என் மலர்
நீங்கள் தேடியது "மலேசியா முன்னாள் பிரதமர்"
- டாக்டர் மகாதீர் முகம்மது மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்தவர்.
- கடந்த ஜூலையில் மகாதீர் தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
கோலாலம்பூர்:
டாக்டர் மகாதீர் மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்தவர். கடந்த ஆண்டு ஜூலையில் மகாதீர் முகம்மது தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இந்நிலையில், மகாதீர் தனது இல்லத்தில் கீழே விழுந்ததில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் கோலாலம்பூரில் உள்ள தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
டாக்டர் மகாதீர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
- மலேசியாவில் 2009 முதல் 2018 வரை பிரதமராக பதவி வகித்தவர் நஜிப் ரசாக்.
- இவர்மீது பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
கோலாலம்பூர்:
மலேசியாவில், 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தவர் நஜிப் ரசாக் (72). இவர் தன் பதவிக்காலத்தில், 1 எம்.டி.பி. எனப்படும், 'ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனம்' என்ற அரசு நிறுவனத்தை தொடங்கினார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, மலேசியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கம்.
இந்நிறுவனத்தின் நிதியில் இருந்து 4,900 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை தன் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு ரசாக் மாற்றியதாக புகார் எழுந்தது. அவர்மீது அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நஜிப் ரசாக் குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன், 15 ஆண்டு சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் கோடி அபராதம் விதித்தது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
ஏற்கனவே மற்றொரு வழக்கில் நஜிப் ரசாக் 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.
மலேசியாவின் 14வது பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக நேற்று பதவியேற்றுள்ளார்.
முன்னதாக, மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான மஹதிர் முஹம்மது வலியுறுத்தி வந்தார். தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் கட்சி தலைவர் பதவியையும் நஜிப் ரசாக் ராஜினாமா செய்தார்.
தற்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லலாம் என தகவல் வெளியானது.
அதற்கேற்ப, நஜிப் ரசாக் ரோஸ்மா மன்சூர் தனி விமானம் மூலம் இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவுக்கு இன்று செல்ல திட்டமிட்டிருந்ததாக உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைதொடர்ந்து. நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி வெளிநாடுகளுக்கு மலேசியா நாட்டின் குடியுரிமைத்துறை இன்று தடை விதித்துள்ளது. #NajibRazak #barredfromleavingMalaysia






