என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    குழந்தை பிறந்த சில வாரங்களில், பெண்களுக்கு உடலுக்குள் என்னென்னவெல்லாம் நிகழ வாய்ப்புக்கள் உள்ளன என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சில பெண்கள், குழந்தை பிறந்த பிறகு, உடலிலும், உள்ளத்திலும், உணர்விலும் சில மாற்றங்களைக் உணர்வார்கள். இங்கு பிரசவத்திற்கு பின், பெண்கள் உடல் ரீதியாக சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் என்னவென்று பார்ப்போம்.

    உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினாலும், இரத்த ஓட்ட அளவு மாறுபாட்டுக்கு உள்ளாவதினாலும், குழந்தை பெற்ற தாய்மார்களின் உடலில் உள்ள வெப்பக்கட்டுப்பாட்டில் மாற்றங்கள் நிகழ்ந்து, காய்ச்சலோ, நடுக்கமோ ஏற்படலாம்.

    பால் சுரக்கும் காலங்களில் சில வாரங்களுக்கு மார்பகங்களில் வலியை உணரக்கூடும். சில சமயங்களில் மார்பகக் காம்புகளும் வலிக்கக்கூடும்
    மலச்சிக்கல் குழந்தை பிறந்த பிறகு, ஆசன வாயில் ஏற்படும் புண், பிறப்புறுப்பில் உள்ள தோல் கிழிந்ததால் ஏற்பட்ட காயங்கள் குணமாதல், தசைகளில் ஏற்பட்ட வலி ஆகியவற்றின் காரணமாக மலம் கழிப்பதில் வலி ஏற்படுவதோடு, சில நேரங்களில் மலச்சிக்கலையும் உண்டாக்கும்.

    ஆசன வாய்க்கும், பெண்களின் பிறப்புறுப்புக்கும் இடையிலுள்ள தோல் (perineum) பிரசவத்தின் போது மருத்துவரால், கிழிக்கப்பட்டு பின் தைக்கப்படும். இதற்கு எபிசியாடமி (Episiotomy)என்று பெயர். இவ்வாறு போடப்படும் தையல் குணமாவதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தில், நடக்கும் போதும், உட்காரும் போதும் வலியை உண்டாக்கும். மேலும் இருமலின் போதும், தும்மலின் போதும் கூட வலியை உண்டாக்கும்.



    பிரசவத்திற்குப் பிறகு, பிரசவத்திற்கு முன் இருந்த எடையிலிருந்து 5 முதல் 6 கிலோ வரை எடை குறைந்து காணப்படுவோம். (குழந்தையின் எடை, நஞ்சுக்கொடி, அம்னியாடிக் திரவம் என்னும் பனிக்குடம் ஆகியவற்றின் எடை குறைந்து விடுவதால்)

    பிரசவம் ஆன பெண்களுக்கு, மூலம் எனப்படும் ஆசனவாயில் உள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் வீக்கம் (hemorrhoids) சாதாரணமாக ஏற்படும்

    பிரசவத்தின் போது, தசைகள் விரிவடைந்ததினாலும், நீண்டிருந்த தசைகள் சுருங்குவதினாலும், இருமலின் போதும், தும்மலின் போதும், சிரிக்கும் போதும், தம்மை அறியாமலேயே சிறுநீர் கழித்து விடக்கூடும் அல்லது சிறுநீர் வெளியேறுவதைக் கட்டுப்படுத்த சிரமப்படக்கூடும். அதிலும் சுகப்பிரசவம் நடந்தவர்களுக்கு, பிரசவ வலி நெடுநெரம் நீடித்திருந்தால், அவர்களுக்கு இம்மாதிரியான சிரமங்கள் ஏற்படும்.

    பிரசவத்திற்குப் பிறகும், கருப்பை சில நாட்களுக்கு, சுருங்கி விரிந்து கொண்டிருக்கும். இதன் காரணமாக அடிவயிற்றில் வலி ஏற்படும். இரத்தப்போக்கிற்கு மருத்துவம் பார்க்கும் போதும், குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் போதும், இதனை உணர நேரிடும்.

    பிரசவத்திற்குப் பிறகு ஆரம்பத்தில், மாதவிலக்கின் போது வெளிப்படும் உதிரத்தை விடக் கெட்டியாக, இத்திரவம் வெளிப்படத் தொடங்கும். பெரும்பாலும் சிறு சிறு கட்டிகளைக் கொண்டதாக இருக்கும். நாளடைவில் இதன் நிறம் மஞ்சள், வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக நிறமிழந்து போகும். ஆனால் இதற்கு பல வாரங்கள் ஆகலாம்.

    ஆண்கள், பெண்கள், குழந்தைகள்... என அனைத்துத் தரப்பினருக்கும் ரத்தச்சோகை ஏற்படும் என்றாலும், பெண்கள்தான் அதிக அளவில் ரத்தச்சோகைக்கு ஆளாகிறார்கள்.
    இந்தியாவில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாகத்தான் பெரும்பாலானவர்கள் ரத்தச்சோகைக்கு ஆளாகிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள்... என அனைத்துத் தரப்பினருக்கும் ரத்தச்சோகை ஏற்படும் என்றாலும், பெண்கள்தான் அதிக அளவில் ரத்தச்சோகைக்கு ஆளாகிறார்கள். பருவம் அடைதல், மாதவிலக்கு, பிரசவம் போன்றவற்றால் பெண்கள் அதிக ரத்த இழப்பை எதிர்கொள்கிறார்கள்.

    தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காததும் இதற்குக் காரணமாகிறது. தாய்க்கு ரத்தச்சோகை இருந்தால், குறை மாதத்தில் குழந்தை பிறக்கலாம் அல்லது குறைந்த எடையுடன் குழந்தை பிறக்கும்; அந்தக் குழந்தைக்கு ரத்தச்சோகை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் குழந்தைக்குப் போதுமான இரும்புச்சத்து கிடைக்காமல் போகும்.

    எனவே, பெண்கள் கவனமாகத் தங்களைப் பார்த்துக்கொண்டு, ரத்தச்சோகை வராமல் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். குடும்பத்தினரும் இந்த விஷயத்தில் பெண் குழந்தைகளின் மேல் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. ரத்தச்சோகை பற்றிய விழிப்புஉணர்வை தாயிடமிருந்து தொடங்குவதே சரி.

    யாருக்கு ஏற்படலாம்?

    * மகப்பேறு அடையும் வயதை எட்டிய பெண்கள்
    * கர்ப்பிணிகள்
    * அடிக்கடி ரத்ததானம் செய்பவர்கள்
    * கைக்குழந்தைகள்
    * குறைமாதத்தில் பிறந்தவர்கள்
    * வளர்ச்சியில் குறைபாடு உடையவர்கள்
    * அசைவ உணவைத் தவிர்ப்பவர்கள்.
    * இரும்புச்சத்துக் குறைபாடு (Iron deficiency) உள்ளவர்கள்
    * வைட்டமின் குறைபாடு (Vitamin deficiency) உள்ளவர்கள்
    * சிறுநீரக பாதிப்புள்ளவர்கள்
    * குடல் புற்றுநோய், அல்சர் உள்ளவர்கள்.



    தீர்வுகள்...

    * முதல் இரண்டு வயதுக்குள், 10- 14 இடைப்பட்ட வயதில், கர்ப்ப காலங்களில்தான் ரத்தச்சோகையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அந்த வயதுகளில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊட்டச்சத்துக் குறைபாடு சோதனை செய்துகொள்வது நல்லது.

    * கீரை, இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு, பருப்பு வகைகள், ராகி, சத்துமாவு, இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவுப் பொருள்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க இரும்புச்சத்து மிக அவசியம்.

    * ஆரோக்கியமான உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.

    * உலர் திராட்சை, முந்திரி, பாதாம், பேரீச்சை, நெல்லிக்காய், கேரட் போன்றவையும் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும்.  

    * தினசரி ஒரு வகைப் பழம் என்கிற கணக்கில் பழமாகச் சாப்பிடலாம்; பழச் சாறாகக் குடிக்கலாம்.

    * உடலில் தேவையான அளவு இரும்புச்சத்து இருக்கவேண்டியது அவசியம். உணவில் கிடைக்கவில்லையென்றால்,  மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரும்புச்சத்து மாத்திரைகளைச் சாப்பிடலாம்.

    * கர்ப்பிணிகளுக்கு மூன்று மாதங்கள் ஃபோலிக் ஆசிட் மற்றும் அதன் பிறகு கொடுக்கப்படும் இரும்புச்சத்து சப்ளிமென்ட்டரி மாத்திரைகளைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.

    மேலும், பிற நோய்களால் ரத்தச்சோகை ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். 
    வெயில் காலத்தில் கர்ப்பிணிகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்து வாந்தி மற்றும் வியர்வை என இருவிழிகளில் வெளிவந்து விடுவதால் உடல் மிகவும் பலவீனமாக வாய்ப்புண்டு.
    வெயில் காலத்தில் கர்ப்பிணிகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்து வாந்தி மற்றும் வியர்வை என இருவிழிகளில் வெளிவந்து விடுவதால் உடல் மிகவும் பலவீனமாக வாய்ப்புண்டு. ஆனால் இந்த சமயத்தில் தான் கர்ப்பிணிப் பெண்கள் ஒருநாளுக்கு குறைந்தது ஆறு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை இருக்கிறது. திரவ உணவு அதிகம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

    வெயில் காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மற்றொரு பிரச்சினை நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்த் தாரை நோய்த்தொற்று (Urinary tract infection). இதனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம். கர்ப்பமாயிருக்கும் முதல் மூன்று மாதங்கள் தான் குழந்தையின் கண், மூக்கு, இதயம் என எல்லா உடல் உறுப்புகள் வளரும் காலம். அதனால் இந்த சமயத்தில் நோய்த்தொற்று ஏற்படாமல் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.

    சிறுநீர்த் தாரை நோய்த்தொற்று தடுக்க வழிகள் :

    1. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
    2. எலுமிச்சம் சாற்றில் இருக்கும் அமிலத்திற்குக் கிருமிகளை அழிக்கும் திறன் இருப்பதால் எலுமிச்சைச்சாறு குடிப்பது மிக நல்லது.
    3. வேலைக்குப் போகிற பெண்கள் வேலைக்குச் செல்லும் இடத்தில் சிறுநீர் கழிக்கச் சிரமப்பட்டுக் கொண்டு தண்ணீர் குடிக்காமல் இருக்கக் கூடாது. வீட்டிலிருக்கும் போதாவது அதிகபட்சமான தண்ணீர் குடிப்பது நல்லது.



    கர்ப்பிணிப் பெண்கள் கால் வீக்கம் இருக்கிறது என்று பார்லி தண்ணீர் குடிப்பார்கள். இதனால் உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறைந்து போகும் ஆபத்து உள்ளது. விரும்புகிறவர்கள் வாரம் ஒருமுறை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

    கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் குழந்தை வளர வளர பனிக்குட நீர் குறைய ஆரம்பிக்கும். ஐந்து மாதத்தில் இருக்கும் பனிக்குட நீரின் அளவு, ஒன்பது மாதத்தில் இருக்காது. வெயில் காலத்தில் இன்னும் குறைய வாய்ப்பு உண்டு. ஆனால் குழந்தை மூச்சுவிட, வளர, அசைய என இந்த காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவு நீர்ச்சத்து தேவைப்படும். இந்த நீர் அளவு குறைந்து போனால் குழந்தையின் உடம்பில் இரத்த ஓட்டம் குறையும். இரத்த ஓட்டம் குறைந்தால் குழந்தையின் உடல் உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும்.

    குழந்தையைச் சுற்றி தண்ணீர் குறைவாக இருந்தால் குளூக்கோஸ் டிரிப்ஸ் ஏற்றவேண்டும். குறைந்திருக்கும் நீர்ச்சத்தை ஈடுசெய்ய வேண்டும். இல்லையெனில் குழந்தையால் சரியாக சுற்றிவர முடியாது. கர்ப்பப்பையில் குழந்தை ஒட்டிக் கொள்ளும். கர்ப்பப் பையானது தொப்புள் கொடியை அழுத்தும். நீர் சரியான அளவில் இருந்தால்தான் தொப்புள் கொடி மிதக்கும். அப்போது தான் குழந்தையின் உறுப்புகளுக்கு சரியான அளவில் இரத்த ஓட்டம் கிடைக்கும். அதனால் தினமும் ஆறு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் தாயும் குழந்தையும் நலமாக இருப்பார்கள்.

    நீண்ட நாள்களுக்கு இரவுப் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன.
    முடி, நகம் தவிர உடலின் அனைத்துப் பகுதிகளிலும் புற்றுநோய் ஏற்படலாம். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மார்பகப் புற்றுநோய்க்கு மட்டும் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார்  ஒரு லட்சம் பெண்கள் ஆளாகிறார்கள். சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில்தான் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். நீண்ட நாள்களுக்கு இரவுப் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன.

    நம் உடலில் தூக்கச் சுழற்சியை ஒழுங்குபடுத்துவது மெலடோனின் (Melatonin) ஹார்மோன். இந்த ஹார்மோன் இருட்டுச் சூழலில் மட்டுமே சுரக்கும். இரவில் விளக்கு வெளிச்சத்தில் பணிபுரியும்போது, உடலுக்குத் தேவையான மெலடோனின் ஹார்மோன் கிடைக்காமல் போகும். மேலும், வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுவதால், வைட்டமின் டி-யும் குறையும். இதனால் உடல்நலன் பாதிக்கப்படும்; மார்பகப் புற்றுநோயும் ஏற்படலாம்.

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், ‘டெஸ்டோஸ்டீரான்’ (Testosterone), ‘ஈஸ்ட்ரோஜென்’ (Estrogen) போன்ற பாலியல் தொடர்பான ஹார்மோன்கள் தவறான நேரத்தில், குறிப்பிட்ட அளவைவிட அதிகமாகச் சுரப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதாவது, இரவில் வேலை பார்ப்பவர்களுக்கு 10 மணி முதல் 2 மணிவரை அதிகளவில் சுரப்பது தெரியவந்திருக்கிறது. இதனால்தான் 'நைட் ஷிஃப்ட்' வேலை பார்க்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தாக்கும் ஆபத்து அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.



    இப்போது ஆண்களைவிட, பெண்கள் அதிக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மார்பகம், வாய், கர்ப்பப்பை வாய், கர்ப்பப்பைப் புற்றுநோய்களால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மார்பகத்தில் கட்டி ஏற்படுவதுதான் மார்பகப் புற்றுநோயின்  முக்கிய அறிகுறி. எனவே, பெண்கள் தங்களின் மார்பகங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

    மார்பகத்தில் சிறு கட்டி ஏற்பட்டாலும், உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், மார்பகப் புற்றுநோயை முற்றிலுமாக குணப்படுத்திவிடலாம். இதற்கு அறுவைசிகிச்சை, கீமோ தெரபி, ரேடியோ தெரபி, ஹார்மோன் தெரபி என பல மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. நோயின் நிலை, தன்மையைப் பொறுத்து அது முடிவுசெய்யப்படும்.

    பெண்கள் கோடை காலங்களில் ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் உடுத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை காக்க உடுத்தும் உடையிலும் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதுவும் சரும பிரச்சினைக்கு காரணமாகி விடும். வியர்க்குரு, அலர்ஜி உள்ளிட்ட தோல் வியாதிகளுக்கு வழிவகுத்துவிடும்.

    கோடை காலங்களில் பெண்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் உடுத்துவதை தவிர்க்க வேண்டும். அடர்த்தியான துணிகளை கொண்ட ஜீன்ஸ் உடலில் வெளிப்படும் வியர்வையை உறிஞ்சாது. அது உடலிலேயே தங்கி சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.



    மேலும் லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிவதே உடலுக்கு சவுகரியமாக இருக்கும். அதிலும் காட்டன் துணிகளை உடுத்துவதே நல்லது. உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஈரப்பதமான ஆடைகளை உடுத்தக் கூடாது. அவை நோய் தொற்று ஏற்படுவதற்கு மூலகாரணமாகிவிடும்.

    பளிச்சென்று காட்சியளிக்கும் அடர் நிறமுடைய ஆடைகளை உடுத்துவதையும் தவிர்க்க வேண்டும். அடர் நிறங்கள் சூரிய ஒளியை உள்வாங்கி உடல் உஷ்ணத்திற்கு வழிவகுக்கும். ‘கோட்’ போன்ற எடை அதிகமான ஆடைகளை அணிவதையும் தவிர்க்க வேண்டும். 
    முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    முதல் குழந்தையை பெற்று எடுத்த பின்னர், அடுத்த குழந்தையை பெற்று எடுக்க சரியான கால இடைவெளி தேவைப்படுகிறது; ஏன் இந்த கால இடைவெளி தேவை என்றால், முதல் பிரசவத்தின் போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் தழும்புகளை ஆறவும், கர்ப்பபையை பழைய நிலைக்கு கொண்டு வரவும், பெண் உடல் வலிமை பெற்று உடலளவிலும், மனதளவிலும் அடுத்த குழந்தையை ஏற்க ஆயத்தமாக வேண்டியது அவசியம்.

    முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    1. உங்களது முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால், குறைந்தது 6 மாத காலமாவது நீங்கள் காத்திருக்க வேண்டும்; ஏனெனில் சிசேரியனால், உண்டான புண்கள் ஆறவே, 3 மாதமாகும், மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும். ஆகையால், முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் வருடக்கணக்கில் இடைவெளி இருப்பது நல்லது என்கின்றனர், மருத்துவர்கள். இதுவே, உங்களுக்கு சுகப்பிரசவம் ஆகி இருந்தால், குறைந்தது ஒரு வருட இடைவெளியாவது அவசியம் ஆகும்.

    2. பிரசவத்தால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சோர்வு போன்ற உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த விஷயங்கள் குணமாக, இயல்பாக நீங்கள் குறைந்தது 12-18 மாதங்கள் என்ற கால இடைவெளியை எடுத்துக் கொள்வது நல்லது. நல்ல சத்தான உணவுகளை உண்டு, உடலை பழைய பலம் பெறச் செய்த பின்னர் அடுத்த குழந்தையை பற்றிய சிந்தனையை தொடங்குங்கள்.



    3. இந்த கால இடைவெளி ஏன் அவசியம் என்றால், உங்கள் முதல் பிரசவத்திற்கும், இரண்டாம் குழந்தையை கருத்தரிப்பதற்கும் சரியான கால இடைவெளி இல்லாமல் இருந்தால், உங்களுக்கு உடல் நலக்குறைபாடுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பிறக்கப்போகும் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நஞ்சுக்கொடி சுற்றல், நஞ்சுக்கொடி குறுக்கீடு போன்ற பற்பல உடல் நலக் குறைபாடுகளும், முதல் குழந்தையை சரியாக கவனிக்க முடியாமல் அதற்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.

    4. நீங்கள் சரியாக திட்டமிட்டு இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொண்டால், நீங்கள், குழந்தை என அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழலாம்; எனவே, என்ன பிரசவமானாலும் முதல் மற்றும் இரண்டாம் குழந்தைக்கு இடையே குறைந்தது 18 மாத கால இடைவெளியாவது இருக்க வேண்டும்.

    5. கர்ப்பகாலம், தாய்ப்பால் ஊட்டும் காலம் என அனைத்திலும் உங்கள் உடல் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டிருக்கும்; எனவே, உங்கள் உடல் சரியான ஆரோக்கிய நிலையை அடைந்த பின்னர், இரண்டாம் குழந்தையை பற்றி சிந்திப்பது சிறந்தது.

    6. முதல் மற்றும் இரண்டாம் குழந்தையை பெற்றுக் கொள்ளும் கால இடைவெளி குறைந்தால், பிரசவத்தில் 36-37 வாரங்களுக்கு முன்பாகவே, குறை மாதத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு;

    7. முதல் குழந்தையை பெற்று எடுத்த கொஞ்ச மாதங்களிலே அல்லது அதிக கால தாமதமாக - உதாரணத்திற்கு 35 வயதிற்கு மேல் இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டம் கொண்டாலோ மருத்துவ ஆலோசனை பெறுங்கள்; உங்கள் சூழ்நிலை எதுவாயினும், தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று, இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டமிடுங்கள்..!
    பெண்களுக்கு முப்பது முப்பத்தி ஐந்து வயதிலே மூட்டு வலி மற்றும் முதுகு வலி போன்ற பல்வேறு நோய்கள் அதிகம் வருகிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    பெண்களின் உடல்ரீதியான பெரும்பாலான பிரச்சனைகளுக்கு ஹார்மோன்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோட்டோசோன் போன்றவை சரியான நிலையில் வேலை செய்யவில்லை என்றால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையில் துவங்கி தொடர்ச்சியாக ஒவ்வொரு பிரச்சனையாக உருவாகும். அடிக்கடி உருவாகும் தலைவலி மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்குக் கூட ஹார்மோன் சமநிலையின்மையே காரணம்.

    இதனால் முப்பது முப்பத்தி ஐந்து வயதிலே மூட்டு வலி மற்றும் முதுகு வலி நோய்கள் பெண்களுக்கு அதிகம் வருகிறது. சிலருக்கு அதிக உடல் எடை, முகச் சுருக்கம், முகப்பரு, வயது மூப்புத் தோற்றம் போன்றவையும் வருகிறது. 80% பெண்கள் இத்தகைய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். தினம் ஒரு முறையாவது கீழே உட்கார்ந்து எழ வேண்டும். மேலும் இன்டியன் டாய்லெட் பொஸிஸன் பயன்படுத்த வேண்டும். இதனால் இடுப்பு எலும்பு வலுப்பெறும்.

    நமது உணவு முறைகளும் இயற்கையானதாக இருத்தல் வேண்டும். உணவில் பச்சை நிற காய்கறி, பால், தயிர், முட்டை, மீன் போன்ற உணவுகளை தொடர்ச்சியாக சேர்க்க வேண்டும். பெண்கள் மாதவிடாய் சுழற்சி பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுதல் வேண்டும். கர்ப்பப்பையினை மாதாமாதம் சுத்தப்படுத்துவதே மாதவிடாய். 35 நாட்களுக்கு மேல் பீரியட்ஸ் வரவில்லை என்றால் கர்ப்பப்பை பிரச்சனை. மாதவிடாய் பிரச்சனையில் துவங்கும் இது குழந்தையின்மை பிரச்சனைவரை கொண்டு செல்லும்.

    நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் சுத்தமாக்க வழி உள்ளது. இதயம், வயிறு, கர்ப்பப்பை போன்றவற்றை வேலை செய்ய வைத்து சுத்தப்படுத்த அதற்கென சில யோகா பயிற்சிகள் உள்ளன. ஜிம்முக்கு போய் உடலை சரிபண்ணினால் வெளித்தோற்றம் மட்டும்தான் மாறும். ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை விட்டுவிட்டால் உடல் இரண்டு மடங்கு எடைபோடும். ஜிம்மில் உடலின் உள்உறுப்புகள் வேலை செய்யாது.

    யோகா உள் உறுப்புடன் தொடர்புடையது. நம் உடல் எடை மெதுவாகக் குறையும். ஆனால் மறுபடி ஏறாது. தினம் ஒரு 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை செய்தால் போதும். இதனால் பெண்களுக்கு ஹார்மோன்கள் மூலம் வரும் சிக்கல்கள் சரியாகும். பீரியட்ஸ், குழந்தையின்மை, மெனோபாஸ் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். இதனால் மன அழுத்தத்தில் இருந்தும் பெண்கள் விடுதலை பெறலாம். 
    இளம் தாய்மார்கள் மன அழுத்தத்திற்குள் சிக்காமல் இருக்க, குழந்தையை பராமரிப்பதிலும், தன்னை பராமரிப்பதிலும் அவர்கள் அதிக கவனத்தை செலுத்தவேண்டும்.
    தாயாகிவிட்ட இளம் பெண்களுக்கு தங்கள் உடல் கட்டுக்கோப்பு பற்றிய கவலையும், தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய பயமும் அதிகம் ஏற்படுகிறது. அந்த கவலையையும், பயத்தையும் வளரவிடாமல் தடுக்கவேண்டும். அதற்கு அவர்களது குடும்பத்தினரின் உதவி மிக அவசியம். மாறாக இளம் தாய்மார்களை தனிமையில் தடுமாறவிட்டால், அவர்கள் குழப்ப சிந்தனைகளை உருவாக்கி, மன அழுத்தத்திற்கு உள்ளாகிவிடுவார்கள்.

    இளம் தாய்மார்கள் மன அழுத்தத்திற்குள் சிக்காமல் இருக்க, வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் தானே செய்து முடிப்பேன் என்று அடம்பிடிக்கக்கூடாது. வேலைகளை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொடுத்துவிட்டு, குழந்தையை பராமரிப்பதிலும், தன்னை பராமரிப்பதிலும் அவர்கள் அதிக கவனத்தை செலுத்தவேண்டும். அவர்களுக்கு எத்தனை வேலைகள் இருந்தாலும், அதை எல்லாம் சற்று நேரம் ஒதுக்கிவைத்துவிட்டு தியானம் செய்யவேண்டும்.

    பிரசவமான ஒருசில நாட்களில் பெரும்பாலான தாய்மார்கள் ‘பேபி ப்ளூ’  என்ற மனோநிலை மாற்றத்திற்கு உள்ளாகிறார்கள். பொதுவாக பிரசவம் முடிந்த ஒன்றரை மாதம் வரை இந்த மன அழுத்தம் நீடிக்கலாம். பின்பு மனோநிலை இயல்புக்கு திரும்பிவிடும். ஆனால் அதுவாகவே நீங்கிவிடும் என்று நினைத்துக்கொண்டிருக்காமல், அதனை போக்கும் வழி பற்றி சிந்தித்து, அந்த அழுத்தத்தில் இருந்து தாய்மார்கள் முடிந்த அளவு சீக்கிரம் விடுபட வேண்டும்.

    இதற்கான ‘மருந்தை’ குழந்தையிடமிருந்தும், கணவரிடமிருந்தும், பெற்றோரிடம் இருந்தும் தாயால் பெற முடியும். சிரித்து, விளையாடி, வருடி, அணைத்து குழந்தையிடமிருந்து அந்த மருந்தை பெறலாம். கணவரிடமும் மனம்விட்டுப்பேசி மருந்துபோல் அந்த மகிழ்ச்சியை பெறலாம். பிரசவத்தின் கடைசி மாதங்களில் வயிற்றில் குழந்தை இருப்பதை காரணங்காட்டி மனைவியை வெளியே அழைத்துச் செல்லாதவர்கள், குழந்தை பிறந்த பின்பு அந்த நிலையை படிப்படியாக மாற்ற வேண்டும்.



    பாதுகாப்பான முறையில் மனைவியை வெளியே அழைத்துச்செல்ல முன்வரவேண்டும். மனைவி குழந்தையோடு கணவரும் பொழுதுபோக்கவேண்டும். மனைவிக்கு தேவையான ஓய்வு கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். தாயின் பெற்றோரும் மனநிலை அறிந்து பழகி, உற்சாகப்படுத்தவேண்டும். பிரசவித்த தாய் பாசிட்டிவ்வான சிந்தனைகளை மனதில் உருவாக்கி, எப்போதும் மகிழ்ச்சி குறையாமல் பார்த்துக்கொண்டால் இந்த மன அழுத்தத்தில் இருந்து எளிதில் மீண்டுவிடலாம்.

    பிடித்த தியானத்தை செய்தால், மூளையில் நல்ல மாற்றங்கள் உருவாகும். என்டோர்பின் என்ற ஹார்மோன் அதிகமாக சுரந்து மனதை அமைதியாக்கிவிடும். அதனால் தாய்மார்கள் ஆர்வமாக தியானம் மேற்கொள்ளவேண்டும். தினமும் எட்டுமணி நேரம் ஆழ்ந்து தூங்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்களின் மனதும், உடலும் மகிழ்ச்சியாக இருந்தால்தான் குழந்தையின் வளர்ச்சியும் சிறப்பாக அமையும்.

    இன்றைய வாழ்க்கைமுறை எல்லாவிதத்திலும் பெண்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கும்விதத்தில்தான் இருக்கிறது. அதில் சிக்கிக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக வாழும் கலையை ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ளவேண்டும். அது கடினமில்லை. எளிதுதான். நீங்கள் மனது வைத்தால் போதும்!
    இன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் காலம் தவறிய மாதவிடாய் பிரச்சனை இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் காலம் தவறிய மாதவிடாய் (Irregular periods) பிரச்சனை இருக்கிறது.  நமது கர்ப்பப்பையிலோ அல்லது சினைப்பையிலோ நீர்க்கட்டி (PCOS - Polycystic ovary syndrome), ஹார்மோனின் சம்மற்ற நிலை என்று இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இந்த ஹார்மோன்களின் சமமற்ற நிலை தான் உடல் எடை அதிகரிப்புக்கு காரணம்.

    இதுபோன்ற ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் சிக்கல் வருவதை அதிகமாக இருப்பதை பார்க்கிறோம். நம்முடைய உணவு முறை மாற்றம், லைஃப் ஸ்டைல் சேஞ்ச், மன அழுத்தம் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சரியான அளவில் புரதச் சத்து, இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவினை எடுத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி மற்றும் யோகாவின் மூலமே இந்த ஹார்மோன் சமமற்றநிலையினை சரி செய்து, காலம் தவறும் மாதவிடாய் பிரச்னையை சரிசெய்துவிடலாம்

    மாதவிடாய்க்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இதன் விகிதம் சரியாக இருக்க வேண்டும். மற்றவை பற்றி பேசும் முன்பு ஒரு விஷயம். அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    ஹார்மோனை ரெகுலரைஸ் செய்ய, ஆளி விதைகள் மற்றும் சோம்பினை சரிவிகிதத்தில் எடுத்து, அதில் சிறிது ஓம நீரினை விட்டு, உண்ணலாம்.

    ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து, தேன் கலந்து குடிக்கலாம். இதில் Anti-inflammatory, Anti-diabetic, ஈஸ்ட்ரோஜன் போன்றவை இருப்பதால், நமது உடலிலும் கர்ப்பப்பையிலும்இருக்கும் அழுக்குகளை நீக்கப் பயன்படுகிறது. அதனால், அடுத்த மாதவிடாய்க்கு தேவையான எண்டோமெட்ரியம் ஃபார்மேஷன் சரியாக நடக்கும்.

    எள்ளுருண்டை சாப்பிடலாம். அதிலும், கருப்பு எள்ளுருண்டை மிகவும் நல்லது. இதில் இருக்கும் நல்ல கொழுப்பு, கால்சியம், மெக்னீஷியம் போன்றவை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்கவும், எலும்பை உறுதி செய்யவும் பயன்படும். மேலும், இது உடல் எடையையும் சரி செய்யும்.



    மருத்துவர் தீபா - Naturopathyகற்றாழையை, தேங்காய்ப் பால், பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டால், கொழுப்பின் அளவைக் குறைக்கும். மேலும், ஓவேரியன் ஸ்ட்ரெஸ் லெவலையும் சரிசெய்யும்.

    ஒரு நெல்லிக்காய் 10 ஆப்பிள்களுக்குச் சமம். அதில், விட்டமின் சி இருப்பதால், அயர்ன் அப்சார்ப்ஷனுக்கு உதவும். வெறுமனே அயர்ன் அதிகமாக இருக்கும் உணவினை எடுத்துக்கொள்வதாலே உடம்பில் இரும்புச் சத்து அதிகமாகிவிடாது. விட்டமின் சி உணவுதான் அப்சார்ப்ஷனைக் கொடுக்கும். எனவே, நெல்லிக்கனி அவசியம்.

    நெல்லிக்காயை முதல் நாள் தேனில் ஊறவைத்து, மறுநாள் உண்ணலாம். ஆனால், கடைகளில் விற்கும் நெல்லிக்காய் கேண்டியை வாங்கிச் சாப்பிடாதீர்கள்.

    வெந்தயம் சாப்பிடலாம். அதில், குளூகோஸ் மெட்டபலிசம் தன்மை உள்ளது. நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், ஹார்மோனை ரெகுலேட் செய்யப் பயன்படும்.

    மாதுளைப்பழமே நம் கர்ப்பப்பை வடிவத்தில்தான் இருக்கும். அது, பீரியட்ஸை ரெகுலரைஸ் செய்ய பெரிய அளவில் உதவும். பீட்ரூட் மற்றும் கேரட்டை இணைத்து, சாப்பிடலாம்.

    சிலருக்கு பீரியட்ஸ் மூன்று-நான்கு மாதங்கள் கழித்து வரும் போது, இயல்பிற்கு மீறியதாக ஏழு நாள்களுக்கு மேல் கூட அதிக ஃப்ளோ இருக்கும். கட்டிகட்டியாக இரத்தப்போக்கு இருக்கும். அவர்கள்,கருஞ்சீரகம் சாப்பிட வேண்டாம். அவர்கள் வாழைப்பூவை வறுத்து தயிருடன் சேர்த்துச் சாப்பிடலாம். பொட்டுக்கடலையை நெய்யுடன் வறுத்து, உலர்ந்த திராட்சையுடன் எடுத்துக்கொண்டால், அது அதிகப்படியான ஃப்ளோவினை சரி செய்யும்.

    ஆனால், சீரற்ற மாதவிடாய் இருப்பவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக கருஞ்சீரகத்தை எடுத்துக்கொண்டு வந்தால், அந்தப் பிரச்சனையை சரி செய்யும்.

    அடுத்ததாக, சிலருக்கு மாதவிடாய் சரியாக வரும். ஆனால், சரியான ஃப்ளோ இருக்காது. இதனைத் தவிர்க்க இரும்புச் சத்து அதிகமான உணவைச் சாப்பிட வேண்டும். பேரீச்சை, உலர்ந்த திராட்சை, அத்தி,மாதுளை, கருவேப்பிலை ஜூஸ், அகத்திக்கீரை, சுண்டக்காய் ஆகியவற்றை உண்பதன் மூலம் இதனைச் சரி செய்யலாம்.
    குழந்தையின்மைப் பிரச்சனை எந்தக் காரணத்தால் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கான சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் சரிசெய்துவிட முடியும்.
    குழந்தையின்மைப் பிரச்சனையில் பெண்ணிடம் குறை இருந்தாலும், ஆணிடம் குறை இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பெண்களின் மீதே பழி விழுகின்றன. இதற்கெல்லாம் காரணம், குழந்தையின்மை என்பது குடும்பப் பிரச்னை என்பதைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறி நிற்பதுதான்,

    ஆண், பெண் இருவருக்குமே குறைபாடு இருக்க வாய்ப்புண்டு. முதலில், தம்பதியரில் யாருக்குக் குறைபாடு என்பதைக் கண்டறிய வேண்டும். இதைக் கண்டறிய மருத்துவத்தில் இப்போது பல நவீனத் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. குறைகளைக் கண்டுபிடித்துவிட்டால் எளிதாகச் சரிசெய்துவிடலாம்.

    குழந்தையின்மைக்கு ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடும், பெண்களுக்கு உடல்பருமன் பிரச்சனையுமே இதற்கான முக்கியக் காரணங்கள். உடலுழைப்பின்மை, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்காமல் இருப்பதுதான் உடல் பருமன் ஏற்படக் காரணம். எனவே, சிறுவயதிலிருந்தே போதிய உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி செய்து உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாகப் பெண்களுக்கு பி.சி.ஓ.டி (Polycystic Ovarian Disease) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டியும் குழந்தையின்மைக்கு ஒரு காரணம். வாழ்வியல் மாற்றங்கள், தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் சினைப்பை நீர்க்கட்டி ஏற்படுகிறது.

    அதிக மனஅழுத்தம், ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். வலியுடன் கூடிய மாதவிடாய், தாமதமாக மாதவிடாய் வருவது போன்றவற்றுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 21 வயதுக்கு மேல், அதிகபட்சம் 30, 35 வயதுக்குள் திருமணம் செய்துவிட வேண்டும். தைராய்டு பிரச்சனை இருந்தாலும் உடல் பருமன் அதிகரிக்கும். எனவே தைராய்டு பிரச்சனைக்கான சிகிச்சைகளை உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.



    கருத்தரித்தலில் பிரச்சனை இருந்தால், மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால் சரிசெய்துவிடலாம். இது சரிசெய்யக்கூடிய ஒரு பிரச்சனைதான்.

    ஆண்களுக்கு எதனால் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது... தவிர்ப்பது எப்படி?

    ``மனஅழுத்தம், புகைப்பிடித்தல், மது அருந்துதல், உடல்சூடு மற்றும் மரபணுரீதியான பிரச்சனைகள் ஆகியவையே ஆண்மைக்குறைபாட்டுக்குக் காரணங்கள். இவை தவிர, சிறுவயதிலிருந்தே இரண்டு விதைகளும் போதிய வளர்ச்சியில்லாமல் இருப்பது, விந்தணுக்கள் வரும் குழாய்களில் ஏற்படும் அடைப்பு போன்றவையும் காரணங்களாக இருக்கின்றன.

    அதிக உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இதுபோன்ற பாதிப்புகள் இருக்கும். உறவினர்களுக்குள் திருமணம் செய்துகொள்வதும் குழந்தையின்மைக்கு ஒரு காரணமாக இருக்கிறது. சில ஆண்களுக்கு விந்தணுக்களில் போதிய ஆற்றலில்லாமல் இருக்கும். குழந்தையின்மைப் பிரச்சனை எந்தக் காரணத்தால் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கான சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் சரிசெய்துவிட முடியும்.
    பலருக்கும் அதிலும் குறிப்பாக இளவயது பெண்களுக்கு தூக்கத்தில் நறநறவென பற்களைக் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    பலருக்கும் அதிலும் குறிப்பாக இளவயது பெண்களுக்கு தூக்கத்தில் நறநறவென பற்களைக் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இது பல நேரங்களில் அருகில் படுத்திருப்பவர்களின் தூக்கத்தைக் கெடுத்து விடும். இப்படி பற்களைக் கடிப்பவர்களுக்கு அப்படி அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்ற உணர்வே தோன்றுவதில்லை.

    தூக்கத்தில் பற்களைக் கடிப்பதை மருத்துவ உலகு ‘ப்ருக்ஸிஸம்’ என்கிறது. இது மன அழுத்தத்துக்கான வடிகால் இல்லாமல் போகும்போதுதான் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது என்கிறார்கள், மருத்துவர்கள். வெறுப்பு, கோபம், இயலாமை, ஏமாற்றம் என்று பல்வேறான மன அழுத்தங்களுக்கு தீர்வு காணாமல், மனதுக்குள்ளேயே போட்டு புதைத்துக்கொண்டால், அவை தூக்கத்தின் போது இப்படி வெளிப்படும் என்கிறார்கள் உளவியலாளர் கள்.

    பொதுவாக டீன்ஏஜ் பருவத்தில் இருப்பவர்கள்தான் இந்தப் பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களின் மன அழுத்தத்திற்கு தேர்வு பயம் முக்கிய காரணமாக இருக்கிறது. அதற்கடுத்து காதல் விவகாரமும் சேர்ந்து கொள்கிறது. பிரச்சினை என்னவென்று தெரிந்துகொண்டால் தீர்ப்பதும் சுலபம். பற்கள் தொடர்ந்து இப்படி நறநறவென்று அரைபடுவதால் நாளடைவில் கீழ்த்தாடையின் முன்பற்கள் தேய்ந்து, கூச ஆரம்பித்துவிடும். எந்தவொரு இனிப்பான உணவையும், சூடான அல்லது குளிர்ச்சியான பானங்களையும் சாப்பிட முடியாது. வெகுநாட்கள் இந்த பிரச்சினை தொடர்ந்தால் தாடையின் சதைகள் இறுகி முகத்தின் அமைப்பே குலைந்து போய்விடும். தாடை எலும்பை மண்டை ஓட்டோடு இணைந்திருக்கும் மூட்டுப் பகுதியும் பாதிக்கப்பட்டு வலி உண்டாக்கும்.

    தூக்கத்தில் பற்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தற்காலிக தீர்வாக ‘சாப்ட் ஸ்ப்லின்ட்’ என்ற கிளிப்பை பயன்படுத்தலாம். படுக்கப்போகும்போது மட்டும் இதை பற்களில் பொருத்திக்கொள்ளலாம். இதன் மூலம் பற்களின் கீழ் தாடையும் மேல் தாடையும் ஒட்டாமல், உரசாமல் தடுக்கலாம். ஆனாலும் இது நிரந்தரமான தீர்வு அல்ல. மன அழுத்தத்துக்கான காரணத்தை தேடி, அதைச் சரி செய்த பிறகே இந்தப் பிரச்சினையில் இருந்து முழுமையாக வெளிவர முடியும். இதற்கு நல்ல மனநல ஆலோசகரின் அறிவுரை, யோகா, தியானம் போன்ற ஆன்மிக வழிமுறைகளை நாடலாம். நல்ல பயன் தரும். நிச்சய தீர்வு கிடைக்கும்.

    சாப்ட் ஸ்பிளின்ட்
    கர்ப்பிணிகள் தங்களது வயிற்றின் அளவை வைத்து தங்களது குழந்தை ஆரோக்கியமான வளர்ச்சியை அடைந்துள்ளது, அல்லது இல்லை என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது.
    கர்ப்பமாக உள்ள பெண்கள் தங்களது வயிற்றின் அளவை வைத்து தங்களது குழந்தை ஆரோக்கியமான வளர்ச்சியை அடைந்துள்ளது, அல்லது இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். ஆனால் உண்மையில் வயிற்றின் அளவிற்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் தொடர்பு இல்லை. வயிறு சிறிதாக இருப்பவர்களுக்கு கூட ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். வயிற்றின் அளவை வைத்து குழந்தையின் அளவை கணக்கிட முடியாது என்பதற்கான காரணங்களை இந்த பகுதியில் காணலாம்.

    நீங்கள் உயரமான பெண்ணாக இருந்தால் உங்களது வயிற்றின் உயரம் அதிகமாக இருக்கும். எனவே குழந்தை மேல் நோக்கி வளரும். இதனால் வயிறு பெரிதாக தெரியாது. நீங்கள் குட்டையானவர்களாக இருந்தால், உங்களது வயிற்றின் அளவு சிறிதாக இருக்கும். எனவே உங்களது குழந்தை வெளிப்புறம் நோக்கி வளரும் இதனால் உங்களது வயிறு பெரிதாக தெரியும்.

    முதல் கர்ப்பத்தின் போது வயிற்றில் சதைகள் அதிகமாக இருப்பது இல்லை. எனவே உங்களது குழந்தையை சதைகள் இறுக பிடித்துக்கொள்கின்றன. இதனால் குழந்தை வெளிப்புறமாக நோக்கி வளருவது இல்லை. எனவே உங்களது குழந்தையின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும் கூட உங்களது வயிறு சிறிதாக தான் காணப்படும்.

    கர்ப்பப்பையிலேயே குழந்தை மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும். இதனால் குழந்தையின் நிலை மாறிக்கொண்டே இருக்கும். குழந்தை எந்த நிலையில் இருக்கிறது என்பதை பொறுத்து தாயின் வயிற்றின் அளவு மாறுபடும். இரண்டாவது பருவ காலத்தில் குழந்தை தனது நிலையை அதிகமாக மாற்றிக்கொள்ளும். பிரசவ காலம் வரும் போது குழந்தையின் நிலை கீழ் நோக்கி இருக்கும்.



    கர்ப்பமாக இருக்கும் போது நச்சுக்கொடி, தண்டு, திரவம் போன்றவை உங்களது உடலின் ஏதாவது ஒரு இடத்தில் பொருந்த வேண்டும். அப்போது உங்களது குடல் உங்களது கர்ப்பப்பைக்கு அருகில் சென்று விட்டால் உங்களது வயிறு பெரிதாக தெரியும்.

    உங்களது முந்தைய பிரசவத்தின் போது ஏற்பட்ட தழும்புகள், வயிற்றில் சேர்ந்த கொழுப்புகள் ஆகியவை உங்களது வயிற்றை பெரிதாக காட்டும். வயிறு பெரிதாக தோன்றுவதால் வயிற்றில் உள்ள குழந்தை அதிக எடையுடன் இருக்கும் என அர்த்தம் இல்லை

    உங்கள் குழந்தையை சுற்றியுள்ள திரவ அளவை பொருத்து வயிற்றின் அளவு மாறுபடும். முதல் 20 வாரங்களில், அமினோடிக் திரவத்தின் பெரும்பகுதி உங்கள் சொந்த உடல் திரவங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் கர்ப்பத்தில், உங்கள் குழந்தை அதிக அளவு அம்மோனிக் திரவத்தை உற்பத்தி செய்கிறது, முக்கியமாக நுரையீரல் சுரப்பு மற்றும் சிறுநீரகம் வெளிப்படுத்தும் திரவங்கள் இதில் அடங்கும். எனவே உங்களது வயிற்றில் எவ்வளவு திரவம் உள்ளது என்பதை பொருத்து உங்களது வயிற்றின் அமைப்பு வேறுபடும்.

    வயிற்றில் வளரும் குழந்தையின் அளவு பெற்றோர்கள் மற்றும் ஜீன்களை பொருத்து குழந்தையின் அளவு வேறுபடும். குழந்தை அளவில் பெரியதாக இருந்தாலும் கூட சிலருக்கு வயிறு சிறிதாக தான் காணப்படும். எனவே வயிற்றின் அளவை வைத்து யாராலும் குழந்தையின் அளவை கணக்கிட முடியாது.
    ×