என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்கவேண்டும் என அவர்களது பெற்றோர் பிரதமருக்கு கோரிக்கை விடுத்தனர்.
    • வேறு எந்த நாட்டிலும் செய்யமுடியாத ஒன்றைச் செய்த பிரதமர் மோடி குறித்து நான் பெருமைப்படுகிறேன்.

    அவுரங்காபாத்:

    பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வீர ஷிரோமணி மகாராணா பிரதாப் மகா சம்மேளனத்தில் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    உக்ரைனில் போர் நிறுத்தம் தொடர்பாக பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேசினார். தேவைப்படும்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனும் பேசினார்.

    உக்ரைனில் சிக்கியிருந்த 22,000-க்கும் மேற்பட்ட மாணவர்களை மீட்கும் வகையில் போர் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் வீடு திரும்பினர். முன்னதாக மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்று அவர்களது பெற்றோர்கள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். வேறு எந்த நாட்டிலும் செய்யமுடியாத ஒன்றைச் செய்த பிரதமர் மோடி குறித்து நான் பெருமைப்படுகிறேன்.

    மோடி பிரதமராக இருந்தபோது, 2014ல் 900 கோடி ரூபாயாக இருந்த இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி, தற்போது 16,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நாட்டை ஆத்மநிர்பர் (தன்னம்பிக்கை) கொண்டதாக மாற்றவேண்டும் என்ற மோடியின் வலியுறுத்தலுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

    • இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித் தாக்கினர்.
    • கலவரம் விவகாரம் தொடர்பாக இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் உள்ள பழைய நகர காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித் தாக்கினர். இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். அந்த கும்பல் சில வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தங்கள் பலத்தை பயன்படுத்தி கும்பலை கலைத்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது. இந்த, வன்முறையைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பஜ்ரங் தளத்தை தடை செய்வதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.
    • தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.

    மும்பை :

    கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்து உத்தவ் பாலாசாகேப் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பஜ்ரங் தளத்தை தடை செய்வதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இதை தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி கடுமையாக சாடினார். மேலும் கடவுள் அனுமன் கோஷமிட்டு பிரசாரம் செய்த பா.ஜனதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களையும் விமர்சித்தார். இவை தான் கர்நாடகத்தில் பா.ஜனதாவின் வீழ்ச்சிக்கு காரணம்.

    இது பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் தோல்வி. கர்நாடகத்தில் இப்போது என்ன நடந்துள்ளதோ, அது 2024 பாராளுமன்ற தேர்தலிலும் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜனதாவை தோற்கடிப்பது ஒன்றே எங்களின் நோக்கமாகும்.
    • தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கர்நாடகாவின் சில பகுதிகளில் போட்டியிட்டது.

    நாக்பூர் :

    கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகளின் போக்கு 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சூழலை பிரதிபலிக்கிறது. பா.ஜனதாவை தோற்கடிப்பது ஒன்றே எங்களின் நோக்கமாகும்.

    கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான், டெல்லி, ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தற்போது பா.ஜனதா ஆட்சியில் இல்லை. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடகத்தில் வெற்றி பெற உதவி உள்ளது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கர்நாடகாவின் சில பகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இது ஒரு முயற்சி மட்டுமே. கர்நாடகத்தில் பா.ஜனதா முன்வைத்த 'மோடி ஹை தோ மம்கின் ஹை' (மோடி இருந்தால் அனைத்தும் சாத்தியம்) என்ற முழக்கத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். ஒரு தனி நபர் அனைத்து அதிகாரங்களையும் வைத்திருப்பதை மக்கள் நிராகரிக்கிறார்கள் என்பது இதன்மூலம் தெளிவாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது.
    • வன்முறையைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் உள்ள பழைய நகர காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித்தாக்கினர். மேலும் அந்த கும்பல் சில வாகனங்களையும் சேதப்படுத்தியது.

    அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தங்கள் பலத்தை பயன்படுத்தினர். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது.

    இந்நிலையில், அகோலாவில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • கவர்னர் மற்றும் சபாநாயகரின் முடிவுகள் சட்டவிரோதம்.
    • இன்னும் 3 மாதத்தில் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும்.

    நாசிக் :

    உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று நாசிக்கில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கவர்னர் மற்றும் சபாநாயகரின் முடிவுகள் சட்டவிரோதம்.

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் இன்றி அவரது அணியை சேர்ந்த மற்ற 24 எம்.எல்.ஏ.க்களும் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள்.

    இன்னும் 3 மாதத்தில் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும். 3 மாதத்தில் ஏக்நாத் ஷிண்டே அரசு கவிழும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஷிண்டே அணியினர் கொறடா உத்தரவை மீறி உள்ளனர்.
    • அதிருப்தி அணி எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்க முடியாது.

    மும்பை :

    மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசில் நகர்புற மேம்பாட்டு துறை மந்திரியாக இருந்தவர் ஏக்நாத் ஷிண்டே. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனாவில் உத்தவ் தாக்கரேக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கி அரசை கவிழ்த்தார். பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல்-மந்திரி ஆனார்.

    உத்தவ் தாக்கரே அரசு கவிழும் முன் ஏக்நாத் ஷிண்டே உள்பட சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேருக்கு அப்போதைய துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த மராட்டிய அரசியல் நெருக்கடி தொடர்பான வழக்குகளில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கும் அடங்கும். நேற்று முன்தினம் வழக்கில் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, நிலுவையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்மானம் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் 16 எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்ட உயிர்பிச்சை தற்காலிகமானது தான். சுப்ரீம் கோர்ட்டு குறிப்பட்ட காலத்தில் தகுதி நீக்க விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளது. எனவே எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்மானத்தின் மீது சபாநாயகர் விரைவாக முடிவு எடுக்க வேண்டும்.

    முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி இருந்தால் என்னை மீண்டும் முதல்-மந்திரி பதவியில் அமர்த்தி இருக்க முடியும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தது எனக்கு திருப்தி அளிக்கிறது. தார்மீக அடிப்படையில் நான் அதை செய்தேன். மக்கள் மன்றத்தை சந்திக்க நான் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு சவால் விடுக்கிறேன்.

    என்னை சட்டசபையில் பலத்தை நிரூபிக்குமாறு கவர்னர் கூறியதே சட்டவிரோதம் என்று கோர்ட்டு கூறியுள்ளது. அப்படியெனில் தற்போது உள்ள அரசு சட்டவிரோதமானது தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது உடனிருந்த உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் அனில் பரப் கூறுகையில், "இந்த அரசு சட்டவிரோதமானது என கூறி வருகிறோம். கொறடாவின் பங்கு முக்கியமானது. அந்த நேரத்தில் கொறடாவாக எங்கள் அணியை சேர்ந்த சுனில் பிரபு இருந்தார். எனவே ஷிண்டே அணியினர் கொறடா உத்தரவை மீறி உள்ளனர்.

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் அதிக காலம் எடுத்து கொள்ளக்கூடாது. அதிருப்தி அணி எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்க முடியாது. அவர்களுக்கு குறைந்த நேரம் தான் உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க சபாநாயகர் ராகுல் நர்வேக்கருக்கு கடிதம் எழுதுவோம்" என்றார்.

    • ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 2வது இடம் பிடித்தார்.
    • அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் 357 சிக்சருடன் முதலிடத்தில் உள்ளார்.

    மும்பை:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் இந்த போட்டி தொடரில் இன்னும் எந்த அணியும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை.

    இதற்கிடையே, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 57-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரி , 2 சிக்சர்கள் அடித்தார்.

    இந்த சிக்சர் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஏ.பி.டிவில்லியர்ஸை பின்னுக்குத் தள்ளி ரோகித் சர்மா 2-வது இடம் பிடித்துள்ளார். ரோகித் சர்மா 234 போட்டியில் 252 சிக்சருடன் 2வது இடம் பிடித்துள்ளார்.

    அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் 141 போட்டியில் 357 சிக்சருடன் முதலிடத்தில் நீடிக்கிறார். டி.வில்லியர்ஸ் 170 போட்டிகளில் 251 சிக்சருடன் 3-வது இடத்தில் உள்ளார்.

    • முதலில் ஆடிய மும்பை அணி 218 ரன்களை குவித்தது.
    • அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் சதமடித்தார்.

    மும்பை:

    ஐபிஎல் கிரிகெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    மும்பை அணிக்கு இஷான் கிஷன் மற்றும் ரோகித் ஷர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் 20 பந்துகளில் 31 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா 18 பந்துகளில் 29 ரன்களை குவித்தார்.

    மூன்றாவது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 103 ரன்களை குவித்தார். இறுதியில், 20 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 218 ரன்களை குவித்தது.

    குஜராத் சார்பில் ரஷீத் கான் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 219 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரித்திமான் சகா, ஷுப்மன் கில் முறையே 2 மற்றும் 6 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 4 ரன்களுக்கு நடையை கட்டினார்.

    இவரைத் தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கர் 14 பந்துகளில் 29 ரன்களை விளாசினார். இவருடன் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் தன் பங்கிற்கு 26 பந்துகளில் 41 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பின் ராகுல் தெவாட்டியா 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

    கடைசி கட்டத்தில் ரஷீத் கான் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவர் 32 பந்தில் 10 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 79 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 9வது விக்கெட்டுக்கு ரஷித் கான், அல்ஜாரி ஜோசப் ஜோடி 88 ரன்கள் குவித்தது.

    இறுதியில், குஜராத் அணி 191 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி பெற்றது.

    மும்பை அணி சார்பில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டும், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்

    • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு திருப்தி அளிக்கிறது.
    • இன்று மகாவிகாஸ் அகாடியின் சதித்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

    மும்பை

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    மகாவிகாஸ் அகாடி தலைமையிலான ஆட்சியை மீண்டும் பதவியில் அமர்த்த சுப்ரீம் கோர்ட்டு மறுத்து உள்ளது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு திருப்தி அளிக்கிறது. இன்று மகாவிகாஸ் அகாடியின் சதித்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மராட்டிய அரசு சட்டப்படி தான் அமைக்கப்பட்டது என்பதில் இனிமேல் யாரும் சந்தேகம் கொள்ள முடியாது.

    தார்மீக உரிமை பற்றி பேச உத்தவ் தாக்கரேக்கு எந்த தகுதியும் இல்லை. 2019-ம் ஆண்டு மக்கள் பா.ஜனதா - சிவசேனா கூட்டணியை வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் அவர் மக்கள் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். எனவே தார்மீகம் பற்றி பேசுவது உத்தவ் தாக்கரேக்கு பொருந்தாது. உத்தவ் தாக்கரே தார்மீக அடிப்படையில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யவில்லை. வேறு வழியில்லாமல் பயத்தின் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சுப்ரீம் கோர்ட்டை தீர்ப்பை வரவேற்றார்.

    அவர் " சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வாய்மையின் வெற்றி. சபாநாயகர் தகுதியின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் முடிவு எடுப்பார். உத்தவ் தாக்கரே தரப்பினர் அவர்களின் திருப்திக்காக எங்களது அரசு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது என கூறி வந்தனர். அது பொய் என்பதை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. போதிய எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால் தான் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார் " என்றார்.

    • ஷிண்டே தரப்பினர் எனது கட்சிக்கும், எனது தந்தைக்கும் துரோகம் செய்தனர்.
    • சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நிலைநாட்டி உள்ளது.

    மும்பை :

    மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி தொடர்பான வழக்குகளில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. தீர்ப்பில் சபாநாயகர் ராகுல் நர்வேக்கர், ஏக்நாத் ஷிண்டே தரப்பை சேர்ந்த பாரத் கோகவலேயை சிவசேனாவின் கொறடாவாக அங்கீகரித்தது சட்டவிரோதம் என நீதிபதிகள் கூறியுள்ளனர். தீர்ப்பு தொடர்பாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-

    ஷிண்டே தரப்பினர் எனது கட்சிக்கும், எனது தந்தைக்கும் துரோகம் செய்தனர். நான் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தது சட்டப்படி தவறாக இருக்கலாம். ஆனால் தார்மீக அடிப்படையில் நான் பதவியை ராஜினாமா செய்தேன். துரோகிகளை வைத்து நான் எப்படி ஆட்சி நடத்த முடியும்?. தற்போது உள்ள முதல்-மந்திரி (ஏக்நாத் ஷிண்டே), துணை முதல்-மந்திரி (தேவேந்திர பட்னாவிஸ்) ஆகியோர் அறநெறி இருந்தால், அவர்கள் சுப்ரீம் கோர்ட்டை தீர்ப்பை அடுத்து ராஜினாமா செய்ய வேண்டும்.

    சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் ஷிண்டே அணியை சேர்ந்த பாரத் கோகவலேயை சிவசேனா கொறடாவாக நியமித்தது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்பளித்து உள்ளது, எனவே 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க முடிவில் சுனில் பிரபுவை சிவசேனா கொறடாவாக ராகுல் நர்வேக்கர் கருத வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நிலைநாட்டி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த நிதிஷ்குமார் முயற்சித்து வருகிறார்.
    • இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

    மும்பை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார்.

    மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை நிதிஷ்குமார் சந்தித்தார். அகிலேஷ் யாதவுடன் சேர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தார். அப்போது, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்ட உறுதி பூண்டனர்.

    சமீபத்தில் ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை நிதிஷ்குமார் சந்தித்தார். மேலும், ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிக்கு சென்ற நிதிஷ்குமாரும், பீகார் மாநில துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவும் முதல் மந்திரி ஹேமந்த் சோரனைச் சந்தித்துப் பேசினர்.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் சென்ற நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் உத்தவ் தாகரே மற்றும் சரத் பவார் ஆகியோரைச் சந்தித்துப் பேசினர். அப்போது பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிய்னர் ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர்.

    ×