என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • தரமான டயப்பர்களை முறையாகப் பயன்படுத்தலாம்.
    • பெற்றோருக்கு சிரமங்கள் தவிர்க்கப்படுகின்றன.

    டயப்பர் அணிவிக்காமல் இன்றைய சூழ்நிலையில் சமாளிக்க முடிவதில்லை என்கிறார்கள் சிலர்... டயப்பர் அணிவிக்கக்கூடாது என்கிறார்கள் சிலர்... வாங்க பார்க்கலாம்...

    பிறந்த குழந்தைகளுக்கு சரியான அளவுள்ள மற்றும் தரமான டயப்பர்களை முறையாகப் பயன்படுத்தலாம். தற்போது கிடைக்கும் டயப்பர்கள் சிறுநீர் மற்றும் கழிவுகளை நன்கு உறிஞ்சும் திறன் உடையவையாக இருக்கின்றன.

    மேலும் ஈரத்தால் ஏற்படும் அவதிகளைத் தவிர்த்து, குழந்தைகள் சிரமமின்றி நன்கு உறங்குவதற்கு இந்த டயப்பர்கள் நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமில்லை. குழந்தைக்கு ஒருமுறை டயப்பர் அணிவித்தால் அதை அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மாற்றத் தேவையில்லை.

    பெற்றோருக்கும் அடிக்கடி துணி மாற்றுவது, துவைப்பது போன்ற சிரமங்கள் இதனால் தவிர்க்கப்படுகின்றன.

    தரமான, நல்ல மெட்டீரியலில் செய்யப்பட்ட டயப்பர்களை குழந்தை தூங்கும்போதும், பயணத்தின்போதும் மற்றும் தவிர்க்க இயலாத நேரத்திலும் பயன்படுத்தலாம். ஆனால் ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கு ஒருமுறையும் டயப்பரை மாற்ற வேண்டியது அவசியம்.

    • மூச்சுவிட சிரமப்படும் குழந்தைகளுக்கு தான் தீவிர சிகிச்சைகள் தேவைப்படுகிறது.
    • குழந்தைகள்தான் இந்த வைரஸ்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    இந்த கோடை காலம் குழந்தைக்கு புது பிரச்சினைகளை உருவாக்குகிறது. அதாவது அடினோ வைரஸ், இன்புளூயன்சா, பாவி இன்புளூயன்சா போன்ற வைரஸ் தொற்றுகள் அதிக அளவில் பரப்பி வருகின்றன. அதிலும் குறிப்பாக குழந்தைகள்தான் இந்த வைரஸ்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பெரியவர்களையும், இணை நோய் உள்ளவர்களையும் போட்டு தாக்கி வரும் நிலையில் இணை நோய் உள்ளவர்களையும் போட்டு தாக்கி வரும் நிலையில் இது குழந்தைகளை கஷ்டப்படுத்துகிறது.

    பெரும்பாலும் குழந்தைகள் மூச்சுவிட சிரமப்படுதல், தொண்டை வலி, கண்களில் கண்ணீர் பொங்கி வடிதல் போன்ற அறிகுறிகளாலேயே ஆஸ்பத்திரிகளுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கடந்த 2 மற்றும் 3-வது அலைகளில் ஏற்பட்டதைவிட குறைந்த எண்ணிக்கையிலேயே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

    ஆனால் மூச்சுவிட சிரமப்படும் குழந்தைகளுக்கு தான் தீவிர சிகிச்சைகள் தேவைப்படுகிறது. மூச்சுவிட சிரமப்படுதல், மிக குறைந்த அளவில் சாப்பிடுவது, ஆக்சிஜன் அளவு குறைவு ஆகிய அறிகுறிகள் இருக்கும் குழந்தைகளை மட்டுமே ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க பரிந்துரைப்பதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். ஆனால் நேற்றைய நிலவரப்படி சென்னையில் உள்ள பிரபலமான குழந்தைகள் நல மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. பெரும்பாலான குழந்தைகளை பரிசோதித்ததில் கொரோனா தொற்று இல்லை. ஆனால் கோடை விருந்தாக இந்த சாதாரண வைரஸ்கள் தான் குழந்தைகளை கஷ்டப்படுத்துவதாக கூறினார்கள்.

    அரசு பொது சுகாதாரத் துறை ஆய்வகத் தரவுகள் படி கடந்த 2 மற்றும் 3-வது அலையை ஒப்பிடும் போது மிக குறைவான அளவே தொற்றுகள் பதிவாகி உள்ளது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஆல்பா, டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ்கள் வீரியத்துடன் இருந்ததால் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இப்போது ஒமைக்ரான் வைரஸ் குடும்பத்தின் உட்பிரிவுகள்தான் பரவி வருகிறது. இவை குழந்தைகளை தாக்கினாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது ஆறுதலான விசயம். மேலும் இது வீரியம் குறைந்த வைரஸ் என்ற முடிவுக்கும் வரமுடிவதாக துணை இயக்குனர் ராஜூ கூறினார். மேலும் அவர் கூறும்போது, இணை நோய் பாதிப்பு உடையவர்கள், வயது முதிர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

    • எண்ணெய் குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.
    • கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும்

    கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் அதாவது, குழந்தைக்கு சூடுபிடித்து சிவப்பு தடிப்புகள், வேர்க்குரு, சூட்டு கட்டி போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் அதாவது, குழந்தைக்கு சூடுபிடித்து சிவப்பு தடிப்புகள், வேர்க்குரு, சூட்டு கட்டி போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே குழந்தைகளை இம்மாதிரியான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். சரி இந்த பதிவில் கோடைகாலத்தில் குழந்தைக்கு வேர்க்குரு வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

    * பிறந்த இரண்டு மாத குழந்தையாக இருந்தால் தண்ணீர் அதிகமாக கொடுக்கலாம், குழந்தை தண்ணீர் அதிகம் அருந்தவில்லை என்றால் உலர்திராட்சியை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம்.

    * தினமும் குழந்தையை ஒரு முறை குளிப்பாட்டி விடலாம் இதனால் குழந்தைக்கு உடல் சூடு தணியும்.

    * அதேபோல் குழந்தைக்கு தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து விடலாம். எண்ணெய் குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.

    * குழந்தையின் படுக்கையை அடிக்கடி மாற்ற வேண்டும், அதுவும் குழந்தையின் படுக்கையானது காட்டன் துணியாக இருப்பது மிகவும் சிறந்தது. காட்டன் துணி குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

    * மேலும் குழந்தையின் படுக்கும் அறையில் ஏர்கூலர், ஏசி போன்ற குளிர் சாதங்கள் பொறுத்தப்பட்டிருந்தால் அதன் காரணமாக குழந்தையின் உடல் சூடு பிடிக்கும், எனவே இதனை தவிர்க்க குழந்தையின் கால் விரலில் மிக சிறிதளவு விளக்கெண்ணெயை வைத்து விடலாம். இதனால் குழந்தையின் உடல் குளிர்ச்சியடையும்.

    * குழந்தைக்கு வேர்க்குரு வந்துவிட்டால் உடனே வேர்க்குரு பவுடரை பயன்படுத்துவதற்கு பதில், சந்தனம் அல்லது நுங்கு சாறினை குழந்தையின் வேர்க்குரு மீது தேய்த்து மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் ஓரிரு நாட்களில் குழந்தையின் வேர்க்குரு பிரச்சனை சரியாகிவிடும்.

    * குழந்தைகளுக்கு வேர்க்குருடன் சிவப்பு தடிப்புகள் ஏற்படும் அதற்கு சிறிதளவு வேப்பிலையை பறித்து மைபோல் அரைத்து குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். இவ்வாறு செய்வதினால் குழந்தையின் வேர்க்குரு சரியாகும்.

    * குழந்தைக்கு வேர்க்குரு குறைய இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் அப்ளை செய்யங்கள், பின் காய்ந்ததும் கழுவிவிடுங்கள் இவ்வாறு செய்வதினால் குழந்தையின் வேர்க்குரு குறைய ஆரம்பிக்கும்.

    * குழந்தைக்கு வேர்க்குரு மிகவும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும் அதன் காரணமாக குழந்தைகள் அழுக ஆரம்பித்துவிடுவார்கள், அந்த சமயத்தில் வேர்க்குரு உள்ள இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம் இதனால் எரிச்சல் குறையும் மேலும், வேர்குரும் சரியாகிவிடும்.

    * சாதம் வடித்த கஞ்சி குழந்தையின் வேர்க்குரு பிரச்சனையை சரி செய்ய ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. எனவே சாதம் வடித்த பின், அந்த கஞ்சியை நன்கு ஆறவைத்து பின் அதனை வேர்க்குரு மீது நன்றாக தேய்த்து விடுங்கள் பின் நன்கு காய்ந்ததும், குழந்தையை குளிப்பாட்டிவிடவும். இதனால் வேர்க்குரு விரைவில் சரியாகும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மனிதர்களின் மரபணு மாற்றம் என்பது இயற்கை நியதியை தாண்டிய விஷயமாகும்.
    • குளோனிங் தொழில்நுட்பத்தில் பல்வேறு புரட்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    மரபணு மாற்றம் குறித்த தொழில்நுட்பம் அடுத்த கட்டத்தை எட்டத் தொடங்கி உள்ளது. அதாவது விலங்குகள், தாவரங்களை வைத்து பரிசோதித்த ஆய்வாளர்கள் இப்போது மனிதனின் மரபணுவில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபிக்க தொடங்கி உள்ளனர். மனிதர்களின் மரபணு பரிசோதனை மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கும் நிலை உருவாகி இருக்கிறது. ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதற்கும், நோயால் பாதிக்கப்படுவதற்கும் அவரவரின் மரபணுக்களே முக்கிய காரணம். அதேபோல் ஒருவரின் நல்ல, கெட்ட குணநலன்களை தீர்மானிப்பதும் மரபணுக்கள் தான். மனித உடலில் எண்ணற்ற செல்கள் உள்ளன. செல்லின் உட்கருவுக்குள் 46 குரோமோசோம்கள் 23 ஜோடிகளாக உள்ளன.

    ஒவ்வொரு குரோமோசோமும் டி.என்.ஏ. மற்றும் ஹிஸ்டன் என்ற புரதத்தால் உருவாக்கப்படுகிறது. மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் புரதமே மிகவும் முக்கியம். ஒவ்வொரு டி.என்.ஏ.வுக்குள்ளும் 30 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. குழந்தைகள் பெற்றோரின் குணநலன்களை பெறுவதற்கு முக்கிய காரணம் இந்த ஜீன்கள் தான். ஒவ்வொரு மரபணுவும் ஒவ்வொரு விதமான பண்புகளை குழந்தைகளுக்கு எடுத்துச் செல்கிறது. அதேபோல் பரம்பரை நோய்கள் எனப்படும் மரபணு நோய்களுக்கும் ஜீன்களே காரணம்.

    இந்த பரம்பரை நோய்களில் இருந்து மனிதர்களை எப்படி பாதுகாப்பது என்பதில்தான் மரபணு மாற்றம் குறித்த ஆராய்ச்சி வேகமெடுத்துள்ளது. அதாவது, ஒரு உயிரின் மரபணுவை நீக்குவது அல்லது மற்றொரு மரபணுவோடு சேர்ப்பது போன்ற தொழில்நுட்பம் 'ஜீன் எடிட்டிங்' அல்லது 'ஜீன் என்ஜினீயரிங்' என்று அழைக்கப்படுகிறது.

    இதன் மூலம் நல்ல பண்புகளுக்கு காரணமான ஜீன்களை ஒருங்கிணைத்து புதிய கருவை உருவாக்க முடியும் என்கிறார்கள் மரபணு ஆராய்ச்சியாளர்கள். இதனால் நாம் விரும்பும் நல்ல பண்புகளை உடைய குழந்தைகளை உருவாக்குவது சாத்தியம் என்கிறார்கள்.

    சீனாவைச் சேர்ந்த மருத்துவர் ஹீஜியாங் இதுபோன்று இரட்டை பெண் குழந்தைகளை எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்க அவர்களுக்கு மரபணு மாற்றம் செய்ததாகவும், அவர்கள் நோய் தாக்குதல் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த சம்பவம் உறுதி செய்யப்படவே, இது இயற்கைக்கு மாறான ஆராய்ச்சி என தெரிவித்த சீன அரசு அந்த மருத்து வரையும், அவருக்கு உதவியாக இருந்தவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது. காரணம், மனிதர்களில் மரபணு மாற்றம் குறித்த ஆராய்ச்சிக்கு உலகம் முழுவதும் ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன.

    இதுபோன்ற ஆராய்ச்சிகளை ஆய்வாளர்கள் குழந்தை உருவாக்க பயன்படுத்தாத செயற்கை கருத்தரித்தல் முறையில் உருவாக்கப்படும் கரு முட்டைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆராய்ச்சிக்குப் பிறகு அந்த கரு முட்டைகளை அழித்து விட வேண்டும் என்ற விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

    காரணம், மனிதர்களின் மரபணு மாற்றம் என்பது இயற்கை நியதியை தாண்டிய விஷயமாகும். இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் எப்படிப்பட்ட குழந்தைகள் வேண்டும் என ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ள முடியும் என்ற அளவிற்கு வளர்ந்துள்ளது.

    மரபணுவில் உள்ள மைட்டோகாண்டிரியா எனப்படும் இழை மணியில் கோளாறு இருந்தால் குழந்தைகள் நோயால் பாதிக்கப்படுகின்றன. எனவே கருத்தரிக்கும் போதே இந்த மரபணு குறைபாட்டை தடுக்க ஆரோக்கியமான பெண்ணின் சினை முட்டையில் இருக்கும் கரு மையப் பகுதியை, குறைபாடுள்ள பெண்ணின் சினை முட்டையில் பொருத்தி கருவுறச் செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

    இந்த மருத்துவ தொழில்நுட்பம் காரணமாக பிறக்கும் குழந்தையின் உடலில் 2 தாய் மற்றும் ஒரு தந்தையின் மரபணுக்கள் இடம் பெறும். பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால் அதன் இழைமணியில் செய்யப்பட்ட திருத்தம் அதன் சந்ததிகளிடமும் தொடரும். மைட்டோகாண்ட்ரியா திருத்தம் ஒருமுறை நிகழ்ந்தால் அடுத்தடுத்து வழி, வழியாக வந்து கொண்டே இருக்கும்.

    இயற்கைக்கு மீறிய செயலாக இது இருந்தாலும், ஆரோக்கியமான குழந்தைக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இருப்பினும் இந்த வகை மரபணு மாற்றத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. நல்ல நாள், நேரம் பார்த்து பிரசவத்தை அறுவை சிகிச்சை மூலம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளும் பழக்கம் இப்போது பரவலாக இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

    அதேபோல் எனக்கு சிவப்பாக உள்ள குழந்தை வேண்டும், எனக்கு அறிவான குழந்தை வேண்டும், எனக்கு விளையாட்டுத் திறமை உள்ள குழந்தை வேண்டும் என பொருட்களை ஆர்டர் செய்வது போல் குழந்தைகளையும் மருத்துவர்களிடம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளும் நிலை எதிர்காலத்தில் உருவானாலும் ஆச்சரியமில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

    மரபணு மாற்றம் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானிகள் எப்படி வியத்தகு சாதனைகள் படைத்து வருகிறார்களோ, இதே போல் குளோனிங் தொழில்நுட்பத்திலும் பல்வேறு புரட்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆண், பெண் செக்ஸ் செல்களுக்கு பதில் உடல் செல்லை (stem cell) வைத்து புதிய உயிர்களை உருவாக்குவதற்கு பெயர்தான் குளோனிங்.

    இந்த முறையில் விலங்குகள் மற்றும் தாவரங்களை உருவாக்கிய விஞ்ஞானிகள் இப்போது மனிதர்களையும் உருவாக்க தொடங்கி உள்ளனர். முதன் முதலில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சர்ஜான் குர்டான் என்பவர் 1962-ம் ஆண்டு 'ஜெனோபாஸ்' என்ற தவளையின் ஸ்டெம் செல்லில் இருந்து ஒரு புதிய தவளையை உருவாக்கினார். பிறகு டாலி என்ற செம்மறி ஆட்டுக்குட்டி குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பூனை, நாய், எலி, குரங்கு மற்றும் ஓநாய் போன்ற விலங்குகள் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்டது. குளோனிங் தொழில் நுட்பத்தின் உச்சமாக அமெரிக்காவில் குளோன் எய்ட் ஆராய்ச்சி மையத்தில் முதன் முதலில் குளோனிங் முறையில் குழந்தை உருவாக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி பாஸ் செல்லியர் என்பவர் தலைமையிலான மருத்துவ ஆராய்ச்சிக்குழு இந்த சாதனையை நிகழ்த்தியது.

    முதன் முதலில் உருவாக்கப்பட்ட இந்த குளோனிங் குழந்தை தாயின் செல்லில் இருந்து உருவாக்கப்பட்டது. தாயின் செல்லை எடுத்து கரு முட்டைக்குள் செலுத்தி கரு உருவாக்கம் செய்யப்பட்டது. பிறகு, அந்த கரு பெண்ணின் கரு முட்டைக்குள் வைத்து வளரச் செய்து குளோனிங் குழந்தை உருவாக்கப்பட்டது.

    இந்த முறையில் பிறக்கும் குழந்தைகள் யாருடைய செல்லை எடுத்து கரு முட்டையில் செலுத்துகிறோமோ, அந்த நபரின் ஜெராக்ஸ் போல் உருவம் மற்றும் குணநலன்கள் இருக்கும். உருவத்தில் இரட்டையர்கள் ஒரே மாதிரி இருந்தாலும் குணநலன்களில் வேறுபடுவார்கள். ஆனால் குளோனிங் குழந்தைகள் அப்படி இல்லை, யாரின் செல்லில் இருந்து குளோனிங் செய்யப்படுகிறார்களோ அவரின் நகலாகவே இருப்பதுதான் இதில் சிறப்பு அம்சம்.

    • கோடை காலத்தில் வெப்ப தாக்கம் பள்ளிக் குழந்தைகளை பாதிக்கும்.
    • தோல் நோய்களும் தோன்றும்.

    கோடை காலத்தில் வெப்ப தாக்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இளைஞர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளை பாதிக்கும். அவர்கள் விளையாடும்போது வெளியேறும் வியர்வையின் அளவு வழக்கத்தைவிட அதிகரிக்கும். நாவறட்சி ஏற்படும். சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். உடல் சோர்வு, தலை வலி, காய்ச்சல், வாந்தி, வயிற்று போக்கு, அம்மை நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தோல் நோய்களும் தோன்றும்.

    வியர்வை அதிகமாக வெளியேறும்போது தண்ணீரால் கழுவாமல் விட்டுவிட்டால் நமைச்சல் உண்டாகி அது கொப்பளங்களாக மாறிவிடக்கூடும். ஆதலால் வெயிலில் விளையாடும் குழந்தைகள் இருமுறை குளிப்பது நல்லது.

    வியர்வை அதிகமாக வெளியேறும்போது உடலில் உள்ள உப்புச்சத்தின் அளவு குறைய தொடங்கிவிடும். வியர்வையாக வெளியேறும் நீரை ஈடு செய்ய வெறுமனே தண்ணீர் மட்டும் பருகுவது கூடாது. அதனுடன் உப்புச்சத்தின் அளவையும் ஈடு செய்ய வேண்டும். அதற்கு தண்ணீருடன் உப்பையும் சேர்த்து அருந்த வேண்டும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதனுடன் உப்பு சேர்த்தும் குடித்து வரலாம். அது உடலில் இருந்து வெளியேறிய நீரையும், உப்புச்சத்தையும் ஈடுகட்டும்.

    கோடை காலத்தில் சிறு குழந்தைகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு வியர்வை வெளியேற்றம் அதிகமாகும்போது சோர்வு அதிகம் ஏற்படும். தாகம் எடுத்தாலும் விளையாட்டிலேயே முழு கவனமாய் இருப்பார்கள். அதனால் அவ்வப்போது தண்ணீருடன் சிறிது உப்பு கலந்து, அவர்களுக்கு பருக கொடுக்கலாம். தண்ணீரை நன்கு காய்ச்சி கொடுப்பது நல்லது. குழந்தைகள் காற்றோட்டமான சூழலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

    காற்றோட்டம் குறைவாக இருந்தால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனை கருத்தில் கொண்டு குழந்தை பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    கோடை காலம் முடியும் வரையில் அவ்வப்போது எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. அதிலும் எண்ணெய்யை காய்ச்சி, ஆறவைத்து உடலெங்கும் தேய்த்து குளிப்பாட்டி வரலாம். மஞ்சளை அரைத்து உடலில் தேய்த்து வருவதும் நோய்த்தொற்றில் இருந்து காக்கும்.

    • செயற்கை குளிர்பானங்கள் அறவே தவிர்க்கவும்.
    • தினமும் 2 முறை குளிக்க வேண்டும்.

    கோடை காலத்தில் குழந்தைகளை பராமரிப்பது குறித்து கடலூர் முதுநகர் எஸ்.டி. மருத்துவமனை டாக்டர் முகுந்தன் கூறியதாவது:-

    கோடைகாலத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்கு முதல் வழி தண்ணீர். 10 கிலோ எடையுள்ள குழந்தை தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் பருகவேண்டும் என்ற கணக்கில், குழந்தைகளுக்கு எடைக்கு ஏற்றவாறு தண்ணீர் அடிக்கடி பருக கொடுக்கவேண்டும். நீங்கள் வாங்கும் பழங்கள், காய்கறிகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதற்கு முன்பு 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு கழுவி கொடுங்கள். குழந்தைகளுக்கு எல்லா வகையான பழங்களும் கொடுக்கலாம். செயற்கை குளிர்பானங்கள் அறவே தவிர்க்கவும். மோர், இளநீர், எலுமிச்சை சாறு முதலியவற்றில், ஏதாவது ஒன்றை தினமும் குழந்தைகளுக்கு கொடுங்கள்.

    கோடை காலத்தில் குழந்தைகளுக்கு மாமிச உணவுகள் (சிக்கன், மட்டன்) வாரம் ஒருமுறை மட்டும் கொடுத்தால் போதுமானது. அடிக்கடி கொடுத்தால் குழந்தைகளுக்கு அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். குழந்தைகளுக்கு ஓட்டல், துரித உணவகங்களில் இருந்து உணவு வகைகளை வாங்கி தருவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். தினமும் 2 முறை குளிக்க வேண்டும்.

    வெளியில் விளையாடி விட்டு வரும் குழந்தைகளின் கை, கால்களை சோப்பு போட்டு கழுவி விடுங்கள்.குழந்தைகளுக்கு இயற்கையை ரசிக்க கற்றுக் கொடுங்கள்.

    செயற்கை பொருட்களை (ஸ்மார்ட்போன், டி.வி.) முற்றிலும் தவிர்க்கவேண்டும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அனைத்து தடுப்பூசிகளையும் மருத்துவர் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு குழந்தைக்கு கல்வி தருவதில் பெற்றோரின் பங்கு முதலிடம்.
    • மாணவர்கள் எதையும் புரிந்து படித்து, படித்தவற்றை செயல்முறைக்கு கொண்டு வரவேண்டும்.

    கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒரு நாட்டில் வாழும் அனைத்து தரப்பினருக்கும் ஜாதி, மத, இன, பொருளாதார வேறுபாடில்லாமல் சென்றடைய வேண்டும். இவ்வகையில் பார்க்கும்போது இந்தியா ஓரளவிற்கு முன்னேறி வருகிறது எனலாம். அதே நேரத்தில் இன்னமும்கூட இந்தியாவின் சில குக்கிராமங்களில் குழந்தைகள் பல கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற நிலை இருக்கிறது என்பதையும் நோக்க வேண்டும். உயர்கல்வி பற்றின விழிப்புணர்வு எல்லாத் தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும்.

    நம் கல்வித் திட்டம் ஒரு மனிதனை சுயசார்புடையவனாக வளர்க்க வேண்டும். இவ்வுலகில் சக மனிதர்களோடு வளைந்து கொடுத்து, அதாவது அனைவரின் கருத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அதே நேரத்தில் நேர்மை தவறாமல் எப்போதும் மகிழ்வுடன் வாழ வழிகாட்ட வேண்டும். தனிமனித வளர்ச்சிக்கும் ஒரு நாட்டின் சமூக, கலாச்சார, பொருளாதார, அறிவியல் தொழில்நுட்ப, அரசியல் என ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அடித்தளமாக இருப்பது கல்விதான். இந்த கல்வி சிறப்பாய் செம்மையாய் இருக்கும் பட்சத்தில் நாட்டின் வருங்காலம் ஒளிமயமாகும் என்பது வெளிப்படையான உண்மை.

    சர்வகலாசாலையில் பல பட்டங்களை பெறுவது மட்டுமே கல்வியல்ல என்பதை உணர்தல் வேண்டும். கற்றல் என்பது எந்த கணப்பொழுதும் நிகழக்கூடியது. எனவே நாம் எப்போதும் கற்பதற்கு தயாராய் இருக்க வேண்டும் என மாணவப் பருவத்திலேயே நமக்கு அறிவுறுத்தும்படி நம் பள்ளிக் கல்வி அமைய வேண்டும்.

    ஒரு குழந்தைக்கு கல்வி தருவதில் பெற்றோரின் பங்கு முதலிடம். பிறகே ஆசிரியரின் பங்கு. சொல்லப் போனால் ஒரு மனிதனை செதுக்குவதில் மேற்படி இருவருக்குமே, இரண்டு சிற்பிகளுக்குமேதான், முக்கிய பங்கு. ஆனால் தற்போது நிலைமை குழந்தைகள் சரியானபடி பயிலாதபோது ஒருவர் மேல் மற்றவர் குறை சொல்லி தப்பித்துக் கொள்ள முயல்கின்றனர். இந்நிலை முற்றாக மாறவேண்டும். புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பித்து விடாமல் புத்திசாலி என நம்பும் பலரின் அறியாமை மாற வேண்டும்.

    மாணவர்கள் எதையும் புரிந்து படித்து, படித்தவற்றை செயல்முறைக்கு கொண்டு வரவேண்டும். அவ்வாறு செயல்முறை படுத்தும்போது அவரவரின் புத்துருவாக்கத்திற்கு அதில் முக்கிய இடம் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட கல்விதான் முதுகெலும்புள்ள, சுயசிந்தனையை வளர்க்கக்கூடிய ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடக்கூடிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய மனிதனை உருவாக்கும். ஒவ்வொரு மனிதனிடமும் அறிய திறமைகள் பொதிந்துள்ளன. அதை வெளிக்கொண்டு வருபவர்தான் உண்மையான ஆசிரியர் என்கிறார் விவேகானந்தர் எனவே நன்றாக படிக்கும் மாணவர்களை மற்றும் படித்த பெற்றோர்களின் குழந்தைகளை மட்டுமே தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டு நூறு சதவிகித தேர்ச்சி காண்பிப்பதில் ஆசிரியருக்கு என்ன பங்கு இருக்கிறது. எனவே கல்வி கற்க சிரமப்படும் மாணவர்களை நன்கு பயிற்றுவித்து அவர்களை நன்கு தேர்ச்சி பெற செய்வதில்தான் ஒரு ஆசிரியரின் வெற்றி இருக்கிறது என்பதை எல்லா ஆசிரியர்களும் உணர வேண்டும்.

    முழுமையான கல்வி என்பது ஒருவனுக்கு முதலில் தான் என்கிற தன் முனைப்பை அழிக்கும். ஜாதி, மத பேதங்களை அவனுள்லிருந்து அறவே நீக்கும். இந்தியா என் நாடு என்பதைவிட இந்த உலகம் என் வீடு எனும் பரந்த மனப்பான்மையை ஏற்படுத்தும். பல புத்துருவாக்கங்களுக்கான வீரிய வித்துக்களை விதைப்பவனாக மாற்றும். இப்படிப்பட்ட கல்வியை கொணர்வது நம் அனைவருடைய சமூக பொறுப்பு.

    • `ஜங்க் புட்' பண்டங்கள் எந்தச் சத்துகளையும் தருவதில்லை.
    • காலை 7 முதல் 9 மணி வரை சிறுகுடல் ஆற்றலுடன் இயங்கும் நேரம்.

    குழந்தைகளின் உடல்நலனில் பெற்றோர் கண்டிப்பாக அக்கறை காட்ட வேண்டும். காலை 7 முதல் 9 மணி வரை சிறுகுடல் ஆற்றலுடன் இயங்கும் நேரம். அந்த நேரத்தில் கடனே என உணவு திணிக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த உடலையும் கண்டிப்பாக பாதிக்கும். சரி, காலை உணவுதான் பொருத்தமாக இல்லை. மதிய உணவாவது முழு ஆற்றலை வழங்கக்கூடியதாக இருக்கிறதா என்றால், பெரும்பாலான குழந்தைகளுக்கு அதுவும் இல்லை.

    காய்கறி, கீரை நல்ல உணவு என்று சொல்லி தலையணைக்குள் பஞ்சை திணிப்பதுபோல, குழந்தைகளின் வாயில் அவற்றை மட்டும் திணிக்க முயற்சிக்கக் கூடாது.

    அதே நேரத்தில் பளபளப்பான பாலித்தீன் பாக்கெட்டுகளில் வரும் பண்டங்களை குழந்தைகள் விரும்புகிறார்களே, அது சரியா என்ற கேள்வியும் எழுகிறது. சரியல்லதான்.

    `ஜங்க் புட்' எனப்படும் இந்த வணிகப் பண்டங்கள் எந்தச் சத்துகளையும் தருவதில்லை. குழந்தைகளின் மென்மையான உள்ளுறுப்புகளை மோசமாகச் சிதைத்து நிரந்தர நோயாளிகளாக்கி விடக்கூடும். வேறு நல்ல பண்டங்களை உண்ண விடாத அளவுக்கு நாவின் சுவை மொட்டுகளை இவ்வகை பண்டங்கள் சுரண்டி கெடுத்துவிடுகின்றன.

    வணிக நொறுக்குத்தீனி பண்டங்களில் இருந்து குழந்தைகளை மீட்டெடுப்பது எப்படி? என்று பெற்றோர் கூடுதல் அக்கறையுடன் சிந்தித்து, செயல்பட வேண்டி இருக்கிறது. இயற்கையான, சத்தான, விதவிதமான சுவை கொண்ட உணவை பச்சிளம் பருவத்தில் இருந்தே குழந்தைகளுக்கு பழக்கினால் வணிகப் பண்டங்களுக்கு அவர்கள் அடிமையாக மாட்டார்கள், என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

    • இந்தத் தேர்வை எழுதுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
    • கேட்கும் பகுதிக்கு 30 நிமிடங்கள் தரப்படும்.

    ரஷியா, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஆங்கிலப் புலமை ஒரு பொருட்டல்ல. கல்விக்கும் தொழிலுக்கும் தாய்மொழியே அவர்களுக்குப் போதுமானதாக உள்ளது. இந்திய நிலைமை அப்படியல்ல. இங்கே ஆங்கிலம் தவிர்க்க முடியாத மொழி. பல மொழி பேசும் மக்களை கொண்ட நாடாக இந்தியா இருப்பதால், ஆங்கிலமே வெவ்வேறு மொழி பேசும் மக்களை இணைக்கிறது.

    அத்துடன், இந்தியாவில் இருந்து படிப்புக்காகவோ வேலைக்காகவோ வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கு அதிகம் உள்ளது. அதற்குக் கல்வி அறிவும் தொழில் அறிவும் மட்டும் போதாது. ஆங்கில மொழிப் புலமையை நிரூபிக்கும் வண்ணம் ஐ.இ.எல்.டி.எஸ். (IELTS) போன்ற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். அதனால்தான், ஓராண்டுக்குச் சுமார் 30 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள்.

    சர்வதேச அளவில் ஒருவரின் ஆங்கில மொழிப் புலமையைப் பரிசோதித்து மதிப்பீடு செய்யும் அமைப்பே இந்த ஐ.இ.எல்.டி.எஸ். இந்த மதிப்பீடின்றி மேலை நாட்டுக் கல்லூரிகளில் நுழையவே முடியாது. இந்தத் தேர்வை எழுதுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

    கேட்டல், வாசித்தல், எழுதுதல், பேசுதல் என்று இந்தத் தேர்வு நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். பேசுதல் தவிர்த்து மற்ற மூன்று பகுதி களுக்கான தேர்வுகள் ஒரே நாளில் நடைபெறும்.

    கேட்கும் பகுதிக்கு 30 நிமிடங்கள் தரப்படும். அந்தப் பகுதியில் நான்கு ஒலிப்பதிவுகள் ஒலிபரப்பப்படும். அந்த ஒலிப்பதிவுகளில் நடைபெறும் உரையாடல்களை சார்ந்து கேள்விகள் கேட்கப்படும்.

    வாசிப்புப் பகுதிக்கு 60 நிமிடங்கள் தரப்படும். நீண்ட கட்டுரையும் குறுகிய கட்டுரையும் வாசிப்பதற்கு கொடுக்கப்படும். பின்பு அதிலிருந்து 40 கேள்விகள் கேட்கப்படும். உங்கள் கிரகிக்கும் திறனையும் வாசிக்கும் தன்மையையும் அந்தக் கட்டுரையில் பொதிந்திருக்கும் கருத்துகளை நீங்கள் புரிந்துகொள்ளும் பாங்கையும் பரிசோதிக்கும் வண்ணம் அந்தக் கேள்விகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

    எழுதுதல் பகுதியில் உங்கள் இலக்கணத்திறனும் நீங்கள் பயன்படுத்தும் சொற்களின் செறிவும் மதிப்பீடு செய்யப்படும். இந்தப் பகுதிக்கு 60 நிமிடங்கள் தரப்படும்.

    பேச்சுப் பகுதிக்கு அதிகபட்சம் 15 நிமிடங்கள் தரப்படும். இந்தத் தேர்வில் மட்டும்தான் நீங்கள் தேர்வாளரை எதிர்கொள்வீர்கள்.

    இந்த நான்கு பகுதிகளுக்கும் தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்கப்படும். அந்த நான்கு பகுதிகளில் நீங்கள் பெற்ற மதிப்பெண்களின் சராசரியே உங்கள் ஒட்டுமொத்த மதிப்பெண். அந்தச் சராசரி ஏழுக்கு மேல் இருந்தால்தான், நல்ல பல்கலைக்கழகத்தில் உங்களால் சேர முடியும்.

    கூச்சம் வேண்டாம்

    ஆங்கிலத்தில் பேசும்போது, சொல்ல வரும் கருத்தில்தான் நமது கவனம் இருக்க வேண்டும். தொடக்கத்தில் மொழியின் இலக்கணத்திலோ உச்சரிப்பிலோ கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஆங்கிலத்தில் பேசும்போது எழும் கூச்சத்தை/அச்சத்தைக் கடப்பதற்கு இதை முயன்றாலே போதும். மொழி என்பது வெறும் ஊடகமே. அறிவுக்கும் மொழியின் புலமைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இந்த அடிப்படை புரிதல் இருக்குமேயானால், ஆங்கிலப் புலமை நமக்கு எளிதில் கைகூடிவிடும்.

    • ஒரு குழந்தைக்கு கல்வி தருவதில் பெற்றோரின் பங்கு முதலிடம்.
    • மாணவர்கள் எதையும் புரிந்து படித்து, படித்தவற்றை செயல்முறைக்கு கொண்டு வரவேண்டும்.

    கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒரு நாட்டில் வாழும் அனைத்து தரப்பினருக்கும் ஜாதி, மத, இன, பொருளாதார வேறுபாடில்லாமல் சென்றடைய வேண்டும். இவ்வகையில் பார்க்கும்போது இந்தியா ஓரளவிற்கு முன்னேறி வருகிறது எனலாம். அதே நேரத்தில் இன்னமும்கூட இந்தியாவின் சில குக்கிராமங்களில் குழந்தைகள் பல கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற நிலை இருக்கிறது என்பதையும் நோக்க வேண்டும். உயர்கல்வி பற்றின விழிப்புணர்வு எல்லாத் தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும். நம் கல்வித் திட்டம் ஒரு மனிதனை சுயசார்புடையவனாக வளர்க்க வேண்டும். இவ்வுலகில் சக மனிதர்களோடு வளைந்து கொடுத்து, அதாவது அனைவரின் கருத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அதே நேரத்தில் நேர்மை தவறாமல் எப்போதும் மகிழ்வுடன் வாழ வழிகாட்ட வேண்டும்.

    தனிமனித வளர்ச்சிக்கும் ஒரு நாட்டின் சமூக, கலாச்சார, பொருளாதார, அறிவியல் தொழில்நுட்ப, அரசியல் என ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அடித்தளமாக இருப்பது கல்விதான். இந்த கல்வி சிறப்பாய் செம்மையாய் இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நாட்டின் வருங்காலம் ஒளிமயமாகும் என்பது வெளிப்படையான உண்மை.

    சர்வகலாசாலையில் பல பட்டங்களை பெறுவது மட்டுமே கல்வியல்ல என்பதை உணர்தல் வேண்டும். கற்றல் என்பது எந்த கணப்பொழுதும் நிகழக்கூடியது. எனவே நாம் எப்போதும் கற்பதற்கு தயாராய் இருக்க வேண்டும் என மாணவப் பருவத்திலேயே நமக்கு அறிவுறுத்தும்படி நம் பள்ளிக் கல்வி அமைய வேண்டும்.

    ஒரு குழந்தைக்கு கல்வி தருவதில் பெற்றோரின் பங்கு முதலிடம். பிறகே ஆசிரியரின் பங்கு. சொல்லப் போனால் ஒரு மனிதனை செதுக்குவதில் மேற்படி இருவருக்குமே, இரண்டு சிற்பிகளுக்குமேதான், முக்கிய பங்கு. ஆனால் தற்போது நிலைமை குழந்தைகள் சரியானபடி பயிலாதபோது ஒருவர் மேல் மற்றவர் குறை சொல்லி தப்பித்துக் கொள்ள முயல்கின்றனர். இந்நிலை முற்றாக மாறவேண்டும். புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பித்து விடாமல் புத்திசாலி என நம்பும் பலரின் அறியாமை மாற வேண்டும்.

    மாணவர்கள் எதையும் புரிந்து படித்து, படித்தவற்றை செயல்முறைக்கு கொண்டு வரவேண்டும். அவ்வாறு செயல்முறை படுத்தும்போது அவரவரின் புத்துருவாக்கத்திற்கு அதில் முக்கிய இடம் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட கல்விதான் முதுகெலும்புள்ள, சுயசிந்தனையை வளர்க்கக்கூடிய ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடக்கூடிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய மனிதனை உருவாக்கும். ஒவ்வொரு மனிதனிடமும் அறிய திறமைகள் பொதிந்துள்ளன.

    அதை வெளிக்கொண்டு வருபவர்தான் உண்மையான ஆசிரியர் என்கிறார் விவேகானந்தர் எனவே நன்றாக படிக்கும் மாணவர்களை மற்றும் படித்த பெற்றோர்களின் குழந்தைகளை மட்டுமே தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டு நூறு சதவிகித தேர்ச்சி காண்பிப்பதில் ஆசிரியருக்கு என்ன பங்கு இருக்கிறது. எனவே கல்வி கற்க சிரமப்படும் மாணவர்களை நன்கு பயிற்றுவித்து அவர்களை நன்கு தேர்ச்சி பெற செய்வதில்தான் ஒரு ஆசிரியரின் வெற்றி இருக்கிறது என்பதை எல்லா ஆசிரியர்களும் உணர வேண்டும்.

    முழுமையான கல்வி என்பது ஒருவனுக்கு முதலில் தான் என்கிற தன் முனைப்பை அழிக்கும். ஜாதி, மத பேதங்களை அவனுள்லிருந்து அறவே நீக்கும். இந்தியா என் நாடு என்பதைவிட இந்த உலகம் என் வீடு எனும் பரந்த மனப்பான்மையை ஏற்படுத்தும். பல புத்துருவாக்கங்களுக்கான வீரிய வித்துக்களை விதைப்பவனாக மாற்றும். இப்படிப்பட்ட கல்வியை கொணர்வது நம் அனைவருடைய சமூக பொறுப்பு.

    • பெற்றோர் எப்பொழுதும் சண்டையிட்டுக்கொண்டே இருப்பது பிள்ளைகளின் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
    • வாக்குவாதம் முடிந்து உங்கள் பெற்றோர் இயல்பு நிலைக்கு வந்தவுடன், இருவரிடமும் மனம் திறந்து பேசுங்கள்.

    பெற்றோர், வீட்டில் எப்பொழுதும் சண்டையிட்டுக்கொண்டே இருப்பது பிள்ளைகளின் மன அழுத்தத்தை அதிகரிக்கும். தினமும் ஒருவரை ஒருவர் தாழ்த்தி, சண்டையிடுவதைக் கேட்பதும், பார்ப்பதும் கடினமானதாகும். சில சூழ்நிலைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்றாலும், அதை சமாளிப்பதற்கு சில செயல்களை மேற்கொள்ளலாம்.

    எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள்: உங்கள் பெற்றோரின் சண்டைகளுக்கு நீங்கள் பொறுப்பல்ல என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். அவர்களுக்கு இடையேயான கருத்துவேறுபாடுகளை சரி செய்வது உங்கள் வேலை அல்ல. பெற்றோர் சண்டையிடுவதைப் பார்க்கும்போது உங்களுக்கு வருத்தம், கோபம், பதற்றம், எரிச்சல் போன்ற உணர்வுகள் மேலோங்கும். அதனால் முடிந்தவரை, வேறொரு அறைக்கு அல்லது நீங்கள் பாதுகாப்பாக உணரும் இடத்திற்குச் செல்லுதல் நல்லது.

    வெளியில் செல்லுங்கள்: உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடு, பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று உங்கள் கவனத்தை திசைத்திருப்ப முயற்சி செய்யுங்கள். உங்கள் மனதை ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்துங்கள்.

    தவிர்க்க முயலுங்கள்: பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபடும்போது நீங்கள் வெளியில் செல்வதற்கான வாய்ப்புகள் இல்லையெனில், வீட்டுக்குள் தனி இடத்தில் இருக்கலாம். அந்த நேரத்தில் அவர்களின் பேச்சுக்களை கவனிப்பதை தவிருங்கள். இது போன்ற தருணங்களில், ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டு இசையைக் கேட்பது சிறந்த வழியாகும்.

    கவலைப்படாதீர்கள்: பெற்றோருக்கு இடையே வாக்குவாதம் நடைபெறும்போது, அவர்களுள் கைகலப்பு வந்துவிடுமோ, ஒருவரை விட்டு மற்றொருவர் பிரிந்துவிடுவார்களோ என்று தேவையில்லாமல் கவலை கொள்ளாதீர்கள். குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட பெற்றோர், ஒருபோதும் அதுமாதிரியான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

    நடுநிலையாக இருங்கள்: உங்கள் பெற்றோருக்கு இடையே வாக்குவாதம் நடக்கும்போது, ஒருவருக்கு மட்டும் ஆதரவாக செயல்படுவதை தவிருங்கள். அவர்களின் வாதங்களில் நீங்கள் தலையிடாமல் நடுநிலையாக இருப்பதே நல்லது.

    மனம் விட்டு பேசுங்கள்: வாக்குவாதம் முடிந்து உங்கள் பெற்றோர் இயல்பு நிலைக்கு வந்தவுடன், இருவரிடமும் மனம் திறந்து பேசுங்கள். அவர்களது வாக்குவாதம் உங்களை மனதளவில் எவ்வாறு பாதிக்கிறது? நீங்கள் எப்படி பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறீர்கள்? என்பதை அமைதியாகவும், உறுதியாகவும் அவர்களுக்கு தெரிவியுங்கள். அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு உங்களை கடிந்துகொண்டாலும், அந்த நேரத்தில் நிதானத்தை தவற விடாமல் நடந்துகொள்ளுங்கள்.

    ஆலோசகரை அணுகுங்கள்: உங்கள் பெற்றோருக்கு இடையே நடைபெறும் சண்டை, உங்களை அதிகமாக பாதிக்கிறது என்றால், இதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் பேசுங்கள். உங்கள் உறவினர், மனநல ஆலோசகர், குடும்ப நண்பர்கள் என யாராவது ஒருவரை அணுகுங்கள். அவர்கள் வாழ்வில் இத்தகைய சூழ்நிலைகளை கடந்து வந்தவர்கள் என்பதால், உங்களுக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்குவார்கள்.

    • படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவவேண்டும்.
    • ஒழுக்கம் தவறும் மாணவரை நல்வழிப்படுத்த வேண்டும்.

    என் கடன் பணி செய்து கிடப்பதே என்றார் சிவனடியார் திருநாவுக்கரசர். ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் உண்டு. இந்த சமுதாயத்திற்காக மாணவர் ஆற்றவேண்டிய கடமைகள் பல உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள், அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும்.

    ஓர் உயிர் படும் துன்பத்தை கண்டு அதனை தாங்கி கொள்ள இயலாமல் உடனே ஓடிச் சென்று உதவுவதுதான் தொண்டு. அவ்வகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நம் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுக்கு அளவே இல்லை. நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, அறியாமை, சாதிமத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாக கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தில் உறுப்பாய் விளங்கும் மாணவர்கள் சமுதாய மேம்பாட்டுக்காக தொண்டாற்றுவது கடமையாகும்.

    மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு வாய்ப்பாக பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற அமைப்புகள் உள்ளன. மாணவர் இந்த அமைப்புகளில் சேர்ந்து தொண்டாற்றலாம். அதில் தெருக்களை தூய்மை செய்தல், நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், சாலைகளை செப்பனிடுதல், மருத்துவ உதவி பெற வழிகாட்டுதல், விழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகிய தொண்டுகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம். எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவை போதிக்கலாம். செய்தித்தாள்களை வாசித்து காட்டலாம். நூல்நிலையங்கள், படிப்பகங்கள் அமைக்க முயற்சி மேற்கொள்ளலாம். அரசின் செய்தித்துறையினர் உதவியுடன் வேளாண்மை, குடும்பநலம், நோய்த்தடுப்பு ஆகிய திரைப்படங்களை காட்டி பொது அறிவை வளர்க்கலாம்.

    கிராமங்களில் உள்ள விவசாயிகள் தம் ஓய்வு நேரத்தை பயன்படும் வகையில் போக்க அரசின் உதவி பெற்று கோழிப்பண்ணைகள் வைத்தல், தேனீ வளர்த்தல், பாய்பின்னுதல், கூடை முடைதல் போன்ற கைத்தொழில்களை செய்ய வழிகாட்டலாம். நகர் பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க போலீசாருடன் சேர்ந்து பணியாற்றலாம்.

    இவையில்லாமல் மாணவர்கள் தங்கள் படிக்கும் பள்ளியில் வகுப்பறையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். ஏழை மாணவர்களுக்கு, படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவவேண்டும். ஒழுக்கம் தவறும் மாணவரை நல்வழிப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் தம் புத்தகங்களை இலவசமாக கொடுத்து உதவலாம். புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழும்போது அவற்றால் பாதிக்கும் மக்களுக்காக நிதி திரட்டியும், ஆடை, உணவு பொருட்கள், மருத்துவ பொருட்கள் போன்றவற்றை சேகரித்தும் வழங்கலாம். மஞ்சள்காமாலை, போலியோ நோய் தடுப்பு பிரசாரங்களில் தாமாக முன்வந்து ஈடுபடலாம்.

    நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மாணவர்கள் திகழவேண்டும். நல்ல வழியில் சென்று நாட்டுக்கும், வீட்டுக் கும் நற்பெயர் பெறவேண்டும்.

    ×