search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பொம்மையுடன் பேசும் குழந்தை
    X
    பொம்மையுடன் பேசும் குழந்தை

    உங்கள் குழந்தை பொம்மைகளுடன் பேசுகின்றதா?

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை நன்கு கவனித்து, குழந்தை சராசரி மனிதனை போல் வளர வழி வகை செய்ய வேண்டும்.
    குழந்தைகள் எப்பொழுதும் தமக்கென ஒரு உலகத்தில் வாழ்கின்றனர். நாமும் அவ்வயதை கடந்து வந்திருந்தாலும். ஏனோ குழந்தைகளின் தேவைகளை புறிந்து செயற்பட தவறுகின்றோம்.

    குழந்தைகளுக்கு அனேகமான பெற்றோர் சிறந்த கல்வி, சிறந்த உடை, சிறந்த வாழிடம் என்பனவற்றை வழங்குவதையே பெரிய விடயமாக கருதுகின்றார்கள். அவற்றைகடந்து அவர்களின் தேவையை நிறைவேற்ற அவர்கள் முயல்வதில்லை. இதனால் மனரீதியாக குழந்தைகள் மிகவும் பாதிப்படைகின்றார்கள். பெற்றோர் விடும் இப்பிழை குழந்தைகளின் எதிர்காலத்தை கோள்விக் குறியாக்குகின்றது.

    இப்படியான ஒரு விடயம் தான் குழந்தைகளின் கற்பனை நண்பர்கள். எமது சிறு வயதிலும் எமக்கு பிடித்த ஒரு கற்பனை பாத்திரம் இருந்திருக்கலாம். அது ஒரு செல்லப்பிராணியாகவோ, ஒரு பொம்மையாகவோ இருக்கலாம். இன்றும் உங்கள் மனதில் அது பற்றிய தாக்கம் இருக்கும்.

    குழந்தைகளுக்கு விளையாடத்துணை இல்லாத பொழுது, பெற்றோர் குழந்தைகளுடன் நேரம் செலவிடாத பொழுது, குழந்தைகள் தனிமையில் அதிகமாக இருக்க நேரிடும் பொழுது, குழந்தைகளுக்கு நண்பர்கள் இல்லாத நிலை போன்ற சூழ்நிலைகளின் பொழுது அவர்கள் தனிமையான சூழலில் இருந்து விடுபடத் தேடி அமைத்துக் கொள்ளும் விடயம் தான் இந்தக் கற்பனை நண்பன்.

    குழந்தையின் 2 முதல் 9 வயது வரையிலான கால கட்டத்தில், குழந்தைகள் அனைத்து விஷயங்களிலும் சாதாரணமாக ஈடுபட்டு தனக்கெனப் பிடித்த பொம்மையைக் கொஞ்சுவது, அலங்கரிப்பது, அதனுடன் விளையாட்டாகப் பேசுவது போன்ற செயல்பாடுகள் காணப்பட்டால் அது சாதாரண சூழல். ஆனால், அந்த வயது வரம்பை மீறித் தனது கற்பனை நண்பனுடனான நட்பை நீடித்து அந்த ஒரு நண்பனுடன் மட்டுமே எப்பொழுதும் நேரத்தை செலவிட்டுக் கொண்டு, மற்ற விடயங்களில் ஈடுபாடு காட்டாமல் தனித்து, விலகிச் சென்றால், அந்தச் சூழல் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

    இந்நிலையைக் குழந்தைகள் அடைந்து விட்டால், அது அவர்களின் மனநிலையில் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தி விபரீத விளைவுகளை உண்டாக்கலாம்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை நன்கு கவனித்து, குழந்தை சராசரி மனிதனை போல் வளர வழி வகை செய்ய வேண்டும். உங்கள் கவனிப்பையும் மீறி குழந்தை அந்த கற்பனை நண்பன் உலகில் மூழ்க நேர்ந்தால், பெற்றோர்கள் அதை உடனடியாக கவனித்து குழந்தைக்கு மனநிலை மருத்துவருடன் கலந்தாலோசித்தல் அவசியம்.

    குழந்தை தன் கற்பனை நண்பனை உங்களிடம் காட்டி பேசும் பொழுது உங்கள் வெறுப்பைக் காட்டாமல், குழந்தையின் பாணியிலேயே பாசமாக பேசிக் குழந்தைக்கு உண்மை நிலையை உணர்த்தலாம்.
    Next Story
    ×