என் மலர்
குழந்தை பராமரிப்பு
- உலர் திராட்சையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
- குழந்தைகளுக்கு திராட்சை மிகவும் பிடிக்கும்.
உலர் பழங்களில் அனைவருக்கும் பிடித்தமானது உலர் திராட்சை. இவை குழந்தைகளுக்கு செய்யும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.
உணவுகளிலிருந்து பெற முடியாத அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உலர்திராட்சை மூலம் குழந்தைகளுக்கு கொடுக்க முடியும். குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுப்பது அவர்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
உலர் திராட்சையில் அதிக அளவு கலோரி, குளுக்கொஸ் மற்றும் பிரக்டோஸ் கொண்டுள்ளது. இது எடையை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் குழந்தையின் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
குழந்தைக்கு உலர் திராட்சை கொடுப்பதால் நினைவாற்றல் மேம்படும். மூளைக்கு ஊட்டமளிக்கும். செரிமானத்தை ஊக்குவிக்கும்.
காய்ச்சலின் போது உலர்ந்த திராட்சை ஊறவைத்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம். இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது.
உலர் திராட்சையை குழந்தைகளுக்கு எப்போது கொடுக்கலாம்?
குழந்தைகள் உணவை மெல்ல தொடங்கும் போது அல்லது 8 மாத காலத்துக்கு பிறகு உலர் திராட்சையை சாப்பிட கொடுக்கலாம். சிறிய குழந்தைக்கு கொடுக்கும் போது உலர் திராட்சையை ஊறவைத்து கூழ் போல் மசித்து கொடுக்கலாம்.
நாள் ஒன்றுக்கு 1 டீஸ்பூன் அளவு சாறு கொடுக்கலாம். குழந்தைக்கு உலர் திராட்சை கொடுக்கும் போது ஒவ்வாமை உண்டாகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
- சில நேரங்களில் குழந்தையின் அழுகைக்கான காரணம் புரியாது.
- குளிர்காலத்தில், குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்ட வேண்டிய அவசியமில்லை.
குளிர்ந்த காலநிலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குளிர் காற்று மற்றும் வீழ்ச்சி வெப்பநிலை பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனவே, ஒரு பெற்றோராக, உங்கள் பிள்ளை நோய்வாய்ப்படாமல் அவர்களைப் பாதுகாப்பதில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் முழுமையாக வளர்ச்சியடையாததால், மாறிவரும் வானிலை நிலையைச் சமாளிப்பது அவர்களுக்கு சவாலாக உள்ளது. மேலும், குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதை அறிவது கடினம். சில நேரங்களில் குழந்தையின் அழுகைக்கான காரணம் புரியாது. ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடியாமல் போகலாம். எனவே, குழந்தைக்கு எந்த பிரச்னையும் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்.
வறண்ட தோல், செதில் தோல், டயபர் சொறி, அசௌகரியம், கரடுமுரடான தோல், பொதுவான காய்ச்சல் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகள் இந்த குளிர்காலத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளை தொந்தரவு செய்யலாம். இது நடக்காமல் இருக்க குழந்தைகளுக்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
குளிர்காலத்தில், குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்ட வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஸ்பாஞ்ச் துடைப்பால் மெதுவாக துடைப்பதன் மூலம் உடலை சுத்தம் செய்யலாம். உங்கள் குழந்தையை குளிப்பாட்ட வேண்டும் என்றால், வெந்நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இது குழந்தையின் தோலின் பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். குழந்தைகளை எப்போதும் வெதுவெதுப்பான நீரில் குளிக்க பரிந்துரைக்கப்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தையை நோய்வாய்ப்படாமல் பாதுகாக்க இது மிகவும் முக்கியமானது.
குளிர்காலத்தில் வறண்ட சருமத்தைத் தவிர்க்க, புதிதாகப் பிறந்த குழந்தையை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். இந்த எண்ணெய் மசாஜ்கள் குழந்தையின் உடல் வெப்பநிலையை அதிகரித்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. குழந்தை மசாஜ் செய்ய உயர்தர இயற்கை எண்ணெய்களை மட்டும் தேர்வு செய்யவும். குழந்தைகளுக்கு பாதாம், ஆலிவ், அஸ்வகந்தா கலந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்
குளிர் காலநிலை காரணமாக குழந்தைகளின் மூக்கில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதற்கு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட நாசி சொட்டுகளைப் பயன்படுத்தவும். இது குழந்தை நாசியைத் திறப்பதை எளிதாக்குகிறது. எனவே, குளிர்ந்த காலநிலையில் நாசி சொட்டுகள் கிடைக்க வேண்டும், ஆனால் வழக்கமாக பயன்படுத்தக்கூடாது.
குளிர்ந்த காலநிலையில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க, பல ஆடைகளை அணிவதற்குப் பதிலாக குழந்தையின் தோலில் எரிச்சல் ஏற்படாத மென்மையான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கவும். சூடான ஆடைகளுடன், அவர்களின் தொப்பி மற்றும் கையுறைகளை அகற்ற மறக்காதீர்கள்.
குளிர்காலம் முழுவதும், உங்கள் குழந்தைக்கு குளிர்ந்த உணவுகளை ஊட்டுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். அவ்வப்போது தயாரிக்கப்பட்ட உணவை ஊட்டவும். எஞ்சிய உணவை தர வேண்டாம், ஏனெனில் இது அவர்களுக்கு நோயை தரும். இந்தக் குளிர்காலத்தில், குழந்தை மீது சூரியக் கதிர்கள் ஒவ்வொரு முறையும் படுகிறதா என்பதை உறுதி செய்து, குழந்தையை அழைத்துக் கொண்டு பத்து நிமிடம் வெளியில் நடப்பது அவர்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது.
- பற்களின் வேர் வளரும்போது, பற்கள் மேல் புறமாக வளரும்.
- முடி, நகம் போன்று பற்களும் ஒரு கடினமானத் திசுவாகும்.
பற்கள் குழந்தைகளுக்கு முளைக்கும் போதெல்லாம் காய்ச்சல் வரும். பற்கள் முளைக்கும்போது குழந்தைகள் கொஞ்சம் அதி தீவிரமாகவும் செயல்படுவார்கள்.
குழந்தைகள் தாயின் வயிற்றில் கருவாக இருக்கையிலே 6-8வது வாரத்திலேயே பால் பற்கள் தோன்றி விடுகின்றன. கருவில் 14-வது வாரம் நிறைவடையும்போது, ஈறுகளும் பால் பற்களும் குழந்தைகளின் உடலுக்குள் தோன்றிவிடும்.
தாயின் வயிற்றிலே தோன்றிவிடும் நிரந்தர பற்கள், பின் குழந்தையாக வெளிவந்ததும் 3 அல்லது 6 மாதங்களில் பற்கள் வெளியே முளைத்து வரத் தொடங்குகின்றன. பற்கள் வருவதன் அறிகுறிகள் வாயிலிருந்து உமிழ்நீர் வடிதல் வாயை நரநரவென்று கடித்துக் கொண்டிருத்தல் போன்ற அறிகுறிகள்.
ஈறின் உள்பகுதியில் உள்ள எம்பிரியானிக் செல்களில் இருந்து பற்கள் தோன்றி, ஈறினைத் துளைத்து வெளிவருகிறது. முடி, நகம் போன்று பற்களும் ஒரு கடினமானத் திசுவாகும். இவை நரம்பு கிளைகளின் வேர்களைப் பிடித்துக் கொண்டு வளருகின்றன. பல் முளைக்கும் நிலையானது 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு வெளியே வருகின்றன.
குழந்தை பருவத்தில் ஒவ்வொரு 6 மாத இடைவெளியில், குறைந்தது 4 பற்கள் முளைக்கின்றன. பற்களின் வேர் வளரும்போது, பற்கள் மேல் புறமாக வளரும். 8 மாதம் - 6 வயது வரை, பற்கள் வேகமாக வளருகின்றன. ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு பற்கள் விரைவாகத் தோன்றி, விரைவாக வளர்கின்றன.
- மூத்த குழந்தையை 'நீதான் எங்களது செல்லம்' என்று அவ்வப்போது கொஞ்சுவது அவசியம்.
- ஒரு 'பாப்பா' வர இருப்பதாக அவர்களிடம் சொல்லி, சகோதர பாசத்தை ஏற்படுத்தலாம்.
குடும்பத்தில் ஏற்கனவே குழந்தைகள் உள்ள நிலையில், புதிதாக மற்றொரு குழந்தை பிறக்கப்போவது பெரியவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதே சமயம், மூத்த குழந்தைகள் தங்களுக்கு இதுவரை அளிக்கப்பட்ட முக்கியத்துவம் குறைவதாக உணர்வார்கள். அவர்களது மனம் அதை எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை. மனதளவில் ஒதுக்கப்பட்டவர்களாக உணரும் அவர்கள், தங்கள் மீது பெரியவர்களின் கவனத்தை திருப்பும் வகையில் நிறைய குறும்புகளில் ஈடுபடுகிறார்கள்.
இரண்டாவது குழந்தையின் வரவு, வீட்டில் உள்ள முதல் குழந்தையின் மகிழ்ச்சியான உலகத்தில் மாற்றங்களை உருவாக்கும் என்பதை, பெற்றோர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். அந்தச் சூழலில் பெற்றோர் நடந்து கொள்ளும் விதம் பற்றி, குழந்தை உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளின் தொகுப்பை இங்கே பார்ப்போம்.
இரண்டாவது குழந்தை உருவான ஏழு மாதங்களில், முதல் குழந்தையிடம் தம்பி அல்லது தங்கை வர இருப்பது பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். குழந்தை பிறப்பதற்கு முன்பாக, அதற்கான துணிகள், இதர பொருள்கள் வாங்க கடைக்கு போகும்போது, முதல் குழந்தையை உடன் அழைத்துச் செல்லலாம். பிறக்க உள்ள குழந்தையின் ஆடைகளை, அவர்கள் தேர்வு செய்யும்படி சொல்லலாம். பிறக்கப்போகும் குழந்தைக்கான பெயரைக்கூட முதல் குழந்தையே தேர்வு செய்ய சொல்லி பாச உணர்வை உருவாக்கலாம்.
இரண்டாவது குழந்தை பிறக்க உள்ள சூழலில், மூத்த குழந்தைகள் உளவியல் ரீதியாக தங்கள் மேல் கவனத்தை ஈர்க்க, அவர்கள் குழந்தைப் பருவத்தில் செய்தவற்றை செய்ய முயல்வார்கள். டம்ளரில் பால் அருந்துவதை விட்டு, புட்டியில் அருந்த முயற்சிப்பார்கள். அதிகமாக அடம் பிடித்து அழுவார்கள். இந்தச் சூழலில் பெற்றோர் அவர்களை மென்மையாக கையாண்டு, பிறக்க உள்ள குழந்தை அவர்களுக்கு துணையாக வர இருப்பதை உணர்த்தலாம்.
இளைய குழந்தைக்கு, மூத்த குழந்தைகளே பல விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு பொறுப்புணர்வை வளர்க்கலாம். தாயின் மேடான வயிற்றை குழந்தைகள் தொட்டுப் பார்க்க ஆசைப்படும் சமயங்களில் மென்மையாக அதை தொட அனுமதித்து, பாச உணர்வை விதைக்கலாம். அவர்களுக்கு துணையாக வர உள்ள தம்பி அல்லது தங்கைக்கு, அவர்கள்தான் பாதுகாப்பாகவும், வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.
கரு உருவான நான்காவது மாதத்தில் இருந்தே மூத்த குழந்தையை 'நீதான் எங்களது செல்லம்' என்று அவ்வப்போது கொஞ்சுவது அவசியம். அவர்களைப் போன்றே ஒரு 'பாப்பா' வர இருப்பதாக அவர்களிடம் சொல்லி, சகோதர பாசத்தை ஏற்படுத்தலாம். பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும்போது, மூத்த குழந்தைகளிடம், 'திரும்பி வரும்போது குட்டி பாப்பாவுடன் வருவேன்' என்று கூறிச் செல்வது அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும்.
- இன்றைய காலத்தில் குழந்தைகள் ‘ஜங்க் புட்' உணவுக்கு மயங்கி கிடக்கிறார்கள்.
- இந்த உணவுகளால் ஏற்படக்கூடிய எதிர் மற்றும் பக்க விளைவுகள் ஏராளம்.
'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற தாரக மந்திரத்தின்படி தரமான ஊட்டச்சத்துகள் நிறைந்த பலவிதமான உணவுகளை ருசியாக சமைத்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ரசித்து, ருசித்து உண்ணும் ஒவ்வொரு கவளமும் ஆரோக்கியம் சார்ந்ததாகவே இருந்து உள்ளது. ஆனால் தற்போது நிலமை தலைகீழாக மாறிவிட்டது. ஆம், 'குப்பை உணவு' என்ற பொருள் கொண்ட 'ஜங்க் புட்'டை தற்போது, நாம் 'நவீன மாடர்ன் உணவு' என்று பெயரிட்டு சாப்பிட்டு, குழந்தைகளுக்கும் பழக்கிக்கொண்டிருக்கிறோம். இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே 'ஜங்க் புட்' உணவுக்கு மயங்கி கிடக்கிறார்கள் என்பதே உண்மை.
ஆரோக்கியமாக வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளை தவிர்த்து கடைகளில் விற்பனை செய்யப்படும் துரித உணவுகள், சாட் வகைகள், பீட்ஸா, பர்கர், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ், கார்பனேட்டட் குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருக்கும் இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு நிறைந்த நொறுக்குத்தீனிகள் எல்லாமே இந்த வகையை சார்ந்தவையாகும். இவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் சாதகம், பாதகம் குறித்து மருத்துவர், பிரபல ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் இல்லத்தரசிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர்.
உடல், மனவளர்ச்சி தடைபடும்
ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஆர்.ஜெயந்தி:-
நாவிற்கு சுவையாகவும், எளிதாகவும், விரைவாகவும் கிடைப்பதால் துரித உணவுகள் குழந்தைகளிடையே குறிப்பாக பள்ளி சிறுவர்கள் விரும்பி உண்ணக்கூடிய உணவாக அமைகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தேடிச்சென்று விரும்பி உண்பது அதிகரித்துவிட்டது. இப்படிப்பட்ட உணவுகளால் ஏற்படக்கூடிய எதிர் மற்றும் பக்க விளைவுகள் ஏராளம். இந்த உணவுகளின் சுவை, நிறம், திடம் ஏற்றக்கூடிய ரசாயனங்கள் சேர்க்கப்படுவதாலும் கொழுப்பு மற்றும் மாவுச்சத்து அதிக அளவில் இருப்பதாலும் உடல் நலக்கேடு உருவாகிறது. இதனை அடிக்கடி விரும்பி உண்ணும் குழந்தைகள் உடல் பருமன் நோய்க்கு ஆளாகிறார்கள். இதுவே பிற்காலத்தல் இவர்களுக்கு தொற்றா நோய்கள் என்று அழைக்கப்படும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூளையில் ரத்தம் உறைதல் (ஸ்ட்ரோக்) மற்றும் சீறுநீரக செயல் இழப்பு போன்ற நோய்கள் வருவதற்கு முதல் மூலக்காரணியாக அமைகிறது.
மேலைநாடுகளில் நடந்த ஆய்வுகளில் துரித உணவு அதிகம் உண்ணும் சிறுவர்களுக்கு அறிவுத்திறன் குறைவாக இருப்பதாக அறியப்படுகிறது. இதைத்தவிர நினைவாற்றல் குறைதல், உடல் பருமன், மனச்சோர்வு ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. துரித உணவுகள் சுவையாக இருப்பதால் குழந்தைகள் அதற்கு அடிமையாகும் நிலையும் ஏற்படுகிறது. உடல், மனவளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து இவ்வகை உணவுகளில் இல்லாமல் இருப்பதால், உடலும், மனவளர்ச்சியும் தடைபெறுவது ஒரு பெரிய சவாலாக அமைகிறது. எனவே துரித உணவுகளை குழந்தைகள் உண்ணாமல் தடுப்பது பெற்றோர்களின் மிகப்பெரிய கடமையாகும்.
அலர்ஜியும், அஜிரணமும்
நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ்:-
'ஜங்க் புட்' என்று அழைக்கப்படும் பீசா, பர்க்கர் போன்ற உணவு வகைகளில் மைதா, அஜினோ மோட்டோ போன்ற பொருட்கள் அதிகம் சேர்ப்பதால், இந்த மாதிரியான உணவு வகைகளில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு தொடர்ந்து இதுபோன்ற உணவுகளை கொடுத்து வந்தால் குழந்தைகள் அவற்றுக்கு அடிமையாகி விடுவதுடன், வீட்டில் தயாரிக்கும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட மாட்டார்கள். மாறாக குழந்தைகளுக்கு அஜிரணம் ஏற்படுவதுடன், அலர்ஜியும் ஏற்படலாம். குழந்தைகளை படிக்க வைக்கவும், சாப்பிடவும், தூங்குவதற்கும் ஜங்க் புட் உணவு வகைகளை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறுவதையும் பெற்றோர்கள் நிறுத்த வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை ருசியாக தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கி நோய், நொடி இல்லாமல் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
கெடுதல் என்று கூற முடியாது
புரசைவாக்கத்தைச் சேர்ந்த பேக்கரி ஊழியர் அப்துல் ஹமீது:-
பேக்கரியில் தினசரி விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் அளவு மற்றும் எண்ணிக்கையை பொருத்துதான் தினசரி தயாரிக்கப்படுகிறது. எனவே அன்றாடம் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் அன்றைக்கே விற்பனை செய்யப்பட்டு விடுகிறது. எனவே இதனை வாங்கி உட்கொள்பவர்களுக்கு எந்த கெடுதலும் ஏற்படுவதில்லை. இதனை வாங்கி கொண்டு வீடுகளுக்கு சென்று 2 நாட்களுக்கு பிறகு சாப்பிடுவதால் தான் கெடுதல் ஏற்படுகிறது. உடல்நலம் குன்றியவர்கள் கூட பேக்கரி பொருட்களை வாங்கி உட்கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. எனவே ஒட்டுமொத்தமாக பேக்கரி மற்றும் துரித உணவுகள் கெடுதல் என்று கூறிவிட முடியாது.
ஆரோக்கியத்திற்கு நல்லது
பெரியமேட்டைச் சேர்ந்த வியாபாரி காந்திலால் பண்டாரி:-
ஜங் புட் என்று அழைக்கப்படும் துரித உணவுகளை தவறாமல் சாப்பிடுவதால் உடல் பருமன், கல்லீரல், இதய நோய், நீரிழிவு, உடல் பருமன், மன அழுத்தம், தலைவலி, ரத்த அழுத்தம் மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இதில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. அதனால் தான் இது உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். மெதுவாக கொல்லும் கெட்ட கொலஸ்ட்ரால் இவற்றில் உள்ளது. உலகில் உள்ள மிகவும் ஆரோக்கியமற்ற உணவுகளில் ஒன்றாக ஜங் புட் இருப்பதால், அதிக சர்க்கரை கொண்ட தானியங்கள், சர்க்கரை பானங்கள், பதிவு செய்யப்பட்ட சூப்கள், சோடாக்கள், உறைந்த பிரஞ்சு பொரியல், ஐஸ்கிரீம், பீட்சா, பர்கர்கள் மற்றும் சாண்ட்வீச்சுகள் போன்றவை இந்த வகைக்குள் அடங்கும். இதனை சிறுவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
இயற்கை தந்த உணவுகள்
ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த இல்லத்தரசி ஜெனீபர்:-
இயற்கை தந்த உணவுப்பொருள்கள் அனைத்திலும் ஒருவித சுவை உண்டு. குறிப்பாக ஆப்பிள் பழமாகட்டும், பாகற்காய் பொரியலாகட்டும், எலுமிச்சை சாறாகட்டும் எல்லாவற்றையும் நினைக்கும் போதே அதன் சுவையை உணர்த்தும் வகையில் நம் மனதில் நிறைந்திருக்கும். இவை இயற்கை தந்த பொருட்கள். ஆனால், ஜங் புட் உணவுகள் எதிலும் அப்படியொரு இயற்கையான சுவையை எதிர்பார்க்க முடியாது. இந்த சுவை அனைத்துமே செயற்கையாக சேர்க்கப்படுபவை. இந்தவகை உணவுகள் குழந்தைகளை மீண்டும், மீண்டும் சாப்பிடச்சொல்லி தூண்டுகின்றன. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் உணவு பண்டங்கள் குறித்து மருத்துவர்கள் கூறுவதை கேட்டால் பயமாக இருக்கிறது. எனவே இப்போது பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளிடம் எடுத்துக்கூறி கொஞ்சம், கொஞ்சமாக மாற்றி வருகிறோம். இருந்தாலும் குழந்தைகளுக்கு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள உணவுகள் மீது அலாதி பிரியமாக இருந்து வருகிறது.
எந்த உணவில் ஊட்டச்சத்து உள்ளது?
கல்லூரி மாணவி பானுப்பிரியா:-
ஊட்டச்சத்து இல்லாத பீட்சா மற்றும் பர்கர் சாப்பிட வேண்டாம், பொதுவாக வெளியில் எதையும் வாங்கி சாப்பிட வேண்டாம் என்றெல்லாம் கூறுகிறார்கள். சரி நாங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறோம். தற்போது சாப்பிடும் எந்த உணவு தரமாகவும், ஊட்டச்சத்துடனும் இருக்கிறது?. ஆரோக்கியம் குறைவதற்கு வெறும் உணவு பொருட்கள் மட்டுமே காரணம் இல்லை. இருந்தாலும் பெரியவர்கள் சொல்படி, எண்ணெய் உணவுகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களை தவிர்த்து வருகிறோம். வீட்டில் சமைக்கப்படும் கீரைகள் மற்றும் தானிய உணவுகளை அதிகம் உட்கொள்கிறோம். ஆரோக்கியமாக இருப்பதாக உணருகிறோம். அனைவரும் கடைபிடிக்கவும் வேண்டுகோளும் விடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மென்மையான சிவப்பு தடுப்புகள் சிறிது மணி நேரத்தில் மறைந்து விடும்.
- சிவந்த தடுப்புகளாக சில சமயம் நீர் நிரம்பியும் கூட காணப்படலாம்.
குழந்தைகளிடையே பொதுவாக காணப்படும் ஒவ்வாமைகள் பற்றி இங்கு காண்போம்
* சிரங்கு ( எக்ஸிமா - Rash) - இது எரிச்சலூட்டும் துணி வகைகள், சோப்புகள், உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய, பெரும்பாலான குழந்தைகளைப் பாதிக்ககூடிய ஒவ்வாமையாகும்.இதனால் தோலில் சிவப்பு நிற மிகச்சிறிய புடைப்புகள் அல்லது வறண்ட சருமமாகவோ / செதில் செதிலாகவோ காணப்படும்.
* பேப்புலர் அர்டிகாரியா(Arteria) - அரிக்கக்கூடிய தடுப்புகள் உண்டாக்கும் இவ்வகையான ஒவ்வாமையானது பூச்சிகள், கொசுகள், மூட்டை பூச்சிகள் கடிப்பதனால் ஏற்படக்கூடியது. சிவந்த தடுப்புகளாக சில சமயம் நீர் நிரம்பியும் கூட காணப்படலாம்.
* படை நோய் (Hives) - உடலானது குறிப்பிட்ட ஓர் பொருளுக்கு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, நமது உடலில் 'ஹிஸ்டமைன்' எனப்படும் வேதிப்பொருள் உருவாகும். இதன் விளைவாக உடலில் இளஞ்சிவப்பு / சிவப்பு நிற திட்டுகள் தடித்த சிவப்பு இரத்த வளையத்தோடு காணப்படும்.
* உணவு ஒவ்வாமை(Food Allergies) - குழந்தை உண்ணும் உணவினால் மட்டுமின்றி , குழந்தை உண்ணாது தாய்ப்பால் வழங்கும் தாய் உண்ணும் உணவாலும் ஒவ்வாமை ஏற்படலாம். வாந்தி, வயிற்று போக்கு, மலத்தில் இரத்தம், இருமல், அரிப்பு, திட்டுகள் போன்றன உணவு ஒவ்வாமையின் அறிகுறிகள் ஆகும்.
ஒவ்வாமைக்கான மருத்துவம்
மென்மையான சிவப்பு தடுப்புகள் சிறிது மணி நேரத்தில் மறைந்து விடும். அரிப்புடன் அசௌகரியத்தைத் தரக்கூடிய ஒவ்வாமைகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட வேண்டும். பொதுவாக பின்வருவன பின்பற்றப்படலாம்.
* ஒவ்வாமை காரணிகளைத் தவிர்த்தல் (Avoiding Allergic Reactions) - குழந்தையின் தோலிற்கு எரிச்சல் தரக்கூடிய சோப்புகள், சோப் பவுடர்கள், வாசனை திரவ களிம்புகளை தவிர்க்க வேண்டும்.
* வாசனை அற்ற சுத்தப்படுத்திகளை பயன்படுத்துதல் (Use Odorless Cleanser) - மென்மையான வாசனை அற்ற சோப்பு கொண்டு கடுமையாக தேய்க்காமல் மென்மையாக குழந்தையை குளிப்பாட்ட வேண்டும் மற்றும் அதன் பின் நன்கு உடலை துடைக்க வேண்டும்.
* ஒரு சதவீத ஹைட்டிரோகாட்டிஸோன் பயன்படுத்துதல் (Use Hydrocortisone Cream) - பொதுவாக குழந்தைகளுக்கு பயன்படுத்த பாதுகாப்பானது என்றாலும் மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசித்தப்பிறகு எக்ஸிமா மற்றும் பிற ஒவ்வாமையினால் ஏற்படும் தோல்தடுப்புகளுக்கு ஹைட்டிரோகாட்டிஸோனைப் பயன்படுத்தலாம்.
* அரிப்பதை தவிர்க்கும் கை உறைகளைப் பயன்படுத்துதல் (Use Corrosion Resistant & Hand Coverings) - குழந்தைகள், மென்மையான குணமாகக் கூடிய தடிப்புகளை கூட அரிப்பினால் தங்கள் விரல் நகங்களால் சொரிந்து காயம் ஏற்படுவதை தடுக்க கை உறைகளை அணிந்து விடலாம்.
ஒவ்வாமை தடுப்பு முறைகள்
உங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தை ஒவ்வாமை அல்லது ஒவ்வாமை எதிர்விளைவுகளிலிருந்து தடுக்க சில வழிகள்...
* ஒவ்வாமை குறைவான துவைக்கும் பவுடரால், குழந்தையின் துணிகளைத் துவைத்தல்
* வாசனை அற்ற சோப், ஷாம்பு மற்றும் திரவ களிம்புகளைப் பயன்படுத்துதல்
* தூசி மற்றும் பூச்சிகளைத் தவிர்க்க, குழந்தையின் படுக்கை மற்றும் படுக்கை துணிகளை சுடு தண்ணீரில் ஒவ்வொரு வாரமும் துவைக்க வேண்டும்
* வீட்டினை சுத்தமாக வைத்து கொள்ளல்
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
ஒவ்வாமைக்கு வீட்டிலே மருந்துகள் / கை வைத்தியம் செய்து கொள்ளலாம் என்றாலும் பின்வரும் சமயங்களில் மருத்துவரை அணுக வேண்டும்.
* தடுப்புகள் நாளடைவில் பரவ ஆரம்பிக்கும் போதும், மோசமடையும் போதும்
* தோலில் தொற்றுகள், கொப்புளங்கள் காணப்படுதல், இரத்தம் வடிதல், நீர் ஒழுகுதல் போன்றவற்றின் போதும்
* தடுப்புகளுடன் காய்ச்சல், அதிகப்படியான அழுகை, குறைவான உண்ணல், சோம்பல், இருமல் போன்றவையும் உள்ள போதும்
* மூச்சு திணறல், சுவாசிக்க கஷ்டப்படுதல், உதடு / நாக்கில் வீக்கம் போன்றவை தீவிரமான நிலையை குறிக்கக்கூடியவை. இவ்வேளைகளில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த ஆலோசனை எங்கள் நிபுணர்களிடமிருந்து பெற்றிருந்தாலும். நீங்கள் கண்டறிந்த எந்தவொரு தீவிர அறிகுறிகளும் இருந்தால், முதலில் மருத்துவரை அணுகவும்.
- குழந்தைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை.
- நீண்ட அறிவுரைகளை கேட்பதற்கு குழந்தைகள் விரும்புவதில்லை.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் படிப்புடன் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள். ஆன்லைன் கல்வி முறையும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. மின்னணு சாதனங்களிலேயே மூழ்கி கிடப்பதால் பெற்றோருடன் செலவிடும் நேரம் குறைவாக உள்ளது. அதனால் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால் பெற்றோரிடமிருந்து போதிய ஆலோசனைகள் அல்லது வழிகாட்டுதல்களை பெற முடியாமல் தடுமாறும் நிலை நிலவுகிறது. பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பாசப்பிணைப்பும் பலவீனமடைந்துவிடுகிறது. சுயமாகவோ அல்லது தவறான நபர்களின் வழிகாட்டுதலின்படியோ செயல்பட்டு தவறான முடிவை எடுக்கிறார்கள். அதனை தவிர்ப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
குழந்தைகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்:
குழந்தைகளின் நடத்தையை புரிந்து கொள்வதற்கு அவர்களின் பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்களது விருப்பு, வெறுப்பு போன்றவற்றை புரிந்து கொள்வதற்கும் பெற்றோர் முயல வேண்டும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி, அவர்களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வது உறவை மேம்படுத்தும். இருவருக்குமிடையே வலுவான பாசப்பிணைப்பை உருவாக்கும். குழந்தைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையுமாகும்.
அறிவுரை வழங்குவதை தவிருங்கள்:
இன்றைய காலகட்டத்தில் நீண்ட அறிவுரைகளை கேட்பதற்கு குழந்தைகள் விரும்புவதில்லை. அவர்கள் தவறு செய்யும்பட்சத்தில் தவறுக்கான காரணங்களை சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர பழைய சம்பவங்களை பேசி அவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது. 'இனி இப்படி நடந்து கொள்ளாதே' என்று கடுமையுடன் கண்டிக்காமல் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கும் அறிவுரைகள் அவர்களை செம்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். சுருக்கமாகவும் அமைய வேண்டும். ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் அவர்களாகவே சுயமாக முடிவெடுப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தீர்வு காண முடியாத பட்சத்தில் அவர்களாகவே முன் வந்து ஆலோசனை கேட்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். இத்தகைய அணுகுமுறை பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பிணைப்பை மேம்படுத்தும். மீண்டும் அந்த தவறை செய்வதற்கான வாய்ப்பும் குறையும்.
காது கொடுத்து கேளுங்கள்:
பதின்ம வயதை எட்டும் குழந்தைகள் மனதில் சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். பெற்றோரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அவர்களிடத்தில் இருக்கும். அதற்கான வாய்ப்பை பெற்றோர் வழங்கினால் மட்டுமே அவர்கள் மனம் திறந்து பேசுவார்கள். பெற்றோரின் பார்வையில் அவர்கள் பேசும் விஷயங்கள் சாதாரணமாக தெரியலாம். அவர்களுக்குள் எழும் சந்தேகங்களுக்கு தீர்வை முன் வைத்தால் மட்டுமே தொடர்ந்து பெற்றோரிடம் ஆர்வமாக பேசுவதற்கு முயற்சிப்பார்கள். அவர்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்கவில்லை என்றால் நாளடைவில் பெற்றோரிடம் பேசும் நேரம் குறைந்து போய்விடும்.
குழந்தைகள் பேசும்போது கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காதீர்கள். கண் தொடர்பு அவசியமானது. அவர்களின் கண்களை பார்த்தவாறே அவர் களின் பேச்சை ரசித்து கேளுங்கள். குழந்தைகள் சில விஷயங்களை நேரடியாகச் சொல்லாமல், பேச்சுக்கு இடையே குறிப்பிடுவார்கள். அதனை பெற்றோர்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நேர்மறையான சம்பவங்களை சொல்லுங்கள்:
குழந்தைகளிடம் நேர்மறை எண்ணங்களை விதைக்கும் கதைகளை கூறலாம். தங்கள் வாழ்க்கையில் நடந்த நேர்மறையான சம்பவங்களை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளலாம். எதிர்மறையாக உணரக்கூடிய விஷயங்களை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக தாங்கள் செய்த தவறுகள், எதிர்பாராமல் நடந்த விபத்துகள், மனதை காயப்படுத்தும் கசப்பான சம்பவங்கள் போன்றவற்றை சொல்லக்கூடாது. நீங்கள் பகிரும் சம்பவங்கள் அல்லது கதைகள் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும்.
தினமும் நேரம் ஒதுக்குங்கள்:
குழந்தைகளிடம் தினமும் பேசுவது பெரிய விஷயமல்ல. தினமும் குறிப்பிட்ட நேரத்தை குழந்தைகளுக்காகவே ஒதுக்குவதுதான் சிறப்பானது. அந்த நேரம் அவர்களுக்கு உரியதாக மட்டுமே அமைய வேண்டும். அன்றைய நாளின் செயல்பாடுகள் முழுவதையும் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்றதாக அமைய வேண்டும். இது குழந்தைகளுடன் வலுவான பிணைப்பை உருவாக்க உதவும். பாதுகாப்பான சூழலையும் உணர்வார்கள். பெற்றோர்கள் தங்களுக்கு பக்கபலமாக இருப்பதாக அகம் மகிழ்வார்கள்.
கேட்ஜெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்:
பெரியவர்கள், குழந்தைகள் உட்பட பெரும்பாலானவர்கள் மொபைல் போன்கள், தொலைக்காட்சி அல்லது வீடியோ கேம் விளையாட்டுகளில் பொழுதை கழிக்கிறார்கள். அவை மன ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். நெருக்கமான உறவுகளுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பையும் குறைத்துவிடும். எனவே கேட்ஜெட் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது அவசியம். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இதனை பின்பற்ற வேண்டும். குழந்தைகளை பொறுத்தவரையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் எக்காரணம் கொண்டும் கேட்ஜெட் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் அவர்களின் கவனத்தை பதிய வைக்க வேண்டும். பெற்றோரும் அவர்களுடன் நேரத்தை செலவிடவேண்டும். இது குழந்தைகளுடன் ஆழமான பிணைப்பை வளர்க்க உதவும்.
- தன்னுடலைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தைப் புரியவைக்கலாம்.
- தாயே குழந்தையின் தோழியாக மாற வேண்டும்.
குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் சரியான தகவலைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம். பெற்றோர் உடலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உடலியல் பற்றிய இந்தத் தகவல்களை ஆண் குழந்தைகளுக்கு அப்பாக்களும் பெண் குழந்தைகளுக்கு அம்மாக்களும் சொல்லிக்கொடுப்பது சிறப்பு.
பெண் குழந்தைகள் வளர்இளம் பருவத்தை எட்டும்போதே அவர்களிடம் பருவம் அடைவது குறித்துப் பேச வேண்டும். அப்போது, உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிமுகம் செய்யலாம்.
பெற்றோர் கவனக்குறைவாகச் செய்யும் பல தவறுகள், குழந்தைகளை வேறு பாதைக்குக் கொண்டுசெல்கிறது. குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தரும் விஷயங்களின் ரோல்மாடலாக பெற்றோரே உள்ளனர். இதை ஒவ்வொரு பெற்றோரும் மனதில் கொள்ள வேண்டும். குளிப்பது, உடுத்துவது என்று பெற்றோரின் தனிமையை குழந்தைகளுக்கு மிகச்சிறு வயதில் இருந்தே புரிய வைக்க வேண்டும்.
பருவம் அடைவது பெண்ணுடல் உற்பத்திக்குத் தயாராகும் நிகழ்வு, பெருமைக்குரியது என்ற எண்ணத்தை உருவாக்குவது அவசியம். பெரும்பாலான பெண் குழந்தைகள் இதைப் பற்றிய தெளிவின்மையால் அவதிப்படுகின்றனர். அப்போது ஏற்படும் வலி, வெளியேறும் ரத்தம் ஆகியவற்றை பிரச்சனையாக உணர்கின்றனர்.
இந்த பயம் போக்க மருத்துவரீதியாக விளக்கம் அளிக்கலாம். இந்தக் காலகட்டத்தில் தன்னுடலைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தைப் புரியவைக்கலாம். எப்படிச் சொல்வது எனத் தயங்காமல், தாயே குழந்தையின் தோழியாக மாற வேண்டும்.
- மனதில் பல குழப்பங்களும் தோன்றும்
- ஆண் குழந்தையைக் குளிப்பாட்டும் வேலையை அப்பாக்கள் செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் சரியான தகவலைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம். பெற்றோர் உடலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உடலியல் பற்றிய இந்தத் தகவல்களை ஆண் குழந்தைகளுக்கு அப்பாக்களும் பெண் குழந்தைகளுக்கு அம்மாக்களும் சொல்லிக்கொடுப்பது சிறப்பு.
ஆண் குழந்தைகள் பருவ வயதை அடையும்போது உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்ட விஷயங்களைத் தந்தை புரியவைக்கலாம். இந்த வயதில் எதிர்ப்பாலினத்தவரைப் பார்க்கும் பார்வை, எண்ணம் எல்லாம் மாறும்.
மனதில் பல குழப்பங்களும் தோன்றும். இவற்றை ஆண் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டியது தந்தையின் கடமை. தாயை அடிமையாக நடத்தும் வீடுகளைச் சேர்ந்த ஆண் குழந்தைகள், தன்னோடு படிக்கும், பழகும் பெண்களை அடிமையாகப் பார்க்கின்றனர்.
மனதளவில் பெண்கள், ஆண்களைவிட உறுதியானவர்கள். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்துமுடிக்கும் திறமையும் பெண்களுக்கு உண்டு என்பதைப் புரியவைக்கலாம்.
பெண்ணின் பாசிட்டிவான விஷயங்களை ஆண் குழந்தைகளுக்குச் சொல்லும்போது, அவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும்.
10 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகளுக்கு சிறுநீர்ப்பையின் செயல்பாடுகள், விந்து வெளியேற்றம் பற்றி சொல்லிக்கொடுங்கள். 'பிறப்புறுப்பை எப்படிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்?', 'ஏன் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்?' என்பது குறித்தும் அப்பாக்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். சிறுவயதில், ஆண் குழந்தையைக் குளிப்பாட்டும் வேலையை அப்பாக்கள் செய்ய வேண்டும். அப்போதுதான் பின்னாளில் குழந்தை அப்பாக்களுடன் பேசுவதை சௌகரியமாக உணரும்.
ஆண் குழந்தையின் வித்தியாசமான செய்கைகள் பெற்றோருக்குத் தெரிந்த பிறகு குழந்தையால் இயல்பாக மற்ற வேலைகளைச் செய்ய முடியவில்லை என்றால், தாமதிக்காமல் மனநல மருத்துவரை அணுகுங்கள்.
- இரண்டு குழந்தைகளையும் சமமாக நடத்துவது அவசியம்.
- குழந்தையின் முக்கியத்துவம் குறையாமல் பார்த்துக் கொள்வது ஓர் கலை.
இரு குழந்தைகளுக்கு இடையே நிலவும் பகைமை உணர்ச்சி இயற்கையானது என்றாலும் அதற்கு குழந்தைகள் காரணம் அல்ல. பெற்றோர் இரு குழந்தைகளையும் நடத்துகின்ற விதமே அதற்குக் காரணம்.
பெற்றோர் இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொண்டவுடன் இரண்டு குழந்தைகளையும் சமமாக நடத்துவது அவசியம். முதல் குழந்தையின் முக்கியத்துவம் குறையாமல் பார்த்துக் கொள்வது ஓர் கலை. சின்ன சின்ன நடவடிக்கைகளின் மூலம் எளிதாக இரண்டு குழந்தைகளையும் சமமாக நடத்தலாம். தாய் பாப்பா தூங்கிக் கொண்டிருக்கும் போது முதல் குழந்தையை சற்று நேரம் மடியில் எடுத்து வைத்து பேச்சுக் கொடுத்து கொஞ்சலாம்.
முதல் குழந்தைக்குப் பிடித்தமான ஏதேனும் பொருட்களை வாங்கி வைத்திருந்து புதிய பாப்பா தூங்கும் சமயத்தில் ஆர்ச்சரியப்படுத்தும் வகையில் அளிக்கலாம். வெளியே குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது எதிர்படுவோர் புதிய குழந்தையைப் பற்றி மட்டுமே பேசினால் அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் முதல் குழந்தையைப் பற்றிய பேச்சும் வருமாறு பார்த்துக் கொள்ளலாம்.
இரண்டு குழந்தைகளுக்கும் ஏதேனும் வாங்கி வந்தால் அதை முதல் குழந்தையிடமே கொடுத்து நீ எடுத்துக் கொண்டு பாப்பாவுக்கும் கொடுத்து விடு எனக்கூறி முதல் குழந்தையின் முக்கியத்துவத்தை அதிகரிக்கலாம்.
இரண்டு குழந்தைகளும் சண்டை போட்டுக் கொண்டு பிரச்சணை பெரிதாகும் போது எப்போதும் சிறிய குழந்தைக்கு மட்டும் பரிந்து பேசுவதை நிறுத்திக் கொண்டு இருவருக்கும் பொதுவாகப் பேசலாம் அல்லது நடுநிலைமை வகித்து ஒருவரையும் திட்டாமல் இருக்கலாம். இது போன்று இன்னும் ஏராளமான முறைகளில் நடந்து கொள்வதன் மூலம் முதல் குழந்தையின் மீதான கவனம் குறையவில்லை என்பதை பெற்றோர் உணர்த்தி விடலாம்.
இவ்வாறு பெற்றோர்களால் சமமாக நடத்தப்படும் குழந்தைகளிடையே சகோதரப் பாசம் அதிகரித்து நல்லுறவு நீடிக்கும். உடன் பிறந்தோரிடம் நிலவும் இந்நல்லுறவு இரு குழந்தைகளின் மொழி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி ஆகியவற்றுக்கு துணைநிற்கும். அன்பு, பாசம் ஆகியவற்றின் ஆதாரமாக அமையும். விளையாட்டு, நகைச்சுவையுணர்வு ஆகியவற்றை வளர்க்க உதவும்.
- `சைல்டு க்ரூமிங்' (child grooming) என்பது அதிகம் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
- இன்றைய சூழலில் இன்டர்நெட் உபயோகத்தில் இருந்து சிறுமிகளை விலக்க முடியாது.
தங்களது குழந்தைகளுக்கு, நேரடியாக நடக்கும் பாலியல் வன்முறைகள் பற்றி எல்லா அம்மாக்களும் ஓரளவு தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால் இணையதள டிஜிட்டல் பிளாட்பாமில் பாலியல் வன்முறையாளர்கள் சிறுமிகளை எப்படி அணுகி வசீகரிக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அது பற்றி இந்தியாவில் பெரிய அளவில் விவாதங்களும் நடத்தப் படுவதில்லை. ஆனால் உலக அளவில் இது மிக முக்கியமான பிரச்சினையாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் `சைல்டு க்ரூமிங்' (child grooming) என்பது அதிகம் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
இன்றைய சூழலில் இன்டர்நெட் உபயோகத்தில் இருந்து சிறுமிகளை விலக்க முடியாது. ஆனால் ஆன்லைனில் பாதுகாப்பாக செயல்படுவதற்கு தேவையான பயிற்சியையும், வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு வழங்கலாம். குழந்தைகள் எந்த விதமான ஆன்லைன் பிளாட்பாம்களில் இயங்குகிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்திருக்கவேண்டும். முதிர்ந்தவர்கள் யாருடனாவது பழகுவதாக அறிந்தால் அதில் கவனம் செலுத்தி கண்காணிக்கவேண்டும். கிரிமினல்கள் `நடப்பது எதையும் பெற்றோரிடம் கூறக்கூடாது' என்று கூறியே க்ரூமிங் செய்வதால், பாதிக்கப்படும் சிறுமிகள் பெரும்பாலும் வாய்திறப்பதில்லை என்பதை பெற்றோர் புரிந்துகொள்ளவேண்டும். இந்த விஷயத்தில் சிறுமிகளை குறைசொல்லி குற்றவாளியாக்காமல், அதில் இருந்து அவர்களை மீட்கவே பெற்றோர் முன்வரவேண்டும்.
க்ரூமிங் செய்யப்பட்டு, மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமிகளிடம் காணப்படும் அறிகுறிகள்:
- பயம், பதற்றம், உறக்கமின்மை, விரக்தி, எரிச்சல் மற்றும் எல்லாவற்றையும் எதிர்த்தல்.
- விளையாட்டு மற்றும் பாடத்தில் திடீர் விருப்பக்குறைவு ஏற்படுதல்.
- இன்டர்நெட் மற்றும் இதர டிஜிட்டல் டிவைஸ்களின் பயன்பாட்டை திடீரென்று குறைத்தல் அல்லது அதிகரித்தல்.
- வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இன்டர்நெட், போன் மற்றும் இதர டிவைஸ்களை பயன்படுத்துதல்.
- தன்னைவிட முதிர்ந்தவரிடம் நட்பு பாராட்டுதல். ரகசிய முறையிலான பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளுதல்.
- பொய் சொல்லிவிட்டு வெளியே செல்லுதல், இருக்கும் இடத்தை அறிவிக்காமல் திடீரென்று மறைந்துவிடுவது, சந்தித்தது யாரை? சென்றது எங்கே? என்பதை எல்லாம் மறைப்பது.
- சாக்லெட் முதல் செல்போன் வரை பல்வேறு வகையான பரிசுகள் அவ்வப்போது புழங்குவது.
- வயதுக்கு மீறி பாலியல் ரீதியான செயல்பாடுகளை வெளிப்படுத்துவது, அதை பற்றி அதிகமாக பேசுவது.
- மதுவோ, போதைப் பொருட்களோ பயன்படுத்துவது.
.. இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கவனியுங்கள். அவர்களுக்கு தேவையான நம்பிக்கையை அளித்து, மனநல ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
கிரிமினல்கள், யாரை எல்லாம் எளிதாக க்ரூமிங் செய்து தன்வசப்படுத்துவார்கள் என்பது தெரியுமா?
சிறுமிகள் மட்டுமல்ல இளம்பெண்களும் க்ரூமிங் செய்யப்படலாம். புறக்கணிக்கப்படும் சிறுமிகள், சண்டையிடும் பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள் போன்றோர் எளிதாக இவர்களது வலையில் சிக்கிக்கொள்வார்கள். வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்க விரும்பும் பெண்களும், விலை உயர்ந்த பரிசுப் பொருட்களுக்கு அதிகமாக ஆசைப்படும் சிறுமிகளும் இவர்களது வசீகரிப்பு வலையில் வீழ்ந்துவிடுகிறார்களாம்.
இன்றைய சூழலில் இன்டர்நெட் உபயோகத்தில் இருந்து சிறுமிகளை விலக்க முடியாது. ஆனால் ஆன்லைனில் பாதுகாப்பாக செயல்படுவதற்கு தேவையான பயிற்சியையும், வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு வழங்கலாம்.
- குழந்தைகளுக்கு டீ, காஃபி பழகாமல் பால் குடிக்க பழகுங்கள்.
- குழந்தைகளுக்கு முட்டையை வேகவைத்து கொடுக்கலாம்.
குழந்தைகள் வளர்ச்சியில் பருவகாலநோய்களை தடுப்பது சிரமமானதாக இருந்தாலும் சரியான உணவை தேர்ந்தெடுப்பதன் மூலம் தொற்றுவராமல் தடுக்கலாம். தற்போது குளிர்காலம் என்பதால் குழந்தைகளுக்கு இயல்பாகவே காய்ச்சல், வைரஸ் தொற்று உண்டாக அதிக வாய்ப்புண்டு. இந்த தொற்றை எதிர்க்கும் வகையில் குளிர்காலத்தில் உணவின் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்ய வேண்டும். அப்படி குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய மிக முக்கியமான முதன்மையான உணவுகள் குறித்து பார்க்கலாம்.
சமையலறையில் இருக்கும் மசாலா பொருள்கள் எல்லாமே சமையலுக்கு சுவை கூட்ட மட்டுமே பயன்படுத்துவதில்லை. இவை உடலுக்கு எதிர்ப்புசக்தி தரக் கூடியது. அப்படியான பொருள்களில் முதன்மையானது மஞ்சள், பூண்டு, இஞ்சி, பட்டை, அன்னாசிப்பூ, இலவங்கம், கொத்துமல்லி விதைகள், சீரகம், மிளகு போன்றவை எல்லாமே குழந்தைகளின் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க கூடியவை. இந்த பொருள்கள் அதிகம் பயன்படுத்தும் உணவை பெரும்பாலும் குழந்தைகளுக்கு சமைத்து கொடுங்கள்.
அதிலும் குழந்தைகளுக்கு பால் தரும் போது மஞ்சள் மற்றும் மிளகுத்தூள் சிட்டிகை கலந்து கொடுக்கலாம். சீரகம்,அன்னாசி சேர்த்த நீரை கொடுக்கலாம். பூண்டை பாலில் வேகவைத்து கொடுக்கலாம். கஷாயத்தில் இஞ்சி சேர்த்துகொடுக்கலாம். இவை எல்லாமே பாக்டீரியா எதிர்ப்பு குணங்களை கொண்டவை.
குழந்தைகளுக்கு பழங்கள் நன்மை செய்யும். ஆனால் பல பெற்றோர்கள் குளிர்காலத்தில் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் குளுமையை உண்டாக்கும் என்று தவிர்த்துவிடுவார்கள். ஆனால் இவை உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்க கூடியவை.
குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு பழம் கொடுக்கும் போது கொய்யா, பப்பாளி, கிவி, ஆரஞ்சு, சிவப்பு நிற பழங்கள் போன்றவற்றை கொடுக்கலாம். காய்கறிகளில் சிவப்பு குடைமிளகாய். தக்காளி, ப்ரக்கோலி அடர்ந்த நிற காய்கறிகள் சேர்க்கலாம். இவை எல்லாமே வைட்டமின் சி நிறைந்த ஆதாரத்தோடுஆன் டி ஆக்ஸிடண்ட் நிறைந்தவை. இது உடலில் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. .
உடல் ஆரோக்கியமும் அதிக ஊட்டச்சத்துகளும் வைட்டமின்களும் நிறைந்தவை கொட்டைகள். அம்மாக்கள் குழந்தைக்கு ஆறுமாதங்களுக்கு பிறகு கொட்டைகளை தவிர்க்காமல் கொடுப்பார்கள். இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை போராடுவதற்கான ஆற்றலை கொடுக்கும்.
அம்மாக்கள் குழந்தைக்கு ஆறு மாதங்கள் வரை இதை கொடுப்பார்கள். ஆனால் குழந்தைகள் வளர்ந்த பிறகு பெரும்பாலும் இதில் கவனம் செலுத்தமாட்டார்கள். அதனால் தினசரி கொட்டைகளில் இரண்டையாவது கொடுக்க முயற்சியுங்கள். பாதாமை ஊறவைத்து தோலுரித்து கொடுங்கள். அக்ரூட் முந்திரி, பிஸ்தா போன்றவற்றை கொடுக்கலாம்.இது ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்யும்.
கொட்டைகள் போன்று விதைகளும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடும். விதைகளில் வைட்டமின் இ, துத்தநாகம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பெறமுடியும். ஒரே விதமான விதைகளாக இல்லாமல் பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள் போன்ற விதைகளை கலந்து கொடுக்கலாம். இதை சாலட் வகையில், சிற்றுண்டியின் போது அப்படியே கொடுக்கலாம்.
முட்டை, கோழி இறைச்சி என இரண்டுமே புரதத்தின் நிறைந்த மூலமாக இருக்கும். வைட்டமின் டி இயற்கையாக இருக்கும் உணவு பொருளில் இதுவும் ஒன்று. உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு இது உதவுகிறது. மேலும் முட்டையில் இரும்புச்சத்து வைட்டமின் ஏ, வைட்டமின் பி உள்ளது. குழந்தைகளுக்கு முட்டையை வேகவைத்து கொடுக்கலாம். முட்டையை ஆம்லெட் ஆக மாற்றி கொடுக்கலாம். முட்டையை பொரித்தும் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு டீ, காஃபி பழகாமல் பால் குடிக்க பழகுங்கள். தினம் ஒர் டம்ளர் பாலை கொடுக்க தவறாதீர்கள் குழந்தைகள் பால் குடிக்க மறுத்தால் பால் பொருள்களை தயிர், சீஸ் போன்றவற்றை சேர்க்கலாம். குறிப்பாக தினசரி தயிர் சேர்க்கலாம்.






