என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.
    • ரெயில் மீது கல்வீசி தாக்கியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ஆந்திர தலைநகர் விசாகப்பட்டினம் வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    ரெயில் சேவை தொடங்கப்பட்ட சிறிது நாட்களிலேயே அடுத்தடுத்து 2 முறை வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்குதல் சம்பவம் நடந்தது.

    நாளை மறுதினம் தெலுங்கானா ஆந்திரா இடையே செகந்திராபாத்தில் இருந்து திருப்பதி வரை 2-வது வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரே ஒரு வந்தே பாரத் ரெயில் சேவை மட்டுமே தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஆந்திரா தெலுங்கானா இடையே 2-வது வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு சென்ற வந்தே பாரத் ரெயில் மீது தண்டவாளம் அருகே பதுங்கி இருந்த மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் ரெயில் மீது கல்வீசி தாக்கியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வந்தே பாரத் ரெயில் மீது 3-வது முறையாக கல் வீசி தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மர்ம நபர்கள் குழந்தைக்கு பதிலாக தொட்டிலில் பொம்மையை வைத்து விட்டு குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்தது.
    • அனுஷா இது குறித்து பாலாஜி நகர் போலீசில் புகார் செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், குர்ரல மடுகு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி அனுஷா. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    மணிகண்டன் ராய்ப்பூரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இதனால் ஒரு சில நாட்கள் சொந்த ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் அனுஷா நேற்று முன்தினம் இரவு தனது மூத்த மகளை அருகில் படுக்க வைத்துக்கொண்டு 1½ வயது மகள் லட்சுமி நிஹாரிக்காவை தொட்டிலில் போட்டு விட்டு தூங்கினார்.

    காலை 7 மணிக்கு எழுந்து பார்த்தபோது தொட்டிலில் இருந்த குழந்தை அசைவு இல்லாததால் தொட்டிலில் பார்த்தபோது குழந்தையை காணவில்லை.

    மர்ம நபர்கள் குழந்தைக்கு பதிலாக தொட்டிலில் பொம்மையை வைத்து விட்டு குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்தது.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அனுஷா இது குறித்து பாலாஜி நகர் போலீசில் புகார் செய்தார் சப்-இன்ஸ்பெக்டர் சுமன் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • 3 ஆண்டுகளுக்கு பிறகு தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடக்கிறது.
    • பக்தர்களுக்கு சேவை செய்ய ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    திருமலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் 6-ந்தேதி நடக்கிறது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா பரவலால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு திருமலையில் தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் 6-ந்தேதி நடக்கிறது. தும்புரு தீர்த்தத்தின் மலையேற்றப் பாதையில் அதிக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாளை (புதன்கிழமை) காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரையும், 6-ந்தேதி காலை 5 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையும் பக்தர்கள் தும்புரு தீர்த்தத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    உடல் பருமன், இருதயக் கோளாறுகள், பிற நாள் பட்ட நோய்கள் உள்ளவர்கள் தங்கள் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு நடைபயணம் மேற்கொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் எந்தவிதமான சமையல் பொருட்களையும் கொண்டு வர வேண்டாம் என வானொலி மற்றும் ஒலிபரப்பு சாதனங்கள் மூலமாக தொடர்ந்து அறிவிக்கப்படும்.

    பாபவிநாசனம் அணை பகுதியில் பக்தர்களுக்கு தேவஸ்தான அன்னப்பிரசாதத்துறையினர் உணவுப் பொட்டலங்களை வினியோகிப்பார்கள். மருத்துவப் பிரிவு சார்பில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். பக்தர்களுக்கு ஏதேனும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு தயார் நிலையில் இருப்பார்கள்.

    பக்தர்களுக்கு சேவை செய்ய ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் நியமிக்கப்படுவார்கள். இதுதவிர அன்னப்பிரசாதம், சுகாதாரம், பறக்கும்படை ஆகிய துறைகளில் போதுமான எண்ணிக்கையிலான ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் நியமிக்கப்படுவார்கள். மலையேறும் பாதையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக குறிப்பிட்ட சில இடங்களில் பறக்கும் படையினர், வனத்துறையினர் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊர் பஞ்சாயத்திலும் நியாயம் கிடைக்காததால் அவமானம் அடைந்த அனுசூயம்மா வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து வாயில் நுரை தள்ளியபடி விழுந்து கிடந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், பெடலகுரு மண்டலம், சட்ட கோட்லா பகுதியை சேர்ந்தவர் அங்கம்மா. இவருக்கு லட்சுமி, அனுசூயம்மா என 2 மகள்கள் இருந்தனர். லட்சுமி அதே ஊரின் பஞ்சாயத்து தலைவரான ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ் பிரமுகர் பிரபாகர் என்பவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.

    அவர் கடனை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் பிரபாகர் லட்சுமியை கடந்த 1-ந் தேதி தனது தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைக்கு வருமாறு கூறினார். லட்சுமி தனது தாய் அங்கம்மா, சகோதரி அனுசூயம்மா ஆகியோருடன் பிரபாகரின் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைக்கு சென்றனர்.

    அங்கிருந்த பிரபாகர் அவரது மனைவி பிரமிளம்மா ஆகியோர் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாததால் ஏன் கடனை வாங்குகிறீர்கள் என ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.

    இதனை அனுசூயம்மா தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவன் மனைவி இருவரும் சேர்ந்து அனுசுயம்மாவின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    இது குறித்து அனுசுயம்மா பெடலகுரு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் அனுசூயம்மா குடும்பத்தாரை திருப்பி அனுப்பினர்.

    இதையடுத்து தனது ஊருக்கு வந்த அனுசூயம்மா குடும்பத்தினர் ஊர் பஞ்சாயத்தை கூட்டி நியாயம் வழங்க வேண்டும் என கேட்டனர்.

    ஆனால் ஊர் பெரியவர்கள் பிரபாகர் பஞ்சாயத்து தலைவராக இருப்பதால் ஊருக்கு நல்லது செய்வார். உங்களால் ஊருக்கு என்ன செய்ய முடியும் என கூறி திருப்பி அனுப்பினர்.

    போலீசிலும் ஊர் பஞ்சாயத்திலும் நியாயம் கிடைக்காததால் அவமானம் அடைந்த அனுசூயம்மா வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து வாயில் நுரை தள்ளியபடி விழுந்து கிடந்தார்.

    இதனைக் கண்ட அவரது குடும்பத்தார் அனுசூயம்மாவை மீட்டு பெடல குரு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெடலகுரு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ராமகிருஷ்ணா தாக்கியதில் படுகாயம் அடைந்த 3 பேரும் ரத்த வெள்ளத்தில் வீட்டிலேயே விழுந்து கிடந்தனர்.
    • சிவன் மனைவியும் அவரது மகனும் ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஜங்கா ரெட்டி கூடேம் மண்டலம், மைசன்னா கூட பகுதியை சேர்ந்தவர் சிவன் (வயது 35). இவருக்கு சின்னி என்ற மனைவியும், மங்கராஜ் என்ற மகனும் உள்ளனர். வேகவரம் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா (35) என்பவரும் சிவனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் பனை ஓலை வெட்டும் தொழில் செய்து வந்தனர்.

    இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் வேலை முடிந்ததும் மது குடித்து விட்டு பணம் கட்டி சீட்டு விளையாடி வந்தனர்.

    அப்போது ராமகிருஷ்ணா ரூ. 14 ஆயிரத்தை சீட்டு விளையாட்டில் இழந்தார். சீட்டு விளையாட்டில் இழந்த பணத்தைக் கட்ட ராமகிருஷ்ணாவிடம் பணம் இல்லாததால் எதிர் தரப்பில் விளையாடியவர்கள் அவரது பைக்கை பிடுங்கிக் கொண்டனர்.

    ராமகிருஷ்ணா சிவனிடம் கடன் கேட்டார். பணத்தை கொடுத்தால் தனது பைக்கை மீட்டுக் கொள்வதாகவும் பின்னர் பணத்தை திருப்பித் தருவதாகவும் தெரிவித்தார்.

    ஆனால் சிவன் தன்னிடம் பணம் இல்லை என நண்பரிடம் கூறினார். ராமகிருஷ்ணாவோ நேற்று உன்னுடைய உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் வாங்கி வந்தது எனக்கு தெரியும். அந்த பணத்தை கொடு என கேட்டார். அந்த பணம் தனது மனைவியிடம் உள்ளதாக தெரிவித்தார்.

    இதையடுத்து ராமகிருஷ்ணா, சிவனுடன் அவரது வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த மனைவியிடம் பணத்தை தருமாறு சிவன் கேட்டார். அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணா அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து சிவனை சரமாரியாக தாக்கினார். இதனைக் கண்ட அவரது மனைவி மற்றும் மகன் ராமகிருஷ்ணா தடுத்தனர். அவர்களையும் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    ராமகிருஷ்ணா தாக்கியதில் படுகாயம் அடைந்த 3 பேரும் ரத்த வெள்ளத்தில் வீட்டிலேயே விழுந்து கிடந்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சிவன் மனைவியும் அவரது மகனும் ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராமகிருஷ்ணாவை தேடி வருகின்றனர்.

    • பார்வதி வேலை முடிந்து வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்து பல்வேறு இடங்களில் தேடினர்.
    • இரவு முழுவதும் தேடியும் பார்வதியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த வால்மீகிபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (வயது 35). இவர் சித்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்ற பார்வதி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தார் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து பார்வதி குறித்து விசாரித்தனர். அவர்கள் பார்வதி வேலையை முடித்து வீட்டுக்கு கிளம்பி விட்டதாக தெரிவித்தனர்.

    பார்வதி வேலை முடிந்து வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இரவு முழுவதும் தேடியும் பார்வதியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை ஊருக்கு வெளியே உள்ள மரத்தில் பார்வதி நிர்வாண நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பார்வதி குடும்பத்தார் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது பார்வதியின் கால்கள் தரையில் தொட்டபடி பிணமாக கிடந்தார். பார்வதியின் உடலில் ஆங்காங்கே நககீறல்கள் ஏற்பட்டு ரத்த காயம் இருந்தது.

    இதனால் அவரை கும்பல் கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பார்வதியை மர்மகும்பல் கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்து மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    • தெருநாய்கள் கடித்ததில் கலெக்டரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
    • தெலுங்கானாவில் தெருநாய்கள் பொதுமக்களை அடிக்கடி கடித்து குதறும் சம்பவம் நிகழ்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் நாய் தொல்லை அடிக்கடி அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் நாய்களைக் கண்டாலே பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர்.

    சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் நாய்கள் அவழியாக நடந்து செல்வோரையும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோரையும் துரத்தி துரத்தி கடிப்பதால் பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த மாதம் தந்தையுடன் பொருட்களை வாங்க ஷாப்பிங் மாலுக்கு சென்ற போது 6 வயது சிறுவனை சாலையில் சுற்றித்திரிந்த நாய்கள் கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தெலுங்கானா கூடுதல் கலெக்டர் ஒருவரையும் தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளது. சித்திபேட்டை உதவி கலெக்டர் சீனிவாச ரெட்டி இவர் அலுவலகத்திற்கு காரில் சென்றார். காரில் இருந்து இறங்கி அலுவலகத்திற்கு நடந்து சென்ற போது அங்கிருந்த தெருநாய்கள் சீனிவாச ரெட்டியை துரத்தி துரத்தி காலில் கடித்தது.

    இதனைக் கண்ட கலெக்டரின் உதவியாளர்கள் மற்றும் ஊழியர்கள் தெருநாய்களை விரட்டி அடித்தனர்.தெருநாய்கள் கடித்ததில் கலெக்டரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சித்திபேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரிந்த நாய்கள் ஊழியர்கள் 2 பேரை கடித்தது.

    தெலுங்கானாவில் தெருநாய்கள் பொதுமக்களை அடிக்கடி கடித்து குதறும் சம்பவம் நிகழ்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • திருப்பதி கோவிலில் வசந்தோற்சவம் தொடங்கியது.
    • மலையப்பசாமிக்கு வசந்த காலத்தில் நடக்கும் விழாவுக்கு ‘வசந்தோற்சவம்’ எனப் பெயர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் 3 நாள் வருடாந்திர வசந்த உற்சவம் தொடங்கியது. மலையப்பசாமிக்கு வசந்த காலத்தில் நடக்கும் விழாவுக்கு 'வசந்தோற்சவம்' எனப் பெயர். சூரியனின் உஷ்ணத்தில் இருந்து இறைவனை தணிக்கும் விழா என்பதால், இது உபசமானோற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த விழாவில் மணம் வீசும் மலர்களுடன் பலவகை இனிப்பான பழங்களும் இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த விழாக்களுக்காக ஒரு கவர்ச்சியான மண்டபமும் வடிவமைக்கப்படும். அது வசந்த மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

    வசந்த மண்டபத்தில் 250 கிலோ வெட்டிவேர், 500 கிலோ பாரம்பரிய பூக்கள், 10 ஆயிரம் கொய்மலர்கள் போன்றவற்றால் பக்தர்களை கவரும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் பல்வேறு வகையான மரம் மற்றும் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, குரங்கு, நரி, மலைப்பாம்பு, நல்ல பாம்பு, மயில், அன்னப்பறவை, வாத்து, மைனா, கிளி போன்ற உருவப்பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன. அந்த மண்டபம் சேஷாசலம் வனத்தை ஒத்ததாக இருந்தது.

    உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி நேற்று காலை ஏழுமலையான் கோவிலில் இருந்து புறப்பட்டு நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து வசந்த மண்டபத்தை அடைந்தனர். மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    முன்னதாக விஸ்வக்சேனாராதனா, புண்யாஹவச்சனம், நவ கலசாபிஷேகம், ராஜோபசாரம் நடந்தது. அதைத்தொடர்ந்து சத்ர சாமர வியாஜன், தர்பணாதி நைவேத்தியம், முக சுத்தி, தூப பிரசாதம் வழங்கப்பட்டது. சங்கதாராவுடன், சக்ரதாரா, சஹஸ்ரதாரா, மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    வசந்தோற்சவத்தில் பங்கேற்ற வேத பண்டிதர்கள் ஸ்நாபன திருமஞ்சனத்தின்போது தைத்தரிய உபநிடதம், புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நீலசூக்தம், பஞ்சசாந்தி மந்திரங்கள் மற்றும் திவ்யப் பிரபந்தத்தின் பாசுரங்களை ஓதினர்.

    ஸ்நாபன திருமஞ்சனம் முடிந்ததும் சாமிக்கும், தாயார்களுக்கும் பல்வேறு வகையான உத்தமஜாதி மலர் மாலைகள் அணிவித்து அலங்கரித்தனர். இறுதியில் சாமியும், தாயார்களும் வசந்த மண்டபத்தில் இருந்து மாலை புறப்பட்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். நிகழ்ச்சியில் ஜீயர் சுவாமிகள், அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.

    வசந்தோற்சவத்தின் ஒரு பகுதியாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை தங்கத்தேரோட்டம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

    • காதல் விவகாரம் சம்பந்தமாக நடந்த பேச்சு வார்த்தையில் தகராறு ஏற்பட்டு காருக்குள் வைத்து அவர் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
    • சந்திரகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த சந்திரகிரி பிராமண பள்ளியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 33). பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி சுலோசனா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். நாகராஜன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை அவரது காரில் எரிந்த நிலையில் உடல் கருகி பிணமாக கிடந்தார். கார் எரிந்து நிற்பதை கண்ட அந்த பகுதி மக்கள் சந்திரகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கார் நம்பர் மூலம் துப்புதுலக்கினர். அதில் இறந்து கிடந்தது. நாகராஜன் என்பது தெரியவந்தது.

    நாகராஜின் தம்பி புருஷோத்தம் இவர் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் ஊருக்கு வந்த நாகராஜை தம்பியின் காதல் விவகாரம் சம்பந்தமாக பேச வேண்டும் என்று இரவில் ஒருவர் போனில் அழைத்துள்ளார். இதனையடுத்து வீட்டை விட்டு வெளியே சென்ற நாகராஜன் வீடு திரும்பவில்லை காருக்குள் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப் பட்டுள்ளார்.

    காதல் விவகாரம் சம்பந்தமாக நடந்த பேச்சு வார்த்தையில் தகராறு ஏற்பட்டு காருக்குள் வைத்து அவர் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாக புருஷோத்தம் போலீசில் புகார் செய்துள்ளார்.

    இது தொடர்பாக சந்திரகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆர்ஜித சேவைகள் நாளை முதல் 5-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • தினமும் மாலை ஆஸ்தானம் நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) முதல் 5-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர வசந்தோற்சவம் நடக்கிறது. 3 நாட்களும் தினமும் காலை 7 மணியளவில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து, வசந்தோற்சவ மண்டபத்துக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். அங்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வசந்தோற்சவ அபிஷேகம் முடிந்ததும் கோவிலுக்குள் திரும்புவார்கள்.

    2-வது நாளான 4-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் தேரில் எழுந்தருளி காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை நான்கு மாடவீதிகளில் உலா வந்து, வசந்த மண்டபத்துக்கு ெசல்கிறார்கள். அங்கு வசந்தோற்சவ அபிஷேகம் முடிந்ததும் கோவிலுக்குள் திரும்புவார்கள்.

    3-வது நாளான 5-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி, சீதா-ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் ருக்மணி, கிருஷ்ணர் வசந்தோற்சவ மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மாலை கோவிலுக்கு திரும்புவார்கள்.

    வசந்தோற்சவத்தை முன்னிட்டு தினமும் மாலை 6 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது. வசந்தோற்சவம் நடக்கும் மண்டபம் காணிக்கையாளர்களின் உதவியோடு பல்வேறு பழங்கள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட உள்ளது. அதற்காக வெளிநாடுகளில் இருந்து பிரத்யேக பழங்கள், உலர் பழங்கள், மலர்கள் தருவிக்கப்பட உள்ளன.

    வசந்தோற்சவத்தையொட்டி கோவிலில் அஷ்டதள பாத பத்மாராதனை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை நாளை முதல் 5-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • தினமும் மொத்தம் 15 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
    • ஆதார் அட்டையுடன் நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரசு பஸ்கள், சொந்த மற்றும் தனியார் வாகனங்களில் திருமலைக்கு வருகின்றனர். இதுதவிர அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைகளில் வந்து திவ்ய தரிசன பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    கொரோனா தொற்று பரவலால் 3 ஆண்டுகளாக திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று திருப்பதி தேவஸ்தானம் சோதனை முறையில் நேற்று காலையில் இருந்து அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு நடைபாதைகளில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கும் பணியை மீண்டும் தொடங்கி உள்ளது.

    அலிபிரி நடைபாதையில் வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு காளிகோபுரத்தில் 10 ஆயிரம் டோக்கன்களும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு 1,250-வது படியில் 5 ஆயிரம் டோக்கன்களும் வழங்கப்படுகின்றன.

    ஆதார் அட்டையுடன் நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். திவ்ய தரிசன டோக்கன்கள் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே சோதனை முறையில் வழங்கப்படுகின்றன. இதைப் பக்தர்கள் கவனித்து திவ்ய தரிசன டோக்கன்கள் பெற்று சாமி தரிசனம் செய்யலாம், என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மாதந்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
    • 2022ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை ரூ.2.37 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு உண்டியலில் மாதந்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

    கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை ரூ.2.37 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் உண்டியலில் ரூ.1,450 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டில் (ஜனவரி முதல் டிசம்பர் வரை) 1.04 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    உண்டியலில் காணிக்கையாக ரூ.833.41 கோடி செலுத்தினர். 2022-23 நிதி யாண்டின் படிகடந்த மார்ச் மாதம் வரை உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமி முடிந்து 3 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு வசந்த உற்சவம் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    ×