என் மலர்tooltip icon

    மலேசியா

    • மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது.

    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் முகம்மது ஷோஹிபுல் பிக்ரி-பஜர் அல்பியான் ஜோடி உடன் மோதியது.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய இந்தோனேசிய ஜோடி 21-10, 23-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சாத்விக் - சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி 2வது சுற்றில் வெற்றி பெற்றது.

    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, மலேசியாவின் யாப் ராய் கிங்-ஜுனைத் ஆரிப் ஜோடி உடன் மோதியது.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய சாத்விக்- சிராக் ஜோடி 21-18, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    காலிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி இந்தோனேசியாவின் முகம்மது ஷோஹிபுல் பிக்ரி-பஜர் அல்பியான் ஜோடி உடன் மோதுகிறது.

    • மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் டொயோகோ மியாசகி உடன் மோதினார்.

    ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-8, 21-13 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள காலிறுதியில் பி.வி.சிந்து ஜப்பானின் யமாகுச்சி உடன் மோத உள்ளார்.

    • டாக்டர் மகாதீர் முகம்மது மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்தவர்.
    • கடந்த ஜூலையில் மகாதீர் தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

    கோலாலம்பூர்:

    டாக்டர் மகாதீர் மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்தவர். கடந்த ஆண்டு ஜூலையில் மகாதீர் முகம்மது தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

    இந்நிலையில், மகாதீர் தனது இல்லத்தில் கீழே விழுந்ததில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் கோலாலம்பூரில் உள்ள தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    டாக்டர் மகாதீர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, தைவானின் லீ ஜே ஹூய்-பி.ஹெச்.யாங் உடன் மோதியது.

    ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-13, 21-15 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

    • மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, தைவானின் சங் ஷோ யுன் உடன் மோதினார்.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-13, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷ்யா சென், சிங்கப்பூரி ஜேசன் டே உடன் மோதினார்.

    முதல் செட்டை லக்ஷயா சென் 21-16 என கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை ஜேசன் டே 21-15 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை லக்ஷயா சென் 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-12, 21-17 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லீ ஜி ஜியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜனநாயகன் எப்படி இருக்கும் என நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கிறது.
    • படத்தின் முடிவில் நம்பிக்கை மட்டும்தான் இருக்கிறது என்றார் இயக்குநர் வினோத்.

    கோலாலம்பூர்:

    நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இன்று நடைபெற்றது. இதில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில் ஜன நாயகன் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஹெச்.வினோத் பேசியதாவது:

    ஜனநாயகன் படத்தின் கடைசி 20 நிமிடங்களில், விஜய் சாருடைய பேர்வல் வீடியோ இருக்கிறது. அழவைக்க போகிறோம் என சிலர் சொல்கிறார்கள்.

    அதெல்லாம் எதுவும் இல்லை. படத்தின் முடிவில் நம்பிக்கை மட்டும்தான் இருக்கிறது. ஏன் என்றால் தளபதிக்கு என்ட்-டே கிடையாது, பிகினிங் மட்டும்தான். ரெண்டே விஷயம் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.

    ஜனநாயகன் எப்படி இருக்கும் என நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கிறது. ஒரு ரீமேக் படமாக இருக்குமா? இல்லை கொஞ்சம்தான் ரீமேக்கா என்ற குழப்பம் இருக்கிறது.

    ஒன்று மட்டும் சொல்கிறேன். ஐயா இது தளபதி படம். அதனால் உங்கள் மைண்டில் இருக்கும் டவுட் எல்லாத்தையும் அழித்துவிட்டு வாருங்கள். இது 100 சதவீதம் பொழுதுபோக்கான படம் என தெரிவித்தார்.

    • ரசிகர்கள் எனக்காக 33 வருஷமா பலவற்றைக் கொடுத்திருக்காங்க.
    • அடுத்த 33 வருஷத்துக்கு நான் அவங்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கப் போறேன்.

    கோலாலம்பூர்:

    ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், டைரக்டர் எச்.வினோத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:

    இலங்கைக்குப் பிறகு மலேசியா தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. நான் சினிமாவில் நடிக்க வரும்போது சிறிய மணல் வீடு கட்டதான் விரும்பினேன். ஆனால், என்னுடைய ரசிகர்கள் பெரிய கோட்டையே கட்டிக் கொடுத்திருக்காங்க.

    என்னுடைய ரசிகர்கள் எனக்காக 33 வருஷமா பலவற்றைக் கொடுத்திருக்காங்க. அடுத்த 33 வருஷத்துக்கு நான் அவங்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கப் போறேன்.

    எனக்கு ஒன்னுனா தியேட்டர் வாசல்ல வந்து நிக்கிறாங்க. நாளைக்கு அவங்களுக்கு ஒன்னுனா, அவங்க வீட்ல போய் நிப்பேன்.

    எனக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன்.

    அதுக்காக நான் அவங்களுக்கு நன்றி மட்டும் சொல்லப் போறதில்ல. நன்றிக் கடனை தீர்த்துட்டுத்தான் போவேன்.

    நீங்க உங்க வாழ்க்கையில ஜெயிக்க உங்களுக்கு நண்பர்கள் தேவையில்லை. ஆனா, உங்களுக்கு வலுவான ஒரு எதிரி தேவை.

    சும்மா, வர்றவங்க போறவங்களை எதிர்த்துட்டு இருக்க முடியாது இல்லையா! வலுவான எதிரி இருந்தால் மட்டுமே நீங்கள் வலிமையானவராக மாற முடியும்.

    விஜய் தனியா வருவாரா, அணியாக வருவாரானு சமீபத்துல ஒரு பேச்சு வந்தது.

    நம்ம எப்போ தனியா இருந்திருக்கோம். 33 வருஷமா மக்களோடதானே இருக்கேன். அது அணிதானே என தெரிவித்தார்.

    • உங்களை யாரும் விமர்சிக்கப் போறது கிடையாது. விமர்சனங்கள் வரும்.
    • ஏனெனில் நீங்கள் விமர்சனங்களைத் தாங்கக்கூடிய பாதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்.

    மலேசியா:

    ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய், டைரக்டர் எச்.வினோத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், இசைவெளியீட்டு விழாவில் நடிகர் நாசர் பேசியதாவது:

    அமைதியும் பணிவும் தவிர கூர்மையான ஆயுதம் எதுவும் இல்லை.

    படுத்த படுக்கையாக இருந்த என் மகனை எழுந்து நடக்க வைத்தவர் நீங்கள். அதற்கு நன்றிகூற இந்த மேடை மட்டுமின்றி, எந்தச் சூழலிலும் நான் அதை சொல்லிக் கொண்டே இருப்பேன்.

    இந்த விழாவுக்கு நான் போறேன்னு சொன்னதும், அவன் விஜய் அண்ணாவுக்கு விஷ் பண்னேன்னு சொல்லிடுங்க என்றான்.

    நடிகர் சங்கத்துக்காக நீங்கள் ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தீர்கள். அதற்கு என்னுடைய நன்றி.

    இந்தப் படத்தில் இயக்குனர் உள்பட டீ தருகிற பையன் வரை அனைவரிடமும் ஒரு பதட்டம் இருந்தது. தளபதியின் கடைசி படம், ஒரு தவறும் நேர்ந்து விடக்கூடாதே என.

    நீங்கள் புத்தனைப்போல சிரித்துக்கொண்டு எப்போதும்போல நடித்துக் கொண்டிருந்தீர்கள்.

    எனக்கு ஒரே ஒரு வருத்தம் மட்டும். நீங்கள் டயலாக் பேசலாம், நான் எடுத்த முடிவை நானே மாத்த மாட்டேன் என்று.

    ஆனால், ஒரு முடிவு, இங்க இருக்கிற ரசிகர்களோட வேண்டுதலா உங்க முன் வைக்கிறேன். உங்க எல்லார் சார்பாகவும் தம்பிக்கு நான் ஒரு வேண்டுதலா வைக்கிறேன்.

    உங்களை யாரும் விமர்சிக்கப் போறது கிடையாது. விமர்சனங்கள் வரும். ஏனென்றால் நீங்கள் விமர்சனங்களைத் தாங்கக்கூடிய பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்.

    இவர்கள் எல்லோருக்கும் நீங்கள் வேண்டும். தயவு செய்து நீங்கள் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும். எங்களுடைய வேண்டுகோளை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

    ஜனநாயகன் வெற்றி பெறுவது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. அந்த நாளுக்காக நானும் காத்திருக்கிறேன் மிக்க நன்றி என தெரிவித்தார்.

    • மலேசியாவில் 2009 முதல் 2018 வரை பிரதமராக பதவி வகித்தவர் நஜிப் ரசாக்.
    • இவர்மீது பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

    கோலாலம்பூர்:

    மலேசியாவில், 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தவர் நஜிப் ரசாக் (72). இவர் தன் பதவிக்காலத்தில், 1 எம்.டி.பி. எனப்படும், 'ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனம்' என்ற அரசு நிறுவனத்தை தொடங்கினார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, மலேசியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கம்.

    இந்நிறுவனத்தின் நிதியில் இருந்து 4,900 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை தன் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு ரசாக் மாற்றியதாக புகார் எழுந்தது. அவர்மீது அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

    இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நஜிப் ரசாக் குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன், 15 ஆண்டு சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் கோடி அபராதம் விதித்தது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

    ஏற்கனவே மற்றொரு வழக்கில் நஜிப் ரசாக் 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.

    • அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
    • மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்துகொள்ளவுள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.

    அவ்வகையில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார்.

    இந்நிலையில் மலேசியாவில் அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட ரசிகை ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், முதல்ல நான் போட்டோ எடுக்க முயற்சி பண்ணப்போ அஜித் சார் என்ன திட்டிட்டாரு. ஆனா அதுக்கு அப்புறம் அவரே கூப்பிட்டு ஒரு செல்பி எடுத்து கொடுத்தாரு. என் வாழ்நாள் கனவு நனவாகிடுச்சி. அந்த ஒரு நொடி எனக்கு உலகத்தையே மறக்க வச்சிருச்சு'' என்று ஆனந்த கண்ணீருடன் மலேசிய ரசிகை பேசியுள்ளார்.

    ×