என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    ஒவ்வொரு குழந்தையும் முதல் ஒரு ஆண்டிற்குள் சரியான எடையை எட்ட வேண்டும் என்பது அவசியம். அதற்கு சத்தான உணவுகளைத் தரவேண்டும்.
    ஒவ்வொரு குழந்தையும் முதல் ஒரு ஆண்டிற்குள் சரியான எடையை எட்ட வேண்டும் என்பது அவசியம். அதற்கு சத்தான உணவுகளைத் தரவேண்டும். குழந்தையின் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க முயற்சிப்பதே சரியான முயற்சி. எப்படி குழந்தையின் எடையை இயற்கையாகவே ஆரோக்கியமான முறையில் அதிகரிப்பது என இப்பதிவில் பார்க்கலாம்.

    1. தாய்ப்பால்

    குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் கொடுப்பது மிக மிக முக்கியம். நான் ஒல்லியான தாய் எனக்கு பால் சுரக்கவில்லை போன்ற தவறான கருத்துகளை விட்டுவிடுங்கள். தாய்ப்பால் அனைத்து தாய்மார்களுக்கும் சுரக்கும். தாய்ப்பால் சுரக்கும் உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    2. வாழைப்பழம்

    ஒரு வாழைப்பழத்தில் 100 + க்கும் மேற்பட்ட கலோரிகள் உள்ளன. இயற்கையாகவே அதிக எனர்ஜி தரும் பழம் இது.மாவுச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, விட்டமின் சி, பி6 ஆகியவை நிறைந்துள்ளன. 6 மாதம் தொடங்கிய பின்னரே உங்கள் குழந்தைக்கு நீங்கள் வாழைப்பழம் கொடுக்கலாம். பச்சை வாழைப்பழத்தை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு மலம் கட்டும். மற்ற அனைத்து வாழைப்பழங்களும் குழந்தைக்கு நல்லது. 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை நீங்கள் கேக்காகவோ, புட்டிங்காகவோ செய்து தரலாம்.

    3. கேரளா நேந்திர பழ கஞ்சி

    கேரளத்தின் பாரம்பர்ய உணவு. குழந்தைகளுக்கான மிகசிறந்த உணவு. இந்த கஞ்சி பவுடரை எப்படி செய்வது மற்றும் இந்த பவுடரை வைத்து கஞ்சி செய்வது எப்படி எனத் தெரிந்து கொள்ளுங்கள்.

    4. பசு நெய்

    அதிக ஊட்டச்சத்துகள் கொண்டது, பசு நெய். உடல் எடையை அதிகரிக்க உதவும். 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, நெய் சேர்த்த உணவுகளைக் கொடுக்கலாம். கிச்சடி உணவுகளை நெய் சேர்த்துக் கொடுப்பது நல்லது. பொங்கல், உப்புமா போன்றவற்றில் நெய் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம். பருப்பு சாதம், சப்பாத்தி, பராத்தா போன்றவற்றிலும் நெய் சேர்க்கலாம்.

    5.  உருளைக்கிழங்கு

    இதில் மாவுச்சத்து நிறைந்துள்ளது. விட்டமின் சி, பி6, பாஸ்பரஸ், மாங்கனீஸ் ஆகியவை உள்ளன. வேகவைத்துத் தோல் உரித்து, நன்கு மசித்து குழந்தைக்கு கொடுக்க மிக சிறந்த உணவு இது. நொறுக்கு தீனியாக, ஃபிங்கர் ஃபுட்டாக, ப்யூரியாக, கட்லெட் போல உருளைக்கிழங்கை குழந்தைகள் உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    6. பருப்புகள்

    6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் பருப்புகளை வேகவைத்துத் தரலாம். பாசி பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து ஆகியவை குழந்தைக்கு நல்லது. பருப்பு வேகவைத்த தண்ணீரை குழந்தையின் முதல் உணவாகவே தரலாம். அவ்வளவு நல்லது. புரதம், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னிஷியம் ஆகியவை ஊட்டச்சத்துகள் உள்ளன. கொழுப்பு குறைவு. புரதமும் நார்ச்சத்தும் அதிகம். பருப்பு கிச்சடி, பருப்பு தண்ணீர், பருப்பு சூப், பருப்பு சாதம், பருப்பு பாயாசம் எனக் குழந்தைகள் உணவில் பருப்பை சேர்த்துக் கொள்ளுங்கள்.

    7. நட்ஸ் பவுடர்

    நட்ஸ் முழுமையாக கொடுத்தால் குழந்தையின் தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அதனால் நட்ஸை அரைத்துக் கொடுக்கலாம். அதாவது பொடி செய்து பவுடராக சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஜூஸ், ஸ்மூத்தி, ப்யூரி, கேக், பான்கேக் போன்றவற்றில் நட்ஸ் பவுடர் சேர்த்து குழந்தைகளுக்கு தரலாம்.
    உங்கள் குழந்தையின் அன்றாட செயல்களை பெரிதும் பாதித்தாலோ உங்கள் குடும்ப மருத்துவரையோ, குழந்தைகள் மருத்துவரையோ அல்லது அவர்கள் பள்ளி பரிந்துரைக்கும் மருத்துவரையோ, மனநல ஆலோசகரையோ சந்தித்து தீர்வுகாணலாம்.
    இந்திய பள்ளி மாணவர்களிடையே மனசோர்வு வெகு விரைவாக அதிகரித்து வருகிறது.இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவர் வளரிளம் பருவத்தை சேர்ந்தவர். அவர்கள் உடல் ஆரோகியத்திற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒப்பிட்டு பார்த்தல்அவர்கள் மன ஆரோக்கியத்திற்கு எடுக்கப்படும் முயற்சிகள் மிக மிக குறைவு. இந்த மனசோர்வை அடையாளம் காண்பதே சிகிச்சைக்கான முதல் மற்றும் உறுதியான செயலாகும். இந்த மனசோர்வின் அறிகுறிகள் என்னென்ன?

    மனநிலையில் அடிக்கடி மாற்றம், போதுமான உணவு மற்றும் தூக்கம் இல்லாமை, தனிமை, படிப்பில் கவனக்குறைவு, விளையாட்டு பயிற்சிகளிலிருந்து விலகிக்கொள்வது, வழக்கமான பணிகளை செய்வதில் சிரமம், கவனக்குறைவு, மங்கிய ஞாபக திறன் முதலியவை சில அறிகுறிகள் ஆகும்.

    பருவம் அடையும் காலம் தொட்டு மாணவர்கள் பல பரிமாண மனஉளைச்சல்களுக்கு ஆளாகிறார்கள். இன்னும் ஆழமாக பார்த்தோமானால், அடிக்கடி உணர்ச்சிவசப்படுவதும், சூழ்நிலைகளை தவிர்க்க முயற்சி செய்வதும், சுற்றுப்புறத்திலிருந்து தொடர்பு வெட்டப்பட்ட நிலையும் மனசோர்வின் அறிகுறிகளாகும்

    பொதுவாக மனசோர்வு இரண்டு வகைப்படும். ஒன்று உணர்ச்சிவசப்படுவது. மற்றது செயல்பாடுகளில் மாறுபடுவது. உணர்ச்சிவசப்படுவது என்றால் பொதுவாக அமைதியாக இருக்கும் சிறுவனோ அல்லது சிறுமியோ வெகுவாக கோபப்படுவது, சின்னச்சின்ன விஷயங்களுக்கு எரிச்சல் அடைவது, தேவையில்லாமல் அழுவது, பயப்படுவது போன்ற உணர்வுநிலையில் அதிகமாக காணப்படுவார்கள். இந்த மனநிலையில் இருப்பதால் சத்தமாக கத்துவது, தங்கை தம்பியை அடிப்பது, பிடிவாதம் பிடிப்பது, பொதுவாக விரும்பி செய்யும் வேலைகளை கூட செய்யாமல் இருப்பது நண்பர்களுடன் அடிக்கடி சண்டை போடுவது, கூப்பிட்டால் பதில் கூறாமல் இருப்பது, பள்ளி நேரத்தில் அடிக்கடி தலைவலி அல்லது வயிற்றுவலி என பள்ளி மருத்துவர் முன் நிற்பது போன்ற நடவடிக்கைகளை வெளிப்படுத்துவார்கள்.

    மேற்சொன்ன மனசோர்வின் அறிகுறிகள் பொதுவாக குழந்தைகளிடம் அவ்வப்போது காணப்படுவது இயல்பே. ஆனால் இவ்வறிகுறிகள் தொடர்ந்து மூன்று மாதத்திற்கு மேல் இருந்தாலோ உங்கள் குழந்தையின் அன்றாட செயல்களை பெரிதும் பாதித்தாலோ உங்கள் குடும்ப மருத்துவரையோ, குழந்தைகள் மருத்துவரையோ அல்லது அவர்கள் பள்ளி பரிந்துரைக்கும் மருத்துவரையோ, மனநல ஆலோசகரையோ சந்தித்து தீர்வுகாணலாம்.
    உங்கள் குழந்தை நன்றாக நடை பழக கற்றுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினால், நீங்கள் பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்.
    பெற்றோர்கள் பொதுவாக தங்கள் குழந்தையின் ஒவ்வொரு நிலைகளையும் பார்த்து இரசித்த வண்ணம் இருப்பார்கள். முதலில் குழந்தையின் தலை நேராக நிற்கத் தொடங்கும், பின் அது குப்புறக் கவிழ்ந்து, பின் எழுந்து உட்காரத் தொடங்கும். பின் அது மெதுவாக எதையாவது பிடித்து நிற்க முயலும். கடைசியில்  குழந்தை மெல்ல நடக்கத் தொடங்கும். ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை நடக்கும் அழகைக் காண உவகையோடு காத்திருப்பது இயல்பே ஆகும்.

    உங்கள் குழந்தை நடக்கக் கற்றுக் கொண்ட பின் அவனது துள்ளல் நடையும், ஓட்டமும் உங்களை மிகவும் பூரிப்பு அடையச் செய்யும். நீங்கள் உங்கள் குழந்தை அவனது பிஞ்சு கால்களைக் கொண்டு நடக்கத் தொடங்கும் அந்த அழகை ரசிக்க மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள் தானே? உங்கள் குழந்தை நன்றாக நடை பழக கற்றுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினால், நீங்கள் உங்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்.

    * முதல் முயற்சியாக உங்கள் குழந்தையை எந்த ஒரு பிடிமானமும் அல்லது  சாய்மானமும் இல்லாமல் உட்காரச் செய்யுங்கள். அப்படிச் செய்வதால் உங்கள் குழந்தையின் முதுகுத் தண்டில் பலம் ஏற்படுவதோடு, குழந்தை நிலையாக இருக்க கற்றுக் கொள்ளும். உடல் சமநிலையைக் குறித்த புரிதல் அவன் மூளையில் மெல்லப் பதியத் தொடங்கும். மேலும் உடம்பில் உள்ள பல தசைகள் பலம் பெற்று, குழந்தை நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் கூடி வரும்.

    * உங்கள் குழந்தையின் நடக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சற்று தூரத்தில் நின்றபடி ஏதாவது பொருட்களை அசைத்துக் காட்டுங்கள். இல்லாவிடில் அவன் மிகவும் விரும்பி நேசிக்கும் பொருளைச் சற்று தொலைவில் அவன் கவனத்தை ஈர்க்கும் விதமாக வைத்து விடுங்கள். அதை அவனுக்கு எடுத்துக் கொடுக்காமல் அவனே வந்து எடுத்தக் கொள்ள ஆர்வத்தைத் தூண்டுங்கள்.’எங்கே இதைப் பிடி!எங்கே அதை எடுத்து வா!’என்பது போன்ற உற்சாகமான வாசகங்களைக்  கூறுங்கள். இவ்வாறு செய்யும் போது குழந்தைக்கு அமர்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்று எதையாவது பிடித்துக் கொண்டபடியே அந்தப் பொருளை நோக்கி நடக்க வேண்டும் என்ற ஆர்வம் பெருகும்.

    * உங்கள் குழந்தைக்குப் பிடிமானம் கொண்ட பாரம்பரிய நடை வண்டியை வாங்கிக் கொடுங்கள். அதை விடச் சிறந்த நடைப் பயிற்சி சாதனம் உலகில் வேறு இல்லை. அதைப் பிடித்துக் கொண்டு நடக்கும் ஆர்வத்தைக் குழந்தைக்கு ஏற்படச் செய்யுங்கள். இவ்வாறு செய்யும் போது அவனே யாருடைய உதவியும் இன்றி நடக்கத் தொடங்குவான்

    * உங்கள் குழந்தை நடக்கத் தொடங்கும் போது அவனை வெறும் காலில் நடக்கத் தூண்டுங்கள். காலணிகள் போன்று எதுவும் அணியாமல் நடப்பது நல்லது. பாதங்களை மறைக்கும் காலணிகளை அணிவதால், குழந்தைக்கு தன் பாதங்களின் இயக்க நிலைகளைக் கவனிக்கும் வாய்ப்பு அற்றுப் போகும். குழந்தைகள் கண்களின் வழியே விசயங்களைக் கவனித்து கற்றுக் கொள்கிறார்கள். அதற்கு நாம் தடை விதிக்கக் கூடாது. மேலும் வெறும் கால்களோடு நடக்கும் போது,  அவனது பாதங்களுக்கு பூமியோடு நல்ல பிடிமானம் ஏற்படுத்துவதோடு சிறப்பான முறையில் நடை பழகும் சூழல் அதிகரிக்கும். குழந்தையின் பாதங்கள் பூமியில் தொடர்பு கொள்ளும்போது உடலுக்குச் சரியான சமநிலை நூறு சதவீதம் கிட்டும்.கூடுதலாகக் குழந்தையின் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.மேலும் உடல் முழுவதும் இருக்கும் தசைகள் வேலை செய்யத் தொடங்கும்.

    * முழுமையாக உங்கள் குழந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடைப்பயிற்சி தராமல், அவன் பின் நின்று கொண்டு தேவைப்படும் போது மட்டுமே அவனுக்கு உதவி செய்யுங்கள். இப்படிச் செய்யும் போது அவன் சமநிலையைப் பெற முயற்சி செய்வான். நீங்கள் அருகில் இருப்பது அவனுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். தற்சார்பு நிலைக் குறித்த புரிதல் குழந்தைக்கு மேலோங்கும்.
    சிறந்த மாணவர்கள்கூட தங்கள் கருத்துக்களை கூச்சமின்றி மற்றவர் மத்தியிலும், அவையிலும் எடுத்துக் கூற தயக்கம் கொள்கிறார்கள். அத்தகைய கூச்ச சுபாவம் மாணவர்களை எப்படி பின்னோக்கித் தள்ளுகிறது. கூச்சம் தவிர்த்தால் எப்படி வெற்றி பெறலாம் என்பதை இங்கே பார்க்கலாம்...
    எதையும் சாதிக்க துணையாக இருப்பது பேச்சுத் திறன். ஆனால் பேச்சுத்திறனை முற்றிலும் முடக்கிவிடக்கூடியது கூச்சம். சிறந்த மாணவர்கள்கூட தங்கள் கருத்துக்களை கூச்சமின்றி மற்றவர் மத்தியிலும், அவையிலும் எடுத்துக் கூற தயக்கம் கொள்கிறார்கள். அத்தகைய கூச்ச சுபாவம் மாணவர்களை எப்படி பின்னோக்கித் தள்ளுகிறது. கூச்சம் தவிர்த்தால் எப்படி வெற்றி பெறலாம் என்பதை இங்கே பார்க்கலாம்...

    எல்லோருக்குமே ஆளுமைத்திறன் அவசியம். அதுதான் நமது திறமையை வளர்க்க கூடியது. நமது அடையாளமாக மாறக்கூடியது. மற்றவர் நமது தகுதியை எப்படி எடைபோடுவார்கள் என்றால் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்துதானே?

    நன்றாகப் படித்து எழுதினால் நல்ல மாணவன் என்று பெயர் பெறுகிறோம். நிறைய மதிப்பெண் பெறுகிறோம். அதுபோல நாம் என்ன செய்கிறோம் என்பதே நமது ஆளுமைத் திறனாகும். அதுவே மதிப்பெண்கள்போல வாழ்வின் மதிப்பையும் உயர்த்துகிறது.

    ஆளுமையை வளர்த்துக் கொள்ள அவசியமானது பேச்சுத்திறன். மாணவப் பருவத்திலேயே பேச்சுத்திறன் நிரம்பப் பெற்றவர்கள் பிற்காலத்தில் தாங்கள் சார்ந்திருக்கும் துறையில் உச்சம் பெற்றுவிடுவார்கள் என்பது நிச்சயம்.

    ஏனெனில் நாம் நினைப்பதையும், செய்வதையும் பேச்சுத்திறனால்தான் வெளிப்படுத்த முடியும். சொல்ல முடியாததை செய்து காட்டலாம். ஆனால் சொல் ஆற்றலால் ஜெயித்தவர்கள், அதை செய்து காண்பிக்கும் முன்னாலே மற்றவர் மத்தியில் செல்வாக்கு பெற்றுவிடலாம். செயலுக்கு மற்றவரின் ஆதரவையும் பெற்று முன்னேறலாம் என்பதே பேச்சு ஆற்றலின் மகிமையாகும். நீங்கள் இதை பல இடங்களில் நிதர்சன உண்மையாக உணர முடியும்.

    சிறப்பாக படிக்கும் மாணவர்களைவிட, சிறந்த பேச்சாற்றல் கொண்ட மாணவர்கள், செயல்திறன் சார்ந்த பல இடங்களில் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பதை கண்கூடாக காணலாம். சொல்லப்போனால் வாழ்வில் மதிப்பெண்களைவிட, உங்களுக்கு மதிப்பு பெற்றுத் தரப்போவது பேச்சாற்றல்தான். பேசும்போது நாம் பேசும் தன்மை, குணம், தைரியம், அறிவுத்திறன் அனைத்தும் வெளிப்படும்.

    பேச்சுத்திறனில் இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும். சொல்லக்கூடிய விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். அதே சமயம், அதை யாரிடம் சொல்கிறோமோ, அவர்கள் கேட்கக்கூடிய நிலையில் இருக்கிறார்களா? என்று உறுதிசெய்ய வேண்டும். மேலும் மற்றவர் சொல்வதை முழுமையாகக் கேட்க வேண்டும். அப்படியிருந்தால்தான் நாம் அவர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகாமல், நம்மால் அவர்களுக்கு புரிய வைக்க முடியும். சொல்ல வந்ததைத் தவறாக வெளிப்படுத்தும்போது அது கருத்து வேற்றுமை, மனவருத்தம், உறவில் விரிசல் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தும்.

    பேசப் பேசத்தான் பேச்சாற்றல் வளரும். தயங்கி நிற்பதால் தாழ்வு மனப்பான்மையே பெருகும். ஒரு அவையில் அல்லது நண்பர்கள் மத்தியில் பேசப்போகிறோம் என்றால் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

    முதலில் எதைப்பற்றி பேசுகிறோம் என்று திட்டமிட வேண்டும்.

    மற்றவரை மட்டம் தட்டிப் பேசக்கூடாது. பொதுவாக மற்றவர்களை ஊக்குவிக்கும் கருத்துகளையே பேச வேண்டும். அவர்களுக்குப் புரியும்படி பேச வேண்டும்.

    கோபத்துடன் பேசக்கூடாது. வீண் வாதங்களை தவிர்க்க வேண்டும். சொல்ல வரும் விஷயத்தைச் சுருக்கமாக சொல்லி முடிக்க வேண்டும்.

    ஆனால் பேச்சுத்திறனை வெளிப்படுத்த கூச்சம் தடையாக இருந்தால் அதை தவிர்க்க பின்வரும் வழிகளை பின்பற்றலாம்...

    முதலில் எதைப் பற்றி பேசப்போகிறோம் என்பது பற்றி முடிவு செய்து கொண்டு அதற்கு தேவையான விவரங்களை திரட்டி குறிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பேசும் முன் ஒத்திகை செய்து கொள்ளலாம். நண்பர்கள் அல்லது பெற்றோர் முன்னிலையில் பேசிப் பார்க்கலாம்.

    கூட்டத்தினரைப் பார்த்து கூச்சம் வேண்டாம். அவர்கள் உங்களைப் போன்ற சக மாணவர்கள் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். தவறு ஏற்பட்டால் திருத்திக் கொள்ளலாம் என்று தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

    பல தலைவர்களின் பேச்சுகளை கேட்பதன் மூலம் அவர்களின் பேச்சுத் திறமை பற்றியும், அவர்கள் அவையில் எப்படி செயல்படுகிறார்கள் என்பது பற்றியும் விளங்கிக்கொள்ளலாம்.

    ஒருவர் இடை மறிக்கும்போது எப்படி பேச வேண்டும், தடுமாற்றம் ஏற்படும்போது எப்படி சமாளிக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவுகளையும் பிரபலங்களின் மேடைப்பேச்சில் இருந்து அறியலாம்.

    சொல்ல வேண்டிய கருத்துகளில் தெளிவிருந்தால் பயமும், கவலையும் மறந்து பேச முடியும் என்பது உண்மை.

    மாணவர்களே பேச்சாற்றலை வளர்த்து வெற்றி சிகரம் தொடுங்கள்.

    பள்ளியை பற்றிய உங்களின் வார்த்தைகள், மிகவும், பாசிடிவ்வாக இருக்கட்டும். சந்தோஷமாக பள்ளிக்கு போ, அங்கே இருக்கிற எல்லாரும் உன்னோட நண்பர்களே... என்கிற ரீதியில் பேச வேண்டும்.
    கோடை விடுமுறையில் வீட்டுக்குள்ளேயே வலைய வந்த குழந்தைக்கு, பள்ளி என்பது சிறிது காலத்துக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே தோன்றும் பெற்றோரை விட்டு பிரிந்து புது இடத்தில், சில மணி நேரங்களுக்கு இருப்பது என்பதை, அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. பள்ளியை பற்றிய உங்களின் வார்த்தைகள், மிகவும், பாசிடிவ்வாக இருக்கட்டும். நீ விரும்பிற விஷயங்கள் எல்லாம் பள்ளியில் இருக்கு; சந்தோஷமாக பள்ளிக்கு போ, அங்கே இருக்கிற எல்லாரும் உன்னோட நண்பர்களே... என்கிற ரீதியில் பேச வேண்டும்.

    அம்மா சொல்லும் எந்த ஒரு விஷயமும், உண்மையாகத்தான் இருக்கும்.. என்று குழந்தைகள் நினைப்பார்கள். அத்துடன் ஏன் பள்ளிக்கு செல்ல வேண்டும்? என்பது போன்ற கேள்விகளை, குழந்தைகள் கேட்க ஆரம்பிக்கும். இதுபோன்ற புரியும் வகையில் தெளிவாக சொல்லுங்கள். பள்ளி செல்வதற்கு முதல் நாள் இரவு நேரத்தோடு தூங்க வைப்பதுடன், மறுநாள் காலை, சரியான நேரத்துக்கு எழுப்பி, குழந்தையை பள்ளிக்கு தயார் செய்வதை, தினசரி வேலையாக கொள்ளுங்கள்.

    குழந்தையை பள்ளிக்குள் அனுப்புவதற்கு முன், முத்தம் கொடுப்பது அணைத்துக் கொள்வது, டாட்டா காட்டுவது என்று அவர்களை வழி அனுப்பி வையுங்கள் ஆனால் குட்பை சொன்ன பின், குழந்தையிடமே நின்று கொண்டு இருக்காமல் பள்ளியை விட்டு வந்து விடுங்கள் அப்போது தான், குழந்தை புது சூழ்நிலையை சகஜமாக எடுத்துக் கொள்ளும். அதனால், சிலவற்றை அவர்களே, கையாள தேவையான இடைவெளியை, சிறிது கொடுத்துதான் பாருங்களேன். 
    உங்கள் குழந்தை உங்களுடன் பேச விரும்பி வரும்போது, மற்றவற்றில் இருந்து கவனத்தை எடுத்துவிட்டு உங்கள் குழந்தையின் மீது அவர் என்ன சொல்கிறார் என்பதன் மீதும் கவனத்தை செலுத்தவும்.
    பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே நல்ல பேச்சு வார்த்தை தொடர்பு (கம்யுனிகேஷன்) இருப்பது மிகவும் அவசியம். உங்களுக்கு உங்கள் குழந்தையுடன் பேசுவதில் ஆர்வம் இருப்பதை உணர்த்தவும். உங்கள் குழந்தை உங்களுடன் பேச விரும்பி வரும்போது, மற்றவற்றில் இருந்து கவனத்தை எடுத்துவிட்டு உங்கள் குழந்தையின் மீது அவர் என்ன சொல்கிறார் என்பதன் மீதும் கவனத்தை செலுத்தவும்.

    தொலைக்காட்சி, லேப்டாப், மொபைல் ஃபோன் போன்றவற்றை தூரம் வைக்கவும். நீங்கள் பேசும் போது, அந்த பேச்சுவார்த்தையில் வேறு எவரேனும் இருக்கவேண்டும் என்பது அவசியமானால், அவரை சேர்த்துக் கொள்ளவும். அல்லது உங்களின் பேச்சு வார்த்தை தனிமையிலேயே இருக்கலாம்.

    இது உங்கள் குழந்தையின் நம்பிக்கையை பெற உதவும். அவர் சொல்ல நினைக்கும் விஷயத்தை முழுவதுமாக முதலில் கேட்கவும். இதில் பொறுமையை கையாள்வது என்பது மிகவும் அவசியம். முழு விஷயத்தை கேட்கும் முன்பு, பேச்சுவார்த்தையை விட்டு விலகுதல், அல்லது அவரை திட்டுதல், அடித்தல் போன்றவற்றை நிச்சயம் செய்யக் கூடாது.

    உங்கலின் அறிவுரை கேட்க நினைத்தால், ஓரிரு நாட்கள் நன்றாக யோசித்து உங்கள் குழந்தைக்கு அறிவுரை சொல்லவும். ஆழ்ந்து சிந்திக்காமல் சொல்லும் அறிவுரை சரியாக இருப்பதில்லை. அதேபோல, அவர் தவறு செய்துவிட்டார் என்று நினைத்தால் அவருக்கு அதை புரிய வைப்பது உங்கள் கடமை. ‘நீ என் பிள்ளை, தவறு செய்திருக்கமாட்டாய்’ என்று கூறினால், அவர் சொல்லப்போகும் விஷயம் முழுவதாக உங்களை வந்தடையாது.

    அதற்கு பதிலாக ‘தவறு செய்வது இயல்புதா. பரவாயில்லை. திருத்திக்கொள்ளலாம்’ என்று சொல்லுங்கள். அதோடு நீங்கள் உங்கள் குழந்தைக்கு என்றும் பக்க பலமாக இருப்பேன் என்றும் உணர்த்துங்கள்.
    தொடக்கப்பள்ளியான 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் மகிழ்வுடன் படிக்கும் சூழ்நிலை ஏற்பட வேண்டும். தேர்வு என்று கூறி அவர்களை அச்சுறுத்தவோ, மிரட்டவோ கூடாது.
    கல்வி என்பது மாணவர்களுக்கு கற்கண்டாக இனிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களுக்கு செல்வது என்பது வசந்த சோலையில் நுழைவது போன்ற உணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பள்ளிக்கூடங்கள், மாணவர்களை பயங்காட்டக்கூடாது. அதுவும் தொடக்கப்பள்ளியான 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் மகிழ்வுடன் படிக்கும் சூழ்நிலை ஏற்பட வேண்டும். தேர்வு என்று கூறி அவர்களை அச்சுறுத்தவோ, மிரட்டவோ கூடாது. அதனால்தான் 2009-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமை சட்டத்தில், 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் வைக்கலாம், ஆனால் தேர்வு என்று கூறி மாணவர்களை பெயிலாக்கிவிடக்கூடாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

    இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இந்த ஆண்டு முதல் அதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஒன்று, இந்த கல்வி ஆண்டு முதல் 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு, 2 மாதங்களில் உடனடியாக தேர்வு நடத்த வேண்டும். அந்த தேர்விலும் மீண்டும் மாணவர்கள் தோல்வி அடைந்தால் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்கவேண்டும். ஆனால், இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு முதலில் பொதுத்தேர்வு உண்டு என்றும், அடுத்தபடியாக பொதுத்தேர்வு கிடையாது என்றும் மாறிமாறி சொன்னதால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பொதுத்தேர்வு உண்டா?, இல்லையா? என்று கல்வித்துறை தரப்பில் உறுதியாக எதுவும் சொல்லப்படவில்லை. என்றாலும், கடைசியாக பொதுத்தேர்வு உண்டு. ஆனால், முதல் 3 ஆண்டுகளுக்கு தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் அதே வகுப்பில் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படுவார்கள். 3 ஆண்டுகளுக்கு பிறகுதான் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மறுதேர்விலும் தோல்வி அடைந்தால், அதே வகுப்பில் படிக்க வேண்டியநிலை ஏற்பட்டுவிடும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    இந்த ஆண்டு 5-ம் வகுப்புக்கும், 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு உண்டு என்றும், 5-ம் வகுப்புக்கு 50 ரூபாயும், 8-ம் வகுப்புக்கு 100 ரூபாயும் தேர்வு கட்டணம் என்றும் அறிவிக்கப்பட்டது. தலைவலி போய் திருகுவலி வந்தது போல, இந்த ஆண்டு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1 கி.மீட்டர் தூரத்துக்குள் உள்ள தொடக்கப்பள்ளிகளிலும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கூடங்களிலும் பொதுத்தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு இருந்தது.

    இப்படி பொதுத்தேர்வு மையங்களில் போய்த்தான் தேர்வு எழுதவேண்டும் என்பது நிச்சயமாக தேவையற்றது என்று மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. உடனே பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அந்தந்த பள்ளிக்கூடங்களிலேயே மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதலாம் என்று சொல்லிவிட்டார். இதுமட்டுமல்லாமல் தனியார் பள்ளிக்கூடங்களைத்தவிர, மற்ற பள்ளிக்கூடங்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு மாறி, மாறி வித்தியாசமான அறிவிப்புகளை வெளியிட்டால், மாணவர்களுக்கு பெரிய குழப்பம் ஏற்படாதா?. எனவே, எதிர்காலத்தில் உறுதியான ஒரே முடிவை எடுக்கவேண்டும். இப்போது சரி. 3 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வில் தோல்வியுற்றவர்கள் மீண்டும் அதே வகுப்புகளில் படிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், பிஞ்சு உள்ளங்களால் தாங்கமுடியாது. நீ படித்தது போதும் என்று கிராமப்புற பெற்றோரே முடிவு செய்யவும், நான் படிக்க போகமாட்டேன் என்று மாணவர்கள் முரண்டு பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வேண்டாம் என்று மத்திய அரசாங்கத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மாற்றம் கொண்டு வருகிறோம் என்ற பெயரில் மாணவர்களுக்கு தேவையற்ற அச்சங்களையும், இன்னல்களையும் ஏற்படுத்தி படிப்பின் மீது ஆர்வமில்லாத நிலையை ஏற்படுத்திவிடக்கூடாது.
    துள்ளித் திரிகின்ற பருவத்தில் துடுக்காக பள்ளிக்கு சென்று படித்திட வேண்டும். இந்த பருவம் தான் கேட்டவை விடாமல் உள்ளத்தில் பசுமரத்தாணிபோல பதிய வைத்திடும் பருவம்.
    ‘இளமையில் கல்வி சிலையில் எழுத்து’ என்பது பழமொழி. அதனால் தான் ‘இளமையில் கல்’ என்று கட்டளை இடுகின்றனர். ஒரு மனிதன் தனக்கு வேண்டிய பிற எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் எப்பகுதியிலும் பெறலாம். ஆனால் கல்வியை இளமையில்தான் பெற முடியும்.

    ஒரு மனிதனின் இளமை பருவம் இனிமைப் பருவம். வரவுகள் இன்றி செலவுகள் செய்திடும் பருவம். அந்த துள்ளித் திரிகின்ற பருவத்தில் துடுக்காக பள்ளிக்கு சென்று படித்திட வேண்டும். இந்த பருவம் தான் கேட்டவை விடாமல் உள்ளத்தில் பசுமரத்தாணிபோல பதிய வைத்திடும் பருவம். ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ என்பதற்கேற்ப இளமையே கற்பதற்குரிய பருவம் ஆகும்.

    கல்வி கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று திருக்குறளில் கூறப்பட்டுள்ளது. ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்பது உலகநீதி. கல்வி செல்வமானது வெள்ளத்தால் அழியாது. நெருப்பால் எரிக்க முடியாது. கள்வரால் திருட முடியாது. பிறருக்கு கொடுப்பதால் நிறையும் அன்றி குறைபடாது என்பது கவிஞரின் கூற்றாக உள்ளது.

    மனித வாழ்வில் முக்கியமான காலம் இளமை பருவம். அக்காலத்தில் நம் வாழ்வை நெறிப்படுத்திவிட்டால் ஆயுள் காலம் முழுவதும் மன அமைதியோடும் நிறைவோடும் வாழலாம். இளமையில் கடைபிடிக்கும் நல்ல பழக்கங்கள் தாம் வாழ்வுக்கு வளம் சேர்க்கும். வாய்மை கொல்லாமை ஊக்கமுடைமை இன்னா செய்யாமை போன்ற நற்பண்புகளை ஒருவன் தன் இளமை பருவத்தில் வளர்த்துக் கொண்டால் முதுமையில் சான்றோர் பாராட்டும் நிலையை அடைந்திடுவான்.

    ‘காலை எழுந்தவுடன் படிப்பு- நல்ல
    கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
    மாலை முழுவதும் விளையாட்டு - என்று
    வழக்கப்படுத்திக் கொள் பாப்பா’ என்று பாரதியார் தனது பாடல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

    கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை என்கிறார் அவ்வையார். வறுமை கல்விக்கு தடையாக இருக்குமானால்

    ‘கற்கை நன்றே கற்கை நன்றே

    பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்ற அதிவீரராம பாண்டியனின் கூற்றை தலைமேற்கொண்டு அரசு தரும் நிதி உதவிகளை பெற்று இளமையில் கல்வி கற்பதே அறிவுடைமையாகும். மனித வாழ்க்கையில் விளையாட்டிற்கு ஒரு பருவம் இருக்கிறது. பொருள் தேட ஒரு பருவம் இருக்கிறது. கல்வி மட்டும் எக்காலத்திலும் கற்கலாம். இருப்பினும் கல்வி கற்பதற்கென்று ஏற்ற பருவம் இளமை பருவம் தான்.

    எனவே மாணவர்களே நீங்கள் கோடை விடுமுறை முடிந்து பள்ளி செல்ல இருக்கின்றீர்கள். இதேபோல் புதிதாக பள்ளிக்கு அடியெடுத்து வைப்பவர்களும் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்ல வேண்டும். புதியவற்றை கற்பதிலும் தெரியாத பாடங்களை கேட்டு தெரிந்து கொள்ளவும் முனைப்போடு இருக்க வேண்டும். கல்வி கற்பதன் அவசியத்தை உணர்ந்து ஆசிரியருக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும்.

    விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு செல்ல வேண்டும். பள்ளியில் தினமும் நடத்தும் பாடங்களை அன்றைய தினமே வீட்டில் படித்து விட வேண்டும். அப்போது தான் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும். பள்ளியில் ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்த மாணவனாக விளங்க வேண்டும். பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்து இந்த கல்வி ஆண்டு பள்ளி வாழ்க்கையை தொடங்குவோம். 
    பெற்றோரின் மனம், குழந்தை பொய் சொல்லத் தொடங்கும்போது பதற்றம் கொள்கிறது. குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள்? என்பதற்கான காரணத்தை அறிந்துகொள்வோம்.
    பெற்றோரின் மனம், குழந்தை பொய் சொல்லத் தொடங்கும்போது பதற்றம் கொள்கிறது. அதிலும் சில குழந்தைகள் தொடர்ந்து பொய் சொல்லும் போது எங்கே நம் குழந்தை கெட்டுப்போய்விடுமோ என்ற அச்சத்தில் சில பெற்றோர்களுக்கு மனஉளைச்சலே ஏற்பட்டுவிடும். குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள்? என்பதற்கான காரணத்தை அறிந்துகொள்வோம்.

    1. உண்மையில் குழந்தைகள் பொய் சொல்வது என்பது அவர்களின் புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு என்கிறார்கள் உளவியலாளர்கள். குழந்தையின் பொய்களுக்குப் பின்னே அவர்களின் நரம்பியல் வளர்ச்சி, சமூகத்தைப் புரிந்துகொள்ளும் பாங்கு, அறிவார்த்தம், உணர்ச்சி நிலை ஆகியன எல்லாம் மேம்பட்டு இருப்பதை உணரலாம் என்கிறார்கள்.

    2. குழந்தைகள் பொய் சொல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலான குழந்தைகள் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவோ, பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காகவோதான் பொய் சொல்கிறார்கள்.

    3. சின்னஞ்சிறு குழந்தைகளிடம் தவறு செய்வதற்கும் தவறான நபராக இருப்பதற்குமான இடைவெளி பற்றிய புரிதல்கள் குறைவாகவே உள்ளன. அதாவது, தவறு செய்வதாலேயே நாம் தவறான நபராகிவிட மாட்டோம் என்ற புரிதல் பெரியவர்களிடம் உண்டு. குழந்தைகள் இப்படிக் கருதுவது இல்லை. தவறு செய்பவர்கள் தவறான மனிதர்கள் என்று கருதுகிறார்கள். எனவே, அவர்கள் செய்த ஏதாவது குறும்பு அல்லது தவறைப் பற்றி விசாரிக்கும்போது, அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். ஏனெனில், அதை ஒப்புக்கொள்வது அவர்கள் தவறானவர்கள் என ஒப்புக்கொள்வதற்குச் சமம்.

    4. குழந்தைகளின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும். அறிவார்த்தமாக அவர்களிடம் பிரசங்கிப்பதைவிடவும் உணர்வுப்பூர்வமாக அவர்களுடன் உரையாடுவதும் கதைகள் போன்றவற்றின் வாயிலாக புரியவைப்பதும் நல்ல பலன் அளிக்கக்கூடிய முயற்சிகள்.

    5. தொடர்ந்து பொய் சொல்லும் குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்துகொள்ளவது அவசியம். அவர்கள் பொய் சொல்லும் போதெல்லாம் அதைக் கண்டுப்பிடித்து சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பவர்களாக நாம் இருந்தால், குழந்தைகள் நம்மிடம் இருந்து விலகிக்கொண்டே இருப்பார்கள். மாறாக, அவர்கள் பொய் சொல்வதற்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியுமா என்று பார்க்கலாம். அதாவது, பொய் சொல்வது ஒரு ஒழுக்கக்கேடான விஷயம் என்பதைப் புரியவைக்க வேண்டியது அவசியம். ஆனால், பொய் சொல்வது தண்டனைக்கான வாய்ப்பை உருவாக்கும் என்கிற மனப்பதிவு இருந்தால் தண்டனை கொடுப்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்யுங்கள்.

    6. குழந்தைகள் சிறிய குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் போது அவர்களின் நடத்தையைப் பாராட்டுங்கள். ஆனால் அந்த செயல் தவறு என்பதைப் புரியவையுங்கள். சிறிய சிறிய பரிசுகள், எளிய பாராட்டுக்கள் போன்றவை சிறந்த பலன்களைத் தரும்.

    7. குழந்தைகள் பொய் சொல்வது ஒரு இயல்பான செயல்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளை நல்வழிப்படுத்தும்போது அவர்களுக்குப் பொய் சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை எனும் நெருக்கடியை ஏற்படுத்தாதீர்கள். குழந்தைகளிடம் அவர்கள் பொய்யர்கள் எனக் குற்றம்சாட்டாதீர்கள். ஆனால், பிரச்னை என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்படியாக எடுத்துச் சொல்லுங்கள். 
    இன்றைய தம்பதியினர் வேலைக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். இதனால் குழந்தை வளர்ப்பில் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால், குழந்தைகள் தவறான வழிகளில் செல்ல நேரிடுகிறது.
    இன்றைய தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வதை விட அவர்களின் வேலைக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கும் போது, அவர்கள் அவர்களின் வேலையின் முக்கிய தருணத்தில் இருப்பார்கள். இதனால் குழந்தை வளர்ப்பில் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால், குழந்தைகள் தவறான வழிகளில் செல்ல நேரிடுகிறது. இதுவே அவர்களுக்கு பழக்கம் ஆவதால், அவர்கள் ஒழுக்கமற்றவாறு நடந்துகொள்கின்றனர். அதனால், உங்கள் பிள்ளைகள் தவறான வழியில் செல்கின்றனர் என்பதை காட்டும் அறிகுறிகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    1. எல்லா குழந்தைகளுக்கும் பொம்மை வேண்டும் என்று எண்ணுவர், ஆனால் உங்கள் பிள்ளைக்கு கிடைக்காத எல்லா பொருளுக்கும் அவர்கள் அழுதாலோ அல்லது உங்களை அடித்தாலோ அல்லது கத்தினார்கள் என்றால் அவர்கள் எல்லாம் பெற வேண்டும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இந்நடத்தையை ஊக்குவித்தல், அது அவர்களை மேலும் கெடுக்கும்.

    இந்நேரத்தில் அவரிடம் கோபத்தை காட்டாமல் இருத்தல் முக்கியம் ஆகும். பொறுமையாக அவர்களிடம் அவர்கள் செய்வது தவறு என்று எடுத்துக் கூறுங்கள். தீங்கற்ற தண்டணையை தருவீர்கள் என்றால், அவர்களிடம் இருந்து ஒரு சலுகையை எடுத்துக்கொள்ளுங்கள்.

    2. சிறுவயதில் குழந்தைகள் அவர்களின் உடமைகள் மீது போஸ்சஸிவ் ஆக இருப்பார்கள், அதனால் அவர்களுக்கு பதிலுக்கு எதுவும் கிடைக்கும் வரையில் எதையும் பகிரமாட்டார்கள். இதனை முதலில் கண்டுகொள்ளும் போதே சரி செய்ய வேண்டும். பகிர்ந்தல் என்பது கற்றுக்கொண்ட பழக்கமே என்று உளவியல் நிபுணர்கள் நம்புகின்றன.

    பகிர்ந்தல் என்பது ஒருவாறு கற்றுக்கொள்ளும் பழக்கம் என்பதால், நீங்கள் பகிர்ந்துக் காட்டுங்கள். எவ்வாறு பகிர வேண்டும் என்றும், பகிர்ந்தால் பாராட்டவும் செய்யுங்கள்.

    3. விழித்தது முதல் தூங்கும் வரை அவர்கள் சிணுங்கினால், அது அவர்கள் மீது கோவம் கொள்ளுவதுமல்லாமல், வருங்காலத்தில் மற்றவரிடம் பழக கூட தடையாக இருக்கும். தன் குடும்பத்தை தவிர மற்றவர்கள் இந்த பழக்கத்தை சகித்து கொள்ளாமல், அவர்களை தனிமையில் விடுவர்.

    சிணுங்குதல் என்பது, பெற்றோர்களை பிள்ளைகள் கையாளும் வழியாகும். அதனால், அவர்கள் சாதாரணமாக பேசும் வரை அவர்களை கண்டுகொள்ளாதீர். “இவ்வாறு பேசினால் எனக்கு புரியாது” என்று சொல்வதும் உதவும். உங்கள் பிள்ளை சிணுங்கப்போகிறார்கள் என்று முன்னமே அறிந்தால், அதற்கு ஏற்றவாறு தயாராகிக் கொள்ளுதலும் உதவும்.

    4. இது என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இதனை உடனே திருத்த வேண்டும். இது தாத்தா மற்றும் சித்தியுடன் ஆனா உறவை பாதிப்பது மட்டுமல்லாமல், பள்ளியிலும் அவர்களை பிரச்னைக்கு உள்ளாக்கும்.

    இது மற்றவர்களை எவ்வாறு பாதிக்கும் என்று எடுத்துக் கூறுங்கள். மற்றவரிடம் அவ்வாறு பேசவோ நடந்துக் கொள்ளவோ கூடாது என்று சொல்லுங்கள். இதனை கண்டிக்காமல் இருந்தால், அவர்களுக்கு துணைச் செல்வது போல் ஆகிவிடும்.

    5. நீங்கள் வெளியே செல்லும் போது உங்கள் குழந்தை அழுவதற்கு கஷ்டமாகத் தான் இருக்கும். அதற்காக உங்கள் திட்டங்களை ரத்து செய்ய வேண்டாம். உங்கள் குழந்தைகளே உங்கள் முடிவுக்கு காரணமாக இருக்க கூடாது. சில விஷயங்களை நீங்கள் தனியாகவோ அல்லது உங்கள் துணையுடன் தான் செய்ய வேண்டும். இது உங்கள் இருவரையும் குழந்தைக்கு முன் இருந்ததை போல் உணர வைக்கும். உங்கள் குழந்தைகளை உங்கள் முடிவுக்குக் காரணம் ஆக்குவது, உங்களின் எண்ணம் அவர்களை சுற்றி தான் இருக்கும் என்று அவர்களை உணர வைக்கும்.

    அவர்களை “குட் பை” சொல்ல பழக்குங்கள். அவர்கள் வருத்தம் அடைந்தால், உங்கள் திட்டத்தை ரத்து செய்யாமல் சிறிது நேரத்தில் திரும்பி வருவேன்னு என்று சொல்லுங்கள்.
    குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
    பொறாமைக் குணம் கொண்ட குழந்தைகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, மற்றவர்களால் ஓரங்கட்டப்படுவார்கள். அப்படி ஓரங்கட்டப்படும் போது, அவர்களுக்குள் அது வெறுப்பை உருவாக்கும். அதனால் அவர்களுடைய செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். அப்போது மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கவும் முயற்சிப்பார்கள். அதுவே குற்றச் செயலாகி, இளங்குற்றவாளியாகி விடுவார்கள்.

    குழந்தைகளிடம் பொறாமை குணம் வளர பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம். பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் இரு குழந்தைகளிடையே அவர்கள் போட்டி மனப்பான்மையை உருவாக்கி விடுகிறார்கள். குழந்தைகளின் வேகத்தையும், திறமைகளையும் வெளிக் கொண்டுவர போட்டி மிகவும் அவசியம். இரு குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

    அதுபோல் வெற்றி பெற்ற குழந்தைகளை தலையில் தூக்கி வைத்து பாராட்டுவதும், தோற்றுப்போன குழந்தைகளை இகழ்வதும் அவர்கள் மனதை வெகுவாக காயப்படுத்திவிடும். குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும்போது பெற்றோர்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு, குழந்தைகளின் மனதில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சீராக்கவேண்டும். இல்லையென்றால் அது குழந்தைகளை பொறாமை என்னும் இருளில் தள்ளிவிடும். போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கும் தெளிவாக்கவேண்டும்.

    எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயல்பாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். இதில் குறை நிறை என்று எதையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்களை தன் போக்கில் வளரவிட வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்டும். மற்றவர்கள் முன் குறை கூறுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவதும் அவர்களின் குறைகளை களைய உதவாது. குழந்தைகளால் ஒருபோதும் அவமரியாதைகளை தாங்கிக் கொள்ளமுடியாது. 
    நாளைய குடிமக்களான இளைய தலைமுறையினருக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கீழ்ப்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் போன்ற நற்பண்புகளை வளர்க்கும் இயக்கமாக சாரணர் இயக்கம் தோன்றியது.
    குட்டீஸ், உங்களுக்கு சாரணர் இயக்கம் பற்றித் தெரியுமா? நீங்கள் பள்ளியில் சாரணர் இயக்கத்தில் சேர்ந்திருக்கிறீர்களா? உலகளாவிய மாணவர் இயக்கமான சாரணர் இயக்கத்தின் முதல் குழு உதயமான நாள் இது. 1908ல், இதேநாளில்தான் (ஜனவரி24) முதல் சாரணர் குழு உருவாக்கப்பட்டது. சாரணர் இயக்கத்தின் அருமை பெருமைகளை இந்த வாரம் தெரிந்து கொள்வோமா?...

    சாரணர் இயக்கம், உலக அளவிலான இளைஞர் இயக்கங்களில் ஒன்றாகும். உலக பேரியக்கங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது. இந்த இயக்கத்தை 1907-ல் பேடன் பவல் என்பவர் இங்கிலாந்தில் உருவாக்கினார். இந்த இயக்கத்தின் செயல்பாடாக, 1908-ம் ஆண்டு ஜனவரி 24-ல் ஆண்கள் சாரணர் குழுவை அவர் உருவாக்கினார். ‘பாய் ஸ்கவுட்ஸ்’ என்று அழைக்கப்பட்ட இதுவே முதல் சாரணர் படையாகும்.

    நாளைய குடிமக்களான இளைய தலைமுறையினருக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கீழ்ப்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் போன்ற நற்பண்புகளை வளர்க்கும் இயக்கமாக சாரணர் இயக்கம் தோன்றியது. ராணுவ கட்டுக்கோப்பு இளைய தலைமுறையினரிடம் வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் ராணுவ வீரரான பேடன் பவல், இந்த இயக்கத்தை செயல் படுத்தினார். அவரது முழு பெயர் ராபர்ட் ஸ்டீபன்சன் ஸ்மித் பேடன் பவல் என்பதாகும். இவரை பேடன் பவல் பிரபு என்று சிறப்பித்து அழைப்பதும் உண்டு.

    அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த இயக்கம் மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியது. 1909-ல் இந்தியாவிலும், சிலி நாட்டிலும், 1910-ல் அமெரிக்காவிலும் சாரணர் குழு உருவானது. 10 ஆண்டுகளுக்குள்ளாகவே உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு இந்த இயக்கம் விரிவடைந்துவிட்டது.

    நாட்டுப்பற்று, இறைப்பற்று, அன்பு, கருணை, பணிவு, பிறருக்கு உதவி செய்தல், தன்னம்பிக்கை முதலான பண்புகளை சிறுவர்களிடத்தில் வளர்த்து அவர்களை சிறந்த குடிமக்களாக உயர்த்துவதே சாரணர் இயக்கத்தின் நோக்கமாகும்.

    நற்பண்புகளை வளர்ப்பதுடன், உற்றுநோக்குதல், அறிவுத்திறனை வளர்த்தல், கைவினைப் பொருட்களை செய்தல் போன்ற பல்வேறு திறன் வளர்ப்பிலும் இந்த இயக்கம் கவனம் செலுத்தியது.

    சிறுவயதில், மாணவப் பருவத்தில் இந்த இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெறுபவர்கள் தன்னம்பிக்கையும், நற்பண்பும் மிக்கவர்களாக வளர்வதுடன், மற்றவர்களை சகோதரர்களாக மதிக்கும் மாண்புடையவர்களாக உயர்கிறார்கள். இயற்கை மற்றும் விலங்கு நேசம் கொண்டவர்களாகவும், நாட்டுப் பற்று மிக்கவர்களாகவும் இவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். எண்ணம், செயல், வாக்கு ஆகியவற்றில் தூய்மை கொண்டவர்களாகவும் இளைய தலைமுறையினரை மாற்றுகிறது சாரணர் இயக்கம்.

    சாரணர் இயக்கம் குருளையர், சாரணர், திரிசாரணர் என மூன்று பிரிவுகளாக உள்ளது. சாரண மாணவர்களை பயிற்றுவிப்பவர்கள் ‘ஸ்கவுட் மாஸ்டர்’கள் எனப்படுகிறார்கள். சாரணிய மாணவிகளை பயிற்றுவிக்கும் ஆசிரியைகள் ‘கைடு கேப்டன்’கள் எனப்படுகிறார்கள். தற்போது உலகம் முழுவதும் 50 கோடி பேர் சாரண இயக்கத்தில் உள்ளனர்.

    சாரண சாரணியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளின் மூலம் மேற்காணும் திறன்கள் ஊக்குவிக்கப் படுகிறது. பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பல விருதுகளும் வழங்கப் படுகின்றன. மாநில அளவில் சாதனை படைப்பவர் களுக்கு ராஜ்யபுரஷ்கார் எனும் விருது வழங்கப்படுகிறது. இதை ஆளுநர் வழங்குவார். தேசிய அளவில் சாதனை படைக்கும் சாரண மாணவர்களுக்கு ராஷ்டிரபதி விருது வழங்கப்படுகிறது. இதை குடியரசு தலைவர் வழங்குகிறார்.

    சாரணர் முகாம்களில் கலாசார நிகழ்வுகளும் இடம் பெறும். எளிய உடற்பயிற்சிகள், முதலுதவி, இன்னும் பல்வேறு பயனுள்ள பயிற்சிகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். பொது இடங்களில் நடை பெறும் முகாம்களில் மக்களும் இந்த பயிற்சிகளின் பலன்களை பெறலாம்.

    அமெரிக்காவின் உளவு இயக்கமான எப்.பி.ஐ.யில் இருப்பவர்களில் 85 சதவீதம் பேர் சாரண இயக்கத்தில் பங்கெடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகில் 5 நாடுகளைத் தவிர பெரும்பாலான நாடுகளில் சாரணர் இயக்கம் பரவி உள்ளது. வடகொரியா, சீனா, கியூபா, லாவோஸ் மற்றும் அண்டோரா ஆகிய நாடுகளில் சாரணர் படை இல்லை.

    அமெரிக்க சாரணர் இயக்கமானது வெளிநாட்டில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களின் குழந்தைகளையும் இந்த இயக்கத்தில் சேர்க்கிறது. அதேபோல வேறு நாடுகளுக்கு மாணவர் குழுவை அனுப்பி சேவை செய்வதும் உண்டு.

    இந்தியாவில் 1909-ல் சாரணர் படை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஆங்கிலேய சிறுவர்கள் மட்டுமே இதில் சேர முடிந்தது. தேசிய உணர்வு கொண்ட இந்திய தலைவர்கள், இந்த இயக்கத்தின் சாயலில் வேறு பெயர்களில் இந்திய சாரணர் இயக்கங்களை நடத்தினர். 1951-க்கு பின்பு, இந்த இயக்கங்கள் அனைத்தும் `பாரத சாரண சாரணியர் சங்கம்' என்று ஒன்றிணைக்கப்பட்டது.

    பேடன் பவலின் மனைவி ஒலோவ் 1912-ல், கணவரின் வழிகாட்டலில் மாணவிகளுக்கான சாரணர் படையை உருவாக்கினார். அவரது பிறந்தநாள் பிப்ரவரி 22-ந் தேதியாகும். உலகம் முழுவதும் இந்த தினத்தில் ‘உலக சாரணர் தினம்’ கொண்டாடப்படுகிறது.

    சாரணர் படையில் இருப்பவர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள், இடங்களில் சலுகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் பள்ளிப்பருவத்தில் சாரணர் இயக்கத்தில் சேர்ந்து நற்பண்புகளையும், நம்பிக்கையையும், நாட்டப்பற்றையும் வளர்த்துக் கொள்ளலாம்.
    ×