என் மலர்
ஆந்திர பிரதேசம்
- கடைக்கு மாதந்தோறும் ரூ.7000 முதல் 8000 வரை மின் கட்டணம் வரும்.
- பரிசீலனை செய்து புதிய தொகை கணக்கிடப்பட்டு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
திருப்பதி:
கோடைகாலம் தொடங்கியதில் இருந்து பல்வேறு இடங்களில் கூடுதலாக ஏசி, மின்விசிறி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மின் கட்டணம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் உயர்ந்து வருவதை பொதுமக்களும், வியாபாரிகளும் சமாளித்து வருகின்றனர்.
ஆனால் ஆந்திர மாநிலத்தில் ஒரு சிறிய கடைக்கு ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் மின்கட்டணம் வந்ததால் கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் கோட்டூர் நகரை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் அங்குள்ள நகரப் பகுதியில் சிறிய கடையில் நகைக்கடை வைத்துள்ளார். இவருடைய கடைக்கு மாதந்தோறும் ரூ.7000 முதல் 8000 வரை மின் கட்டணம் வரும்.
அதனை வழக்கம் போல செலுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை மின் கட்டணம் ரூ. ஒரு கோடியே 15 லட்சத்து 56,116 என மின் ஊழியர்கள் கணக்கிட்டு அட்டையில் எழுதிக் கொடுத்தனர். இதனை பார்த்ததும் நகைக்கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
மின்கட்டணம் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டார் . உடனடியாக அவரது கடையில் இருந்த மின் மீட்டரை சோதனை செய்தனர். அது பழுதாகி அளவுக்கு அதிகமாக மின்சாரம் செலவழிக்கப்பட்டதாக பதிவு செய்தது தெரிய வந்தது.
பரிசீலனை செய்து புதிய தொகை கணக்கிடப்பட்டு வழங்குவதாக உறுதியளித்தனர். இதனால் நகைக்கடை உரிமையாளர் நிம்மதி அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
- நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி:
புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதத்தில் திருப்பதியில் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வரும் டிசம்பர் மாதம் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
நேரடி இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால் பக்தர்கள் வைகுந்தம் க்யூகாம்ப்ளக்ஸ் அறைகளில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இன்று வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் உள்ள 18 அறைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது.
இதனால் நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 79, 365 பேர் தரிசனம் செய்தனர். 25,952 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.77 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி கருத்து தன்னை மிகவும் புண்படுத்தி உள்ளது.
- பண்டாரு சத்யநாராயண மூர்த்தி மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்.
திருப்பதி:
தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி அமைச்சர் ரோஜா குறித்து இழிவான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா திருப்பதியில் உள்ள அவரது வீட்டில் கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் நிர்வாண படத்தில் நடித்ததாக கூறி சித்ரவதை செய்கின்றனர். சட்டசபையிலும் சிடிக்கள் காட்டப்பட்டன. ஆனால் சிடியில் இருப்பது நான்தான் என நிரூபிக்கப்படவில்லை.
பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? தெலுங்கு தேசம் கட்சி பெண்களை விளையாட்டுப் பொருளாக நடத்துகிறது. (கண்ணீர் விட்டு கதறி அழுதார்).
உங்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி இப்படி பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா?
முன்னாள் அமைச்சர்கள் காந்தா ஸ்ரீனிவாஸ், அய்யண்ணபத்ரா, சந்திரபாபு நாயுடு, லோகேஷ் ஆகியோர் கண்டிக்காதது ஏன்?
தெலுங்கு தேசம் ஒரு திரையுலக பிரமுகரால் நிறுவப்பட்ட கட்சி. பண்டாரு சத்தியநாராயணனின் பேச்சுக்கு அவரது மனைவி தன் கணவனை அறைந்திருக்க வேண்டும்.
லோகேஷ் வெட்கமின்றி ட்வீட் செய்கிறார். சந்திரபாபு நாயுடு என்னை பிரசாரத்திற்கு அழைத்தது ஏன்? நான் கெட்டவள் என்றால் என்னை ஏன் கட்சியில் சேர்த்தார்? என்னை அயர்ன் லெக் என்று கேலி செய்தார்கள்.
நான் உங்கள் கட்சியில் இருக்கும்போது எப்படி நல்லவராகவும், வேறு கட்சியில் இருக்கும்போது கெட்டவராகவும் இருக்க முடியும்.
பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி கருத்து தன்னை மிகவும் புண்படுத்தி உள்ளது. கேள்வி கேட்டால் என்னை தாக்கி பேசுவார்களா. சந்திரபாபு நாயுடுவை கைது செய்தால் ஏன் அழுகிறீர்கள்.
தெலுங்கு தேசம் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை. தெலுங்கு தேசம் கட்சியால் அரசியல் ரீதியாக வளர முடியாது.
பண்டாரு சத்யநாராயண மூர்த்தி மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் ரோஜா பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆந்திராவில் பெண் அமைச்சர் ஒருவர் கலங்கி அழுதபடி பேட்டி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ரோஜா குறித்து அவதூறு பேசியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து பண்டாரு சத்திய நாராயண மூர்த்தியை கைது செய்தனர்.
- சிறிது நேரத்தில் கண்விழித்த மீனா அருகில் இருந்த குழந்தையை காணாமல் திடுக்கிட்டார்.
- ர்மநபர் ஒருவர் குழந்தையை தோளில் சுமந்தபடி தூக்கிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
திருப்பதி:
சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி மீனா. இவர்களது மகன் அருள்முருகன் (வயது 2). இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர்.
கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் 2 நாட்கள் தங்கி இருந்து நேற்று சாமி தரிசனம் செய்தனர். இரவு சென்னை திரும்புவதற்காக திருப்பதி மலையில் இருந்து கீழ் திருப்பதிக்கு வந்தனர். அங்குள்ள ஆர்.டி.சி. பஸ் நிலையத்தில் சென்னை பஸ்கள் நிற்கும் இடத்திற்கு வந்தனர்.
நள்ளிரவு ஆனதால் சென்னைக்கு பஸ்கள் இல்லை. இதனால் சந்திரசேகர், மீனா இருவரும் அவர்களது மகன் அருள் முருகனை அருகில் படுக்க வைத்துக்கொண்டு பஸ் நிலையத்தில் தூங்கினர்.
நள்ளிரவு மர்மநபர் ஒருவர் தாயின் அருகில் படுத்திருந்த குழந்தை அருள் முருகனை நைசாக தோளில் தூக்கி கடத்திச் சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் கண்விழித்த மீனா அருகில் இருந்த குழந்தையை காணாமல் திடுக்கிட்டார். அவரும், கணவரும் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குழந்தையை தேடினர்.
அங்கிருந்தவர்கள் குழந்தையை ஒருவர் தூக்கிச் சென்றதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கதறி அழுதபடி திருப்பதி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
உடனடியாக திருப்பதி மாநகர் பகுதி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
திருப்பதி பஸ் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் மர்மநபர் ஒருவர் குழந்தையை தோளில் சுமந்தபடி தூக்கிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இரவு 2 மணி வரை நான் கண் விழித்திருந்தேன். 2.20 மணிக்கு பார்த்தபோது எனது குழந்தையை காணவில்லை.
கடவுளே என் குழந்தையை எப்படியாவது கண்டுபிடித்து தந்து விடுங்கள். நான் என் குழந்தை இல்லாமல் ஊருக்கு போக மாட்டேன். பசித்தால் கூட எனது குழந்தைக்கு சொல்லத்தெரியாது. அவன் பசி தாங்க மாட்டான். என்ன செய்கிறான் என்று தெரியவில்லை.
தயவு செய்து அனைவரும் சேர்ந்து என் குழந்தையை கண்டுபிடித்து தாருங்கள்" என்றார்.
போலீசார் உடனடியாக பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு 2.10 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இதையடுத்து 5 தனிப்படைகளை அமைத்து ஆந்திர போலீசார், குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
மர்மநபர் குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சிகளை வைத்து தொடர்ந்து கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது ஏரிபேடு மண்டலம் பகுதியில் குழந்தையுடன் மர்மநபர் சென்றது அந்த பகுதியில் உள்ள கேமராக்களில் பதிவாகி இருந்தது.
இதன் மூலம் அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் சிறுவனின் போட்டோவை காண்பித்து விசாரிக்க தொடங்கினர்.
அப்போது மாதவமலை பகுதியில் உள்ள ஒரு பெண் வீட்டில் குழந்தை இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது குழந்தை அருள் முருகன் ஒரு பெண்ணிடம் இருந்தான். இதனை கண்டதும் போலீசார் பெண்ணை மடக்கி பிடித்தனர். மேலும் சிறுவனை அவரிடம் இருந்து மீட்டனர். குழந்தை கடத்தப்பட்ட 8 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.
விசாரணையில் குழந்தையை மாத மலையை சேர்ந்த சுதாகர் என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.
விசாரணையில் சுதாகர் குழந்தையை கடத்திச் சென்று பின்னர் மாதவமலையில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் குழந்தையை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் குழந்தையை மீட்ட போலீசார் சுதாகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை கண்டதும் அவரது தாயார் ஓடி சென்று கட்டி அணைத்து தூக்கி கதறி அழுதார்.
அவர்கள் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
- நிலவின் மேற்பரப்பில் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் குளிர் வீசியது.
- குளிர் காலநிலையில் 2 வாரங்கள் கழித்த பிறகு, சில விண்கலங்கள் செயல்படவில்லை.
திருப்பதி:
சந்திரயான்-3 மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. அதனைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் 12 நாட்கள் பல ஆய்வுகளையும் மேற்கொண்டது.
இது தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தனர்.
இதனையடுத்து நிலவின் தென் துருவத்தில் இரவு சூழல் வந்ததால், ரோவர் மற்றும் லேண்டர் காலங்களின் இயக்கமானது முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டு அவை உறக்க நிலையில் வைக்கப்பட்டன.
உறக்கத்துக்கு பிறகு மீண்டும் விழித்தெழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிலவில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரிடம் இருந்து இதுவரை எந்த சிக்னலும் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
லேண்டர் மற்றும் ரோவரை தொடர்பு கொள்ளும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நிலவின் மேற்பரப்பில் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் குளிர் வீசியது. இதனால் விண்கலத்தில் இருந்து பதில் எதுவும் வர இல்லை.
இதன் மூலம் மீண்டும் விண்கலம் விழித்துக்கொண்டு ஆராய்ச்சி செய்யும் என்ற நம்பிக்கை மங்கி வருகிறது. உலை போன்ற ஒரு கருவியை இதன்னுடன் சேர்த்து அனுப்பி வைத்திருந்தால் விக்ரம் லேண்டர் பனியில் உறையாமல் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்திருக்கும்.
கடந்த 1977-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவால் விண்ணில் செலுத்தப்பட்ட வாயேஜர்-1 மற்றும் 2 விண்கலங்கள் சூரிய குடும்பத்திற்கு அப்பால் சென்றன. சிறிய சூரிய ஒளி கூட இல்லை. இருப்பினும், அந்த விண்கலங்கள் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
காரணம் அவற்றில் உள்ள ஆர்.டி.ஜி. நாசா இந்த கருவிகளை முன்னோடி, வைக்கிங், காசினி, நியூ ஹொரைசன்ஸ், ஆர்வம் மற்றும் விடாமுயற்சி போன்ற விண்கலங்களிலும் நிறுவியுள்ளது.
2013-ம் ஆண்டு செவ்வாய்க்கு சீனா அனுப்பிய சேஞ்ச்-3 லேண்டர் மற்றும் யூட் ரோவர் ஆகியவை இதே போன்ற வெப்ப சாதனங்களைக் கொண்டுள்ளன.
சாம்-4 லேண்டர் மற்றும் யுடு-2 ரோவர் ஆகியவை 2018-ல் நிலவின் தெற்குப் பகுதியில் சீனாவால் முதன்முதலில் தரையிறக்கப்பட்டன, அவை 4½ ஆண்டுகளாக ஆர்டிஜி உதவியுடன் செயல்பட்டு வருகின்றன.
சந்திரயான்-3 தரையிறங்குவதற்கு முன் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான லூனா-25 (ரஷ்யா), ஆர்டிஜி கருவியையும் கொண்டிருந்தது.
எனவே அவை சந்திரன் மேற்பரப்பில் 14 நாட்கள் பகல் நேரத்தில் மட்டுமே செயல்பட முடியும். தொடர்ந்து 14 நாட்களில் இரவு வெப்பநிலை மைனஸ் 200 டிகிரி செல்சியஸாக இருந்தது.
அத்தகைய குளிர் காலநிலையில் 2 வாரங்கள் கழித்த பிறகு, சில விண்கலங்கள் செயல்படவில்லை. இதனால், அவை நிரந்தரமாக சேதமடையும் அபாயம் உள்ளது.
இந்தப் பின்னணியில் மீண்டும் சூரியன் உதித்தாலும், வெயில் அதிகமாக இருந்தாலும் அவைகளால் வேலை செய்ய முடியாது.
விக்ரம் மற்றும் பிரக்யானுக்கு சூரிய சக்தி தான் அடிப்படை. வெப்பநிலை குறைவதால் மின்சாரம் தயாரிக்க ஹைட்ரோதெர்மல் ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. விண்கலத்தின் பூஜ்ஜிய வெப்பமான வானிலையில் நமது பேட்டரிகள் மற்றும் இந்த ஹீட்டர்களில் அந்த இழுப்பு கதிரியக்க சிதைவு தொடர்கிறது.
- திருப்பதி, கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த அதிரடி சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டனர்.
- திருப்பதி, கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டனர்.
திருப்பதி:
ஆந்திராவில் இன்று காலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். ஆந்திரா முழுவதும் இன்று காலை முதல் ஒரே நேரத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
திருப்பதி, கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த அதிரடி சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டனர்.
பல்வேறு இடங்களை சேர்ந்த தலைவர்களின் வீடுகள், வக்கீல்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் புகுந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
சோதனையின்போது அதிகாரிகள் வீடுகள் மற்றும் அலுலகங்களின் வெளிப்புற கதவுகளை பூட்டிக்கொண்டு சோதனை நடத்தினார்கள். சோதனை நடத்தியபோது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தவர்களை அதிகாரிகள் வெளியே அனுமதிக்கவில்லை.
அதேபோல் வெளியில் இருந்தும் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
- சந்திரபாபு நாயுடு பொது வாழ்வில் இருந்து துண்டிக்கப்பட்டிருப்பது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
- என்.டி.ஆரின் மகளும் சந்திரபாபு நாயுடுவின் மனைவியுமான புவனேஸ்வரி மற்றும் அவரது மருமகள் பிராமணி ஆகியோர் தற்போது கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கியுள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநில முன்னாள் முதல்- மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சாலை பணிகளில் ஊழல் நடந்ததாக அவரது மகன் லோகேஷ் மீது சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த முக்கியமான காலகட்டத்தில் சந்திரபாபு நாயுடு பொது வாழ்வில் இருந்து துண்டிக்கப்பட்டிருப்பது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
சந்திரபாபு நாயுடு ஜெயிலில் உள்ளார். அவரது மகன் லோகேஷ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால் கட்சியை வழிநடத்த அடுத்த கட்ட முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
என்.டி.ஆரின் மகளும் சந்திரபாபு நாயுடுவின் மனைவியுமான புவனேஸ்வரி மற்றும் அவரது மருமகள் பிராமணி ஆகியோர் தற்போது கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கியுள்ளனர். முக்கியமாக தெலுங்கு தேசம் கட்சியை வழிநடத்த போகும் முக்கியமான பொறுப்பு பிராமணி வசம் சென்றுள்ளது.
புவனேஸ்வரி மற்றும் பிராமணி இருவரும் தீவிர அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ளனர்.
தற்போது ஆந்திர மாநிலத்தில் நடந்து வரும் போராட்டங்களில் பிராமணி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மேலும் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, நடிகை ரோஜா உள்ளிட்டவர்களையும் விமர்சித்து வருகிறார்.
ரோஜா உள்ளிட்ட ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் தலைவர்களும் பிராமணியை தாக்கத் தொடங்கியுள்ளனர். இதுவரை வெளிப்படையாக அரசியல் ரீதியாக எந்த செயல்பாட்டிலும் இறங்காத பிராமணியை குறிவைத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் பேசுவது பொது மக்களால் கவனிக்கப்படுகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு 16 மாதங்கள் ஜெகன்மோகன் ரெட்டி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது ஜெகன்மோகனின் தாய் விஜயம்மா சகோதரி ஷர்மிளா இருவரும் முன் நின்று அவரது கட்சியை வழிநடத்தினார்கள். அவர்கள் சுமார் 3000 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி தலைமை வெற்றிடத்தை நிரப்பினார்கள். இப்போது அதே நிலை சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் மருமகள் பிராமணி என்.டி.ராமராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணனின் மகள் ஆவார். என்.டி.ஆர்.பேத்தி என்பதால் ஆந்திர மாநிலத்தில் பொதுமக்களிடையே கூடுதல் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
- சந்திர கிரகணம் காரணமாக கோவில் 8 மணி நேரம் மூடப்பட்டிருக்கும்.
- சகஸ்ர தீபாலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் சந்திர மற்றும் சூரிய கிரகண காலங்களில் மூடப்படுவது வழக்கம். கிரகணம் முடிந்த பின் வைகானச ஆகம விதிப்படி சுத்தி செய்து ஆடைகள் அணிவித்து ஏழுமலையானுக்கு புண்ணியாவசனம் செய்து பின்னர் கோவில் நடை திறக்கப்படும். வருகிற அக்டோபர் 29-ந் தேதி அதிகாலை 1.05 மணி முதல் 2.22 மணி வரை சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. கிரகண காலத்துக்கு 6 மணி நேரத்துக்கு முன்பு கோவில் மூடப்படுவது வழக்கம்.
எனவே அக்டோபர் 28-ந்தேதி இரவு 7.05 மணிக்கு ஏகாந்தத்தில் சுத்தி மற்றும் சுப்ரபாத சேவை செய்த பிறகு அதிகாலை 3.15 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்படும். சந்திர கிரகணம் காரணமாக கோவில் 8 மணி நேரம் மூடப்பட்டிருக்கும். சகஸ்ர தீபாலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தங்கள் யாத்திரையை திட்டமிடுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
- சந்திரபாபு நாயுடு தனக்கு ஜாமீன் வழங்க கோரி 2 முறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
- ஆந்திரா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்து வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியினர் அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சந்திரபாபு நாயுடு தனக்கு ஜாமீன் வழங்க கோரி 2 முறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சந்திரபாபு நாயுடு ஜெயிலில் உண்ணாவிரதத்தை தொடங்குகிறார். அவரது மனைவி புவனேஸ்வரி ராஜமுந்திரியில் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் உண்ணாவிரதம் இருக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இதே போல் ஆந்திரா முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினரால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அமராவதியில் சுற்றுச்சாலை சீரமைப்பு ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் 14-வது குற்றவாளியாக சிஐடி போலீசார் சேர்த்தனர். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி ஆந்திர ஐகோர்ட்டில் லோகேஷ் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை விசாரித்த ஆந்திர கோர்ட்டு லோகேஷை கைது செய்யக்கூடாது வேண்டுமானால் 41 ஏ பிரிவின் கீழ் அவருக்கு நோட்டீஸ் வழங்கலாம் என உத்தரவு பிறப்பித்தனர்.
இதையடுத்து டெல்லி அசோகா சாலையில் உள்ள தெலுங்கு தேசம் எம்.பி கல்லா ஜெயதேவி வீட்டில் இருந்த லோகேஷிடம் சிஐடி அதிகாரிகள் நேற்று மாலை நோட்டீஸ் வழங்கினார்.
அதில் வருகிற 4-ந்தேதி காலை 10 மணிக்கு சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.
- 15 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கும்.
- கொடியேற்றத்துடன் தொடங்கி 21 நாட்கள் நடக்கும்.
சித்தூர்:
சித்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில். கோவிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் நடக்கும். மற்ற கோவில்களில் 9 நாட்கள், 11 நாட்கள், 15 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கும். ஆனால், காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 21 நாட்கள் நடக்கும்.
பிரம்மோற்சவ விழாவின் 13-வது நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து காலை ராவணாசூர வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர் வரசித்தி விநாயகர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மாலை யாளி வாகனத்தில் உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முன்னதாக அகரம்பள்ளி, சின்னகாம்பள்ளி உள்பட 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் காணிப்பாக்கம் கோவிலுக்கு வந்து பூஜைகளை செய்து யாளி வாகன வீதிஉலாவை தொடங்கி வைத்தனர். வாகன வீதிஉலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர மற்றும் நெய் தீப ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக அன்னதானம், குடிநீர், மோர் வழங்கப்பட்டது.
- திருப்பதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காணப்படுகிறது.
- வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ்சில் இருந்து சுமார் 5 கிலோமீட்டருக்கு மேல் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து வரலாறு காணாத அளவு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
தற்போது தொடர் அரசு விடுமுறை மற்றும் காலாண்டு தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
ஏழுமலையானுக்கு புரட்டாசி மாதம் உகந்த மாதம் என்பதால் மற்ற மாதங்களைக் காட்டிலும் இந்த மாதத்தில் சாமியை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.
கடந்த 3 நாட்களாக பக்தர்களின் கூட்டம் குறையாமல் அலைமோதி வருவதால் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் தவித்து வருகின்றனர்.
திருப்பதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காணப்படுகிறது. வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.
வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ்சில் இருந்து சுமார் 5 கிலோமீட்டருக்கு மேல் பக்தர்கள் காத்திருக்கின்றனர். சாமி தரிசனத்திற்கு 48 மணி நேரம் ஆகிறது.
தற்போது திருப்பதியில் அடிக்கடி விட்டு விட்டு மழை பெய்து வருவதால் குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் குளிரில் அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 87,081 பேர் தரிசனம் செய்தனர். 41,575 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ. 4.05 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- தொல்லியல் துறையினர் வர இருந்ததால் இரவு முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மர்ம மரப்பெட்டியை பார்ப்பதற்காக பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.
திருப்பதி:
விசாகப்பட்டினம் ஆர்கே கடற்கரையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அருகே மர்ம மரப்பெட்டி நேற்று கரை ஒதுங்கியது. அந்த பெட்டி 100 கிலோ எடைக்குமேல் இருந்தது .
இதனை கண்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். உள்ளூர் மீனவர்கள் பெரிய பெட்டியைக் கண்டுபிடித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மரப் பெட்டியை 2 மண் அள்ளும் எந்திரங்களின் உதவியுடன் மணலில் நகர்த்தப்பட்டது. காலையில் ஆய்வுக்காக தொல்லியல் துறையினர் வர இருந்ததால் இரவு முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், இந்த மர்ம மரப்பெட்டியை பார்ப்பதற்காக பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.
மோப்ப நாய் மற்றும் துப்புக் குழுவினர் அந்த இடத்திற்கு வந்து பெட்டியை ஆய்வு செய்தனர், அது காலியாக இருப்பதைக் கண்டறிந்தனர்.
இது பொதுவாக படகுகள் மற்றும் கப்பல்கள் மோதுவதைத் தடுக்க மரத்தால் செய்யப்பட்ட பெட்டி என்று உள்ளூர் மீனவர்கள் தெரிவித்தனர்.
"எப்போதாவது, இந்த பெட்டிகள் படகுகள் மற்றும் கப்பல்களில் இருந்து தூக்கி வீசப்படலாம் என்று போலீசார் கூறினர்.






