என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • முக்கிய தகவல்களையும் நினைவில் வைத்துக்கொள்வது ஒரு சவாலான காரியம்.
    • சுருக்கெழுத்து மற்றும் கதைகள் மூலம் சிலவற்றை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும்.

    போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு அனைத்து முக்கிய தகவல்களையும் நினைவில் வைத்துக்கொள்வது ஒரு சவாலான காரியமாகும். முக்கியமான தகவல்கள், செய்திகள், வரலாற்று நிகழ்வுகள் மற்றும் பல தகவல்களை ஒரு சில சுருக்கமான டிப்ஸ்கள் மூலம் எளிதாக நினைவில் வைத்துக்கொள்வதுடன், திருப்பி பார்க்கவும் உதவியாக இருக்கும். அதற்கான 10 சிறந்த டிப்ஸ்கள் இதோ உங்களுக்காக....

    1) கதை வரிகள்: சுருக்கெழுத்து மற்றும் கதைகள் மூலம் சிலவற்றை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும். உதாரணமாக, சூரியக்குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களின் பெயர்களை ஆங்கிலத்தில் நினைவில் வைத்துக் கொள்ள- My Very Educated Mother Just Serves Us Noodles (Mercury, Venus, Earth, Jupiter, Saturn, Uranus and Neptune) என்ற வரிகள் மூலம் எளிதாக நினைவில் வைத்து கொள்ள முடியும்.

    Rivers in Northwest India (வடமேற்கு இந்தியாவில் உள்ள நதிகள்) என்ற கேள்விக்கு Indian Rabbits Seem Chubby and Jovial என்ற கதை வரியை நினைவில் வைத்து கொண்டால் (I-Indus, R-Ravi, S-Satluj, Ch-Chenab and J-Jhelum) என்று எளிதில் நினைவில் கொள்ளலாம்.

    2) துண்டித்தல் (Chunking): புகழ்பெற்ற நினைவக ஆராய்ச்சி கட்டுரையான "The Magical Number Seven Plus or Minus Two" என்பதில் ஒரு மனிதனால் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 7 செய்திகளை மட்டும் தான் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்கிறது. எனவே, ஒரே தொகுப்புகளாக உள்ள தகவல்களை சிறு சிறு தொடர்புடைய செய்திகளாக மாற்றி நினைவில் வைக்கும்போது அதிக நாட்கள் மறக்காமல் இருக்க முடியும். மேலும், தினமும் திருப்பி பார்க்கவும் வசதியாக இருக்கும்.

    உதாரணமாக, நீங்கள் நவீன வரலாறு குறித்து படிப்பதாக இருந்தால் அவற்றை சிறு சிறு செய்திகளாக பிரித்து வைத்துப்படித்தால் உங்களுக்கு எளிதாக இருக்கும்.

    1750-ல் இந்தியா-முகலாயர்களின் வீழ்ச்சி, பிற்கால முகலாயர்களின் ஆட்சி மற்றும் வாரிசு மாநிலங்களின் தோற்றம்.

    - இந்தியாவில் பிரிட்டிஷ் விரிவாக்கம் - கிழக்கிந்திய கம்பெனி

    - பிரிட்டிஷ் இந்தியா அறிமுகப்படுத்திய மாற்றங்கள்

    - ஆங்கிலேயர்களுக்கு எதிரான மக்கள் எழுச்சி

    - இந்தியாவில் சமூக மத இயக்கங்கள்

    - இந்தியாவின் சுதந்திர போராட்டங்கள், இந்திய சுதந்திர இயக்கங்கள், இந்தியா சுதந்திரம்.... என சிறு சிறு தொடர்புடைய துண்டுகளாக பிரித்து நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

    3) கற்பனைப்படம்: ஒரு தனிப்பட்ட வார்த்தைக்கும், எண்ணுக்கும் நமது கற்பனையில் ஒரு உருவத்தை கொடுத்து நினைவில் வைத்துக் கொள்வது இந்த நுட்பம் ஆகும்.

    உதாரணமாக, நைட்ரஜன் என்ற தனிமத்தின் அணு எண் 7 என்பதை நமது கற்பனையில் உங்களுக்கு பிடித்தவர் '7'-ம் எண் வீட்டில் வசிப்பதாக கற்பனை செய்து நினைவுபடுத்தலாம். உதாரணமாக நடராஜன் என்ற நண்பர் '7'-ம் எண் வீட்டில் வசிப்பதாக உங்கள் மனதில் கற்பனைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

    4) காட்சிப்படுத்தல்: உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களை நினைவில் வைக்க உதவும் காட்சிப் படங்களைப் பயன்படுத்துவது இந்த நுட்பத்தின் சிறப்பாகும். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை நினைவில் வைத்துக்கொள்ள அது சம்பந்தமான அனைத்து காட்சிகளையும் நம் கண் முன் நடப்பது போல காட்சிப்படுத்துதல் ஆகும்.

    உதாரணமாக, மகாத்மா காந்தியின் சுதந்திர இயக்கங்களை நினைவில் வைத்து கொள்ள, ஒவ்வொரு இயக்கத்திலும் எந்த இடத்தில் என்ன மாதிரியான செயல்கள் நடைபெற்றது என்பதை கண் முன் கொண்டுவந்து திரைப்படம் போல காட்சிப்படுத்தும்போது அந்த நிகழ்வு மறக்காமல் இருக்கும்.

    5) மீண்டும் மீண்டும் படித்தல்: இந்த நுட்பம் மூலம் ஒரு குறிப்பிட்ட பாடத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டு இருப்பது. நீண்டகால நினைவிற்கு இது ஒரு சிறந்த முறையாக கையாளப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பாடம், தலைப்பு மற்றும் கருத்து சிலவற்றை நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்து கொள்ள இது மிகச்சிறந்த முறையாகும்.

    அதற்கு ஒரு சார்ட் பேப்பரில் மூன்று பகுதியாக பிரித்து, அதில் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்குள் திரும்ப படிக்க வேண்டிய தலைப்பை முதல் பகுதியில் எழுதிவைக்க வேண்டும். அதே போல் ஒரு வாரத்திற்கு ஒரு முறை திரும்ப படிக்க வேண்டிய தலைப்பு இரண்டாம் பகுதியிலும் எழுதி வைத்து அதை கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு வாரத்திலும் படித்த தலைப்புகள் உங்கள் நினைவில் நன்றாக இருந்தால் அதை மூன்றாம் பகுதியில் மாற்றி விடலாம், மூன்றாம் பகுதியில் உள்ளதை ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை நினைவில் கொண்டு வர வேண்டும். அப்படி நினைவுக்கு வரவில்லையென்றால் அதை முதல் பகுதிக்கு மீண்டும் மாற்றி விட வேண்டும்.

    6) விரிவான ஒத்திகை: இந்த நுட்பம் மூலம், நீங்கள் ஏற்கனவே படித்த தலைப்புகள் அல்லது கருத்துக்களிலிருந்து நீங்களே சில கேள்விகளை கேட்பதும், மேலும் அதற்கு சம்பந்தமான வேறு செய்திகளுக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்தி ஆழமான கருத்துக்களை உள்வாங்குவது ஆகும். இதன் மூலம் உங்களுடைய விமர்சன சிந்தனை அறிவையும், பகுப்பாய்வு அறிவையும் மேம்படுத்த முடியும். சிக்கலான தலைப்பு மற்றும் கருத்துகள் கொண்டதை நினைவில் வைத்துக்கொள்ள இது ஒரு சிறந்த முறையாக கையாளப்படுகிறது.

    7) சுருக்கெழுத்து: TNPSC, IBPS, NET, SET, SSC and RRB போன்ற போட்டித்தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்கள் நிறைய சுருக்கெழுத்துகளை நினைவில் வைத்துக்கொள்வது முக்கியமானதாகும். உதாரணமாக, Agriculture and Rural Debt Relief-ARDR என்று நினைவில் வைத்துக்கொண்டு திரும்பத்திரும்ப எழுதிப்பார்ப்பது அவசியமாகும். அதற்கான சில FLASH CARDS தயார் செய்து உங்களுக்கு நீங்களே தேர்வு நடத்தி பார்க்க வேண்டும்.

    8) நினைவு அரண்மணை (Memory Palace): இந்த நுட்பம் மூலம் உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைகளையும் கருத்துக்கள்/தலைப்புகள் உடன் தொடர்பு ஏற்படுத்தி நினைவில் வைப்பது ஆகும். அதற்காக சார்ட் பேப்பரில் அந்த கருத்து சம்பந்தமான சில செய்திகளை எழுதி சுவரில் ஒட்டி வைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் ஒவ்வொரு முறை அந்த இடத்திற்கு செல்லும்போதும் உங்களால் அதனை எளிதாக நினைவுக்கு கொண்டு வர முடியும்.

    9) பாடல்கள்: நீங்கள் போட்டித்தேர்வுக்கு தயாராகும்போது ஒரு சில குழு, அமைப்புகளின் பெயர்களை நினைவில் வைத்து கொள்வது மிகவும் கடினமாக இருந்தால் இந்த முறை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அது போன்ற பெயர்களை உங்களுக்கு பிடித்த பாடல் வரிகளுடன் தொடர்பு ஏற்படுத்தியோ அல்லது புதிய பாடல் வரிகளை உருவாக்கியோ, அதை அடிக்கடி பாடிப்பார்க்கும் பொழுது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஒரு சில நடன முறையை ஏற்படுத்தி பயிற்சி செய்யும்பொழுது சலிப்பு தட்டாமல் உங்களால் உற்சாகத்துடன் படிக்க முடியும்.

    10) ஐந்து உணர்வுகள்: நமது உணர்வுகளான பார்த்தல், கேட்டல், தொடுதல், நுகர்தல் மற்றும் சுவைத்தலான அனைத்து உணர்வுகளுடன் தொடர்பு ஏற்படுத்தி நினைவில் கொள்ளுதல் மிகவும் வெற்றிகரமான நுட்பமாக பார்க்கப்படுகிறது.

    உதாரணமாக, விண்வெளி சம்பந்தமாக படிக்கும்போது உங்களுடைய பார்த்தால் உணர்வுகளுடன் தொடர்புபடுத்தி நினைவில் வைத்து கொள்ளுதல், போர், அணுகுண்டு பரிசோதனை சம்பந்தமான செய்திகளை படிக்கும்போது கேட்டல் உணர்வுகளுடன் தொடர்புபடுத்துதல்.

    இது போன்ற பல்வேறு முறைகளை நீங்களே உருவாக்கி நினைவில் வைக்கும்போது நீண்ட காலத்திற்கு படித்தவற்றை மறக்காமல் உங்களால் போட்டித்தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.

    தொகுப்பு: செ. மதுக்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், ராமநாதபுரம்.

    • மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத்தன்மை காணப்படும்.
    • குழந்தைகளுக்கு மூக்கில் ‘நீர்க்கோப்பு சதை’ வளர்வதுண்டு.

    மூக்கில் அடிபட்டால் இரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கிலிருந்து திடீரென்று இரத்தம் வடிவது உண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்த தொல்லை அதிகமாக காணப்படும். இதை ஆங்கிலத்தில் 'எபிஸ்டேக்சிஸ்' என்று அழைக்கிறார்கள். 

    சுவாசத்துக்கும் வாசனைக்கும்தான் மூக்கு படைக்கப்பட்டு உள்ளது என்று நினைக்காதீர்கள். மூக்கு ஒரு ஏர்கன்டிஷனர் மாதிரி. வெளியிலிருந்து வருகிற குளிர்ந்த காற்றையோ, சூடான காற்றையோ நம் உடலுக்குத் தேவையான வெப்பநிலைக்கு மாற்றி அனுப்ப வேண்டியதும் மூக்கின் வேலைதான். மூக்கு பார்ப்பதற்குத்தான் பலமானதுபோல் தோன்றுகிறதே தவிர, உள்ளுக்குள் அது மிக மென்மையானது. 

    வெளிப்பக்கம் தெரிகிற மூக்கின் இரு பக்கங்களிலும் துவாரங்கள் உள்ளன. இந்த புறநாசி துவாரத்தில் விரல் விட்டால் குகை மாதிரி உள்ளே போகிறதல்லவா? அந்தப் பகுதிக்கு 'மூக்குப் பெட்டகம்' என்று பெயர். இதன் ஆரம்ப பகுதியில், முகத்தின் பல பகுதிகளிலிருந்து மிக நுண்ணிய இரத்தக் குழாய்கள் வந்து சேருகின்றன. இப்பகுதிக்கு 'லிட்டில்ஸ் ஏரியா' என்று பெயர். இது ஒரு தொட்டாற்சிணுங்கி பகுதி. இது லேசாக சீண்டப்பட்டால்கூட, மூக்கிலிருந்து இரத்தம் கொட்டிவிடும். இதை 'சில்லுமூக்கு' என்றும் பொதுவாக சொல்வார்கள். 

    மூக்கிலிருந்து இரத்தம் வடிவதற்கு 80 சதவீத காரணம் இந்த பகுதியில் உண்டாகும் கோளாறுதான்; மீதி 20 சதவீதம்தான் மூக்கின் மேற்பகுதியிலும் உடலின் பிற பகுதிகளிலும் ஏற்படுகிற காரணங்களாகும். 

    குழந்தைகளிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போது பார்த்தாலும் மூக்கில் விரலை நுழைத்து குடைந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் குச்சி, பேனா, பென்சில் என்று ஏதாவது ஒரு பொருளை மூக்கில் நுழைத்து குடைவார்கள். இதன் விளைவாக, லிட்டில்ஸ் ஏரியாவில் புண் உண்டாகி, இரத்தக் கசிவு ஏற்படும். 

    சிலருக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத்தன்மை காணப்படும். அப்போது மூக்கிலிருந்து இரத்தம் வடியும். 

    குழந்தைகளுக்கு மூக்கில் 'நீர்க்கோப்பு சதை' வளர்வதுண்டு. தவிர, மூக்கும் தொண்டையும் இணைகிற பகுதியில் 'அண்ணச்சதை' வீங்குவதும் உண்டு. இந்த இரண்டு காரணங்களால், மூக்கு அடைத்துக்கொள்ளும். அடைப்பை விலக்க குழந்தைகள் அடிக்கடி மூக்கை குடைவார்கள் அல்லது சிந்துவார்கள். விளைவு, மூக்கிலிருந்து இரத்தம் வரும். 

    • தூக்கம் சார்ந்த சில பிரச்சினைகள் குழந்தைகளையும், வளரிளம் பருவத்தினரையும் பாதிக்கின்றன.
    • வயதாகிட்டாலே தூக்கமின்மை வந்துவிடும் என்று கூறுவதும் நியாயம்தான்.

    8 மணி நேரம் தூங்கினாலும்கூட ஆழ்ந்த தூக்கம் இல்லாவிட்டால், அதுவும் தூக்கமின்மைதான்.

    கடையில் ஒரு கிலோ அரிசி வாங்குகிறோம். அப்போது எடையை மட்டுமா பார்க்கிறோம்? தரத்தையும் சேர்த்துதானே பார்க்கிறோம். அதுபோலத்தான் தூக்கத்தின் தரமும் முக்கியம். மனநோய்கள், உடல் நோய்கள், பிரச்சினை என எதுவென்றாலும் முதலில் பாதிக்கப்படுவது தூக்கம்தான். 'வயதாகிட்டாலே தூக்கமின்மை வந்துவிடும்' என்று கூறுவதும் நியாயம்தான். ஆனால், தூக்கம் சார்ந்த சில பிரச்சினைகள் குழந்தைகளையும், வளரிளம் பருவத்தினரையும் பாதிக்கின்றன.

    விழித்திருக்கும் நேரம், தூங்கும் நேரம் என்று ஒரு நாளை 2-ஆக பிரிக்கலாம். ஆனால், ஒரு சிலருக்கு இவை இரண்டும் அவ்வப்போது கலந்துவிட்டால் என்ன ஆகும்? விழிப்போடு இருக்க வேண்டிய நேரத்தில், நாம் விரும்பாவிட்டாலும் தூங்கி விழுந்துவிடுவோம். இதைத்தான் 'நார்கோலெப்சி' என்கிறார்கள்.

    இதன் அறிகுறிகள்? தூக்கத்தில் தெளிவாக அல்லது உளறலாக பேசுவது. திடீரென்று அலறி எழுந்து சில நிமிடங்கள் பதற்றமாகவோ அல்லது குழப்பமாகவோ காணப்படுவது. தூக்கத்தில் நடப்பது, சம்பந்தமில்லாத செயல்களை செய்வது. படுக்கையில் சிறுநீர் கழிப்பது (5 வயதுக்கு மேல்), உதைப்பது, காயம் ஏற்படும் அளவுக்கு அதிகப்படியான உடல் அசைவுகளை வெளிப்படுத்துவது, பயம் தரும் கனவு தொல்லைகள். வலிப்பு போன்றவற்றை அறிகுறிகளாக குறிப்பிடலாம்..

    குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பாதிக்கும் இந்த தூக்க வியாதிகளிடையே சில ஒற்றுமைகள் இருக்கலாம். 5 வயதில் ஆரம்பிக்கும் இவை, வளர் இளம்பருவத்தில் உச்சகட்டத்தை அடையும். ஆனால், 18 வயதுக்கு மேல் இவை அரிதாகவே காணப்படும். இந்த தூக்க நோய்கள் பெரும்பாலும் தூங்க ஆரம்பித்த முதல் 3 மணி நேரத்துக்கு உள்ளாகத்தான் ஏற்படும். அந்த நேரத்தில் அவர்களைக் கட்டுப்படுத்த இயலாது அல்லது குழப்பமான மனநிலையில் காணப்படுவார்கள். காலையில் இதைப்பற்றி அவர்களிடம் விவரித்தால் 'அப்படி இருக்க வாய்ப்பே இல்லை' என்று சத்தியம் செய்யும் அளவுக்கு, தூக்கத்தில் நடந்த சம்பவங்கள் சுத்தமாக அவர்களுக்கு ஞாபகத்தில் இருக்காது.

    • சில தாய்மார்கள் ஒவ்வொரு கவளம் உணவிற்கு இடையில் சிறிது தண்ணீர் கொடுக்கிறார்கள்.
    • பிடிவாதம் பிடிக்கும் போக்கு அதிகரிக்கும்.

    குழந்தைகளுக்கு பொதுவாக சாதாரண பசி இருக்கும். இது பிறந்ததிலிருந்தே அது அழுது பாலை தேடும் போது தெளிவாகத் தெரியும். கருப்பைக் காலத்தில் இருக்கும் விரைவான வளர்ச்சியின் காலம், பிறப்புக்குப் பிறகும் சிறிது காலம் நீடிக்கும், பின்னர் குறைகிறது, இது பசியின்மை குறைவதை ஒரு பெரிய அளவிற்கு விளக்குகிறது, இருப்பினும், குழந்தை வளரும்போது, உணவு உட்கொள்ளும் அளவும் அதிகரிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கருதுகின்றனர்.

    குழந்தைக்கு வலுக்கட்டாயமாக உணவளிப்பது அல்லது டிவி, செல்போன் பொம்மைகள் மூலம் கவனத்தை சிதறடிப்பது அல்லது உணவளிக்க வீட்டிற்கு வெளியே செல்வது போன்ற முறைகளைப் பயன்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல. இதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்க, குழந்தை தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து உணவை எடுத்துச் கொள்ளச் சொல்வது நல்லது, குழந்தை தேவையான அளவு எடுத்துக் கொள்ளவில்லை என்றால், அடுத்த உணவுக்காகக் காத்திருப்பது நல்லது, அல்லது சிறிது நேரம் கழித்து குழந்தை கேட்டால் உணவு கொடுக்கலாம்.

    பல தாய்மார்கள், தங்கள் குழந்தைகள் வேறு இடங்களில் அல்லது ஹோட்டல்களில் நன்றாக சாப்பிடுகிறார்கள் என்று நினைப்பதுண்டு. இதை வேறுவிதமாகக் கூறினால், குழந்தைகள் உணவகங்களில் உணவைப் பார்ப்பது மட்டுமல்ல, அந்த உணவின் சுவையான வாசனையையும் உணர்கிறார்கள். இதுதான் குழந்தைகளின் பசியைத் தூண்டுகிறது, பெற்றோர் இல்லாததால். பெற்றோர்கள் அருகில் இல்லாததால், அவர்களின் அழுத்தம் இல்லாததால், மற்ற வீடுகளில் குழந்தைகள் தானாக சாப்பிடுவதும் அதிகமாக இருக்கும்.

    பழச்சாறுகள் மற்றும் பிற சர்க்கரை பானங்களை கொடுப்பது குழந்தைகளின் வயிற்றை நிரப்பலாம், ஆனால் தேவையான அளவு கலோரிகளைக் கொடுக்காது. மேலும் சில தாய்மார்கள் ஒவ்வொரு கவளம் உணவிற்கு இடையில் சிறிது தண்ணீர் கொடுக்கிறார்கள். இதுவும் தவறு. சிறிது தண்ணீர் கொண்ட உணவு வயிற்றை நிரப்ப மட்டுமே உதவும். இத்தைகைய பழக்கமும் குழந்தை சாப்பிட மறுக்கும் போக்கை வலுப்படுத்தும். பிடிவாதம் பிடிக்கும் போக்கு அதிகரிக்கும்.

    குழந்தைகள் சாதத்தை விட ரொட்டி, இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றை எளிதாக சாப்பிடுவார்கள் என்ற உணர்வும் உள்ளது. கை வாய் ஒருங்கிணைப்பு நன்றாக இருக்கும் குழந்தைக்கு, அரிசி சாதத்தை ஒரு உருண்டையாக்கி சாப்பிடுவது குழந்தைக்கு கடினமாக இருக்கலாம், எனவே அரிசியை பருப்புடன் கலந்து சிறிய உருண்டைகளாக ஆக்குவது குழந்தைகளை சாப்பிட தூண்டும்.

    சாதாரண வளர்ச்சி முறைகள், வளர்ச்சி வேகம், குழந்தைக்கு பசிக்கும் நேரம், செரிமானமாவதற்கு எடுக்கும் நேரம் போன்ற புரிதல்கள், குழந்தைகளை புரிந்து கொள்ள சிறந்த டானிக் என்பதை புரிந்துகொள்வது பெரிதும் உதவும். குழந்தை மருத்துவரைச் சந்தித்து, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தொடர் எடைகள் மற்றும் உயரங்களைத் திட்டமிடுவது குழந்தையின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை மற்ற சக குழுவிற்கு இணையாக வைத்திருக்க நீண்ட தூரம் செல்லும்.

    • நண்பர்கள் தேர்வில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
    • நல்ல நட்பிற்கு இலக்கணமே பகிர்ந்து கொள்ளுதல்தான்.

    பலரது வாழ்வில் அவர்கள் அதிக நேரம் செலவழிப்பது நண்பர்களுடன்தான். அதனால் நண்பர்கள் தேர்வில் மிக கவனமாக இருக்க வேண்டும். அதற்கு வழிகாட்டுகிறது, இந்த தொகுப்பு...

    நீ இல்லாத இடத்தில், உன்னைப் பற்றி நல்லவிதமாக கூறுபவன் நல்ல நண்பன். பிறர் உன்னைப் பற்றித் தவறாகப் பேசும்போது, நல்ல நண்பன் அதை மறுத்துப் பேசுவான். அப்படிப்பட்டவர்களையே நாம் நல்ல நண்பனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். உனக்கு கஷ்டம் வந்தபோது கை கொடுப்பவர்கள், நல்ல நட்புறவை பேணுபவர்கள்.

    நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அத்தனை பேரும் நமக்கு நல்லது செய்பவர்கள் என்று ஒருபோதும் எதிர்பார்க்காதீர்கள். அப்படிப்பட்ட சூழலில் உங்களுக்கு துணையாய் நிற்பவர்களை, ஒருபோதும் உதாசீனப்படுத்தாதீர்கள்.

    பகிர்ந்து கொள்ளுதல் ஒரு நல்ல பண்பு. நல்ல நட்பிற்கு இலக்கணமே பகிர்ந்து கொள்ளுதல்தான். அதனால் நல்லதை பகிர்ந்து கொள்ளும் நண்பர்களை உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள்.

    தாய், தந்தையிடம் கூட ஆலோசனை செய்ய முடியாத பல விஷயங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஒரு தெளிவை, தீர்வை பெறலாம். அதேசமயம், அறிவில் கூர்மையான, அன்பில் நிறைவான நண்பர்களை சேர்த்து கொள்வது அவசியம்.

    பகிர்ந்து கொள்ளுதல் ஒரு நல்ல பண்பு.

    நல்ல நட்பிற்கு இலக்கணமே பகிர்ந்து கொள்ளுதல்தான்.

    • சமூக விரோத கும்பல்களின் வியாபார சந்தையே கல்லூரி மாணவர்கள்தான்.
    • போதை கும்பலின் வலையில் உங்கள் பிள்ளைகள்கூட சிக்கலாம்.
    • தனிமையில் இருக்கும் உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள்.

    போதைப்பொருளை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்கிறது. அப்படி இருந்தும் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை குறைக்க முடியவில்லையே.

    நாளைய எதிர்காலம் என்று நம்பும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் கைகளிலும் போதை பொருட்கள் விளையாடுகிறதே!

    சில குறிப்பிட்டவகை மாத்திரைகள் போதை தருகிறது என்று கூறி அதுபோன்ற மாத்திரைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்து அதை பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு வினியோகம் செய்யும் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது.

    இதுபோன்ற சமூக விரோத கும்பல்களின் வியாபார சந்தையே கல்லூரி மாணவர்கள்தான். ஏதோ ஒரு காரணத்துக்காக பணத்தேவை ஏற்படும் கல்லூரி மாணவர்களிடம் நெருங்கி பழகி, அவர்களுக்கு மது, கஞ்சா பழக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள். அவற்றுக்கு அடிமையாகும் அப்பாவி மாணவர்களை, தங்களது போதைப்பொருள் வியாபார முகவர்களாக மாற்றி விடுகிறது இந்த கும்பல்.

    இதுபோன்ற மாணவர்கள் மூலம் மற்ற மாணவர்களிடமும் தங்களது போதை பொருட்களை விற்க தொடங்குகிறார்கள். இதற்காக மாணவர்கள் மத்தியில் தனியாக வாட்ஸ்-அப் குழுவையும் ஏற்படுத்தியுள்ளனர். இதுபோன்ற பல வாட்ஸ்-அப் குழுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் போலீசார் கண்காணிக்க வேண்டும்.

    போலீசார் நடவடிக்கை எடுக்கும்போது அதில் அப்பாவி மாணவர்களும், சிலரும்தான் கைதாகிறார்கள். ஆனால் அவர்களுக்கு பின்னால் இருக்கும் சமூக விரோத கும்பல் தப்பி விடுகிறது. போலீசாரும் கிடைத்தவர்களை கைது செய்துவிட்டு, அத்துடன் வேறு பணிகளுக்கு சென்று விடுகிறார்கள்.

    கல்லூரி நிர்வாகங்களும் தங்களது மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, போதை என்னும் படுகுழியில் வீழ்ந்து விடாது அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

    ஏனெனில் இதுபோன்ற சம்பவங்களில் சிக்கும் சில மாணவர்களால் அந்த கல்வி நிறுவனங்களுக்கும் தேவையற்ற பிரச்சினை ஏற்படுகிறது. எனவே கல்வி நிறுவனங்களும் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    அதுபோல போதைப்பொருட்கள் ஒழிப்பில் பெற்றோர்களும் இதில் பெரும் பங்கெடுக்க வேண்டும். போதை கும்பலின் வலையில் உங்கள் பிள்ளைகள்கூட சிக்கலாம். எனவே தனிமையில் இருக்கும் உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள்.

    அவர்கள் பாதை மாறுவதுபோல் இருந்தால், அவர்களிடம் அன்பாய் பேசி அவர்களை நல்வழிப்படுத்துங்கள்.

    சில நிமிட போலியான இன்பத்துக்கு, பொன்னான வாழ்வை, உயிரை இழக்க வேண்டாம்.

    • குழப்பமான மனநிலையில் இருக்கும்.
    • குழந்தையின் பேச்சு குழறும்.

    நீரிழிவு நோய் உள்ள குழந்தைக்கு ரத்தச்சர்க்கரை குறைய ஆரம்பித்துவிட்டால், குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும். அதிகம் பசிக்கும், வியர்க்கும், படபடப்பு வரும், நாக்கு உலரும், உடல் நடுங்கும்..

    குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும். குழப்பமான மனநிலையில் இருக்கும். இன்னும் சொல்லப்போனால், குடிபோதையில் நடப்பது போன்ற நிலையில் இருக்கும். மயக்கம் வரும். சில வேளைகளில் வலிப்பும் வரலாம்.

    பொதுவாக, மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது. ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை குறைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும், என டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    எனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால், உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையை தடவிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தை பள்ளியிலும் சொல்லி வைப்பது நல்லது, எனவும் டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

    • ஒருவரது குறட்டை சத்தம் யாரையும் தூங்க முடியாமல் செய்துவிடும்.
    • ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

    ஒருவரது குறட்டை சத்தம் அந்த அறையில்- சில சமயங்களில் அந்த வீட்டில், யாரையும் தூங்க முடியாமல் செய்துவிடும். குறட்டை விடுவதால் அவர்களாலேயே தொடர்ந்து தூங்க முடியாது. அப்படி வரும் தூக்கமும் ஆழ்ந்த தூக்கமாக இருக்காது.

    உடல் எடை அதிகரிக்கும்போதும், வயது ஏற ஏறவும் குறட்டை ஏற்படுகிறது. ஒருவித ஒவ்வாமையாலும் சைனஸ் பிரச்சினையாலும், மூக்கிலிருக்கும் மெல்லிய தடுப்புச் சுவர் வளைவதாலும், தொண்டையிலும் அடிநாக்கிலும் தசைநார்கள் வலுவிழப்பதாலும், குடிப்பழக்கத்தாலும், தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதாலும், தொண்டையில் உள்ள சதை தடிப்பதாலும் குறட்டை ஏற்படலாம். அதுவே குழந்தைகளுக்கு என்றால் டான்சில் அல்லது அடினாய்டுகள் ஏற்படுவதால் உள்நாக்கு நீண்டு, காற்று செல்லும் வழியை தடுத்தாலும் குறட்டை ஏற்படலாம்.

    பொதுவாகவே குறட்டை விடுபவர்களுக்கு தூக்கக்குறைவு ஏற்பட்டு, அடுத்த நாள் வேலைக்குச் செல்லும்போது அல்லது வேலையில் இருக்கும்போது கண்ணைச் செருகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

    இதயத் தசைகள் விரிவடையும். சில வேளைகளில் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றுக்கும் இது காரணமாக அமையலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    • பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்.
    • புளு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    குளிர் காலத்தில் பொதுவாக குழந்தைகள், பெரியவர்கள் சளி, இருமல் தொந்தரவால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். பருவமழை காலம் முடிந்தவுடன் குளிர், பனி தற்போது அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், சிறுவர்கள் சுவாச தொற்று கிருமியால் பாதிக்கப்படுகிறார்கள். சென்னையில் வழக்கத்தை விட இந்த ஆண்டு சுவாச பாதை தொற்று அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    பள்ளி செல்லக்கூடிய குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு இருமல், தும்மல் வரும்போது, எளிதாக பரவி விடுகிறது. எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி, நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை மற்றும் தனியார் கிளினிக்குகளில் சளி, இருமல் பாதிப்புடன் குழந்தைகள் அதிகம் வருவதாக தெரிவிக்கின்றனர்.

    வழக்கத்தை விட அதிகமாக குழந்தைகள் சிகிச்சைக்கு வருவதால் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி இயக்குனர் எழிலரசி கூறியதாவது:-

    குழந்தைகளுக்கு நவம்பர், டிசம்பர் மாதத்தில் சுவாச தொற்று பாதிப்பு வழக்கமாக ஏற்படும். சளி, இருமல், தொண்டை வலியுடன் மூச்சு விடவும் சிரமம் ஏற்படும். லேசான காய்ச்சல் பாதிப்பு போன்ற அறிகுறிகளுடன் இந்த தொற்று பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இந்த வருடம் சற்று கூடுதலாக வருகிறார்கள்.

    இது ஒரு வைரஸ் கிருமிதான். இதனால் பயப்பட தேவையில்லை. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் சுவாச தொற்று கிருமி குறைந்து விடும். ஆனால் இந்த ஆண்டு இந்த மாதமும் கூடுதலாகி வருகிறது. மருத்துவமனைக்கு சராசரியாக தினமும் 1200 குழந்தைகள் வருகிறார்கள். தற்போது சற்று கூடியுள்ளது. சுவாச தொற்று பாதிப்பு ஒரு வாரத்தில் குணமாகி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் டாக்டர் செந்தில்பிரபு கூறியதாவது:- பனி, குளிர் காலத்தில் சுவாச பாதை தொற்று கிருமி குழந்தைகளை தாக்கும். குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, இருமலுடன் மூச்சு திணறலும் சில குழந்தைகளுக்கு ஏற்படும். சிலருக்கு வீசிங் வரும். அத்தகைய பாதிப்பு உள்ள குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

    ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் வழக்கமான அளவில்தான் பாதிப்பு உள்ளது. 4 நாட்கள் காய்ச்சல் பாதிப்பு இருந்து சரியாகும். ஆனாலும் சளி, இருமல் 2 வாரம் வரை கடுமையாக இருக்கும். இந்த பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க கூட்டமான இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிவது நல்லது. புளு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க பள்ளி செல்லாமல் வீட்டில் இருப்பது நல்லது. குளிர் காலத்தில் பரவக் கூடிய இந்த வைரசால் உயிருக்கு ஆபத்து இல்லை. சிறுவர்களை மட்டுமின்றி முதியவர்களையும் இந்த வைரஸ் தாக்கக் கூடியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2 லட்சம் பேர் இந்தியாவில் மரணம் அடைகிறார்கள்.
    • ஒட்டுமொத்த மக்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள்.

    இந்தியாவுக்கு 'இளமையான நாடு' என்று பெயர் இருக்கிறது. மக்கள் தொகையை பொறுத்தவரை இந்தியாவுக்கு சாதகமான நிலைதான் உள்ளது. 8 முதல் 24 வயதுக்குள் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது, சீனாவை விட இந்தியா இளமையாகத்தான் இருக்கிறது. இது மகிழ்ச்சி தந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 4 லட்சம் குழந்தைகள், பிறந்த 24 மணி நேரத்துக்குள் இறந்து போவதாக சர்வதேச அமைப்பான 'சேவ் த சில்ரன்' கூறுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2 லட்சம் பேர் இந்தியாவில் மரணம் அடைகிறார்கள். இதற்கெல்லாம் ஒரே காரணம் சரியான உணவு இல்லாததுதான்.

    2008-ம் ஆண்டு தகவலின்படி இந்தியாவில் 800 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

    இந்தியாவில் 45 கோடி பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். ஒட்டுமொத்த மக்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள். அப்படி இருந்தும் கூட மொத்த பட்ஜெட்டில் குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    எனவே நிதியை இன்னும் அதிகப்படுத்தி குழந்தைகள் நலத்திட்டங்களையும், அவர்களுக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்காமல் இல்லை. எனவே இதுசம்பந்தமான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டியது அவசியமானது.

    • குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளை கொண்டாட வேண்டும்.
    • குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூலமே பெண் குழந்தைகளுக்கு அநீதி நடந்து வருகிறது.

    பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் காணப்பட்டாலும் பெண்களுக்கான உரிமைகளும், தேவைகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பெண்களை கடவுளாக கருதும் நமது நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான அநீதிகளும் அதிகரித்து வருவது நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. பெருகி வரும் பாலியல் குற்றங்களும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் நாட்டின் சமநிலையை சீர்குலைக்கிறது என்றே சொல்லலாம். பெண் குழந்தைகளும் இந்த நிகழ்வுகள் மூலம் பாதிக்கப்பட்டு வருவது வருந்தத்தக்கதே. இவ்வாறு பல சமூக சிக்கல்களுக்கு இடையேயும் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    நாட்டின் நிலை வளர்ச்சி அடைய பெண் குழந்தைகளின் உரிமைகள், பெண் கல்வி போன்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும். குறிப்பாக குழந்தை திருமணம் போன்ற நிகழ்வுகள் முற்றிலும் இல்லாமல் போக வேண்டும். இதற்காக அரசும் சட்டம் இயற்றி உள்ளது. அறியாத குழந்தை பருவத்தில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு துணை புரியும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் சட்டத்தின் பார்வையில் தண்டனைக்கு உரியவர்களே என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.

    18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்பவர்களை போக்சோ சட்டத்தின் படி சிறையில் அடைக்கவும், 10 வயதிற்கு குறைவான பெண் குழந்தைகளை கடத்தினால், அவர்களுக்கு ஜாமீனில் வெளிவராதபடி கடுமையான தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசு பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை பெண் குழந்தைகளுக்காக நிறைவேற்றினாலும், குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளை கொண்டாட வேண்டும்.

    மாற்றங்கள் குடும்பங்களில் இருந்து வர வேண்டும். ஆனால் அதற்கு மாறாக தன் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் மூலமே பெண் குழந்தைகளுக்கு அநீதி நடந்து வருகிறது. இந்த நிலை மாறி, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு, சம உரிமை, கல்வி என அனைத்தும் கிடைக்கப் பெறும் போது சமூகத்தில் பெண்களின் நிலை உயரும்.

    இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கிலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், 2008-ம் ஆண்டு இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஜனவரி 24-ந் தேதியை (இன்று) தேசிய பெண் குழந்தைகள் தினமாக அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    • குழந்தையின் தேவையை அறிந்து தாய் உணவளிக்க வேண்டும்
    • குழந்தைகள் என்பவர்கள் புதிதாய் பூத்த மலர்கள்

    பெரும்பாலான ஏன் அனைத்துக் குழந்தைகளிடமும் பொதுவாக காணப்படும் ஒரு பழக்கம் வாயில் கையை வைப்பது; எப்பொழுது பார்த்தாலும் எந்நேரம் ஆகினும் வாயில் கையை வைத்துக் கொண்டே திரிந்து கொண்டு இருப்பர். குழந்தைகள் வாயில் கை வைப்பதற்கான காரணங்களும் அதை தடுக்கும் முறைகள் பற்றியும் படித்து அறியலாம்.

    அனைத்து மாற்றங்களும், புதிய பொருட்களும் குழந்தையின் மனதில் பய உணர்வை ஏற்படுத்துகின்றன. இந்த பய உணர்வை போக்க குழந்தைகள் தங்கள் கையை வாயில் வைத்துக் கொள்கின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு எது கை எது வாய் என்று கூட தெரியாது; ஏதோ பயத்தில் தானாக இது மாதிரி வைத்துக் கொள்கின்றன.

    பய உணர்வை போன்று குழந்தைகளுக்கு பசி என்ற உணர்வு ஏற்பட்டாலும் குழந்தைகள் தங்கள் கையை வாயில் வைத்துக் கொள்வர்; குழந்தைகளின் அழுகை, வயிற்றின் அளவு, இம்மாதிரி கையை வாயில் வைத்தல் போன்ற அறிகுறிகளின் மூலம் குழந்தையின் தேவையை அறிந்து தாய் உணவளிக்க வேண்டும்; பசி நீங்கினால், குழந்தைகள் கையை வாயில் வைக்கும் அவசியம் இல்லாமல் போய்விடும்.

    குழந்தைகள் தூங்கும் பொழுது கையை அடிக்கடி வாயில் வைத்துக் கொள்வர்; ஏனெனில் அவர்களுக்கு தூங்கும் பொழுது ஒருவித பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும்; நீங்கள் எத்தனை முறை கையை எடுத்து விட்டாலும் மீண்டும் மீண்டும் குழந்தைகள் வாயில் கையை வைத்துக் கொண்டு இருப்பதற்கு அவர்கள் மனதில் உள்ள பயம், பசி போன்ற உணர்ச்சிகளே!

    குழந்தைகளை அதிக நேரம் தனித்து விட்டாலோ, அதிக நேரம் பிரிந்து வேறு எங்கும் சென்று விட்டாலோ குழந்தை பயம், பதட்டம் மற்றும் அன்னையை காணவில்லை என்ற ஏக்கம், குழந்தைக்கு அசௌகரியம் ஏற்படல் போன்ற காரணங்களால் கையை எடுத்து வாயில் வைத்துக் கொள்ளும். இந்த உணர்வு தனித்து விடப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடியதே! ஏன் இத்தனை வளர்ந்த நாமே தனித்து விடப்பட்டால் நகத்தை கடிப்பது, உதடை பிய்ப்பது என எதையாவது செய்து கொண்டிருப்போம்.

    குழந்தைகளுக்கு பல் முளைக்கும் சமயத்தில் அதையாவது கடித்துக் கொண்டே இருக்க வேண்டும்; மெல்ல வேண்டும் போன்று இருக்கும்; அதனால் அந்த சமயத்தில் குழந்தைகள் தங்கள் கையை முழுவதுமாக வாய்க்குள் விட்டு கொள்கின்றனர். தங்களுக்கு ஏற்படும் உணர்வுகளின் அர்த்தம் மற்றும் என்ன செய்வது என்று அறியாமல் குழந்தைகள் குழந்தைத் தனமாக செய்யும் விஷயம் தான். இதற்கு குழந்தைகளை அடித்து திட்டாமல் அன்பு காட்டி அவர்களின் பய மற்றும் மற்ற உணர்வுகளுக்கு நிவாரணம் அளிக்க முயலுங்கள்!

    குழந்தைகளின் இந்த கையை வாயில் வைக்கும் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று பார்க்கலாம்.

    குழந்தைகள் கை சூப்புவதை தவிர்க்க அவர்தம் கையில் ஏதேனும் பொம்மையை அளித்து, அவர்களை திசை திருப்ப முயற்சிக்க வேண்டும்; தூங்கும் பொழுதும் குழந்தையின் கையில் பிடித்துக் கொள்ள பொம்மை அல்லது உங்களை கட்டி அணைத்துக் கொள்ளுமாறு குழந்தையை தூங்க வைக்கலாம். பல் முளைத்தலின் பொழுது குழந்தைக்கு அதற்கென விற்கப்படும் பொம்மைகளை குழந்தையின் கையில் அளிப்பது, பழங்களை அளித்து கடிக்க செய்வது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

    குழந்தைகள் என்பவர்கள் புதிதாய் பூத்த மலர்கள்; ஒரு செடியை நட்டு வைத்து அது நன்கு வளர்ந்து பூத்துக் குலுங்க எத்தனை கவனம், பராமரிப்பு தேவையோ அதைவிட பல நூறு மடங்கு கவனத்தை உங்கள் குழந்தையை வளர்த்து பெரிய ஆளாக்குவதில் இருக்க வேண்டும். குழந்தைகள் பிறந்த தருணம் முதல் அவர்களின் செய்கைகளுக்கு அர்த்தம் அறிந்து செயல்படுங்கள்!

    ×