என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜீன்ஸ்"

    • சாந்தா குரூஸ் ஓட்டல் அறையில் சந்தியாவின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து தப்பினார்.
    • தப்பி சென்றபோது விபத்தில் சிக்கி வினோத் படுகாயமடைந்தார்.

    மும்பையை சேர்ந்த வினோத் குமார் என்ற 34 வயது நபர் சந்தியா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

    சந்தியா ஜீன்ஸ், டி-சர்ட் ஆடை அணிவதும் மற்ற மற்ற ஆண்களுடன் பேசுவதும் வினோத் குமாருக்கு துண்டாக பிடிக்கவில்லை.

    இதனால் சந்தியாவுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்த வினோத் கடந்த 2019 அக்டோபரில் சாந்தா குரூசில் ஒரு ஓட்டல் அறையில் வைத்து சந்தியாவின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து தப்பினார்.

    ஆனால் தப்பி சென்றபோது விபத்தில் சிக்கி வினோத் படுகாயமடைந்தார். சிகிச்சைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. சந்தியா ஜீன்ஸ், பேன்ட், டி-சர்ட் அணிவது, மற்றவர்களிடம் பேசுவது ஆகிவற்றால் வினோத் குமார் வெறுப்புடன் இருந்ததை சாட்சியங்கள் வெளிப்படுத்தின.

    இந்நிலையில் நேற்று விசாரணை நிறைவில் வினோத்குமார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

    • ஆசிரியர்கள் சட்டை, பேண்ட்களிலும், ஆசிரியைகள் சேலை, சுடிதார் மட்டும் அணிந்து கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
    • ஆசிரியர்கள் இருவரும் கண்ணியமான வகையில், தூய்மையான மற்றும் மென்மை நிறம் கொண்ட உடைகளை அணிய வேண்டும்.

    அசாம் மாநிலத்தில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பள்ளி ஆசியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆசிரியர்- ஆசிரியைகள் ஜீன்ஸ், லெக்கின்ஸ், டீ சர்ட் போன்ற ஆடைகள் அணிந்து வர முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்கள் சட்டை, பேண்ட்களிலும், ஆசிரியைகள் சேலை, சுடிதார் மட்டும் அணிந்து கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் இருவரும் கண்ணியமான வகையில், தூய்மையான மற்றும் மென்மை நிறம் கொண்ட உடைகளை அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அசாம் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு ஆசிரியர் தனது கடமையை செய்யும் போது அனைத்து விதமான கண்ணியத்திற்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பணியிடத்தில் நல்லொழுக்கம், கண்ணியம், தொழில்முறை மற்றும் வேலையின் நோக்கம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஆடைகளை அணிய வேண்டியது அவசியமாகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×