search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற...
    X
    தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற...

    தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற...

    மாணவ-மாணவிகளே, இறுதித் தேர்வுகள் தொடங்க உள்ளன. அதிக மதிப்பெண்கள் பெற கடைப் பிடிக்க வேண்டிய சில குறிப்புகளை இங்கே காண்போம்...
    மாணவ-மாணவிகளே, இறுதித் தேர்வுகள் தொடங்க உள்ளன. அதிக மதிப்பெண்கள் பெற கடைப் பிடிக்க வேண்டிய சில குறிப்புகளை இங்கே காண்போம்...

    1. நம்பிக்கை

    முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உறுதியான நம்பிக்கை இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும். நீங்கள் அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் நிச்சயம் அதை உங்களால் அடைய முடியும். கவலையுடனோ அச்சத்துடனோ படிக்கக் கூடாது.

    2. ஆர்வம்

    படிக்கும்போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும்போது கடினமான பாடம் என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய ஆர்வத்தை குறைக்கின்றது. விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.

    3. மறதி

    மறதியை போக்க கவனமாக படியுங்கள். படிக்கும் போது யாரிடமும் பேசாதீர்கள். பாட்டு கேட்காதீர்கள், டி.வி. பார்க்காதீர்கள். அதிகாலையில் படியுங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள்.

    4. அதிக நேரம்

    அதிக நேரம் படிப்பிற்காக செலவு செய்ய வேண்டும். படிப்பில் இலக்கை நிர்ணயித்து அதை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதைவிட எப்படி படிக்கின்றோம் என்பது முக்கியம்.

    5. படிக்கும் முறை

    படிக்கும்போது வெறுமனே புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்காது, படிக்கும்போது வெள்ளைத்தாள், பேனா அல்லது பென்சில் வைத்துக் கொண்டு, படிக்கும் ஒவ்வொரு பக்கத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும். இப்படி செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.

    6. திட்டமிடுதல்

    தேர்வுக்கு படிப்பதற்கு முன்னால் நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும். ஒரு நாளில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்ட பிறகு, தினமும் இரவு தூங்கப்போகும் முன் இன்று நாம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என பரிசோதனை செய்ய வேண்டும்.

    7. ஓய்வு, உணவு, உடற்பயிற்சி

    எந்த நேரமும் படித்துக் கொண்டே இருந்தால் உடல் நலம் கெடும். உடலுக்கும் மூளைக்கும் நிறைய வேலை கொடுப்பதால் அதிக சக்தி செலவாகும். அதிகம் உண்டாலும், உறக்கம் வந்துவிடும். எனவே அளவாகவும் அதே சமயம் சத்துள்ள உணவாகவும் உண்ண வேண்டும்.

    பெற்றோர் கவனத்திற்கு..

    பெற்றோர் டி.வி. பார்ப்பதை தவிர்க்கவும். நீங்கள் டி.வி. பார்க்காமல் இருந்தால்தான் உங்கள் பிள்ளைகளும் டி.வி. பார்க்காமல் இருப்பார்கள்.

    உங்கள் பிள்ளைகளிடம் கட்டாயம் செல்போன் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.

    கம்ப்யூட்டரில் பாட்டு கேட்பது, சினிமா பார்ப்பது, கேம் விளையாடுவது போன்றவற்றுக்கு முழுமையாக தடை போடுங்கள்.

    மாணவ- மாணவிகளுக்கு நல்ல சத்துள்ள உணவை தயார் செய்து கொடுக்கவும்.

    பிள்ளைகளை வெறுமனே படி படி என்பதைவிட, படிப்பதற்கான சூழ் நிலையை ஏற்படுத்திக்கொடுங்கள். படிப்பதை கண்காணியுங்கள்.

    தேர்வுக்காலம் முடியும் வரை உங்களுடைய முழு கவனத்தையும் பிள்ளைகளின் மீது வையுங்கள்.

    ப.பிரதிக்‌ஷா, 9-ம் வகுப்பு,

    அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி,

    கீழ்மணம்பேடு, திருவள்ளூர்.

    Next Story
    ×