தொட்டிலில் பொம்மையை வைத்துவிட்டு குழந்தை கடத்தல்

மர்ம நபர்கள் குழந்தைக்கு பதிலாக தொட்டிலில் பொம்மையை வைத்து விட்டு குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்தது.அனுஷா இது குறித்து பாலாஜி நகர் போலீசில் புகார் செய்தார்.
தொட்டிலில் பொம்மையை வைத்துவிட்டு குழந்தை கடத்தல்
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், குர்ரல மடுகு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி அனுஷா. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

மணிகண்டன் ராய்ப்பூரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இதனால் ஒரு சில நாட்கள் சொந்த ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் அனுஷா நேற்று முன்தினம் இரவு தனது மூத்த மகளை அருகில் படுக்க வைத்துக்கொண்டு 1½ வயது மகள் லட்சுமி நிஹாரிக்காவை தொட்டிலில் போட்டு விட்டு தூங்கினார்.

காலை 7 மணிக்கு எழுந்து பார்த்தபோது தொட்டிலில் இருந்த குழந்தை அசைவு இல்லாததால் தொட்டிலில் பார்த்தபோது குழந்தையை காணவில்லை.

மர்ம நபர்கள் குழந்தைக்கு பதிலாக தொட்டிலில் பொம்மையை வைத்து விட்டு குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அனுஷா இது குறித்து பாலாஜி நகர் போலீசில் புகார் செய்தார் சப்-இன்ஸ்பெக்டர் சுமன் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com