என் மலர்
இந்தியா

காதலி ஜீன்ஸ் பேண்ட் அணிவது பிடிக்காமல் கழுத்தை நெரித்துக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
- சாந்தா குரூஸ் ஓட்டல் அறையில் சந்தியாவின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து தப்பினார்.
- தப்பி சென்றபோது விபத்தில் சிக்கி வினோத் படுகாயமடைந்தார்.
மும்பையை சேர்ந்த வினோத் குமார் என்ற 34 வயது நபர் சந்தியா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார்.
சந்தியா ஜீன்ஸ், டி-சர்ட் ஆடை அணிவதும் மற்ற மற்ற ஆண்களுடன் பேசுவதும் வினோத் குமாருக்கு துண்டாக பிடிக்கவில்லை.
இதனால் சந்தியாவுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்த வினோத் கடந்த 2019 அக்டோபரில் சாந்தா குரூசில் ஒரு ஓட்டல் அறையில் வைத்து சந்தியாவின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து தப்பினார்.
ஆனால் தப்பி சென்றபோது விபத்தில் சிக்கி வினோத் படுகாயமடைந்தார். சிகிச்சைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. சந்தியா ஜீன்ஸ், பேன்ட், டி-சர்ட் அணிவது, மற்றவர்களிடம் பேசுவது ஆகிவற்றால் வினோத் குமார் வெறுப்புடன் இருந்ததை சாட்சியங்கள் வெளிப்படுத்தின.
இந்நிலையில் நேற்று விசாரணை நிறைவில் வினோத்குமார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.






