search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகள் நகத்தை கடித்தால் மனதில் குழப்பம்..
    X
    குழந்தைகள் நகத்தை கடித்தால் மனதில் குழப்பம்..

    குழந்தைகள் நகத்தை கடித்தால் மனதில் குழப்பம்..

    உங்கள் குழந்தைகள் அடிக்கடி நகத்தை கடித்துக் கொண்டிருந்தால், இயல்பாக மற்ற குழந்தைகளுடன் பேசிப் பழக தயங்கினால், எப்போதும் தனிமையை விரும்பினால், தனிக்கவனம் செலுத்துங்கள்.
    இன்று சமூகத்தில் வன்முறைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர், சிறுமியர்கள்கூட குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். ‘இளம் வயதிலேயே பிள்ளைகள் குற்றச்செயல்களில் ஈடுபட அவர்கள் எதிர்கொண்ட வீட்டு சூழ்நிலையே காரணம்’ என் கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். குழந்தைகளின் மனம் மிகவும் மென்மையானது. நம் முடைய முரட்டுத்தனத்தால் அவர்களின் மனதை காயப்படுத்தக் கூடாது. நாம் சாதாரணமாக நினைக்கும் சின்னச்சின்ன விஷயங்கள் கூட குழந் தைகளிடம் வன்முறை எண்ணத்தை உருவாக்கிவிடும்.

    இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் பெற்றோருக்கு நிறைய நெருக்கடிகள் இருக்கலாம். அந்த நெருக்கடிகளையும், பிரச்சினைகளையும் குழந்தைகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறியாமை. பெற்றோரின் இப்படிப்பட்ட அறியாமைகூட குழந்தைகளிடம் வன்முறை எண்ணம் உருவாக காரணமாகிவிடும். குழந்தைகளை கண்டிக்க வேண்டியது அவசியம்தான். அந்த கண்டிப்பு மிகவும் மென்மையாக, அவர்கள் மனதில் பதியும்படியாக இருக்க வேண்டும். இதற்கெல்லாம் பொறுமையும், கனிவும் வேண்டும்.

    பெற்றோர் குழந்தைகள் முன்னால்வைத்து சண்டைகள் போட்டால், அது அவர்கள் மனதில் பெரிய காயத்தை உண்டாக்கிவிடும். அப்போது அவர்கள் தேவையற்ற பயம், பாதுகாப்பின்மையை உணருவார்கள். இது அவர் களுக்கு கவனக்குறைவையும், கல்வியில் ஆர்வக் குறைவையும் ஏற்படுத்திவிடும். குழந்தை களின் மனதில் ஏற்படும் குழப்பங்கள் அவர்களது உடலிலும் வெளிப்படும். அதீத பயத்தின் காரணமாக குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், வயிற்றுவலி போன்றவைகளும் ஏற்படலாம்.

    உங்கள் குழந்தைகள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், மற்றவர்களின் முகத்தை நேருக்கு நேர் பார்த்துபேச தயங்கினால், அடிக்கடி நகத்தை கடித்துக் கொண்டிருந்தால், இயல்பாக மற்ற குழந்தைகளுடன் பேசிப் பழக தயங்கினால், சாதாரண கேள்விக்கு கூட பதிலளிக்க தடுமாறினால், எப்போதும் தனிமையை விரும்பினால், தனிக்கவனம் செலுத்துங்கள். அவர்களது மனதில் இருப்பதை புரிந்துகொண்டு ஒட்டிஉறவாடி பழகி மகிழ்ச்சிப்படுத்துங்கள். சிறப்பான எதிர்காலம் உருவாக குழந்தைகள் சிறப்பாக வளர்க்கப்படவேண்டும்!
    Next Story
    ×