என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.பி.ஏ. பயில இலவச கேட் பயிற்சி
    X

    எம்.பி.ஏ. பயில இலவச 'கேட்' பயிற்சி

    • ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான பயிற்சி
    • அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி தகவல்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்களின் திறனுக்கேற்ப அவர்களுக்கு பல்வேறு பயிற்சி திட்டங்கள் வழங்கி வருகிறது.அதன் அடிப்படையில் இந்திய மேலாண்மை கழகம் மற்றும் இந்திய தொழில் நுட்பக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் முதுகலை வணிக மேலாண்மை படிப்பு பயில நடப்பாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொது நுழைவுத் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.இப்பயிற்சி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அல்லது கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதும் தேர்வு நடைபெறுவதும் இணையதளம் வழியாகவே நடைபெறும் மற்றும் இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும்மேலும் இப்பயிற்சிக்கு தேவையான மடிக்கணினி வசதிகள் தாட்கோ மூலமாக ஏற்பாடு செய்து தரப்படும். எனவே இப்பயிற்சிக்கு விருப்பமுள்ள ஆதிதிராவிட / பழங்குடியின மாணவ,மாணவிகள் பயன் பெற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    Next Story
    ×