என்பது தான் எங்களது முக்கிய குறிக்கோளாகும் அதை நிச்சயம் நிறைவேற்றி காட்டுவோம் என்றார். கூட்டத்தில், மாநில அமைப்புத் தலைவர் செந்தாமரை கண்ணன், மாநில அமைப்புச் செயலர் தருமபுரி.ப.சண்முகம் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ம.க மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்-பகுதியைச் சேர்ந்த அமைப்பு செயலாளர்கள், தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளிக் கல்வித் துறை, புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
    • வெற்றியாளர்கள் தேர்வு செய்து சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது

    அரியலூர்,

    அரியலூரில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுப் பேச்சுப் போட்டி நடைபெற்றது.எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு அரியலூர் வட்டார வள மையத்தில், வாசிப்பை நேசி, வாழ்க்கையை சுவாசி என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடக்கி வைத்து பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகள் குறித்தும் மற்றும் வாசிப்பின் அவசியம் குறித்து பேசினார்.அரியலூர் அரசுக் கலைக் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் க.தமிழ்மாறன், த.மரகதம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் மாலா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு வெற்றியாளர்களை தேர்வு செய்து சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினர்.இதில், செந்துறை ஒன்றியம், சொக்கநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஆ.ராமதாஸ்க்கு முதல் பரிசும்,அரியலூர் ஒன்றியம், முனியங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் எம்.எஸ்.செல்வமோகனுக்கு இரண்டாம் பரிசும், தா.பழூர் ஒன்றியம், பொற்பதிந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ப.ஆறுமுகச்சாமி மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.முடிவில் வட்டார வளமைய மேற்பா ர்வையாளர் இரா.இரா ஜேஸ்வரன் நன்றி கூறினார். இப்போட்டிக்கான ஏற்பாடு களை புதிய பாரத எழுத்த றிவுத் திட்ட மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் கி.மேகலா ஏற்பாடு செய்திருந்தார்.

    • பணம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்
    • அரசு வேலை வாங்கித் தருவதாக நடந்தது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன் மகன் குணசேகரன் (வயது 41). இவர் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக தற்காலிக அடிப்படையில் பணியாற்றியுள்ளார். அப்போது, செந்துறையை அடுத்த பாளையக்குடி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் பிரகாசத்திடம் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக அடிப்படையில் எழுத்தாளர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார். மேலும் பிரகாசத்தின் உறவினர்கள்ள, நண்பர்கள் ஆகியோரிடமும் ஊராட்சிகளில் அரசு வேலை மற்றும் நிரந்தரப் பணி வாங்கித் தருவதாக கூறி வங்கிக் கணக்கு மூலமாகவும், நேரடியாகவும் ரூ.65.35 லட்சம் வரை பெற்றுக் கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார். ஆனால், அவை போலியானவை என்று தெரியவந்ததையடுத்து, பிரகாசம் இது குறித்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, குண சேகரனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடந்தது

    அரியலூர்

    திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் மீதும், கட்சி அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்திய பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கன்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் கலந்து கொண்டு பா.ஜ.க. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். முடிவில் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • நுகர்வோர் பாதுகாப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது
    • கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம், நாளை (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற உள்ளது.

    கூட்டத்தினை, வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். அக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொள்வார்கள். மேலும், அக்கூட்டம் நட த்தப்படுவதை மேற்பார்வை செய்திட அரியலூர் வட்டம் , புதுப்பாளையம் கிராம த்திற்கு தனித்துணை ஆட்சியர், சமூக பாது காப்புத் திட்டம் அரியலூர், உடையார்பா ளையம் வட்டம், வெண்மா ன்கொண்டான் (மேற்கு) கிராமத்திற்கு துணை பதிவாளர் (பொ.வி.தி) அரியலூர், செந்துறை வட்டம், ஆலத்தியூர் கிராமத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அரியலூர், ஆண்டிமடம் வட்டம், கூவத்தூர் (தெற்கு) கிராமத்திற்கு மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் அரியலூர், ஆகியோர் மேற்பார்வை அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    எனவே, அக்கூட்டத்தில், பொதுமக்கள் நியாய விலைக் கடைகள் தொடர்பான குறைகளைத் தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேசன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோ ர்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல், குடும்பத் தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்பத் தலைவரின் புகை ப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் படி பயன்பெறலாம் என அரியலூர்பெ கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
    • வரும் 27-ந் தேதி கடைசி நாள்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. என அரியலூர் மாவட்ட கலெக்டர் ெதரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-23 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவே ற்கப்படுகின்றன.

    விண்ணப்பிக்கத் தகுதிகள்: 01.01.2022 ஆம் நாளன்று 58 வயது நிறைவ டைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணை யவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றிய மைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ண ப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கான விண்ண ப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு திங்க ள்தோறும் உதவித்தொ கையாக ரூ.3500 - மருத்துவப்படி ரூ.500 - அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

    நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 27-ந்தேதிக்குள் அளி க்கப்பட வேண்டுமெனவும், நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்க ப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்று க்கொ ள்ளப்பட மாட்டாது எனவும் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    ×