என் மலர்
குழந்தை பராமரிப்பு
உங்கள் குழந்தைகளுக்கு அன்றாடம் பணத்தை கொடுத்து பழக்கப்படுத்துவதை விட, ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் செலவுக்காக வழங்கினால், அது அவர்களிடையே ஒரு திட்டமிடுதலை ஏற்படுத்தும்.
நாம் நமது குழந்தைகளை மருத்துவராக்க வேண்டும் என்றும், பொறியாளர் ஆக்க வேண்டும் என்றும், கலெக்டர் ஆக்க வேண்டும் என்றும் கடினமாக உழைக்க சொல்கிறோம். ஆனால் நாம் நமது பிள்ளைகளுக்கு நிதியை கையாள்வது குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும் இதுவரை சொல்லி கொடுத்தது இல்லை. பொருளை ஈட்ட வேண்டும் எனில் நல்லதொரு பணியையோ, தொழிலையோ தேட வேண்டும். நல்ல ஒரு பணியை பெறுவதற்கு நமது தகுதியை வளர்க்கும் கல்வி வேண்டும். ஆனால் செல்வம் என்ற ஒன்றை நோக்கித்தான் நாம் அனைவருமே இயங்கி கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. கடையில் பணம் கொடுத்து பொருட்கள் வாங்கிய பின்னர், தாங்கள் கொடுத்த பணத்தின் மீதம் எவ்வளவு பெறப்பட்டுள்ளது என்பதை எத்தனை நபர்கள் கணக்கிட்டு சரிபார்க்கின்றனர்?
ஒரு திரையரங்கில் செலவு செய்கின்ற பணத்தையோ அல்லது ஒரு வணிக வளாகத்தில் குடும்பத்துடன் சென்று செலவழிக்கின்ற தொகையோ அதை நாம் ஈட்டுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம் என்பதை உணர்கிறீர்களா?
இ.எம்.ஐ. என்ற எளிய மாதத்தவணை முறையை வணிக உலகில் அறிமுகப்படுத்திய பின்புதான் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதாவது எவ்வளவு விலை உயர்ந்த பொருட்களாக இருந்தாலும் அதற்கு ஒரு குறைந்த முன்பணம் மட்டும் செலுத்திவிட்டு அந்த பொருளை நாம் உடமையாக்கி கொள்ள முடியும். பின்பு மீதம் உள்ள தொகையை வட்டி கணக்கிட்டு அதை அசலுடன் கூட்டிய பின் அதை சம மாதத்தவணைகளாக பிரிக்கும்போது செலுத்த வேண்டிய தொகை மிகவும் எளிதாக தெரியும்.
அதிலும் பணம் செலுத்த வேண்டிய மாதங்களின் எண்ணிக்கையின் கால அளவை அதிகரித்தால், செலுத்த வேண்டிய பணம் இன்னும் குறைவாக தெரியும். ஆனால், அதற்கான வட்டி பல மடங்கு கூடிவிடும் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்பதில்லை. நாம் வாங்கும் பொருள் நமக்கு அவசியம்தானா? என்று யாரும் சிந்திப்பதில்லை. தேவையற்ற பொருளை வாங்குவதற்காக தனது எதிர்காலத்தை அடகு வைத்துவிட்டு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தொலைத்துவிட்டு நிற்கின்றனர். குழந்தைகளுக்கு கடைகளில் பொருட்கள் வாங்கும்போது கணக்கு பார்த்து, விலையை விசாரித்து, பிற கடைகளில் ஒப்பிட்டு பார்த்து வாங்க வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொடுப்பதில்லை. எந்தவொரு செலவு செய்வதற்கு முன்னும் அந்த செலவு அவசியம்தானா என்பதை பகுத்தாய்வதற்கு அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.
தேவையற்ற செலவுகளை எந்நாளும் ஊக்கப்படுத்தாதீர்கள். உங்கள் தகுதியை பெரிதாக காட்டி கொள்வதற்காக வீண்செலவு செய்யாதீர்கள். பிள்ளைகளும் அதையே பின்பற்றுவார்கள். உங்கள் குழந்தைகளுக்கு அன்றாடம் பணத்தை கொடுத்து பழக்கப்படுத்துவதை விட, ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் செலவுக்காக வழங்கினால், அது அவர்களிடையே ஒரு திட்டமிடுதலை ஏற்படுத்தும். மேலும், செய்கின்ற செலவுகளை எழுதி வைக்க சொல்லுங்கள். அது மட்டுமல்ல அதனை கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டு பார்க்க சொல்லுங்கள். அதன் மூலம் கூடுதலாக செய்த செலவுகளும், அனாவசியமாக செய்த செலவுகளும் தெரிய வரும். அதனை தவிர்ப்பதற்கு அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும். இந்தப் பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு சிறப்பான, திட்டமிட்ட வாழ்க்கை வாழ அது வழி வகுக்கும்.
பொருளை ஈட்டுவது முக்கியமல்ல, ஈட்டிய பொருளை திறமையாக திட்டமிட்டு கையாள்வது குறித்த விழிப்புணர்வையும் நம் குழந்தைகளுக்கு நாம் வழங்கினால், நம் நாடும் பொருளாதாரத்தில் மேலும் வளர்ச்சியடையும்.

தேர்வுகளை எழுதும் டைப்-1 சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சில சலுகைகள் வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது
தமிழகத்தில் பீதியை உண்டாக்கும் வகையில் சர்க்கரை நோய் பரவி வருகிறது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், 3-ம் பாலினத்தவர் என பாகுபாடின்றி அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். தலைமுறை மற்றும் உணவுப்பழக்க வழக்கம் ஆகிய காரணங்களால் சர்க்கரை நோய் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த நோய் சிறுவர், சிறுமிகள் மற்றும் குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு வரும் சர்க்கரை நோயை டைப்-1 ‘டயாபடிஸ்’ என அழைக்கின்றனர்.
இந்த நோயால் பிறந்த குழந்தை முதலே பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், குழந்தைகளை பாதிக்கும் டைப்-1 சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் குறைவாகவே காணப்படுகிறது. பெற்றோரும் தங்களது குழந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை வெளியில் சொல்ல வெட்கப்படுகின்றனர். இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் டைப்-1 சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கர்நாடக மாநில மந்திரிகள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து நடத்த வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தொடங்கி உள்ளன.

இந்த தேர்வுகளை எழுதும் டைப்-1 சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சில சலுகைகள் வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, மத்திய கல்வி வாரியம் என்று சொல்லப்படும் சி.பி.எஸ்.இ. அமைப்பானது, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தேர்வு அறைக்குள் உணவு கொண்டு செல்லவும், அவ்வப்போது இயற்கை தேவைகளை நிறைவேற்ற வெளியே செல்லவும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல, கேரள மாநிலத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, அந்த மாநில அரசு பொதுத்தேர்வு எழுதும் டைப்-1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சலுகைகளை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு அறைக்குள் இன்சுலின் மாத்திரைகள், ஊசி, சாக்லேட், மிட்டாய், பழங்கள், தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை கொண்டு செல்லவும், சிறுநீர் கழிக்க தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலும் தற்போது பொதுத்தேர்வு தொடங்கி உள்ளது. எனவே, தமிழகத்தில் டைப்-1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு இது போன்ற சலுகைகளை வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத செல்லும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
காலங்கள் பல நம்மைக் கடந்து செல்லும். கலக்கம், பயம், சோர்வு, வறுமை, பிணி, தோல்வி அனைத்தும் நம் அன்றாட வாழ்வில் வந்து வந்து போகும். இது குறித்து கவலைப்படுவதோ, புலம்புவதோ நாம் செய்யக்கூடாத ஒன்று. இதைச் செய்வதினால் எந்தப் பயனும் இல்லை. இவற்றை வளரும் மாணவர்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் இதை கருத்தில் கொள்ளவேண்டும். தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் வருமாறு:-
* தேர்வு பயம் எல்லோருக்கும் இருக்கலாம். தோல்வியை வரவழைக்கக் கூடியது பயம் மறதியைக் கூட்டும். பயத்தை விலக்கி பயிற்சியை மேற்கொள்ளும்போது உயர் என்ற உன்னத நிலை நம்மைத் தேடி வரும் என்பது திண்ணம்.
* காலத்தின் மீது பழி போடாமல், சூழ்நிலையைச் சுட்டிக்காட்டாமல் வாழ்நிலையை எதிர் நோக்கிச் செயல்படு. தேர்விற்கான காலம் குறைவுதான். மனம் இருந்தால் மார்க்கமுண்டுஎன்பர். இனியாவது செயல்படு, வரலாறு உன்னை வரவேற்கக் காத்திருக்கிறது.
* நேரத்தைத் திட்டமிடுங்கள். கால அட்டவணை ஒன்றை உங்களுக்காக தயார் செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து மணிக்கணக்கில் உட்கார்ந்து படிக்க வேண்டாம். இடையிடையே சற்றே ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
* பாடங்களைப் புரிந்து படியுங்கள். மனப்பாடம் செய்ய வேண்டிய பகுதிகளை மட்டும் மனப்பாடம் செய்யுங்கள். பாடங்களை மீண்டும் மீண்டும் படிப்பது அவசியம். ஒரு பாடத்தை படித்து முடித்ததும் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு படித்ததை மனதுக்குள் அசை போடுங்கள். படித்ததை நினைவுக்கு கொண்டு வருதல் ஒரு சிறந்த திறமை ஆகும்.
* படித்த பாடங்களை எழுதிப் பார்ப்பதும் அவசியம். குறிப்பாக கணக்குப் பாடங்களை எழுதிப் பார்க்க வேண்டும். முக்கியமான சூத்திரம், சமன்பாடுகளை எழுதிப் பாருங்கள். மி.சி.ம., மி.பெ.வ, காரணி, பகுத்தல், வர்க்கமூலம் போன்ற கணக்குகளை படித்தால் தேர்வில் எளிதாக கூடுதல் மதிப்பெண் பெறலாம்.
* உணர்ச்சி வசப்படாதீர்கள். கோபம் வேண்டாம், பதற்றம் வேண்டாம். இவை உங்களின் நினைவாற்றலை அதிகம் பாதிக்கும். இரவு அதிக நேரம் கண் விழித்துப் படிப்தைவிட, அதிகாலையில் எழுந்து படிப்பது சிறந்தது. நல்ல சத்துள்ள உணவை சாப்பிடுங்கள். அப்போதுதான் மூளை நன்றாக வேலை செய்யும். நொறுக்குத் தீனிகளை தவிர்த்திடுங்கள்.
* திட்டமிடல், தயார் நிலை மற்றும் தேர்வு எழுதும் முறை ஆகிய மூன்றையும் சரியாக பின்பற்றி செயல்படுத்துவதன் மூலம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். இந்த நிலையில் ஏற்கனவே படித்த பாடங்களைப் படிப்பது, படிக்காத பாடங்களைப் படிப்பது என்ற நிலைகள் உள்ளன. எனவே மாணவர்கள் ஓர் அட்டவணை அமைத்து அதன்படி படிப்பதற்குத் தயாராக வேண்டும்.
* தேர்வு எப்படி எழுதுவது என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். இதற்கு தேர்வில் என்ன கேள்வி கேட்கப்பட்டுள்ளது என்பதை நன்றாக உள்வாங்கிக் கொண்டு அதற்கான பதிலை தெளிவாக மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். வினாவை ஒரு முறைக்கு இருமுறை படித்துவிட்டு அதற்கு சரியான பதில் அளிப்பதே முழுமையான மதிப்பெண் பெறுவதற்கான வழி. அத்துடன் தேவையான பகுதிகளில் படங்கள், உதாரணங்களை குறிப்பிடுதல், முக்கியமான பகுதிகளில் அடிக்கோடு இடுதல் வேண்டும்.
* ஆசிரியர்களின் அறிவுறுத்தல்படி பாடங்களை எழுதிப் படித்தால் வெற்றி நிச்சயம். பழைய வினாத்தாள்கள், புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கேள்வி, பள்ளியில் நடைபெற்ற மாதிரி தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை எழுதிபார்த்தால் அதிக மதிப்பெண் பெறலாம்.
* அடித்தல் திருத்தல் இல்லாமல் தெளிவான கையெழுத்து கூடுதல் மதிப்பெண் பெற்றுத்தரும். காலை, மாலை, பகல் என திட்டமிட்டு ஒவ்வொரு பாடத்திற்கு இவ்வளவு நேரம் என ஒதுக்கி படியுங்கள்.
* பாடங்களை உடனே படிப்பதுடன், அடிக்கடி நினைவு படுத்திப் பாருங்கள். எழுதிப் பார்த்து உங்களுக்குள் திருத்திக் கொண்டால் மனதில் பதிந்தவை அழியாது. நீங்கள் செய்த தவறுகள் விளங்கும். அந்தத் தவறுகளை நீங்கள் மீண்டும் செய்ய மாட்டீர்கள். எளிதாக அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறலாம். தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் படியுங்கள்.
வெற்றி இலக்கை நோக்கிப் பயணிக்கும் அத்தனை மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!

இப்பொழுதெல்லாம் சிறுவர்கள் கூட முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். முதலில் சிறுவர்கள் சுமந்து செல்லும் புத்தகப்பை அவர்களுக்கு முதுகு வலி ஏற்படக் காரணமாயிருப்பதை காணலாம்.
சிறுவர்கள் புத்தகங்கள் மற்றும் இதரப் பொருட்கள் திணித்து வைக்கப்பட்ட மிகவும் கனமான புத்தகப்பை / முதுகுப்பையைச் சுமந்து செல்வதை அனைவரும் பார்த்திருக்கிறோம். பையிலுள்ள சுமை மிகுந்த கனமானவுடன், முதுகுப் பைகள் சிறுவர்களை கீழே இழுக்கத் தொடங்குகின்றன. வழக்கமாக முதுகுப் பைகள் உங்கள் மேல்முகுகில் ஆரம்பித்து நடுமுதுகு வரை மட்டுமே இருக்க வேண்டும்.
ஆனால் அதிக எடையினால் முதுகுப்பை, நடுமுதுகிலுருந்து இடுப்பு வரை தொங்க நேர்கிறது. இதனால் நடுமுதுகு, கீழ்முதுகு மற்றும் தோள்பட்டையில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. நாளடைவில் இவ்வழுத்தம் தசைகளை வலிமையிழக்கச் செய்து மூட்டுகள் மற்றும் தண்டுவடத்தை பாதிக்கிறது.
முதுகுப்பை அதிக எடையினால் சிறுவர்களை பின்புறம் இழுக்கிறது, ஆனால் சிறுவர்கள் முன்னே நோக்கி நடக்கின்றனர். இதனால் நாளடைவில் கீழ்முதுகுப் பகுதியில் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது. சில நேரங்களில் இதுவே கீழ் முதுகுப் பகுதியில் தொடர்ந்து அழுத்த, எலும்பு முறிவுகள் ஏற்படுகிறது.
இதனை அடுத்து சிறுவர்கள் முதுகு வலி ஏற்பட மிக முக்கிய காரணமாய் இருப்பது அலைபேசி, தொலைக்காட்சி மற்றும் கணினியுமே ஆகும்.
இன்றைய தேதியில் பிறந்த குழந்தையை தாலாட்ட அம்மாவை விட அலைபேசியே முக்கியம் என்ற நிலை. உங்களுக்கே தெரியும் உங்கள் குழந்தைகளின் ஒரு நாளில் எவ்வளவு நேரம் அலைபேசியில் கார்ட்டூன் விடீயோக்களில் மூழ்கி இருக்கிறார்கள் என்று. அவ்வாறு அவர்கள் விடியோக்கள் பார்க்கும் போது எப்படி உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று கவனியுங்கள். சிறுவர்கள் மணிக்கணக்கில் இந்த மின்னணு உபகாரணங்களுக்கு முன் அமரும் போது கூனல் தோற்றத்தில் அல்லது முதுகு குனிந்த போக்கில் உட்காராத் தொடங்குகின்றனர்.
இதனால் கீழ்முதுகுப் பகுதியில் அமைந்துள்ள உடலுக்கு அடிப்படையாய் (Foundation) இருக்கும் தசைகள் நாளடைவில் வலிமையிழந்து வலிமையற்றதாகின்றன. இது உடலில் உள்ள சமநிலையை பாதித்து சமமின்மையை உருவாக்குகின்றது. நம்முடைய உடல் ஒரு சங்கிலி போல, ஏதேனும் ஒரு பகுதி பாதிக்கப்பட்டால் கூட அது உடலின் பிற பகுதிகளையும் பாதிக்கிறது. அதுவும் சிறுவர்கள் உடல் இவ்வயதில் தான் வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது. ஆனால் நீண்ட நேரம் தவறாக உட்காருவதால் நடுமுதுகில் கூன் உண்டாக்குகின்றது. இதனால் ஒட்டு மொத்த உடல் அமைப்பே பாதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு குழந்தையும் ஏதேனும் ஒரு விளாயாட்டை விளையாட விரும்புகின்றனர் அல்லது பெற்றோர்களால் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பெற்றோர்களோ தங்கள் குழந்தைகள் விளையாடுவதால் நல்ல உடல் வலிமையையும், உடல் உறுதியும் பெறுவார்கள் என எண்ணுகின்றனர். ஆனால் ஒரு விளையாட்டு விளையாடுவதற்கு முன்னர் அதற்கேற்ற உடல் வலிமையும், அவ்விளையாட்டை விளையாட உடல் உறுதியும் குழந்தைகளிடம் உள்ளதா என்று எண்ணிப் பார்க்க தவறிவிடுகின்றனர். தவறான விளையாட்டையோ அல்லது உடல் உறுதி அதிகம் தேவைப்படும் / கடுமையான விளையாட்டுகளையோ பெற்றோர்களின் வற்புறுத்தலால் முறையான பயிற்சியின்றி விளையாடுவதால் அழுத்த எலும்பு முறிவுகள் (Stress Fracture) குழந்தைகள் கீழ் முதுகில் ஏற்படுகிறது. இது மிகவும் ஆபத்தான எலும்பு முறிவு ஆகும்.
சிறுவர்களின் தசைகள் மேற்கூரிய காரணங்களினால் மிகவும் வலிமையற்றதாய் இருக்கும் நிலையில், எந்தவொரு விளையாட்டும் தசைகளின் வலிமையை இன்னும் மோசமாக்கி எலும்பு முறிவு ஏற்படக் காரணமாய் அமைகிறது.
குழந்தைகள் விளையாடுவதே தவறு என்பது என்னுடைய கருத்து அல்ல. எந்தவொரு விளையாட்டையும் விளையாடுவதற்கு முன்பே அதற்குரிய முறையான பயிற்சியும், சரியான உடல் வலிமையையும், சரியான வழி காட்டலும் மிகவும் அவசியம்.

மாணவ-மாணவிகளே, இறுதித் தேர்வுகள் தொடங்க உள்ளன. அதிக மதிப்பெண்கள் பெற கடைப் பிடிக்க வேண்டிய சில குறிப்புகளை இங்கே காண்போம்...

1. நம்பிக்கை
முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உறுதியான நம்பிக்கை இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும். நீங்கள் அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் நிச்சயம் அதை உங்களால் அடைய முடியும். கவலையுடனோ அச்சத்துடனோ படிக்கக் கூடாது.
2. ஆர்வம்
படிக்கும்போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும்போது கடினமான பாடம் என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய ஆர்வத்தை குறைக்கின்றது. விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.
3. மறதி
மறதியை போக்க கவனமாக படியுங்கள். படிக்கும் போது யாரிடமும் பேசாதீர்கள். பாட்டு கேட்காதீர்கள், டி.வி. பார்க்காதீர்கள். அதிகாலையில் படியுங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள்.
4. அதிக நேரம்
அதிக நேரம் படிப்பிற்காக செலவு செய்ய வேண்டும். படிப்பில் இலக்கை நிர்ணயித்து அதை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதைவிட எப்படி படிக்கின்றோம் என்பது முக்கியம்.
5. படிக்கும் முறை
படிக்கும்போது வெறுமனே புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்காது, படிக்கும்போது வெள்ளைத்தாள், பேனா அல்லது பென்சில் வைத்துக் கொண்டு, படிக்கும் ஒவ்வொரு பக்கத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும். இப்படி செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.
6. திட்டமிடுதல்
தேர்வுக்கு படிப்பதற்கு முன்னால் நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும். ஒரு நாளில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்ட பிறகு, தினமும் இரவு தூங்கப்போகும் முன் இன்று நாம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என பரிசோதனை செய்ய வேண்டும்.
7. ஓய்வு, உணவு, உடற்பயிற்சி
எந்த நேரமும் படித்துக் கொண்டே இருந்தால் உடல் நலம் கெடும். உடலுக்கும் மூளைக்கும் நிறைய வேலை கொடுப்பதால் அதிக சக்தி செலவாகும். அதிகம் உண்டாலும், உறக்கம் வந்துவிடும். எனவே அளவாகவும் அதே சமயம் சத்துள்ள உணவாகவும் உண்ண வேண்டும்.
பெற்றோர் கவனத்திற்கு..
பெற்றோர் டி.வி. பார்ப்பதை தவிர்க்கவும். நீங்கள் டி.வி. பார்க்காமல் இருந்தால்தான் உங்கள் பிள்ளைகளும் டி.வி. பார்க்காமல் இருப்பார்கள்.
உங்கள் பிள்ளைகளிடம் கட்டாயம் செல்போன் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
கம்ப்யூட்டரில் பாட்டு கேட்பது, சினிமா பார்ப்பது, கேம் விளையாடுவது போன்றவற்றுக்கு முழுமையாக தடை போடுங்கள்.
மாணவ- மாணவிகளுக்கு நல்ல சத்துள்ள உணவை தயார் செய்து கொடுக்கவும்.
பிள்ளைகளை வெறுமனே படி படி என்பதைவிட, படிப்பதற்கான சூழ் நிலையை ஏற்படுத்திக்கொடுங்கள். படிப்பதை கண்காணியுங்கள்.
தேர்வுக்காலம் முடியும் வரை உங்களுடைய முழு கவனத்தையும் பிள்ளைகளின் மீது வையுங்கள்.
ப.பிரதிக்ஷா, 9-ம் வகுப்பு,
அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி,
கீழ்மணம்பேடு, திருவள்ளூர்.

ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள் சில வருட பயிற்சியிலேயே சாதாரண இயல்பு உடைய குழந்தைகளை போல பேசவும், பழகவும் முடிகிறது என்று முதல் கருத்திலேயே முத்திரை பதிக்கிறார், சுவர்ண லதா.
‘‘ஆட்டிசம் குறைபாட்டை சீராக்க இன்று பல மருத்துவ பயிற்சிகளும், செயல் விளக்க பயிற்சி முறைகளும் வந்துவிட்டன. அதனால் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள் சில வருட பயிற்சியிலேயே சாதாரண இயல்பு உடைய குழந்தைகளை போல பேசவும், பழகவும் முடிகிறது’’ என்று முதல் கருத்திலேயே முத்திரை பதிக்கிறார், சுவர்ண லதா.
இவர் சென்னை அண்ணா நகரில் சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சி பள்ளி ஒன்றை நடத்தி வரு கிறார். அங்கு ஆட்டிசம் பாதிப்பிற்குள்ளான குழந்தைகளும், வாய் பேச சிரமப்படும் குழந்தைகளும் பள்ளிக்கூட மாதிரியில் பாடம் பயில்கிறார்கள். வேலைவாய்ப்பு குறித்த சிறப்பு பயிற்சியும் பெறுகிறார்கள்.
‘‘என்னுடைய மகனுக்கும் ஆட்டிசம் குறைபாடு இருந்தது. அதனால் அவனுக்கான கல்வி கேள்விக்குறியானது. மகனுக்காக பல பள்ளிகளில் விசாரித்தோம். ஆனால் அவனுக்கான கல்வியும், அவனுக்கான திறன் பயிற்சிகளும் குறைவாகவே இருப்பதை உணர்ந்தோம். பல பள்ளிகளை மாற்றியபிறகும், சிறப்பு குழந்தைகளுக்கு தேவையான அம்சங்கள் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை. அதனால்தான், சொந்தமாகவே சிறப்பு பள்ளி ஒன்றை தொடங்கும் முடிவிற்கு வந்தோம். அதற்கு என் கணவர் ஹரிஹரனும் உதவினார்.’’ என்பவர், இன்று தன் மகனுக்கு கிடைக்கப்பெறாத முழுமையான கல்வியையும், சிறப்பு பயிற்சிகளையும் பல சிறப்பு குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார். அதில் பல இலவச சேவைகளும் அடங்கியிருக்கிறது.
‘‘சிறப்பு குழந்தையின் அன்னையாக நான் பல சிரமங்களை சந்தித்திருக்கிறேன். பயிற்சி பள்ளி தேடுவது, உடற்கல்வி ஆசிரியரை தேடுவது... இப்படி நான் அனுபவித்த சிரமங்களுக்கு தீர்வாகவே என் பள்ளி அமைந்திருக்கிறது. இங்கு கல்வி, உடற்பயிற்சி, திறன் வளர்ப்பு பயிற்சிகள், வேலைவாய்ப்பு சிந்தனைகள் என பலவும் பயிற்றுவிக்கப் படுகின்றன. இதை ஒரு சிறப்பு குழந்தையின் அன்னை யாகவே பகிர்ந்து கொள்கிறேன்.
குழந்தைகளின் ஆட்டிச பாதிப்புகளை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப முறையான பயிற்சி கொடுத்தால், சில வருடங்களிலேயே அவர்களை இயல்பான குழந்தைகளாக மாற்றலாம். இந்த பயிற்சி காலத்திலேயே அவர்களுக்கான கல்வி முறையாக வழங்கப்படும். இதற்கிடையில், உடல் இயக்க பயிற்சிகளும், சீரான பேச்சு பயிற்சியும் கொடுக்கிறோம். இதனால் பேச சிரமப்படும் குழந்தைகள் விரைவிலேயே பேசுகிறார்கள். மேலும் சிந்தித்தல் குறைபாடு உள்ளவர்களும், விரைவிலேயே நலம் பெறுகிறார்கள்.’’ என்பவர், சிறப்பு குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் திட்டமிடுகிறார்.
‘‘சிறப்பு குழந்தையின் அன்னையாக நான் என்னவெல்லாம் செய்ய ஆசைப்படுவேனோ, அவை அத்தனையையும் இந்த பயிற்சி பள்ளியில் கொண்டு வந்திருக்கிறேன். இங்கு சிறப்பு குழந்தைகள் படிக்கலாம். பயிற்சி பெறலாம். இயல்பான குழந்தைகளாக மாறி வீடு திரும்பலாம். மேலும் அவர்களது எதிர்காலத்தை கூட சுயமாகவே கட்டமைத்து கொள்ளலாம். அதற்கான அத்தனை வசதிகளையும், நான் ஏற்படுத்தியிருக்கிறேன். ’’ என்பவர், இதுவரை வாய் பேச சிரமப்படும் பல குழந்தைகளை வர்ம கலை ஆசிரியர் மோகன் மூலம் சீராக்கி உள்ளார். அதுபற்றி மருத்துவ அறிவும், வர்ம கலை அறிவும் நிரம்பப்பெற்ற மோகனிடம் பேசினோம்.
‘‘தாடை அசைவு பயிற்சி, வர்ம கலை பயிற்சியின் மூலம் வாய் பேச சிரமப்படும் குழந்தைகளை எளிதாக பேச வைக்கலாம். இதற்கு சில காலம் தேவைப்பட்டாலும், குழந்தைகளால் நன்றாக வாய் பேச முடியும். என்னுடைய அனுபவத்தில், 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை சிறப்பாக பேச வைத்திருக்கிறேன். மருத்துவ ரீதியான பேச்சு பயிற்சியும், வர்ம கலை பயிற்சியும் கைக்கொடுப்பதால், குழந்தைகளை பேச வைக்க முடிகிறது.’’
இந்த பள்ளியில் ஒவ்வொரு துறைக்கு பிரத்யேக ஆசிரியர்கள் இருக்கிறார்கள். சுவர்ண லதா, மோகன் ஆகியோருடன் ஜெய்ஸ்ரீ என்பவரும் சிறப்பு குழந்தைகளை மேலும் சிறப்பாக்க உதவுகிறார்.

தடுப்பூசி போட்ட பிறகு பின் விளைவுகள் வருவது பொதுவான விஷயம்தான். அதை எப்படி எதிர்கொள்வது? குழந்தைகளை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்று பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுகிறோம். அதன் பிறகு குழந்தைகளுக்கான பராமரிப்பு எப்படி இருக்க வேண்டும் எனப் பலருக்கும் தெரிவதில்லை. தடுப்பூசி போட்ட பிறகு பின் விளைவுகள் வருவது பொதுவான விஷயம்தான். அதை எப்படி எதிர்கொள்வது? குழந்தைகளை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்று பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பின்னர் மருத்துவரிடம் இதன் பிறகான பராமரிப்புகளைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஈரமான துணியை ஊசி போட்ட இடத்தில் வைத்து லேசாகத் தொட்டு தொட்டு எடுக்கவும். காய்ச்சல் வந்தால், தண்ணீரில் நனைத்த துணியை உடலில் தொட்டு தொட்டு எடுக்கவும். தடுப்பூசி போட்ட இக்காலத்தில் குழந்தைகள் குறைவாகவே சாப்பிடுவார்கள். இதற்காக பயம் வேண்டாம். அது நார்மல்தான். கொஞ்சம் அதிக கவனத்தை குழந்தைகள் மேல் வையுங்கள்.
தடுப்பூசி போட்ட இடத்தில் வலி, வீக்கம், சிவப்பாகுதல். ஊசி போட்ட பிறகு 1-2 நாட்கள் காய்ச்சல் வரலாம். எம்.எம்.ஆர் அல்லது சிக்கன் பாக்ஸ் தடுப்பூசி போட்ட பிறகு, காய்ச்சல், அரிப்பு போன்றவை ஒரு வாரம் அல்லது ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்கலாம்.
குழந்தை அமைதியாக தூங்குகிறதா எனக் கவனியுங்கள். அக்குள் பகுதியில் தர்மாமீட்டர் வைத்துப் பார்க்கலாம். டிஜிட்டல் தர்மானீட்டர் பயன்படுத்தி, உடலின் வெப்பநிலையைக் கண்டறியலாம். ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கு ஒருமுறை காய்ச்சலின் வெப்பநிலையைக் கணக்கெடுங்கள்.
லேசான ஆடையை அணிவியுங்கள். பெரும்பாலான துணிகளை நீக்கிவிடுங்கள். மின்விசிறி உள்ள அறையில் குழந்தையை படுக்க வையுங்கள். காற்றோட்டம் இருக்கட்டும். நீர்ச்சத்து உணவுகளைக் கொடுங்கள்.
அலட்சியப்படுத்த கூடாத அறிகுறிகள்...
தடுப்பூசி போட்ட பிறகு, இந்தப் பிரச்னைகள் வருவது மிகவும் அரிது. ஆனால், இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும். உதடு, நாக்கு வீங்குதல், பெரிதாகுதல் அதிகமான காய்ச்சல் (39°C/102.2°F அல்லது இதைவிட அதிகம்) பலவீனமாகுதல் தூக்கம் இல்லாமல் இருப்பது தூக்கத்திலிருந்து எழுப்ப முடியாமல் போவது சாப்பிடகூட எழுந்திருக்காத குழந்தை 3 மணி நேரத்துக்கும் மேல் குழந்தை அழுது கொண்டே இருப்பது சாதாரணமாக அழுவதைவிட இயல்புக்கு மாறாக குழந்தை அழுவது சருமத்தில் சிவப்பாக திட்டு திட்டாக தோன்றுதல் உதறுதல், வலிப்பு வருவது போல இழுத்தல் வயிறு வீக்கம் மலத்தில் ரத்தம் வருதல் அடிக்கடி வாந்தி எடுத்தல் 48 மணி நேரம் ஆகியும் காய்ச்சல் இருத்தல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரிடம் செல்வது நல்லது.

தலையணை வைத்தால் குழந்தை நன்றாக தூங்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதுவே குழந்தைக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும் என்று தெரியுமா?
குழந்தைகள் பிறந்தது முதல் ஒரு வயது வரையில் அதிகமாக தூங்குவார்கள். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. அந்தநேரத்தில் இடைஞ்சல் இல்லாமல் தூங்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்யும் போது பெரும்பாலானோர் செய்யும் தவறுகளில் ஒன்று குழந்தைக்கு தலையணை வைப்பது. குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை தலையனை போட வேண்டிய அவசியமில்லை.
அதற்கு மேல் உயரமான தலையணை போட வேண்டாம். தலையணை வைத்தால் குழந்தை நன்றாக தூங்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதுவே குழந்தைக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும் என்று தெரியுமா? தலையணை வைப்பதால் குழந்தைக்கு இருக்கும் மெல்லிய நாஸ்ட்ரில்கள் அழுத்தம் பெற்று மூச்சுக்காற்று சென்று வெளிவருவதில் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தை திரும்பி படுக்கும் போது மூச்சுத்திணறலை உண்டாகும்.
பெரும்பாலான தலையணைகள் பாலிஸ்டர் அல்லது பேப்ரிக் கொண்டு தயார் செய்யப்பட்டவையாகவே இருக்கின்றன. இது குழந்தைகளுக்கு சூட்டை ஏற்படுத்திடும். கைக்குழந்தைகள் பெரும்பாலும் தூங்கிய நிலையிலேயே இருப்பதால் இது உடலுக்கும் பல கோளாறுகளை ஏற்படுத்திடும். இதனால் வரும் அதிக வியர்வை குழந்தைக்கு பாதிப்பை உண்டாக்கும். சில நேரங்களில் தலையில் அதிக சூடு, உடலில் குளிர் என வேறுபட்ட டெம்பரேச்சர் இருப்பதாலும் பாதிப்பு உண்டாகும்.
குழந்தைகளுக்கான தலையனை மிகவும் மென்மையாக இருக்க வேண்டும் என்று தேடி வாங்கியிருப்போம். குழந்தைகளுக்கு மென்மையான தலையணை தேவையில்லை மாறாக தலையணை உயரமில்லாமல் தட்டையாக இருந்தாலே போதும். நீண்ட நேரம் தூங்கும் குழந்தை உயரமான தலையனையால் குழந்தையின் கழுத்து எலும்பு பாதிக்கப்படும். இதனை தவிர்க்க தலையணை போடாமல் இருப்பதே நல்லது. இரண்டு வயது வரை தலையணை வைப்பதை தவிர்க்கவும்.

பொதுவாக ஒரு வயதுக் குழந்தை என்று வந்து விட்டாலே, உணவு கொடுப்பது என்பது குழந்தையின் அம்மாவிற்கு ஒரு பெரிய சவாலான வேலை தான்.
பொதுவாக ஒரு வயதுக் குழந்தை என்று வந்து விட்டாலே, உணவு கொடுப்பது என்பது குழந்தையின் அம்மாவிற்கு ஒரு பெரிய சவாலான வேலை தான். இந்த சவாலைத் தினமும் ஒரு முறை அல்ல, ஒவ்வொரு முறையும் உணவு மற்றும் பால் கொடுக்கும் போதும் பல தாய்மார்கள் அனுபவிக்கின்றனர். அப்படி இருக்கும் போது, உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு புதிய உணவுப் பட்டியலை அறிமுகப்படுத்தும் போது, அவனைச் சாப்பிட ஊக்குவித்து அவன் விரும்பும் வகையில் உணவைக் கொடுப்பது சற்று கடினமே. இருப்பினும், உங்களுக்கு சில ஆலோசனைகள் தர, இங்கே சில குறிப்புகள்;
* உங்கள் குழந்தையை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவைச் சாப்பிட்டு விடும்படி கட்டாயப் படுத்தாதீர்கள். போதுமான நேரம் கொடுத்து அவன் அதை மகிழ்ச்சியோடு விரும்பி உண்ணும் வரை காத்திருங்கள்.
* ஒரு வேளை அவன் சாப்பிட மறுத்தால், சற்று நேரம் அவகாசம் கொடுத்து, பின் மீண்டும் அடுத்த வாய் உணவைக் கொடுங்கள்.
* முடிந்த வரை உங்கள் குழந்தையை உணவை அவன் கைகளாலேயே எடுத்துச் சாப்பிட ஊக்கவியுங்கள். இப்படிச் செய்யும் போது, அவன் தானாகச் சாப்பிட கற்றுக் கொள்வதோடு, அவனுக்குச் சாப்பிடும் ஆர்வமும் அதிகரிக்கும்.
* அவன் சாப்பிடும் போது உணவைத் தட்டை சுற்றி கீழே சிந்தினால், விட்டு விடுங்கள். கட்டளைகள் போடாதீர்கள்.திட்டவும் செய்யாதீர்கள்.
* விளையாடிக் கொண்டே அவன் சாப்பிட விரும்பினால், அப்படியே செய்யட்டும். எனினும், அவன் சாப்பிடுகின்றானா? என்று மட்டும் கண்காணியுங்கள்.
* அவ்வப்போது சிறிது சிறிதாக ஏதாவது ஒன்றைச் சாப்பிடக் கொடுத்துக் கொண்டே இருங்கள். அவன் ஒரு வேளை சாப்பிட மறுத்தால்,அவனைக் கட்டாயப் படுத்த வேண்டாம்.
* முடிந்த வரை வெள்ளை சர்க்கரை கலந்த உணவைத் தருவதைத் தவிர்ப்பது நல்லது. மாற்றாக நாட்டு சர்க்கரை தரலாம்.
* அவன் ஒழுங்காக சாப்பிட்டால் பரிசு அளியுங்கள்.

தாயின் வயிற்றிலே தோன்றிவிடும் நிரந்தர பற்கள், பின் குழந்தையாக வெளிவந்ததும் 3 அல்லது 6 மாதங்களில் பற்கள் வெளியே முளைத்து வரத் தொடங்குகின்றன.
பற்கள் குழந்தைகளுக்கு முளைக்கும் போதெல்லாம் காய்ச்சல் வரும். பற்கள் முளைக்கும் போது, குழந்தைகள் கொஞ்சம் அதிதீவிரமாகவும் செயல்படுவார்கள். அவர்களை நாம் சரியாகப் புரிந்துகொண்டு கையாள வேண்டும். குழந்தைக்கு உண்டாகும் பற்கள் அதன் வளர்ச்சி போன்ற அனைத்தையும் தெளிவாக இப்பதிவில் பார்க்கலாம்.
குழந்தைகள் தாயின் வயிற்றில் கருவாக இருக்கையிலே 6-8வது வாரத்திலேயே பால் பற்கள் தோன்றி விடுகின்றன. கருவில் 14-வது வாரம் நிறைவடையும் போது, ஈறுகளும் பால் பற்களும் குழந்தைகளின் உடலுக்குள் தோன்றிவிடும். அதுபோல 20-வது வாரத்திலே நிரந்திரப் பற்களும் உருவாகின்றன. இப்படி 20-வது வாரத்துக்குள் குழந்தையின் உடலில் பற்கள் தோன்றவில்லை என்றால், அந்தக் குழந்தைகளுக்கு பல் முளைக்கும் வாய்ப்புகள் இல்லை.
இந்த நிலையை ‘ஆனோடோன்டியா’ என்பார்கள். சில நேரங்களில் சில நிரந்தர பற்கள் மட்டும் முளைக்காது. இந்த நிலையை ‘ஹைப்போடோன்டியா’ என்பார்கள். சில குழந்தைகளுக்கு கடைசி கடைவாய்ப்பற்கள் முளைப்பதில்லை. இது சாதாரணமாகும். ஆனால், நடுத்தர வயதில் இந்தப் பற்கள் முளைக்கும். இந்த 3-வது கடைசி கடைவாய்ப் பற்களை ‘ஞானப்பல்’ என்று அழைக்கின்றனர். கிருமித்தொற்று, டவுன் சின்ரோம், கிரவுசன் சின்ரோம் போன்ற நோய்களில் பற்கள் முளைப்பது தாமதமாகும்.
தாயின் வயிற்றிலே தோன்றிவிடும் நிரந்தர பற்கள், பின் குழந்தையாக வெளிவந்ததும் 3 அல்லது 6 மாதங்களில் பற்கள் வெளியே முளைத்து வரத் தொடங்குகின்றன.
பற்கள் எப்படி வளர்கிறது?
ஈறின் உள்பகுதியில் உள்ள எம்பிரியானிக் செல்களில் இருந்து பற்கள் தோன்றி, ஈறினைத் துளைத்து வெளிவருகிறது. முடி, நகம் போன்று பற்களும் ஒரு கடினமானத் திசுவாகும். இவை நரம்பு கிளைகளின் வேர்களைப் பிடித்துக் கொண்டு வளருகின்றன. பற்களில் உள்ள எனாமல், பல்லின் வேர் வரை பிடித்து 4 உறைகளுடன் காணப்படுகின்றன.
பற்களின் கீழே காணப்படும் பாலிக்கல் சிமின்ட் மற்றும் காற்றுத்திசு தசைப் பந்தங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. பல் முளைக்கும் நிலையானது 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு வெளியே வருகின்றன. மொட்டுப்பருவம் தொப்பிப்பருவம் மணிப்பருவம் முதிர்மணிப்பருவம் இப்படி பற்கள் வெளிநோக்கி வளர்ந்து, முழுமையான பற்களாக மாறுகின்றன.
ஏறக்குறைய 11 வயதுக்குள் பற்களின் வளர்ச்சி நிறைவுப் பெற்று, நிரந்திர பற்களின் வளர்ச்சி முழுமையடைகின்றன. குழந்தை பருவத்தில் ஒவ்வொரு 6 மாத இடைவேளியில், குறைந்தது 4 பற்கள் முளைக்கின்றன. பற்களின் வேர் வளரும்போது, பற்கள் மேல் புறமாக வளரும். 8 மாதம் - 6 வயது வரை, பற்கள் வேகமாக வளருகின்றன. ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு பற்கள் விரைவாகத் தோன்றி, விரைவாக வளர்கின்றன.
பற்கள் எளிதாக முளைக்க உதவும் உணவுகள்…
பற்கள் முளைக்கும்போது அதன் ஈறுகளில் அசைவுகள் ஏற்படுவதால், குழந்தைகளுக்கு கோபம் மற்றும் எரிச்சல் உண்டாகும். அச்சமயத்தில் பெற்றோர் தங்களுடைய சுண்டு விரலைக் கொண்டு, குழந்தையின் ஈறுகளை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். ஈறுகள் நன்கு அசைவு பெற, ரஸ்க், கேரட் போன்ற கடினமான உணவுகளை சாப்பிட கொடுக்கலாம். இவற்றைச் சாப்பிடுவதால் ஈறுகளின் அசைவு நன்றாக செயல்பட்டு, பற்கள் எளிதில் முளைக்கும். குளிர் நேரங்களில் குழந்தையை வெளியே எடுத்து சென்றால், குளிர் குழந்தையின் ஈறுகளில் படும்போது அவை மிகுந்த வலியை ஏற்படுத்தும்.
பற்கள் முளைக்கும் காலம்
6-8 மாதம் - 1வது முன் வாய்ப்பற்கள் 8-10 மாதம் - 2வது முன் வாய்ப்பற்கள் 12-15 மாதம் - 3 மற்றும் 4வது முன் வாய்ப்பற்கள் 16-18 மாதம் - 5 மற்றும் 6-ம் பின்கடை வாய்ப்பற்கள் 18-24 மாதங்கள் - 7 மற்றும் 8-ம் கோரைப்பற்கள் 20-30 மாதங்கள் - 9 மற்றும் 10-ம் பின் கடை வாய்ப்பற்கள் முளைக்கத் தொடங்குகின்றன.

பசும்பால் சிறிய குழந்தைக்கு பொருத்தமானது அல்ல. உடல்நலத்துக்கு கேடு. எந்த வயது முதல் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
பல தாய்மார்களுக்கு வரும் கேள்வி இது. பசும்பால் கொடுப்பதில் தவறு என்ன இருக்கிறது. அதைத் தானே எங்கள் பாட்டி காலத்தில் இருந்து கொடுத்து வருகிறார்கள். பசும்பால் சிறிய குழந்தைக்கு பொருத்தமானது அல்ல. உடல்நலத்துக்கு கேடு. அவற்றைப் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
ஒரு வயது முடியாத குழந்தைகளால் பசும் பாலை செரிக்க முடியாது. புரோட்டீனும் தாதுக்களும் அதிக அளவில் இருப்பதால் குழந்தைகளுக்கு பசும்பாலை செரிக்கும் தன்மை இருக்காது. இதனால் சிறுநீரக பாதிப்புகள் வரலாம். சில குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுபோக்கு பிரச்னையும் வரக்கூடும். பசும்பாலில் உள்ள அதிக அளவு புரோட்டீன் மற்றும் தாதுக்கள், குழந்தைகளின் சிறுநீரகத்துக்கு ஓவர் லோட் வேலையாக மாறும்.
பசும்பாலில் சரியான அளவு இரும்புச்சத்து, விட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் சரியான அளவில் இருக்காது. இதனால், குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும். மேலும், விட்டமின் சி, இ, காப்பர் சத்து குறைபாடு ஏற்படலாம். பசும்பாலில் உள்ள புரோட்டீன், குழந்தையின் செரிமான மண்டலத்தைப் பாதிக்கும். சில குழந்தைகளுக்கு, மலத்தில் ரத்தம் வெளியேறும் அபாயம்கூட நேரலாம். வளரும் குழந்தைகளுக்கு, ஆரோக்கியமான கொழுப்பு உடலில் சேராமல் போகலாம்.
பசும்பாலில் உள்ள விலங்கின புரோட்டீன், சிறிய குழந்தைகளின் உடல்நிலைக்கு ஏற்றது அல்ல. 6-12 மாத குழந்தைகளுக்கு, அதிக அளவில் இரும்புச்சத்து தேவை. பசும்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இச்சத்து உடலில் சேராமல் தடை ஏற்படும். குழந்தைக்கு நீங்கள் அன்றாடம் தரும் காய்கறி மற்றும் பழ ப்யூரி, அசைவ உணவுகள் மூலம் கிடைக்கும் சத்துகள், கீரைகள் மூலம் கிடைக்கும் சத்துகள் போன்றவை உடலில் சேராமல் பசும்பால் தடுத்துவிடும். குழந்தைக்கு இரும்புச்சத்து குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை ஆகியவை வரலாம்.
ஒரு வயதுக்கு மேல், பசும்பால் கொடுக்கலாம். கால்சியம், புரதம், விட்டமின் டி ஆகியவை இருப்பதால் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும். 1-3 வயது குழந்தைகளுக்கு கொழுப்பு நிறைந்த பால் தரலாம். 4 வயதுக்கு மேல், கொழுப்பு நீக்கப்படாத பால் தரலாமா எனத் தங்களின் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனைக் கேளுங்கள். ஏனெனில், சர்க்கரை நோய், உடல்பருமன் ஆகியவை மரபியல் வழியாக உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இருக்கிறதா எனத் தெரிந்து கொள்வது நல்லது.

டிவி பார்க்கும் குழந்தைகளை அதிகமாக பார்க்க விடாமல் தடுப்பது மிகமிக அவசியம். அதிக நேரம் டிவி பார்ப்பதால் குழந்தைகளுக்கு உடல் நலப்பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
குழந்தைகளை குழந்தைகளாக வளர்ப்பதும் குழந்தை பருவத்தில் சரியான வளர்ப்பை சொல்லி தருவதும் மிக மிக முக்கியம். ஹைபர்ஆக்டிவ், நடத்தையில் பிரச்னை இருக்கிறதா போன்ற சர்வேக்களை எடுத்துள்ளனர். அதில் அதிகமாக டிவி பார்த்தால் 1 வயதுள்ள குழந்தைகள் 1278 பேரும் 3 வயதுள்ள குழந்தைகள் 1345 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தனது 7 வயதுக்குள் 10% குழந்தைகள் இப்பிரச்னைகளால் பாதிப்புக்குள்ளாகின்றனர். கல்வி தொடர்பான விஷயங்களிலும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். படிப்பு, பள்ளி மீது ஆர்வம் குறைகிறது. மொழி திறனும் குறைந்து வருகிறது. டிவியில் உள்ள கார்ட்டூன்களைப் பார்த்து அங்கு பேசப்படும் மொழியை தாங்களும் பேசுகின்றனர். நட்பு நலம் கெடுகிறது. உறவுகளின் மீது உள்ள பந்தம் கெடுகிறது.
குழந்தைகள் அதிகமாக டிவி பார்த்தால் மொழி திறன் குறையும். 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் அதிகமாக டிவி பார்த்தால் கிராஸ் மற்றும் ஃபைன் மோட்டர் ஸ்கில்கள் குறையும். கை, கால்களால் செய்யும் அசைவுகள், வேலைகள் போன்றவற்றை குழந்தைகளால் அதிகமாக செய்ய முடியாது. 8 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அதிக நேரம் டிவி பார்க்கவே விட கூடாது. ஒரு மணி நேரத்துக்கு மேல் பார்க்க கூடாது என சொல்லுங்கள். 10-12 வயதில் மூளை வளர்ச்சி (முதிர்ச்சி) ஏற்படும். மைலினேஷன் எனும் வளர்ச்சி அது. அப்போதுதான் உடல், உணர்வுகள் தொடர்பான வளர்ச்சி, மனம் தொடர்பான சமூக உணர்வுகள் ஆகியவை வரும். இது முக்கியமாக காலகட்டம் அதனால் டிவி பார்க்கும் குழந்தைகளை அதிகமாக பார்க்க விடாமல் தடுப்பது மிகமிக அவசியம்.
டிவியை பார்த்துக்கொண்டே அதிகமான நொறுக்குதீனிகளை சாப்பிடுகின்றனர். நிறைய சாப்பிட்டும் போதும் என்ற உணர்வை குழந்தைகள் உணர்வது இல்லை என்பதே உண்மை. அதிக நேரம் டிவி அல்லது வீடியோ கேம்ஸ் அல்லது லேப்டாப்பில் விளையாடும் குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிட அதிகமாக அதிவேக செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
9-16 வயது குழந்தைகள் உடல்பருமனாக மாற, டிவி ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. உடலுழைப்பு இல்லாததால் குழந்தைகள் தொப்பை போட்டு உடல்பருமனாக மாறுகின்றனர். சோர்வு, ஆர்வமின்மை, சோம்பேறித்தனம், அதிகமாக உண்ணும் பழக்கம் போன்ற பிரச்னைகள் உள்ள குழந்தைகளை பெற்றோர் கவனித்து திருத்த வேண்டும்.
டிவியில் வரும் விளம்பரங்களிலும் அதிக அளவு உணவு தொடர்பான விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. அதிக சர்க்கரை கொண்ட உணவுகள், துரித உணவுகளாக வருவதால் அதைப் பார்த்து குழந்தைகளும் அவற்றுக்கு அடிமையாகின்றனர்.
குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மிக எளிமையாக டிவி மூலம் குழந்தைக்கு அறிமுகமாகிறது. வேகமாக வண்டி ஓட்டுதல், குற்றங்கள், திருடு, கொலை, வன்புணர்வு, மிரட்டல், போதைப் பழக்கம் இப்படி பலவற்றையும் குழந்தைகள் டிவி மூலம் பார்க்கின்றனர். சிறு வயதிலே இதெல்லாம் இயல்பு என்றும் இதெல்லாம் பரவலாக இருக்கும் என்பதையும் புரிந்து கொள்கின்றனர்.
நாடகங்கள் மூலமாக பொய், சூழ்ச்சி, பகை, வஞ்சம், கோபம், கவலை, பழி வாங்குதல், பதுங்கி தாக்குதல், ஏமாற்றுதல், பேராசை போன்ற எதிர்மறை குணங்களை கற்கத் தொடங்குகின்றனர். இதற்கு முழு முக்கிய காரணம் வீட்டில் உள்ள பெரியோர்கள்தான்.