என் மலர்
இந்தியா

ராஜ்நாத் சிங்
போர் நிறுத்தம் குறித்து ரஷியா, உக்ரைன் அதிபர்களிடம் பேசினார் பிரதமர் மோடி - ராஜ்நாத் சிங்
- உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்கவேண்டும் என அவர்களது பெற்றோர் பிரதமருக்கு கோரிக்கை விடுத்தனர்.
- வேறு எந்த நாட்டிலும் செய்யமுடியாத ஒன்றைச் செய்த பிரதமர் மோடி குறித்து நான் பெருமைப்படுகிறேன்.
அவுரங்காபாத்:
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வீர ஷிரோமணி மகாராணா பிரதாப் மகா சம்மேளனத்தில் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
உக்ரைனில் போர் நிறுத்தம் தொடர்பாக பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேசினார். தேவைப்படும்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனும் பேசினார்.
உக்ரைனில் சிக்கியிருந்த 22,000-க்கும் மேற்பட்ட மாணவர்களை மீட்கும் வகையில் போர் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் வீடு திரும்பினர். முன்னதாக மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்று அவர்களது பெற்றோர்கள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். வேறு எந்த நாட்டிலும் செய்யமுடியாத ஒன்றைச் செய்த பிரதமர் மோடி குறித்து நான் பெருமைப்படுகிறேன்.
மோடி பிரதமராக இருந்தபோது, 2014ல் 900 கோடி ரூபாயாக இருந்த இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி, தற்போது 16,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நாட்டை ஆத்மநிர்பர் (தன்னம்பிக்கை) கொண்டதாக மாற்றவேண்டும் என்ற மோடியின் வலியுறுத்தலுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.






