என் மலர்
குழந்தை பராமரிப்பு
குழந்தை பருவத்தை சுவாரசியமாக்குவதில் தாத்தா, பாட்டிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவர்களுடன் நேரத்தை செலவிடும் குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
குழந்தை பருவத்தை சுவாரசியமாக்குவதில் தாத்தா, பாட்டிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவர்களுடன் நேரத்தை செலவிடும் குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தங்கள் மனதில் தோன்றும் சந்தேகங்கள், விருப்பங்களை தாத்தா, பாட்டிகளோடு தயங்காமல் பகிர்ந்து கொள்வார்கள். தங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் ஜீவன்களாக விளங்கும் தாத்தா-பாட்டிக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுப்பார்கள். அது அவர் களின் சமூக தொடர்புகளுக்கு உறுதுணையாக இருக்கும். பெரியவர்களிடமும், அறிமுகம் இல்லாத நபர்களிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொண்டு செயல் படுவார்கள். மற்ற குழந்தைகளை விட தாத்தா-பாட்டிகளோடு வளரும் குழந்தைகளின் நடத்தைகளும், செயல்பாடுகளும் மேம்பட்டதாக இருக்கும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபணமாகியுள்ளது.
குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டிகளுடன் வாழ வேண்டும் என்பதற்கான காரணங்கள்:
வேலைக்கு செல்லும் பெற்றோரின் குழந்தைகளை தாத்தா, பாட்டிகள் பொறுப்போடு கவனித்துக் கொள்வார்கள். அதனால் குழந்தைகள் சரியான நேரத்திற்கு சாப்பிட்டார்களா? தூங்கினார்களா? என்று பெற்றோர் கவலைப்பட வேண்டியதில்லை. சிலர் குழந்தைகளை கவனித் துக் கொள் வதற்காக வேலைக்கு ஆட்களை அமர்த் துவார்கள். அவர்களை விட அன்புடனும், அக்கறை யுடனும் தாத்தா -பாட்டி கள் தங்கள் பேரக் குழந்தை களை கவனித்துக் கொள்வார்கள். தாத்தா-பாட்டிகளுடன் வசிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரை பிரிந்து அன்னியமாக இருக்கும் உணர்வு எழாது. வீட்டில் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்வார்கள்.
தாத்தா - பாட்டிகளிடம் வளரும் குழந்தைகள் குடும்ப பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்வார்கள். உறவுகளின் உன்னதத் தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய மதிப்பை கொடுப்பார்கள். குடும்ப சூழ்நிலை, பெற்றோர் எதிர்கொள்ளும் கஷ்டங்களை தாத்தா-பாட்டிகள் குழந்தை களுக்கு சொல்லி புரியவைப்பார்கள். பாசம், மரியாதை, ஒழுக்கம், சுய கட்டுப்பாடு போன்ற குணங்களை அந்த குழந்தைகள் வளர்த்துக்கொள்வார்கள். மற்ற குழந்தைகளை விட புத்திசாலித் தனமாகவும், அறிவு முதிர்ச்சியுடனும் வளர்வார்கள்.
தாத்தா-பாட்டிகளுடன் அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகள் நிறைய வாழ்வியல் விஷயங்களை கற்றுக்கொள் வார்கள். சிக்கலான சூழ்நிலையை கையாளும் திறமையும் அவர்களிடம் இருக்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறை களையும் அறிந்துகொள்கிறார்கள். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தாத்தா-பாட்டிகளுடன் வளரும் குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட தனிமை, பதற்றம், மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கதைகள் மூலம் வாழ்க்கையின் எதார்த்தத்தை குழந்தைகளுக்கு எளிதாக தாத்தா-பாட்டிகள் புரியவைத் துவிடுவார்கள். அவர்கள் சொல்லும் கதைகள் குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கும். நல்ல போதனைகளை கற்றுக் கொடுக்கும். அதன்படி ஒழுக்கம், சம்பிரதாயங்களை குழந்தைகள் கடைப்பிடிக்க தொடங்கி விடுவார்கள். சமூகத்தில் மற்றவர் கள் பாராட்டும் நபராகவும் வளர்வார்கள்.
வயதாகும்போது ஞாபகமறதி, மன சோர்வு போன்ற பாதிப்புக்கு நிறைய பேர் ஆளாகிறார்கள். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்ன வென்றால் இந்த நோய்களெல்லாம் முதியவர்கள் தனிமையில் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. பேரக் குழந்தைகளுடன் வசிப்பவர் களுக்கு இத்தகைய பாதிப்புகள் அரிதாகவே ஏற்படுகின்றன. இதனை பெற்றோர் புரிந்து கொண்டு தங்கள் குழந்தைகளை தாத்தா - பாட்டியுடன் நேரத்தை செலவிட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் வீட்டில் தனிமை விலகி இனிமை நிலவும்.

குழந்தைகளுக்கு எளிதாகக் கிடைக்கும் பொருள் தரையில் இருக்கும் மண், தூசு போன்றவை. இவ்வாறு மண் தின்னும் பழக்கம் PICA என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக குழந்தைகளுக்கு ஒரு வயது நெருங்கும் சமயத்திலிருந்து இரண்டு வயது வரை கண்ணில் கண்டதை எல்லாம் எடுத்துப் பார்க்கும் பழக்கமும், கடித்துப் பார்க்கும் பழக்கமும் இருக்கும். அதையும் கடந்து ஒரு சில பொருட்களை விரும்பி ரசித்து ருசித்து சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்வார்கள். முறையாக உண்ண வேண்டிய உணவைத் தவிர்த்து இத்தகைய பழக்கத்துக்குட்பட்டால் அது வளரும் பருவத்தில் உடல்நலப் பிரச்னைகளை உருவாக்கும். குழந்தைகளுக்கு எளிதாகக் கிடைக்கும் பொருள் தரையில் இருக்கும் மண், தூசு போன்றவை. இவ்வாறு மண் தின்னும் பழக்கம் PICA என்று அழைக்கப்படுகிறது.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடமே இப்பழக்கக் கோளாறு அதிகம் காணப்படுகிறது. பெற்றோரின் அன்பு மற்றும் அரவணைப் பின்மை, பாதுகாப்பற்ற உணர்வு, பெற்றோர் உணவூட்டும் பழக்கங்களிலுள்ள குறைபாடுகள், ரத்தசோகை, மனவளர்ச்சிக் குறைபாடு போன்ற காரணங்களால் மண் தின்னும் பழக்கம் உருவாகி, வளர்ந்து நீடிக்கிறது.
குழந்தைகளின் தோற்றம் செயல்பாடு, மனநிலைகளுக்கேற்ப, கல்கேரியா கார்ப், சிலிகா, சிகூடா, அலுமினா, பெர்ரம்மெட், நேட்ரம்மூர், சினா, கல்கேரியாபாஸ், நைட்ரிக் ஆசிட், நக்ஸ்வாமிகா போன்ற ஹோமியோபதி மருந்துகள் மண், சாம்பல் தின்னும் பழக்கத்தை மாற்றியமைக்க உறுதியாக உதவும்.

குழந்தைகள் பெரும்பாலும் அழுதுகொண்டே இருக்கும். அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் இளம்தாய்மார்கள் தவித்துப்போகிறார்கள். குழந்தைகளின் அழுகைக்கு பல காரணங்கள் இருக்கின்றன.

பசியால்தான் பெரும்பாலும் குழந்தைகள் அழும். பசியால் அழுதால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம். குழந்தைகள் பால்குடிக்கும்போது என்ன அறிகுறிகளை காட்டுமோ அதை எல்லாம் அந்த அழுகையோடு வெளிப்படுத்தும். கைவிரலை சப்புதல், பால்குடிப்பதுபோல் உதடுகளை சுளித்தல், உதடுகளை அம்மாவின் உடல் மீது சேர்த்தல், அம்மாவின் முகத்தை பார்த்தல் போன்றவைகள் எல்லாம் பசியால் ஏற்படும் அழுகையின்போது வெளிப்படும்.
பசி தீர்ந்து, குழந்தை நன்றாக தூங்கும்போது திடீரென்று அழுதால் சிறுநீர் கழித்து நனைந்திருக்கிறது என்று அர்த்தம். அதுதான் காரணம் என்றால், நனைந்த துணியை மாற்றியதும் குழந்தை நிம்மதியாக தூங்கத் தொடங்கிவிடும்.
வீட்டில் அதிக சத்தமோ, திடீர் சீதோஷ்ணநிலை மாற்றமோ ஏற்பட்டால் அது குழந்தை களின் தூக்கத்தை பாதிக்கும். அப்போதும் அழத் தொடங்கிவிடும். குளிப்பாட்டி, பசியை தீர்த்ததும் எல்லா குழந்தைகளும் தூக்கத்திற்கு தயாராகி விடும். அப்போது தூக்கத்திற்கு ஏற்ற சூழ்நிலை அமையாவிட்டால் குழந்தை கள் அழுதுவிடும். அந்த குழந்தையின் அருகில் இருந்து மற்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தூங்க முடியாமல் குழந்தை தவிக்கும்.
சில நேரங்களில் குழந்தைகள் அம்மா தன்னை தூக்கி கொஞ்சவேண்டும் என்பதற்காகவும் அழும். அப்போது அம்மா எடுத்து, நெஞ்சோடு சேர்த்து, கொஞ்சி சிறிது நேரம் பேசினால் அழுகையை நிறுத்தி விடும். அம்மாவின் பாதுகாப்பும், அரவணைப் பும், வருடலும் குழந்தை களுக்கு எப்போதும் தேவைப் படுகிறது. அது கிடைக்காதபோது அழுகையைத் தொடங்கிவிடும்.
குழந்தைகளை அதிகமாக அழவைப்பது, அதன் வாயு தொந்தரவு. பால் குடித்த சிறிது நேரத்திலே இந்த தொந்தரவு ஏற்பட்டு குழந்தைகள் அழும். பிறந்த 3, 4 மாதங்களில் வாயு தொந்தரவு அதிகம் ஏற்படும். அதனால் பால் புகட்டியதும் சிறிது நேரம் தோளில் போட்டு தட்டிக்கொடுத்தால் குழந்தை ஏப்பம் விடும். அப்போது வாயு வெளியேறிவிடும். பால் புகட்டியதும் குழந்தையை படுக்கவைக்காமல் இருந்தால், இந்த அழுகை ஏற்படாது.
குளிர் அல்லது திடீர் உஷ்ணத்தை குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதாலும் அழும். குளிப்பாட்டிவிட்டு உடனே தலையை துவட்டி, உடலை துடைக்கா விட்டாலும், நனைந்த நாப்கினை மாற்ற தாமதமானாலும் குளிரால் குழந்தைகள் அழும். குழந்தைகளை குளிப்பாட்டி முடித்ததும் உடனே உடலை துடைத்துவிடவேண்டும். குளிர்ந்த நீரிலும், சுடுநீரிலும் குழந்தைகளை குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டும் நீரில் டெட்டால் போன்ற எதையும் கலக்கவும்கூடாது. பேபி சோப், பேபி லோஷன் போன்றவற்றை மட்டும் பயன்படுத்தவேண்டும்.

குழந்தைக்கு முதல் பற்கள் முளைத்த பின்போ அல்லது ஒரு வருடத்திற்குள்ளாகவோ பல் மருத்துவரை அணுகி குழந்தையின் பல் வளர்ச்சி பற்றி பெற்றோர் ஆலோசனை பெறுவது அவசியமானது.
நமது உடல் ஆரோக்கியமும், பற்களின் ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டது. பற்கள், ஈறுகள் மற்றும் வாய் பகுதி ஆரோக்கியமாக இருந்தால்தான், உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். பற்களை பராமரிப்பது எளிதானது. ஆனால் ஒவ்வொரு வயதிற்கும் ஏற்றாற்போல் பற்களை பராமரிக்கும் விதமும் மாறுபடும்.
தாய் கருவுற்ற ஆறாம் வாரத்திலேயே கருவில் வளரும் குழந்தைக்கு பற்கள் முளைப்பதற்கான சாத்தியக் கூறுகள் தென்பட தொடங்கிவிடும். அந்த சமயத்தில் கர்ப்பிணி பெண்கள் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சேர்த்துக்கொண்டால் பின்னாளில் குழந்தையின் பற்கள் வலிமையாக இருக்கும்.
குழந்தைக்கு முதல் பற்கள் முளைத்த பின்போ அல்லது ஒரு வருடத்திற்குள்ளாகவோ பல் மருத்துவரை அணுகி குழந்தையின் பல் வளர்ச்சி பற்றி பெற்றோர் ஆலோசனை பெறுவது அவசியமானது. பெரும்பாலான பெற்றோர், குழந்தைகள் இனிப்பு பலகாரங்களை அதிகம் உண்பதால்தான் பற்சிதைவு ஏற்படுவதாக கருதுகிறார்கள். ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல. சில சமயங்களில் குழந்தைகள் பால் அருந்தியவுடன் அப்படியே தூங்கிவிடுகிறார்கள். பல குழந்தைகள் புட்டிப்பாலை அருந்தியபடியே தூங்கவும் செய்கிறார்கள். குழந்தை பருவத்தை கடந்ததும், கடைகளில் வாங்கும் பாலுடன் சர்க்கரையை கலந்து பருகுகிறார்கள். அப்போது பால், பற்களில் ஒட்டிக்கொள்ளும். அதனால் பாலின் வாயிலாகவும் பற்சிதைவு ஏற்படுகிறது.
அதை தடுக்க பால் குடித்த பின்பு மெல்லிய துணியை கொண்டோ, மிருதுவான பிரஷை கொண்டோ குழந்தைகளின் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு எச்சிலை உமிழத்தெரியாதவரை பற்பசையையோ, பற்பொடியையோ பயன்படுத்தக்கூடாது. பெற்றோரும், வீட்டு பெரியவர்களும் வாய் சுகாதாரத்தை பேணுவதும் அவசியம். இல்லாவிட்டால் அவர்கள் மூலம் குழந்தை களுக்கு பாதிப்பு நேரும். தொடும் போதும், முத்தம் கொடுக்கும்போதும், குழந்தைக்கு நோய் தொற்றுகள், தோல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, குழந்தைகள் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு கவனமுடன் செயல்படவேண்டும்.
ஆறு வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பற்பசை உள்ளது. அதனை வாங்கி பயன்படுத்த வேண்டும். அதனை கொண்டு குழந்தைகள் தாங்களாகவே பற்களை துலக்குவதற்கும் பழக்க வேண்டும். சத்தான உணவு வகைகளையும் சாப்பிட கொடுக்க வேண்டும். அதன் மூலம் பற்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்தால் பற்களும் சிறுவயது முதலே ஆரோக்கியமாக இருக்கும். அடிக்கடி வாய் கொப்பளிப்பதும், தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம் என்பதை குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதைக்காட்டிலும் தாங்கள் அதன் படியே நடக்க வேண்டும். அதை பின்பற்றி குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்வார்கள்.
குழந்தைகளுக்கு 7 வயது முதல் 12 வயது வரை பால் பற்களும், நிலையான பற்களும் சேர்ந்தே இருக்கும். இந்த சமயத்தில் பற்சிதைவு பிரச்சினை ஏற்படும். அதோடு முகத்தில் தாடை எலும்புகள் வளர்ச்சி பெறுவதால், பல்வரிசை சரியாக அமைவதில் பிரச்சினை ஏற்படலாம். எனவே, வரும் முன் காப்பதே சால சிறந்தது என்பதற்கிணங்க, பல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வதுதான் மிகவும் நல்லது.
பதின் பருவத்திலிருந்து பற்களை சரியாக பராமரிப்பதும், காலை மற்றும் இரவு படுக்கபோகும் முன்பு பல் துலக்குவதும் பற்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். பற்சிதைவு ஏற்படாமலும் பாதுகாக்கும்.
பெரியவர்களான பின்பு புகைபிடிக்கும் பழக்கம், மது அருந்துதல், புகையிலை போன்ற பழக்கங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தவிர்த்தால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பற்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். பல்கூச்சம், எரிச்சல், பற்சிதைவு, ஈறுகளில் வீக்கம், வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் நேர்ந்தால் உடனே மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இல்லாவிட்டால் பின்னாளில் பாதிப்பை அதிகப்படுத்திவிடும். இன்றைய நவீன மருத்துவத்தில் வேர் சிகிச்சை உள்ளிட்ட நுட்பமான சிகிச்சை முறைகள் மூலம் எளிமையாக தீர்வு கண்டுவிடலாம்.
வாயில் பற்கள் முளைத்த நாள் முதல் தொடர்ந்து பற்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். சாப்பிடும் உணவு பொருட்கள் அனைத்துமே பற்களை கடந்துதான் உள்ளே செல்கிறது. பெரும்பாலும் உணவு பொருட்களை பற்களால் மென்றுதான் விழுங்குகிறோம். அப்போது பற்களில் உணவு துகள்கள் ஒட்டிக்கொள்ளும். அதனை பொருட்படுத்தாமல் அசட்டையாக இருந்துவிட்டால் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். சரியான முறையில் பற்களை பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் பற்களின் எனாமல் (பற்சிப்பி) தேய்ந்து, பற்கள் கூர்மையாகி வாயின் உள் பகுதியை ரணமாக்கிவிடும். அதுவே வாயில் புற்றுநோய் ஏற்பட காரணமாகிவிடும். ஆதலால் பற்களை கவனமாக பாதுகாக்க வேண்டும்.
பற்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பளிச்சென்ற பற்களும், அழகான புன்னகையும், அன்பான வார்த்தைகளும் நம்மை மற்றவர்கள் மத்தியில் உயர்வாக அடையாளம் காட்டுகிறது. தன்னம்பிக்கையும் அளிக்கிறது. அத்தகைய அழகான பற்களையும், ஈறுகளையும் வாய் ஆரோக்கியத்தையும் பேணிக்காப்போம். நிம்மதியாக புன்னகை பூப்போம்.
கட்டுரை: டாக்டர் ஆர்.விஜய் எம்.டி.எஸ், பல்வேர் சிகிச்சை நிபுணர், சென்னை.

குழந்தைகளின் செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் ஆட்டிசம் பாதிப்பில் இருந்து எளிதாக மீட்டுவிடலாம்.
ஆட்டிசம் என்ற செயல்திறன் பாதிப்பு குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு மருந்து, மாத்திரைகள் பலன் தராது. குழந்தைகளின் செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் ஆட்டிசம் பாதிப்பில் இருந்து எளிதாக மீட்டுவிடலாம். குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் இருந்து ஒரு ஆண்டுக்குள் அதன் வளர்ச்சி நிலையை பெற்றோர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அந்த காலகட்டத்தில்தான் ஆட்டிசம் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கும். உதாரணமாக ஓராண்டுக்குள் குழந்தை சிரிக்காமல் இருந்தாலோ, எந்த உணர்வையும் உடல் மொழி மூலம் வெளிக்காட்டாமல் இருந்தாலோ மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் சராசரி குழந்தைகளில் இருந்து மாறுபட்டு காணப்படும். சில அறிகுறிகளை வைத்து ஆட்டிசம் பாதிப்பை கண்டறிந்துவிடலாம். தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பது, பேசும்போது வித்தியாசமான ஒலியை எழுப்புவது, எப்போதும் ஒரே இடத்தில் உட்கார்ந் திருப்பது, முணுமுணுத்துக்கொண்டே இருப்பது, ரோபோ போல் அதன் சுபாவம் அமைந்திருப்பது, ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருப்பது, பேசும் தொனியில் இயல்புக்கு மாறாக தெரிவது, சிறிய வார்த்தையை கூட புரிந்துகொள்ள தடுமாறுவது, பேச தடுமாறுவது போன்றவை ஆட்டிசம் பாதிப்புக்கான அறிகுறிகளாகும்.

உங்கள் குழந்தைகள் அடிக்கடி நகத்தை கடித்துக் கொண்டிருந்தால், இயல்பாக மற்ற குழந்தைகளுடன் பேசிப் பழக தயங்கினால், எப்போதும் தனிமையை விரும்பினால், தனிக்கவனம் செலுத்துங்கள்.
இன்று சமூகத்தில் வன்முறைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர், சிறுமியர்கள்கூட குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். ‘இளம் வயதிலேயே பிள்ளைகள் குற்றச்செயல்களில் ஈடுபட அவர்கள் எதிர்கொண்ட வீட்டு சூழ்நிலையே காரணம்’ என் கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். குழந்தைகளின் மனம் மிகவும் மென்மையானது. நம் முடைய முரட்டுத்தனத்தால் அவர்களின் மனதை காயப்படுத்தக் கூடாது. நாம் சாதாரணமாக நினைக்கும் சின்னச்சின்ன விஷயங்கள் கூட குழந் தைகளிடம் வன்முறை எண்ணத்தை உருவாக்கிவிடும்.
இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் பெற்றோருக்கு நிறைய நெருக்கடிகள் இருக்கலாம். அந்த நெருக்கடிகளையும், பிரச்சினைகளையும் குழந்தைகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறியாமை. பெற்றோரின் இப்படிப்பட்ட அறியாமைகூட குழந்தைகளிடம் வன்முறை எண்ணம் உருவாக காரணமாகிவிடும். குழந்தைகளை கண்டிக்க வேண்டியது அவசியம்தான். அந்த கண்டிப்பு மிகவும் மென்மையாக, அவர்கள் மனதில் பதியும்படியாக இருக்க வேண்டும். இதற்கெல்லாம் பொறுமையும், கனிவும் வேண்டும்.
பெற்றோர் குழந்தைகள் முன்னால்வைத்து சண்டைகள் போட்டால், அது அவர்கள் மனதில் பெரிய காயத்தை உண்டாக்கிவிடும். அப்போது அவர்கள் தேவையற்ற பயம், பாதுகாப்பின்மையை உணருவார்கள். இது அவர் களுக்கு கவனக்குறைவையும், கல்வியில் ஆர்வக் குறைவையும் ஏற்படுத்திவிடும். குழந்தை களின் மனதில் ஏற்படும் குழப்பங்கள் அவர்களது உடலிலும் வெளிப்படும். அதீத பயத்தின் காரணமாக குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், வயிற்றுவலி போன்றவைகளும் ஏற்படலாம்.
உங்கள் குழந்தைகள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், மற்றவர்களின் முகத்தை நேருக்கு நேர் பார்த்துபேச தயங்கினால், அடிக்கடி நகத்தை கடித்துக் கொண்டிருந்தால், இயல்பாக மற்ற குழந்தைகளுடன் பேசிப் பழக தயங்கினால், சாதாரண கேள்விக்கு கூட பதிலளிக்க தடுமாறினால், எப்போதும் தனிமையை விரும்பினால், தனிக்கவனம் செலுத்துங்கள். அவர்களது மனதில் இருப்பதை புரிந்துகொண்டு ஒட்டிஉறவாடி பழகி மகிழ்ச்சிப்படுத்துங்கள். சிறப்பான எதிர்காலம் உருவாக குழந்தைகள் சிறப்பாக வளர்க்கப்படவேண்டும்!

உதாசினம் செய்யாமல் குழந்தைகளுக்கு கொரோனா என்றால் என்ன என்பதை விளக்குங்கள். சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு சுற்றிலும் என்ன நடக்கிறது, ஏன் யாரும் வெளியே செல்லக்கூடாது என்று சொல்கிறார்கள் என குழப்பத்திலும், ஒருபக்கம் உங்கள் பேச்சுகள் மறும் உங்களுடைய பதட்டத்தைக் கண்டு என்னவென்றே தெரியாத குழந்தைகளும் பீதியில் இருப்பார்கள். ஆனால் இந்த பயம்தான் மிகப்பெரிய கொடிய நோய் என்பதை மறவாதீர்கள்.
எனவே சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள். கேட்டாலும் உதாசினம் செய்யாமல் அவர்களுக்கு கொரோனா என்றால் என்ன என்பதை விளக்குங்கள்.
அதற்கு முதலில் உங்களுக்குத் தெளிவான புரிதல் அவசியம். நீங்கள் COVID-19 என்றால் என்ன..அது எந்த மாதிரி பரவுகிறது , எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பன போன்ற விஷயங்களை முதலில் நீங்கள் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகே உங்கள் பிள்ளை புரிந்துகொள்ளும்படி எடுத்துரைக்க வேண்டும். உங்கள் பிள்ளை எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பதிலளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் மனதில் இருக்கும் பயம் நீங்கும்.
அதேபோல் தற்போது கொரோனா குறித்த வதந்திகளும் பரவி வருவதால் அதை படித்துவிட்டு பயமுறுத்தும் அளவிற்கும் குழந்தைகளிடம் பேசாதீர்கள்.
அடுத்ததாக சுகாதாரமாக இருத்தல், அடிக்கடி கைக்கழுவுதல், தனிமைப்படுத்திக்கொள்ளுதல், முகம், வாய், மூக்கைத் தொடாமல் இருத்தல் போன்றவற்றின் அவசியத்தையும் பேசுவது அவசியம்.

குழந்தைகளை விடுமுறையில் மொபைல் போன்களில் அடிமை படுத்தாமல் புராண கதைகளையும், நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுத் தர பழக்க வேண்டும்.
குழந்தைகளை வீட்டில் வைத்து சமாளிப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. பெரும்பாலும் குழந்தைகள் விருப்பப்பட்டதை கேட்டு கொடுக்காவிட்டால் கத்தி அழுது ஊரையே கூட்டி விடுவார்கள். அதற்கு எளிய தேர்வு அவர்களின் கவனத்தை சிதற வைப்பதே. வேறு ஏதாவது விஷயத்தில் அவர்களது கவனம் செல்லும் படி திசை திருப்ப முயன்றால் அடம் பிடிக்கும் குழந்தைகளை சற்று சமாதானப் படுத்த முடியும்.
குழந்தைகளை விடுமுறையில் மொபைல் போன்களில் அடிமை படுத்தாமல் புராண கதைகளையும், நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுத் தர பழக்க வேண்டும். நகைச்சுவை கலந்த தெனாலி ராமன் கதைகள், ஜோக்குகள் என கூறி குழந்தையை ஆனந்தமாக வைத்திருக்க முயற்சித்தால் நன்று
குழந்தைகள் அடம் பிடிக்கும் பொழுது வீட்டில் உள்ள இருவரும் சேர்ந்து குழந்தையை திட்ட கூடாது. மாறாக அப்பாவோ, அம்மாவோ குழந்தைக்கு தவறை அமைதியான முறையில் உணர்த்தச் செய்ய வேண்டும்.
குழந்தைகளை சமாளிக்க அடித்து வளர்ப்பது என்பது உங்கள் எதிர்காலத்தில் குழந்தைக்கு உங்கள் மீது உள்ள உறவை பாதிக்கும் செயல். பெரும்பாலும் அதனை தவிர்க்க வேண்டும். உங்கள் பேச்சை கேட்காவிட்டால் பொறுமையாக எடுத்துக் கூற வேண்டும்.
குழந்தைகள் என்றாலே சுட்டித் தனம் இருக்கத்தான் செய்யும். அதற்காக சிறு வயதிலே பெரியவர்களை போல் நடந்து கொள்ளும் படி வற்புறுத்தாமல் அவர்களோடு சேர்ந்து நீங்களும் பழகி பாருங்கள். குழந்தைகள் உங்களுக்கு சில பாடங்களை கற்றுக்கொடுக்கும்.

இன்று செல்போன்கள், பெற்றோர்களின் அன்பும், உடன்பிறந்தோர் பாசமும், தாத்தா பாட்டிகளின் அனுபவங்களும், ஒருவருடைய வளர்ச்சியில் கொண்டிருந்த இடத்தை பிடித்துள்ளது என்பது யதார்த்தமான உண்மை.
சமீபத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் பணி நிறைவு விழாவிற்கு சென்றிருந்தபோது கூட்டத்தில் இருந்த ஒரு குழந்தை அழத் தொடங்கியது. ஆனால், அழ ஆரம்பித்து ஓரிரு கணங்களில் அந்த குழந்தை அமைதியானது. அது மேடையில் அமர்ந்திருந்த என் கவனத்தை மட்டுமல்லாமல் கூட்டத்தில் இருந்த எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது.
அந்த குழந்தையின் தந்தை அவருடையை அலைபேசியின் தொடுதிரையில் ஓரிரு இடங்களைத் தொட்டு குழந்தையிடம் கொடுத்தவுடன் குழந்தை மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட ஒலிபெருக்கியை போல ஒரே கணத்தில் அமைதியானது. குழந்தையை அமைதிப்படுத்தும் அந்த ‘டிஜிட்டல் போதை’ மருந்தாகிய அலைபேசி, நமக்குத் தெரிந்த கஞ்சா போன்ற போதை வஸ்துகளால் ஏற்படும் அடிமை உணர்வுக்கு சமமானது என்பது தெரியாமலே, இதுபோல் எத்தனையோ பெற்றோர்கள் செய்கிறார்கள். ஆராய்ச்சி மூலம் அலைபேசியின் தொடுதிரை வெளிச்சமும், மேற்சொன்ன போதை வஸ்துகள் தாக்கும் இடமும் மூளையில் ஒரே இடம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்று செல்போன்கள், பெற்றோர்களின் அன்பும், உடன்பிறந்தோர் பாசமும், தாத்தா பாட்டிகளின் அனுபவங்களும், ஒருவருடைய வளர்ச்சியில் கொண்டிருந்த இடத்தை பிடித்துள்ளது என்பது யதார்த்தமான உண்மை. இணையத்தை பயன்படுத்த தெரியாத வயதில் உள்ள குழந்தைகள் கூட செல்போனில் வரும் பல்வேறு விதமான காணொலிகளை பார்த்து ‘பார்வை போதைக்கு’ அடிமையாகின்றனர். பெற்றோர்களும், பெரியோர்களும் தாங்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கவிரும்பும் நோக்கில் குழந்தைகள் சின்னத்திரையான அலைபேசி திரையில் மெய்மறந்து போவதை பற்றி பெரிதாக கவலை கொள்வதாக தெரியவில்லை.
இதன் விளைவாக திறன் பேசிகளில் அதிகநேரம் செலவிடும் குழந்தைகள் பதற்றம் நிறைந்த குழந்தைகளாகவும், சமூக திறமைகள் குறைந்தவர்களாகவும், பாசத்தை பரிமாறவும், பழக்கத்தை ஏற்படுத்தவும் தெரியாதவர்களாக வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள். குழந்தைகள், செல்போன்கள் மூலமாக இணையதள வலையில் சிக்கிய மீன்களாக மாட்டிக் கொள்வது மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களை பார்க்காவிட்டால் எதையோ இழந்த உணர்வுடன் ‘போமோ’ என்ற நோய்க்கு அடிமையாகின்றனர். அவ்வப்போது சமூக வலைத்தளங்களை பாாக்காவிட்டால் எதையோ வாழ்க்கையில் இழந்துவிட்டது போன்ற உணர்வோடு பதற்றத்தை ஏற்படுத்தும் நோய் இன்று, வயது வேறுபாடு இன்றி பரவிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏனென்றால், சில நேரம் வாழ்க்கையில் நிதானமாக செல்லாமல், வேகமாக பயணிப்பதும், தேவையில்லாத விசயங்களை தெரிந்து கொள்வதற்கு முயற்சிசெய்து அதன்மூலம் பதற்றத்தை அதிகரித்து, அமைதியை அலைக்கழிப்பதும் தேவையற்ற ஒன்று.
எது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்பதும், எது தேவையற்ற விஷயம் என்பதையும் முடிவு செய்து, குழந்தைகளுக்கு வழிகாட்டுவதும் பெரியோர்களின் கடமையாகும். எப்படி, கடலில் மீன்பிடிக்கும் போது ஒரு சில வலைகள் பெரியமீன், சின்னமீன் என்ற பாகுபாடில்லாமல் ஒட்டுமொத்தமாக கொண்டு வருகிறதோ, அதைப்போல் இணையதளம் குழந்தை, பெரியவர் என்ற பாகுபாடில்லாமல் அனைவரையும் ஒருசேர தன் மாய வலைக்குள் பின்னிப் போட்டுள்ளது.
சமூக நிறுவனங்களாகிய குடும்பங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களாகிய திருவிழாக்கள், பேருந்து பயணங்கள் மற்றும் ரெயில் பயணங்களின் போது, மக்கள் தங்களுக்குள் பேசுவது குறைத்துக் கொண்டு தனக்குத் தானே பேசிக்கொள்ள கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சி தொடர், தொடர்ந்து வரும் இடர் காட்சிகள் என்பதை மறந்து வீட்டில் வேலையற்று இருப்போரும், வேலை முடித்து பொழுதுபோக்கு என ஆரம்பித்து, பொழுது போகிறதோ இல்லையோ, ஆனால் “‘பொழுதுபோக்குப் போதைக்கு” அடிமையாகிறவர்களும்; குடும்ப உறவுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து குழந்தைகளின் பழக்க வழக்கங்கள் முழுமையாக டிஜிட்டல் உலகைச் சார்ந்து மாறிவருகிறது. மேலும், செல்போன்களின் இயல்பான கதிரியக்கம் மற்றும் சூடாகும்போது ஏற்படும் அதிகப்படியான கதிரியக்கம், கண்களுக்கு திரை ஒளியால் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றின் பாதிப்புகள் என்னென்ன என்பதை அறுதியிட்டுக் கூறுவதற்கு ஆராய்ச்சிகள் முழுமையாக இல்லாத சூழலில், முடிந்த வரை அவற்றின் பயன்பாட்டை முறைபடுத்துவது அவசியம். கருவுற்ற தாய்மார்களும், குழந்தை பெற்ற பெண்களும் உளவியல் ரீதியாக பிரச்சினைகளை சந்திக்கும்போது, தங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள வாய்ப்பில்லாமல்; அவர்கள் செல்போன்களுக்கு அடிமையாவது இயல்பாக நடக்கிறது.
பாலூட்டும் தாய்மார்கள் பொழுதுபோகாமல் தவிக்கும்போது செல்போன்களை பயன்படுத்துவது, குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், குழந்தைகள் வளரும்போது அலைபேசியை பயன்படுத்துவது அனைவருக்கும் இயல்பானது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்வதற்கு வழிவகுக்கிறது. மேலும் “உள்முக ஆளுமை” குழந்தைகள் உருவாவதற்கும், அந்த ஆளுமையைத் தீவிரப்படுத்துவதிலும் செல்போன் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதனால் குழந்தைகள் சமூகத் திறமைகள் மற்றும் குழு திறமைகளை வளர்த்துக் கொள்வதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
ஒருசில பெற்றோர்கள் இதன் தீவிரத்தை அறிந்திருந்தும் அதை எப்படி கையாள்வது என்று தெரியாமல் தவிப்பதை உணர முடிகிறது. செல்போன்கள் தவிர்க்க முடியாத அளவுக்கு நம் வாழ்வில் ஊடுருவி விட்டதால் வரையறுக்கப்பட்ட திரைநேரம் குழந்தைகளுக்கு நிர்ணயித்து அதன் அளவுமிகாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரைநேரம் என்பது தொடுதிரை, கணிணி திரை மற்றும் தொலைக்காட்சி திரையையும் உள்ளடக்கியது. வரையறுக்கப்பட்ட திரைநேரத்தை அவர்களுக்கு வழங்கும் போது, பாதி நேரம் பாாப்பதற்கும், மீதி நேரம் அறிவுப்பூர்வமான விஷயங்களை பார்த்ததை செயல்படுத்துவதற்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.
இன்று கொரோனாவின் கோர தாண்டவத்தால் குழந்தைகளும், பெரியவர்களும் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் இன்னும் திரைநேரம் அதிகமாக வாய்ப்புள்ள நிலையில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதுபோல் ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்குகளை சிறுவயதிலேயே அறிமுகப்படுத்தி அதை வளர்ப்பதற்கு வாய்ப்பு கொடுப்பது அவசியம். பதற்றமில்லாத வகையில் குழந்தைகள் தங்களுடைய மனதையும், உடலையும் சுறுசுறுப்பாக வைத்து கொள்ள வேண்டியது முக்கியம். அதற்கு பெற்றோர்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய சிறு சிறு அசவுகரியங்களை தாங்கி, ஆசைகளை குறைத்து அல்லது நேர்படுத்தி குழந்தைகளின் ஆர்வத்தோடு ஒன்றிணைத்து ஒன்றாக சேர்ந்து செய்யும் செயல்களை அதிகப்படுத்துவது அவசியம். இது பெற்றோர்களின் கடமை மட்டுமல்லாமல் காலத்தின் கட்டாயமும் கூடவே.
வே.பாலகிருஷ்ணன், ஐ.பி.எஸ்., காவல்துறை துணைத் தலைவர், திருச்சி சரகம்.

இப்பொழுதெல்லாம் சிறுவர்கள் கூட முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். முதலில் சிறுவர்கள் சுமந்து செல்லும் புத்தகப்பை அவர்களுக்கு முதுகு வலி ஏற்படக் காரணமாயிருப்பதை காணலாம்.
சிறுவர்கள் புத்தகங்கள் மற்றும் இதரப் பொருட்கள் திணித்து வைக்கப்பட்ட மிகவும் கனமான புத்தகப்பை / முதுகுப்பையைச் சுமந்து செல்வதை அனைவரும் பார்த்திருக்கிறோம். பையிலுள்ள சுமை மிகுந்த கனமானவுடன், முதுகுப் பைகள் சிறுவர்களை கீழே இழுக்கத் தொடங்குகின்றன. வழக்கமாக முதுகுப் பைகள் உங்கள் மேல்முகுகில் ஆரம்பித்து நடுமுதுகு வரை மட்டுமே இருக்க வேண்டும்.
ஆனால் அதிக எடையினால் முதுகுப்பை, நடுமுதுகிலுருந்து இடுப்பு வரை தொங்க நேர்கிறது. இதனால் நடுமுதுகு, கீழ்முதுகு மற்றும் தோள்பட்டையில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. நாளடைவில் இவ்வழுத்தம் தசைகளை வலிமையிழக்கச் செய்து மூட்டுகள் மற்றும் தண்டுவடத்தை பாதிக்கிறது.
முதுகுப்பை அதிக எடையினால் சிறுவர்களை பின்புறம் இழுக்கிறது, ஆனால் சிறுவர்கள் முன்னே நோக்கி நடக்கின்றனர். இதனால் நாளடைவில் கீழ்முதுகுப் பகுதியில் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது. சில நேரங்களில் இதுவே கீழ் முதுகுப் பகுதியில் தொடர்ந்து அழுத்த, எலும்பு முறிவுகள் ஏற்படுகிறது.
* சிறார்களுடைய முதுகுப் பைகள் சரியான / குறைந்த எடையுடன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
* முதுகுப்பையில் உள்ள வார்களால் (Strap) பையை சரிவர, அதாவது மேல் முதுகிற்கும், நடுமுதுகிற்குமாய் இருக்குமாறு பிணைக்க வேண்டும்.
* எல்லா நேரங்களிலும் நேராய் / நிமிர் நேர்வாய் உட்கார அறிவுறுத்த வேண்டும்.
* அமர்ந்து கொண்டு படிக்கும் போதும், எழுதும் போதும் முதுகிற்குத் தேவையான ஆதாரத்துடன்(Support) அமர வேண்டும்.
* எந்த ஒரு விளையாட்டையும் விளையாடும் முன்னர் முறையான ஆடல் உறுதி பரிசோதனைக்கு அவர்களை உட்படுத்த வேண்டும்.
* விளையாடிய பின்னர் அதிக களைப்படைந்தால் அவ்விளையாட்டு அவர்களின் உடல் வலிமைக்கு அப்பாற்பட்டதாகும்.
* தொடர்ச்சியான / இடைவிடாத வலி இருப்பின் அதனை பெற்றோரிடம் அல்லது மருத்துவரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
* வைட்டமின் டி, எலும்புகள் வலுவாகவும், தசைகள் வலிவடையவும் உதுவுகிறது. குழந்தைகளில் வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளதா என அறிவது நல்லது.
* முறையான மற்றும் பொருத்தமான உடற்பயிற்சித் திட்டம். உங்களுடைய குழந்தைகள் சரியான தோற்ற அமைவு (Posture) நிலையைப் பெறவும், முதுகு வழியை குறைக்கவும் உதவும்.
* உங்கள் குழந்தை உடல் வலிமை தேவைகளுக்கேற்ப உடற்பயிற்சி மற்றும் இயன்முறை மருத்துவரிடம், உடற்பயிற்சிகள் வடிவமைத்துக் கொள்ளுதல் மிக அவசியம்.

குழந்தைகளின் மூன்றாவது கையான செல்போனுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து, வீட்டுக்குள்ளேயே விளையாட சுவாரஸ்ய கேம்ஸ் கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்.
ஐந்து வயது வாண்டுகள் முதல் 50 வயது முதியவர்கள் வரை எல்லோருக்கும் மொபைல் போன்கள்தான் மூன்றாவது கை. அந்த பிசி போனுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து, வீட்டுக்குள்ளேயே விளையாட சுவாரஸ்ய கேம்ஸ் பல குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்.
செஸ்:
'செஸ் விளையாடாத் தெரியும்'னு ஒருத்தர் சொன்னாலே போதும், 'புத்திசாலி'ங்குற பிம்பம் எல்லோருடைய மனசுலயும் தோன்றும். எதிர்முனையில் இருப்பவர்களுடைய பலம், பலவீனம் பற்றி தெரிஞ்சு, அவர்களுக்கு ஏற்றபடி தன்னுடைய படை வீரர்களைக் களத்தில் இறக்கி, தன்னுடைய அரசவையைப் பத்திரமாக வைத்துக்கொள்ளப் போராடும் மிகவும் சுவாரஸ்யமான விளையாட்டு சதுரங்கம் எனப்படும் செஸ். இது கவனச் சிதறலைக் கட்டுப்படுத்தி, planning, problem solving உள்ளிட்ட திறன்களையும் மேம்படுத்துகிறது. இரண்டு பக்க மூளையையும் வேலை செய்யவைக்கும் இந்தத் தந்திர விளையாட்டை உங்கள் குழந்தையோடு சேர்ந்து விளையாடி மகிழுங்கள்.
கேரம் போர்டு:
ஒரு காலகட்டத்துல கேரம் போர்டு இல்லாத வீடுகளைப் பார்ப்பதே அரிது. ஆனால், இப்போதோ ஆன்லைனில் சிங்கிள் ஆளாக அமர்ந்து காயின்களை பாக்கெட் செய்து விளையாடுகின்றனர். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு விளையாடும்போது கிடைக்கிற சந்தோஷம் நிச்சயம் ஆன்லைனில் விளையாடும்போது கிடைக்காது. மேலும், இது problem solving skill மற்றும் அறிவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. பாயின்ட்ஸ் அடிப்படையில் விளையாடும்போது, எண்ணிக்கை, கண்களும் கைகளுக்குமான ஒருங்கிணைப்பு போன்றவற்றையும் பலப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல டிமென்ஷியா, அல்சைமர் உள்ளிட்ட மனநலப் பிரச்னைகளிலிருந்தும் விடுபட இந்த கேரம் கேம் உதவுகிறது.
பல்லாங்குழி:
நாம் மறந்த பாரம்பர்ய விளையாட்டுகளில் முக்கியமான ஒன்று பல்லாங்குழி. எதிரில் இருப்பவர்களின் எண்ண ஓட்டத்தை முன்கூட்டியே அறிந்து, அவற்றை நினைவில் வைத்து, தன்னுடைய தனிப்பட்ட யுக்தியைப் பயன்படுத்தி எதிரியை வீழ்த்துவதே இதிலிருக்கும் சுவாரஸ்யம். படிப்பில் கவனம் இல்லையென குழந்தைகளை நினைத்து வருத்தப்படுவதை விட்டுவிட்டு தினமும் ஒருமணிநேரம் அவர்களோடு இணைந்து பல்லாங்குழி விளையாடுங்கள். நிச்சயம் நினைவுத்திறன் அதிகரிக்கும்.
பரமபதம்:
முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தைச் சார்ந்து விளையாடப்படும் விளையாட்டு இது. ஆனால், இதனுள் சுவாரஸ்யங்கள் பல. பாம்பு, ஏணி, எண்கள் என பரமபதம் போர்டே ரொம்பவே கலர்ஃபுல்லா இருக்கும். ஏற்ற இறக்கங்கள் வாழ்க்கையின் அங்கம் என்பதை மிகவும் எளிமையாய் விளக்கும் அருமையான விளையாட்டு இது. முன்னேற்றப் பாதையில் ஏராளமான தடைகள் வரும். ஆனால், அவற்றைக் கண்டு துவண்டுவிடாமல் விடாமுயற்சி வேண்டும் என ஆழமாக வலியுறுத்தும் கேம் பரமபதம். மனவலிமையை மேம்படுத்தும் இந்த விளையாட்டை உங்கள் குழந்தைகளோடு விளையாடி மகிழுங்கள். நமக்கும் தன்னம்பிக்கை பிறக்கும்.
மியூசிகல் சேர்:
குடும்பத்தோடு இணைந்து விளையாடும் விளையாட்டுகள் பல இருந்தாலும், மியூசிகல் சேர் விளையாட்டில் கிடைக்கும் என்ஜாய்மென்ட் வேறெதிலும் இல்லை. மூன்று பேர், இரண்டு இருக்கைகள் இருந்தாலே போதும். ஸ்டார்ட் மியூசிக். முழுக்க முழுக்க ஃபன் ஃபில்டு கேம் இது. நிச்சயம் உங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்கும்.

படுக்கையை நனைத்தல் என்பது ‘பெட் வெட்டிங்’ எனச் சொல்கின்றனர். குழந்தைகள் பெட்வெட்டிங் செய்ய காரணங்களையும், தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் பொதுவாகவே படுக்கையை நனைக்கும் பழக்கத்தில் இருப்பர். வளர வளர இந்தப் பிரச்சனை சரியாகிவிடும். படுக்கையை நனைக்கும் குழந்தைகள் ஆரோக்கியமானவர்களா, இது அவர்களின் பழக்கமா, குறைபாடா, உடல் பிரச்சனையா எனப் பல பெற்றோரும் பயப்படுகின்றனர். அதற்கான புரிதலை, தெளிவை (How to stop bedwetting) இந்தப் பதிவின் மூலம் பார்க்கலாம்.
குழந்தையின் வளர்ச்சிக் குறைபாடே படுக்கையை நனைப்பதற்கு முக்கிய காரணமாகும். பல குடும்பங்களில் இந்த பிரச்னை தொடர்ந்து. தன் சந்ததிகளுக்கு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
பெண் குழந்தைகள் 6 வயதுக்குள்ளாகவே, படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்தி விடுகின்றனர். ஆண் குழந்தைகள் 7 வயதுக்குள்ளாகவே, படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்தி விடுகின்றனர். அதாவது இந்த பெட் வெட்டிங் பிரச்னையிலிருந்து மீண்டு வருகின்றனர்.
பெட் வெட்டிங் செய்யும் குழந்தைகளை எப்படி அணுகுவது?
அடிப்பது, திட்டுவது, கேலி செய்வது, கோபப்படுவது, மற்றவரிடம் சொல்லி குழந்தையை இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளுவது, குழந்தையை மிரட்டுவது, சண்டை போடுவது போன்றவற்றை பெற்றோரோ வீட்டு பெரியவர்களோ செய்தால் குழந்தைக்கு உடல் அல்லது மன ரீதியான பிரச்னைகள் வரலாம்.
பெட் வெட்டிங்குக்கும் உடல்நல பிரச்னைக்கும் தொடர்பு உண்டு…
வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகமாக படுக்கையை நனைப்பார்கள்.
மனநல வளர்ச்சியில் குறைபாடு உள்ள குழந்தைகள்.
மாற்று திறனாளி குழந்தைகள்
நரம்பு தொடர்பான பிரச்னைகள் உள்ள குழந்தைகள்
வலிப்பு பிரச்னை உள்ள குழந்தைகள்
கெஃபைன் ன் உணவுகளை அதிகமாக உண்ணும் குழந்தைகள் அல்லது பெற்றோர் கெஃபைன் உணவுகளை அதிகமாக உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கலாம்.