என் மலர்tooltip icon

    சமையல்

    தினமும் சிறுதானியங்கள், கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று தினை கோதுமை ரவா தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தினை - ஒரு கப்
    கோதுமை ரவை - அரை கப்
    அரிசி மாவு - கால் கப்
    தயிர் - ஒரு கப்
    தண்ணீர் - 2 கப்
    மிளகு தூள் - 1 மேசைக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    சீரகம் - அரை தேக்கரண்டி
    இஞ்சி - 1 துண்டு
    வெங்காயம் - 2

    தாளிக்க :

    கடுகு - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    மிளகாய் வற்றல் - 2

    தினை கோதுமை ரவா தோசை

    செய்முறை :


    இஞ்சி, கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தினை அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடித்த தினை அரிசி மாவு, வறுத்த கோதுமை ரவை, அரிசி மாவு, தயிர், தண்ணீர் தேவையான உப்பு சேர்த்து ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும். வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

    கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சையாக சேர்த்து அதனுடன், மிளகு தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

    தாளிக்க வேண்டியவைகளை தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் மாவை கரண்டியில் எடுத்து அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

    சத்தான டிபன் தினை கோதுமை ரவா தோசை ரெடி.

    இதற்கு தொட்டு கொள்ள தக்காளி சட்னி, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காய்கறி மற்றும் சோயா சேர்த்து தயாரிக்கப்படும் புலாவ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும். இன்று இந்த புலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசுமதி அரிசி - 2 கப்,
    சோயா உருண்டைகள் - அரை கப்,
    கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் - அரை கப் ( பொடியாக நறுக்கி கொள்ளவும்)
    பட்டாணி - சிறிதளவு
    வெங்காயம் - 100 கிராம்,
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    தயிர் - அரை கப்,
    எண்ணெய், நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    பாஸ்மதி அரிசியைக் கழுவி, இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கால் மணி நேரம் ஊற வைக்கவும்.

    சோயாவைக் கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி பிழிந்து வைக்கவும்.

    அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

    அடுத்து அதில் நறுக்கிய காய்கறிகளை போட்டு வதக்கவும்.

    அடுத்து மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, சோயா உருண்டைகள், தயிர் சேர்க்கவும்.

    அடுத்து இதில் ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் 5 நிமிடம் 'சிம்"மில் வைத்து இறக்கவும்.

    சத்தான சுவையான சோயா வெஜிடபிள் புலாவ் ரெடி.

    இதற்கு தொட்டுகொள்ள தயிர் வெங்காயம் ரைத்தா சேர்த்து பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு மட்டன் நெஞ்செலும்பு சூப் செய்து கொடுத்தால் உடலுக்கு வலிமை கிடைக்கும். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நெஞ்செலும்பு - 1/2 கிலோ
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 2
    சீரகம், மிளகு - சிறிது
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
    உப்பு - சிறிது
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    பச்சைமிளகாய் - 2
    மஞ்சள்பொடி - சிறிது

    தாளிக்க :


    இஞ்சி, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை.

    மட்டன் நெஞ்செலும்பு சூப்

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டன் நெஞ்செலும்பை நன்றாக கழுவி வைக்கவும்.

    இஞ்சி, பெருஞ்சீரகத்தை ஒன்றுபாதியாக தட்டி வைக்கவும்.

    குக்கரில் எண்ணெய் காயவைத்து அதில் மிளகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சேர்த்து நன்றாக வதக்கவும்.

    தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் மட்டன் நெஞ்செலும்பை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பு, மஞ்சள் பொடி போட்டு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி 6 விசில் போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும்.

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பெருஞ்சீரகத்தை போட்டு தாளித்து சூப்பில் கொட்டி 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    சத்தான மட்டன் நெஞ்செலும்பு சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் நாட்டுகோழி குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நாட்டுக்கோழி - ஒரு கிலோ
    சின்ன வெங்காயம் - 10
    தக்காளி - 2
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா பவுடர் - ஒரு ஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
    தனியா தூள் - ஒரு ஸ்பூன்
    தேங்காய் - அரை மூடி
    கசகசா - ஒரு ஸ்பூன்
    முந்திரி - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    நாட்டு கோழி குருமா

    செய்முறை :

    நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தேங்காய், கசகசா, முந்திரியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.

    மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்

    உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வேக விட்டு எடுக்கவும்.

    இப்போது சூப்பரான நாட்டு கோழி குருமா தயார்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலுக்கு குளிர்ச்சியும், ஆரோக்கியமும் தரும் கஞ்சி இது. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புழுங்கலரிசி - ஒரு கப்,
    மோர் - இரண்டு கப்,
    சின்ன வெங்காயம் - 5,
    உப்பு - தேவையான அளவு.

    அரிசி மோர் கஞ்சி

    செய்முறை:

    சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் வறுத்து, ரவை போல உடைத்து கொள்ளவும்.

    இதை தண்ணீருடன் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து ஆறவிடவும்.

    பின்பு இதனுடன் உப்பு, மோர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் கலந்து சாப்பிடவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா. இன்று இந்த பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயத்தாள் - ஒரு கட்டு
    கடலை மாவு - 100 கிராம்
    சோள மாவு - 50 கிராம்
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - கால் கிலோ
    உப்பு - தேவைக்கேற்ப.

    ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா

    செய்முறை:

    வெங்காயத்தாளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கி வெங்காயத்தாளை போட்டு அதனுடன் கடலைமாவு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை பக்கோடாவாக சூடான எண்ணெயில் உதிர்த்து சிவக்க பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாயுத்தொல்லை இருக்கும் போதும், கர்ப்பிணிகள் மாதமாக இருக்கும் போதும் இந்த கஞ்சியை பருகலாம். இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :
     
    புழுங்கல் அரிசி - 1 கப்
    முருங்கைக்கீரை - 1/4 கப்
    தேங்காய் பால் - 1 கப்
    பால் - 1 கப்
    பூண்டு - 10 பல்
    இஞ்சி - 1 துண்டு
    சீரகம் - 1 1/2 ஸ்பூன்
    வெந்தயம் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    பூண்டு கஞ்சி

    செய்முறை

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

    அரிசியை தண்ணீரில் சுத்தம் செய்து குக்கரில் போட்டு 1 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் ஊற்றவேண்டும். கஞ்சி செய்வதால் தண்ணீர் 4 கப் ஊற்றவேண்டும்.

    கஞ்சிக்கு போதுமான அளவு உப்பு , பூண்டு, சீரகம், வெந்தயம், பால் கால் கப் சேர்த்து வேகவிடவேண்டும்.

    கஞ்சி கெட்டியாக சோறு பதத்தில் வெந்து இருப்பதால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மீதமுள்ள பால், முருங்கை இலை, ஆகியவற்றை கலந்து மீண்டும் நன்றாக வேகவிட்டு உப்பு சரிபார்த்து இறக்கினால் வாயுக்கஞ்சி ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குடைமிளகாயில் சட்னி, கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குடைமிளகாய், முட்டை சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 3
    வெங்காயம் - 2
    குடைமிளகாய் - 1
    ப.மிளகாய் - 1
    மிளகு சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    குடைமிளகாய் முட்டை பொரியல்

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் குடைமிளகாய் போட்டு வதக்கவும். குடைமிளகாய் நன்றாக வதங்கக்கூடாது.

    பிறகு உப்பு தூள் மற்றும் முட்டை போட்டு கிளறவும்.

    இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்

    சுவையான குடைமிளகாய் முட்டை பொரியல் ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாலக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பாலக்கீரையுடன் முட்டை சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாலக்கீரை - 2 கப்
    முட்டை - 3 ( வெள்ளைக்கரு மட்டும்)
    பெரிய வெங்காயம் - 1
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    பச்சைமிளகாய் - 1
    உப்பு - தேவையான அளவு

    பாலக்கீரை முட்டை புர்ஜி

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, தேவையான உப்பு சேர்த்து நன்றாக நீர் வற்றும் வரை மிதமான தீயில் வதக்கவும்.

    கீரை வதங்கியவுடன் முட்டையின் வெள்ளைக்கருமை மட்டும் ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் வரும் வரை வதக்கினால் பாலக்கீரை முட்டை புர்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிக்கும் லஸ்ஸி இது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரோஸ் எசன்ஸ் - 3 மேஜைக்கரண்டி
    சர்க்கரை - தேவையான அளவு
    உப்பு - ஒரு சிட்டிகை
    தயிர் - ஒரு கப்
    நட்ஸ் - அலங்கரிக்க
    ஐஸ் க்யூப்ஸ் - தேவையான அளவு

    ரோஸ் லஸ்ஸி

    செய்முறை :

    மிக்ஸியில் தயிர், ரோஸ் எசன்ஸ், உப்பு, ஐஸ் க்யூப்ஸ், சீனி சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.

    ஒரு உயரமான கண்ணாடி டம்ளர் உள்ளே ஓரங்களில் சிறிது ரோஸ் எசன்ஸை ஸ்பூனால் ஊற்றவும். பின்பு மிக்ஸியில் அரைத்த ரோஸ் லஸ்ஸியை ஊற்றவும்.

    இறுதியாக மேலே நட்ஸ் மற்றும் ரோஸ் எஸன்ஸ் ஊற்றி பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    சளி, தொந்தரவால் அவதிப்படுபவர்கள் இந்த பாலை பருகி வரலாம். விரைவில் நிவாரணம் கிடைக்கும். இன்று பூண்டு மஞ்சள் பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 கப்
    பூண்டு - 6 பல் (அரைக்கவும்)
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
    பனங்கற்கண்டு - தேவையான அளவு

    பூண்டு மஞ்சள் பால்

    செய்முறை:

    பாலுடன் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.

    கொதித்து வந்ததும் பூண்டுவை பாலில் சேர்த்து வேகவிடவும்.

    ஓரளவு வெந்ததும் பனங்கற்கண்டுவை சேர்த்து அது கரைந்ததும் இறக்கிவிடலாம்.

    சத்தான பூண்டு மஞ்சள் பால் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு விருப்பமான காளான் ஸ்டப்ஃடு தோசை செய்வது மிகவும் எளிது. இன்று இந்த ரெசிபிவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - இரண்டு கப்,
    காளான் - ஒரு கப்,
    வெங்காயம் - 2,
    மிளகுத்தூள், சீரகத்தூள், குழம்புப் பொடி - தலா ஒரு டீஸ்பூன்,
    நசுக்கிய பூண்டு - 2 பல்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    காளான் ஸ்டப்ஃடு தோசை

    செய்முறை:

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் நசுக்கிய பூண்டு, மிளகுத்தூள், குழம்பு பொடி, உப்பு சேர்த்து… பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் சுத்தம் செய்து நறுக்கிய காளான் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கி கொஞ்ச நேரம் மூடி வைக்கவும். தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் சீரகத்தூள் தூவி கிளறி இறக்கி வைக்கவும்…

    தோசைக் கல் சூடானதும், எண்ணெய் தேய்த்து, தோசை வார்த்து, காளான் கலவையை, அதன் மீது வைத்து, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவி சிறிது நேரம் மூடி வைத்து மாவு வெந்ததும் எடுத்து மடித்து பரிமாறவும்.

    இதேபோல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்து பரிமாறவும்.

    சூப்பரான காளான் ஸ்டப்ஃடு தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×