search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முரண்டு பிடிக்கும் ஒரு வயது குழந்தையை சாப்பிட வைப்பது எப்படி?
    X
    முரண்டு பிடிக்கும் ஒரு வயது குழந்தையை சாப்பிட வைப்பது எப்படி?

    முரண்டு பிடிக்கும் ஒரு வயது குழந்தையை சாப்பிட வைப்பது எப்படி?

    பொதுவாக ஒரு வயதுக் குழந்தை என்று வந்து விட்டாலே, உணவு கொடுப்பது என்பது குழந்தையின் அம்மாவிற்கு ஒரு பெரிய சவாலான வேலை தான்.
    பொதுவாக ஒரு வயதுக் குழந்தை என்று வந்து விட்டாலே, உணவு கொடுப்பது என்பது குழந்தையின் அம்மாவிற்கு ஒரு பெரிய சவாலான வேலை தான். இந்த சவாலைத் தினமும் ஒரு முறை அல்ல, ஒவ்வொரு முறையும் உணவு மற்றும் பால் கொடுக்கும் போதும் பல தாய்மார்கள் அனுபவிக்கின்றனர். அப்படி இருக்கும் போது, உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு புதிய உணவுப் பட்டியலை அறிமுகப்படுத்தும் போது, அவனைச் சாப்பிட ஊக்குவித்து அவன் விரும்பும் வகையில் உணவைக் கொடுப்பது சற்று கடினமே. இருப்பினும், உங்களுக்கு சில ஆலோசனைகள் தர, இங்கே சில குறிப்புகள்;

    * உங்கள் குழந்தையை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவைச் சாப்பிட்டு விடும்படி கட்டாயப் படுத்தாதீர்கள். போதுமான நேரம் கொடுத்து அவன் அதை மகிழ்ச்சியோடு விரும்பி உண்ணும் வரை காத்திருங்கள்.

    * ஒரு வேளை அவன் சாப்பிட மறுத்தால், சற்று நேரம் அவகாசம் கொடுத்து, பின் மீண்டும் அடுத்த வாய் உணவைக் கொடுங்கள்.

    * முடிந்த வரை உங்கள் குழந்தையை உணவை அவன் கைகளாலேயே எடுத்துச் சாப்பிட ஊக்கவியுங்கள். இப்படிச் செய்யும் போது, அவன் தானாகச் சாப்பிட கற்றுக் கொள்வதோடு, அவனுக்குச் சாப்பிடும் ஆர்வமும் அதிகரிக்கும்.

    * அவன் சாப்பிடும் போது உணவைத் தட்டை சுற்றி கீழே சிந்தினால், விட்டு விடுங்கள். கட்டளைகள் போடாதீர்கள்.திட்டவும் செய்யாதீர்கள்.

    * விளையாடிக் கொண்டே அவன் சாப்பிட விரும்பினால், அப்படியே செய்யட்டும். எனினும், அவன் சாப்பிடுகின்றானா? என்று மட்டும் கண்காணியுங்கள்.

    * அவ்வப்போது சிறிது சிறிதாக ஏதாவது ஒன்றைச் சாப்பிடக் கொடுத்துக் கொண்டே இருங்கள். அவன் ஒரு வேளை சாப்பிட மறுத்தால்,அவனைக் கட்டாயப் படுத்த வேண்டாம்.

    * முடிந்த வரை வெள்ளை சர்க்கரை கலந்த உணவைத் தருவதைத் தவிர்ப்பது நல்லது. மாற்றாக நாட்டு சர்க்கரை தரலாம்.

    * அவன் ஒழுங்காக சாப்பிட்டால் பரிசு அளியுங்கள்.
    Next Story
    ×