என் மலர்tooltip icon

    பஞ்சாப்

    • எல்லைக்குள் கவனக்குறைவால் நுழைந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • அவரிடம் இருந்து எந்த ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள கமிர்புரா கிராமம் அருகே உள்ள சர்வதேச எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் கவனக்குறைவால் நுழைந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். எல்லை பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து எந்த ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை. விசாரணைக்கு பிறகு மனிதாபிமான அடிப்படையில் அவர் குர்தாஸ்பூர் செக்டரில் உள்ள பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    • 2016 மற்றும் 2022 க்கு இடையில் முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள் அளவுக்கதிகமாக சேர்த்ததாக குற்றச்சாட்டு.
    • வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    காங்கிரஸ் தலைவரும், பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பி.சோனி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், மாநில விஜிலென்ஸ் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சண்டிகரில் கைது செய்யப்பட்டா சோனியை, பின்னர் அமிர்தசரஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, 2016 மற்றும் 2022 க்கு இடையில் முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள் அளவுக்கதிகமாக சேர்த்ததாக கூறப்பட்டது.

    இது தொடர்பாக விசாரணைக்கு அக்டோபர் 10, 2022 அன்று உத்தரவிடப்பட்டது.

    2006ம் ஆண்டு ஏப்ரல் 1, முதல் மார்ச் 31, 2022 வரை, முன்னாள் துணை முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வருமானம் 4.5 கோடி என்றும், அவர் 12.5 கோடி செலவு செய்துள்ளதாகவும் புலனாய்வு முகமை வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த காலகட்டத்தில், ஓபி சோனி தனது மனைவி சுமன் சோனி மற்றும் மகன் ராகவ் சோனி பெயரில் சொத்துக்களை குவித்துள்ளார்.

    விசாரணையைத் தொடர்ந்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 13 (1) (பி) மற்றும் 13 (2) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விஜிலன்ஸ் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    • பாட்டியாலா சாலையில் உள்ள கால்வாய் அருகே சுக்ஜீத்தின் உடல், மோட்டார் சைக்கிள் மற்றும் செருப்பு கண்டெடுக்கப்பட்டது.
    • தொழிலில் நஷ்டம் அடைந்ததால் இன்சூரன்ஸ் பணம் ரூ.4 கோடியை பெறுவதற்காக குர்ப்ரீத் சிங் தான் இறந்ததாக சுக்ஜீத்தை கொன்று விட்டு நாடகமாடியது தெரியவந்தது.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் ராம்தாஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் குர்ப்ரீத் சிங். இவரது மனைவி குஷ்தீப் கவுர்.

    குர்ப்ரீத் சிங் தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். அவரது தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் தனது இன்சூரன்ஸ் பணம் ரூ.4 கோடியை பெற திட்டமிட்டார். இதற்காக தனது போலி மரணத்தை ஏற்படுத்த திட்டமிட்டார்.

    சைன்பூர் பகுதியை சேர்ந்த சுக்ஜீத் என்பவருடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு நண்பர் போல் அவருடன் நெருக்கமாக பழகினார்.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி முதல் சுக்ஜீத்தை திடீரென காணவில்லை. அவரை அவரது மனைவி ஜீவன்தீப் கவுர் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சுக்ஜீத்தை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பாட்டியாலா சாலையில் உள்ள கால்வாய் அருகே சுக்ஜீத்தின் உடல், மோட்டார் சைக்கிள் மற்றும் செருப்பு கண்டெடுக்கப்பட்டது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது குர்ப்ரீத் சிங், தனது கணவருக்கு தொடர்ந்து மது வாங்கி கொடுத்ததாக சுக்ஜீத்தின் மனைவி போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் குர்ப்ரீத் சிங்கை பிடித்து விசாரணை நடத்த அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் குர்ப்ரீத் சிங் சாலை விபத்தில் இறந்து விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தங்களுடைய பாணியில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தொழிலில் நஷ்டம் அடைந்ததால் இன்சூரன்ஸ் பணம் ரூ.4 கோடியை பெறுவதற்காக குர்ப்ரீத் சிங் தான் இறந்ததாக சுக்ஜீத்தை கொன்று விட்டு நாடகமாடியது தெரியவந்தது.

    இதற்கு உடந்தையாக குர்ப்ரீத் சிங்கின் மனைவி குஷ்தீப் கவுர் மற்றும் சுக்விந்தர் சிங் சங்கா, ஜஸ்பால்சிங், தினேஷ்குமார் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதையடுத்து குர்ப்ரீத் சிங் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • எல்லைப் பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    • பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்று கண்காணிக்கப்படுகிறது.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் பசில்கா மாவட்டத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள ஜோதவாலா கிராமத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்ற போது, இந்திய வான் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ட்ரோனை கைப்பற்றினர். அந்த டிரோனில் 2 பாக்கெட்டுகளில் 2 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த ஹெராயினை கைப்பற்றி விசாரணை நடந்து வருகிறது. சரியான நேரத்தில் ட்ரோனை கைப்பற்றியதால் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

    இந்த ட்ரோன் கைப்பற்றப்பட்டதையடுத்து அப்பகுதியில் பாகிஸ்தான் கடத்தல் கும்பல்களால் வேறு ஏதேனும் போதைப் பொருட்கள் வீசப்பட்டுள்ளதா என எல்லைப் பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எல்லைக் கிராமங்களில் உள்ளவர்கள் பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்று கண்காணிக்கப்படுகிறது. பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பஞ்சாப் மாநிலத்தை போதைப்பொருள் கடத்தலுக்கான ஒரு வழித்தடமாக மாற்றியதால், போதைப்பொருள் சப்ளை செய்யும் இடத்தையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநில அரசை கவிழ்க்க பா.ஜ.க. ஆபரேஷன் தாமரை என்ற திட்டத்தை செயல்படுத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டது.
    • ஆபரேஷன் தாமரை குறித்து நடவடிக்கை தொடர்பாக சபாநாயகர் சந்த்வானுக்கு பாஜ்வா கடிதம் எழுதியிருந்தார்.

    பஞ்சாப் மாநிலத்தில் முழு பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. கடந்த வருடம், பாஜக தனது 'ஆபரேஷன் லோட்டஸ்' திட்டத்தின் ஒரு பகுதியாக, பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கும் முயற்சியில், குறைந்தபட்சம் 10 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை அணுகி தலா ரூ.25 கோடி வழங்க முன்வந்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது. அத்துடன், பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், பஞ்சாப் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று தொடங்கியது. இரண்டு நாள் சிறப்பு அமர்வில், கேள்வி நேரமோ, பூஜ்ஜிய நேரமோ இல்லாததால், காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு அவையிலிருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.

    இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் பார்தப் சிங் பஜ்வா கூறுகையில், "கேள்வி நேரமோ அல்லது பூஜ்ஜிய நேரமோ எடுக்கப்படாவிட்டால், விதான சபாவின் நோக்கம் என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.

    சபையில் இருந்து வெளிநடப்பு செய்வதற்கு முன்பு பாஜ்வா பேசுகையில், "ஆம் ஆத்மி அரசாங்கம் ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஒரு அமர்வைக் கூட்டி, மாநில அரசை கவிழ்க்க பா.ஜ.க., 'ஆபரேஷன் தாமரை' எனப்படும் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால் இதுவரை இந்த குற்றச்சாட்டின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதில் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்" என்று கூறினார்.

    'ஆபரேஷன் தாமரை' குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கை என்ன என்பதை சபையில் தாக்கல் செய்யக் கோரி சபாநாயகர் சந்த்வானுக்கு பாஜ்வா கடிதம் எழுதியிருந்தார்.

    இது குறித்து சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான் பேசும்போது, இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

    • ஒரு ராணுவ வீரர் நிச்சயமாக கடமையில் இருந்து விலகுவதில்லை என பாராட்டு
    • ரியல் லைஃப் சூப்பர்மேன், எங்கள் இந்திய ராணுவ ஜவான் என டுவிட்டரில் பாராட்டு

    இந்தியாவின் பஞ்சாப் மாநில தென்கிழக்கில் உள்ளது பாட்டியாலா நகரம். இங்கு பிரபலமான பக்ரா கால்வாய் நீர்ப்பாசனத்திற்கு பெருமளவில் உதவுகிறது. இந்த கால்வாயில் ஒரு இளம் பெண்ணை மூழ்கும் ஆபத்திலிருந்து ராணுவ வீரர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

    இந்த வீரமிகு சம்பவத்தை காட்சிப்படுத்தும் வீடியோவை ராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    அதில் "ஆர்ப்பரித்து பெருக்கெடுத்தோடும் பக்ரா கால்வாயில், வீரர் டி.என். கிருஷ்ணன் குதித்து ஒரு மூழ்கும் இளம் பெண்ணை காப்பாற்றுகிறார். அவரின் அழிக்க முடியாத மன உறுதிக்கு பாராட்டுக்கள். எப்பொழுதும் நாங்கள் நாட்டின் சேவைக்காக இருக்கிறோம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    வைரலான இந்த காட்சியை கண்ட நெட்டிசன்கள் அந்த ராணுவ அதிகாரிக்கு வணக்கம் செலுத்தி பாராட்டி வருகின்றனர்.

    ஒரு பயனர், "ஒரு ராணுவ வீரர் நிச்சயமாக கடமையில் இருந்து விலகுவதில்லை. வரவிருக்கும் வீரர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணத்தை விட்டுச் செல்கிறார்" என கூறியிருக்கிறார்.

    மற்றொரு பயனர், டி.என். கிருஷ்ணனை கற்பனை கதாபாத்திரமான சூப்பர்மேனுடன் ஒப்பிட்டு, "ரியல் லைஃப் சூப்பர்மேன், எங்கள் இந்திய ராணுவ ஜவான்" என்று எழுதியிருக்கிறார்.

    இந்திய ராணுவம் தனது குடிமக்களை பாதுகாப்பதில் இருந்து எந்தப் பேரிடர்களின் போதும் முன்னணியில் இருந்த போதோ அல்லது மக்களைக் காப்பாற்றும் போதோ ஒருபோதும் பின்வாங்கியதில்லை என்பது மீண்டும் புலனாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டகு ஹசீனா எந்த கோவிலுக்கு செல்கிறார் என்பதை கண்காணித்தனர்.
    • உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிரபல சீக்கிய குருத்துவாரா கோவிலுக்கு செல்வது தெரியவந்தது.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கடந்த 10-ந் தேதி ஒரு நிறுவனத்தில் ரூ.8 கோடியே 49 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து லூதியானா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 12 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இக்கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது மந்தீப் கவுர் என தெரியவந்தது. இவர் மீது போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. இதனால் அவரை போலீசார் டகு ஹசீனா என அழைத்தனர்.

    டகு ஹசீனா ஒவ்வொரு முறை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும், அதற்கு நன்றி சொல்ல சீக்கிய குருத்துவாராவுக்கு செல்வது வழக்கம். இதனை அறிந்து கொண்ட போலீசார், டகு ஹசீனா எந்த கோவிலுக்கு செல்கிறார் என்பதை கண்காணித்தனர்.

    இதில் அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிரபல சீக்கிய குருத்துவாரா கோவிலுக்கு செல்வது தெரியவந்தது. உடனே பஞ்சாப் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் டகு ஹசீனாவையும் அவரது கணவர் ஜஸ்விந்தர் சிங்கையும் தேடினர்.

    கோவிலில் அப்போது விழா நடந்ததால் அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். பெண்கள் பலரும் முகத்தில் முக்காடு அணிந்தபடி சுற்றி வந்தனர். இதனால் டகு ஹசீனாவை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது.

    இதையடுத்து கோவில் வளாகத்தில் ஆங்காங்கே குளிர்பான பந்தல்கள் அமைத்தனர். அதில் ரூ.10 மதிப்புள்ள குளிர்பானங்களை பக்தர்களுக்கு வழங்கினர். அந்த பந்தல் முன்பு போலீசார் மாறு வேடத்தில் நின்றபடி டகு ஹசீனாவையும், அவரது கணவரையும் தேடிக்கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில்தான் ஒரு குளிர்பான பந்தலுக்கு ஒரு பெண் குளிர்பானம் குடிக்க வந்தார். குளிர்பானத்தை வாங்கிய அவர், அதனை குடிப்பதற்காக முகத்தின் முக்காட்டை விலக்கிய போது, அவர் டக் ஹசீனாை என்பதை போலீசார் கண்டுபிடித்து விட்டனர். உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    டகு ஹசீனாவுடன் அவரது கணவரும் சிக்கினார். அவர்களிடம் இருந்து கொள்ளை அடித்த பணத்தில் ரூ.21 லட்சம் சிக்கியது. பின்னர் இருவரையும் போலீசார் உத்தரகாண்டில் இருந்து பஞ்சாப் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ரூ.8½ கோடி கொள்ளை அடித்த டக் ஹசீனா 10 ரூபாய் குளிர்பானம் குடிக்க சென்று போலீசாரிடம் சிக்கி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை பிடித்த போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தான் டிரோன் சந்தேகத்திற்கு இடமாக பறந்தது
    • கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினார்கள்.

    அமிர்தசரஸ்:

    இந்திய எல்லையில் அவ்வப்போது பாகிஸ்தான் டிரோன்கள் அத்துமீறி நுழைந்து வருகிறது. கடந்த வாரம் 3 கிலோ கஞ்சா கட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் டிரோன் பஞ்சாப் மாநிலத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு அமிர்தசரசில் உள்ள பைனி ராஜ்புட்னா என்ற கிராமத்தில் சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தான் டிரோன் சந்தேகத்திற்கு இடமாக பறந்தது.

    இதை பார்த்த அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது,

    • சிலர் செய்யும் வித்தியாசமான செயல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும்.
    • வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெற ஆட்டோவின் பின்னால் கூலர் பொருத்தப்பட்டிருப்பதை காணமுடிகிறது.

    சிலர் செய்யும் வித்தியாசமான செயல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும். அந்த வகையில் பஞ்சாப்பை சேர்ந்த டிரைவர் ஒருவர் தனது ஆட்டோ ரிக்ஷாவில் ஏர்கூலர் பொருத்தி உள்ள வீடியோ இணைத்தில் வைரலாகி வருகிறது.

    அதில், வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெற ஆட்டோவின் பின்னால் கூலர் பொருத்தப்பட்டிருப்பதை காணமுடிகிறது. இதைப்பார்த்து சாலையில் அனைவரும் திகைத்து நிற்கின்றனர். டிரைவர் தானும் தனது ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளும் வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக கூலர் பொருத்திய செயலை வலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

    • இந்திய வான் எல்லையில் அத்துமீறி நுழைந்ததால் வீரர்கள் இடைமறித்து தரையிறக்கினர்
    • 3.22 கிலோ அளவில் ஹெராயின் பறிமுதல்

    பஞ்சாப் மாநிலம் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் நடைபெற்று வருகின்றன. இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் இந்த கடத்தலை முறியடித்து வருகிறார்கள். இதனால் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எல்லை வழியாக போதைப்பொருட்களை கடத்துவது கடும் சவாலாக உள்ளது. ஆகவே தற்போது டிரோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    பஞ்சாப் மாநிலம் அட்டாரி பகுதியில் தற்போது இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ள அட்டாரி பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோன் பறந்துள்ளது. அதை இடைமறித்து கீழே இறக்கிய எல்லை பாதுகாப்புப்படையினர், டிரோனை சோதனையிட்டபோது அதில் 3.2 கிலோ அளவிலான ஹெராயின் இருப்பதை கண்டறிந்து அதை பறிமுதல் செய்தனர்.

    • பகவந்த் மானுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அச்சுறுத்தல்கள் வரும் நிலையில் பாதுகாப்பு.
    • மாநில போலீசாரின் பாதுகாப்பே போதுமானது என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் சிங் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பகவந்த் மானுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அச்சுறுத்தல்கள் வரும் என்பதால் மத்திய அரசு சி.ஆர்.பி.எப் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது.

    சி.ஆர்.பி.எப். படையின் இசட் பிளஸ் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் ஒதுக்கிய நிலையில், பகவந்த் மான் சிங் அதனை ஏற்க மறுத்துள்ளார்.

    இதுதொடர்பாக பகவந்த் மான் மத்திய அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மத்திய அமைச்சகத்தின் சிஆர்பிஎப் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு எனக்கு வேண்டாம் என்றும், மாநில போலீசாரின் பாதுகாப்பே போதுமானது எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரத்தன் குராட் பகுதியில் சர்வதேச எல்லையை தாண்டி நுழைந்த மற்றொரு பாகிஸ்தான் டிரோனையும் எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்கள்.
    • 2 டிரோன்களை சோதனை செய்த போது அதில் 2 பாக்கெட்டுகளில் 2.6 கிலோ கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் உதார் தானிவால் சர்வதேச எல்லைப்பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இந்திய வான் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைந்து சந்தேகத்திற்கு இடமாக பறந்த டிரோனை அவர்கள் சுட்டுவீழ்த்தினார்கள். இதே மாவட்டத்தில் ரத்தன் குராட் பகுதியில் சர்வதேச எல்லையை தாண்டி நுழைந்த மற்றொரு பாகிஸ்தான் டிரோனையும் எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்கள்.

    கறுப்பு நிறத்திலான இந்த 2 டிரோன்களை சோதனை செய்த போது அதில் 2 பாக்கெட்டுகளில் 2.6 கிலோ கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×