என் மலர்
உள்ளூர் செய்திகள்

நகர மன்ற கூட்டம்
- நகர மன்ற கூட்டம் நடைபெற்றது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
அரியலூர்:
அரியலூர் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன் தலை மையில், துணைத் தலைவர் கலியமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. நகராட்சி கமிஷனர் (பொ) தமயந்தி வரவேற்று பேசினார்.
நகர் மன்ற உறுப்பினர்கள் ஜேசுமேரி காட்வின்லீனஸ், செல்வரா ணி பரமேஸ்வரன், சத்தியன், கண்ணன், ரேவதிராமு, மகாலட்சுமி கார்த்திகேயன், இன்பவள்ளி மாரியப்பன், முகமது இஸ்மாயில், மலர்கொடி மனோகரன், வெங்கடா ஜலபதி, ஜெயந்திகுணா, ராணி சந்திரசேகர், ராஜேஷ், ஜீவாசெந்தில், புகழேந்தி, அலுவலக மேலாளர் சரஸ்வதி, நகரமைப்பு வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், நகராட்சி தலைவர் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
நகராட்சியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகராட்சி வார சந்தையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், 2023 - 24 ம் ஆண்டிற்கான வார சந்தை குத்தகையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, நகராட்சி பகுதியில் குடிநீர் கட்டணம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை 180 வசூலிக்கப்படுகின்றது, காலம் தவறி கட்டினால் அபராதம் 10 என வசூலிக்க ப்படுகின்றது, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சிரமமின்றி குடிநீர் வாரி செலுத்து வதற்கு எதிர்வரும் நிதியாண்டில் இருந்து அபராத தொகை வசூலிக்கப்பட மாட்டாது, என தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டுள்ளது.
நகர்மன்ற கூட்டத்தில் பத்து தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.






