என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளுக்கும் முகம், கை, கால், நெஞ்சு பகுதிகளில் பரு போல ஏற்படும். இந்த பருக்கள் வருவதற்கான காரணத்தையும், தீர்க்கும் வழிமுறையையும் காணலாம்.
    குழந்தைகளுக்கும் முகம், கை, கால், நெஞ்சு பகுதிகளில் பரு போல ஏற்படும். சிவப்பாக, திட்டு திட்டாக தெரியும். ஆனால், கைக்குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை இயல்பான ஒன்றுதான். சிவப்பான பருபோல வருவதைக் கண்டு பயப்பட தேவையில்லை. எனினும், இது நீண்ட காலம் நீடித்தால் மட்டுமே மருத்துவரை அணுக வேண்டும். பருக்கள் (Baby Acne) பிரச்னையை தீர்க்க என்னென்ன வழிகள் எனப் பார்க்கலாம்.

    இந்த பருக்கள் அதிகளவில் வர தொடங்குதல். இந்த பருக்கள் பொதுவாக வலியை ஏற்படுத்தாது. ஒருவேளை இதனால் குழந்தை அசௌகரியமாக உணர்தல். எரிச்சல், அரிப்பு போன்றவை குழந்தைக்கு ஏற்படுதல். நீண்ட காலம் நீடித்தல் போன்றவை இருக்கும் போது மருத்துவரிடம்  செல்வது நல்லது.

    பருக்கள் பிரச்சனை குழந்தைக்கு ஏன் வருகிறது?

    இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. தாய் வயிற்றில் இருந்தபோது தாயின் ஹார்மோன் மாற்றம் குழந்தையின் உடலிலும் ஏற்பட்டு அது அப்படியே தங்கி இருத்தல். குழந்தை சரியாக மலம் கழிக்காமல் இருத்தல். ஒத்துக்கொள்ளாத வானிலை மாற்றத்தால் குழந்தை அவதிப்படுதல். தாய்ப்பாலோ எச்சிலோ குழந்தையின் முகத்தில் இருத்தல். குழந்தையை சரியாக சுத்தம் செய்யாமல், பராமரிக்காமல் இருத்தல். இப்படி பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இந்தப் பிரச்னை அதிகமாக இருப்பின் சரும மருத்துவரையோ குழந்தை நல மருத்துவரையோ அணுகுவது நல்லது. குழந்தை தன் கைகள் மூலம் இன்னும் பருக்களைப் பரப்பாமல் தடுப்பது பெற்றோரின் கடமை.

    தீர்வுகள்?

    எப்போதுமே குழந்தைக்கு கெமிக்கல்கள் இல்லாத, அல்லது குழந்தைக்கு என்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மைல்டான சோப்களை பயன்படுத்த வேண்டும். ஹோம்மேட் சோப் தயாரித்து குழந்தைக்கு பயன்படுத்துவது நல்லது. இதனால் அதிக கெமிக்கல்கள் இருக்காது.

    குழந்தையை தூக்குவது, கொஞ்சுவது, உணவு ஊட்டுவது, குளிக்க வைக்கும்போதெல்லாம் கை சுத்தமாக இருக்கிறதா எனப் பரிசோதித்து கொள்வது நல்லது. குழந்தைக்கு பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. சிந்தடிக் ஆடைகளைத் தவிர்க்கலாம். அதிக டிசைன், ஃப்ரில், மணிகள் பதித்தது, ஜமிக்கி, ஜரிகை போன்ற அதிக வேளைப்பாடுகள் உள்ளவற்றைத் தவிர்க்கலாம். அதைபோல குழந்தைகளின் ஆடைகளைத் துவைக்க, மைல்டான சோப்பு தூள், துணி சோப் பயன்படுத்துவது நல்லது. சிலர் குழந்தைக்கு மூலிகை குளியல் பொடி, நலங்கு மாவு போன்றவற்றை பயன்படுத்துவர். இதுவும் குழந்தையின் சருமத்துக்கு ஏற்றது.

    பருக்கள் வந்த இடத்தில் தாங்களாக எந்த கிரீம், லோஷன் வாங்கி தடவ வேண்டாம். மருத்துவர் பரிந்துரைத்தால் பயன்படுத்தலாம். தாங்களாக மெடிக்கல் ஷாப்பில் சொல்லி, மருந்துகளை வாங்கி குழந்தைக்கு தந்தாலோ தடவினாலோ குழந்தையின் உடல்நிலையை பாதிக்ககூடும் என்பதை மறக்க வேண்டாம். மதிய வெயில், கோடை கால வெயில், சூரியன் சுட்டெரிக்கும் நேரத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வதைத் தவிர்க்கலாம்.

    குழந்தைக்கு காலை நேர இளவெயில் மட்டுமே ஏற்றது. குழந்தையை சுத்தமாக பராமரிக்கிறீர்களா எனக் கவனித்துக்கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவை குழந்தைகளுக்கு பயன்படுத்தினாலே குழந்தையின் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். பேபி மசாஜ் எண்ணெய்களை பயன்படுத்தி குழந்தையின் சருமத்தில் தடவி குளிப்பாட்டி வந்தாலும் குழந்தைக்கு எந்த சரும பிரச்னையும் வராது. 
    அடிவாங்கும் குழந்தைகள் மன ரீதியாக பாதிக்கப்படுவார்கள். சில குழந்தைகள் அடியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும். என்னென்னமோ எண்ணங்கள் குழந்தையின் மனதில் தோன்ற ஆரம்பிக்கும்.
    அடிவாங்கும் குழந்தைகள் மன ரீதியாக பாதிக்கப்படுவார்கள். சில குழந்தைகள் அடியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும். பல குழந்தைகள் கற்பனை செய்யும். மன ரீதியாக பாதிக்கும். வெறுப்பை வளர்க்கும். என்னென்னமோ எண்ணங்கள் குழந்தையின் மனதில் தோன்ற ஆரம்பிக்கும். குழப்பத்தில் மூழ்கி போவார்கள். சந்தர்ப்பம் சரியாக இல்லாமல் இருந்தால் இது குற்றத்துக்கான தொடக்கமாக மாறிபோகலாம்.

    தூக்கமின்மை, கவனக்குறைவு, எந்த செயலில் ஈடுபட மனம் இல்லாமல் போவது, உள் காயங்கள், தன்னைவிட மற்றவை முக்கியம் தாங்களே நினைத்துக்கொள்வது போன்ற பிரச்னைகள் குழந்தைகளுக்கு வரும். பெற்றோருக்கும் குழந்தைக்குமான நெருக்கம் குறையும். எதிர்மறை எண்ணங்கள், செயல்கள் அதிகரிக்கும்.

    டிவி, மொபைல், லாப் டாப் போன்றவற்றில் அதிகம் ஈடுபடும் பிள்ளைகளை அடித்துத் திருத்த முயற்சி செய்தால்… ஒன்றுமே நடக்காது... வேஸ்ட். முதலில் இதையெல்லாம் குழந்தை முன் நீங்கள் செய்துவிட்டீர்கள்… பின், குழந்தையை அடிப்பது நியாயம் ஆகாது. சில ஆய்வுகள் இப்படி சொல்கின்றன. உடல் ரீதியாக துன்பப்படும் குழந்தைகள் பிற்காலத்தில் குற்றவாளிகளாகவும் வன்முறை குணம் நிறைந்தவர்களாகவும் மாறுகின்றனர்.

    குழந்தையின் மனதில் அமைதி, அன்பு, பயம் நீங்கி வன்முறை செய்து சாதித்துவிடலாம் எனத் தோன்றும் நினைப்புக்கும் முதல் காரணம் பெற்றோர்களே. அடி வாங்கும் குழந்தைகள், பழி வாங்கும் குணத்தை பெறுவார்கள். வஞ்சத்தால் கோட்டை கட்டுவார்கள். இயல்பற்ற பிள்ளைகளாக மாறிவிடுவார்கள். அடி வாங்கும் குழந்தைகள் தனக்கு நெருக்கமானவர்கள் மீது கோபம், வன்முறை, வஞ்சம் ஆகியவற்றை செலுத்துவார்கள். அடி வாங்கும் குழந்தைகள், தாங்கள் பெற்றோர் ஆனதும் தவறான குழந்தை வளர்ப்பு முறையில் ஈடுபடுவார்கள்.

    வன்முறை அவர்களின் வாழ்வியலோடு கலந்துவிடலாம். தன் பலத்தை காட்ட முடியாமல் அடிவாங்கும் பிள்ளைகள் அந்த கோபத்தை எரிச்சலை தன்னைவிட பலம் உள்ளவர்களிடம் செலுத்தும் தூண்டுதலுக்கு ஆளாவார்கள். இது தொடக்கத்தில் சின்ன விஷயமாக இருந்தாலும் பிற்காலத்தில் ஆபத்தாகும். குழந்தைகள் மென்மையான உடல் கொண்டவர்கள். முழுமையான வளர்ச்சியை எட்டி இருக்க மாட்டார்கள். அவர்களை நீங்கள் அடிக்கும்போது தவறுதலாக எலும்பு முறிவு, கை, கால், காது, கண் பாதிப்பு, அழுது அழுது சளி, மூச்சுத்திணறல், வலிப்பு போன்றவை வரலாம். 
    குழந்தைகள் என்ன படிக்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள், எவ்வாறு வளர்கிறார்கள் என்று கூடத்தெரியாமல் பெற்றோர்கள் வீட்டில் நடந்து கொள்ளுதல் மன நிம்மதியற்ற வாழ்க்கை போராட்டத்திற்கு உங்கள் குடும்பம் போய்க்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
    ஒரு பெற்றோர், போலீஸ் நிலையம் வந்து 9-ம் வகுப்பு படிக்கும் தங்கள் மகளை அந்த தெருவில் வசிக்கும் ஒரு பையன் ஏமாற்றி கூட்டி சென்றுவிட்டான். மகளை மீட்டு தரவேண்டும் என்று கூறி கண்ணீர் மல்க புகார் கொடுத்தனர். வேறு ஒரு தம்பதி தினமும் அருகில் இருக்கும் ஒரு மளிகை கடைக்கு சென்று வந்த தன் பத்து வயது மகளிடம் அந்த கடைக்காரர் தவறுதலாக நடந்து கொண்டார். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இப்படி நடைபெறும் பல சம்பவங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறைபாட்டை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி காட்டுகின்றன.

    இப்படி குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குபவர்கள் நம்மை சுற்றியிருப்பவர்கள், நம்மிடம் தினமும் பார்த்து பேசி பழகி கொண்டு இருப்பவர்கள் என்ற உண்மை அதிர்ச்சியை அளிக்கிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் தினமும் 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 22 சதவீதம் அதிகம். இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் வேலைக்கு செல்வது, வியாபாரத்தை கவனிப்பது என்று குழந்தைகளுடன் பேசுவதற்கு கூட நேரமின்றி எந்திரக்கதியில் பரபரப்புடன் இயங்கி கொண்டு இருக்கிறார்கள்.

    குழந்தைகளிடம் அன்பு காட்டி, அரவணைத்து அவர்கள் எந்த சூழ்நிலையில், என்ன தேவையில் உள்ளார்கள் என்பதை அறிந்து அதற்கான நேரம் ஒதுக்கி அறிவு வளர்ச்சியுடன், சுற்றி நடப்பவைகள் பற்றியும், ஒழுக்கத்தையும் கற்று தரவேண்டிய கடமையும், பொறுப்புணர்வும் பெற்றோர்களுக்கு உண்டு.

    தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கணினி மயம், இணைய வசதி, ஆண்ட்ராய்டு தொலைபேசி என எல்லாவற்றிலும் குழந்தைகளும் இணைந்திருப்பதால் அவர்கள் பார்க்கக்கூடாத இணையதளங்களை பார்க்க நேரிடுகிறது. இதனால் நல்லது எது? கெட்டது எது? என்று அவர்களால் தீர்மானிக்க முடியாத நிலையில் மனசஞ்சலத்துக்கு ஆளாகிறார்கள். இதன்காரணமாக சிறு வயதிலேயே அவர்கள் கவனம் படிப்பு தவிர மற்ற விஷயங்களில் திசை மாறிச்செல்ல வாய்ப்பாக மாறிவிடுகிறது. இந்த விபரீத நிலையை தடுக்கும் விதத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் சிறுவயதிலேயே அவர்களுடன் உட்கார்ந்து பேசி, கொஞ்சி விளையாடி மகிழ்ந்து அன்புகாட்டி அரவணைத்து செல்ல வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் வாலிப பருவத்தில் வேறு நபர்களால் சொல்லும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறமாட்டார்கள். வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் வீட்டை தங்கும் விடுதிபோல பயன்படுத்தாமல் குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

    நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பது போல் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வீட்டில் நல்ல பண்புகளை குறிப்பாக பொய் கூறாமை, உண்மையாக நடத்தல், விட்டுக்கொடுத்து பழகுதல், கடின உழைப்பின் அவசியம், உடற்பயிற்சி, விளையாட்டின் அவசியம், பாடப்புத்தகம் தவிர மற்ற புத்தகங்கள் படித்தல் போன்றவற்றை சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். தேவையற்ற செயல்களில் நேரம் செலவிடுவதை தவிர்த்து முக்கிய வேலைகளில் நேரத்தை செலவிடச் செய்ய உடன் இருந்து சொல்லி கொடுக்க வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளை, பள்ளியில் படிக்கும் தோழிகளை மதித்து நடந்துகொள்ளுதல், ஒழுக்கத்துடன் பழகுதல், பேசுதல் போன்றவற்றை வீட்டிலும், பள்ளியிலும் கற்றுத்தர வேண்டும்.

    சிறுவயதிலேயே மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வாழ்கையை பாழாக்கிக்கொண்டு பெற்றோர்களையும் நிம்மதியின்றி வாழும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுவதை தடுக்க சரியான வழிகாட்டல் அவசியம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது பழமொழி. சிறு வயது முதலே நற்குணங்களுடன் வளரும் சூழ்நிலையை குழந்தைக்கு ஏற்படுத்துங்கள்.

    இக்கால பெற்றோர்கள் தான்பட்ட துன்பம் குழந்தைகள் படக்கூடாது என அவர்களின் தேவைக்கு அதிகமாகவே தேவையில்லாத வசதிகளை கேட்டவுடன் செய்வதால், குழந்தைகளுக்கு கஷ்டம் தெரிவதில்லை. கஷ்டப்பட்டு வாங்கும் எந்த பொருளுக்கும் விலை அதிகம். எந்த ஒரு பொருள் கொடுக்கும்போதும் அதன் மதிப்பு, கிடைப்பதில் உள்ள கஷ்டம் சொல்லி வளர்த்தால் அப்பொருளின் மதிப்பு உயர்ந்து நிற்கும். பள்ளிகளிலும் நீதிபோதனை வகுப்புகள் நடத்துவதன் மூலம் ஒழுக்கத்தை அவர்கள் படிக்கும் ஒரு பாடமாகவே ஒரு குறிப்பிட்ட வகுப்பு வரை சொல்லி கொடுத்தல் அவசியம்.

    மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் காட்டிலும், மனித மாண்புகளுக்கு முக்கியத்துவத்தை அளித்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற கற்றுக்கொடுக்க வேண்டும். நன்கு பள்ளியில் படித்து மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம் வாழ்கையில் வென்றுவிடவும் இல்லை, நன்றாக படித்து மதிப்பெண் எடுக்காதவர்கள் எல்லாம் வாழ்க்கையில் தோற்று விடவும் இல்லை. இது எல்லாவற்றையும் தாண்டி ஆண் பிள்ளையானாலும், பெண் பிள்ளையானாலும் சரியான முறையில் வளர்க்கப்படுகிறார்களா? என்பதை உறுதி செய்யும் பொறுப்பு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அதிகம் உள்ளது என்பதே நிதர்சன உண்மை.

    குழந்தைகள் என்ன படிக்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள், எவ்வாறு வளர்கிறார்கள் என்று கூடத்தெரியாமல் பெற்றோர்கள் வீட்டில் நடந்து கொள்ளுதல் மன நிம்மதியற்ற வாழ்க்கை போராட்டத்திற்கு உங்கள் குடும்பம் போய்க்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இதை உணர்ந்து குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்யுங்கள், அவர்களின் வாழ்க்கைக்கு வலுவான அடித்தளமாக இருங்கள். மீன்பிடிக்க கற்றுக்கொடுங்கள், நீங்கள் பிடித்த மீன்களை எவ்வளவு தொழில் நுட்பத்துடன் சேமித்தாலும், அதிக நாட்களுக்கு அவை உதவாது. சொத்தை சேமிப்பதை விட்டுவிட்டு உங்கள் குடும்ப சொத்தான உங்கள் குழந்தைகளை ஒழுக்கமான முறையில் வளர்த்து வார்ப்பு எடுத்தால் குடும்ப வாழ்க்கை இனிமையாக, மகிழ்ச்சியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

    முனைவர் ஜெ.லோகநாதன், ஐ.பி.எஸ். போலீஸ் டி.ஐ.ஜி. தஞ்சாவூர் சரகம்.
    காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கூடம், பணி செய்யும் இடம், மற்றும் பொதுஇடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அதோடு காய்ச்சலின் அறிகுறிகள் குறித்து குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
    பள்ளிக்கூடம், அனைத்து தரப்பு மாணவர்களும் கூடி இருக்கும் இடம். இங்கு வேறுபாடுகளை மறந்து குழந்தைகள் பழகுகிறார்கள். எனவே பள்ளியில் ஆரோக்கியமான சூழலை அமைத்து தர வேண்டியது பள்ளி நிர்வாகங்களின் கடமை ஆகும். அதே நேரத்தில் மாணவ-மாணவிகளும் தன்சுத்தம் பேண வேண்டும். தற்போது சீதோஷன நிலை மாற்றம் காரணமாக பல்வேறு வகைப்பட்ட காய்ச்சல் பரவி வருகிறது. எனவே காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதார துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் காய்ச்சல் பாதிப்புக்கு பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    பெரியவர்கள், குழந்தைகளை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் கொசு உற்பத்தி ஆவதற்கு வாய்ப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சாக்கடை மற்றும் கழிவு குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே கழிவுகள் தேங்குவதற்கு அனுமதிக்க கூடாது. அது போல் நல்ல நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் நோய் பரப்பும் தன்மை உடையதாக உள்ளது. எனவே டயர், தேங்காய் சிரட்டை, உடைந்த ஓடு போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி தேங்கி இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும்.

    சுகாதார பணிகளை மேற்கொள்வதில் உள்ளாட்சி அமைப்புகள் மட்டும் பணியாற்றினால் எதையும் சாதித்து விட முடியாது. ஒவ்வொரு தரப்பினரும் தங்களது பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். அப்போது தான் சுகாதார பணிகளை 100 சதவீதம் செய்ய முடியும். அதோடு, வெளிப்புற சுத்தம் போல் தன்னையும் ஒவ்வொருவரும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி உடல் நலக்குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக டாக்டர்களிடம் சென்று முறையாக சிகிச்சை பெற வேண்டும். சுயமாக மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ளக்கூடாது. அப்படி எடுத்துக் கொண்டால் அது ஆபத்தாக அமைந்து விடும்.

    காய்ச்சல், தொண்டைவலி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் உங்கள் வாய் மற்றும் மூக்கை துணியால் மூடிக்கொள்ள வேண்டும். அது போல் பயன்படுத்திய கைக்குட்டை மற்றும் துணியை நன்கு துவைத்து வெயிலில் காய வைத்து பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் எங்கு சென்றாலும் வீட்டிற்கு வந்த உடன் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். கைகளை கழுவாமல் மூக்கு, வாய் மற்றும் கண்கள் உள்ளிட்ட பாகங்களை தொடக்கூடாது.

    காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கூடம், பணி செய்யும் இடம், மற்றும் பொதுஇடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அதோடு காய்ச்சலின் அறிகுறிகள் குறித்து குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்பக்கூடாது. அப்போது தான் ஒரு குழந்தையிடம் இருந்து மற்றொருவருக்கு காய்ச்சல் பரவுவது தடுக்கப்படும்.

    ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதே ஆரோக்கியம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு விடும். நோயற்ற வாழ்வு தான் குறைவற்ற செல்வம். உடலுக்கு நோய் ஏற்பட்டு விட்டால் மனம் சக்தி இழந்து விடும். வாழ்க்கை வலி மிகுந்ததாக மாறி விடும். ஆரோக்கியமான உடல் இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும். எனவே உடலை நல்ல முறையில் பராமரிக்க முறையாக உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சத்து நிறைந்த சரிவிகித உணவுகளை உரிய நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் உடல் நலன் வலுவாக இருப்பதோடு மனநலனும் ஆரோக்கியமாக இருக்கும்.
    வீட்டில் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லித்தரவேண்டிய விஷயங்கள் பல உள்ளன. அந்த முக்கியமான விஷயங்கள் இதோ உங்களுக்காக...
    வீட்டில் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லித்தரவேண்டிய விஷயங்கள் பல உள்ளன. அந்த முக்கியமான விஷயங்கள் இதோ உங்களுக்காக...

    வீட்டை பராமரிக்க:

    இது ஒரு பெரிய விஷயமா என்று யோசிக்காதீர்கள். சின்ன சின்ன ரிப்பேருக்கெல்லாம் ஆள் தேடாமல் அதாவது ஒரு பைப் ஒழுகினால் சரி செய்ய, டியூப்லைட் மாற்ற, காஸ் சிலிண்டர் புக் செய்ய , மின்சார பில் கட்டுவது போன்ற சாதாரண அத்தியாவசியமான விஷயங்களை நாமே செய்து கொண்டிருக்காமல் குழந்தைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து பழக்கலாம்.

    வாகனங்கள் பராமரிக்க:

    வீட்டிலுள்ள வாகனங்களின் தவணைத்தொகை சரியாக கட்ட, உரிய நேரத்தில் சர்வீஸ் விட, வண்டி சம்பந்தமான பேப்பர்களை பத்திரமாக வைக்க, ஒரு புது வண்டி வாங்க வேண்டும் என்றால் என்னென்ன விஷயங்களை பற்றி ஆராய்ந்து முடிவுவெடுக்க வேண்டும் என்பன போன்றவற்றை நாம் செய்யும் போது அதனை குழந்தைக்கும் சொல்லித் தரலாம்.

    சமையல் கலை:

    ஒரு நாளில் நாம் அதிக முறை செய்து கொண்டே இருக்கும் காரியம் என்னவென்றால் அது உணவு உண்பது தான். ஆணோ பெண்ணோ அடிப்படை சமையல் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். எவ்வளவு நாள் ஸ்விக்கியை நம்பி காலம் தள்ள முடியும். விருந்து வைக்க தெரிகிறதோ இல்லையோ தனக்கு தேவையானவற்றையாவது செய்து கொள்ள அவசியம் பழக வேண்டும்.

    புத்தகம் படிப்பது:

    புத்தகங்கள் படிப்பதை சிறு வயது முதலே பழக்கி விடுங்கள். புத்தகத்தின் மீது செய்யும் செலவு ஒரு முதலீடு. பல்வேறு விஷயங்களை படிக்கத் தூண்டுங்கள். நமக்கு கடவுள் தந்திருக்கும் இந்த ஒரு வாழ்க்கையில் உலகில் உள்ள எல்லா விஷயங்களையும் அனுபவித்து தெரிந்துக்கொள் இயலாது. ஆனால் புத்தகங்களில் உள்ள நிபுணர்களின் கருத்து நமக்கு வேறு ஒரு பரிமாணத்தைக் கொடுக்கலாம். எனவே லீவு ஆரம்பிக்க போகிறது என்றால் குழந்தையையும் கூட்டிச்சென்று அவர்களுக்கு பிடித்த தலைப்பில் புத்தகங்கள் வாங்கி கொடுத்து படிக்க பழக்கலாம்.

    சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம்:

    சுற்றுப்பயணம் என்றவுடன் அயல்நாடு செல்வதை பற்றிச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். முடிந்தால் சந்தோஷமே.சுற்றுலாவின் மூலம் பல்வேறு நாடுகளில் மக்கள் எப்படி இருக்கிறார்கள், நாம் எப்படி நம் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றோ அல்லது அவர்களைவிட எப்படி சிறந்து விளங்குகிறோம் என்றோ புரிந்து கொள்ளலாம். வெளிநாடு செல்ல இயலவில்லையா பிரச்சினையே இல்லை, அடுத்த ஊருக்கு சென்று வாருங்கள். பிறந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று பண்பாடு சொல்லிக் கொடுங்கள். குறைந்தபட்சம் உறவினர் வீடுகள், திருமணங்கள் அதற்காவது அழைத்து செல்லுங்கள். குடும்பமாக பயணம் செய்யும் போதுஉறவுகளுக்கிடையே பிணைப்பு அதிகரிக்கும்.அத்தோடு பல விஷயங்களை கற்று கொள்ளலாம். கலாச்சாரம், கலைமக்கள், மண், விவசாயம், தொழில் முன்னேற்றம் என்று பலபல.

    தொழில் தொடங்க:

    ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதில் படிப்படியாக என்னென்ன விஷயங்களை மேற்கொள்ள வேண்டும், யாரை அணுகலாம்; எப்படி முதல் சேர்ப்பது, வழிகாட்டியை எப்படி தேர்ந்தெடுப்பது; மார்க்கெட் நிலவரத்தை எப்படி ஆராய்வது, போன்ற விஷயங்களை சிறு வயது முதலே சொல்லிக் கொடுக்கலாம்.

    தலைமைத்துவம்:

    இது மிக மிக முக்கியமான பண்பு. ராபின் சர்மா என்ற பிரபலமான எழுத்தாளர் “லீடர் வித்தவுட் எ டைட்டில்” என்ற புத்தகத்தில் இப்படி சொல்லியிருப்பார், “ஒவ்வொரு மனிதனும் தலைவன் தான். யாரும் பட்டம் சூட்ட தேவையில்லை. தலைவனுக்கு உள்ள குணங்களுடன் செயல்பட்டால் கிரீடம் தானாக வரும்” என்று. ஒரு தலைவன் உதாரணமாக விளங்க வேண்டும். ரிஸ்க் எடுக்க வேண்டும், தன்னைச் சார்ந்தவனை பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் அவனிடம் வேலை வாங்க தெரிந்திருக்க வேண்டும். பரந்து விரிந்த இன்டெர்நெட்டில் பல விளையாட்டுகள் இருக்கிறது. அதை சற்று படித்து நம் பிள்ளைகளுக்கு குரூப் விளையாட்டுகள் மூலம் இந்த விஷயங்களை புகட்டலாம்.

    வேலையை பகிர்வது:

    வேலை பகிர்வு செய்ய தெரிந்தால் நம் வேலைகள் மிக எளிதாக குறுகிய காலத்தில் செய்து முடிக்கலாம். அது ஒரு கலை. யாரிடம் எந்த வேலையை பகிர்வது என்று தெரிந்திருக்க வேண்டும். தினமும் டேபிள் செட் செய்வது, செடிக்கு நீர் விடுவது போன்ற சிறுசிறு வேலைகளை பகிரலாம். ஆனால் “பாவம் குழந்தை. அது போன் விளையாடட்டும் நம்மால் இயன்றவரை செய்வோம்” என்று நினைக்கிறோம். அது குழந்தைகளை வேலை பழகாததோடு வேலை பகிரவும் தெரியாமல் பின்னாளில் திணறி விடும்.

    முதலுதவி:

    அவசர நேரத்தில் செய்யக்கூடிய முதலுதவியை அனைவரும் கற்றிருக்க வேண்டும். அதுவும் சிறு வயதில் இதுபோன்ற விஷயங்களை கற்கும் போது அவர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சியும் மன நிறைவும் ஏற்படும்.

    நேர மேலாண்மை:

    நம் நேரத்தை எப்படி சாமர்த்தியமாக செலவு செய்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு வெற்றிகரமான மனிதராக வளரலாம். ஒரு நிமிடத்தின் அருமை ரயிலை தவற விட்டவருக்கு தெரியும். ஒரு நொடியின் அருமை ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவதாக வந்தவனுக்கு தெரியும்”.

    எப்படி செயல்படுத்தலாம்?

    “அது சரி இவ்வளவு விஷயத்தையும் என்ன கிளாஸா எடுக்க முடியும்” என்று கேட்கிறீர்களா? கஷ்டம்தான். ஆனால் நான் சொன்னவை எல்லாம் ஒன்றும் புதிதான விஷயங்கள் அல்ல. நீங்களும் நானும் அன்றாடம் பயன்படுத்தும் அடிபட்டு கற்றுக்கொண்ட விஷயங்கள் தாம் இவை. இதை பிள்ளைகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கான மிக எளிய வழி தினமும் இரவு குடும்பத்தோடு ஒன்றாக உணவு உண்ண வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

    ஒவ்வொருவரும் அவரவருடைய நாள் பற்றி விவரிக்கட்டும். அதில் மேல் சொன்ன விஷயங்கள் எல்லாம் உள் அடங்கியிருக்கும். அதை கையாண்ட விதத்தை பற்றி விளக்கிச் சொல்லலாம். 20 வருடங்களுக்கு தினமும் இதைச் செய்தால் மேற்சொன்னது போக இன்னும் பலபல விஷயங்களை கற்றுக்கொண்டவர்களாக உங்கள் குழந்தைகள் திகழ்வார்கள்.

    தொடர்புக்கு: director@kveg.in 
    குழந்தைகளின் முரட்டுத்தனத்தை பெற்றோர்கள் சரியான சமயத்தில் பொருட்படுத்தாமல் போனால் பெரியவர்களான பின்னரும் அந்த பிரச்சினை தொடரும்.
    சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தை பிஞ்சு பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும். தங்கள் பெற்றோரிடம் முரட்டுத் தனத்தை வெளிப்படுத்துவதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதமில்லை. முதலில் கடும் வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். சின்ன வி‌‌ஷயங்களுக்கும் கூச்சல் போடுவார்கள்.

    கெட்ட வார்த்தைகள்கூட பேசுவார்கள். குழந்தைகள் ஆசைப்படும் ஒன்றை மறுக்கும்போதோ, ஏமாற்றத்திற்கு உள்ளாகும் போதோ இப்படி தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். பொதுவாக தங்கள் தவறுகளுக்கான தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக இதுபோன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுகின்றனர். கடும் வார்த்தைகளை பயன்படுத்தியும் தங்கள் எண்ணம் நிறைவேறாத நிலையில், அவர்கள் உடல்ரீதியான வன்முறையிலும் இறங்குவதை பார்க்கலாம். பொருட்களை எறிதல், தங்களையே வதைப்பது, பொருட்களை உடைப்பது, பெற்றோரை அடிப்பது போன்றவை அடுத்த கட்டம். பொதுவாக சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதால் குழந்தையின் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது அம்மாக்கள் தான்.

    இந்த அனுபவம் அந்த அம்மாக்களை மிகவும் சங்கடத்துக்கு உள்ளாக்கும். ஆனால் குழந்தைகளின் முரட்டுத்தனத்தை பெற்றோர்கள் சரியான சமயத்தில் பொருட்படுத்தாமல் போனால் பெரியவர்களான பின்னரும் அந்த பிரச்சினை தொடரும். ஒரு குழந்தை முதல் முறை முரட்டுத்தனமான செய்கையை வெளிப்படுத்தும் போதே அதை பெற்றோர்கள் கவனித்து, கண்டிப்பது அவசியம். குழந்தையின் முரட்டுத்தனமான நடவடிக்கைகளை அப்பாவோ, அம்மாவோ யாரோ ஒருவர், மென்மையாக ஆதரித்தாலும், குழந்தை தனது போக்கை கைவிடாது.

    ஒரு குழந்தையின் உணர்வு ரீதியான ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த முரட்டு கோபத்திலிருந்து விடுபடுவது அவசியம். சுற்றியுள்ளவர்களை பாதிக்காமல் குழந்தைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு கற்றுக்கொடுப்பது அவசியமானது. விளையாட்டுகள் மற்றும் கேரம் போர்டு, சதுரங்கம் ஆகியவை மூலம் தேவையற்ற கோபத்தை குழந்தைகளிடம் படிப்படியாக குறைக்க முடியும்.

    வெற்றியை கொண்டாடுவது போன்றே தோல்வியையும் ஏற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு விளையாட்டுகள் உதவும். கம்ப்யூட்டரில் வீடியோ கேம் ஆடும் பெரும்பாலான குழந்தைகள், தாங்கள் தோற்கும் நிலை வரும் போது சுவிட்ச் ஆப் செய்துவிடுகின்றனர். எதிரில் மனிதர்கள் விளையாடாத நிலையில், அந்த அனுபவம் யதார்த்த வாழ்க்கையை கற்றுக்கொள்வதற்கு எந்த உதவியும் புரிவது இல்லை. மனிதர்களுடன் ஏற்படும் உணர்வு ரீதியான உறவுகளின் மூலமே குழந்தைகளால் கற்றுக்கொள்ள முடியும்.

    குழந்தை பருவத்தில் வெளிப்படும் முரட்டுத்தனம் அவர்கள் பெரியவர்களாகும் போதும் தொடர வாய்ப்புண்டு. அதை அலுவலக சகாக்கள், மனைவி மற்றும் குழந்தைகளிடத்தில் காண்பிக்கவும் வாய்ப்பு உண்டு. குடும்ப வன்முறை என்பது ஆண்களால் மட்டுமே பிரயோகிக்கப்படுவது என்பது பொதுவாக இருக்கும் நம்பிக்கை. ஆனால் அது உண்மை அல்ல. பெண்களும் உடல் ரீதியான வன்முறைகளை வெளிப்படுத்துபவர்களாக இருக்க முடியும். அதனால் குழந்தைப் பருவத்திலேயே இதுபோன்ற சிக்கல்களை சரிசெய்வது அவசியம்.
    இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தை பேச பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்று அறிந்து கொள்ளலாம்.
    சில குழந்தைகள் விரைவில் பேச தொடங்கும். சில குழந்தைகளுக்கு பேசுவதில் தாமதமாகும். குழந்தைகள் எப்போது பேசும்? இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகள் பேச (helping your child speech) பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்று அறிந்து கொள்ளலாம்.

    6 மாத குழந்தைகளுக்கு, வாயிலிருந்து ‘ஜொள்ளு வழிதல்’ அறிகுறி தெரியும். பேச முயற்சி செய்யும் அறிகுறிகளும் தென்படும். இதனால் பேச்சு திறனை உறுதி செய்யலாம். குழந்தையிடம் பேசும்போது, வாய் அசைவைப் பார்த்து, சத்தம் வருவதைக் குழந்தை உணர்ந்து கொண்டு ‘உர்’ என எச்சிலை ஊதி தள்ளும். இதுவே குழந்தை பேச தொடங்குவதற்கான முதல் அறிகுறி. நீங்கள் பேசும்போது உங்களையே பார்த்துக்கொண்டு தானும் பேச முயலுவதைப் போல ‘ங்… ஞ...ங்க…ஞ...’ என்று குரல் எழுப்பும். நீங்கள் பேசும் சத்தம் பார்த்து தன் கவனத்தைத் திருப்புவதும் நல்ல அறிகுறிதான். காது நன்றாக கேட்கிறது. எனவே, பேச்சும் இயல்பாக வரும் என அர்த்தம்.

    குழந்தை பேசுவதற்கு முன்பு அதன் கேட்கும் திறன் நன்றாக இருக்க வேண்டும். நாம் பேசுவதை குழந்தை நன்கு கூர்ந்து கவனித்த பின்பு, அதற்கு பதில் சொல்லவோ செய்கை செய்யவோ முயற்சி செய்யும். கேட்கும் திறன், புரிந்து கொள்ளும் திறன் சரியாக இருக்க வேண்டும். அதற்கான வளர்ச்சி இருந்தால் மட்டுமே, விரைவில் குழந்தையால் பேச முடியும். பேசவும் தொடங்கும்.

    முதல் ஒன்றிரண்டு மாதங்கள் நாம் பேசுவதை நாம் வாய் அசைப்பதைக் கவனிக்கும். தலை அசைப்பதைக் கவனிக்கும். கை, கால் ஆட்டுவதைப் பார்க்கும். ‘ங்ஞா, ங்ஞா’ என்ற வார்த்தைதான் குழந்தைக்கு பேச வரும். பசி வரும் போது, தன்னை யாரும் கவனிக்காதபோது இப்படி சத்தமிடும். அடித்தொண்டையிலிருந்து இப்படி கத்தி சத்தம் போடும்.

    பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் தினமும் குழந்தையிடம் பேசி, சிரித்து, கொஞ்சி விளையாட வேண்டும். என்ன பன்றீங்க… சாப்டீங்களா… பாப்பாக்கு பசிக்குதா… பாப்பாக்கு தூக்கம் வரலையா என எதாவது குழந்தையிடம் பேசி கொண்டு இருப்பது நல்லது. இதுவே மிகவும் முக்கியமான பயிற்சி. குழந்தைகள் நீங்கள் பேசுவதைௐ கவனிக்கும். மெல்ல மெல்ல ஒவ்வொரு எழுத்தாக குழந்தையும் சத்தம் போட ஆரம்பிக்கும்.

    குழந்தையை சுற்றி பெரியவர்கள் உட்கார்ந்து பேசும் வீட்டில், வெகு விரைவில் குழந்தைகள் பேசுவார்கள்… 10 மாதத்திலே ஒரு குழந்தை இரண்டு எழுத்துகளை கோர்த்து பேசும் அளவுக்கு திறன் கொண்டிருந்தான். அதற்கு காரணம் அந்த வீட்டில் உள்ள அனைவரும் குழந்தையிடம் அவ்வப்போது பேசி கொஞ்சி விளையாடியதே முக்கிய காரணம். அம்மா சொல்லு, அப்பா சொல்லு, அண்ணா சொல்லு என உறவுகளின் பெயரை சொல்ல சொல்லி பழக்குவது குழந்தைகளுக்கான சிறந்த பயிற்சி. மா, ப்பா, தா, வா இப்படி ஒவ்வொரு எழுத்தாக குழந்தையிடம் பேசி பேசி கற்பிக்கலாம்.

    குழந்தைக்கு 2 வயதாகியும் பேசவரவில்லை என்றால் கட்டாயம் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். அலட்சியம் வேண்டாம். 
    கதைகள் மூலம் குழந்தைக்கு நற்பண்புகளை வளர்ப்பது எளிது. அடம் பிடிப்பதைக் கண்டிக்கலாம். ஆனால், அதற்கு அவர்களை அடிக்க கூடாது. அடிக்க அடிக்க சண்டியாகிவிடுவர்.
    குழந்தைகளின் சண்டை, அடம் தற்காலிகமானதுதான். ஆனால், அதை நாம் கவனிக்க வேண்டியது முக்கியம். குழந்தைகளுக்குள் அடிக்கடி சண்டை வருவது சகஜம். அதுபோல் ‘அது வேண்டும் இது வேண்டும்’ எனச் சொல்லி அடம் பிடிப்பதும் சகஜம்.

    ஏன் குழந்தைகள் அடம் பிடிக்கிறது?

    தன் தேவைகளை நிறைவேற்றிகொள்ள அடம் பிடித்தல். தான் ஆசைப்படுவது நடக்காமல் போனால் அடம் பிடிப்பது. கோபம், சண்டை போன்ற உணர்ச்சிவயப்படுதலின் போது அடம் செய்வது.

    குழந்தையின் இந்தக் குணங்களுக்கு பின்னால் காரணங்கள் இருக்கும். அதைக் கண்டறிந்து சரி செய்யுங்கள். குழந்தைகளை அடிப்பதோ மனம் நோகும்படி திட்டுவதோ கூடாது. குழந்தைகளை தனியாக கூட்டி சென்று பக்குவமாக மென்மையாக பேசி புரிய வைப்பது அவசியம். குழந்தைகளை கவனிப்பில்லாமல் அப்படியே விட்டுவிடுவது பெரும் தவறு. குழந்தைகளுக்குள் சண்டை வரும்போது பெரியவர்கள் சமாதானப்படுத்த வேண்டும்.

    வீட்டு பெரியவர்கள் சொல்வதையும் அவர்கள் சொல்லும் கருத்துகளையும் நியதியையும் ஏற்றுகொள்ள குழந்தைகளை ஆரம்ப காலத்திலே பழக்கப்படுத்த வேண்டும். சண்டை போட்டாலும் அடம் பிடித்தால் நல்ல குழந்தைக்கு அழகல்ல எனச் சொல்லி புரிய வைக்கலாம். சண்டை போட்டாலும் அடம் பிடித்தாலும் வெறுப்பும் கோபமும் மட்டுமே மிஞ்சும். ஆனால், விட்டுக்கொடுத்தோ சமூக நட்புடன் நடந்துகொண்டாலோ அலாதியான இன்பம் கிடைக்கும் எனச் சொல்லுங்கள்.
     
    கதைகள் மூலம் குழந்தைக்கு நற்பண்புகளை வளர்ப்பது எளிது. அடம் பிடிப்பதைக் கண்டிக்கலாம். ஆனால், அதற்கு அவர்களை அடிக்க கூடாது. அடிக்க அடிக்க சண்டியாகிவிடுவர். எப்போதும் பெரியவர்கள் அடம் பிடிக்கும் குழந்தையிடமும் சண்டையிடும் குழந்தையிடமும் அவர்களின் முழுமையான பேச்சை கேட்ட பின் பதில் சொல்லலாம். பெற்றோர் இவர்களுக்கு பதில் சொல்லும் முன் குழந்தைகளின் உணர்வையும் புரிந்துகொள்ள வேண்டும்.

    குழந்தைகளின் பேச்சை கேட்ட பின்பு, பெரியவர்கள் ஒருதலை பட்சமாக தீர்ப்பளிக்க கூடாது. இதனால் வெறுப்பும் தோல்வி மனப்பான்மையும் வந்துவிடும். இது வேண்டும் என அடம் பிடித்து சண்டை போட்டாலோ வேறு காரணங்களுக்காக சண்டை போட்டாலோ பெற்றோர் இரண்டு முடிவுகளைச் சொல்லி அதில் ஒன்றை குழந்தைகளைத் தேர்ந்தெடுக்க செய்ய வேண்டும். இதனால் குழந்தைகள் சமாதானம் அடைவார்கள். அதே சமயம் தன்னை கவனிக்கவில்லை தனக்கு சாதகமாக எதுவும் செய்யவில்லை போன்ற எண்ணங்கள் எழாமல் தடுக்க முடியும்.

    ஒருவரை அடிப்பது, அடித்து காயப்படுத்துவது குற்றம் என்று குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும். மனதிலும் உடலிலும் காயங்கள் ஏற்படாதவாறு நடந்துகொள்ள குழந்தைகளை பழக்க வேண்டும். பெரியோர், சிறியோர் என அனைவரிடமும் அன்பும் அக்கறையும் காட்ட குழந்தைக்கு கற்றுத் தர வேண்டும். உணவு ஊட்டுவது போல குளிப்பாட்டுவது போல அன்றாடம் நீதி கதைகளை சொல்லி தருவது நல்லது. அடம் பிடிக்கும் குழந்தைகளிடம் தற்போதைக்கு இந்த விஷயம் கிடைக்காது.

    ஏனெனில் இந்தக் காரணத்தால் என எடுத்து சொல்லுங்கள். அடம் பிடித்தார்கள் என்றால் உன்னிடம் இவ்வளவு பொம்மைகள் உள்ளன. மற்ற குழந்தைகளிடம் இவ்வளவு கிடையாது. இது உனக்கு கிடைத்த நல்ல விஷயம் என நேர்மறை கருத்துகளை சொல்லி புரிய வைக்கலாம். குழந்தைகள் திருப்தி அடைவர். சண்டையை எப்போது தீவிரமாக்காமல் இருக்க பெற்றோர் தலையிடுவது முக்கியம். புரிதலை குழந்தைக்கு ஏற்படுத்திவிட்டால் பிரச்னைக்கு இடமில்லை. அடம் பிடிப்பதை வாங்கி தர வாய்ப்பு, வசதி வரும். அப்போது வாங்கி தருகிறேன் என எடுத்து சொல்லலாம். பக்கத்து வீட்டு குழந்தையுடன் தன் குழந்தை சண்டை போடுவதை சில பெற்றோர் தீவிரமாக்கி விடுகின்றனர். சமூக நட்பை குழந்தையிலேயே வளர்த்தால்தான் பெரியவர் ஆனதும் சமூகத்துடன் வாழ குழந்தைகளால் முடியும். 
    தாயின் வயிற்றிலே தோன்றிவிடும் நிரந்தர பற்கள், பின் குழந்தையாக வெளிவந்ததும் 3 அல்லது 6 மாதங்களில் பற்கள் வெளியே முளைத்து வரத் தொடங்குகின்றன.
    குழந்தைகள் தாயின் வயிற்றில் கருவாக இருக்கையிலே 6-8வது வாரத்திலேயே பால் பற்கள் தோன்றி விடுகின்றன. கருவில் 14-வது வாரம் நிறைவடையும்போது, ஈறுகளும் பால் பற்களும் குழந்தைகளின் உடலுக்குள் தோன்றிவிடும். அதுபோல 20-வது வாரத்திலே நிரந்திரப் பற்களும் உருவாகின்றன. இப்படி 20-வது வாரத்துக்குள் குழந்தையின் உடலில் பற்கள் தோன்றவில்லை என்றால், அந்தக் குழந்தைகளுக்கு பல் முளைக்கும் வாய்ப்புகள் இல்லை.

    இந்த நிலையை ‘ஆனோடோன்டியா’ என்பார்கள். சில நேரங்களில் சில நிரந்தர பற்கள் மட்டும் முளைக்காது. இந்த நிலையை ‘ஹைப்போடோன்டியா’ என்பார்கள். சில குழந்தைகளுக்கு கடைசி கடைவாய்ப்பற்கள் முளைப்பதில்லை. இது சாதாரணமாகும். ஆனால், நடுத்தர வயதில் இந்தப் பற்கள் முளைக்கும். இந்த 3-வது கடைசி கடைவாய்ப் பற்களை ‘ஞானப்பல்’ என்று அழைக்கின்றனர். கிருமித்தொற்று, டவுன் சின்ரோம், கிரவுசன் சின்ரோம் போன்ற நோய்களில் பற்கள் முளைப்பது தாமதமாகும்.

    தாயின் வயிற்றிலே தோன்றிவிடும் நிரந்தர பற்கள், பின் குழந்தையாக வெளிவந்ததும் 3 அல்லது 6 மாதங்களில் பற்கள் வெளியே முளைத்து வரத் தொடங்குகின்றன. பற்கள் வருவதன் அறிகுறிகள் வாயிலிருந்து உமிழ்நீர் வடிதல் வாயை நரநரவென்று கடித்துக் கொண்டிருத்தல் போன்றவையாகும்.

    பல் முளைக்கும் நிலையானது 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு வெளியே வருகின்றன. மொட்டுப்பருவம் தொப்பிப்பருவம் மணிப்பருவம் முதிர்மணிப்பருவம் இப்படி பற்கள் வெளிநோக்கி வளர்ந்து, முழுமையான பற்களாக மாறுகின்றன. ஏறக்குறைய 11 வயதுக்குள் பற்களின் வளர்ச்சி நிறைவுப் பெற்று, நிரந்திர பற்களின் வளர்ச்சி முழுமையடைகின்றன. குழந்தை பருவத்தில் ஒவ்வொரு 6 மாத இடைவேளியில், குறைந்தது 4 பற்கள் முளைக்கின்றன. பற்களின் வேர் வளரும்போது, பற்கள் மேல் புறமாக வளரும். 8 மாதம் - 6 வயது வரை, பற்கள் வேகமாக வளருகின்றன. ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு பற்கள் விரைவாகத் தோன்றி, விரைவாக வளர்கின்றன.

    கால்சியம் பாஸ்பரஸ் விட்டமின்கள் ஏ,சி,டி ஃப்ளூரைட் இவற்றில் விட்டமின் ஏ குறைந்தால், பற்களின் எனாமல் உற்பத்தி குறைந்து பற்கள் வலுவிழக்கும்.

    மூன்று வகையாகப் பற்கள் இருக்கின்றன. முன் பகுதியில் வெட்டுப் பற்கள் நடுப்பகுதியில் கோரை பற்கள் கடைவாய்ப் பகுதியில் கடைவாய்ப்பற்கள் என முளைக்கும். 20 பற்கள் பால் பற்களாகத் தோன்றுகின்றன. மேல் தாடை மற்றும் கீழ்த்தாடையில் 8 வெட்டு பற்கள். 4 கோரைப்பற்கள். 20 கடைவாய்ப்பற்கள் காணப்படுகின்றன. மொத்தம் 32 நிரந்தர பற்கள் உருவாகின்றன. இந்தப் பற்களின் வளர்ச்சி பெரும்பாலும் 25 வயதில் நிரந்தரமாக முழுமையடைந்து விடுகிறது.

    6-8 மாதம் - 1வது முன் வாய்ப்பற்கள் 8-10 மாதம் - 2வது முன் வாய்ப்பற்கள் 12-15 மாதம் - 3 மற்றும் 4வது முன் வாய்ப்பற்கள் 16-18 மாதம் - 5 மற்றும் 6-ம் பின்கடை வாய்ப்பற்கள் 18-24 மாதங்கள் - 7 மற்றும் 8-ம் கோரைப்பற்கள் 20-30 மாதங்கள் - 9 மற்றும் 10-ம் பின் கடை வாய்ப்பற்கள் முளைக்கத் தொடங்குகின்றன. 
    சிறு வயதிலேயே ஓர் இலக்கை நிர்ணயம் செய்துவிட்டால் அதுவே அந்த குழந்தைக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
    பொதுவாக ஒரு குழந்தையை பள்ளியில் சேர்த்துவிடும் வரை ஆர்வமாக பல விஷயங்கள் சொல்லிக் கொடுப்போம். ஆனால் சேர்த்த பிறகு நம் பிள்ளைகளுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் பள்ளி தந்து விடும் என்று எண்ணி நம் வேலைகளை கவனிக்க தொடங்கி விடுவோம். பள்ளியில் மொழி, கணிதம், வரலாறு, அறிவியல் என்று பொதுவாக உள்ள பாடங்களை சொல்லித் தருகிறார்கள்.ஆனால் வாழ்க்கை சீராக அமைய பலபல விஷயங்கள் தெரிந்திருக்கவும் வேண்டுமே!

    அதையெல்லாம் ஏன் பள்ளியே சொல்லித்தரக் கூடாது என்ற உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக கட்டு ரையைத் தொடர்கிறேன். நம் வீட்டில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இருவரின் படிப்பு முறை, புரிந்து கொள்ளும் சக்தி எல்லாம் வெவ்வேறுதானே? சில குழந்தைகள் அன்புக்கு அடிமை, சில குழந்தைகள் மிரட்டினால் கட்டுப்படும். சில குழந்தைகள் ஆரவாரம் செய்யும், சில எதற்கும் கட்டுபடாது.

    அப்போது நாம் என்ன செய்கிறோம். அவர்களுடைய குணத்திற்கு ஏற்ப அமைதியாகவோ அதட்டியோ புரிய வைக்கிறோம். அவ்வளவு நுணுக்கமாக சொல்லித்தர நம் பாடத்திட்ட முறையில் இடம் இல்லை. எனவே வீட்டில்தான் இதனை கற்றுக் கொடுக்க வேண்டும். உங்களைத் தவிர வேறு யாரால் முடியும்?

    நாம் தினமும் செய்யும் ஒவ்வொரு விஷயமும் நம்மை நல்லவிதமாகவோ கெட்ட விதமாகவோ பாதிக்கும். சிறு வயதிலேயே ஓர் இலக்கை நிர்ணயம் செய்துவிட்டால் அதுவே அந்த குழந்தைக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். முடிவெடுக்க உதவும். டாக்டர், இஞ்சினீயர் என்று எந்த தொழிலை தேர்ந்தெடுக்க போகிறோம் என்பது அக்குழந்தைக்கு வெகு நாளைக்கு பிடிபடாது. ஆனால் “எது செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும்; செய்வன திருந்தச் செய்ய வேண்டும்” “ஏமாற்றி முன்னேறக் கூடாது”. “பிறரை கீழே தள்ளி முன்னேறக்கூடாது”, “எது செய்தாலும் என் மனசாட்சிக்கு உட்பட்டு செய்ய வேண்டும்”, குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்” என்பது போன்ற தொலை நோக்கு பார்வையுடன் நிர்ணயிக்கும் இலக்குகள் தாம் வாழ்க்கை கோட்பாடுகள்.

    இந்த கோட்பாடுகள் தான் ஒவ்வொரு குழந்தையின் அடித்தளம். இந்த அடித்தளத்தை வலுவாக போட நாம் கை கொடுத்தோம் என்றால் அதைவிடப் பெரிய சொத்து எதுவும் இல்லை.

    ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய விருப்பு வெறுப்பு அதற்கான காரணங்கள், திறமை, இயலாமை, எதில் இன்னும் கூர்மையாக வேண்டும் என்ற சுய பரி சோதனை செய்தால் “நான் எந்த இடத்தில் இருக்கிறேன்” என்று அந்த குழந்தைக்கு புலப்படும். வலுவாக இல்லாத விஷயங்களை வலுப்படுத்திக் கொள்ளலாம். வானம் வசப்படும்.

    தவறு செய்வது மனித இயல்பு. யாரும் இங்கு அனைத்தையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை. ஆனால் தவறு செய்தால் அதிலிருந்து கற்ற பாடத்தை மறக்கவே கூடாது. அந்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என்று குழந்தைகளுக்கு புரிய வைக்கலாம்.

    அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன். அதில் இந்திய பெற்றோர்கள், தங்கள் டீனேஜ் மகன்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை முழுதாக கூட கேட்டுக் கொள்ளாமல் இடைமறித்து தாங்கள் சொல்வது தான் சரி என்று கத்திவிட்டு செல்வதை போல் சித்தரித்திருந்தார்கள். கேள்வி கேட்டால் அதிகபிரசங்கிதனம் என்று கூறாமல் குழந்தைகள் எதையும் பகுத்தறிந்து பயில கற்றுக் கொடுக்கலாம். தர்க்கம் செய்து பகுத்தறியட்டும்.

    ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒளிந்திருக்கும் தனித்தன்மைக்கும் படைப்பாற்றலுக்கும் தீனிப் போட வேண்டும். ஓவியம் வரைவது, கதை கவிதை எழுதுவது, ஹைகூ எழுதுவது, நகைச்சுவையாக பேசுவது போன்றவையெல்லாம் ஒரு குழந்தைக்கு ஏற்படும் வெளிப்படுத்த தெரியாத மனஅழுத்தங்களுக்கு வடிகால். எனவே அவர்களின் படைப்பாற்றலை வரவேற்போம். அரைத்த மாவையே அரைக்கத்தான் பல ஆயிரம் பேர் இருக்கிறார்களே!

    குழந்தைகள் இன்றைய காலக்கட்டத்தில் தற்காப்புக் கலை கற்பது மிக அவசியம். அவர்களுக்கு மனதளவில் சுய பச்சாதாபம், அமைதியின்மை இருந்தால் உளவியல் நிபுணரையோ தாய் தந்தையையோ அணுக வழிகாட்ட வேண்டும்.

    இது மிகமிக முக்கியமான கலை. எப்போது கவனிக்க வேண்டும்? எப்போது பேச வேண்டும்? எப்படி எதிராளியிடம் அணுக வேண்டும்? என்பதெல்லாம் ஒருவருக்கு வாழ்க்கையில் சுனாமியோ பொன்மழையையோ தரக்கூடிய விஷயங்கள். எனவே சிறு வயது முதலே நீங்கள் எங்கே சென்றாலும் அவர்களை உடன் அழைத்துச் செல்லுங்கள். எவ்வளவு சொன்னாலும் பழகாத பிள்ளை, நீங்கள் செய்வதைப் பார்த்து “டக்” என்று புரிந்து கொள்ளும். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் - நாம் சரியாகத்தான் பழகுகிறோமா என்ற சுயபரிசோதனையை முன்னரே செய்து விடுங்கள் - பாவம் பிள்ளை!

    வாழ்க்கை பாதை கரடுமுரடானது தான். அதை தைரியமாக எதிர்கொள்ள தயார்ப்படுத்துதல் அவசியம். தோல்வியை கண்டு துவளாமல், எதிரியைக் கண்டு பதறாமல், துரோகம் கண்டு கலங்காமல் வஞ்சகம் கண்டு நடுங்காமல் “உள்ள நாள் வரையிலே நன்மையும் தீமையும் ஒன்றென்றே எண்ண வரம்தா!
    உறவோடு பகையையும் இரவோடு பகலையும் ஒருமித்து பார்க்க வரம்தா”

    என்ற கண்ணதாசனின் வரிகளுக்கு ஏற்ப துணிவு பழக்குவோம்.

    எமோஷனல் இன்டெலிஜன்ஸ் என்று சொன்னால் சட்டென்று புரியும். உங்கள் உணர்வுகளை புரிந்து, ஆராய்ந்து அதை பாஸிடிவாக பயன்படுத்தி ஒரு விஷயத்தை அமைதியாக எடுத்துரைக்கவும், தடைகளை வெல்லவும் உதவுவது தான் ஈஐ என்ற எமோஷனல் இன்டலிஜன்ஸ். இது ஐ.கியூ.வைவிட முக்கியமானது. இதை தினசரி ஏதேனும் ஒரு வகையில் பழக்கலாம்.

    ஒரு விஷயத்திற்காக உழைக்கிறோம் என்றால் தடைகள் தாண்டி வெற்றி பெற மனஉறுதி மிக அவசியம். சில பேர் கிட்டத்தட்ட சிகரம் தொட்ட நிலையில் முயற்சியை கைவிட்டுவிடுவார்கள். மனவுறுதி இருந்தால் தான் இறுதிவரை போராடி வெற்றி பெறலாம்.
    அதேபோல் ஒரு சூழ்நிலையில் இருந்து கட்டென்று வெளியே வரும் திறனே நெகிழ்திறம். இதனை கைவரபெற்றால் தான் எந்த பிரச்சினைக்குள்ளும் மூழ்கிவிடாமல் தப்பிக்கலாம்.

    கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டிய பாடம். ஒரு திருமணம் வெற்றியடைய வேண்டும் என்றால் கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் தோற்றுப்போக வேண்டும். ஈகோவிற்கு இடமில்லை. ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்ள வேண்டும்; விட்டுக்கொடுக்க வேண்டும். இன்னும் பல பக்கங்கள் எழுதலாம். உங்களுக்கு தெரியாததா? சொல்லிக் கொடுங்கள். குறைந்த பட்சம் அக்குழந்தையின் முன் சண்டையிட்டு திருமணத்தை பற்றி ஒரு திகில் ஏற்படுத்தாமல் இருக்கலாம்.

    ஒரு குழந்தையை நம் வாழ்க்கையில் சேர்க்க முற்படுகிறோம் என்றால் நம் வாழ்க்கை தலைகீழாக மாறப் போகிறது. அது நமக்கு தெரியும். நம் பிள்ளைகளுக்கும் அவர்களை வளர்ப்பதில் நாம் பட்ட மனரீதியான பொருளாதார ரீதியான சிரமங்களை எல்லாம் அவ்வப்போது நினைவுபடுத்தி மிகைப்படுத்தாமல் கூறலாம். மகிழ்ச்சி தந்த விஷயங்களையும் கூறலாம். எது எப்படியோ “அக்குழந்தையை சார்ந்துதான் உன்னுடைய அடுத்த 25 வருடங்கள் இருக்கும்” என்பதை சொல்லாமல் சொல்லி விடுங்கள்.

    வாங்குகிற சம்பளத்திற்குள் செலவு செய்யவும், சேமிக்கவும் வேண்டும் என்பதை சிறு வயது முதலே பழக்க வேண்டும். முழுவதுமாக காசு கொடுத்து வாங்கக்கூடிய பொருளை தவணை முறையில் வாங்கி அதை குழந்தைகளுக்கும் பழக்க வேண்டாமே!

    சிறு வயதில் உண்டியல் வாங்கிக் கொடுத்து பழக்கும் நாம் அதே பிள்ளை வளர்ந்த பின் கேட்கும் தேவையற்ற விலை மதிப்புள்ள பொருளை வாங்கிக் கொடுக்கிறோம். குழந்தை அதற்கு பிடித்த பாடத்தை எடுத்துக்கொள்ளும். சேமிப்பதில் அக்கறை இருந்தால் வீட்டிற்கு நல்லது. இன்னும் முக்கியமான 15 விஷயங்கள் இருப்பதனால் இந்த இடத்தில் ஒரு புல் ஸ்டாப். அடுத்த வாரம் பேசுவோம்.

    தொடர்புக்கு: director@kveg.in
    டாக்டர் மீனாட்சி அண்ணாமலை

    குழந்தைக்கு முதல் முதலாக ஓரிரு பற்கள் முளைக்கும் முதலிருந்தே சரியான பராமரிப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். நல்ல பராமரிப்பை மேற்கொண்டால் பால் பற்கள் விழுந்து மீண்டும் முளைக்க கூடிய நிரந்தர பற்களும் நன்றாகவே இருக்கும்.
    முதல் பல் முளைக்கும் போதிலிருந்தே பல் துலக்கும் பழக்கமும் பல், வாய் சுத்தமாக பராமரிப்பதும் அவசியம். 0-1 வயது குழந்தைகளுக்கு பேஸ்ட் வேண்டாம். குழந்தைக்கு வாய் கொப்பளிக்க தெரியாது என்பதால், நீங்கள் குழந்தையின் வாயை பல் துலக்கிய பின் வாயை நன்கு தண்ணீர் விட்டு சுத்தம் செய்யுங்கள். குழந்தைக்கு வாய் கொப்பளிப்பதையும் சொல்லிக் கொடுக்கலாம்.

    ஓரிரு பற்கள் முளைத்த குழந்தைகளுக்கு என்று, பிரத்யேக ஃபிங்கர் பிரஷ் கடைகளில் விற்கின்றன. அதை வாங்கிப் பயன்படுத்தலாம். மென்மை, பொறுமை, இதமான முறையில் பல் துலக்க வேண்டும். பெரியவர்கள் தேய்ப்பது போல குழந்தைகளுக்கு செய்து விடாதீர்கள். முதல் பல் முளைத்தது முதல் 1 வயது முடியும் வரை, ஃபிங்கர் பிரஷ்ஷை வைத்தே சுத்தம் செய்யுங்கள். சுத்தம் செய்து முடித்த பின் நன்கு தண்ணீரால் அலசி, மென்மையானத் துணியால் மெதுவாக துடைத்து எடுக்கவும்.

    ஒரு வயது முடிந்த குழந்தைகளுக்கு, கிட்ஸ் பிரஷ் எனக் கடைகளில் விற்கும். அதை வாங்கி பிரஷ் செய்யலாம். ஓரளவுக்கு பிரஷ் செய்வதால் ஏற்படும் தயக்கம், பயம் நீங்கி இருக்கும்.

    முதலில் பேஸ்டை பிரஷ்ஷில் வைத்து, குழந்தைகளை, ‘ஈஈஈ’ சொல்லி பற்களை காண்பிக்க சொல்லி, மெதுவாக மென்மையாக சர்குலர் மோஷனாக சுற்றித் தேய்க்கவும். இரு பக்கங்களும், முன் பற்களும் அப்படி தேய்த்துவிட்ட பின், வாயைத் திறக்க சொல்லி உள்ளிருக்கும் பற்களில் மேலும் கீழுமாக, கீழும் மேலுமாகத் தேய்க்கவும். அனைத்துப் பற்களையும் அனைத்துப் பக்கங்களிலும் சுத்தம் செய்த பின், வாய் கொப்பளித்து துப்ப சொல்லலாம்.

    வாய் கொப்பளிப்பது எப்படி என நீங்கள் குழந்தைகளுக்கு செய்து காண்பிக்க வேண்டும். வாய் கொப்பளித்து முடித்த பிறகு, நீங்கள் குழந்தைகளின் ஈறுகளில் மெதுவாக, மிதமான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யுங்கள். குழந்தையின் 7 வயது வரையாவது அவ்வப்போது குழந்தைகளின் பல் தேய்க்கும் பழக்கத்தைக் கவனித்து வரலாம். ஈறுகளுக்கு மென்மையான அழுத்தம் கொடுக்கவும் சொல்லித் தரலாம். 
    ஒரு சாதாரண குழந்தையை முழு மனிதனாக்குவது இல்லமே, அது தரும் பயிற்சியே. வாழ்க்கையை வளப்படுத்துகின்ற, நல்ல குணங்களை மேம்படுத்துகின்ற தன்மையை அவர்களுக்கு அளிக்கும்.
    “புத்தகங்கள் இல்லாத வீடு உயிர் இல்லாத உடல்” என்கிறார் சிசிரோ. நமக்குள் உறைந்து, இறுகி இருக்கும் அறியாமையைப் பிளக்கும் கோடரி தான் புத்தகங்கள். நூறு நல்ல நண்பர்களின் அருமையை, சந்தோஷத்தை ஒரு புத்தகம் தந்து விடும். வாழும் முறையை, வாழக்கூடாத விதத்தை கற்றுக் கொடுக்கிறது புத்தகங்கள்.

    குழந்தைகளுக்கு முதலில் கற்றுத் தர வேண்டியது புத்தகங்கள், படிக்கும் பழக்கத்தை. இன்றைய குழந்தைகளின் உலகம் பரிதாபமானது. செயற்கை உலகத்தில், விரைவில் அழிந்துவிடக் கூடிய ஒரு உலகத்திற்குள்தான் இன்றைய கல்வி அவர்களை அழைத்துச் செல்கிறது. பரந்த உலக அறிவைப் பெற பாடப் புத்தகங்களை தாண்டிய அறிவும், அதைத் தருவது புத்தகங்கள் என்பதையும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க யாருமில்லை.

    எல்லோருடைய உலகமும் மொபைலில் நுழைந்து விட்டது. அவரவருக்குத் தனி உலகம், நண்பர்கள். முகநூலிலும், வாட்ஸ்-அப்பிலும் ஆயிரக்கணக்கான நண்பர்கள் வைத்திருப்பவர்களுக்கு தங்கள் அக்கம் பக்கம் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களைப் பார்த்து வளரும் குழந்தைகளும் மொபைலுடன் தங்கள் உலகத்தை அடக்கிக் கொள்கிறார்கள்.

    ஆனால் அவர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். புது விஷயங்களை தெரிந்து கொள்ள, பார்க்க. அவர்கள் உலகம் தினசரி விரிந்து கொண்டே இருக்கிறது. வானவில் கனவுகளுடன், வர்ண ஜாலமாய் பட்டாம்பூச்சியாய் பறக்க விரும்பும் அவர்களுக்கு பறக்கக் கற்றுத் தர இன்று யாருக்கும் நேரமும் இல்லை. மனமும் இல்லை. அவர்களின் கல்வி முறை வெறும் தகவல்களை திரட்டும் விதமாகத்தான் இருக்கிறது.

    அவனின் முழு ஆற்றலை வெளிப்படுத்தும் முறையில் இல்லை. இயல்பான ஆற்றலை, சரியான, நேரிய வழியில் சிந்திக்க கற்றுத் தருவது இல்லை. நமக்குள்ளேயே எல்லா அறிவும் இருக்கிறது. அந்த விழிப்புணர்வை தூண்டும் கல்வியே இன்றைய தேவை. சொந்த அறிவைப் பயன்படுத்த தன் ஐம்புலன்களை பயன்படுத்த கற்றுத் தந்தால் போதும்.

    ஒரு குழந்தைக்கு இல்லமே முதன்மையான ஆரம்பப் பள்ளிக்கூடம். அங்கு அவன் தன் பெற்றோர், உறவினர்கள், குடும்பத்தினரிடம் கற்றுக் கொள்ளும் விஷயங்களே அவனை முழுமையான அல்லது அரைகுறை மனிதனாகவோ ஆக்குகிறது. அவனுக்குள் இருக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்தி முழுமையாக்குவது வீடே.

    இந்த பிரபஞ்சத்தின் அற்புதமான விஷயம் மனிதன். அவனால் முடியாத விஷயம் எதுவும் இல்லை. அவனை பூரணமாக்குவது இல்லம். இல்லை என்றால் அது வெறும் வசிப்பிடம்தான். நல்ல குணங்களுடன், ஒரு நல்ல தாயாரால் வளர்க்கப் படும் குழந்தைகள்தான் மாமனிதர்களாக உருவாகிறார்கள். ஒரு இல்லம் விலை உயர்ந்த பொருட்களால் நிறைந்திருப்பதை விட நல்ல புத்தகங்களால் நிறைந்து, அன்பான மனிதர்களால் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

    அன்னையே முதல் ஆசிரியை. ஒரு பெண்ணுக்கு தனி பயிற்சி மையங்கள் வேண்டும் என்றார் விவேகானந்தர். படிப்பும், ஒழுக்கமும் நிறைந்த ஆசிரியர்கள் அங்கு பயிற்சி அளிக்க வேண்டும். கலைகள், வாழ்க்கை முறைகள், குடும்ப வாழ்வின் கடமைகள், நீதி, நெறி, தர்மம் போன்றவற்றை நவீன விஞ்ஞானத்துடன் கலந்து கற்பிக்க வேண்டும் என்கிறார். இதைப்போன்ற பெண்களின் குழந்தைகள் சிங்கக் குட்டிகளாய் உலகை ஆள்வார்கள்.

    ஒரு சாதாரண குழந்தையை முழு மனிதனாக்குவது இல்லமே, அது தரும் பயிற்சியே. வாழ்க்கையை வளப்படுத்துகின்ற, நல்ல குணங்களை மேம்படுத்துகின்ற தன்மையை அவர்களுக்கு அளிக்கும். நம்மைப் பார்த்தே குழந்தைகள் நல்லதும், தீயதும் கற்றுக் கொள்கிறார்கள். பெற்றோரை திருத்தினால் குழந்தைகள் திருந்தி விடும் என்று பிளாட்டோ கூறுகிறார். நம் குழந்தைகள் என்ன குணங்கள், பண்புகளோடு வளர வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை முதலில் நாம் பின்பற்றி நடக்க வேண்டும். அவர்களுக்கு அறிவுரை சொல்வதைவிட, பெற்றோர்களே ஒரு எடுத்துக்காட்டாய் விளங்க வேண்டும். அவர்கள் கேட்டுப் புரிந்து கொள்வதில்லை. பார்த்துதான் புரிந்து கொள்கிறார்கள்.

    அவர்களின் முழு அறிவையும் வெளிப்படுத்தும் கல்வியை நாம் இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை. எது சரி, எது நல்லது, தீயது என்று அறிந்து கொள்ளும் அறிவைத் தருவது புத்தகங்களே. அவை பள்ளிப் புத்தகங்கள் அல்ல. வாழ்க்கை புத்தகங்கள். நல்ல புத்தகங்கள் எது என்பதை பெற்றோர்கள் அறிமுகப்படுத்த வேண்டும். அந்தப் பழக்கத்தை கற்றுத் தர வேண்டும்.

    இன்று பல குழந்தைகளுக்கு சரியான மொழியில் உரையாட, எழுதத் தெரிவதில்லை. புத்தகங்கள் படிப்பதன் மூலம் மொழி ஆற்றல் வளர்கிறது. அவர்களின் கற்பனை ஆற்றலும் வளர்கிறது. நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். நல்ல நீதிகளை சொல்லக் கூடிய கதைகள், இதிகாசம், புராணங்கள் இவற்றை எளிய முறையில், நடையில் வெளிப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

    ஜி.ஏ.பிரபா, எழுத்தாளர்.
    ×