என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட 96 பேர் கைது
- திருமண மண்டபத்தில் தக்கவைத்தனர்.
- சாலை மறியலில் ஈடுபட்ட 96 பேர் கைது செய்யப்பட்டனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள பழைய காவல் நிலையம் முன்பு மறவனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மகத்தன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, காவல் நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்காக காவல் நிலைய வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டது.இதையடுத்து உரிய அனுமதியின்றியும், ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கிலும் காவல் நிலைய வளாகத்தில் பந்தல் அமைத்ததாக விழாக் குழுவை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்ததை கண்டித்து கீழப்பழுவூர் கடைவீதியில் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 96 ே பரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தக்கவைத்தனர்.
Next Story






