search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ‘ஆட்டிசம்’ அலட்சியம் வேண்டாம்
    X
    ‘ஆட்டிசம்’ அலட்சியம் வேண்டாம்

    ‘ஆட்டிசம்’ அலட்சியம் வேண்டாம்

    குழந்தைகளின் செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் ஆட்டிசம் பாதிப்பில் இருந்து எளிதாக மீட்டுவிடலாம்.
    ஆட்டிசம் என்ற செயல்திறன் பாதிப்பு குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு மருந்து, மாத்திரைகள் பலன் தராது. குழந்தைகளின் செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் ஆட்டிசம் பாதிப்பில் இருந்து எளிதாக மீட்டுவிடலாம். குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் இருந்து ஒரு ஆண்டுக்குள் அதன் வளர்ச்சி நிலையை பெற்றோர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அந்த காலகட்டத்தில்தான் ஆட்டிசம் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கும். உதாரணமாக ஓராண்டுக்குள் குழந்தை சிரிக்காமல் இருந்தாலோ, எந்த உணர்வையும் உடல் மொழி மூலம் வெளிக்காட்டாமல் இருந்தாலோ மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.

    ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் சராசரி குழந்தைகளில் இருந்து மாறுபட்டு காணப்படும். சில அறிகுறிகளை வைத்து ஆட்டிசம் பாதிப்பை கண்டறிந்துவிடலாம். தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பது, பேசும்போது வித்தியாசமான ஒலியை எழுப்புவது, எப்போதும் ஒரே இடத்தில் உட்கார்ந் திருப்பது, முணுமுணுத்துக்கொண்டே இருப்பது, ரோபோ போல் அதன் சுபாவம் அமைந்திருப்பது, ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருப்பது, பேசும் தொனியில் இயல்புக்கு மாறாக தெரிவது, சிறிய வார்த்தையை கூட புரிந்துகொள்ள தடுமாறுவது, பேச தடுமாறுவது போன்றவை ஆட்டிசம் பாதிப்புக்கான அறிகுறிகளாகும்.

    Next Story
    ×