என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீன் வியாபாரிகளால் போக்குவரத்து பாதிப்பு
- சரக்கு ஆட்டோ நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு
- மீன் வியாபாரம் காரணமாக அப்பகுதியில் நாள் தொல்லை அதிகரிப்பு
திருமானூர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் சரக்கு ஆட்டோவில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மீன் விற்கப்படுகிறது.இதனை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையில் அப்படியே நிறுத்திவிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன. மேலும் மீன்களின் கழிவுகளை சாலையின் ஓரங்களில் கொட்டி செல்வதால் துர்நாற்றம் வீசுவதுடன் நாய்களின் தொல்லைகளும் அதிகரித்துள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






