என் மலர்tooltip icon

    அசாம்

    • சரணாலயத்தில் இருந்து ஒரு யானை தனியாக வெளியேறி 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளது.
    • பிஸ்கெட் பாக்கெட்டுகள் மற்றும் இனிப்புகளை எடுத்து சாப்பிட்ட யானையின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள அம்சாங் வன விலங்கு சரணாலயத்தில் ஏராளமான யானைகள் உள்ளது. இந்த சரணாலயத்தில் இருந்து ஒரு யானை தனியாக வெளியேறி 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளது.

    பின்னர் அந்த யானை சத்கான் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று பிஸ்கெட் பாக்கெட்டுகள் மற்றும் இனிப்புகளை எடுத்து சாப்பிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    வீடியோக்களை பார்த்து ரசித்த இணைய பயனர்கள் ஜம்போ தனது இனிமையான பசியை தீர்த்துக் கொண்டது என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.




    • பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் பைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • கடந்த மாதம் கவுகாத்தியின் கர்குலி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    அசாம் மாநிலம் கவுகாத்தியின் ராஜ்கர் பகுதியில் இன்று குடிநீர் வாரியத்தின் பைப்லைன் திடீரென உடைந்தது. கவுகாத்தி வர்த்தகக் கல்லூரி ஆர்.ஜி.பருவா சாலைக்கு அருகில் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்வீழ்ச்சி போன்று தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி, அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. தண்ணீர் அதிக அளவில் சாலையில் வீணாக சென்றது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் பைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் கடந்த மாதம் கவுகாத்தியின் கர்குலி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • போகோ நகர் அருகே சிங்ரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டது.
    • இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல் பகுதியில் இருந்து சரக்கு ரெயில் ஒன்று அசாமின் காம்ரூப் பெருநகர மாவட்டத்தில் உள்ள திதெலியா நகருக்கு நிலக்கரி ஏற்றி சென்றுக் கொண்டிருந்தது.

    இந்நிலையில், இந்த ரெயில், போகோ நகர் அருகே சிங்ரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டது.

    இதில், 20 பெட்டிகள் தடம் புரண்டன. மொத்தம் 60 பெட்டிகள் கொண்ட அந்த சரக்கு ரெயிலின் மத்திய பகுதியில் இருந்த பெட்டிகளே தடம் புரண்டு உள்ளன.

    இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என்றும்  சீரமைப்பு பணிகள் நடைபெற்று ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • அந்தமான் நிகோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மற்றும் பூஞ்ச் பகுதிகளிலும், டெல்லி என்.சி.ஆர். பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் சோனித்பூர் பகுதியில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 அக பதிவானது. இன்று காலை 8 மணியளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. 15 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

    இதேபோல் அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலை 7.48 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது. டிக்லிபூருக்கு கிழக்கே 137 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மற்றும் பூஞ்ச் பகுதிகளிலும், டெல்லி என்.சி.ஆர். பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.

    • அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள ஜலுக்பரி பகுதியில் நேற்று நள்ளிரவில் சாலை விபத்து நடந்தது.
    • பலியானவர்கள் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள ஜலுக்பரி பகுதியில் நேற்று நள்ளிரவு இந்த சாலை விபத்து நடந்தது. இந்த விபத்தில் இறந்த 7 பேருமே மாணவர்கள் ஆவர்.

    விபத்தில் பலியான மாணவர்களின் பெயர் மற்றும் அவர்களின் சொந்த ஊர் பற்றிய விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. அவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டது.
    • இதன் காரணமாக அசுர வேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தது.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் டிமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள நீர் மின் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய் வெடித்தது.

    இந்நிலையில், குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான அந்த பைப் லைனில் இன்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அசுர வேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தது.

    தண்ணீர் பாய்ந்த வேகத்தில் சிக்கிய 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். தண்ணீரின் வேகத்தால் அருகில் இருந்த வீடுகளுக்கும், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கும் சேதம் ஏற்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். வீணாக கொட்டிக் கொண்டிருந்த தண்ணீரை தற்காலிகமாக நிறுத்தினர்.

    குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பால் பாய்ந்த தண்ணீரில் சிக்கி 2 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • அசாம் அரசு மே 25 அன்று வெற்றி பெற்ற 44,703 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை விநியோகிக்கவுள்ளது.
    • கவுகாத்தியில் உள்ள கானாபராவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை அசாமின் கவுகாத்திக்கு வருகை தர உள்ளதால், அம்மாநில தலைநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், அங்கு அசாம் அரசு பல்வேறு அரசுத் துறைகளில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கிட்டத்தட்ட 45,000 பணி நியமனக் கடிதங்களை விநியோகிக்கப்படுகிறது.

    ஒரு லட்சம் அரசு வேலைகளை வழங்குவதற்கான தனது உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், அசாம் அரசு மே 25 அன்று வெற்றி பெற்ற 44,703 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை விநியோகிக்கவுள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்க இருக்கும் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியை கவுகாத்தியில் உள்ள கானாபராவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், "வெற்றி பெற்ற 44,703 விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்வார். அதே நாளில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்திற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டுவார்" என்றார்.

    மாநில அரசின் 22765 பதவிகளுக்கான கூடுதல் விளம்பரங்களை இந்த ஆண்டு ஜூலை மாதம் மாநில அரசு வெளியிடும் என்றும் அசாம் முதல்வர் கூறினார்.

    • இந்தாண்டு இறுதிக்குள் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்படும் என அசாம் முதல் மந்திரி தெரிவித்தார்.
    • இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

    கவுகாத்தி:

    வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மேகாலயாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஏ.எப்.எஸ்.பி.ஏ. எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை அமல்படுத்தியது. இச்சட்டத்தின்படி ராணுவத்தினர் எந்த இடத்திலும் சோதனை நடத்துவதுடன் யாரையும் வாரன்ட் இன்றி கைது செய்யலாம்.

    இந்தச் சட்டத்தை ரத்து செய்ய அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில், அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா கூறுகையில், மக்களின் கோரிக்கையின்படி மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் இந்தாண்டு நவம்பர் இறுதிக்குள் திரும்ப பெறப்படும். மத்திய ஆயுத போலீஸ் படைகளுக்கு பதிலாக அசாம் போலீஸ் பட்டாலியன் செயல்படுவார்கள். எனினும், சட்டத்தின்படி மத்திய ஆயுத போலீஸ் படைகளும் இருப்பார்கள் என தெரிவித்தார்.

    • ஆசிரியர்கள் சட்டை, பேண்ட்களிலும், ஆசிரியைகள் சேலை, சுடிதார் மட்டும் அணிந்து கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
    • ஆசிரியர்கள் இருவரும் கண்ணியமான வகையில், தூய்மையான மற்றும் மென்மை நிறம் கொண்ட உடைகளை அணிய வேண்டும்.

    அசாம் மாநிலத்தில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பள்ளி ஆசியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆசிரியர்- ஆசிரியைகள் ஜீன்ஸ், லெக்கின்ஸ், டீ சர்ட் போன்ற ஆடைகள் அணிந்து வர முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்கள் சட்டை, பேண்ட்களிலும், ஆசிரியைகள் சேலை, சுடிதார் மட்டும் அணிந்து கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் இருவரும் கண்ணியமான வகையில், தூய்மையான மற்றும் மென்மை நிறம் கொண்ட உடைகளை அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அசாம் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு ஆசிரியர் தனது கடமையை செய்யும் போது அனைத்து விதமான கண்ணியத்திற்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பணியிடத்தில் நல்லொழுக்கம், கண்ணியம், தொழில்முறை மற்றும் வேலையின் நோக்கம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஆடைகளை அணிய வேண்டியது அவசியமாகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விபத்து நடப்பதற்கு முந்தின நாள், பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா மீது லஞ்சம் வாங்கியதாக நகோன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா சென்ற கார் மீது மோதிய கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அசாம் மாநில காவல்துறையில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஜூன்மோனி ரபா.

    பணிபுரிந்த அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதில் கெட்டிக்காரர். மேலும் எந்த சவாலையும் சமாளித்து, குற்றவாளிகளை துணிச்சலாக பிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பார்.

    இதனால் அசாம் காவல்துறையில் இவரை லேடி சிங்கம் என்றும் இந்தி படத்தில் வருவது போல தபாங் காப் என்றும் பொதுமக்களால் அழைக்கப்பட்டார்.

    இதனால் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபாவிற்கு கிடைக்கும் பாராட்டு உயர் அதிகாரிகள் சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா நேற்று அதிகாலை ஒரு காரில் அப்பர் அசாம் நோக்கி சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி, கார் மீது மோதியது. இதில் காரில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா, உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா சென்ற கார் மீது மோதிய கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த லாரி உத்தரபிரதேச மாநில பதிவெண் கொண்டது. அதனை ஓட்டி வந்த டிரைவர் விபத்து நடந்ததும், கண்டெய்னரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே விபத்து நடப்பதற்கு முந்தின நாள், பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா மீது லஞ்சம் வாங்கியதாக நகோன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரது வீட்டுக்கு சோதனைக்கு சென்ற போலீசார், வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் பணத்தை கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

    இதுபற்றி பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபாவின் உறவினர்கள் கூறும்போது, ஜூன்மோனி ரபாவின் சாவில் மர்மம் உள்ளது. அவர் கார் மீது கண்டெய்னரை ஏற்றி கொலை செய்துள்ளனர். மேலும் அவர் மீது வேண்டுமென்றே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    வீட்டில் இருந்த பணத்துக்கு உரிய கணக்கு உள்ளது. அதனை போலீசார் ஏற்கவில்லை. மாறாக அவர் மீது வேண்டுமென்றே வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே இந்த வழக்கை நேர்மையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரியுள்ளனர்.

    இதுபற்றி அசாம் முதல்-மந்திரி ஹிமாந்த் பிஸ்வசுக்கும் உறவினர்கள் மனு அனுப்பி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் பணமில்லா மருத்துவ சிகிச்சை.
    • முதல் கட்டமாக சுமார் 26 லட்சம் குடும்பங்களை உள்ளடக்கும் மற்றும் படிப்படியாக எண்ணிக்கை 32 லட்சமாக உயர்த்தப்படும்.

    அசாம் மாநிலத்தில் பொது மக்கள் பயனடையும் வகையில் இலவச சுகாதார திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது அரசாங்கம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நேற்று 'ஆயுஷ்மான் அசோம் - முக்ய மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டம் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் பணமில்லா மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது.

    ரொக்கமில்லா மருத்துவ சிகிச்சை திட்டத்தில், "முதல் கட்டமாக சுமார் 26 லட்சம் குடும்பங்களை உள்ளடக்கும் மற்றும் படிப்படியாக எண்ணிக்கை 32 லட்சமாக உயர்த்தப்படும்" என்று அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், திட்ட தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஹிமந்த சர்மா கூறியதாவது:-

    சமூகத்தில் கடைசி நபரின் எழுச்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் இடைவிடாத 'அந்தியோதயா' நாட்டமே 'முக்ய மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா'க்கு ஊக்கமளிக்கும் காரணியாக அமைந்துள்ளது. சில வரம்புகள் காரணமாக, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த பல குடும்பங்கள் 'பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' திட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டன. இது பணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்க வழி வழங்குகிறது.

    புதிய திட்டமானது, விடுபட்ட குடும்பங்களுக்கும் இதேபோன்ற பணமில்லா சுகாதாரப் பலன்களையும் உறுதி செய்யும். சுகாதாரத் துறையை மேம்படுத்துவது தனது அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்று. ஆகஸ்ட் 15 முதல் அசாம் அரசு ஊழியர்களுக்கு 'முக்யா மந்திரி லோக் சேவா ஆரோக்கிய யோஜனா' திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்தீப் குமாருக்கு மனைவி மற்றும் ஒரு வயது மகன் உள்ளனர்.
    • சம்பவம் குறித்த உண்மைகளை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அசாம் மாநிலம் தர்ராங் களத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது குண்டுவெடித்து சந்தீப் குமார் என்கிற ராணுவ வீரர் உயிரிழந்தார். நேற்று ரேஞ்சில் காவல் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    குண்டுவெடி விபத்தில் சந்தீப் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, ரேஞ்சில் இருந்த மருத்துவ அதிகாரி மூலம் அவருக்கு உடனடியாக மருத்துவ முதல் உதவி வழங்கப்பட்டது.

    பின்னர் அவர் குவாஹாட்டியில் உள்ள மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சந்தீப் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்தீப் குமாருக்கு மனைவி மற்றும் ஒரு வயது மகன் உள்ளனர்.

    ராணுவ வீரரை இழந்து வாடும் குடும்பத்தினருடன் உறுதுணையாக இருப்பதாகவும், சம்பவம் குறித்த உண்மைகளை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×