என் மலர்tooltip icon

    அரியலூர்

    • புதுமைப் பெண் திட்டத்தில் 2 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
    • இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 10 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

    அரியலூர்:

    அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கலையரங்கத்துக்கு மாணவி அனிதா பெயர் சூட்டப்படுவதால், மருத்துவக்கல்வி பயில வரும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள், எதிர்ப்புகள் குறித்து தெரிந்து கொள்வார்கள்.

    நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான ரகசியம் என்னிடம் உள்ளது என கூறிவந்தது என்னவெனில், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் தொடரும் என்பதே.

    நான் பிரதமர் மோடியை சந்தித்தபோது கூட, நீட் தேர்வு ரத்து செய்யும் வரை, நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் தொடரும் என்று தெரிவித்து வந்தேன். தமிழகத்தில் அரசின் திட்டங்களான மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தில் 250 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர்.

    புதுமைப் பெண் திட்டத்தில் 2 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 10 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

    அதேபோல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், இன்னுயிர் காக்கும் 48 திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம் என பல்வேறு திட்டங்களினால் மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்றார்.

    • ஜெயலலிதா 75வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது
    • ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்

    திருமானூர்,

    திருமானூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மார்ச் 13 திருமானூரில் நடைபெற்றது.அரியலூர் மாவட்டம் திருமானூரில்முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுப்படி, திருமானூர் கூட்ட அரங்கத்தில், அதிமுக சார்பில் நடைபெற்றது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்கு, அதிமுக திருமானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என். வடிவழகன் தலைமை வகித்தார். திருமானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் பளிங்காநத்தம் ஊராட்சி மன்ற தலைவருமான சி. சாமிநாதன் வரவேற்று பேசினார்.அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட அவைத் தலைவருமான ராமஜெயலிங்கம், தலைமை நிலைய பேச்சாளர்கள் நெத்தியடி நாகையன், மணிவாசகம் உள்ளிட்டோர் பேசினார்கள்.மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் அக்பர் ஷரீப்மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் அறிவு என்கிற சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் தங்க பிச்சமுத்து, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஓட்டக்கோவில் சிவசங்கர், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஓபி சங்கர், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஆண்டிமடம் ரீடு செல்வம், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் அரியலூர் செல்வராஜ், தா.பழூர் அசோகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நல்லமுத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் இலந்தைகூடம் வைத்திலிங்கம், அன்புச்செல்வி ஜெயபால், தூத்தூர் காமராஜ், திருமானூர் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் சக்திவேல், கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் அன்பழகன், திருமானூர் ஒன்றிய குழு துனைத்தலைவர் அம்பிகா ராஜேந்திரன், கீழக்காவட்டாங்குறிச்சி சேட்டு என்கிற ராஜேந்திரன், தவமனி மற்றும் அதிமுகவின் திருமானூர் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்இறுதியில் அதிமுக மாவட்ட பிரதிநிதி ராஜேஸ்வரி ஜம்புலிங்கம் நன்றி கூறினார்.

    • பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடம் காலி
    • நேரிலும், தபால் மூலமாகவும், இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் சகி}ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடத்துக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்தது:அரியலூர் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க சமூக நலத்துறையின் கீழ் "சகி} ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படுகின்றது. அதில் பணிபுரிய கீழ்கண்ட நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்களுக்கு 8 வது தேர்ச்சி (அ) 10 வது தேர்ச்சி, தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்இதற்கு 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராகவும், சமையல் தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் வேண்டும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும். உள்ளுரை சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். உதவியாளர் பணிக்கு ரூ.6,400}யும், பாதுகாவலர் பணிக்கு ரூ.10,000}மும் தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும்.விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை அரியலூர் மாவட்ட இணையதளத்தில்  பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:  ஒருங்கிணைந்த சேவை மையம், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், அரியலூர் சித்தா மருத்துவம் எதிரில், அரியலூர்} 621704 என்ற முகவரிக்கு 23.03.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

    • 377 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெற்றப்பட்டது
    • மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்"மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி, தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 377 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • 50க்கும் மேற்பட்டோர் வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்தனர்
    • 28 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டு குடும்பமாக வசிப்பதால் இட நெருக்கடியால் தவிப்பதாக குறிப்பிட்டு மனு

    அரியலூர்,

    ஜெயங்கொண்டம் கீழ அருந்ததியர் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, அரியலூர் ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதியிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மேற்கண்ட ஊரில் இருந்து வந்திருந்த 50}க்கும் மேற்பட்டோர், அங்கு ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி சந்தித்து அளித்த மனுவில், நாங்கள் 28 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கண்ட ஊரில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறோம். தற்போது இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், வீட்டில் வசிக்க முடியாத சூழல்நிலை ஏற்படடுள்ளது. எனவே ஆட்சியர் அவர்கள் மேற்கண்ட ஊர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பதவி உயர்வு, பணி நெருக்கடி குறைத்திட கோரி ஆர்ப்பாட்டம்நடைபெற்றது
    • தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம்

    அரியலூர்,

    அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், உதவி இயக்குநர், உதவி செயற்பொறியாளர் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.ஊரக வளர்ச்சி துறையில் பணி நெருக்கடிகளை குறைக்க வேண்டும்.ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். கணி இயக்குபவர்களுக்கான பணி நிரந்தர அரசாணையை விரைந்து வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் து.ஜெயராஜ் தலைமை வகித்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பஞ்சாபிகேசன், மாவட்டச் செயலர் சண்முகம், மாவட்ட பொருளாளர் டி.என். முருகானந்தம், நிர்வாகி ஷேக்தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் என்.வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    • போலீசார் குறித்து தவறாக பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
    • சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது நடவடிக்கை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட காவல் துறையினர் மீது தவறாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்தார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் ஆக்கிரமித்ததை தொடர்ந்து, கடந்த 7-ந் தேதி அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதனை திசை திருப்பும் விதமாக காவல் துறையினர் குறித்து தவறான பிரசாரங்களை பல்வேறு இந்து இயக்கங்கள் மூலம் சிவனடியார் மீது தாக்குதல் என்று தவறாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சமூக அமைதி மற்றும் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொய் பிரசாரங்களை செய்து வருவதாக தெரியவருகிறது.இது போன்ற பதிவுகளை பதிவிடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்று மதத்தின் பெயரால் மக்களின் கவனத்தை திசை திருப்பி தங்களது சுயலாபத்திற்காக சமூக நல்லிணக்கத்தை குலைக்க முயலும் சமூக விரோதிகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.

    • திருமண மண்டபத்தில் தக்கவைத்தனர்.
    • சாலை மறியலில் ஈடுபட்ட 96 பேர் கைது செய்யப்பட்டனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள பழைய காவல் நிலையம் முன்பு மறவனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மகத்தன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, காவல் நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்காக காவல் நிலைய வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டது.இதையடுத்து உரிய அனுமதியின்றியும், ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கிலும் காவல் நிலைய வளாகத்தில் பந்தல் அமைத்ததாக விழாக் குழுவை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்ததை கண்டித்து கீழப்பழுவூர் கடைவீதியில் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 96 ே பரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தக்கவைத்தனர்.

    • உதவும் கரங்கள் குழுவில் உள்ளவர்கள் திரட்டினர்
    • மறைந்த காவலர் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது

    அரியலூர்:

    அரிலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த கலைச் செல்வம் உடல் நலக் குறைவால் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். இந்தநிலையில் அவரது குடும்பத்திற்கு உதவும் வகையில், காவலர் உதவும் கரங்கள் குழுவில் உள்ள காவலர்கள் 5,807 பேர் நிதி திரட்டினர். இதன்படி, திரட்டப்பட்ட ரூ.29,03,500-ஐ குவின் அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள், திருமானூர் சென்று கலைச் செல்வன் குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினர்.

    • தொழிற் சங்க 4-ம் ஆண்டு தொடக்க விழா
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அரியலூர்:

    அரியலூரில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் தொழிற்சங்க 4-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர்,பொருளாளர், செயற்குழு உறுப்பினர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஆன்லைன் மூலம் சவாரிக்கு ஆட்டோ, டாக்ஸி முன்பதிவு செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும். இரு சக்கர வாகன வாடகை முறையை ரத்து ெ சய்ய வேண்டும். சொந்த வாகனத்தை வாடகைக்கு விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மாசி மக திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது
    • 621 காளைகள், 166 காளையர்கள் கலந்து கொண்ட ஜல்லிகட்டு

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதிமொழி வாசித்து தொடக்கி வைத்தார்.துவக்க விழா நிகழ்ச்சியில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா கலந்துகொண்டார்.திருமானூர் ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர் சீமான் தலைமையில், ஊராட்சி மன்ற தலைவர் உத்திராபதி, விழாக்குழு நிர்வாகிகள் முருகானந்தம், மதிவாணன், கிஷோர், நரசிம்மன், சூரியமூர்த்தி, திருவேங்கடம், ராஜேந்திரன், ஆனந்தன் மற்றும் பலர் உள்ளிட்டோர் ஏற்பாடுசெய்திருந்தனர்இப்போட்டியில், 621 காளைகள் மற்றும் 166 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் கலந்து கொண்டுள்ள காளைகள் மற்றும் வீரர்களுக்கு முழு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே வாடி வாசலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 32 பேர் காயம் ஏற்பட்டது. அவர்களில் பரத் என்கிற நபர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.திருமானூர் ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் அவர்களுக்கு கட்டுப்படாமல் ஓடிய ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கும், ரொக்கப் பணம் உட்பட பல்வேறு பரிசு பொருட்கள் விழா குழு சார்பில் வழங்கப்பட்டன.அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, திருமானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் விஜயபார்த்திபன் உள்பட ஏராளமானோர், பார்வையாளர்களாக பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநர் (கால்நடை ப்பராமரிப்புத்துறை) கிரிஸ்டோபர், கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன், திருமானூர் ஊராட்சி மன்றத் தலைவர் உத்திராபதி மற்றும் சுகாதாரத்துறை, மருத்துவ அலுவலர்கள், ஜல்லிக்கட்டு விழா குழுவினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அரியலூர் போலீஸ் டிஎஸ்பி சங்கர் கணேஷ் தலைமை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள், மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விழாவில் சுமார் நான்காயிரம் பேர் கலந்துகொண்டனர்.

    • பணத்தை உடனடியாக வங்கியில் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு
    • தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு

    செந்துறை,

    அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வருகை தந்தார். அதன்படி செந்துறை பகுதிகளில் உள்ள பொன்பரப்பி அரசு பள்ளி, சோழன் குடிக்காடு மற்றும் முள்ளுக்குறிச்சி அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கடந்த ஆண்டு முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.அப்போது படைவெட்டி குடிக்காடு கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் சாகுபடி செய்ய ப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களுடைய நெல்லை 6 கி.மீட்டர் தூரம் கடந்து குழுமூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொடுத்து வந்தனர். அவர்கள் தங்களுக்கு போக்குவரத்து செலவு கூடுதலாக ஆவதால் 12 கிராம மக்களுக்கு தனியாக ஒரு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க பல ஆண்டுகாலம் கோரிக்கை வைத்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் உத்திரவின் பேரில் கடந்த 6 -ந்தேதி படைவெட்டிகு டிகாடு கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.இதை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திடீர் ஆய்வு செய்தார். நாள் ஒன்றுக்கு எவ்வளவு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது எனவும் விரைவாக நெல்லுக்கான பணத்தை வங்கில் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்திரவிட்டனர். இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் 15 ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட திட்ட மிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இந்த நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    ×