என் மலர்
ஆந்திர பிரதேசம்
- விநாயக் தனிப்பட்ட நபர்களின் விவரங்களை திருடி அதை கிளவுட் டிரைவ் லிங்க் மூலம் வெவ்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.
- விநாயக் பகத்வாஜை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 2 செல்போன்கள், 2 லேப்டாப்கள், தனிப்பட்ட தரவுகள் அடங்கிய கருவிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பதி:
நாடு முழுவதும் 24 மாநிலங்கள், 8 மெட்ரோ நகரங்களை சேர்ந்த 66 கோடியே 90 லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்பனை செய்ததாக விநாயக் பகத்வாஜ் என்பவரை தெலங்கானா மாநில சைபராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள், பான் கார்டு வைத்துள்ளோர், 9,10,11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், மூத்த குடிமக்கள், டெல்லி மின்வாரியத்துறை வாடிக்கையாளர்கள், டி-மார்ட் கணக்கு வைத்துள்ளோர், தனி நபர்களின் செல்போன் எண்கள், நீட் மாணவர்கள், பெரும் பணக்காரர்கள், இன்சூரன்ஸ் கணக்கு வைத்துள்ளோர், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு கணக்கு வைத்துள்ளோரின் தனிப்பட்ட தகவல்களை விநாயக் பகத்வாஜ் திருடியுள்ளார்.
அரியானா மாநிலம் பரிதாபாத் நகரில் இருந்து செயல்பட்டு வரும் இன்ஸ்பயர்வெப்ஸ் என்ற இணையதளம் மூலம் விநாயக் தனிப்பட்ட நபர்களின் விவரங்களை திருடி அதை கிளவுட் டிரைவ் லிங்க் மூலம் வெவ்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.
விநாயக் பகத்வாஜை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 2 செல்போன்கள், 2 லேப்டாப்கள், தனிப்பட்ட தரவுகள் அடங்கிய கருவிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 1-9 ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் அரை நாள் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
- காலை 7.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
அமராவதி:
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பின்பற்றப்படும் நடைமுறையைப் போன்று இந்த ஆண்டும் ஆந்திராவில் வரும் 3-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 7.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். இந்த மாதம் 30-ம் தேதி பள்ளி கடைசி வேலை நாளாகும். ஏப்ரல் 2-வது சனிக்கிழமை வழக்கமாக விடுமுறை விடப்படும். ஆனால் இந்த ஆண்டு 2-வது சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலத்தை முன்னிட்டு பள்ளிகளில் கிராம பஞ்சாயத்துகளின் ஆதரவுடன் போதுமான குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி ஆணையர் எஸ் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
திறந்த வெளியிலோ அல்லது மரத்தடியிலோ வகுப்புகளை நடத்துவதைத் தவிர்க்குமாறும் எச்சரித்துள்ள அவர் மதிய உணவுடன் மோர், பால் வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
- சுரேஷுக்கும் வினித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- படுகாயம் அடைந்த சுரேஷ் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பெஜவாடா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி அருணா. தம்பதிக்கு வினித், ஆகாஷ் என 2 மகன்கள் உள்ளனர். வினித் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறினார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
இதில் விரக்தி அடைந்த வினித் வீட்டை விட்டு வெளியேறினார். இளைய மகன் ஆகாஷ் இன்டர்மீடியட் முடித்துவிட்டு பெற்றோருடன் வசித்து வந்தார்.
வீட்டை விட்டு வெளியே சென்ற வினித் 6 மாதத்திற்கு ஒரு முறை பெற்றோரை பார்த்து விட்டு செல்வது வழக்கம். வினித் வீட்டிற்கு வரும்போது எல்லாம் கணவன் மனைவி இடையே சண்டை அதிகரித்து வந்தது.
அப்போது அருணா தனது கணவரிடம் வினீத்தை சிறு வயது முதலே பெண்கள் செய்யும் வேலையை செய்ய சொன்னதால் திருநங்கையாக மாறிவிட்டான் என சண்டையிட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வினித் பெற்றோரை பார்க்க வீட்டிற்கு வந்தார். அப்போது சுரேஷுக்கும் வினித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வினித் தந்தையை சரமாரியாக தாக்கி விட்டு சென்றார். பின்னர் மாலை அருணாவுக்கும், சுரேஷுக்கும் மீண்டும் தகராறு நடந்தது. தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த 2-வது மகன் ஆகாஷ் தனது தாயுடன் சேர்ந்து தந்தையை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சுரேஷின் அண்ணன் ரமேஷுக்கு போன் செய்த அருணா கணவர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்து மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாக தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த ரமேஷ், சுரேஷ் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சுரேசை அடித்துக் கொலை செய்துவிட்டதாக போலீசில் புகார் செய்தார்.
சந்தேகத்தின் பேரில் அருணா மற்றும் அவரது மகன் ஆகாஷை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவரை அடித்து கொலை செய்ததாக அருணா ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் தாய், மகன் 2 பேரையும் கைது செய்தனர்.
- திருமணம் நடந்த ஒரே நாளில் சலபதியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை கண்ட மாணவி அதிர்ச்சியடைந்தார்.
- சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சலபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் சலபதி (வயது 33). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். அதே கல்லூரியில் 17 வயது மாணவி ஒருவர் இன்டர் மீடியட் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
மாணவியிடம் சலபதி நெருக்கமாக பழகினார். உன்னை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன் என அவரிடம் ஆசை வார்த்தை கூறினார். அவரது பேச்சில் மாணவி மயங்கினார்.
கடந்த புதன்கிழமை இறுதி தேர்வு எழுதிய மாணவியை பேராசிரியர் திருப்பதிக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து மாணவிக்கு தாலி கட்டினார்.
திருமணம் நடந்த ஒரே நாளில் சலபதியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை கண்ட மாணவி அதிர்ச்சியடைந்தார். மேலும் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் தனது மகளை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று திருமணம் செய்ததாக பேராசிரியர் மீது கங்காவரம் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சலபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாணவர்களுக்கு நல்ல போதனைகளை வழங்க வேண்டிய பேராசிரியர் ஒருவரே மாணவியை ஏமாற்றி அழைத்துச் சென்று திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 16-ந்தேதி பாஷ்யங்கார் உற்சவம் தொடக்கம்.
- 23-ந்தேதி அட்சய திருதியை உற்சவம் நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் நடக்கும் விழாக்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஏப்ரல் 1-ந்தேதி சர்வ ஏகாதசி, 15-வது பாலகாண்ட அகண்ட பாராயணம் தொடக்கம், 3-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை வருடாந்திர வசந்தோற்சவம், 6-ந்தேதி தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம், பவுர்ணமி கருடசேவை, 16-ந்தேதி பாஷ்யங்கார் உற்சவம் தொடக்கம், 23-ந்தேதி அட்சய திருதியை, 25-ந்தேதி பாஷ்யங்கார் சாத்துமுறை, ராமானுஜர் ஜெயந்தி, சங்கர ஜெயந்தி, அனந்தாழ்வார் உற்சவம் தொடக்கம், 29-ந்தேதியில் இருந்து மே மாதம் 1-ந்தேதி வரை பத்மாவதி பரிணய உற்சவம்.
மேற்கண்ட விழாக்கள் நடக்கின்றன.
- 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
- தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் பிணங்களை மீட்டனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அனந்தபுரம், புறநகர் பகுதியான ரங்கசாமி நகரை சேர்ந்தவர் ரபி பெல்தாரி (வயது 35). இவரது மனைவி பானு. தம்பதிக்கு இம்ரான் (9),சோஹைல் (6) என இரண்டு மகன்கள் இருந்தனர். பானு டெய்லரிங் கடை நடத்தி வருகிறார். ரபிக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
கடந்த மாதம் இந்துபுரத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்தில் ரபி மற்றும் அவரது தாயார் கலந்து கொண்டனர். திருமண விழா முடிந்து ரபி வீட்டிற்கு வந்தபோது அவரது மனைவி பானு வேறு ஒரு நபருடன் தனிமையில் இருந்தார். இதனை ரபி பார்த்துவிட்டார்.
வேறு ஒரு நபருடன் உள்ள கள்ளத்தொடர்பை துண்டிக்குமாறு மனைவியிடம் கூறினார்.ஆனால் அவர் கள்ளத்தொடர்பை கைவிடாததால் மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. ரபி மனைவியை சரமாரியாக தாக்கினார்.
பின்னர் தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கணவர் மற்றும் குழந்தைகளை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பானு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பொக்கராய செருவு என்ற இடத்தில் உள்ள ஏரியில் ரபி மற்றும் அவரது 2 குழந்தைகளின் பிணம் மிதந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் பிணங்களை மீட்டனர். போலீசாரின் விசாரணையில் 2 குழந்தைகளை ஏரியில் வீசி கொன்றுவிட்டு ரபி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
ரபியின் சட்டை பையில் இருந்து 2 கடிதங்களை போலீசார் மீட்டனர்.
மனைவியின் நடத்தை சரியில்லாததால் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்கிறேன். கணவர் குழந்தைகள் உள்ள போது வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பது சரியா? அந்த விஷயம் என்னை நோகடித்து விட்டது.
எங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் நாங்கள் 3 பேரும் செல்கிறோம். உனக்கு பிடித்த நபருடன் மகிழ்ச்சியாக இரு என உருக்கமாக ரபி எழுதி இருந்தார். பின்னர் 3 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கொலை குறித்து சங்கீதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏத்தூர்நகரம் எரவாடா பகுதியை சேர்ந்தவர் ராமதேங்கி ஸ்ரீனிவாஸ். இவர் தனது உறவினரான சங்கீதா என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார்.
ஸ்ரீனிவாஸ் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து சங்கீதாவுக்கு தொந்தரவு கொடுத்து வந்தார்.
இதனால் ஸ்ரீனிவாஸ் மீது சங்கீதா போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஸ்ரீனிவாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜெயிலுக்கு சென்ற பிறகும் அவரது நடத்தையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
சிறையில் இருந்து வெளியே வந்த பின்னரும் சங்கீதாவிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.
இந்நிலையில் மது அருந்திவிட்டு குடிபோதையில் சங்கீதாவிடம் தவறாக நடக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா ஸ்ரீனிவாசிடம் தட்டிகேட்டார். அவர் தொடர்ந்து எல்லை மீறினார். இதனால் தொல்லை தாங்க முடியாத சங்கீதா, ஸ்ரீனிவாசின் கைகளை கட்டி வீட்டிலிருந்த கத்தியால் அவரை குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ரீனிவாஸ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
பின்னர் நேராக போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீனிவாசின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து சங்கீதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நகை பணத்தை போலீஸ் நிலையத்தில் உள்ள பீரோவில் வைத்து பெண் போலீஸ் ஒருவரை நகைகளை பாதுகாக்க நியமித்தார்.
- நகை பணம் காணாமல் போனது குறித்து கர்னூல் போலீஸ் சூப்பிரண்டு சித்தார்த் கவுசலுக்கு தெரிவிக்கப்பட்டது.
திருப்பதி:
சென்னையை சேர்ந்த நகை வியாபாரிகள் சந்தான பாரதி, மணிகண்டன். இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதி ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 105 கிலோ எடை உள்ள ரூ 75 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகள் மற்றும் ரூ 2.04 லட்சத்தை காரில் சென்னைக்கு கொண்டு வந்தனர்.
அப்போது சிறப்பு அமலாக்க துறை அதிகாரிகள் பஞ்ச காலா சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அந்த வழியாக வந்த தமிழக வியாபாரிகளின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் கொண்டுவரப்பட்ட 105 கிலோ வெள்ளி நகைகள், ரூ 2.04 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி நகைகள் மற்றும் பணத்திற்கு உண்டான ஆவணங்களை அமலாக்க துறை அதிகாரிகள் தமிழக வியாபாரிகளிடம் கேட்டனர் ஆனால் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் நகை பணத்தை பறிமுதல் செய்து கர்னூல் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்ரம சிம்மனிடம் ஒப்படைத்தனர்.
இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்யவில்லை நகை, பணத்திற்கு உண்டான எந்த தகவலையும் அங்குள்ள பதிவேட்டில் பதியவில்லை. நகை பணத்தை போலீஸ் நிலையத்தில் உள்ள பீரோவில் வைத்து பெண் போலீஸ் ஒருவரை நகைகளை பாதுகாக்க நியமித்தார்.
கடந்த 2ஆண்டுகளில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தாலுகா போலீசில் வேலை செய்து வெவ்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். தற்போது ராமலிங்கய்யா என்பவர் இன்ஸ்பெக்டராக உள்ளார்.
இந்த நிலையில் சென்னை வியாபாரிகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின் படி நகை பணத்தை பெறுவதற்காக கர்னூல் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். நகை பணத்தை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த வெள்ளி நகைகள் மற்றும் பணம் காணாமல் போனது தெரியவந்தது.
நகை பணம் காணாமல் போனது குறித்து கர்னூல் போலீஸ் சூப்பிரண்டு சித்தார்த் கவுசலுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நகை பணம் காணாமல் போனது குறித்து கடந்த 2021 முதல் போலீஸ் நிலையத்தில் வேலை செய்த காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் நகை பணத்தை பாதுகாக்க நியமிக்கப்பட்ட பெண் போலீஸ் அதே போலீஸ் நிலையத்தில் வேலை செய்யும் ஆண் போலீஸ் ஒருவர் உதவியுடன் நகை பணத்தை திருடிக் கொண்டு ஆட்டோவில் எடுத்துச் சென்று கர்னூலில் உள்ள ஒரு நகைக்கடையில் நகைகளை விற்பனை செய்தனர்.
பின்னர் வெள்ளி நகைகளுக்கு பதிலாக 30 பவுன் நகைகளை வாங்கி உள்ளனர். மேலும் நகைகள் விற்பனை செய்யப்பட்ட பணத்தில் சொகுசு கார் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பெண் காவலர் வீட்டிற்கு சென்ற போது அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மாயமானது தெரியவந்தது. நகை பணத்தை எடுத்துச் செல்ல உதவி செய்ததாக ஆட்டோ டிரைவரையும், திருட்டு நகைகளை வாங்கியதாக நகைக்கடை உரிமையாளரையும் போலீசார் கைது செய்தனர்.
டி.எஸ்.பி. மகேஷ் தலைமையில் 3 தனிப்படைகள் மூலம் மாவட்ட எல்லைகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சொகுசு காரில் வந்த பெண் போலீஸ் மற்றும் அவருக்கு உதவிய ஆண் போலீஸ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
நகைகளை பாதுகாக்க வேண்டிய போலீஸ் ஒருவரே நகைகளை திருடி சென்று விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கோடைக் காலம் என்பதால் பக்தர்களின் வருகைக்காக பனை ஓலை கொண்டு நிழற்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
- தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் தனகு மண்டல் துவா பகுதியில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டம் காரணமாக பல்வேறு பூஜை ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
கோடைக் காலம் என்பதால் பக்தர்களின் வருகைக்காக பனை ஓலை கொண்டு நிழற்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென பந்தல் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்க முயன்ற நிலையில் தீ கோவில் முழுவதும் பரவியது.
இதனால் கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினை சேர்ந்த ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- இரவு ராம நவமி ஆஸ்தானம் கடைபிடிக்கப்படும்.
- நாளை ஸ்ரீராமர் பட்டாபிஷேக ஆஸ்தானம் நடக்கிறது.
திருமலையில் ஆண்டு தோறும் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு 2 நாட்களுக்கு திருவிழா நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஸ்ரீராம நவமி கொண்டாடப்பட்டது.
இதை யொட்டி இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை திருமலையில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் உற்சவர்களான சீதாதேவி, ஸ்ரீராமர், லட்சுமணர் மற்றும் அனுமனுக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை திருமலையில் அனுமன் வாகனத்தில், ஸ்ரீராமர் அலங்காரத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இரவு ராம நவமி ஆஸ்தானம் கடைபிடிக்கப்படும். நாளை இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீராமர் பட்டாபிஷேக ஆஸ்தானம் கோவில் தங்க வாசல் அருகே நடைபெற உள்ளது.
- ராமநவமி விழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
- தெப்போற்சவம் 3-ந்தேதி தொடங்கி 5-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) ராமநவமி விழா தொடங்கி ஏப்ரல் 1-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி இன்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ராமச்சந்திரமூர்த்திக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 3 மணிக்கு ராமநவமி ஆஸ்தானம், இரவு 7.00 மணிக்கு ராமர், அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை முத்து மாலைகள் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலக கட்டிடத்தில் இருந்து கோவிலுக்கு யானை மீது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சீதா-ராமர் திருக்கல்யாணம் நடக்கிறது.
நாளை மறுநாள் ஏப்ரல் 1-ந்தேதி காலை 8 மணிக்கு திருப்பதியில் உள்ள நரசிம்ம தீர்த்தத்தில் இருந்து கோவில் வரை மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க தீர்த்தம் எடுத்து வரப்பட்டு ராமருக்கு சதுர்தஷ கலச திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை ராமருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து தங்கத்3-ந்தேதி திருச்சி வாகனத்தில் சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இந்த கோவிலில் தெப்போற்சவம் வருகிற 3-ந்தேதி தொடங்கி 5-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி அங்குள்ள ராமச்சந்திர புஷ்கரணியில் தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை உற்சவர்கள் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
- தங்களது பெயர்களை வெளியிட விரும்பாத சில பக்தர்கள் காணிக்கையை ஆன்லைனில் செலுத்தி உள்ளனர்.
- பணம் செலுத்தியவர்களின் விவரம் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தெரியவில்லை.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இதேபோல் வெளிநாடுகளில் வாழும் ஏழுமலையானின் பக்தர்கள் தரிசனத்திற்கு வரும்போது அந்நாட்டு கரன்சி நோட்டுகளை உண்டியலில் செலுத்துகின்றனர். நேரில் தரிசனத்திற்கு வர முடியாத பக்தர்கள் ஆன்லைன் மூலம் காணிக்கை செலுத்துகின்றனர்.
வெளிநாட்டு பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெறுவதற்காக வெளிநாட்டு பங்களிப்பு கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் திருப்பதி தேவஸ்தானம் உரிமம் பெற்று இருந்தது. கொரோனா தொற்று காரணமாக 2018-ம் ஆண்டிற்கு பிறகு உரிமத்தை தேவஸ்தான அதிகாரிகள் புதுப்பிக்கவில்லை.
இதனால் வெளிநாட்டு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய ரூ.30 கோடி வெளிநாட்டு கரன்சிகள் தேவஸ்தானம் சார்பில் டெபாசிட் செய்ய முடியாமல் பாரத ஸ்டேட் வங்கியில் முடங்கி உள்ளது.
தங்களது பெயர்களை வெளியிட விரும்பாத சில பக்தர்கள் காணிக்கையை ஆன்லைனில் செலுத்தி உள்ளனர். பணம் செலுத்தியவர்களின் விவரம் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தெரியவில்லை.
இதனால் வெளிநாட்டில் இருந்து ஆன்லைனில் பணம் செலுத்தியவர்களின் தகவல்களை தேவஸ்தான அதிகாரிகளால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்க முடியவில்லை.
இந்த நிலையில் மதிய உள்துறை அமைச்சகம், வெளிநாட்டு பங்களிப்பு கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் பெற்ற உரிமத்தை புதுப்பிக்காதது, விதிகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாதது மற்றும் உள்துறை வழிகாட்டுதல் படி வருமான விவரங்களை சரியானபடி சமர்ப்பிக்காததால் கிடப்பில் உள்ள ரூ. 30 கோடிக்கு, ரூ 3.19 கோடியை அபராதமாக விதித்தது.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நன்கொடை அளித்த வெளிநாட்டு பக்தர்களின் விவரங்களை துல்லியமாக அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் உரிமத்தை புதுப்பிக்க அனுமதி வழங்கி உள்ளது.
மேலும் வங்கியில் கிடப்பில் உள்ள ரூ. 30 கோடியை தேவஸ்தானம் பெயரில் டெபாசிட் செய்யவும் பாரத ஸ்டேட் வங்கி ஒப்புதல் வழங்கி உள்ளது.






