என் மலர்tooltip icon

    அரியலூர்

    • நீதிபதி மகாலெட்சுமி தலைமையில் நடடைபெற்றது
    • மக்கள் பிரச்சினைகள் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று உறுதி

    அரியலூர்,

    அரியலூர்மாவட்டம், திருமானூர்ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் பாதிக்கப்பட்டவர் கள், கடத்தல், மற்றும் வணிகரிதியான பாலியல் சுரண்டல் குறித்த சட்டஉதவி மற்றும் சட்டவிழிப்புணர்வு முகாம் மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவருமான மகாலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது : -மக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தயங்காமல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை க்குழு அலுவலகத்தை நேரில் அணுகினால் இருதரப்பினரையும் நேரில் அழைத்து விசாரித்து சுமூக தீர்வு காண்பதற்கு ஏற்பாடு செய்து தரப்படும். மக்கள் நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமை பறிபோகக்கூடாது. படிப்பறிவு இல்லை என்பதற்காகவும் ஏழ்மை என்பதற்காகவும் எழுத்தறிவு இல்லை என்பதற்காகவும் நீதி மறுக்கப்படக்கூடாது. நீதி மன்றத்தையும், காவல்து றையையும் மக்கள் ஒதுக்கி வைக்கிறார்கள். ஒரு வழக்கு முடிவதற்கு குறைந்தபட்சம் 5 வருட காலம் நீடிப்பதாலும் மக்கள் மிகவும் விரக்தியாகிறார் கள். பல நாட்கள் கழித்துதான் தீர்ப்பு கிடைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான். சட்டம் ஒரு நியதிக்கு உட்பட்டுதான் இயங்கும். இது நடைமுறை சிக்கல்கன், காலதாமதம் போன்ற இடர் பாடுகளினால் ஏற்படுகின்றது.இதனால் மக்களுக்கு விரக்தி ஏற்பாடாமலிருக்க வேண்டும் என்தன் பொருட்டு மாவட்ட வாரியாக தீர்வு காண்பதற்கு மாற்றுமுறை தீர்வாக சட்டப்பணிகள் ஆணைக்குழு ஒரு அங்கமாகநியமிக்கப்பட்டது.எல்லா பிரச்சனைகளும் நீதிமன்றங்கள் மாதிரியே எடுத்துக்கொள்ளும். அதாவது, முக்கியமாக குற்றவியல் வழக்கு, கொலை வழக்கு, குடும்ப வழக்கு, அடிதடி வழக்கு மற்றும் கணவன், மனைவி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், சொத்து பிரச்சனைகள், விபத்து வழக்குள் குறித்து தீர்வு காண சுமூகமாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணை க்குழுவை அணுகலாம். மக்கள் நேராக வந்து தமது பிரச்சனையை சொன்னால் போதும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் மிக விரைவில் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

    மேலும் மக்கள் பயனடையும் வகையில் ஒவ்வொரு தாலுக்காவிலும் சட்டப்பணிகள் குழு இயங்குகிறது என்றும் கூறினார்.சட்ட பணிகள் ஆணைக்குழு செய லாளர் அழகேசன் முன்னிலை வகித்தார், திருமா னூர்ஊராட்சி மன்ற தலைவர் உத்திராபதி வரவேற்று பேசினார், வக்கில் சங்க பொறுப்பாளர் மனோகரன், செல்வராஜ், முத்துகுமார், செந்தி ல்குமார், தேவேந்திரன், காவல்ஆய்வாளர் சகாயம் அன்பரசு, சட்ட பணிகள் நிர்வாக அலுவலர் வெள்ளை சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர், நிகழ்ச்சி முடிவில் ஊராட்சி மன்ற துணைதலைவர் மணிமாறன் நன்றி கூறினார்.


    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • ஏழாவது மத்திய குழு ஊதிய பரிந்துரையை அமல்படுத்தகோரிக்கை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.போராடத்தில், ஓய்வூதி யத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது மத்திய ஊதியக்குழு ஊதி யத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்க ளுக்கான ஊதிய முரண்பாடு களை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலக ங்கள்(தொடக்கக் கல்வி), வட்டாரக் கல்வி அலுவ லகங்களில் ஏற்ப ட்டுள்ள காலிப்ப ணிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.ஆசிரியர் தகுதித் தேரவை (டெட்) ரத்துச் செய்து, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக முன்னுரி மைப்படி ஆசிரியர் நியமனங்களை செய்திட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறு த்தப்பட்டன.போராட்டத்துக்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் இரா.அசோகன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர் இ.எழில் உண்ணா விரதத்தை தொடக்கி வைத்து பேசினார். முன்னாள் மாநில செயற் குழு உறப்பினர் க.பாலசுப்பி ரமணியன், முன்னாள் மாவட்டப் பொருளாளர் மா.மார்ட்டின் ஆரோ க்கியராஜ் ஆண்டிமடம் வட்டாரச் செயலர் இரா.வேல்மணி, மாநில பொதுக் குழு உறுப்பினர் சிவபாக்கியம், மாவட்ட பொருளாளர் தங்க.சிவமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து, கோரிக்கை விளக்க உரை யாற்றினர். மாநில செயற் குழு உறுப்பினர் பெரம்பலூர் சு.முருகேசன், போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.


    • பொதுமக்களுடன் கலெக்டர் உணவருந்தினார்
    • நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    அரியலூர்,

    அரியலூர் ஸ்ரீகோதண்ட ராமசாமி திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு சமத்துவ விருந்தில் பொதுமக்களுடன் மாவட்டகலெக்டர் ரமண சரஸ்வதி கலந்து கொண்டு உணவருந்தினார்.அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தீண்டாமை ஒழித்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஸ்ரீகோதண்டராமசாமி திருக்கோவிலில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி கலந்துகொண்டார்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக முதலமைச்சர் ஆலயங்கள் தோறும் அன்னதானம் எனும் திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் திருக்கோ யில்களில் அன்ன தானம் வழங்க உத்தரவி ட்டுள்ளார்.அனைத்து மக்களும் சமம் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் தீண்டாமை ஒழிப்பு தொடர்பாக சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அனைத்து சமூக மக்களுக்கும் ஒன்றாக விருந்து அளிக்கும் நோக்கில் சமத்துவ விருந்து வழங்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயபாஸ்கர், தனித்துணை ஆட்சியர் (ச.மூ.பா.தி) திரு.குமார், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


    • விஸ்வ இந்து பரிஷத்அ ரியலூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • எஸ்.பி.பரிந்துரையின் பேரில் கலெக்டர் உத்தரவு

    அரியலூர்,

    அரியலூர் கீரைக்காரத் தெருவைச் சேர்ந்தவர், பி.முத்துவேல்(வயது 39). விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச்செயலாளரான இவர், அரியலூர் லூர்து அன்னை ஆலயத்தி ன்பங்குத்தந்தை டோமினிக் சாவியோவை (வயது 54), மிரட்டி ரூ.25 லட்சம்பணம் பறிக்க முயற்சிசெய்த வழக்கில்கைது செய்ய ப்பட்டு சிறையில் உள்ளார்.கிறிஸ்துவ மத போதகர்களை மிரட்டியது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் குறித்து அவதூறு பரப்பியது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து முகநூலில்அவதூறாக பரப்பியது, கிறிஸ்தவ கடவுள்களை இழிவுப்படுத்தியது, கடைக்காரர்களைப் பணம் கேட்டு மிரட்டியது என அரியலூர் மாவட்டக் காவல் நிலையங்களில் முத்துவேல் மீது 15 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் தொடர்ந்து மாவட்டத்தில் மக்களிடையே மத மோதல்களை தூண்டி விட்டு வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், முத்துவேலை குண்டர்சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    • ஜெயங்கொண்டம் அருகே வரதராஜன் பேட்டை பேரூராட்சியில் பரபரப்பு
    • ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானம்


    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன் பேட்டை பேரூராட்சி சாதாரண கூட்டம் அங்குள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் மார்க்கெட் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எட்வின் ஆர்தர் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் ஒப்பந்ததாரர் பம்பு ஆப்ரேட்டர் ஸ்ரீதருக்கு தரவேண்டிய பழைய பாக்கி தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர்.ஆனால் இதற்கு செயல் அலுவலர் மருது பாண்டியன் ஒப்புக்கொள்ள மறுத்தார்.இதற்கு கவுன்சிலர்கள் தங்கள் ஆட்சேபனையை தெரிவித்தனர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் கவுன்சிலர்கள் செயல் அலுவலர் தன்னிச்சையாக செயல்படுகிறார். பேரூராட்சி பணிகளுக்கு தடையாக இருக்கிறார்.ஆகவே அவரை மாற்ற வேண்டும் என திடீரென போர்க்கொடி உயர்த்தினர்.பின்னர் பேரூராட்சி பொது நிதியில் கையாடல் செய்து தன்னிச்சையாக செயல்படும் செயல் அலுவலர் மருது பாண்டியன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரூராட்சி தலைவர்,துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் அனைவரும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.இந்த தீர்மானத்தை பேரூராட்சிகள் உதவி இயக்குனருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர். பேரூராட்சி கூட்டத்தில் செயல் அலுவலருக்கு எதிராக தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் திடீர் போர்க்கொடி உயர்த்தி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




    • அடிப்படை வசதிகள் செய்து தர கோரி வாக்குவாதம்
    • கவுன்சிலர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து கேள்வி

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் லதா கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் தீர்மானங்களை கணக்கர் தாமோதரன் வாசித்தார்.தீர்மானங்களில் ஒன்றிய செலவினங்கள் மற்றும் 2022-23 ஆம் ஆண்டு 15 வது நிதிக்குழு மாநியம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணிகள் முழுமையாக மேற்கொள்ள பணிகள் தேர்வு செய்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் நடராஜன் பேசும்போது -2022-23 ஆண்டில் கவுன்சிலர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு யார் யார் எவ்வளவு பணிகள் செய்திருந்தனர் முடிக்கப்பட்டுள்ளனவா என்று கேள்வி எழுப்பினார்.ஒன்றிய கவுன்சிலர் பிரிதிவிராஜன்- உட்கோட்டை ஊராட்சியில் பாதை, மின்விளக்குகள் அமைக்க வேண்டிய தெற்கு ஆயுதகளத்தில் குடிநீர் பற்றாக்குறையை சீரமைக்க வேண்டும் என்றார்.உறுப்பினர் ரமேஷ் பேசும் போது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி சீரமைக்க வேண்டும் என கூறினார்.உறுப்பினர் அருள்தாஸ்-வானதிரையன்பட்டினம் கீழத்தெரு, தெற்குதெரு ஆகிய பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் பைப் உள்ளேயே உடைந்து உள்ளது.மோட்டார் இயங்கவில்லை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்ஒன்றிய குழு தலைவர் ரவிசங்கர் பேசும் போது, உறுப்பினர்கள் கூறிய கோரிக்கைகளை விரைந்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். .கூட்டத்தில் உறுப்பினர்கள் சுப்ரமணியன், சிவகுமார், சத்யா, சம்பத்குமார், செந்தமிழ் செல்வி, நாகலட்சுமி, சுமதி, சீதை, ராஜேஸ்வரி, ஜெயந்தி, ரேவதி உட்பட ஒன்றிய அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




    • 1498 பேருக்கு பணிநியமன சான்றிதழ்
    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் அரசுகலைக்கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடை பெற்றது. கலெக்டர் ரமணசரஸ்வதி, எம்.எல்.ஏ. சின்னப்பா முன்னிலையில் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு 1498 நபர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,இம்முகாம்களில் இளைஞர்களின் தகுதி மற்றும் திறன்களுக்கு ஏற்றவாறு பணியமர்வு செய்யப்படுகின்றனர். வட்டார அளவில் ஏற்கனவே நடைபெற்ற பணி திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பெற்றவர்கள் இம்முகாமை பயன்படுத்தி கொள்ளவேண்டும். இம்முகாமில் பல்வேறு தனியார் துறைகளைசேர்ந்த 56 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன.முதலமைச்சர் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவ ட்டத்திற்கு வருகைதந்த பொழுது புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி சென்றுள்ளார். அதன் மூலம் புதிய 10000 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற உத்திரவாதம் கிடைத்துள்ளது. இன்னும் ஓராண்டு காலத்திற்குள் தொழிற்சாலை செயல்ப டும்போது நம்முடைய பகுதியை சேர்ந்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.அரசு கலைக்கல்லூரிக்கு வரும் மாணவ மாணவியர்கள் தற்பொழுது மருத்துவக் கல்லூரி அமைக்கப்ப ட்டுள்ளதால் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது. இதை கருத்தில்கொண்டு மாவட்ட கலெக்டருடன் கலந்து ஆலோசித்து குறுகிய சாலைகளை சரி செய்தபின் விரைவில் அரசு கலைக்கல்லூரி வரை பேருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.இம்முகாமில் இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் முருகண்ணன், அரியலூர் நகர்மன்ற தலைவர் க.சாந்தி, அரசு கலைக்கல்லூரி முதல்வர் மலர்விழி, உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


    • பாளையபாடி கிராமத்தில் 10ஆண்டுக்கு பிறகு திறக்கப்பட்டதால் விவசாயிகள் உற்சாகம்
    • திறப்பு விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்


    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையப்பாடி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று பாளையபாடி பஸ் நிலையம் அருகில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது .விவசாயிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.முன்னாள் பால்வளத்துறை தலைவர் பாலை திருநாவுக்கரசு அரசு அதிகாரிகளுக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாளை அமரமூர்த்தி கலந்து கொண்டு இந்த நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ், மாரியப்பன், பாளை பழனிச்சாமி, ரவிசங்கர், கோவிந்தராஜ். சுபாஷ், பழனியப்பன் , மணியன், கருப்பையன், வினோத் ராஜ் மற்றும் கிராம பொதுமக்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் ஸ்வீட் காரம் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது




    • வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கருத்தரங்கம் - கண்காட்சி நடந்தது
    • மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழக அரசின் மூலம் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர்ப ழனிசாமி முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலை வகித்தார்.

    இதில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிச்சாமி திட்டவிளக்கவுரை வழங்கினார். இறுதியாக ஜெய ங்கொண்டம் வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பிர மணியன் நன்றி கூறினார்.இந்நிகழ்வில் அனைத்து வட்டார வேளாண்மை அட்மா குழு உறுப்பினர்கள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    • அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் வாலிபர்கள் ஈடுபட்டனர்
    • பன்றிகளை பிடிக்கும் முயற்சி

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கும் சுகாதா ரத்திற்க்கும் கேடு விளைவிக்கும் வகையில் நகர் முழுவதும் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக நகராட்சிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    அதனடிப்படையில் நகர் மன்ற தலைவர் சுமதி சிவகுமார், துணைத் தலைவர் கருணாநிதி, நகராட்சி ஆணையர் மூர்த்தி, ஆகியோர் ஜெயங்கொண்டம் நகர் பகுதியில் சுற்றி திரியும் பன்றிகளை பிடிக்க உத்தரவிட்டனர். உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் சாம்கர்னல் தலைமையில் தூய்மை இந்தியா திட்டம் மேற்பா ர்வையாளர் ரமேஷ், துப்புரவு பணி மேற்பா ர்வையாளர்கள் நகர் பகுதி முழுவதும் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடித்தனர்.

    அப்பொழுது பன்றிகளை வளர்க்கும் இளை ஞர்களுக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது அப்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் வண்டிகளை அடித்து உடைத்து விடுவதாக கூறியதால் மேலும் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

    இந்நிலையில் பன்றிகளை வளர்ப்போர் அதற்கான வழிமுறைகளுடன் வளர்க்க வேண்டும் நகர் பகுதியில் சுற்றி திரியும் பன்றிகள் தொடர்ந்து பிடிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்
    • நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 21 வார்டுகளில் பொதுமக்களிடம் குடிநீர் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, காலி மனை வரி, தொழில்வரி, வரியில்லா இனம் மற்றும் குத்தகை இனம் உள்ளிட்ட வரிகள் வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 5 கோடி ரூபாய் வரி வசூல் பாக்கி உள்ள நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரிகள் நகராட்சி ஆணையர், மேலாளர், பொறியாளர் மற்றும் பணியாளர்கள் சேர்ந்து அதிரடியாக வரி வசூலில் ஈடுபட்டனர்.

    இதன் மூலம் சுமார் 1.5 கோடி ரூபாய் வசூல் ஆன நிலையில் மீதம் 3.5 கோடி பாக்கி உள்ளது.இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக நகராட்சிக்கு வர வேண்டிய குடிநீர் வரி சுமார் 25 லட்சம் பாக்கி வர வேண்டி உள்ளதால். ஜெயங்கொண்டம் அண்ணா சிலை பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத வீடுகளில் உடனடியாக வரி செலுத்தாத பட்சத்தில் குடிநீர் இணைப்புகளை துண்டித்து அதிரடி வரி வசூல் செய்து வருகின்றனர்.இதேபோல் 87 லட்சத்துக்கு மேல் சொத்து வரியும், 22 லட்சம் தொழில் வரியும், காலி மனை வரி விதிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகியும் இது வரை வரி செலுத்தப்படவில்லை.

    மேலும் வரி இல்லா இனம், குத்தகை இனம் செலுத்த வேண்டியவற்றை தற்பொழுது நகராட்சி நிர்வாகம் அதிரடியாக தீவிர வசூலில் இறங்கி உள்ளனர்.மேலும் இது பற்றி நகராட்சி ஆணையர் கூறும்போது வரி செலுத்த தவறுறோர்கள் மீது ஜப்தி நடவடிக்கை குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட மேல் நடவடிக்கைகள் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • நகர மன்ற கூட்டம் நடைபெற்றது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன் தலை மையில், துணைத் தலைவர் கலியமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. நகராட்சி கமிஷனர் (பொ) தமயந்தி வரவேற்று பேசினார்.

    நகர் மன்ற உறுப்பினர்கள் ஜேசுமேரி காட்வின்லீனஸ், செல்வரா ணி பரமேஸ்வரன், சத்தியன், கண்ணன், ரேவதிராமு, மகாலட்சுமி கார்த்திகேயன், இன்பவள்ளி மாரியப்பன், முகமது இஸ்மாயில், மலர்கொடி மனோகரன், வெங்கடா ஜலபதி, ஜெயந்திகுணா, ராணி சந்திரசேகர், ராஜேஷ், ஜீவாசெந்தில், புகழேந்தி, அலுவலக மேலாளர் சரஸ்வதி, நகரமைப்பு வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், நகராட்சி தலைவர் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

    நகராட்சியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகராட்சி வார சந்தையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், 2023 - 24 ம் ஆண்டிற்கான வார சந்தை குத்தகையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, நகராட்சி பகுதியில் குடிநீர் கட்டணம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை 180 வசூலிக்கப்படுகின்றது, காலம் தவறி கட்டினால் அபராதம் 10 என வசூலிக்க ப்படுகின்றது, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சிரமமின்றி குடிநீர் வாரி செலுத்து வதற்கு எதிர்வரும் நிதியாண்டில் இருந்து அபராத தொகை வசூலிக்கப்பட மாட்டாது, என தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டுள்ளது.

    நகர்மன்ற கூட்டத்தில் பத்து தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

    ×