என் மலர்
அரியலூர்
- ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது
- நாளை நடைபெறுகிறது
அரியலூர்:
அரியலூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதற் கட்ட நேர்முகத் தேர்வு ஜெயங்கொண்டத்தில் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் பொது மேலாளர் அறிவுக்கரசு கூறியதாவது:-
108 ஆம்புலன்ஸில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பு வதற்கான முதற்கட்ட நேர்முகத் தேர்வு ஜெயங்கொண்டம் நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சி சாலை கமிட்டி அருகில் நாளை (18-ந் தேதி) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
மருத்துவ உதவியாளர்: வயது 19- 30 வயதுக்குள் இருக்க வேண்டும், பிஎஸ்சி நர்சிங், டிஎம்எல்டி, ஏஎன்எம் அல்லது லைஃப் சயின்ஸ் படிப்புகளில் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறையானது முதலில் எழுத்து தேர்வு மற்றும் மருத்துவம் சார்ந்த அடிப்படை முதலுதவி ,செவிலியர் தொடர்பான அடிப்படை அறிவு பரிசோ திக்கப்படும்.இறுதியாக மனிதவள துறையின் நேர்முகதேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சிக்கு முன்னர் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஓட்டுநர் பணி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 24 -35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். இலகுரக வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்த பட்சம் 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். முதல் கட்டமாக எழுத்து தேர்வு , தொழில்நுட்ப தேர்வு, மனித வள நேர்காணல், சாலை விதிகள் சம்பந்தமான தேர்வு, கண்பார்வை திறன் சோதிக்கும் தேர்வு போன்றத் தேர்வுகள் நடைபெறும். மாதம் ஊதியமாக 15,235 வழங்கப்படும்
அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பனிக்குண்டான தேர்வு மற்றும் நேர்காணலில் வெற்றி பெற்றவர்கள் 12 மணி நேர இரவு மற்றும் பகல் ஷிப்ட் முறைகளில் தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவர்.நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் தங்களது சான்றிதழ்களின் அசல், நகல்களை கொண்டு வரவேண்டும். மேலும் சந்தேகங்களுக்கு 9154250969 என்ற கைப்பேசி எண்ணில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
- வயர்மேனாக 10 ஆண்டாக பணியாற்றியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கறம்பக்குடி,
அரியலூர் மாவட்டம் கன்னிச்சாமி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50). இவர் கறம்பக்குடி மின்வாரிய அலுவலகத்தில் வயர் மேனாக கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனது மனைவி மற்றும் மகன் மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு நீண்ட காலமாக குதிகால் வலி மற்றும் தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் வலி தீராத நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து மன வேதனையில் இருந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ரவிச்சந்திரன் ஜன்னல் கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- ஜெயங்கொண்டம் பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
- கணக்கில் வராத ரூ.6 ஆயிரம் பறிமுதல்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சந்திரசேகர் மற்றும் செந்துறை துணை வட்டாட்சியர் ராமலிங்கம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பவுன்ராஜ், ரவி மற்றும் போலீசார் ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென நுழைந்து ஆய்வு செய்தனர். ஆய்வில் கணக்கில் வராத ரூ 6 ஆயிரம் தொகையை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்திரப்பதிவு அலுவலக பொறுப்பு சார்பதிவாளர் பிரகாஷ் மற்றும் உள்ளே இருந்த அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கல்லூரிக்கு சென்றுவிட்டு வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை
- பெற்றோர் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே த.வளவெட்டிகுப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வீரமுத்து மகள் தமிழ்பொன்னி(வயது21). இவர் கீழப்பமழூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழ்பொன்னி வழக்கம் போல் கல்லூரி சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர் தமிழ்பொன்னியை நண்பர்கள், உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்கு பதிந்து மாயமான தமிழ்பொன்னியை தேடி வருகிறார்.
- அரியலூரில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது என்று கலெக்டர் தகவல்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளதாவது, அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கெளசல்யா யோஐனா திட்டத்தின் கீழ், கிராமம் மற்றும் நகர்புறத்திலுள்ள படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (17-ந் தேதி) அன்று அரியலூர் அரசினர் கலைக் கல்லூரியில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 5 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலரும், தங்களது சுய விபர குறிப்பு, ஆதார் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
- 1484 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட உள்ளது
- காரைப்பாக்கம் மாரியம்மன் கோயில் நிலங்கள் அளவீடு செய்யும் பணி தொடங்கியது
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், காரைப்பாக்கம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடும் செய்யும் பணிகள் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்வதற்காக நில அளவை குழுக்கள் அமைக்கப்பட்டு, நவீன நில அளவை கருவி கொண்டு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 1484.58 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காரைப்பாக்கம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை, ஆலயநிலங்கள் வட்டாட்சியர் கலைவாணன், திருமானூர் இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் ஆய்வு செய்து, நில அளவீடும் பணியை தொடங்கினர்.
- அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது
- 39 யூனிட் ரத்ததானம் வழங்கப்பட்டது
அரியலூர்,
அரியலூர் அடுத்த விளாங்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் ரத்ததான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.அக்கல்லூரியின் முதல்வர் செந்தமிழ்ச்செல்வன் ரத்ததானம் வழங்கி முகாமை தொடக்கி வைத்தார். முகாமில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு 39 யூனிட் ரத்ததானம் வழங்கினர். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி ரத்தவங்கி மருத்துவக் குழுவினர் ரத்தானத்தை சேகரித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஆ. ஆதிலட்சுமி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் க. சத்யபிரியா ஆகியோர் செய்திருந்தனர்.
- சரக்கு ஆட்டோ நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு
- மீன் வியாபாரம் காரணமாக அப்பகுதியில் நாள் தொல்லை அதிகரிப்பு
திருமானூர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் சரக்கு ஆட்டோவில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மீன் விற்கப்படுகிறது.இதனை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையில் அப்படியே நிறுத்திவிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன. மேலும் மீன்களின் கழிவுகளை சாலையின் ஓரங்களில் கொட்டி செல்வதால் துர்நாற்றம் வீசுவதுடன் நாய்களின் தொல்லைகளும் அதிகரித்துள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 190 வழக்குகள் தீர்வு காணப்பட்டது
- மாவட்ட நீதிபதி தலைமையில் நடைபெற்றது
அரியலூர்,
அரியலூர் மாவட்ட சட்டபணிகள் அணைக்குழு சார்பில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவருமான மகாலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணன், சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் மூத்த சிவில் நீதிபதி அழகேசன், நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அறிவு, ஜெயங்கொண்டத்தில் சார பு நீதிபதி லதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ்நீதித்துறை நடுவர் நீதிபதி ராஜசேகர் ஓய்வுபெற்ற நீதிபதி முத்துகிருஷ் ணன், நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2 சிவில் வழக்கு, 6 மோட்டார் வாகன விபத்து வழக்கு, 111 வங்கி வழக்கு, 71 நிலம் கையகப்படுத்திய வழக்கு ஆக மொத்தம் 190 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
- காப்பீடு இல்லாத வாகனத்தில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈடு ெபற முடியாது
- அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தகவல்
அரியலூர்,
அரியலூர் அருகே ராயம்புரம் திரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான மகாலட்சுமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,மக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தயங்காமல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை நேரில் அனுகினால் இரு தரப்பினரையும் நேரில் அழைத்து விசாரித்து சுமூகமாக தீர்வு காண்பதற்கு ஏற்பாடு செய்து தரப்படும்.ஆனால் குற்றவியல் வழக்குகளுக்கு இது பொருந்தாது. குற்றவியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு இலவசமாக வழக்கறிஞர் வைத்து தரப்படும். மூத்த குடிமக்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் அவ்வாறு பராமரிக்க தவறினால் சட்டம் தன் கடமையை செய்யும். சொத்துகளில் பெண்களுக்கு சம உரிமை உண்டு. காப்பீடு இல்லாத வாகனங்களில் குறிப்பாக லாரி மூன்று சக்கர ஆட்டோ ஆகிய வாகனங்களில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டால், நஷ்ட ஈடு பெற இயலாது.பெற்றோர்கள் தாங்கள் உயிரோடு இருக்கும்போது சொத்துக்களை தங்களது பிள்ளைகளுக்கு மாற்றம் செய்வது தவிர்க்க வேண்டும் நீதிமன்றங்கள் இந்த மாதிரி வழக்குகள் நிறைய வருகின்றன. ஏனெனில், பிள்ளைகள் தங்களது பெயருக்கு சொத்து மாற்றம் செய்யப்பட்டவுடன் பெற்றோர்களை கவனிப்பதில்லை. பெண் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளை முன் பின் தெரியாத நபர்களிடம் விடக்கூடாது. குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே பாலியல் பாலியல் புரிதல் பற்றிய கல்வி முறையை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சொல்லித் தர வேண்டும். குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் தயங்காது அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவினை நேரில் அணுகலாம்.சட்ட விரோதமாக ஆசிட் உற்பத்தி ெசய்பவர்களை தண்டிக்க டுமையான சட்டங்களை இயற்ற ே வண்டும் என்று தெரிவித்தார்.
- ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான பயிற்சி
- அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி தகவல்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்களின் திறனுக்கேற்ப அவர்களுக்கு பல்வேறு பயிற்சி திட்டங்கள் வழங்கி வருகிறது.அதன் அடிப்படையில் இந்திய மேலாண்மை கழகம் மற்றும் இந்திய தொழில் நுட்பக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் முதுகலை வணிக மேலாண்மை படிப்பு பயில நடப்பாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொது நுழைவுத் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.இப்பயிற்சி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அல்லது கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதும் தேர்வு நடைபெறுவதும் இணையதளம் வழியாகவே நடைபெறும் மற்றும் இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும்மேலும் இப்பயிற்சிக்கு தேவையான மடிக்கணினி வசதிகள் தாட்கோ மூலமாக ஏற்பாடு செய்து தரப்படும். எனவே இப்பயிற்சிக்கு விருப்பமுள்ள ஆதிதிராவிட / பழங்குடியின மாணவ,மாணவிகள் பயன் பெற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
- பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வின் முதல் நாள் தமிழ் தேர்வை எழுதாத சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மறுபடியும் வாய்ப்பு அளிக்கப்படும்.
- பெரம்பலூர் அரசு மருத்துவ கல்லூரியை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
அரியலூர்:
அரியலூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வின் முதல் நாள் தமிழ் தேர்வை எழுதாத சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மறுபடியும் வாய்ப்பு அளிக்கப்படும். தொடர்ந்து தமிழக அரசு, மாணவர்கள் அதிகமாக பள்ளிக்கு வர வேண்டும் என்று கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.
பெரம்பலூர் அரசு மருத்துவ கல்லூரியை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






