search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர்கள்
    X

    அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர்கள்

    • அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் வாலிபர்கள் ஈடுபட்டனர்
    • பன்றிகளை பிடிக்கும் முயற்சி

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கும் சுகாதா ரத்திற்க்கும் கேடு விளைவிக்கும் வகையில் நகர் முழுவதும் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக நகராட்சிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    அதனடிப்படையில் நகர் மன்ற தலைவர் சுமதி சிவகுமார், துணைத் தலைவர் கருணாநிதி, நகராட்சி ஆணையர் மூர்த்தி, ஆகியோர் ஜெயங்கொண்டம் நகர் பகுதியில் சுற்றி திரியும் பன்றிகளை பிடிக்க உத்தரவிட்டனர். உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் சாம்கர்னல் தலைமையில் தூய்மை இந்தியா திட்டம் மேற்பா ர்வையாளர் ரமேஷ், துப்புரவு பணி மேற்பா ர்வையாளர்கள் நகர் பகுதி முழுவதும் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடித்தனர்.

    அப்பொழுது பன்றிகளை வளர்க்கும் இளை ஞர்களுக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது அப்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் வண்டிகளை அடித்து உடைத்து விடுவதாக கூறியதால் மேலும் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

    இந்நிலையில் பன்றிகளை வளர்ப்போர் அதற்கான வழிமுறைகளுடன் வளர்க்க வேண்டும் நகர் பகுதியில் சுற்றி திரியும் பன்றிகள் தொடர்ந்து பிடிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×