என் மலர்
நீங்கள் தேடியது "வலைத்தளம்"
- சிலர் செய்யும் வித்தியாசமான செயல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும்.
- வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெற ஆட்டோவின் பின்னால் கூலர் பொருத்தப்பட்டிருப்பதை காணமுடிகிறது.
சிலர் செய்யும் வித்தியாசமான செயல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும். அந்த வகையில் பஞ்சாப்பை சேர்ந்த டிரைவர் ஒருவர் தனது ஆட்டோ ரிக்ஷாவில் ஏர்கூலர் பொருத்தி உள்ள வீடியோ இணைத்தில் வைரலாகி வருகிறது.
அதில், வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெற ஆட்டோவின் பின்னால் கூலர் பொருத்தப்பட்டிருப்பதை காணமுடிகிறது. இதைப்பார்த்து சாலையில் அனைவரும் திகைத்து நிற்கின்றனர். டிரைவர் தானும் தனது ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளும் வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக கூலர் பொருத்திய செயலை வலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.
- சமூக வலைத்தளங்களில் வேடிக்கையான, வினோதமான வீடியோக்கள் ஏராளமாக பரவும்.
- 95 வயது முதியவர் ஒருவர் திருமண விழா ஒன்றில் எல்லோர் முன்னிலையிலும் தப்பட்டை வாசிக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் வேடிக்கையான, வினோதமான வீடியோக்கள் ஏராளமாக பரவும். ஆனால் உணர்ச்சிகரமான வீடியோக்கள் அரிதாகவே காணக்கிடைக்கும். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ருத்விக் பாண்டே என்பவர் பதிவிட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் 95 வயது முதியவர் ஒருவர் திருமண விழா ஒன்றில் எல்லோர் முன்னிலையிலும் தப்பட்டை வாசிக்கிறார். சில சமயம் அவர் தரையில் அமர்ந்து இருக்கிறார். 95 வயதிலும் தனக்கும், தன் குடும்பத்திற்காகவும் அயராது உழைக்கும் இந்த முதியவரின் வீடியோவை பார்த்த வலைதள வாசிகள் அவரை பாராட்டி கருத்துக்களை பதிவிடுவதோடு அவருக்கு உதவி செய்யவும் முன்வந்துள்ளனர். இந்த வீடியோ 1.7 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.






