என் மலர்
டெல்லி
- டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
- வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக டி20 தொடர் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றில் விளையாடியது. இந்த இரு தொடர்களிலும் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, பும்ரா தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டார்.
இதற்கிடையே, வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. செப்டம்பர் 19-ம் தேதி முதல் டெஸ்டும், செப்டம்பர் 27-ம் தேதி 2வது டெஸ்ட்டும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வை நீட்டிக்க பி.சி.சி.ஐ. முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடருக்காகவே அவருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது.
பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் இருந்து இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை தயார் செய்ய இந்திய அணி முடிவெடுத்துள்ளது.
இதில் அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் அந்தப் பட்டியலில் உள்ளனர். உள்ளூர் போட்டியான துலீப் டிராபியில் விளையாட இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும்.
- இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவில் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.
புதுடெல்லி:
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அவர் நாட்டு மக்களிடம் பேசியதாவது:
விமானப்படை, ராணுவம், கடற்படை மற்றும் விண்வெளித்துறை உள்பட பல துறைகளில் பெண்களின் தலைமைத்துவத்தை நாடு காண்கிறது. ஆனால், சில கவலையான சம்பவங்களும் நடைபெறுகின்றன.
இன்று செங்கோட்டையில் இருந்து எனது வலியை வெளிப்படுத்த விரும்புகிறேன். ஒரு சமூகமாக, நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். இந்தக் கோபத்தை நான் உணர்கிறேன். நாடு, சமூகம், நமது மாநில அரசுகள் இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவில் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். சமூகத்தில் நம்பிக்கையை உருவாக்க இது அவசியம்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கும்போது ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறது. ஆனால், இப்படிப்பட்ட வக்கிரமானவர்களுக்கு தண்டனை கிடைத்தால் அது செய்திகளில் பெரிதாகக் காணப்படுவதில்லை.
குற்றவாளிகள் பயப்படும் வகையில் தண்டனைகள் குறித்தும் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும் என காலம் கோருகிறது. இந்த பயத்தை உருவாக்குவது முக்கியம் என தெரிவித்துள்ளார்.
- 2014 முதல் 2024 வரை எதிர்கட்சி தலைவர் பதவியை யாரும் வகிக்க வில்லை.
- ஜூன் 25-ந்தேதி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு பெற்றார்.
டெல்லி செங்கோட்டையில் இன்று நடந்த சுதந்திர தினவிழாவில் எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி பங்கேற்றார். 10 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட முதல் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆவார்.

2014 முதல் 2024 வரை எதிர்கட்சி தலைவர் பதவியை யாரும் வகிக்க வில்லை. ஏனென்றால் எதிர்கட்சிகள் யாருக்கும் தேவையான அளவு எம்.பி.க்கள் இல்லை.
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்தியது. இதனால் ராகுல்காந்தி கடந்த ஜூன் 25-ந்தேதி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு பெற்றார்.
- தமிழக பா.ஜனதா தலைவராக அண்ணாமலையே நீடிப்பார்.
- தேசிய தலைமையும் அதைத்தான் விரும்புகிறது.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்பை மேற்கொள்ள லண்டன் செல்ல இருக்கிறார். இதனால் அவர் அதற் கான பணிகளையும் கவ னித்து வருகிறார். லண்டனில் 3 மாதம் தங்கியிருந்து, அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து படிக்க உள்ளார்.
இந்த நிலையில், அண்ணாமலை லண்டன் சென்றால், தமிழக பா.ஜ.க.வில் மாநில தலைவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி பா.ஜ.க.வினர் இடையே நிலவுகிறது.
இதுதொடர்பாக டெல்லி தலைமையும் ஆலோசனை மேற்கொண்டது. இது குறித்து பா.ஜனதா நிர்வாகிகள் கூறியதாவது:-
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந் தேதி லண்டன் செல்ல உள்ளார். ஆக்ஸ் போர்டு பல்கலைக் கழகத்தில் செப்டம்பர் 2-ந்தேதி முதல் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பை தொடங்க உள்ளார். 3 மாத காலம் லண்டனில் தங்கி இருக்கும் அவர், அங்கிருந் தபடியே, கட்சி விவகாரங்களை கவனித்துக் கொள்வார்.
2026 சட்டப்பேரவை தேர்தலிலும் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலையே நீடிப்பார். தேசிய தலைமையும் அதைத்தான் விரும்புகிறது. கட்சியின் அமைப்பு ரீதியான பணிகளை வழக்கம்போல கேசவ விநாயகம் கவனித்துக் கொள்வார்.
அடுத்த 3 மாதங்களில், தேவைப் பட்டால் பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் காணொலியில் அண்ணா மலையுடன் கலந்து ஆலோசித்து, முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.
இவ்வாறு கட்சி நிர்வாகிகள் கூறினர்.
- நாட்டுக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன்பட்டுள்ளோம்
- நாட்டு மக்கள் அகண்ட பாரதத்துக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.
புதுடெல்லி:
நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, "தேசத்திற்காக தியாகம் செய்த எண்ணற்ற தியாகிகளுக்கு இன்று அஞ்சலி செலுத்தும் நாள். இந்த நாடு அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது
பிரிட்டிஷ் அரசை எதிர்த்து 40 கோடி மக்கள் ரத்தம் சிந்தி நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தனர். இன்று 140 கோடி மக்களாக இருக்கும் நாம் ஒன்றுபட்டால் 2047 க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கலாம்.
இந்த ஆண்டும், கடந்த சில ஆண்டுகளாகவும் அதிகரித்து வரும் இயற்கை பேரிடர்கள் நம்மை கவலை கொள்ள செய்கிறது. இயற்கைப் பேரிடரில் பலர் தங்கள் குடும்ப சொந்தங்களை, சொத்துக்களை இழந்துள்ளனர். தேசமும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இன்று, அவர்கள் அனைவருக்கும் எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த நெருக்கடியான நேரத்தில் இந்த தேசம் அவர்களுடன் நிற்கிறது என்று நான் அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.
உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். நாட்டு மக்கள் அகண்ட பாரதத்துக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்
ஜல் ஜீவன் திட்டத்தால் 15 கோடி குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. நாடு முழுவது் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற சூழல் நிலவுகிறது. ஒவ்வொரு மாவட்டமும் அதன் உற்பத்தியில் பெருமை கொள்ள தொடங்கியுள்ளன" என்று தெரிவித்தார்.
- இது பிரதமர் மோடியின் 11-வது சுதந்திர தின உரையாகும்.
- மூவர்ணக்கொடியேற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
புதுடெல்லி:
இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதில் இந்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழா பிரதான விழா ஆகும். இந்த விழாவையொட்டி பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இது அவரது 11-வது சுதந்திர தின உரையாகும்.
இந்நிலையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றினார். மூவர்ணக்கொடியேற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
- இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
- பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
புதுடெல்லி:
இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதில் இந்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழா பிரதான விழா ஆகும். இந்த விழாவையொட்டி பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இது அவரது 11-வது சுதந்திர தின உரையாகும்.
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- மத்திய உள்துறை செயலாளராக இருந்து வருபவர் அஜய் பல்லா.
- இவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
புதுடெல்லி:
மத்திய அரசின் உள்துறை செயலராக அஜய்குமார் பல்லா இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், புதிய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது கோவிந்த் மோகன் கலாசாரத்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார்.
அஜய் குமாரின் பதவிக்காலம் கடந்த ஆண்டே மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ரேபரேலி தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார்.
- எதிர்க்கட்சி தலைவரான பிறகு ராகுல் காந்தி ஜனாதிபதியை சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ரேபரேலி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார்.
இந்நிலையில், சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை ராகுல் காந்தி இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார் என ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. அப்போது ஜனாதிபதிக்கு பூங்கொத்து வழங்கினார்.
எதிர்க்கட்சி தலைவரான பிறகு, ராகுல் காந்தி ஜனாதிபதியை சந்தித்துப் பேசுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- நாட்டு மக்கள் அனைவருக்கும் 78வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈன்றவர்களுக்கு இந்த நேரத்தில் நாம் அஞ்சலி செலுத்துவோம்.
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உரையாற்றி உள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
நாட்டு மக்கள் அனைவருக்கும் 78வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா இடங்களிலம் மூவர்ணக் கொடி பறப்பதைக் காணும்போது, நமது மனம் மகிழ்ச்சியில் நிறைகிறது.
நாட்டின் சுதந்திரத்திற்காக அனைத்து சமூகத்தினரும் பாடுபட்டுள்ளனர். இந்திய சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பு அளப்பரியது.
நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈன்றவர்களுக்கு இந்த நேரத்தில் நாம் அஞ்சலி செலுத்துவோம்.
நாட்டின் சுதந்திரத்திற்காக பிர்சா முண்டா தொடங்கி பல பழங்குடியின தலைவர்கள் பாடுபட்டனர்.
இந்த நேரத்தில் நமது விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்.
78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இதே வேளையில் தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவுக்கூருகிறேன்.
மற்ற பண்டிகைகளை போல சுதந்திர தினம், குடியரசு தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
- தெலுங்கானா மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த கேஷவ் ராவ் பதவியை ராஜினாமா செய்தார்.
- செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தவர் கேஷவ ராவ். இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதனைத்தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அபிஷேக் சிங்வியை வேட்பாளராக நியமித்துள்ளது. இவர் ஏற்கனவே இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தலில் போட்டியிட்டார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் மாறி வாக்களித்ததால் தோல்வியை தழுவினார்.
கேஷவ ராவ் ஆந்திர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அபிஷேக் சிங்வி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுப்பதற்கு போதுமான எம்.எல்.ஏ.-க்கள் எண்ணிக்கை காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது.
- பெண் டாக்டர் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது.
- கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என்றது.
புதுடெல்லி:
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.
கைதான சஞ்சய்ராயுடன் அந்த மருத்துவமனையில் உள்ள மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனக்கூறிய கொல்கத்தா ஐகோர்ட், மாணவி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, கொல்கத்தா பெண் டாக்டர் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில், கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சி, மருத்துவமனை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின்மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
மருத்துவ கல்லூரி போன்ற இடங்களில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை எப்படி வெளியில் படிக்க வைப்பார்கள்?
நிர்பயா வழக்குக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட கடும் சட்டங்கள்கூட இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதில் தோல்வி அடைந்தது ஏன்?
பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சம்பவங்கள் குறித்து ஒவ்வொரு கட்சியும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தீவிர விவாதங்களை நடத்தி உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அத்துடன் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.






