என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    தொலைதூர பயணத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பயணத்தின்போது பச்சிளம் குழந்தைகளை அழைத்துச் செல்வது, மிகுந்த சிரமமான ஒன்று. குறிப்பாக நாம், தொலைதூர பயணத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பதிவில் குழந்தையுடன் பயணிக்கும்போது கவனிக்க வேண்டியவை - தவறாமல் எடுத்து வைக்க வேண்டிய பொருட்கள் என்ன?என்று பார்ப்போம்.

    கைக் குழந்தையோடு பயணம் செய்ய உதவும் டிப்ஸ்

    * குழந்தைகளுக்கு போடவேண்டிய தடுப்பூசிகளை முதலில் போட்டுவிட வேண்டும். எந்த ஊரில் என்ன நோய் பரவல் இருக்கும் என்பதெல்லாம் தெரியாது. எதுவாக இருந்தாலும் உடனடியாக குழந்தையைத்தான் தாக்கும். ஆக, நாம் போகும் ஊரில் எதாவது வைரஸ் காய்ச்சல் பரவுகிறதா? வேறு எதாவது நோய் தொற்று இருக்கிறதா என்பதையெல்லாம் முன்கூட்டியே அலசி, அதற்கேற்ப தடுப்பூசி போட்ட பிறகே பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த பயணத்தை ரத்து செய்துவிடுங்கள்.

    * குழந்தைகளுக்கான உணவு விஷயத்தில் கவனமாகவே இருக்க வேண்டும். எத்தனை மாத குழந்தை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அரை திட உணவோ திரவ உணவோ,குழந்தைக்கு ஏற்றதை தயாராக வைத்து கொள்ள வேண்டும்.வழியில் வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பயணத்தை ஒருபோதும் தொடங்கவே கூடாது.

    எந்த ஊருக்கு செல்கிறோம் எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பற்றிய சரியான திட்டமிடலுடனும், அதற்கான முன்னேற்பாடுகளுடனும் பயணத்தை தொடங்க வேண்டும். குறைந்தபட்சம் அடுத்த 5 முதல் 8 மணி நேரத்துக்கான உணவை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சி ஆற வைத்த பாலை பாதுகாப்பான ஒரு புட்டியில் எடுத்துக்கொள்ள வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், அவர்களுக்கு ஏற்ற உணவை எடுத்துக்கொள்வது மிக அவசியம். அலைச்சல், மன உளைச்சல் போன்ற காரணங்களால், குழந்தைகளுக்கு உணவளிப்பது தடைபடக் கூடாது.பழம், ஹோம்மேட் ரொட்டிகள் எல்லாம் பேக் செய்து கொள்ளுங்கள்.

    * குழந்தை எவ்வளவு நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கும், மலம் கழிக்கும் என்பதை நாம் ஓரளவுக்கு உணர்ந்திருப்போம். அதற்கேற்ற வகையிலான டையபர்களை எடுத்துக்கொள்வது சிறந்தது. இதில், முக்கியமாக கவனிக்க வேண்டியது, குழந்தைக்கு அணிவிக்கும் டையபர் காற்றோட்டமானதா என்பது.

    சில இறுக்கமான டையபர்களால் தோல் சிவந்து போதல், அரிப்பு, தடிப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், சரியான டையபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தவிர, தொடர்ச்சியாக ஒரே டையபரை அணிந்திருக்கச் செய்யாமல், ஒருமுறை மலம் அல்லது சிறுநீர் கழித்த பிறகு சுத்தம் செய்ய தேவையான தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    * பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு நம்மால் பயணம் செய்யவே முடியாது. கூடுமானவரை குழந்தை ஓரளவுக்கு வளரும் வரையில் பெற்றோரில் ஒருவர் மட்டுமே வெளியூர் பயணத்தை வைத்துக்கொள்வது சிறந்தது. தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே குடும்பத்துடன் பயணிக்க வேண்டும்.

    * பெரும்பாலும் பேருந்து பயணத்துக்கு நோ சொல்லிவிடுவது நல்லது. வாடகை கார் எடுத்துக்கொள்வதோ அல்லது ட்ராப்பிங் சர்வீஸ் கொடுக்கும் நிறுவனங்களின் காரை பயணத்துக்கு பயன்படுத்துவதோதான் சிறந்தது. அப்போதுதான் நம் விருப்பப்படி பயணம் அமையும். கார் கிடைக்காதவர்கள் ரயிலை தேர்ந்தெடுங்கள். அடித்து பிடித்து தட்கலிலாவது டிக்கெட்டை வாங்கிக் கொள்ளுங்கள். அதுதான் சிறந்தது.

    * கணவன் வண்டியை ஓட்டும்போது மனைவி அருகில் அமர்ந்துகொள்வது வழக்கம். அப்போதுதான் பேச்சு துணையாக இருக்கும் என்பது எல்லாம் சரி. ஆனால், குழந்தையை வைத்துக்கொண்டு முன் இருக்கையில் இருவரும் அமர்ந்து பயணிப்பது அவ்வளவு நல்லதல்ல. கணவனோ, மனைவியோ இருவரில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் ஒருவர் பின் இருக்கையில் அமர்வதுதான் சிறந்தது. அப்போதுதான் குழந்தையும் இறுக்கமாக உணராமல் நிம்மதியாக தூங்கும்.

    * தவிர்க்கவே முடியவில்லை. பேருந்துதான் எங்களுக்கு ஒரே வழி… அவசர கதியில் டேக்ஸி பிடிக்க முடியவில்லை எனும் பெற்றோரா நீங்கள்? இந்த சூழலில் பயணத்தை முடிந்தால் ரத்து செய்துவிடுங்கள். இல்லாவிட்டால் 6 மணி நேரத்துக்கு மிகாத வகையில் பயணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். வழியில் ஒரு ஊரில் இறங்கி, கொஞ்சம் ரீஃப்ரஷ் ஆகிவிட்டு, மீண்டும் பயணத்தை தொடருவது சிறந்தது. உறவினர் அல்லது நண்பர்கள் இருக்கும் ஊர்களை வழித்தடமாக பயன்படுத்துவது சிறந்தது.

    * ஒன்று அல்லது இரண்டு நாளுக்கு மேல் பயணத்தை வைத்துக்கொள்ளவே கூடாது. சென்ற இடத்தில் உறவினர்கள் குழந்தை மேல் உள்ள பாசத்தில் ‘இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போங்க’ எனக் கூறலாம். அன்புக்கு மயங்கி குழந்தையின் நலத்தை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. அந்த பகுதி எப்படி இருக்கிறது? அருகில் மருத்துவமனை இருக்கிறதா? உயர் சிகிச்சைக்கான மருத்துவமனைகள் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன போன்றவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு பயண நீட்டிப்பு செய்யலாம். அதுவும் அதிகபட்சம் ஒரு நாள்தான் சிறந்தது. புதிய சூழல் குழந்தைக்கு எப்போதும் ஒப்புக்கொள்ளாது.
    கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் கைகழுவும் வழிமுறையை முதலில் நாம் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும். தொற்றுநோயைத் தடுக்க இதுவே சிறந்த வழியாகும்.
    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவரும் சூழ்நிலையில், ஒவ்வொரு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறார்கள். நமது குழந்தைகள் டியுஷன் முதல் விளையாட்டு மைதானங்கள் வரை பலவகையான சூழல்களை எதிர்கொள்கின்றனர். எனவே சரியான நடவடிக்கைகளின் மூலம் குழந்தைகளின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும்.

    கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது உண்மை தான். ஆனால், பதட்டமடையத் தேவையில்லை.

    குழந்தைகள் கை கழுவும் போது கைகளின் பின்புறத்திலும், விரல்களுக்கு இடையிலும், நகங்களுக்கு அடியிலும் தேய்த்துக் கழுவ வேண்டும். சோப்பு, தண்ணீர் அல்லது ஆல்கஹால் சார்ந்த ஹேண்ட் சானிடைசர்கள் மூலமாக குறைந்தது 20 விநாடிகள் வரை கைகழுவுவது மிகவும் நல்லது.  இந்த வழிமுறையை முதலில் நாம் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். தொற்றுநோயைத் தடுக்க இதுவே சிறந்த வழியாகும்.

    குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் கைகுலுக்குவது, கட்டிப்பிடிப்பது போன்ற அதிக உடல் தொடர்புகளை கொண்ட செயல்களை தவிர்க்க சொல்லிக் கொடுக்கவேண்டும்.

    குழந்தைகளுக்கு இருமல், தும்மல் வரும் போது எப்படி தற்காப்பு முறைகளை பயன்படுத்த வேண்டும் என்பதனை கற்பிக்க வேண்டும். “ஏனெனில், குழந்தைகள் தும்மும்போதும் (அ) இருமும்போதும், ​தங்கள் வாயை மூடுவதில்லை. கைக்குட்டையை பயன்படுத்துவதில்லை.

    கை கழுவுதல், சுத்தமான இடங்களிலிருந்து சாப்பிடுவது போன்ற வழக்கமான முன்னெச்சரிக்கைகள் அவசியம். நன்கு சமைத்த சூடான உணவில் கவனம் செலுத்துங்கள், குறிப்பாக அது இறைச்சியாக இருக்கும்போது. கொரோனா வைரஸ் விலங்குகளில் காணப்படுகிறது. எனவே நீங்கள் சமைத்த உணவை சாப்பிடுவது மிக முக்கியமாக கருதப்படுகிறது.

    குழந்தைகளுக்குச் சொல்வதற்கு கதைகள் தெரியவில்லை என்றாலும் பள்ளிகளில் நடந்த சம்பவங்களை அவர்களிடம் கேட்டும், நம் அலுவலகக் கதைகளை பகிர்ந்தும் கொள்ளலாமே.
    குழந்தைகளின் குறும்புகளைக்கூட ரசிக்க நேரமில்லை. குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஆனந்தம் என்பது போய், அவர்கள் இல்லாத சூழலே சுகம் அளிக்கிறது  என்றாகிக் கொண்டிருக்கிறது. பள்ளி முடிந்து வந்தவுடன் பக்கத்து வீடுகளையும், தெருக்களையும் மைதானமாக விளையாடிய நேற்றைய தலைமுறை, தங்கள் வாரிசுகளை வீட்டுத் தரையில்கூட தாராளமாக விளையாட அனுமதிப்பதில்லை.

    அடம் பிடித்து வாங்கிய பொருள்கள் வீட்டின் மூலையில் பைகளில் அடைந்தே கிடக்கிறது. மைதானங்களைப் போல மகிழ்ச்சி தர வேண்டிய வீடுகள், வகுப்பறைகளைப் போல மாறிவிட்டன. இதனால், செல்லிடப்பேசிகளின் செயற்கை விளையாட்டுகளில் நம் இயற்கை விளையாட்டுகள் தோற்றுவிட்டன. தரையில் கிடைக்காத மகிழ்ச்சி கணினித் திரையில் கிடைக்கிறது.

    புத்துணர்ச்சிக்காக நம்மை ரீசார்ஜ் செய்ய விளையாடியது போய், செல்லிடப்பேசிகளில் சார்ஜ் தீரும் பதற்றத்தில் சுருங்கிவிட்டது. மன அழுத்தத்தாலும் அலுவல் பணிச் சுமையாலும் உடலும் உள்ளமும்  சோர்ந்துவரும் பெற்றோர்களைக் குழந்தைகளால் எப்படி புன்சிரிப்புடன் எதிர்கொள்ள முடியும்?

    விளையாட்டு பொழுதுபோக்கு அல்ல. விளையாட்டுகள் வழியேதான் வெற்றி – தோல்வி, புதிய தொடர்பு, மன மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம், அனுபவம், கூட்டுமுயற்சி ஆகியவை உளவியல் ரீதியாக உள்ளத்துக்குள் பயணிக்கின்றன. இவை படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய பண்புகள் இல்லை. பழகித் தெரிந்துகொள்ள வேண்டியவை. சொல்லாமல் சொன்ன பாடங்கள்.

    ஊரில் உள்ள தாத்தா – பாட்டி வீடுகள்தான் குழந்தை மனதின் வடிகால்கள். உள்மனச் சிதறல்களை சமப்படுத்தும் மட்டப் பலகை. தண்டனை தராமல் காப்பாற்றும் நீதிமன்றங்கள். புத்துணர்ச்சி முகாம்கள். குழந்தைகள் விளையாடும் மிகப் பெரிய பொம்மைகளான தாத்தாவும் பாட்டியும் வாழ வழியின்றி தவணை முறையில் வந்து போகிறார்கள். பெரியவர்கள் திருநீறு பூசுவதும் குழந்தைகள் அவர்கள் காலில் விழுந்து சுருக்குப் பையில் வைத்திருக்கும் காசுகளை வாங்குவதும் மரபு.

    தாய், தந்தை, சகோதரி, சகோதரர், அத்தை, தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா என உறவுகள் இருந்தால் அது கூட்டுக் குடும்பம் என்பது போய், தந்தை – தாயுடன் வாழ்ந்தாலே கூட்டுக் குடும்பம் என்றாகிவிட்ட பிறகு இனிவரும் காலத்தில் கணவன் – மனைவி சேர்ந்து வாழ்ந்தாலே, கூட்டுக் குடும்பம் என்று ஆகிவிடுமோ என்றும் தோன்றுகிறது.

    கூவிக் கூவிக் கோடிகளில் விற்பனை செய்யப்படும் அடுக்ககங்கள் வீடுகளை விடுதிகளாக்கி வருகின்றன. “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற பழமொழி நகரத்துக் கும்பலான வாழ்க்கையில் தனித் தீவுகளான குடும்பங்களுக்குப் புரிவது எப்போது? குழந்தைகளுக்கு விளையாடுவது மகிழ்ச்சி என்றால், அதைப் பார்ப்பது பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி. கண்கள் செய்ய வேண்டிய இந்த வேலையை, கருவிகள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. நாயை வாரிசாக பாவிப்பது சரி; ஆனால், வாரிசுகள் நாயாகாமல் பார்க்க வேண்டியது முக்கியம். “கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை’ என்றார் ஒளவை. அதைவிடக் கொடுமை மகிழ்ச்சி என்பது என்னவென்றே அறியாமல் இளமையைக் கடப்பது இல்லையா? அதனால்தான் பெற்றவர்கள் பேச்சைக் கேட்டு நடந்த கடைசித் தலைமுறை, இப்போது பிள்ளைகளின்  பேச்சை மட்டுமே கேட்கும் முதல் தலைமுறையாக மாறிக் கொண்டிருக்கிறது.

    பழைய படங்களை ரீமேக் செய்வதைப் போல பழைய காலத்தைக் கொஞ்சம் நாம் ஏன் கட்டமைத்துக் கொடுக்கக் கூடாது? சுமைகளை சுகங்களாக்க சில  உறவுகளையாவது விருந்தோம்பல் பண்பால், ஈர நூலால் இழுத்துக் கட்டி பேணினால்தான், அதன் எதிரொலியை எதிர்காலச்  சந்ததிக்கும் கேட்கச் செய்ய முடியும்.

    மதிப்பெண்ணை வைத்து மட்டுமே மாணவர்களை மதிப்பீடு செய்துவிட முடியாது. பள்ளித் தேர்வு விடுமுறை நாள்களை “திறன் வளர்ச்சி வகுப்புகள்’ என்ற சிறுவர் சந்தைக்கு இரையாகாமல் காக்க வேண்டும். நாம் குழந்தைகளாக இருந்தபோது, நமக்கு நிலாச் சோறு ஊட்டிய  மொட்டை மாடிகளில் காத்தாடி விட்டு, கொஞ்சம் காற்று வாங்கி வருவதை வார இறுதி நாள்களிலாவது சாத்தியப்படுத்தலாமே.

    படுக்கையில் இருந்துகொண்டே பாரதி பாடல்கள் கேட்டு, அந்தாக்சரி பாடி, இரவை இனிமையாக்கலாமே. குழந்தைகளுக்குச் சொல்வதற்கு கதைகள் தெரியவில்லை என்றாலும் பள்ளிகளில் நடந்த சம்பவங்களை அவர்களிடம் கேட்டும், நம் அலுவலகக் கதைகளை பகிர்ந்தும் கொள்ளலாமே. அது சில சமயம் பேய்க் கதைகளைவிட சுவாரசியமாகவும் இருக்கக்கூடும்.

    வாழ்க்கையை நல்ல எண்ணமும், வாகனத்தை நல்ல எண்ணெயும்தான் உராய்வின்றி நகர்த்தி வருகிறது. ஓட்டாமலேயே துருவேறிய குழந்தையின் மிதி வண்டி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேரோட்டம்போல் வலம் வரட்டுமே! பிரகாரம் சுற்றுவது போல குடும்பத்தை கோயிலாக்கட்டுமே!
    சமுதாயத்தில் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவருக்கும் தனக்கு படித்துக் கொடுத்த ஏதோ ஓர் ஆசிரியரை பற்றிய நினைவு கண்டிப்பாக உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும்.
    ‘உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
    கடையரே கல்லா தவர்’

    செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பி பணிந்து கற்றவரே, உயர்ந்தவர், அப்படி நின்று கற்க வெட்கப்பட்டு கல்லாதவர் இழிந்தவரே என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

    அந்த கல்வியை நமக்கு இனிமையாகவும், அன்பாகவும், பண்பாகவும் சிறிது கண்டிப்புடனும் கற்று தருபவர்கள் நமது ஆசிரியர்கள் தான். ஆசிரியர்கள் எவ்வளவு கற்றாலும், தன்னைத்தானே தாம் எவ்விதத்திலும் பெரியர் என்ற பெருமைக்கு உட்படாமல் மேலும், மேலும் தனது அறிவை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், அதை தான் மட்டும் தெரிந்து கொள்ளக்கூடாது என்று நினைத்து அதை அவர்கள் தங்களின் மாணவர்களுக்கும் கற்று கொடுக்கிறார்கள்.

    ஆசிரியர் சிறந்த நற்பண்புகளையும், ஒழுக்கத்தையும், நேர்மையும் உடையவர்கள். கல்வியை மட்டும் கற்று கொடுத்து விட்டு நம் வேலை முடிந்தது என்று நினைப்பவர்கள் அல்லர். கல்வியுடன் சேர்த்து நல்ல பழக்க வழக்கங்களையும், சிறந்த பண்புகளையும், ஒழுக்கத்தையும், நேர்மை அல்லது உண்மையாக நடந்து கொள்வது, மேலும் அறிவையும் சேர்த்தே நமக்கு ஊட்டுகிறார்கள். ஏன் பொறுமைக்கும் உதாரணமாகவும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட எல்லாவற்றையும் கற்று தருகின்ற ஆசிரியர்களை நாம் எவ்வாறெல்லாம் மதிக்க வேண்டும். பொறாமை என்ற குணம் அவர்களிடம் அறவே இருக்காது.

    எல்லாவிதமான மாணவர்களையும் சமமாக நினைத்து அனைவருக்கும் ஒரே மாதிரியாக கல்வி மற்றும் அறிவையும் கொடுக்கிறார்கள். என்றாவது ஒரு நாள், அவர்கள் நம்மை, என் மாணவன் இப்பதவியில் இருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ளும் போது, அவர்களும் நம் பெற்றோரை போல் அளவு கடந்த மகிழ்ச்சியை அடைவார்கள். அப்போதும் அவர்கள் தன் இடத்தை விட்டு மாறாமல் அதே ஆசிரிய பணியிலே தான் சிறந்து விளங்குவார்.

    ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள்
    பூமியில் பிறக்க விரும்புகின்றேன்
    அத்தனை பிறப்பிலும் ஆசான் பணியை
    ஏற்றிட விரும்புகிறேன்

    என்றும் ஒரு ஆசிரியர் கூறுகிறார். அவ்வளவு தூரம் ஆசிரியர்கள் அவர்களின் பணியை விரும்புகிறார்கள். அடக்கத்தை உறுதி பொருளாக கொண்டு விளங்குபவர்கள் அவர்களே! அவர்கள் எவ்வளவு தான் தனது அறிவை வளர்த்துக் கொண்டாலும் அடக்கத்துடனும் பணிவுடனுமே நடந்து கொள்வார்கள். கற்பதையே நாம் கடினம் என்று நினைக்கும் போது ஆசிரியர்கள் நமக்கு கற்பிக்க வரும் முன்னர் அவர்கள் எவ்வளவு அதிகமாக கற்று கொண்டு வந்து மாணவர்களாகிய நமக்கு கல்வியையும், அறிவையும் புகட்டுகிறார்கள் என்பதை நாம் அறிந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

    “ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை”

    சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக் கொண்டு போய்ச் சேரும். இதற்கு முழு எடுத்துக் காட்டாக நாம் நமக்கு கல்வியை புகட்டும் ஆசிரியர்களையே சொல்ல முடியும். அவர்கள் தன்னைத் தானே ஆக்கத்துடனும், ஊக்கத்துடனும் இருப்பதோடு தங்களின் மாணவர்களையும் எல்லா விதத்திலும் ஊக்கப்படுத்துவார்கள். அவர்கள் எந்த நேரமும் புத்துணர்ச்சியுடனும் மாணவர்களுக்கு அறிவை புகட்டும் விதத்திலும் எந்தவித மாற்றமும் இன்றி நடந்து கொள்வார்கள்.

    விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான மறைந்த ஏ.பி.ஜே.அப்துல்கலாம், ஆசிரிய பணியை அதிகம் நேசித்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றுவது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அவரது கடைசி பேச்சையும் மூச்சையும் அறிவை புகட்டும் ஆசானாகவே 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கழக மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே தனது உயிரை துறந்தார்.

    சமுதாயத்தில் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவருக்கும் தனக்கு படித்துக் கொடுத்த ஏதோ ஓர் ஆசிரியரை பற்றிய நினைவு கண்டிப்பாக உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும். நாம் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் செப்டம்பர் 5, மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளே ஆகும். மாணவர்களாகிய நம்மை முன்னேற்ற பாதையில் ஏற்றி விட்டு அவர்கள் கீழே நிற்கிறார்கள். அவர்களை மாணவர்களாகிய நாம் போற்றுவோம்!

    அ.குலூத் நிஹார்,

    முதலாமாண்டு இயற்பியல் துறை,

    பாபுஜி நினைவு கல்வியியல்

    கல்லூரி, மணவாளக்குறிச்சி
    குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (போக்சோ), கடந்த 2012-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை மேலும் கடுமையாக்கும்வகையில், சமீபத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
    குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (போக்சோ), கடந்த 2012-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை மேலும் கடுமையாக்கும்வகையில், சமீபத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    அந்த திருத்தங்களை உள்ளடக்கிய புதிய ‘போக்சோ’ சட்ட விதிமுறைகளை மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டுள்ளது. கடந்த 9-ந் தேதி அமலுக்கு வந்த அந்த விதிமுறைகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குழந்தைகளை பராமரிக்கும் காப்பகங்கள், குழந்தைகளுடன் அன்றாட தொடர்பு கொண்ட பள்ளிக்கூடங்கள், விளையாட்டு அமைப்புகள் உள்ளிட்ட எந்த நிறுவனமாக இருந்தாலும், அங்கு பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரின் பின்னணி குறித்து போலீஸ் மூலம் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் ஆகியோருக்கு தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்காக, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

    குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பெற்ற நபர்கள் அல்லது அத்தகைய படங்கள் பரப்பப்படுவது குறித்து தகவல் அறிந்த நபர்கள் அதுபற்றி சிறப்பு சிறார் போலீஸ் பிரிவிடமோ அல்லது இணைய குற்றப்பிரிவிடமோ புகார் அளிக்க வேண்டும்.

    அப்படி புகார் அளிக்கும்போது, எந்த சாதனத்தில் அத்தகைய படங்கள் பெறப்பட்டன என்றும், எந்த தளத்தில் அவை பரப்பப்படுகின்றன என்றும் தெரிவிக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சிறிதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்ற அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை ஒன்றை மாநில அரசுகள் வகுக்க வேண்டும். குழந்தைகளுடன் நேரடி தொடர்புடைய எல்லா நிறுவனங்களும் அந்த கொள்கையை பின்பற்ற வேண்டும்.

    குழந்தைகளை கையாளும் பணியில் இருக்கும் நிரந்தர, ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும், ‘போக்சோ’ சட்டப்படி அவர்களது பொறுப்பு பற்றியும் உணர்த்த பயிற்சி வகுப்புகளை மத்திய, மாநில அரசுகள் நடத்த வேண்டும்.

    மேலும், குழந்தைகளுக்கு தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு பற்றியும், பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது பற்றியும், அத்தகைய குற்றங்களை தெரிவிப்பதற்கான குழந்தைகள் உதவி மைய கட்டணம் இல்லா தொலைபேசி எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த அவரவர் வயதுக்கேற்ற பாடத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் வகுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
    குழந்தைகளின் தூக்கம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறும். இது குறிந்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    1-4 வாரங்கள் ஆன குழந்தைகள்: நாளொன்றுக்கு 15 - 16 மணி நேரம் புதிதாக பிறந்தவர்கள் 15 முதல் 18 மணி நேரம் வரை தூங்குகிறார்கள் ஆனால் அவர்கள் அதை 3 அல்லது 4 மணி நேர குறுகிய கால தூக்கமாக தூங்குகிறார்கள். குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் நீண்ட நேரமும் மற்றும் வயிற்றுவலி உள்ள குழந்தைகள் குறுகிய நேரத்திற்கும் தூங்குவார்கள். புதிதாக பிறந்தவர்களுக்கு இன்னும் ஒரு உட்புற உயிரியல் கடிகாரம் அல்லது சர்காடியன் ரிதம் இல்லாததால், தூக்க நேரமானது பகல்நேர மற்றும் இரவுநேர சுழற்சிகளுடன் தொடர்பில் இல்லை. உண்மையில், அஅவர்களுக்கு தூங்குவதற்கான ஒரு குறிப்பிட்ட நேரமே இருக்காது.

    1-4 மாதங்கள் ஆன குழந்தைகள்: நாளொன்றுக்கு 14 - 15 மணி நேரம் 6 வார வயதிலேயே உங்கள் குழந்தை சிறிதளவு பழக்கத்திற்கு உட்பட தொடங்குகிறது. மேலும் அவர்களின் தூக்க நேரம் ஒரு வடிவம் பெற தொடங்கி இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். நீண்ட தூர தூக்கங்கள் நான்கு முதல் ஆறு மணிநேரங்கள் வரை செல்கின்றன. மேலும் இப்போது மாலையில் இன்னும் அடிக்கடி நடக்கும்.நாள் பகல் - இரவு குழப்பம் முடிந்துவிடும்.

    1-4 வாரங்கள் ஆன குழந்தைகள்: நாளொன்றுக்கு 15 - 16 மணி நேரம் புதிதாக பிறந்தவர்கள் 15 முதல் 18 மணி நேரம் வரை தூங்குகிறார்கள் ஆனால் அவர்கள் அதை 3 அல்லது 4 மணி நேர குறுகிய கால தூக்கமாக தூங்குகிறார்கள். குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் நீண்ட நேரமும் மற்றும் வயிற்றுவலி உள்ள குழந்தைகள் குறுகிய நேரத்திற்கும் தூங்குவார்கள். புதிதாக பிறந்தவர்களுக்கு இன்னும் ஒரு உட்புற உயிரியல் கடிகாரம் அல்லது சர்காடியன் ரிதம் இல்லாததால், தூக்க நேரமானது பகல்நேர மற்றும் இரவுநேர சுழற்சிகளுடன் தொடர்பில் இல்லை. உண்மையில், அஅவர்களுக்கு தூங்குவதற்கான ஒரு குறிப்பிட்ட நேரமே இருக்காது.

    1-4 மாதங்கள் ஆன குழந்தைகள்: நாளொன்றுக்கு 14 -15 மணி நேரம் 6 வார வயதிலேயே உங்கள் குழந்தை சிறிதளவு பழக்கத்திற்கு உட்பட தொடங்குகிறது. மேலும் அவர்களின் தூக்க நேரம் ஒரு வடிவம் பெற தொடங்கி இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். நீண்ட தூர தூக்கங்கள் நான்கு முதல் ஆறு மணிநேரங்கள் வரை செல்கின்றன. மேலும் இப்போது மாலையில் இன்னும் அடிக்கடி நடக்கும்.நாள் பகல் - இரவு குழப்பம் முடிந்துவிடும்.

    4-12 மாதங்கள் ஆன குழந்தைகள்: நாளொன்றுக்கு 14 -15 மணி நேரம்  வரை தூங்குவது சிறந்தது. 11 மாத வயது வரை பெரும்பாலான குழந்தைகளுக்கு 12 மணிநேரம் தூக்கம் கிடைக்கும். ஆரோக்கியமான தூக்க பழக்கங்களை நிறுவுவது இந்த காலக்கட்டத்தில் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது, உங்கள் குழந்தை இப்போது மிகவும் சமூகமாக இருப்பதால், அவருடைய தூக்க வடிவங்கள் வயது வந்தோருக்கானவை.

    குழந்தைகளுக்கு பொதுவாக மூன்று சிறுதுாக்கம் இருக்கும் மற்றும் இது 6 மாதங்கள் வரை செல்கின்றன.அந்த நேரத்தில் (அல்லது முந்தைய) அவர்கள் இரவில் தூங்குவதற்கு உடல் திறன் கொண்டவர்கள். உயிரியல் தாளங்கள் முதிர்ச்சியடைந்த நிலையில், வழக்கமான கால இடைவெளிகளை உருவாக்குவது பொதுவாக இந்த காலத்தின் பிற்பகுதியில் நிகழ்கிறது. காலை சிற்றுண்டிக்கு பிறகு சிறுதுாக்கம் பொதுவாக 9 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் வரை நீடிக்கும். மதிய சிறுதுாக்கம் 2 மணிக்கு தொடங்குகிறது மற்றும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் நீடிக்கும். பிற்பகல் பிற்பகுதியில் 3 முதல் 5 மணி வரை தூங்கலாம். பொதுவாக இந்த இடைவெளி நேரம் வேறுபடுகிறது.

    1-3 ஆண்டுகள் ஆன குழந்தைகள்: நாளொன்றுக்கு 12 - நாள் 14 மணி நேரம் உங்கள் குழந்தை 18-21 மாத வயது வரை முதல் வருடம் கடந்திருக்கும் வேளையில்,அவர்கள் காலையில் அல்லது மாலைவேளை சிறுதூக்கத்தை இழப்பார் மற்றும் ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே பகலில் தூங்குவார். குழந்தைகளுக்கு 14 மணிநேரம் தூக்கம் தேவைப்படும் போது, அவை வழக்கமாக 10-ஐ மட்டுமே பெறும். 21 முதல் 36 மாத வயதுடைய பெரும்பாலான குழந்தைகள் இன்னும் ஒரு நாளுக்கு ஒரு குட்டித்தூக்கம் தேவைப்படும். இது ஒன்று முதல் மூன்றரை மணி நேரம் வரை இருக்கலாம். அவர்கள் வழக்கமாக இரவில் 7 மணி முதல் 9 மணிக்குள் தூங்கி, காலையில் 6 மணி முதல் 8 மணிக்குள் எழுந்திருப்பர்.

    3-6 வயது ஆன குழந்தைகள்: நாள் ஒன்றுக்கு 10 - 12 மணி நேரம் இந்த வயதில் குழந்தைகள் பொதுவாக 7 மணிக்குள் படுக்கைக்குச் செல்வார்கள். அவர்கள் இளம் வயதிலேயே செய்ததைப் போலவே, 9 மணிக்குள் தூங்கி, காலையில் 6 மணி முதல் 8 மணிக்குள் எழுந்திருப்பர். பெரும்பாலான 3 வயது குழந்தைகள் இன்னும் குட்டித் தூக்கத்தை விரும்புவார்கள், ஆனால் 5 வயதில் அப்படியில்லை குட்டி தூக்கம் படிப்படியாக குறைவாகவும் செய்யும்..3 வயதுக்குப் பிறகு புதிய தூக்க சிக்கல்கள் பொதுவாக உருவாக்கப்படாது.
    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை நன்கு கவனித்து, குழந்தை சராசரி மனிதனை போல் வளர வழி வகை செய்ய வேண்டும்.
    குழந்தைகள் எப்பொழுதும் தமக்கென ஒரு உலகத்தில் வாழ்கின்றனர். நாமும் அவ்வயதை கடந்து வந்திருந்தாலும். ஏனோ குழந்தைகளின் தேவைகளை புறிந்து செயற்பட தவறுகின்றோம்.

    குழந்தைகளுக்கு அனேகமான பெற்றோர் சிறந்த கல்வி, சிறந்த உடை, சிறந்த வாழிடம் என்பனவற்றை வழங்குவதையே பெரிய விடயமாக கருதுகின்றார்கள். அவற்றைகடந்து அவர்களின் தேவையை நிறைவேற்ற அவர்கள் முயல்வதில்லை. இதனால் மனரீதியாக குழந்தைகள் மிகவும் பாதிப்படைகின்றார்கள். பெற்றோர் விடும் இப்பிழை குழந்தைகளின் எதிர்காலத்தை கோள்விக் குறியாக்குகின்றது.

    இப்படியான ஒரு விடயம் தான் குழந்தைகளின் கற்பனை நண்பர்கள். எமது சிறு வயதிலும் எமக்கு பிடித்த ஒரு கற்பனை பாத்திரம் இருந்திருக்கலாம். அது ஒரு செல்லப்பிராணியாகவோ, ஒரு பொம்மையாகவோ இருக்கலாம். இன்றும் உங்கள் மனதில் அது பற்றிய தாக்கம் இருக்கும்.

    குழந்தைகளுக்கு விளையாடத்துணை இல்லாத பொழுது, பெற்றோர் குழந்தைகளுடன் நேரம் செலவிடாத பொழுது, குழந்தைகள் தனிமையில் அதிகமாக இருக்க நேரிடும் பொழுது, குழந்தைகளுக்கு நண்பர்கள் இல்லாத நிலை போன்ற சூழ்நிலைகளின் பொழுது அவர்கள் தனிமையான சூழலில் இருந்து விடுபடத் தேடி அமைத்துக் கொள்ளும் விடயம் தான் இந்தக் கற்பனை நண்பன்.

    குழந்தையின் 2 முதல் 9 வயது வரையிலான கால கட்டத்தில், குழந்தைகள் அனைத்து விஷயங்களிலும் சாதாரணமாக ஈடுபட்டு தனக்கெனப் பிடித்த பொம்மையைக் கொஞ்சுவது, அலங்கரிப்பது, அதனுடன் விளையாட்டாகப் பேசுவது போன்ற செயல்பாடுகள் காணப்பட்டால் அது சாதாரண சூழல். ஆனால், அந்த வயது வரம்பை மீறித் தனது கற்பனை நண்பனுடனான நட்பை நீடித்து அந்த ஒரு நண்பனுடன் மட்டுமே எப்பொழுதும் நேரத்தை செலவிட்டுக் கொண்டு, மற்ற விடயங்களில் ஈடுபாடு காட்டாமல் தனித்து, விலகிச் சென்றால், அந்தச் சூழல் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

    இந்நிலையைக் குழந்தைகள் அடைந்து விட்டால், அது அவர்களின் மனநிலையில் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தி விபரீத விளைவுகளை உண்டாக்கலாம்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை நன்கு கவனித்து, குழந்தை சராசரி மனிதனை போல் வளர வழி வகை செய்ய வேண்டும். உங்கள் கவனிப்பையும் மீறி குழந்தை அந்த கற்பனை நண்பன் உலகில் மூழ்க நேர்ந்தால், பெற்றோர்கள் அதை உடனடியாக கவனித்து குழந்தைக்கு மனநிலை மருத்துவருடன் கலந்தாலோசித்தல் அவசியம்.

    குழந்தை தன் கற்பனை நண்பனை உங்களிடம் காட்டி பேசும் பொழுது உங்கள் வெறுப்பைக் காட்டாமல், குழந்தையின் பாணியிலேயே பாசமாக பேசிக் குழந்தைக்கு உண்மை நிலையை உணர்த்தலாம்.
    இரத்த சோகையிலிருந்து குழந்தைகளைத் தடுப்பதற்கான சிறந்த வழி ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் சீரான சத்தான உணவையும் வாழ்வதே ஆகும்.
    பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் இரத்த சோகையை அனுபவிக்க முடியும், இது இரத்தத்தின் பற்றாக்குறை என்றும் அழைக்கப்படுகிறது. இரத்த சோகை குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின் செயல்முறை பாதிக்கப்படலாம். உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருக்கும்போது குழந்தைகளுக்கு மிகவும் பொதுவான இரத்த சோகை ஒரு நிலை. இதன் விளைவாக, குழந்தையின் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் போதுமான ஆக்ஸிஜனை வழங்க இரத்தம் கடினமாகிறது.

    குழந்தையின் உடல் போதுமான சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்யாது. ஒரு குழந்தை தனது உணவில் இரும்பு அல்லது பிற ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் இது நிகழலாம்.

    குழந்தையின் உடல் பல சிவப்பு ரத்த அணுக்களை அழிக்கிறது. இந்த வகை இரத்த சோகை பொதுவாக ஒரு குழந்தைக்கு ஒரு அடிப்படை நோய் இருக்கும்போது அல்லது அரிவாள் செல் இரத்த சோகை போன்ற சிவப்பு இரத்த அணுக்களின் அசாதாரணங்களைப் பெறுகிறது.

    இரத்தப்போக்கு மூலம் இரத்த சிவப்பணு இழப்பு. உதாரணமாக காயம் அல்லது அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு காரணமாக.

    இரத்த சோகை குழந்தையின் அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் (இரத்த பற்றாக்குறை)

    இரத்த சோகை குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என்பதை அறிவதற்கு முன்பு, இது பெரும்பாலும் தோன்றும் அறிகுறிகளை அடையாளம் காண உதவுகிறது. இந்த அறிகுறிகளில் சில:

    * வெளிர் அல்லது சாம்பல் நிற தோல், அதே போல் கண் இமை மற்றும் ஆணி இறைச்சி பகுதியில் சுண்ணாம்பு
    * எளிதில் சோர்வாக இருக்கும்
    * நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமாக இருப்பதால் தொற்றுநோயைப் பெறுவது எளிது
    * மஞ்சள் தோல் அல்லது கண் பகுதி (இது அவர்களின் சொந்த உடலால் அழிக்கப்படுவதால் இரத்த அணுக்கள் குறைக்கப்படும் குழந்தைகளால் அனுபவிக்கப்படுகிறது)

    இந்த நிலை நாள்பட்டதாக மாறி, குழந்தையின் வளர்ச்சியையும் வளர்ச்சியையும் சீர்குலைக்கும் முன் உடனடியாக ஒரு மருத்துவரை சந்தியுங்கள். இரும்புச்சத்து குறைபாடுள்ள இரத்த சோகை உள்ள குழந்தைகள் ஐஸ் க்யூப்ஸ், களிமண், களிமண் மற்றும் சோள மாவு போன்ற விசித்திரமான விஷயங்களையும் சாப்பிடலாம். இந்த நடத்தை பிகா என்றும் அழைக்கப்படுகிறது. பிகா மிகவும் ஆபத்தானது அல்ல, உங்கள் பிள்ளை விஷமான ஒன்றை சாப்பிடாவிட்டால். இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கப்பட்டதும், குழந்தை வயதாகும்போது பிகா பொதுவாக நின்றுவிடும்.

    குழந்தைகளில் இரத்த சோகை தடுக்க முடியுமா?

    இரத்த சோகையிலிருந்து குழந்தைகளைத் தடுப்பதற்கான சிறந்த வழி ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் சீரான சத்தான உணவையும் வாழ்வதே ஆகும். இரத்த சோகை குழந்தைகள் குணமடைந்து ஒழுங்காக வளரக்கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த உதவிக்குறிப்புகள் இங்கே.

    1. உங்கள் குழந்தைக்கு 12 மாதங்களுக்கு மேல் இருக்கும் வரை பசுவின் பால் கொடுக்க வேண்டாம்

    தாய்ப்பாலில் (ஏ.எஸ்.ஐ) பசுவின் பாலை விட இரும்புச் சத்து குறைவாக உள்ளது. இருப்பினும், ஒரு குழந்தையின் செரிமானம் பசுவின் பாலைக் காட்டிலும் தாய்ப்பாலில் இருந்து இரும்பை உறிஞ்சும் திறன் கொண்டது. உங்கள் பிள்ளை தயாராகும் முன் பசுவின் பால் கொடுப்பது உண்மையில் குடலில் உறிஞ்சப்படும் இரும்பின் அளவைக் குறைக்கும்.

    நீங்கள் தாய்ப்பால் கொடுத்தால், உங்கள் குழந்தைக்கு குறைந்தது 6 மாதங்கள் வரை இரும்புச்சத்து போதுமானதாக இருக்கும். அதன்பிறகு, உங்கள் பிள்ளை தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்து, திடமான உணவை உண்ணத் தொடங்கினால், அவருக்கு கூடுதல் இரும்புச்சத்து கொடுங்கள். இந்த நோக்கத்திற்காக மிகவும் பொருத்தமான உணவுகள் குறித்து உங்கள் குழந்தை மருத்துவரிடம் பேசுங்கள்.

    2. அதிக பால் குடிக்க வேண்டாம்

    உங்கள் பிள்ளை பால் குடிக்க விரும்புகிறார் என்பதற்கு நன்றியுடன் இருக்க வேண்டும். இருப்பினும், இரும்புச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்கு அதிக பால் குடிப்பதால் குழந்தைகள் விரைவாக பூரணமாக உணர முடியும்.

    அந்த வகையில், குழந்தைகள் நிறைந்திருப்பதால் சாப்பிடுவது கடினம். உண்மையில், இரும்பு மற்றும் தாதுக்களின் சிறந்த ஆதாரம் துல்லியமாக இயற்கை உணவுகள் மற்றும் பானங்கள், குறிப்பாக கீரை போன்ற பச்சை காய்கறிகளில் உள்ளது.
    பள்ளிக்குச் செல்லாமல் ஹோம் ஸ்கூல், தொலை தூரக்கல்வியில் பயிலும் குழந்தைகள் கூட அதிக மார்க் எடுத்து சாதிக்கிறார்கள். அப்படியென்றால் பள்ளி கல்லூரியில் நம் குழந்தைகளை எதை செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
    நம் குழந்தைகள் பள்ளியில் பயிலும் போது நாம் பெரும்பாலும் எதைக் கண்காணிக்கிறோம்? அந்த குழந்தை முதல் மதிப்பெண் வாங்குகிறதா என்பதைத் தான். ஆனால் பள்ளிக்குச் செல்வது அதற்கு மட்டும் இல்லை. பள்ளிக்குச் செல்லாமல் ஹோம் ஸ்கூல், தொலை தூரக்கல்வியில் பயிலும் குழந்தைகள் கூட அதிக மார்க் எடுத்து சாதிக்கிறார்கள். அப்படியென்றால் பள்ளி கல்லூரியில் நம் குழந்தைகளை எதை செய்ய ஊக்குவிக்க வேண்டும்?

    பெற்றோர்கள் கட்டாயம் தங்கள் குழந்தைகள் வாழ் வியல் பாடம் கற்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். அதற்கான சூழ்நிலையும் வாய்ப்பும் பள்ளி யில் இருக்கிறதா, நம் குழந்தை அந்த வாய்ப்பை பயன்படுத்த முற்படுகிறதா என்று கண்டறிய வேண்டும். உதாரணத்திற்கு வகுப்பில் செமினார் வரும் போது தங்கள் குழந்தை நான்கு பேர் கொண்ட குழுவில் விவரம் சேமிப்பவராக மட்டுமின்றி மேடையேறி பேசச் சொல்லலாம். சிறு வயதில் நண்பர்கள் முன் சொதப்பிய வர்கள் தான் பிற்காலத்தில் பெரிய பேச்சாளர்கள் ஆனவர்கள். சிறு வயது முதலே இந்த மாதிரி பொறுப்பு எடுத்து பழகுகிற குழந்தை வளர்ந்த பிறகு எந்த செயலையும் எந்தவித தயக்கமுமின்றி திடமாக செய்யும்.

    படித்துப் பெறும் பட்டம் “பாஸ்போர்ட்” என்றால், அச்சமின்மை தான் “விசா” வாழ்க்கை பயணத்திற்கு. அது தான் நம்மைவெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.
    அடுத்து எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க வேண் டும் என்று நினைப்பது சாத்தியமில்லை. இந்த கதை அதற்கு சிறந்த உதாரணம். சிவனும் பார்வதியும் வாகனமான நந்தியின் மீதேறி சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவ்வழி சென்றவர்கள் இங்கே பார், பாவம் நந்தி.

    இருவரும் இப்படி ஏறிச் செல்கிறார்களே என்று கூறினர். சங்கடமடைந்த சிவன் இறங்கி நடந்துவர, அங்கே சென்றவர்கள் இங்கே பாருங்கள் கணவனை நடக்க விட்டு மனைவி வாக னத்தில் வருகிறார் என்று பேசிக் கொண்டு சென்றனர். அதை கேட்டு பார்வதி கீழே இறங்கி விட்டு சிவபெருமானை நந்தி யின் மீது அமரச் செய்து நடந்து வந்தார். அதை கண்ட சிலர் இங்கே பாருங்கள் பாவம் பெண்ணை இப்படி கஷ்டப்படுத்திகிறார் என்றனர். விழி பிதுங்கிய சிவன் கீழே இறங்கி விட்டார். இப்போது என்ன சொன்னார்கள் தெரியுமா? நந்தியை ப்ரீயாக விட்டுவிட்டு இவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றனர்.

    இந்த கதையை அனேகம் பேர் சிறு வயதில் கேட்டி ருப்பீர்கள். இதிலுள்ள செய்தி என்னவென்றால் எதைச் செய்தாலும் அதற்கு ஒரு கிண்டல், நையாண்டி கருத்து சொல்ல நூறு பேர் கிளம்புவார்கள். அதற்கெல்லாம் செவி சாய்த்தால் ஒரு அடி கூட நகர முடியாது என் பது தான். எனவே எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்க முயற்சிக்காதீர்கள், அது தேவை இல்லை.

    தப்பு செய்யக்கூடாது, பிறருக்கு தீங்கு செய்யக் கூடாது அவ்வளவுதான். நமக்கு எது சரியோ அதை தைரியமாக செய்ய வேண்டியது தான். மடியில் கணம் இருந்தால் தானே வழியில் பயம்?

    மொழி தடையாக இருக்கிறதா?

    உங்களுக்கு ஒன்று சொல்லவா? உலகில் 195 நாடுகள் உள்ளன. அதில் 50&70 நாடுகளில்தான் ஆங்கிலம் உபயோகிக்கிறார்கள். அதனால் ஆங்கிலம் தெரியவில்லை என்றால் அதற்காக தாழ்வு மனப் பான்மையை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை. ஆங்கில புலமை நல்ல வேலையையும் பதவியையும் பெற்று தரும் என்பதை மறுக்க இயலாது தான். ஆனால் அதைக்கண்டு அஞ்சி என்ன பயன்? அதை “கான்கர்” செய்யுங்கள். மிக எளிதில் கைவசப்படுத்தக் கூடிய மொழி ஆங்கிலம். எது ஒன்று உங்களை அச்சுறுத்துகிறதோ அதோடு “நீயா? நானா--?” என்று போராடுங்கள். அந்த அச்சத்தை வெல்லும் வரை ஓயாதீர்கள்.வெற்றி நிச்சயம்.

    உங்களின் தனித்தன்மையை வளர்க்க அச்சமா?

    எல்லோரும் ஆட்டு மந்தையைப் போல் ஒரு திசையில் செல்கிறார்கள். உங்களுக்கு வேறு பல வழிகள் புலப்படுகிறது. ஆனால் உங்கள் தனித்துவத்தை சோதிக்க பயம் தோன்றுகிறதா? ஏனென்றால் புதுமையாக ஏதாவது நாம் செய்யும் போது அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கோ யாரை அணுக வேண்டும் என்பதற்கோ எந்த புளூபிரிண்டும் இருக்காது. நாமாகவே போராடி கண்டறிந்து செய்து பார்த்து வெற்றி பெற்றாலும் பெறலாம், இல்லையெனில் தோல்வியில் உள்ள பாடத்தை கற்கலாம். ஆனால் புதுமையாக ஏதேனும் செய்து பார்க்க தைரியமில்லை என்றால் எல்லோரையும் போல் சாதாரண வாழ்க்கையைத் தான் வாழ முடியும்.

    கனவு காணுங்கள்

    நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை உங்கள் மனத்திரையில் கொண்டு வந்து அசை போடுங்கள். அவ்வாறு செய்யச் செய்ய உங்களை நீங் களே அதிகம் நம்ப ஆரம்பிப்பீர்கள்.

    நிறைய படியுங்கள்

    புத்தகங்களை விட சிறந்த நண்பர்கள் யாருமில்லை. பல விஷயங்களை ஒரு தொலைநோக்கு பார்வையுடன் பார்க்க நல்ல புத்தகங்கள் உறுதுணையாக இருக்கின்றன. “இயற்கையாகவே எனக்கு கூச்ச சுபாவம். என்னை போய் இதைச் செய் அதைச் செய்னா எப்படி..” என்று அங்கலாய்பவரா நீங்கள்? நீங்கள் ஒன்றும் தனி ஆள் இல்லை. உங்களைப் போலவே ஒரு பெரிய கூட்டம் உங்கள் பின்னால் இருக்கிறது. கவலை வேண்டாம். சில துணிச்சலான நண்பர்களை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களை வெகுவாக ஊக்குவிப்பார்கள்.

    இப்படியாக நம் மனதிலும் நம்மை சுற்றிலும் அச்சத்தை தவிர்த்து ஊக்கத்தை அளிக்கும் காரணிகளை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் நம்மை பாதிக்காது. வீறு கொண்டு வெற்றிநடை போடலாம். எனவே அச்சம் எனும் முட்டுக்கட்டையை களைந்து வாழ்க்கையில் முன்னேற முற்படுவோம்.

    தொடர்புக்கு: director@kveg.in

    புதிதாகப் பிறந்த சில தோல் பிரச்சினைகள் பொதுவாகத் தானே போய்விடும். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படும் தோல் பிரச்சினைகள் இங்கே பார்க்கலாம்.
    புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சரியான நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. எனவே, குழந்தைகள் தொற்று நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இது குழந்தையின் தோல் பிரச்சினைகள் உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். பின்னர், புதிதாகப் பிறந்த குழந்தைகளில் அடிக்கடி ஏற்படும் தோல் பிரச்சினைகள் என்ன? அனைத்தும் தொற்று நோய்களால் உண்டா? இது விளக்கம்.

    1. முகப்பரு

    முகப்பரு உள்ள பெரியவர்கள் மட்டுமல்ல, புதிதாகப் பிறந்த குழந்தைகளும் அதைப் பெறலாம் என்று மாறிவிடும். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கருப்பையில் உள்ள தாய்வழி ஹார்மோன்களுக்கு வெளிப்படும் தோலின் மேற்பரப்பு காரணமாக முகப்பரு இருக்கலாம். பொதுவாக, இது கவலைப்பட ஒன்றுமில்லை. காரணம், இது போன்ற முகப்பரு குழந்தை பிறந்த சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் தானாகவே மறைந்துவிடும்.

    2. வறண்ட மற்றும் மெல்லிய தோல்

    வறண்ட மற்றும் மெல்லிய தோல் பெரும்பாலும் புதிதாகப் பிறந்த குழந்தைகளிலும் காணப்படுகிறது. அது வெளிவந்தாலும், உங்கள் குழந்தையின் தோல் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தமல்ல. வழக்கமாக, உரிக்கப்படுகின்ற சருமம், கருப்பையில் இருக்கும்போது குழந்தையின் உடலைப் பாதுகாக்க உதவும் தோலின் வெளிப்புற அடுக்கு ஆகும். எனவே, இது மிகவும் இயற்கையானது மற்றும் சிறப்பு கவனிப்பு தேவையில்லை. இருப்பினும், இந்த நிலை மேம்படவில்லை என்றால், உங்கள் குழந்தைக்கு ஏதேனும் ஒரு ஒவ்வாமை அல்லது ஒரு பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படும் தோல் பிரச்சினை இருக்கலாம்.

    3. மூக்கு மற்றும் முகத்தில் வெள்ளை பிளாக்ஹெட்ஸ்

    பிளாக்ஹெட்ஸ் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் சொந்தமானது, உங்களுக்குத் தெரியும். இந்த பிளாக்ஹெட்ஸ் பொதுவாக மூக்கு மற்றும் குழந்தையின் முகத்தின் பகுதிகளில் தோன்றும். மருத்துவ அடிப்படையில், இந்த நிலை மிலியா என்று அழைக்கப்படுகிறது. இந்த மிலியா தோல் அடுக்கின் கீழ் திரட்டப்பட்ட கெராட்டின் விளைவாகும். புதிதாகப் பிறந்த 50% குழந்தைகளில் மிலியா ஏற்படுகிறது மற்றும் பிறந்த 1-3 மாதங்களுக்குள் அவை தானாகவே மறைந்துவிடும். குழந்தையின் எண்ணெய் சுரப்பிகள் பெரிதாகும்போது, ​​இந்த பிளாக்ஹெட்ஸ் மறைந்துவிடும்.

    4. மஞ்சள் தோல்

    உங்கள் குழந்தையின் தோல் மஞ்சள் நிறமா? இன்னும் பீதி அடைய வேண்டாம். இந்த குழந்தை தோல் பிரச்சினைகள் பெரும்பாலும் புதிதாகப் பிறந்த குழந்தைகளில் ஏற்படுகின்றன. உண்மையில், இந்த நிலை 10 பிறந்த குழந்தைகளில் 6 பேருக்கு ஏற்படுகிறது. மேலும், குழந்தை முன்கூட்டியே பிறந்தால், அது பிறக்கும் போது மஞ்சள் தோலைக் கொண்டிருக்கும். காரணம், குழந்தையின் கல்லீரல் அதன் உடல் செயல்பாடுகளைச் செய்வதில் இன்னும் சரியாகவில்லை. இதனால், கல்லீரலால் வடிகட்டப்பட வேண்டிய மஞ்சள் பொருளான பிலிரூபின் உண்மையில் இரத்தத்தில் நுழைந்து சருமத்தின் மேற்பரப்பு மஞ்சள் நிறமாக மாறுகிறது.

    சாதாரண சூழ்நிலைகளில், குழந்தையின் மஞ்சள் தோல் பிறந்த 24 மணி நேரத்திற்குப் பிறகு தோன்றும் மற்றும் 7-10 நாட்களில் மறைந்துவிடும். இருப்பினும், குழந்தையின் தோல் நன்றாக வரவில்லை என்றால், இது குழந்தையின் பிற சிக்கல்களைக் குறிக்கலாம்:

    உடலில் இரத்தப்போக்கு
    வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று உள்ளது
    ஒரு நொதியின் பற்றாக்குறை
    மாணவர்கள் தேர்வு நேரத்தில் பதற்றமும், குழப்பமும் அடைவார்கள். தேர்வு அறையில் பதற்றமின்றி செயல்பட என்ன செய்ய வேண்டும்? அது பற்றி பார்க்கலாம்...
    பிளஸ்-2 தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற 27-ந் தேதி தொடங்க இருக்கிறது. சராசரி மாணவர்கள் தேர்வு பயம் கொண்டிருக்கலாம். ஆனால் நன்றாகப் படிக்கும் மாணவர்களும்கூட தேர்வு அறைக்குள் பதற்றம் அடைவது உண்டு. முழு மதிப்பெண் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் செல்லும் அவர்கள், ஒற்றை ஒரு மதிப்பெண் வினாவுக்கு விடை சரியாகத் தெரியா விட்டால், பதற்றத்துக்கு உள்ளாகிவிடுவது உண்டு. சிறந்த மாணவர்களான அவர்களுக்கு அப்படியென்றால், சராசரி மாணவர்கள் அவர்களைவிட பலமடங்கு பதற்றமும், குழப்பமும் அடைவார்கள். தேர்வு அறையில் பதற்றமின்றி செயல்பட என்ன செய்ய வேண்டும்? அது பற்றி பார்க்கலாம்...

    பொதுத் தேர்வு குறித்த மாணவர்களின் மனப் பயத்தை போக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ளது. இந்தத் தேர்வில்தான் உன் எதிர்காலமே உள்ளது என்று பயமுறுத்தி, அவர்களை தேர்வை பதற்றத்துடன் எதிர்கொள்ள வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    தேர்வு எழுதச் செல்லும் ஒவ்வொரு நாளும், பெற்றோரும், ஆசிரியரும் அவர்களுக்கு ஊக்கமும், ஆலோசனையும் தர வேண்டும்.

    வினாத்தாள் அமைப்பை மாணவர்கள் நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு தயாராகி இருந்தால் பதற்றத்தை வெகுவாக தவிர்த்துவிடலாம். நாம் சிறப்பாக தயாராகி இருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன் தேர்வெழுதச் செல்ல வேண்டும். இந்த உறுதி, மனதளவில் உள்ள தேர்வு பயத்தை நீக்கிவிடும்.

    தேர்வு மையத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிடுங்கள். கடைசி நேரம் வரை படித்துக் கொண்டிருப்பதை தவிருங்கள். அதற்கு மாறாக தேர்வெழுத தயாராகி, தேர்வுக் குத் தேவையான உபகரணங்கள், எழுதுபொருட்கள், நுழைவு அட்டை எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று சோதித்துப் பாருங்கள். பேனாவில் மை நிரப்புவது, பென்சிலை கூராக்குவது உள்ளிட்ட எல்லா முன்தயாரிப்பு பணி களையும் முடித்து வைத்திருங்கள்.

    தடை செய்யப்பட்ட பொருட்களான செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்களை தேர்வு மையத்திற்குள் கொண்டு சென்றுவிட்டு தேவையற்ற பதற்றத்தை உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.

    தேர்வு அறைக்குள் நுழைந்ததும், படித்த பாடங்கள், படிக்காத பாடங்கள் பற்றி யோசிக்க வேண்டாம். மனதை தளர்வாக வைத்து தேர்வு எழுத தயாராகுங்கள்.

    வினாத்தாளை படிக்க சில நிமிடங்களை ஒதுக்குங்கள். வினாத்தாள் கடினமாக இருக்கிறதா? எளிதாக இருக்கிறதா? என்று எடை போடாமல், விடை தெரிந்த வினாக்களுக்கு வேகமாக பதிலளிக்கத் தொடங்குங்கள். ஒவ்வொரு வினாவுக்கும் எவ்வளவு நேரத்திற்குள் விடையளிக்க வேண்டும் என்ற தெளிவுடன் நேரம் அறிந்து துரிதமாக விடை அளியுங்கள்.

    தெரியாத வினாவில் குழம்பிக் கொண்டிருப்பதை தவிருங்கள். தெரிந்தவரை விடை எழுதுங்கள்.

    முழு மதிப்பெண் கிடைக்காதோ என்று தயங்கவோ, குழம்பவோ வேண்டாம்.

    தேவையான பென்சில், பேனா, ஸ்கெட்ச் மற்றும் கணினி உபகரணங்கள் போன்றவற்றை தயாராகவும் உபயோகப்படுத்த எளிதாக வைத்திருங்கள். அவசர தேவைக்கான கூடுதல் உபகரணங்களையும் வைத்திருந்தால், அசாதாரண சூழலை சமாளிக்க முடியும்.

    தேர்வு முடியும் சமயத்தில், தேர்வு கடினமாக இருந்ததாக வருத்தப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். விடைகளை சரியாக எழுதியிருக்கிறோமா? என்று சரி பாருங்கள். அழகுபடுத்தல் வேலைகளை மன திருப்தியுடன் செய்யுங்கள். அத்துடன் விடைத்தாளை ஒப்படைக்கும் முடிவு எடுத்துவிட்டு அடுத்த தேர்வு பற்றிய சிந்தனைக்குத் தாவி விடுங்கள். எதையும் பின்னோக்கி சிந்திப்பதால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.

    ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே இருக்கும் விடுமுறை, ஓய்வு நாட்களை நன்கு பயன்படுத்தி அடுத்த தேர்வில் சிறப்பாக செயல்பட உறுதி கொள்ளுங்கள்.

    முறைகேடான செயல்களில் ஈடுபடும் நோக்கத்துடன் செல்பவர்களுக்கு பதற்றத்தை தணிக்க முடியாது. எனவே தவறான நோக்கத்தை கைவிட்டு தேர்வை நேர்மையுடன் எதிர்கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் பார்த்து எழுதுவது போன்ற செயல்களையும் தவிர்க்கலாம்.

    தேர்வு உங்களை பக்குவப்படுத்தவும், அடுத்தகட்டத்திற்கு உங்களைத் தயார்படுத்தவும்தான். முறைதவறி வெற்றி பெறுவதற்கானதல்ல என்பதை மனதில் கொண்டு, தேர்வை நேர்மறை எண்ணங்களுடன் வெற்றிகரமாக எதிர் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்!
    2019-ம் வருட உலக சுகாதார நிறுவன கணக்கெடுப்பின்படி 46.6 கோடிமக்கள், செவித்திறன் குறைபாடுகளுடன் இருப்பதாகவும் இதில் 34 லட்சம் பேர் குழந்தைகள் என்றும் தெரிய வந்துள்ளது.
    உலக சுகாதார நிறுவனம் இந்த வருடம் மார்ச் 3-ந்தேதியை உலக செவித்திறன் நாளாக அறிவித்து உள்ளது. செல்வத்தில் சிறந்த செல்வம் செவிச்செல்வம் என்றார் வள்ளுவர்.. ஒரு தாய் வயிற்றில் கர்ப்பமான மூன்றாவது மாதம் முதல் சிசுவின் கேட்கும் திறன் வளர்கிறது. குழந்தைகள் கேட்கும் முதல் சத்தம் தாயின் இதயத் துடிப்பே ஆகும். ஒரு பெண் தான் கர்ப்பமாக இருக்கும் காலக்கட்டத்தில் நல்லசெய்திகளை கேட்டு, பரபரப்பின்றி அமைதியுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் தாய் கேட்பதை கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையாலும் கேட்க முடியும். இந்த தருணத்தில் அபிமன்யுவின் கதையை நினைவில் கொள்ளலாம்.

    2019-ம் வருட உலக சுகாதார நிறுவன கணக்கெடுப்பின்படி 46.6 கோடிமக்கள், செவித்திறன் குறைபாடுகளுடன் இருப்பதாகவும் இதில் 34 லட்சம் பேர் குழந்தைகள் என்றும் தெரிய வந்துள்ளது. அதாவது 100 பேரில் 5 பேருக்கு காது கேட்பதில் குறைபாடு உள்ளது. உலகில் பிறக்கும் 1000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே காது கேளாத குறைபாடு உள்ளது. அதுவே இந்தியாவை பொறுத்தவரை 1000 பேரில் 2 பேர் என்பதும், தமிழகத்தைப் பொறுத்தவரை 1000 பேரில் 6 பேர் எனவும் இருக்கிறது. தமிழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பிறவியிலேயே காது கேளாமையோடு பிறந்த குழந்தைகள் மூன்றில் இரண்டு பங்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்தவர்களுக்கு பிறந்தவையாகும் என தெரியவந்துள்ளது.

    பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் மரபணு குறைபாடுகளாலும், சில நோய் தொற்று மற்றும் வேறு சில நோய்களுக்காக மருந்து உட்கொள்ளுதல் ஆகிய காரணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் பிரசவத்தின்போது சில குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு அயற்சி மற்றும் அதிகமான மஞ்சள்காமாலை அல்லது சில வைரஸ்கிருமி நோய் தொற்று போன்ற காரணங்களாலும் செவித்திறன் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ளும் சிலவகை மருந்துகள்கூட குழந்தையின் செவித்திறனை பாதிக்க வைத்து விடுகிறது.அதனைக் கண்டறியும் நவீன மருத்துவ சாதனங்கள் அதிக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் சில தனியார் மருத்துவமனைகளிலும் வசதி உள்ளது.

    குழந்தைகளுக்கு பல்வேறு காரணங்களால் காது கேளாமை குறைபாடு ஏற்படவாய்ப்பு உள்ளது. குழந்தைகளில் 5 சதவீதம் பேரும், பெரியவர்களில் 8.5 சதவீதம்பேரும், மூத்த குடிமக்கள் 50 சதவீதம் பேரும் காது கேளாமை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தட்டம்மை, மூளைக்காய்ச்சல், காதில் சீழ் வடிதல் அதன் தொடர்ச்சியான வியாதிகள், விபத்துகள், தலைக்காயம், அதிக சத்தம் உருவாகும் கலாசார விழாக்கள், இரவு நேர கிளப்புகள் மற்றும் பார்களில் ஏற்படும் சத்தங்கள், வயது முதிர்வு காரணமாகவும் காதுகளில் பாதிப்பு ஏற்பட்டு காது கேளாத நிலை ஏற்படும். காதில் மெழுகு மற்றும் காதில் தவறுதலாக போடப்படும் பொருள்கள் ஆகியவற்றால் காது கேளாமை ஏற்படுகிறது.

    பெரும்பாலும் செவித்திறன் பாதிக்கப்பட்டு காது கேளாத நிலைமைபொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களிடம் அதிகளவு உள்ளது ஆகவே இதன் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து முறையான சிகிச்சை மற்றும் வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அதன் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியும். ஒருவருக்கு காது முழுமையாகவும் கேட்காமல் போகலாம்.

    அல்லது அதன் பாதிப்பு குறை வாகவும் இருக்கலாம். காது கேளாமை என்பது உடலில் வெளியில் தெரியாத ஒரு குறை பாடாகும். பார்வையில்லாத ஒருவரிடம் காட்டப்படும் பரிவு முழுமையாக காது கேளாத வரிடம் காட்டப்படுவதில்லை பெரும் பாலும் அது ஒரு தொல்லையாக கருதப்படுகிறது. செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகள்ஆரம்பப் பள்ளிப்படிப்பு தொடங்கி உயர் கல்வி கற்கும் வரை வெளியில் சொல்ல முடியாத வேதனையை அனுபவிக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை பெரும்பாலான காது கேளாமைக்கான காரணங்கள் 65 சதவீதம் தவிர்க்கப்படக்கூடிய பட்டியலில் இருக்கிறது.

    அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் மருத்துவர்களும், நலத்திட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும், மக்கள் நலனில் ஆர்வம் உள்ளவர்களும் ஒன்றிணைந்து காது கேளாமையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிமுறைகளை ஏற்படுத்திதரவேண்டும்., இந்திய அரசும், தமிழக அரசும்செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிவரும் மருத்துவ உதவிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களது வாழ்வை மேம்படுத்த முயற்சி செய்யவேண்டும். பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் காது கேட்கும் திறன் சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க ‘ஓ.ஏ.இ’ கருவிகள் மூலமாகவும், அதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் ‘பி.இ.ஆர்.ஏ’ டெஸ்ட் மூலமாகவும் அறிந்துகொண்டு தேவைப்படும் குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்ப்ளான்ட்’ கருவி பொருத்தி மறுவாழ்வு அளிக்கலாம். அல்லது தேவையான வகையில் கருவிகள் வைத்து காது கேட்கும் திறனை செம்மைப்படுத்தலாம்.

    காதில் சீழ் வடியும் பள்ளிக் குழந்தைகளை பரிசோதித்து சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தை பருவத்தை தாண்டியவர்களுக்கு காதில் சீழ்வடிந்தால் அதற்கான மருத்துவசிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை தேவைக்கு ஏற்றபடி செய்தும் காதொலி வழங்கும் கருவிகள் பொருத்திக்கொள்ளலாம்.

    இந்த உலக செவித்திறன் நாளில் வாகன சத்தங்களை குறைப்பது, ஒலி பெருக்கிகளின் தரத்தை ஆராய்ந்து கட்டுப்பாட்டில் வைப்பது, காதில் வைக்கும் ஒலிப்பான்களை கட்டுப்பாட்டுடன் உபயோகப்படுத்துவது, தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு அதிக ஒலி பாதிப்பு இல்லாமல் தற்காத்துக் கொள்வது, தேசிய காது கேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் குழந்தைகளை பரிசோதனைக்கு உட்படுத்துவது,

    இதற்கென ஏற்படுத்தியுள்ள அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது போன்ற வருமுன் காக்கும் முறைகளில் கவனம் செலுத்த வேண்டும். அனைவரும் ஒட்டுமொத்தமாக தவிர்க்கப்படக்கூடிய சத்தத்தை குறைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். நெருங்கிய ரத்த உறவு திருமணங்களை தவிர்த்து நம்மையும், நமது கேட்கும் திறனையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுப்போம்.

    டாக்டர்.அ.ஜேசுதாஸ். முதல்வர், தனியார் மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், திருச்சி
    ×