search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்
    X

    தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்

    • 1498 பேருக்கு பணிநியமன சான்றிதழ்
    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் அரசுகலைக்கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடை பெற்றது. கலெக்டர் ரமணசரஸ்வதி, எம்.எல்.ஏ. சின்னப்பா முன்னிலையில் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு 1498 நபர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,இம்முகாம்களில் இளைஞர்களின் தகுதி மற்றும் திறன்களுக்கு ஏற்றவாறு பணியமர்வு செய்யப்படுகின்றனர். வட்டார அளவில் ஏற்கனவே நடைபெற்ற பணி திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பெற்றவர்கள் இம்முகாமை பயன்படுத்தி கொள்ளவேண்டும். இம்முகாமில் பல்வேறு தனியார் துறைகளைசேர்ந்த 56 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன.முதலமைச்சர் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவ ட்டத்திற்கு வருகைதந்த பொழுது புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி சென்றுள்ளார். அதன் மூலம் புதிய 10000 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற உத்திரவாதம் கிடைத்துள்ளது. இன்னும் ஓராண்டு காலத்திற்குள் தொழிற்சாலை செயல்ப டும்போது நம்முடைய பகுதியை சேர்ந்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.அரசு கலைக்கல்லூரிக்கு வரும் மாணவ மாணவியர்கள் தற்பொழுது மருத்துவக் கல்லூரி அமைக்கப்ப ட்டுள்ளதால் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது. இதை கருத்தில்கொண்டு மாவட்ட கலெக்டருடன் கலந்து ஆலோசித்து குறுகிய சாலைகளை சரி செய்தபின் விரைவில் அரசு கலைக்கல்லூரி வரை பேருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.இம்முகாமில் இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் முருகண்ணன், அரியலூர் நகர்மன்ற தலைவர் க.சாந்தி, அரசு கலைக்கல்லூரி முதல்வர் மலர்விழி, உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


    Next Story
    ×