என் மலர்
தெலுங்கானா
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் தெலுங்கு டைடன்ஸ் அணி 3வது தோல்வி அடைந்தது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், யு மும்பா அணிகள் மோதின.
தொடக்கம் முதலே இரு அணிகளும் பொறுப்புடன் ஆடின. இறுதியில், இரு அணிகளும் 31-31 என்ற புள்ளிக்கணக்கில் சமனிலை வகித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
மற்றொரு போட்டியில் தபாங் டெல்லி 41-37 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
- காங்கிரஸ் அரசு தனது முதல் 100 நாட்களுக்குள் முக்கிய வாக்குறுதிகள் மற்றும் உத்தரவாதங்கள் எதையும் நிறைவேற்றவில்லை.
- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நீதி சமத்துவம் மற்றும் அரசியல் அமைப்பு பற்றி அடிக்கடி பேசுகிறார்.
திருப்பதி:
தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகரராவின் மகன் கே. டி. ராமராவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவரது சொந்த அமைச்சர்களின் செல்போன் உரையாடல்களை ஒட்டு கேட்கிறார்.
நான் அவருக்கு பகிரங்க சவால் விடுக்கிறேன். செல்போன்கள் ஒட்டு கேட்பதில் ஈடுபடுவதில்லை என்பதை நிரூபிக்க கேமராக்களுக்கு முன்பாக அவருக்கு பொய் கண்டறியும் சோதனை நடத்த வேண்டும். அதற்கு ரேவந்த் ரெட்டி முன் வருவாரா?
காங்கிரஸ் அரசு தனது முதல் 100 நாட்களுக்குள் முக்கிய வாக்குறுதிகள் மற்றும் உத்தரவாதங்கள் எதையும் நிறைவேற்றவில்லை.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நீதி சமத்துவம் மற்றும் அரசியல் அமைப்பு பற்றி அடிக்கடி பேசுகிறார். ஆனால் தெலுங்கானாவில் விளிம்பு நிலை சமூகங்களுக்கு எதிரான காங்கிரஸ் தலைமையிலான அரசின் நடவடிக்கைகள் குறித்த அவர் மவுனம் காக்கிறார்.
ஏழைகளை அச்சுறுத்தும் காங்கிரஸ் தலைமையிலான புல்டோசர் ஆட்சியில் இருந்து தெலுங்கானாவில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை பாதுகாப்பதற்கு ராகுல் காந்தி முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் தமிழ் தலைவாஸ் அணி முதல் தோல்வி அடைந்தது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக ஆடின.
இறுதியில் இந்தப் போட்டியில் 42-40 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. பாட்னா அணியின் தேவங்க் சிறப்பாக ஆடி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
மற்றொரு போட்டியில் புனேரி பால்டன் 36-22 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது.
- தெலுங்கில் சமீபத்தில் 'லவ் ரெட்டி' என்ற படம் வெளியானது
- இதை சற்றும் எதிர்பாராமல் ராமசாமி திகைத்து நிற்க சக நடிகர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்த முயன்றனர்.
சினிமாவவில் காதலர்களைப் பிரித்ததால் வில்லன் நடிகரை ஆத்திரத்தில் பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் தெலங்கானாவில் நிகழ்ந்துள்ளது. தெலுங்கில் சமீபத்தில் வெளியான, 'லவ் ரெட்டி' என்ற படம் ஐதராபாத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் திரையிடப்பட்டது.
படம் முடிந்ததும் அதில் நடித்தவர்கள் மேடையில் தோன்றி பேசினர். அப்போது மேடையில் ஏறிய நடுத்தர வயது பெண் ஒருவர் படத்தில் வில்லனாக நடித்த ராமசாமி யை சட்டையை கன்னத்தில் அறைந்து சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார். ஏன் காதலர்களுக்கு பிரச்சனை தருகிறாய் என்று கேட்டவாறே அவர் தாக்கினார்.
இதை சற்றும் எதிர்பாராமல் ராமசாமி திகைத்து நிற்க சக நடிகர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
படத்தில் காதலர்களை சேர விடாமல் வில்லன் பிரித்ததால் ஆத்திரமடைந்த பெண் நடிகர் ராமசாமியை தாக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
- மயோனைஸ் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவான உணவுப்பொருள் என்கின்றனர்.
- செகந்திராபாத்தில் மயோனைஸ் நிரப்பப்பட்ட சவர்மா சாப்பிட்ட 4 பேருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
திருப்பதி:
மயோனைஸ் இதனுடன் சவர்மா, பீட்சா உள்ளிட்ட துரித உணவுகள் கலந்து சாப்பிட்டால் அதிக ருசி கிடைக்கிறது.
நகர பகுதிகளில் மயோனைஸ் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது முழுக்க முழுக்க முட்டை வெள்ளைக்கரு, எண்ணெய், சர்க்கரை, உப்பு, எலுமிச்சை சாறு போன்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தி மிக்சியில் அரைத்து தயாரிக்கப்படுகிறது.
அப்படி தயாரிக்கப்படும் மயோனைஸ் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவான உணவுப்பொருள் என்கின்றனர்.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் மயோனைஸ் நிரப்பப்பட்ட சவர்மா சாப்பிட்ட 4 பேருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதேபோல் அடுத்தடுத்து 10 சம்பவங்கள் மாநிலத்தில் நடைபெற்றன. இதனை தொடர்ந்து மயோனைஸ் விற்பனை செய்யப்படும் கடைகள் மற்றும் தயாரிப்பு கூடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில் பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் முட்டை மயோனைஸ் விற்பனைக்கு தடை செய்ய அரசு அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
- போலீஸ்காரர்களை கொத்தடிமைகளாக பணி செய்ய வைக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.
- போலீஸ்காரர்களின் மனைவிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தெலுங்கானா மாநிலத்தில் போலீஸ்காரர்களுக்கு நீண்ட நேரம் பணி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு விடுமுறை இல்லாமல் பணிச்சுமை ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் போலீஸ்காரர்கள் பலர் வீட்டிற்கு செல்லும் நேரத்தை குறைத்து அதிக நேரம் பணியில் ஈடுபடுகின்றனர்.
போலீஸ்காரர்கள் வீட்டுக்கு வருவதை தவிர்த்து வருவதால் அவர்களுடைய மனைவிகள் மற்றும் குழந்தைகள் அரசை கண்டித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் நல்கொண்டா, நிஜாமாபாத்தில் உள்ள டிச்பல்லி, வாரங்கலில் உள்ள மாமன்னூர் மற்றும் சிர்சில்லா ஆகிய இடங்களில் போலீஸ்காரர்களின் மனைவிகள், குழந்தைகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று 2-வது நாளாக ஜோகுலாம்பா கட்வால் மற்றும் சிர்சில்லா ஆகிய இடங்களில் பல்வேறு பட்டாலியன்களைச் சேர்ந்த போலீஸ்காரர்களின் மனைவி, குழந்தைகள் குடும்பத்தோடு நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கைகளில் பல்வேறு கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பினர். போலீஸ்காரர்களை கொத்தடிமைகளாக பணி செய்ய வைக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.
உரிமைகளை பாதுகாக்க வேண்டும். விடுப்பு இல்லாமல் நீண்ட நேரம் பணி செய்ய வைப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
"எங்களது கணவர்கள் வீட்டில் அதிக நேரம் செலவிடுவதில்லை. கடமை என்ற பெயரால், வீட்டுக்கு வருவதே இல்லை. எங்களிடமிருந்து விலகி இருக்க வைக்கப்படுகிறார்கள் என்றனர்.
போலீஸ்காரர்களின் மனைவிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் , இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - உபி யோதா அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக ஆடின.
இறுதியில் இந்தப் போட்டியில் 32-29 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் திரில் வெற்றி பெற்று முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 37-25 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.
- தலைமை ஆசிரியையிடம் 15 நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்தும் அவர் நடவடிக்கை எடுக்காமல் ஆசிரியருக்கு சாதகமாக மவுனமாக இருந்தார்.
- தலைமை ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சாரதா என்பவரும், தெலுங்கு ஆசிரியராக நரேந்தர் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் மாணவிகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அப்போது 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தெலுங்கு ஆசிரியர் நரேந்தர் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் தெரிவித்தனர்.
தனியார் தொண்டு நிறுவனம் இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு அகில் மகாஜனக்கு புகார் அனுப்பினர். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க சிர்சில்லா போலீசாருக்கு உத்தரவிட்டார்.
போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் குமார் நரேந்திர சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் பள்ளியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக தலைமை ஆசிரியை சாரதாவிடம் 15 நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்தும் அவர் நடவடிக்கை எடுக்காமல் ஆசிரியருக்கு சாதகமாக மவுனமாக இருந்தார்.
தலைமை ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
- சிறுமியை வலுக்கட்டாயமாக படுக்கை அறைக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றார்.
- ரவிக்குமார் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், ஹனம் கொண்டா மாவட்டம், வாடே பள்ளியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே குடியிருப்பை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் ஐதராபாத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.
சிறுமி தன்னுடன் படிக்கும் நண்பருடன் குடியிருப்பு பகுதியில் பேசிக்கொண்டு இருந்தார். அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் சிறுமியின் நண்பரை அங்கிருந்து விரட்டி அனுப்பினார். பின்னர் சிறுமியிடம் இது போல் தவறாக நடக்கக்கூடாது என அறிவுரை வழங்கினார். சிறுமியின் செல்போன் என்னை வாங்கினார்.
இதையடுத்து சிறுமியை தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறுமியை வலுக்கட்டாயமாக படுக்கை அறைக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி இன்ஸ்பெக்டரிடம் இருந்து போராடி அங்கிருந்து தப்பி வீட்டிற்கு வந்தார். இதுகுறித்து பெற்றோர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் சிறுமியை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் காசிபேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் தமிழ் தலைவாஸ் அணி 2வது வெற்றியைப் பதிவு செய்தது.
புதுடெல்லி:
11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் , இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் அதிரடி ஆட்டத்தில் இறங்கியது. இறுதியில் இந்தப் போட்டியில் 35-30 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வென்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 33-27 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி யு மும்பா அணி வெற்றி பெற்றது.
- தனது செல்போனில் படம் எடுத்துக்கொண்ட வெங்கடேஷ் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
- பயனர்களோ தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஐதராபாத்தை சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் தனது வாகனத்தில் இருக்கைக்கு பின் பின்னால் நோட்டீஸ் ஒட்டியுள்ளது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வெங்கடேஷ் என்பவர் அந்த கேப் வண்டியில் ஏறிய போது டிரைவரின் இருக்கைக்கு பின்னால் ஒரு பேப்பர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்தார். அதில் "எச்சரிக்கை!! நோ ரோமன்ஸ்... இது ஒரு வண்டி... இது உங்களின் தனிப்பட்ட இடம் அல்ல (OR) OYO அல்ல. எனவே இடைவெளிவிட்டு அமைதியாக இருங்கள்" என்று எழுதப்பட்டு இருந்தது.
இதை தனது செல்போனில் படம் எடுத்துக்கொண்ட வெங்கடேஷ் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட, பயனர்களோ தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- மதுபான கூடத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- கைதானவர்களில் பலர் மது போதையில் இருந்தனர்.
ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஏராளமான மதுக்கூடங்கள் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன.
மது போதையில் பொழுதை கழிப்பவர்களுக்கு பஞ்சராஹில்ஸ் பகுதி சொர்க்க பூமியாக இருந்து வருகிறது. இங்குள்ள தனியார் மதுபான கூடத்தில் ஆண் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்களை நடனமாடும் பணியில் அமர்த்தினர். இந்த பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இந்த மதுபான கூடத்தில் கூட்டம் அலைமோதியது.
நேற்று இரவு சனிக்கிழமை என்பதால் அதிகளவில் கூட்டம் இருந்தது. ஆபாசமாக நடனமாடிய பெண்களுடன் வாலிபர்கள் உற்சாகமாக ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
ஆபாச நடனம் ஆடிக்கொண்டிருந்த 42 பெண்கள் உட்பட 140 பேரை போலீசார் கைது செய்தனர். மதுபான கூடத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அந்த கட்டிடத்துக்கு போலீசார் சீல் வைத்தனர். கைதானவர்களில் பலர் மது போதையில் இருந்தனர். பெரும் பணக்கார வாலிபர்களும் அதில் இருந்தனர்.
இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






