search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைக்கு எப்போது பல் துலக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கலாம்
    X
    குழந்தைக்கு எப்போது பல் துலக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கலாம்

    குழந்தைக்கு எப்போது பல் துலக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கலாம்

    குழந்தைக்கு முதல் முதலாக ஓரிரு பற்கள் முளைக்கும் முதலிருந்தே சரியான பராமரிப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். நல்ல பராமரிப்பை மேற்கொண்டால் பால் பற்கள் விழுந்து மீண்டும் முளைக்க கூடிய நிரந்தர பற்களும் நன்றாகவே இருக்கும்.
    முதல் பல் முளைக்கும் போதிலிருந்தே பல் துலக்கும் பழக்கமும் பல், வாய் சுத்தமாக பராமரிப்பதும் அவசியம். 0-1 வயது குழந்தைகளுக்கு பேஸ்ட் வேண்டாம். குழந்தைக்கு வாய் கொப்பளிக்க தெரியாது என்பதால், நீங்கள் குழந்தையின் வாயை பல் துலக்கிய பின் வாயை நன்கு தண்ணீர் விட்டு சுத்தம் செய்யுங்கள். குழந்தைக்கு வாய் கொப்பளிப்பதையும் சொல்லிக் கொடுக்கலாம்.

    ஓரிரு பற்கள் முளைத்த குழந்தைகளுக்கு என்று, பிரத்யேக ஃபிங்கர் பிரஷ் கடைகளில் விற்கின்றன. அதை வாங்கிப் பயன்படுத்தலாம். மென்மை, பொறுமை, இதமான முறையில் பல் துலக்க வேண்டும். பெரியவர்கள் தேய்ப்பது போல குழந்தைகளுக்கு செய்து விடாதீர்கள். முதல் பல் முளைத்தது முதல் 1 வயது முடியும் வரை, ஃபிங்கர் பிரஷ்ஷை வைத்தே சுத்தம் செய்யுங்கள். சுத்தம் செய்து முடித்த பின் நன்கு தண்ணீரால் அலசி, மென்மையானத் துணியால் மெதுவாக துடைத்து எடுக்கவும்.

    ஒரு வயது முடிந்த குழந்தைகளுக்கு, கிட்ஸ் பிரஷ் எனக் கடைகளில் விற்கும். அதை வாங்கி பிரஷ் செய்யலாம். ஓரளவுக்கு பிரஷ் செய்வதால் ஏற்படும் தயக்கம், பயம் நீங்கி இருக்கும்.

    முதலில் பேஸ்டை பிரஷ்ஷில் வைத்து, குழந்தைகளை, ‘ஈஈஈ’ சொல்லி பற்களை காண்பிக்க சொல்லி, மெதுவாக மென்மையாக சர்குலர் மோஷனாக சுற்றித் தேய்க்கவும். இரு பக்கங்களும், முன் பற்களும் அப்படி தேய்த்துவிட்ட பின், வாயைத் திறக்க சொல்லி உள்ளிருக்கும் பற்களில் மேலும் கீழுமாக, கீழும் மேலுமாகத் தேய்க்கவும். அனைத்துப் பற்களையும் அனைத்துப் பக்கங்களிலும் சுத்தம் செய்த பின், வாய் கொப்பளித்து துப்ப சொல்லலாம்.

    வாய் கொப்பளிப்பது எப்படி என நீங்கள் குழந்தைகளுக்கு செய்து காண்பிக்க வேண்டும். வாய் கொப்பளித்து முடித்த பிறகு, நீங்கள் குழந்தைகளின் ஈறுகளில் மெதுவாக, மிதமான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யுங்கள். குழந்தையின் 7 வயது வரையாவது அவ்வப்போது குழந்தைகளின் பல் தேய்க்கும் பழக்கத்தைக் கவனித்து வரலாம். ஈறுகளுக்கு மென்மையான அழுத்தம் கொடுக்கவும் சொல்லித் தரலாம். 
    Next Story
    ×