search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uddhav thackery"

    • வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த நிதிஷ்குமார் முயற்சித்து வருகிறார்.
    • இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

    மும்பை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார்.

    மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை நிதிஷ்குமார் சந்தித்தார். அகிலேஷ் யாதவுடன் சேர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தார். அப்போது, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்ட உறுதி பூண்டனர்.

    சமீபத்தில் ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை நிதிஷ்குமார் சந்தித்தார். மேலும், ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிக்கு சென்ற நிதிஷ்குமாரும், பீகார் மாநில துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவும் முதல் மந்திரி ஹேமந்த் சோரனைச் சந்தித்துப் பேசினர்.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் சென்ற நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் உத்தவ் தாகரே மற்றும் சரத் பவார் ஆகியோரைச் சந்தித்துப் பேசினர். அப்போது பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிய்னர் ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர்.

    • எங்களிடமிருந்து கட்சியின் பெயரையும் சின்னதையும் தேர்தல் ஆணையம் பறித்துவிட்டது.
    • ஆனால் உங்களால் சிவசேனாவை என்னிடம் இருந்து பறிக்க முடியாது என்றார்.

    மும்பை:

    சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று ரத்னகிரியில் நடந்த பொதுகூட்டத்தில் பேசியதாவது:

    எனது ஆதரவாளர்களுக்கு வழங்க என்னிடம் எதுவும் இல்லை. உங்கள் ஆசிர்வாதத்தையும் ஆதரவையும் பெற மட்டுமே இங்கே வந்துள்ளேன்.

    மக்களை முட்டாளாக்கும் போலி அமைப்பு தேர்தல் ஆணையம். அது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கைப்பாவையாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவு தவறானது.

    நீங்கள்(தேர்தல் ஆணையம்) எங்களிடமிருந்து கட்சியின் பெயரையும் சின்னதையும் பறித்துவிட்டீர்கள், ஆனால் உங்களால் சிவசேனாவை என்னிடம் இருந்து பறிக்க முடியாது. சிவசேனாவை கொடூரமாகவும், ஈவிரக்கமின்றி ஒழித்துக்கட்ட பா.ஜ.க. முயற்சி செய்கிறது.

    பா.ஜ.க.வில் முன்பு சாதுக்கள் மற்றும் சன்னியாசிகள் அங்கம் வகித்தனர். தற்போது அக்கட்சி சந்தர்ப்பவாதிகளால் நிரம்பியுள்ளது.

    அதிகமான ஊழல்வாதிகள் பா.ஜ.க.வில் தான் உள்ளனர். முதலில் அவர்கள் எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். ஆனால், ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பின்னர் பா.ஜ.க.விலேயே சேர்க்கப்படுகிறார்கள்.

    நான் வேண்டுமா அல்லது ஏக்நாத் ஷிண்டே வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். நான் மக்களின் தீர்ப்பை ஏற்றுகொள்வேன். ஆனால் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதில்லை.

    மக்கள் என்னை வேண்டாம் என்று சொன்னால் நான் வெளியேறுவேன். மகாராஷ்டிர தேர்தலில் பா.ஜ.க.வை தூள் தூளாக்க வேண்டும் என மக்களுக்கு கோரிக்கை வைக்கிறேன் என தெரிவித்தார்.

    • மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது.
    • அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி வெற்றி பெற்றுள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் உயிரிழந்தார். இதையடுத்து கடந்த 3-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிட்டார்.

    இதற்கிடையே, இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் அந்தேரி கிழக்கு தொகுதியில் உத்தவ் தாக்கரே அணி வேட்பாளர் ருதுஜா லத்கே வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, அவர் உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்நிலையில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்த வெற்றி போராட்டத்தின் ஆரம்பமாகும். இனி வரும் அனைத்துப் போராட்டங்களிலும் ஒற்றுமையாக போராட வேண்டும் என சிவ சைனியர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இந்தத் தேர்தலுக்காக எங்கள் கட்சியின் பெயரும் சின்னமும் முடக்கப்பட்டன. ஆனால் இதை விரும்பியவர்கள் தேர்தல் வளையத்திற்கு அருகில் இல்லை. இடைத்தேர்தல் முடிவுகள் மக்கள் எங்களுக்கு (உத்தவ் தரப்பு) ஆதரவளிப்பதை காட்டுகின்றன என தெரிவித்தார்.

    • நான் பேசத் தொடங்கினால் பூகம்பம் வெடிக்கும் என ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
    • உத்தவ் தாக்கரேவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசியுள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியை பிளவுபடுத்திய ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.க. ஆதரவுடன் முதல் மந்திரியாகி உள்ளார். இதனால் சிவசேனா 2 ஆக உடைந்துள்ளது.

    ஷிண்டே அணியினர் உத்தவ் தாக்கரேயை விமர்சிக்கக் கூடாது என பா.ஜ.க.வை எச்சரித்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக உத்தவ் தாக்கரே, ஷிண்டே அணி இடையே மோதல் அதிகரித்து வருகிறது.

    ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது அணியில் உள்ள சில தலைவர்கள் நேரடியாக உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரேவை விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர்.

    இந்நிலையில், நாசிக் மாவட்டம் மாலேகானில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது:

    விபத்தில் மரணம் அடைந்த சிவசேனா மூத்த தலைவர் தர்மவீருக்கு (ஆனந்த் திகே) என்ன நடந்தது என எனக்கு தெரியும். இதில் நான் சாட்சி. நான் பேட்டி கொடுக்க ஆரம்பித்தால் பூகம்பம் வெடிக்கும். சிலரை போல நான் ஆண்டுதோறும் விடுமுறைக்கு வெளிநாடு செல்வதில்லை. சிவசேனாவும், அதன் வளர்ச்சியும் மட்டுமே எனது மனதில் உள்ளது. பால்தாக்கரே மருமகள் ஸ்மிதா தாக்கரே, பேரன் நிகார் தாக்கரே எனக்கு ஆதரவு அளித்துள்ளனர். எங்களை துரோகிகள் என கூறுகிறீர்கள், முதல்மந்திரி பதவிக்காக பால் தாக்கரேவின் கொள்கையை சமரசம் செய்த உங்களை நாங்கள் எப்படி அழைப்பது?. நீங்கள் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டீர்கள். ஆனால் முதல் மந்திரியாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்தீர்கள். இது துரோகம் இல்லையா?

    அடுத்த சட்டசபை தேர்தலில் எனது தலைமையிலான சிவசேனா, பா.ஜ.க. கூட்டணி 288 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி பொய்களை பரப்பி ஆட்சியை பிடித்தார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக தாக்கி பேசினார். #Mumbai #Sivasena #UddhavThackery #PMModi
    மும்பை:

    மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசில் சிவசேனா கூட்டணி வகித்தாலும், பா.ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி பொய்களை பரப்பி ஆட்சியை பிடித்தார் என குற்றம் சாட்டி பேசினார்.

    மகாராஷ்டிரா மாநிலம் கோரேகானில் சிவசேனா கட்சியின் 52-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்தக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

    கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது, பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் அவர்களை ஆட்சியில் அமரவைத்து ஏமாற்றம் அடைந்து விட்டனர்.

    இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் பங்களாவிற்கு அருகில் மர்மமான முறையில் பறக்கும் தட்டு ஒன்றை கண்டதாக சில நிருபர்கள் செய்தி வெளியிட்டனர். அனேகமாக பிரதமர் மோடி தற்போது வேற்று கிரகங்களுக்கு தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிவிட்டார் என்று நினைக்கிறேன்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் இருந்து பாஜக வெளியேறி உள்ளது. அந்த ஆட்சி பயனற்றது என கண்டறிய பா.ஜனதாவுக்கு 3 ஆண்டுகளும், 600 ராணுவ வீரர்களின் உயிரும் தேவைப்பட்டதா?

    பயங்கரவாதத்துக்கு மதத்துடன் சம்பந்தம் இல்லை என்றால், ரம்ஜானை முன்னிட்டு காஷ்மீரில் நீங்கள் ஏன் போர் நிறுத்தம் அறிவித்தீர்கள்? விநாயகர் சதுர்த்தி அல்லது தசரா விழாக்களின் போது, பாகிஸ்தான் இதேபோன்ற கொள்கையை பின்பற்றுகிறதா? என குற்றம் சாட்டி பேசினார். #Mumbai #Sivasena #UddhavThackery #PMModi
    ×