காரில் ரொமான்ஸ் செய்யும் ஜோடிகளுக்கு எதிராக டிரைவரின் வைரல் ஆகும் வாசகம்

தனது செல்போனில் படம் எடுத்துக்கொண்ட வெங்கடேஷ் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.பயனர்களோ தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
காரில் ரொமான்ஸ் செய்யும் ஜோடிகளுக்கு எதிராக டிரைவரின் வைரல் ஆகும் வாசகம்
Published on

ஐதராபாத்தை சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் தனது வாகனத்தில் இருக்கைக்கு பின் பின்னால் நோட்டீஸ் ஒட்டியுள்ளது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வெங்கடேஷ் என்பவர் அந்த கேப் வண்டியில் ஏறிய போது டிரைவரின் இருக்கைக்கு பின்னால் ஒரு பேப்பர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்தார். அதில் "எச்சரிக்கை!! நோ ரோமன்ஸ்... இது ஒரு வண்டி... இது உங்களின் தனிப்பட்ட இடம் அல்ல (OR) OYO அல்ல. எனவே இடைவெளிவிட்டு அமைதியாக இருங்கள்" என்று எழுதப்பட்டு இருந்தது.

இதை தனது செல்போனில் படம் எடுத்துக்கொண்ட வெங்கடேஷ் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட, பயனர்களோ தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com