என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • என்னிடம் உதவியாளர்களாக இருப்பவர்களுக்கு தினமும் கூலி மட்டுமே 20 ஆயிரம் வரை செலவாகிறது.
    • பல அரசியல் கட்சி மாநாடுகளுக்கும், கட்சி கூட்டங்களுக்கும் நான் தான் உணவு தயாரித்து கொடுக்கிறேன் என்கிறார் யாதம்மா.

    ஐதராபாத்:

    பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் நாளை (2-ந் தேதி) முதல் 4-ந்தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    மேலும் பா.ஜனதா ஆட்சி நடைபெறும் 18 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் அனைத்து மாநில பா.ஜனதா தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் நிர்வாகிகள் என சுமார் 300 முதல் 400 பேர் வரை கலந்துகொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வரும் தெலுங்கானா மாநில பா.ஜனதா தலைவர் பண்டி சஞ்சய் இதில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் தெலுங்கானா வகை உணவு தயார்செய்து வழங்க முடிவு செய்தார்.

    இதற்கான பொறுப்பை கரீம் நகரை சேர்ந்த பெண் சமையல் கலைஞர் யாதம்மாவிடம் ஒப்படைத்தார். இது யாதம்மாவுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பிரதமர் மோடிக்கு சமையல் செய்து கொடுத்து அசத்த இருக்கும் யாதம்மா மகிழ்ச்சி பொங்க கூறியதாவது:-

    நான் ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன். அந்த காலம் போய் தற்போது ஒரே நேரத்தில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு சமைத்து போடும் நிலைக்கு வந்துள்ளேன். இப்போது என் வாழ்க்கை சந்தோஷமாக செல்கிறது. தற்போது என் கையால் செய்யும் உணவை பிரதமர் மோடியே சாப்பிட போகிறார் என நினைக்கும் போது எனக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    கொண்டாப்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி சந்திரய்யாவுக்கு என்னை சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டனர். எனக்கு வெங்கடேஷ் என்னும் மகன் பிறந்தான். திருமணமாகி 3 வருடங்களிலேயே எனது கணவர் உயிரிழந்து விட்டார்.

    அதன்பிறகு மாமியார் கொடுமை காரணமாக கைக்குழந்தையுடன் கரீம் நகருக்கு வந்தேன். அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் சில மாதம் ஆயாவாக பணிபுரிந்தேன். எனக்கு சமையல் நன்றாக தெரியும் என்பதால் பணக்காரர்கள் வீட்டிலும், அரசியல்வாதிகள் வீட்டிலும் சில நாட்கள் சமையல் செய்தேன்.

    அப்போது வெங்கண்ணா என்னும் சமையல் மாஸ்டரிடம் உதவியாளராக சேர்ந்து 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே நேரத்தில் சமையல் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொண்டேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு சமையல் உதவியாளராக இருந்த போது எனக்கு 15 ரூபாய் சம்பளம் கிடைத்தது.

    அதன்பிறகு நானே தனியாக சில பண்டிகை நாட்களுக்கும், திருவிழாக்களுக்கும் சமையல் செய்து கொடுத்து சம்பாதிக்க ஆரம்பித்தேன். எனது சமையலின் சுவையை அனைவருமே புகழ்ந்தனர்.

    தற்போது என்னை நம்பி 100 குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்கள் அனைவருக்கும் வேலை வழங்குகிறேன். என்னிடம் உதவியாளர்களாக இருப்பவர்களுக்கு தினமும் கூலி மட்டுமே 20 ஆயிரம் வரை செலவாகிறது. பல அரசியல் கட்சி மாநாடுகளுக்கும், கட்சி கூட்டங்களுக்கும் நான் தான் உணவு தயாரித்து கொடுக்கிறேன்.

    இதனால் கட்சி பாகுபாடு இன்றி பல அரசியல்வாதிகள் தங்களின் வீட்டு விசேஷங்களுக்கும் என்னையே சமையல் பணிக்கு அழைக்கிறார்கள். வாரத்தில் 3 நாட்கள் கண்டிப்பாக சமையல் பணி இருக்கும்.

    என்னிடம் சமையல் கற்றுக்கொண்ட பலர் கேட்டரிங் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். தங்கும் விடுதிகளுக்கும் சமையல் செய்து கொடுக்கிறார்கள். தற்போது எனது மகன் எம்.பி.ஏ. முடித்து விட்டு எனக்கு உதவியாக கணக்குகளை பார்த்து வருகிறார். கொடுக்கல் வாங்கல்களை அவர் கவனித்து கொள்வார்.

    வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் கூட நான் சமைத்து கொடுக்கும் உணவை பார்சல் செய்து எடுத்துச் செல்கிறார்கள். நான் சமைக்கும் சைவம் மற்றும் அசைவ உணவுகள் இரண்டையுமே சாப்பிட்டவர்கள் சமையல் நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள்.

    ஐதராபாத் வர உள்ள பிரதமர் மோடிக்கு தெலுங்கானா மாநில ஸ்பெஷல் உணவு வகைகளை தயாரித்து கொடுத்து அசத்த உள்ளேன். இந்த பெருமையை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3-ந்தேதி ஐதராபாத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
    • 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஐதராபாத் :

    பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. அதில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை ஐதராபாத்துக்கு வருகிறார்.

    கவர்னர் மாளிகையில் தங்குகிறார். 3-ந்தேதி மாலையில், ஐதராபாத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அவரது வருகையையொட்டி, 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே, மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில், ''பை பை மோடி'' என்று எழுதப்பட்ட விளம்பர பலகைகளும், பேனர்களும் ஐதராபாத் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன. அதிகாரிகள் அவற்றை அகற்றினர்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி அவருக்கு எதிராக விளம்பர பலகைகள் வைக்கப்பட்டது ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திரவுபதி முர்முவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது.
    • யஷ்வந்த் சின்கா ஓட்டு சேகரிக்க ஐதாராபாத் வரும்போது அவரை தனியாக சந்திக்க சந்திர சேகரராவ் முடிவு செய்து உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஐதாராபாத்:

    ஜனாதிபதி தேர்தல் அடுத்தமாதம் (ஜூலை) 18-ந்தேதி நடக்கிறது. இதில் பாரதிய ஜனதா சார்பில் பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். திரவுபதி முர்முவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. இதனால் அவர் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    யஷ்வந்த் சின்காவுக்கு சில மாநில கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளது.

    காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறாத தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    இது தொடர்பாக அக்கட்சியின் தலைவரும். தெலுங்கானா முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சந்திரசேகரராவ் அறிவித்து உள்ளார்.

    நாளை யஷ்வந்த்சின்கா வேட்பு மனுதாக்கல் செய்கிறார் இதில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி.க்கள் கேசவராவ், நாகேஸ்வர ராவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். யஷ்வந்த் சின்கா ஓட்டு சேகரிக்க ஐதாராபாத் வரும்போது அவரை தனியாக சந்திக்க சந்திர சேகரராவ் முடிவு செய்து உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • ரோனா தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
    • ரோனா அருகே இடகி கிராமத்தில் அரசு பஸ் சென்றது.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூருவில் கடந்த சில தினங்களாக இரவில் கனமழை கொட்டி வருகிறது.

    மழையால் கே.ஆர்.புரத்தில் உள்ள சாய் லே-அவுட், எஸ்.ஆர். லே-அவுட், காயத்ரி லே-அவுட் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

    சிங்காபுரா பகுதியில் ராஜகால்வாய் உடைந்து வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதுபோல கே.ஆர்.புரம் அருகே கல்கெரே என்ற கிராமத்தில் உள்ள ஏரியின் கரை உடைந்து தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

    தலைநகர் பெங்களூருவில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

    கதக் மாவட்டத்தில் உள்ள ரோனாவில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக ரோனா தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அந்த வெள்ளம் நேற்றும் வடியாமல் இருந்தது. இந்த நிலையில் ரோனா அருகே இடகி கிராமத்தில் அரசு பஸ் சென்றது. அப்போது கிராமத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் பஸ் சிக்கி கொண்டது.

    சாலையோர பள்ளத்திற்குள் பஸ் சிக்கியது. அப்பகுதியில் அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பஸ்சில் இருந்த பயணிகள் செய்வது அறியாமல் திகைத்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ரோனா போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், பஸ்சில் இருந்த 6 பெண் பயணிகள், 2 குழந்தைகள் உள்பட 22 பேரை பத்திரமாக மீட்டார்கள். கர்நாடக மாநிலத்தில் தொடரும் மழையினால் 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    • கோவேக்சின் தடுப்பூசி 2 முதல் 18 வயது வரையிலான பிரிவினருக்கு செலுத்தி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
    • இந்த பரிசோதனை அறிக்கையை 'லேன்செட் தொற்று நோய்கள்' பத்திரிகை ஏற்று வெளியிட்டுள்ளது.

    ஐதராபாத் :

    ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தார், கொரோனாவுக்கு எதிராக தயாரித்து வழங்கும் கோவேக்சின் தடுப்பூசி 2 முதல் 18 வயது வரையிலான பிரிவினருக்கு செலுத்தி இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

    இதன் முடிவில், கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது, நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடியது மற்றும் அதிக நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பாரத் பயோடெக் நிறுவனத்தார் அறிவித்துள்ளனர்.

    இந்த பரிசோதனை அறிக்கையை 'லேன்செட் தொற்று நோய்கள்' பத்திரிகை ஏற்று வெளியிட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தார் கோவேக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வரையிலானவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் தொடங்கி செப்டம்பர் வரையில் செலுத்தி பரிசோதித்துள்ளனர்.

    இதன் தரவுகள் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன்பேரில் 6 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த அவசர கால பயன்பாட்டு அனுமதி தரப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 6-வது மாநிலமாக தெலுங்கானா மாநிலத்தில் மண் காப்போம் இயக்கத்துடன் ஒப்பந்தம்
    • இந்தப் பொறுப்புணர்வை உருவாக்குவதில் சத்குருவின் செயல் விலைமதிப்பற்றது.

    மண் வளத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி மண்ணைக் காப்போம் இயக்கம் என்ற உலகளாவிய விழிப்புணர்வு இயக்கத்தை லண்டனில் இருந்து மார்ச் 21-ம் தேதி தொடங்கிய சத்குரு, மோட்டார் சைக்கிளில், 27 நாடுகளில் 100 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளித்தார். தொடர்ந்து குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்ட்ரா ஆகிய 5 மாநிலங்கள் 'மண் காப்போம்' இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

    இந்தியாவில் 6-வது மாநிலமாக தெலுங்கானா அரசு மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக 'மண் காப்போம்' இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

    ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா வேளாண் துறை அமைச்சர் நிரஞ்சன் ரெட்டியும் சத்குருவும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை பரிமாறி கொண்டனர்.

    அரங்கு நிறையும் அளவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அம்மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் கவுட், பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் தயாகர் ராவ், நடிகைசமந்தா, தெலுங்கு பாடகர்கள் ராம் மிரியாலா,மங்கலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மண் காப்போம் இயக்கத்திற்கு அரசின் முழு ஆதரவை தெரிவித்த வேளாண் அமைச்சர் நிரஞ்சன் ரெட்டி, பேசுகையில்,  சத்குரு, மண் வளத்தை மீட்டெடுக்கும் விஷயத்தில் நாங்கள் உங்களுடன் 100 சதவீதம் உடன்படுகிறோம் என்றார். 

    உங்களுடைய வழிகாட்டுதல்களை பின்பற்றி, அதை நடைமுறைப்படுத்துவோம். தனி நபர்களின் தார்மீகப் பொறுப்புணர்வு மற்றும் அரசியல்வாதிகளின் பொறுப்புணர்வின் மூலம் நம்மால் மண்ணை காப்பற்ற முடியும். இந்தப் பொறுப்புணர்வை உருவாக்குவதில் சத்குருவின் செயல் விலைமதிப்பற்றது; பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இதை தொடர்ந்து சத்குருவுடன் நடிகை சமந்தா அவர்கள் சுற்றுச்சூழல், ஆன்மீகம், மதம் என பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

    அப்போது, இந்த வயதில் 27 நாடுகளுக்கு 26,000 கி.மீ உங்களால் எப்படி மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிகிறது. இது ஆச்சரியமாக உள்ளது. இது எப்படி சாத்தியம்?" என சமந்தா கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த சத்குரு, "மண் வளப் பாதுகாப்பு குறித்து நான் 30 வருடங்களுக்கு மேலாக பேசி வருகிறேன். நான் பேசும்போதெல்லாம், மக்கள் ஓ, இது அற்புதமான விஷயம், அருமையான விஷயம் என சொல்வார்கள் என்றும்,  ஆனால்,அதன் பிறகு அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் தூங்கிவிடுவார்கள் என்றும் கூறினார்.

    அவர்களை விழிப்படைய செய்வதற்காக தான் நான் இந்த கடினமான  பயணத்தை மேற்கொண்டுள்ளேன், பல்வேறு விதமான தட்பவெப்ப நிலைகளில் 30.000 கி.மீ மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஆபத்தான பயணத்தில் நான் என்னை ஈடுப்படுத்தி கொண்டுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

    நான் எடுத்த சவால் நன்றாக பலன் தந்துள்ளது, நான் பயணம் தொடங்குவதற்கு முன்பு மண் வளம் குறித்து யாரும் பெரிதாக பேசவில்லை. ஆனால், இப்போது பாருங்கள், எங்களுடைய சமூக வலைத்தள கணக்கீடுகளின்படி, உலகம் முழுவதும் சுமார் 280 கோடி பேர் மண் குறித்து பேசியுள்ளனர். இது சாதாரண விஷயம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துப்பாக்கி சூட்டில் 8 பேர் காயமடைந்த நிலையில், சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
    • கலவர கும்பல் கல்வீசியதில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.

    அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா மாநிலம் செகந்திரபாத்தில் இன்று போராட்டக்காரர்கள் ரெயிலுக்கு தீ வைத்தனர்.

    வன்முறை கும்பலை கலைக்க போலீசார் 15 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார். 8 பேர் காயம் அடைந்தனர்.

    அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. கலவர கும்பல் கல்வீசியதில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.

    • பள்ளிக்கு பிரதான ஓடையை கடந்துதான் மாணவ-மாணவிகள் செல்வது வழக்கம்.
    • பள்ளிக்கு சென்றுவர உரிய சாலை வசதிகள் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பள்ளி மாணவ-மாணவிகள் வெளியே வர முடியாமல் தவித்த சம்பவம் நவ்வலகுண்டா பகுதியில் நடந்துள்ளது.

    ஹூப்பள்ளி மாவட்டம் நவலகுண்டா பகுதியில் நேற்று கன மழை பெய்தது. இந்த கன மழையினால் ஓடைகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடின. இந்த பகுதியில் அரசு பள்ளி ஊரின் வெளிப்பகுதியில் அமைந்துள்ளது.

    இந்த பள்ளிக்கு பிரதான ஓடையை கடந்துதான் மாணவ-மாணவிகள் செல்வது வழக்கம். நேற்று மாலை பெய்த மழையின்போது இந்த பள்ளியில் 150 மாணவ-மாணவிகளும் 4 ஆசிரியர்களும் இருந்தனர்.

    அப்போது திடீரென ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மழை வெள்ளம் பள்ளியை சூழ்ந்தது. இதன்காரணமாக மாணவர்கள் வெளியேற முடியாத நிலை உண்டானது.

    இதை தொடர்ந்து மாணவ-மாணவிகள், மற்றும் ஆசிரியர்கள் பள்ளியிலேயே இருந்தனர். சுமார் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழை பின்னர் ஓய தொடங்கியது.

    இதனால் வெள்ளம் வடிய ஆரம்பித்தது. இதையடுத்து இரவு 7.30 மணிக்கு பின்னர் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் டிராக்டர் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    இந்த பள்ளியை சுற்றிலும் வயல்வெளிகள் உள்ளன. பள்ளிக்கு சென்றுவர உரிய சாலை வசதிகள் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    சவதத்தியில் உள்ள எல்லம்மா கோவிலுக்குள் நேற்று முன்தினம் இரவு கனமழை காரணமாக தண்ணீர் புகுந்தது. இதனால் கோவில் படிக்கட்டுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.இதனால் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் சிரமப்பட்டனர்.

    கோவிலுக்குள் புகுந்த தண்ணீரை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் ஊழியர்கள் வெளியேற்றினர்.இதுபோல் பெங்களூருவில் இரவில் மட்டும் மழை பெய்து வருகிறது. அதுபோல் நேற்று இரவு 10 மணிக்கு மேல் திடீரென இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.

    ராஜாஜிநகர், மெஜஸ்டிக், பசவேஸ்வராநகர், விஜயநகர், மாகடி ரோடு, யஷ்வந்தபுரம், விதான சவுதா, உப்பார்பேட்டை, சிக்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதி அடைந்தனர்.

    • வருகிற 19-ந்தேதி தெலுங்கானா ராஷ்ட்ரிய கட்சியின் உயர் மட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
    • புதிய கட்சிக்கு ‘பாரத் ராஷ்ட்ர சமிதி’ அல்லது ‘நவபாரத் கட்சி’ என பெயர் வைக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஐதாராபாத்:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி இறங்கி உள்ளது.

    ஒரு புறம் மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். அதே போல தெலுங்கானா முதல்-மந்திரியும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் பாரதிய ஜனதாவுக்கு எதிராக புதிய கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கையில் செயல்பட்டு வருகிறார். இதற்காக பல்வேறு தலைவர்களையும் சந்தித்து அவர் ஆதரவு திரட்டி வருகிறார்.

    இந்த நிலையில் சந்திரசேகர ராவ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மந்திரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் அகில இந்திய அளவில் பாரதிய ஜனதாவை தோற்கடிக்க புதிய கட்சியை தொடங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    இந்த முடிவுக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த புதிய கட்சிக்கு 'பாரத் ராஷ்ட்ர சமிதி' அல்லது 'நவபாரத் கட்சி' என பெயர் வைக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்தியில் பா.ஜனதா மதவாத கொள்கையில் ஈடுபட்டு வருவதாக அக்கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதனால் அக்கட்சியை வெல்ல அகில இந்திய அளவில் புதிய கட்சியை உருவாக்க எதிர் கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தால் வலுவாக இருக்கும் என சந்திரசேகர ராவ் கருதுகிறார். அதன்போரில் இந்த புதிய கட்சி உருவாக உள்ளது.

    வருகிற 19-ந்தேதி தெலுங்கானா ராஷ்ட்ரிய கட்சியின் உயர் மட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தனது புதிய கட்சியின் பெயரை சந்திரசேகர ராவ் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் 19-ந்தேதிக்கு முன்பே இந்த அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சந்திரசேகர ராவ் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்.

    • ராஜ்பவன் கதவுகள் ஏழை, எளிய பெண்களின் குறைகளை சொல்ல வசதியாக திறந்து வைக்கப்படுகிறது.
    • தெலுங்கானா கவர்னர் சாமானிய பெண்களை நேரடியாக சந்திக்கிறார் என்ற அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு பதிவு செய்ய தனி தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டது.

    சென்னை:

    கவர்னர் மாளிகை என்பது சாதாரண மக்களின் நிழல் கூட பட முடியாத இடம். உயர் அந்தஸ்தில் உள்ள மேல்தட்டு மக்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மட்டுமே ராஜ் பவனுக்குள் செல்லும் நிலை உள்ளது.

    வரலாற்றில் முதல் முறையாக தெலுங்கானா ராஜ்பவனின் கதவுகள் ஏழை-எளிய மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி புரட்சியை உருவாக்கி இருப்பது கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். கவர்னராக பொறுப்பேற்றதும் கவர்னர் மாளிகையில் மக்கள் தர்பார் நடத்தப்படும் என்றார்.

    ஆனால் கொரோனா காரணமாக அதை நிறைவேற்ற முடியவில்லை. சமீப காலமாக தெலுங்கானாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து முதலில் பெண்கள் குறைகேட்பு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்தார்.

    ராஜ்பவன் கதவுகள் ஏழை, எளிய பெண்களின் குறைகளை சொல்ல வசதியாக திறந்து வைக்கப்படுகிறது. தெலுங்கானா கவர்னர் சாமானிய பெண்களை நேரடியாக சந்திக்கிறார் என்ற அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு பதிவு செய்ய தனி தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டது.

    இந்த தகவல் தெரிந்ததும் ஏராளமான பெண்கள் தொடர்பு கொண்டு வருகிறார்கள். இன்று காலை வரை 400 பெண்கள்தொலைபேசி மூலம் பதிவு செய்திருந்தனர். மின்னஞ்சலிலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர்.

    காலை 12 மணி அளவில் பொதுமக்கள் ராஜ்பவனுக்குள் அனுமதிக்கப்பட்டனர். குறைகளோடு வந்தவர்கள் ராஜ்பவனை பிரமிப்புடன் பார்த்தபடி சென்றனர். பெண்கள் ஒவ்வொருவராக நேரில் அழைத்து கவர்னர் டாக்டர் தமிழிசை குறைகளை கேட்டார்.

    பலதுறை அதிகாரிகளும் உடன் இருந்தனர். கடனுதவி போன்ற சிறு சிறு பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. சில பிரச்சினைகள் மாநில அரசின் துறைகளுக்கு அனுப்பப்பட்டது. கவர்னரின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக விமர்சனங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    ஆனால் இதுபற்றி கவர்னர் தமிழிசை கூறும்போது, 'இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி சம்பந்தப்படுத்தி பார்ப்பதும் தவறு. என்னை பொறுத்த வரை அரசில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் எல்லா அலுவலகங்களும் மக்கள் செல்லும் இடமாக இருக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இடமாக இருக்க வேண்டும்.

    சாதாரண மக்களுக்கு சில இடங்களுக்கு செல்ல தயக்கம் இருக்கலாம். நானும் ஒரு பெண்ணாக இருப்பதால் பெண்கள் தயக்கமில்லாமல் வந்தனர். மாதம் ஒரு முறை இதே போல் மக்கள் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளேன்' என்றார்.

    • அரசு மருத்துவமனை டாக்டர்கள் தனியாக கிளினிக் வைக்கக் கூடாது என தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
    • அரசின் இந்த உத்தரவுக்கு தெலுங்கானா ஜூனியர் டாக்டர் அசோசியேஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ஐதராபாத்:

    பொதுவாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக் முறையிலும் மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் புதிதாக பணியில் சேர்ந்த டாக்டர்கள் தனியாக கிளினிக் வைக்கக் கூடாது என தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

    தெலுங்கானா மருத்துவக் கல்விச் சேவைகள் விதிகளில் திருத்தங்களைச் செய்து, டாக்டர்களின் கிளினிக் பயிற்சிக்கு முழு தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.

    • தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் மல்லி பள்ளி, விஜய் நகர் காலனியில் ஆதரவற்றோருக்கான கல்லூரி மாணவிகள் விடுதி உள்ளது
    • இந்த விடுதியில் 17 வயதுடைய மாணவி ஒருவர் தங்கியிருந்து அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தோழியின் பிறந்த நாள் விழாவுக்கு சென்ற 17 வயது சிறுமி, காரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    சிறுமியை கற்பழித்த 5 பேரும் பள்ளி மாணவர்கள் என்பதும் அவர்களில் அரசியல் பிரமுகர்களின் மகன்களும் உள்ளனர் என்பதும் தெரிய வந்தது.

    இதில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வலியுறுத்தியும் காங்கிரஸ், பா.ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமி கற்பழிப்பு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் மேலும் 12 வயது சிறுமி காரில் கடத்தி கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அடங்குவதற்குள் மேலும் ஒரு கல்லூரி மாணவி பலாத்கார சம்பவம் ஐதராபாத்தில் அரங்கேறியுள்ளது.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் மல்லி பள்ளி, விஜய் நகர் காலனியில் ஆதரவற்றோருக்கான கல்லூரி மாணவிகள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 17 வயதுடைய மாணவி ஒருவர் தங்கியிருந்து அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

    மாணவி படிக்கும் கல்லூரி அருகே ஜெராக்ஸ் கடையில் சுரேஷ் (23) என்பவர் வேலை செய்து வருகிறார். மாணவி அடிக்கடி ஜெராக்ஸ் கடைக்கு சென்று வந்ததால் சுரேஷ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து சுரேஷ் மாணவிக்கு புதியதாக செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தார். இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். இந்நிலையில் தன்னுடன் விடுதியில் தங்கியுள்ள தோழியின் காதலன் ராகுல் பிறந்தநாள் விழா கடந்த மாதம் நடந்தது.

    பிறந்தநாள் விழா ஐதராபாத் நெக்லஸ் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. பிறந்தநாள் விழாவில் கல்லூரி மாணவிகள் 2 பேர் மற்றும் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பிறந்தநாள் விழா நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடைந்தது.

    சுரேஷ், ராகுலின் காரில் மாணவியை ஏற்றிக்கொண்டு ராம் கோபால் பேட்டையில் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு கல்லூரி மாணவியை காரில் வைத்து பலாத்காரம் செய்தார்.

    பின்னர் மாணவியை கல்லூரி விடுதியில் விட்டுவிட்டு சென்றார்.

    பலாத்காரம் விவகாரம் குறித்து மாணவி விடுதி காப்பாளரிடம் தெரிவித்தார். விடுதி காப்பாளர் உமாயூன் நகர் போலீசில் புகார் செய்தார். சம்பவம் நடந்த இடம் ராம்கோபால் பேட்டை என்பதால் புகார் மனுவை அந்த போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

    ×