என் மலர்
பீகார்
- மகாபாரத சீரியல் காட்சிகளை எடிட் செய்து அதை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.
- அவரது கனவில் முழு மகாபாரதமும் எப்படி ஓடுகிறது பாருங்கள்? என்று சிலர் வேடிக்கையாக கூறி உள்ளனர்.
பாட்னா:
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனும், அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ், இன்று அதிகாலையில் டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தூங்கும்போது பகவான் கிருஷ்ணர் தனது கனவில் தோன்றி விஸ்வரூப தரிசனம் அளித்தாக ட்வீட் செய்துள்ளார்.
அந்த வீடியோவில் தேஜ் பிரதாப் யாதவ் கண்களை மூடிக்கொண்டு படுத்திருப்பதை முதலில் காண முடிகிறது. பின்னர் அவர் கனவு காண்பது போல் கண்கணை சிமிட்டுவது தெரிகிறது. அதன்பின், மகாபாரதம் சீரியலில் வருவது போல் போர்க்களத்தில் குதிரைகள் வருவது தெரிகிறது. அத்துடன் கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் தெரிகிறது. உடனே தேஜ் பிரதாப் யாதவ் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்து படுக்கையில் அமர்கிறார்.
கனவில் விஸ்வருப தரிசனம் கொடுத்ததாக கூறி, மகாபாரத சீரியல் காட்சிகளை எடிட் செய்து அதை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் தேஜ் பிரதாப் யாதவ். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் கேலி கிண்டல் செய்தவண்ணம் உள்ளனர்.
அவரது பழைய வீடியோவையும் நெட்டிசன்கள் நினைவுபடுத்தி ட்ரோல் செய்து வருகின்றனர். கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் கிருஷ்ணர் வேடமிட்டு கிருஷ்ணர் போன்று வசனம் பேசி அவர் செய்த டிக்டாக் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
அவரது கனவில் முழு மகாபாரதமும் எப்படி ஓடுகிறது பாருங்கள்? என்று சிலர் வேடிக்கையாக கூறி உள்ளனர். பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கும், அதன்பிறகு தேஜ் பிரதாப் யாதவுக்கும் எப்படி இவ்வளவு பெரிய விஸ்வரூபத்தை காட்டியிருக்கிறார்? என்று ஒருவர் கிண்டலடித்துள்ளார்.
- செல்போன்களில் பயணிகள் சிலரால் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவியது.
- தகவல்களை ஒளிபரப்பும் ஏஜென்சி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாட்னா:
பீகார் மாநிலம் பாட்னா ரெயில் நிலைய பிளாட்பாத்தில் உள்ள எல்இடி திரையில் திடீரென ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பயணிகளை முகம் சுளிக்க வைக்கும் இந்த வீடியோ சுமார் 3 நிமிடங்களுக்கு பிளே ஆகி உள்ளது. பயணிகள் சிலர் இதை தங்கள் செல்போன்களில் பதிவு செய்துள்ளனர்.
அந்த பிளாட்பாரத்தில் நின்றிருந்த பலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் வேகமாக சென்று அந்த வீடியோவை ஆப் செய்தனர்.
அதன்பின்னர், செல்போன்களில் பயணிகள் சிலரால் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவியது. முதல்வர் நிதிஷ் குமாரையும், ரெயில்வே மந்திரியையும் பயனர்கள் டேக் செய்து அந்த வீடியோவை ஷேர் செய்யத் தொடங்கினர்.
ரெயில் நிலைய எல்இடி திரைகளில் விளம்பரம் மற்றும் ரெயில்வே மற்றும் பொது தகவல்களை ஒளிபரப்பும் ஏஜென்சி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில்வேயில் வேலை வழங்கியதாக லாலு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
- விரிவான விசாரணைக்கு சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து வருகிறது.
ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லல்லு பிரசாத் யாதவ் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தபோது வேலைக்கு நிலம் என்ற மோசடியில் ஈடுபட்டு இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி தகவல்கள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சுமார் 4 ஆயிரம் பேரிடம் நிலம் பெற்றுக் கொண்டு ரெயில்வேயில் வேலை வழங்கியதாக லல்லு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுபற்றி விரிவான விசாரணைக்கு சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து வருகிறது.
- கடந்த 8-ந்தேதி ஹோலி பண்டிகையன்று சிந்துவுக்கும் அதே பகுதியை சேர்ந்த மகதோ என்ற வாலிபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
- கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் உள்ள சீதாமர்கி நகரை சேர்ந்த வாலிபர் சிந்து. 20 வயதான இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு சிந்து வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள முட்புதரில் சிந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலிலும், முகத்திலும் ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்தன.
மேலும் உடல் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்களும் இருந்தன. இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கடந்த 8-ந்தேதி ஹோலி பண்டிகையன்று சிந்துவுக்கும் அதே பகுதியை சேர்ந்த மகதோ என்ற வாலிபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விரோதத்தில் தான் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இதற்கிடையே கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்ததை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
- இதுதொடர்பான சிசிடிவி காட்சி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- மருத்துவமனைக்கு முள்வேலி அமைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை
பாட்னா:
பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டம் சதார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் சுகாதார பணியாளர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 10ம் தேதி அந்த பெண், மருத்துவமனையின் பின்பகுதியில் தனியாக சென்றபோது, திடீரென பின்னால் இருந்து வந்த நபர் வலுக்கட்டாயமாக முத்தமிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், மருத்துவமனையின் காம்பவுண்டு சுவர் மிகவும் உயரம் குறைவாக இருப்பதால் குற்றவாளிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்துவிடுவதாகவும், முள்வேலி அமைத்து மருத்துவமனைக்கு வரும் பெண்களை பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சீரியல் கிஸ்சராக இருக்கலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்பு பல பெண்களை இதுபோன்று வலுக்கட்டாயமாக முத்தமிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.
- தமிழகத்தில் ஆய்வு செய்த பீகார் அதிகாரிகள் குழுவினர் கண்டறிந்ததை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
- தமிழகத்தில் 3 அதிகாரிகள் குழு நடத்திய ஆய்வு முடிவுகளை வைத்துக்கொண்டு அரசு சும்மா இருக்க முடியாது.
பாட்னா:
தமிழகத்தில் பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமீபத்தில் போலி செய்திகள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பீகாரை சேர்ந்த குழுவினரும் இங்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பீகார் சட்டசபையில் நேற்று இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியான பா.ஜனதா எழுப்பியது. இது தொடர்பாக பேசிய எதிர்க்கட்சித்தலைவர் விஜய் குமார் சின்கா, தமிழகத்தில் ஆய்வு செய்த பீகார் அதிகாரிகள் குழுவினர் கண்டறிந்ததை அறிக்கையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, 'தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது நடந்ததாக பத்திரிகைகளில் வெளியான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பினேன். இந்த தகவல்கள் உண்மையாக இருக்கலாம் அல்லது உண்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது தொடர்பாக தமிழகத்தில் 3 அதிகாரிகள் குழு நடத்திய ஆய்வு முடிவுகளை வைத்துக்கொண்டு அரசு சும்மா இருக்க முடியாது' எனக்கூறினார்.
இந்த விவகாரத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் அரசு ஒரு அறிக்கையை சபையில் வெளியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
- ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
- எனது கட்சியினரோ, குடும்பத்தினரோ ஒருபோதும் பா.ஜ.க.வுக்கு பணிய மாட்டோம் என்றார்.
பாட்னா:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த, 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது பீகாரை சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கில் லாலு பிரசாத், அவரது மகன் மற்றும் துணை முதல் மந்திரியான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் 3 மகள்களுடன் தொடர்புடைய நாடு முழுவதும் உள்ள 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1.55 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள், 540 கிராம் தங்கம் மற்றும் 1.5 கிலோவுக்கு கூடுதலான தங்க நகைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
இதுவரை நடந்த சோதனை முடிவில் லாலு பிரசாத் குடும்பத்துடன் தொடர்புடைய வழக்கில் ஏறக்குறைய ரூ.600 கோடி அளவுக்கு பணமோசடி குற்றங்கள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எனது கட்சியினரோ, குடும்பத்தினரோ ஒருபோதும் அவர்களுக்கு (ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா) பணிய மாட்டார்கள் என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அவசரநிலைக் காலத்தின் இருண்ட பகுதியையே பார்த்தவர்கள் நாங்கள். அப்போதும் நாங்கள் போராடியிருக்கிறோம். இன்று எனது மகள்கள், பேத்திகள், கர்ப்பிணி மருமகள் ஆதாரமில்லாத பழிவாங்கும் நோக்கிலான வழக்குகளுக்காக 15 மணிநேரத்திற்கும் மேலாக காக்க வைக்கப்பட்டுள்ளனர். எங்களுடனான அரசியல் ரீதியிலான சண்டைக்காக பா.ஜ.க. இவ்வளவு கீழ்த்தரமான அளவிற்கு இறங்குமா? என்றும், மற்றொரு டுவிட்டர் பதிவில், "எனக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வுடன் கருத்தியல் ரீதியிலான போராட்டம் இருந்து வருகிறது. அது தொடரும். நான் அவர்கள் முன் ஒருபோதும் பணிந்தது இல்லை. என்னுடைய குடும்பத்தினரோ, கட்சியினரே யாரும் அவர்களின் அரசியலுக்கு முன்பு பணியமாட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.
- சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி ஆகியோரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்தனர்.
பாட்னா:
கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே துறை மந்திரியாக பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார்.
இந்த சமயத்தில் ரெயில்வே துறையில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் அதற்கு கைமாறாக குறைந்த விலைக்கு தங்கள் நிலங்களை லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு மாற்றி கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்
இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி ஆகியோரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்தனர். மேலும் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் வீட்டிலும் இந்த சோதனை நடந்தது. இந்த நிலையில் ரெயில்வே பணிக்கு நிலம் லஞ்சம் பெற்ற வழக்கில் தேஜஸ்வி யாதவ் கடந்த 4 - ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.
ஆனால் அன்று அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து தேஜஸ்வி யாதவ் இன்று பிற்பகல் பாட்னாவில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.
- தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலுவின் 3 மகள்கள் வீடுகளில் அவர்களுக்கு சொந்தமான 24 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.
- லாலு பிரசாத் யாதவ் மகள்கள் வீடுகளில் இருந்து ரூ.70 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.
பாட்னா:
லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வே பணியில் சேர அவரது குடும்பத்தினர் பெயரில் நிலம் லஞ்சமாக பெற்றது தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் லாலு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரிதேவி, அவரது மகனும் பீகார் துணை-முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலுவின் 3 மகள்கள் வீடுகள் அவர்களுக்கு சொந்தமான 24 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.
இந்த சோதனையில் லாலு பிரசாத் யாதவ் மகள்கள் வீடுகளில் இருந்து ரூ.70 லட்சம் ரொக்கப்பணம், 1 கிலோ தங்க நகைகள், 540 கிராம் தங்க கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளது.
- பீகாரில் இன்று லாலு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
- லாலு கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரெயில்வே பணியிட ஒதுக்கீட்டில் மோசடி செய்து நிலம் பெற்ற வழக்கில் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவியிடம் கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மேலும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் பீகாரில் இன்று லாலு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
பீகாரில் உள்ள முக்கிய நகரங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. லாலு கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து சோதனை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எச்சரிக்கை விடுத்தார்.
- பீகாரில் 10 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருவதாக ஏடிஜிபி கூறினார்.
பாட்னா:
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் பரவியது. இது தமிழகத்தில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. பீகார் சட்டசபையிலும் இது எதிரொலித்தது.
புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான, பொய்யான தகவல் சமூக ஊடகங்களில் சிலரால் பரப்பப்பட்டுள்ளதாகவும், இந்த பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்றும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய ஒரு நபரை பீகார் காவல்துறை கைது செய்திருப்பதாக ஏடிஜிபி ஜிதேந்திர சிங் கங்காவர் தெரிவித்தார். போலியான பதிவை வெளியிட்டவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 10 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது எனவும், ஏடிஜிபி கூறினார்.
கைது செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்த அமன் குமார் என்பது தெரியவந்துள்ளது. தவறான தகவலை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பியதாக பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அவரது செல்போனில், அதுபோன்ற பல வீடியோக்கள் இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
- 9 பேரில் நால்வருக்கு பாட்னாவில் உள்ள சிறப்பு தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
- குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரின் வீடுகளில் இன்று தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு பீகாரின் பாட்னாவில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் அருகே குண்டு வெடித்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் நால்வருக்கு பாட்னாவில் உள்ள சிறப்பு தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்த நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரின் வீடுகளில் இன்று தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது. பாட்னாவில் முகமது சினான், இக்பால், சர்பாஸ் நவாஸ், நெவுபல் ஆகியோர் வீடுகளில் இந்த சோதனை நடந்தது. இவர்கள் வெடிகுண்டுகளை வைப்பதற்கு நிதியுதவி செய்ததாக கூறப்படுகிறது.






