என் மலர்tooltip icon

    சமையல்

    கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. காலையில் டிபன் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு கேரட் சேர்த்து தோசை செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - இரண்டு கப்,
    கேரட் - 3,
    வெங்காயம் - 1
    பொடித்த காய்ந்த மிளகாய் - தேவைப்படும் காரத்துக்கு ஏற்ப,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    கேரட் தோசை

    செய்முறை :


    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை தோல் நீக்கி விழுதாக அரைத்து கொள்ளவும்.

    தோசை மாவில் கேரட் விழுது, பொடித்த காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    தோசை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சற்று கனமாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாளவும்.

    சூப்பரான கேரட் தோசை ரெடி.

    இந்த தோசையை எந்த சட்னியுடனும் பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, சப்பாத்தி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் கோஸ் குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டைகோஸ் - கால் கிலோ,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 2,
    தேங்காய்த் துருவல் - 1 கப்,
    பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு.

    தாளிக்க:

    பட்டை, ஏலக்காய், லவங்கம் - தலா 1,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்.

    அரைக்க:

    பச்சை மிளகாய் - 4,
    சோம்பு - 1 டீஸ்பூன்,
    தனியா தூள் - 1 டீஸ்பூன்,
    பூண்டு - 1 பல்.

    கோஸ் குருமா

    செய்முறை :


    முட்டைகோஸ் இலைகளைக் கழுவி, பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காய்த் துருவலையும் பொட்டுக் கடலையையும் அரைத்துத் தனியே வைத்து கொள்ளவும்.

    ப.மிளகாய், சோம்பு, தனியா தூள், பூண்டை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும், முட்டைகோஸ், சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.

    இதனுடன் அரைத்த ப.மிளகாய், சோம்பு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கிளறுங்கள்.

    பின்னர் தக்காளி சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள்.

    சுவையான கோஸ் குருமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாசிப்பயிறு சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த உணவாக திகழ்கிறது. இதனை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். இதனை கட்லெட்டாக செய்து சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள்

    முளைகட்டிய பாசிப்பயிறு - 1/2 கப்
    பெரிய வெங்காயம் - 1
    மிளகு பொடி - 1/2 ஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    பாசிப்பயிறு கட்லெட்

    செய்முறை


    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முளைகட்டிய பாசிப்பயிறை மிக்சியில் போட்டு கொரகொர வென்று அரைத்து கொள்ளவும்.

    அரைத்த பாசிப்பயிறில் வெங்காயம், மிளகு தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    பிசைத்த மாவை உருண்டையாக செய்து வட்டமாக கட்லட் வடிவில் தட்டி வைக்கவும். அதை பச்சையாகவே சாப்பிடலாம்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி தட்டி வைத்த கட்லெட்டுகளை போட்டு வெந்ததும திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான பாசிப்பயிறு கட்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பன்னீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர் 65 செய்வது செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள்

    பன்னீர் - கால் கிலோ
    மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    சோள மாவு - 4 டேபிள் ஸ்பூன்
    அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
    சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    தண்ணீர் - தேவைக்கு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவைக்கு

    பன்னீர் - 65

    செய்முறை:

    பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு ஆகியவற்றை அகன்ற பாத்திரத்தில் கொட்டி போதுமான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

    அவற்றுடன் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.

    அவற்றோடு சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு போன்றவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.

    இறுதியில் பன்னீர் துண்டுகளை போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பன்னீர் மசாலா கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    சுவையான பன்னீர் 65 ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பார்லியை தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பார்லி, காய்கறிகள் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பார்லி - அரை கப்,
    கேரட், பீன்ஸ், வெள்ளரிக்காய், பூசணி - ஒரு கப்,
    வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி அளவு,
    புதினா, கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு,
    மிளகு சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    அரிசி கழுவிய தண்ணீர் - 4 கப்,  
    உப்பு - தேவையான அளவு,
    எலுமிச்சைப்பழம் - அரை மூடி

    பார்லி - வெஜிடபிள் சூப்

    செய்முறை :


    கொத்தமல்லி, கொத்தமல்லி, புதினா, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காய்கறிகளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பார்லியை வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    குக்கரில் பார்லியுடன் காய்கறிகள், வெங்காயத்தாள், புதினா, கொத்தமல்லித்தழை, அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து மூடி, 4 விசில்விட்டு இறக்கவும்.

    ஆறியதும் மிளகு சீரகத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துச் சூடாக அருந்தவும்.

    சூப்பரான பார்லி - வெஜிடபிள் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சைனீஸ் உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்று தான் டிராகன் சிக்கன். இத்தகைய டிராகன் சிக்கனை எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 10 பல்
    சில்லி ப்ளேக்ஸ் - 1 1/2 டீஸ்பூன்
    தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
    சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - 1 கையளவு
    வெங்காயம் - 1
    வெங்காயத் தாள் - சிறிதளவு
    வெஜிடேபிள் ஆயில் - தேவையான அளவு

    ஊற வைப்பதற்கு…

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 1 1/2 டீஸ்பூன்
    முட்டை - 1 (வெள்ளைக்கரு மட்டும்)
    சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    டிராகன் சிக்கன்

    செய்முறை

    இஞ்சி, பூண்டு, வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சற்று நீளமாக வெட்டி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கனை போட்டு அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக பிரட்டி, தனியாக 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் அந்த சிக்கனை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, சில்லி சாஸ் சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து, கலவையை கொதிக்க விட வேண்டும்.

    கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், தீயை மிதமான சூட்டில் வைத்து, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

    இப்போது அருமையான டிராகன் சிக்கன் ரெடி!!!

    இதன் மேல் கொத்தமல்லி மற்றும் வெங்காயத் தாள் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பார்லியை டயட்டில் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என்று அனைவரும் தினமும் சாப்பிட்டு வரலாம்.
    தேவையான பொருட்கள் :

    பார்லி அரிசி - ஒரு கப்
    உப்பு - தேவையான அளவு

    பார்லி

    செய்முறை:

    பார்லி அரிசியை வாணலியில் போட்டு லேசாக வறுத்துக்கொள்ளவும்.

    ஆறிய பிறகு மிக்சியில் ரவை பதத்திற்கு பொடித்து கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் பார்லி சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

    பார்லி அரிசி கஞ்சி வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி தங்களுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அனைவருக்கும் பரிமாறவும்.

    சத்தான பார்லி கஞ்சி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேப்பகிழங்கு   - கால் கிலோ
    நல்லெண்ணெய்   - தேவையான அளவு
    வெந்தயம்  - 1\4 தேக்கரண்டி
    சின்னவெங்காயம் - 1 கைப்புடி அளவு
    கறிவேப்பிலை  - சிறிதளவு
    மஞ்சள் தூள்  - சிறிதளவு
    தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    தனியா தூள் - அரை தேக்கரண்டி
    தக்காளி சின்னது  - 2
    பூண்டு பற்கள் -5
    புளி கரைசல் - சிறு நெல்லிக்காய் அளவு புளி எடுத்து கரைசல் தயார் செய்யவும்
    தேங்காய் பால் - 150 மி.லி

    சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு

    செய்முறை :

    சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மண் சட்டியை அடுப்பில் வைத்து சட்டி நன்கு காய்ந்ததும் அதில்நல்லெண்ணை ஊற்றி அதில் வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், தனியா தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் வெட்டி வைத்துள்ள சேப்பகிழங்கை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் மூடி போட்டு வேக வைக்கவும்.

    அடுத்து அதனுடன் புளி கரைசல் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை 10 நிமிடங்கள் மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

    கடைசியாக தேங்காய் பால் சேர்த்து 10 நிமிடம் கிளறி இறக்கவும்.

    சுவையான சேப்பகிழங்கு புளிக்குழம்பு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் கோதுமை உணவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கோதுமை மாவில் ஜாலர் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - ஒரு கப்
    தேங்காய் பால் - ஒரு கப்
    தண்ணீர் - தேவைக்கு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    முட்டை - 1

    கோதுமை ஜாலர் தோசை

    செய்முறை:

    கோதுமை மாவை சலித்து வைத்து அத்துடன் முட்டை சேர்த்து தேங்காய் பால் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

    அத்துடன் மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலந்து வைத்து வடிகட்டி வைக்கவும்.

    இந்த மாவை ஒரு விரும்பிய மாடலில் கோனில் ஊற்றி கொள்ளவும்.

    நான் ஸ்டிக் பேனில் பட்டர் அல்லது நெய் தடவி விரும்பிய மாடலில் கோனில் வைத்து ஊற்றி விடவும். திருப்பிப் போட தேவையில்லை.

    சுவையான ஜாலர் தோசை ரெடி...

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், பூரி, சாம்பார் சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை பட்டாணி பொரியல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 5
    பட்டாணி - 100 கிராம்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 3
    சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகுப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

    முட்டை பட்டாணி பொரியல்

    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டாணியை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.

    பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாகக் கிளறவும்.  

    முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.  

    சூப்பரான முட்டை பட்டாணி பொரியல் ரெடி.

    சப்பாத்திக்கு மிகவும் அருமையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியம் காக்கும் கூழ் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து பருகலாம். அந்த வகையில் இன்று ஜவ்வரிசி கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - அரை கப்
    பச்சை மிளகாய் - 4
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    தண்ணீர் - 1 கப்

    ஜவ்வரிசி கூழ்

    செய்முறை:

    ஜவ்வரிசியை கழுவி இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.

    ப.மிளகாய், உப்புடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அது கொதிக்க தொடங்கியதும் அரைத்த விழுது, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    பச்சை வாசம் நீங்கியதும் ஜவ்வரிசியை கொட்டி சிறு தீயில் கொதிக்கவிடவும்.

    நன்கு கொதித்து கூழ் பதத்துக்கு வந்ததும் இறக்கி, எலுமிச்சை சாறு பிழிந்து ருசிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான மீன் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மீன் துண்டுகள் - 500 கிராம்
    முட்டை - 1
    உருளைக்கிழங்கு - 100 கிராம்
    மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    பச்சைமிளகாய் - 3
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்க

    மீன் வடை

    செய்முறை :

    மீனை கழுவி சுத்தம் செய்து வாணலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைத்து கொள்ளவும். வெந்ததும் அதை எடுத்து முள், தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.

    வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் உதிர்த்த மீன், உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் கலவையில் சிறிது எடுத்து சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும்.

    ருசியான மீன் வடை தயார்.

    இதை தோசைக்கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×