என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • பாகுபலி பிரியாணி, சிக்கன் வறுவல், சிக்கன் 65, சிக்கன் லெக் பீஸ், முட்டை, காலிபிளவர் பக்கோடா, சாதம் உள்ளிட்ட 30 வகையான உணவு வகைகள் வைக்கப்பட்டது.
    • போட்டியில் கலந்து கொண்டவர்களால் அவ்வளவு உணவு வகைகளையும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முடியாமல் திணறினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் பாகுபலி பிரியாணியுடன் 30 வகையான உணவு வகைகளை அரை மணி நேரத்தில் சாப்பிடுபவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்து இருந்தனர்.

    இதனை கேள்விப்பட்டு ஆண்கள், பெண்கள் என உணவு பிரியர்கள் 3000 பேர் போட்டி போட்டுக்கொண்டு போட்டியில் பங்கேற்க ஓட்டல் முன்பு குவிந்தனர். ஓட்டலுக்குள் ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டு 30 வகையான சைவ, அசைவ உணவு வகைகள், 2 குடிநீர் பாட்டில்கள், குளிர்பானம் வைக்கப்பட்டது.

    அதில் பாகுபலி பிரியாணி, சிக்கன் வறுவல், சிக்கன் 65, சிக்கன் லெக் பீஸ், முட்டை, காலிபிளவர் பக்கோடா, சாதம் உள்ளிட்ட 30 வகையான உணவு வகைகள் வைக்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்டவர்களால் அவ்வளவு உணவு வகைகளையும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முடியாமல் திணறினர்.

    ஒரு சிலர் அவசர கதியில் சாப்பிட்டதால் வாந்தி எடுத்தனர். சிலர் பாதியை சாப்பிட்டு விட்டு போட்டியில் இருந்து வெளியேறுவதாக கூறி சென்றனர். ஆனால் போட்டியில் கலந்து கொண்ட 2 பேர் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு காலி செய்தனர். இதனை பார்த்து போட்டி நடத்தியவர்கள் மலைத்துபோயினர். போட்டியில் வெற்றி பெற்ற 2 பேருக்கு ஓட்டல் நிர்வாகம் சார்பில் தலா ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட்டது. சாப்பாடு போட்டியில் பங்கேற்ற 3 ஆயிரம் பேரில் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

    • முன்னோட்ட மாரத்தான் நிகழ்ச்சி, 5 கிலோ மீட்டர் நடைபெறும்.
    • 28-ஆம் தேதி 10 கிலோமீட்டர், முழு மாரத்தான போட்டி நடைபெறுகிறது.

    தெலுங்கானாமாநிலம் ஐதராபாத்தில் ஆகஸ்ட் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 15,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆகஸ்ட் 27-ஆம் தேதியன்று நடைபெறும் முன்னோட்ட மாரத்தான் நிகழ்ச்சியில், 5 கிலோ மீட்டர் ஓட்டம் நடைபெறும். 28-ஆம் தேதி 10 கிலோமீட்டர், அரை மாரத்தான் மற்றும் முழு மாரத்தான் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. தேசிய சுரங்க நிறுவனமான என்.எம்.டி.சி இந்த மாரத்தான் போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்கிறது.

    இந்நிலையில் நேற்று ஐதராபாத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாரத்தான் போட்டிகளுக்கான லோகோ, டி.ஷர்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புகழ் பெற்ற பாக்ஸிங் விளையாட்டு வீராங்கனை நிகத் ஜரீன் காணொலி வாயிலாக இதில் கலந்து கொண்டார்.

    • வாலிபரின் மனைவி போலீஸ் நிலையம் வந்து தனது கணவரை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என கெஞ்சினார்.
    • வாலிபர் மனைவியின் அழகில் மயங்கிய நாகேஸ்வர ராவ் தனது ஆசைக்கு இணைங்கினால் 2 வழக்குகளில் இருந்தும் வாலிபரை விடுவிப்பதாக தெரிவித்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் தேவரகொண்டா பகுதியை சேர்ந்தவர் 35 வயது வாலிபர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஐதராபாத் வந்தார். ஐதராபாத்தில் உள்ள வனஸ்தலிபுரம் கிரெடிட் கார்டு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு அவரது கார் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததால் அவர் மீது ஐதராபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவ் வழக்கு பதிவு செய்தார்.

    வாலிபரை வழக்கு விசாரணைக்காக போலீஸ் நிலையம் வர வேண்டும் என கூறினார். ஆனால் வாலிபர் போலீஸ் நிலையம் செல்லாமல் இருந்து வந்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் நாகேஸ்வர ராவ் வாலிபரின் வீட்டிற்கு சென்று அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து வாலிபர் முன்பாக கஞ்சாவை வைத்து போட்டோ எடுத்து கஞ்சா விற்பனை செய்வதாக வழக்கு பதிவு செய்தார்.

    அப்போது வாலிபரின் மனைவி போலீஸ் நிலையம் வந்து தனது கணவரை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என கெஞ்சினார்.

    வாலிபர் மனைவியின் அழகில் மயங்கிய நாகேஸ்வர ராவ் தனது ஆசைக்கு இணைங்கினால் 2 வழக்குகளில் இருந்தும் வாலிபரை விடுவிப்பதாக தெரிவித்தார். ஆனால் அவரது ஆசைக்கு இணங்க வாலிபரின் மனைவி மறுத்தார்.

    இதையடுத்து வாலிபரையும் அவரது மனைவியும் காரில் அழைத்து சென்று நகரத்திற்கு வெளியே உள்ள தனது கெஸ்ட் ஹவுஸில் அடைத்து வைத்து ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி வந்தார்.

    இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் இன்ஸ்பெக்டருக்கு தெரியாமல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு பிறகு வாலிபரின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை இன்ஸ்பெக்டர் கண்டுபிடித்தார்.

    பின்னர் வாலிபரின் மனைவிக்கு போன் செய்த இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு வருவதாக தெரிவித்தார். இதுகுறித்து வாலிபருக்கு அவரது மனைவி தகவல் தெரிவித்தார்.

    இந்த நிலையில் வாலிபரின் வீட்டிற்கு மது போதையில் சென்ற இன்ஸ்பெக்டர் வாலிபரை சரமாரியாக தாக்கி துப்பாக்கிமுனையில் மிரட்டி அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    பின்னர் அதிகாலை வாலிபர் மற்றும் அவரது மனைவியை காரில் ஏற்றிக் கொண்டு கடத்தி சென்றார்.

    கார் சிறிது தூரம் சென்ற போது விபத்தில் சிக்கியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட இருவரும் காரில் இருந்து தப்பி சென்று ஐதராபாத் போலீசில் புகார் செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவை தேடி வருகின்றனர். இதற்கிடையே இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • தெலுங்கானாவில் உள்ள 14 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.

    தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் பெண்ணும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.

    தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கொமரம் பீம் ஆசிபாபாத், மஞ்சேரியல், நிர்மல், நிஜாமாபாத், முழுகு, பத்ராத்ரி கொத்தகுடெம், மஹர்பூபாபாத், வாரங்கள் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

    இந்நிலையில் மழை காரணமாக ஐதராபாத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தெற்கு ஒடிசா- வட ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அப்பால் வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள சூறாவளி சுழற்சியின் காரணமாக சராசரி கடல் மட்டத்தில் இருந்து 7.6 கி.மீ வரை நீண்டு தென்மேற்கு நோக்கி நகர்கிறது.

    மேலும், அண்டை மாநிலமான கர்நாடகாவின் 13 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    • குஜராத் ஸ்டைல் கிச்சடியை பிரதமர் மோடி மிகவும் விரும்பி ருசித்து சாப்பிட்டார். மேலும் சில தெலுங்கானா உணவுகளை அவர் ருசி பார்த்தார்.
    • பின்னர் உணவுகளை தயார் செய்த யாதம்மாவை அவர் வெகுவாக பாராட்டினார். இதுபற்றி யாதம்மா கூறுகையில், ‘பிரதமர் மோடி பாராட்டியதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது’ என்றார்.

    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.

    ஐதராபாத் நோவோட்டல் நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள், மூத்த நிர்வாகிகள், மாநில பா.ஜனதா தலைவர்கள், பா.ஜனதா ஆளும் மாநில முதல்-மந்திரிகள் என மொத்தம் 348 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்காக தெலுங்கானாவில் புகழ்பெற்ற உணவு வகைகள் சமைக்கப்பட்டிருந்தன. தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த யாதம்மா என்ற பெண் சமையல் கலைஞர் சுமார் 50 வகையான உணவு வகைகளை தயார் செய்திருந்தார்.

    கோவக்காய் துருவிய தேங்காய் வறுவல், வெண்டைக்காய் முந்திரி வறுவல், தோட்டக்கீரை-தக்காளி வறுவல், வெந்தயக் கீரை-பாசிபருப்பு கூட்டு, கங்குபாய் குழம்பு, மாங்காய் சாம்பார், பருப்பு கடையல், பச்சி புலுசு, பகாராரைஸ், புளியோதரை, புதினா சாதம், கோங்குரா பச்சடி, ஆவக்காய் ஊறுகாய், தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, சுரக்காய் சட்னி, சர்க்கரை பொங்கல், சேமியா பாயாசம், அதிரசம், இனிப்பு பணியாரம், பாசிப்பருப்பு வடை, சக்கினாலு, மக்கே கூனாலு, சர்வபிண்டி உள்ளிட்ட உணவு வகைகள் இடம்பெற்றிருந்தன.

    இந்த உணவு வகைகளை பிரதமர் மோடி நேரில் சென்று பார்த்தார். பின்னர் குஜராத் ஸ்டைல் கிச்சடியை அவர் மிகவும் விரும்பி ருசித்து சாப்பிட்டார். மேலும் சில தெலுங்கானா உணவுகளை பிரதமர் மோடி ருசி பார்த்தார்.

    பின்னர் உணவுகளை தயார் செய்த யாதம்மாவை அவர் வெகுவாக பாராட்டினார். இதுபற்றி யாதம்மா கூறுகையில், 'பிரதமர் மோடி பாராட்டியதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது' என்றார்.

    பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தையொட்டி தெலுங்கானா மாநில பா.ஜனதா கட்சியினர் தங்கள் பலத்தை காட்ட ஐதராபாத் விமான நிலையம் முதல், செயற்குழு கூட்டம் நடைபெற்ற நோவோட்டல் வரையும், அங்கிருந்து பொதுக்கூட்ட மேடை வரையும் சாலையின் இருபுறமும் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களின் பலரது பேனர்கள், கட்அவுட்டுகள், போஸ்டர்கள் வைத்திருந்தனர். கட்சி கொடிகளையும் பறக்கவிட்டிருந்தனர்.

    இந்த பேனர் கட்அவுட்டுகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், அவற்றை அகற்ற வேண்டும் என்றும் ஐதராபாத் மாநகராட்சி கமிஷனருக்கு சமூக வலைதளங்கள் மூலம் பலர் புகார் அளித்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் பேனர், கட் அவுட் வைத்தது தொடர்பாக பா.ஜனதா கட்சிக்கு ரூ.23 லட்சம் அபராதம் விதித்தனர்.

    அதேநேரத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்காவும் ஆதரவு திரட்ட கடந்த 2-ந்தேதி ஐதராபாத் வந்திருந்தார். அவரை வரவேற்று தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி சார்பில் பேனர், கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த கட்சிக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.3 லட்சம் அபராதம் விதித்தனர்.

    • அனைத்து தரப்பு மக்களும் எங்கள் அரசு மீது வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது.
    • தெலுங்கானா விவசாயிகளின் நலனுக்காக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    ஐதாராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு 2 நாள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, பின்னர் ஐதராபாத் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    பாஜக அரசு புதுமையான மற்றும் தொழில்நுட்ப திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், ஏழை சகோதர சகோதரிகளுக்கும் நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.

    தெலுங்கானா விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த 8 ஆண்டுகளில் தெலுங்கானா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் நீளம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

    வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வதில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளதாக சமீபத்தில் ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. கிராமப்புறங்களில் இது இன்னும் சிறப்பாக உள்ளது. மத்திய அரசு அவர்களை வங்கி அமைப்பில் இணைத்ததால் இது சாத்தியமானது.

    கடந்த 8 ஆண்டுகளில், ஏழை, தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நாங்கள் தொடங்கினோம். அதனால்தான் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் எங்கள் அரசு மீதும் அதன் கொள்கைகள் மீது வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    தெலுங்கானா மக்கள் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் திறமையானவர்கள். தெலுங்கானா வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்றது, அதன் கட்டிடக்கலை நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம்.

    மற்ற மாநிலங்களில், பா.ஜ.க.வின் இரட்டை எஞ்சின் அரசு மீது மக்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதை நாம் பார்த்தோம். தெலுங்கானாவில் கூட பாஜகவின் ஆட்சிக்கு மக்கள் வழி வகுத்து வருகின்றனர்.

    தெலுங்கானாவில் பாஜகவின் இரட்டை எஞ்ஜின் ஆட்சி அமையும் போது, ​​மாநிலத்தின் ஒவ்வொரு நகரங்களிலும் மற்றும் கிராமங்களிலும் வளர்ச்சிப் பணிகள் துரிதப்படுத்தப்படும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார். 


    முன்னதாக இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தெலுங்கானாவில் வளர்ச்சியும் இல்லை, வேலை வாய்ப்பும் இல்லை என்றார். நாடு முன்னேறி வரும் நிலையில், தெலுங்கானா மாநிலம பின்தங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    டிஆர்எஸ் அரசை வேரோடு மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்றும், டிஆர்எஸ் நிறைவேற்றாத அனைத்து வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றும் என்றும் அவர் உறுதியளித்தார்.

    வேலையில்லாத இளைஞர்கள் மீது முதலமைச்சர் கே.சி.ஆருக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர் தனது மகனை முதல்வர் ஆக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்றும் அமித்ஷா குறிப்பிட்டார்.

    • வாரிசு மற்றும் வம்ச அரசியல் கட்சிகளால் நாட்டு மக்கள் சலிப்படைந்துள்ளனர்.
    • இதுபோன்ற கட்சிகள் நீண்ட காலம் நீடிப்பது கடினம்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து பாஜக தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத், பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    சர்தார் படேல் ஒருங்கிணைந்த இந்தியாவின் அடித்தளத்தை அமைத்ததாகவும், இப்போது அதை மேலும் முன்னெடுத்துச் செல்வது பாஜகவின் பொறுப்பு என்றும், பிரதமர் மோடி தெரிவித்தார்.

    வம்ச அரசியல்,வாரிசு அரசியல் கட்சிகளால் நாட்டு மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்றும், இதுபோன்ற கட்சிகள் நீண்ட காலம் நீடிப்பது கடினம் என்றும் பிரதமர் கூறினார்.

    இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சிகள் இப்போது இறுதி வீழ்ச்சியில் உள்ளன; அவர்களை கேலி செய்யாமல் அவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

    இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

    • தேசிய நலன் கருதி எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும் காங்கிரசார் எதிர்க்கிறார்கள்.
    • ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடும் காங்கிரசார், கட்சித் தலைவரைகூட தேர்ந்தெடுக்கவில்லை.

    ஐதராபாத்:

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

    அப்போது அவர் ஆற்றிய உரை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல்வரும் பாஜக தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 


    பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்த அமித்ஷா வாரிசு அரசியல், சாதி வெறி மற்றும் திருப்திப்படுத்தும் அரசியல் ஆகிய பெரும் பாவங்களே, பல ஆண்டுகளாக நாடு அனுபவித்த துன்பங்களுக்கு காரணம் என்று கூறினார்.

    குஜராத் கலவரம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளும் உச்சநீதிமன்றத்தால் தவறானவை என்று அறிவிக்கப்பட்டதாகவும், இது குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என அமித்ஷா தெரிவித்தார்.

    எதிர்க்கட்சிகள் இன்று பிளவுபட்டுள்ளது என்றும், கட்சியில் ஜனநாயகத்தை நிலைநாட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் போராடுகிறார்கள், ஆனால் கட்சித் தலைவரை அவரகள் தேர்ந்தெடுக்கவில்லை என்று அமித்ஷா கூறினார்.

    காங்கிரசுக்கு மோடி குறித்த பயம் (ஃபோபியா) உள்ளதாகவும், தேசிய நலன் கருதி எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும் அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றும் உள்துறை மந்திரி குறிப்பிட்டார்.

    அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் இந்தியாவில் பாஜகவின் சகாப்தமாக இருக்கும் என்றும், இந்தியா உலகிற்கே தலைமை தாங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    தெலுங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்துறை மந்திரி அழைப்பு விடுத்ததாகவும், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பாஜக ஆட்சிக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டதாகவும் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

    பாஜகவின் அடுத்தகட்ட வளர்ச்சி தென்னிந்தியாவில் இருந்து வரும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

    குஜராத் கலவரம் தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளும் போது மோடி அமைதியாக இருந்ததாகவும், அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

    ஆனால் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியதை அடுத்து, காங்கிரஸ் வன்முறையை பரப்பியதாகவும் ஹிமந்தா பிஸ்வா சர்மா கண்டனம் தெரிவித்தார்.

    • தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் நடந்து வருகிறது.
    • பல மாநிலங்களில் மகத்தமான வெற்றி பெற்றுள்ள நிலையில் கூடியிருக்கும் செயற்குழு கூட்டம் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

    சென்னை:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் நடந்து வருகிறது.பா.ஜனதா தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளரான நடிகை குஷ்பு இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

    செயற்குழு நடைபெறும் மண்டபத்தின் வெளியே குஜராத்தில் இருந்து வந்திருந்த கலைக்குழுவினருடன் குஷ்புவும் தாண்டியா நடனம் ஆடி உற்சாகப்படுத்தினார்.

    இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள கலைத்துறையை சேர்ந்த பா.ஜனதா பெண் நிர்வாகிகளும் கலந்து கொண்டு உற்சாகமாக நடனம் ஆடினார்கள்.

    பின்னர் குஷ்பு பேசியதாவது:-

    பல மாநிலங்களில் மகத்தமான வெற்றி பெற்றுள்ள நிலையில் கூடியிருக்கும் செயற்குழு கூட்டம் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

    நமது லட்சியம் பிரதமர் மோடி தலைமையில் புதிய, நவீன இந்தியாவை கட்டமைப்பது தான். அந்த லட்சியத்தோடு தான் நாம் அனைவரும் பயணித்து கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாஜக செயற்குழு கூட்டம் இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
    • செயற்குழு கூட்டத்தில் தமிழகம் சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, குஷ்பு பங்கேற்கின்றனர்.

    ஐதராபாத்:

    2022 ஆம் ஆண்டுக்கான பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது. இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். தேசிய அளவிலான பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் செயற்குழுவில் பங்கேற்கிறார்கள். தமிழகம் சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, குஷ்பு பங்கேற்கின்றனர்.

    பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் ஐதராபாத் வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றார். ஐதராபாத் வந்து இறங்கியதும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு விஷயங்கள் குறித்து செயற்குழுவில் விவாதிக்க உள்ளதாக கூறி உள்ளார்.

    • மரபுபடி பிரதமர் வருகையின் போது அவரை அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் வரவேற்பது வழக்கம்.
    • ஆனால் தெலுங்கானா முதல்-மந்திரியும் , தெலுங்கானா ராஷ்ட்ரிய தலைவருமான சந்திரசேகர ராவ் பிரதமர் வருகையை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளார்.

    ஐதராபாத்:

    வட மாநிலங்களில் வலுவாக உள்ள பா.ஜனதா தற்போது தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கால் பதிக்கும் வகையில் காய் நகர்த்தி வருகிறது. இதனால் பாரதிய தேசிய செயற்குழு கூட்டத்தை அக்கட்சி ஐதராபாத்தில் நடத்துகிறது.

    இன்றும் நாளையும் பிரமாண்டமாக நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பாரதிய ஜனதா ஆளும் மாநிலத்தை சேர்ந்த 18 முதல்-மந்திரிகள், கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இன்று காலை ஐதராபாத்தில் உள்ள சர்வதேச மாநாட்டு திடலில் பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதனை ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார். இதில் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் பா.ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் தென் மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கபட்டது. மேலும் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் பாரதிய ஜனதா செயல்பாடுகள் குறித்தும், வெற்றி வியூகம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    செயற்குழு கூட்டத்தையொட்டி நாளை (3-ந்தேதி) பிரமாண்ட பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த கூட்டத்தையொட்டி ஐதராபாத் நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது. மோடியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. மத்திய அரசின் சாதனை குறித்த சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு உள்ளன , பிரதமர் வருகையையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் பேகம்பேட்டை விமான நிலையம் வருகிறார்.

    மரபுபடி பிரதமர் வருகையின் போது அவரை அந்தந்த மாநில முதல்-மந்திரி கள் வரவேற்பது வழக்கம்.

    ஆனால் தெலுங்கானா முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் பிரதமர் வரவேற்பை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளார். அவருக்கு பதிலாக அம்மாநில மந்திரி மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்க மட்டுமே செல்கின்றனர்.

    ஆனால் பிரதமர் வருகைக்கு முன்பாக அதே விமான நிலையத்துக்கு வந்த எதிர்கட்சி ஐனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்காவை சந்திரசேகர ராவ் மற்றும் அம்மாநில மந்திரிகள் வரவேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தேசிய அளவில் மோடிக்கு எதிராக 3-வது அணி அமைத்து எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார்.

    வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலின் போது பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக அவர் பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகிறார். இதன் காரணமாக அவர் தனது சொந்த மாநிலத்திற்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க செல்ல மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 6 மாதங்களில் பிரதமர் மோடி வருகையை சந்திரசேகர ராவ் 3-வது முறையாக புறக்கணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பசியோடு, யார் வேண்டுமானாலும் வந்து, தேவையானதை சாப்பிட்டு செல்ல வசதி ஏற்படுத்தி உள்ளனர்.
    • வீட்டில் ஒருபோதும், எந்த பொருளும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்கிறார்கள்.

    எங்கள் வீட்டில் யாரும் தங்கி சமைத்து சாப்பிடலாம்!

    பசியோடு இருக்கும் யார் வேண்டுமானாலும், அந்த வீட்டிற்குள் சென்று சாப்பிடலாம்; தேவைப்படும் உடைகளை எடுத்து அணிந்து கொள்ளலாம்.

    அதற்கு ஏற்ப அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறார்கள் டாக்டர் சூரிய பிரகாஷ் விஞ்சமூரி - டாக்டர் காமேஸ்வரி தம்பதி.

    இந்த சேவை குறித்து டாக்டர் தம்பதி கூறுவதை பார்ப்போம்:

    "ஒரு நாள் காலை, 11:30 மணி இருக்கும். பசியோடு ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்தார்.

    உணவு சமைத்து பரிமாறினோம். வேக வேகமாக அந்த உணவை வாயில் போட்டு, தட்டில் இருந்தவற்றை, ஒரு சில நிமிடங்களில் காலி செய்து விட்டார்.

    அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. 'ஏன் சார் அழுகிறீர்கள்' என்றோம். 'சாப்பிட்டு, இரண்டு நாட்கள் ஆகி விட்டன' என்று கூறி, சாப்பிடாமல் இருந்ததற்கான காரணத்தையும் கூறினார்.

    அப்போது தான் எங்கள் மனதில், இந்த வீடு பற்றிய எண்ணம் உதித்தது.

    பசியோடு, யார் வேண்டுமானாலும் வந்து, தேவையானதை சாப்பிட்டு செல்ல வசதி ஏற்படுத்தினால் என்ன என்ற எண்ணம் வந்தது.

    அதுபோல, தேவைப்படுபவர்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும், தங்கியிருந்து சாப்பிடவும் செய்யலாம் என நினைத்து, 2006ல், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், கொத்த பேட்டையில், இந்த வீட்டை உருவாக்கினோம்.

    இங்கிருக்கும் சமையல் பொருட்களை பயன்படுத்தி, சமைத்து, யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

    தயாராக வைத்திருக்கும் சாப்பாட்டை எடுத்து, எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

    அது மட்டுமின்றி, இங்கு இருக்கும் உடைகளையும் எடுத்து அணிந்து கொள்ளலாம்.

    இந்த இல்லத்தின் பெயர், 'அந்தரி இல்லு!' காலை, 5:00 மணியிலிருந்து, நள்ளிரவு, 12:00 மணி வரை, யார் வேண்டுமானாலும் இங்கு வந்து சாப்பிட்டு செல்லலாம்; இல்லம் திறந்திருக்கும்.

    எங்கள் சொந்த வீட்டில் அரிசி, சமையல் கியாஸ் தீர்ந்து போயிருக்கும். ஆனால், எங்களின் இந்த வீட்டில், ஒருபோதும், எந்த பொருளும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    டாக்டர் சூரிய பிரகாஷ் விஞ்சமூரி கூறுகையில், 'டாக்டராக இருக்கும் நானும், என் மனைவியும் சம்பாதிக்கும் பணத்திலிருந்து மட்டுமே இந்த வீட்டை நடத்துகிறோம்.

    அது மட்டுமின்றி, மன நிம்மதிக்காக வருபவர்களுக்கும் இங்கு இடம் உண்டு. இங்குள்ள மணியை அடித்து, அவர் வந்திருக்கிறார் என்பதை தெரிவித்தால், அவர் முன் உட்கார்ந்து, அவர் பேசுவதை பொறுமையாக கேட்போம்.

    அதிலேயே பலரின் மன அழுத்தங்கள் தீர்ந்து போகும். அது மட்டுமின்றி, இங்கு சிறிய நுாலகமும் உள்ளது. இங்கேயே சமைத்து, சாப்பிட்டு, தங்கி, புத்தகங்களை எடுத்து படித்து, வேலைக்கு சென்ற இளைஞர்கள் பலர் உள்ளனர்.

    பல லட்சம் பேரின் பசியை போக்கியுள்ள இந்த வீடு, எங்களுக்கு பிறகும் இயங்கும் வகையில் செய்துள்ளேன். பல இடங்களில், இதுபோன்ற இல்லங்களை திறக்கவும் ஆசை உள்ளது'  என்றார்

    கடவுள்கள் பூமியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்....

    நமக்கு தான் அது தெரிவதேயில்லை.

    ×